Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

1. முரளிதரன் ஒரு சாதனையாளரே அல்ல. லக்ஸ்மன் கதிர்காமர், அர்ஜுன ரணதுங்க முயற்சியால்- தெற்காசிய நாடுகள் அனைதினதும் கூட்டு பலத்தை ஒன்று திரட்டி - இலங்கை மிக கச்சிதமாக காய் நகர்தி, பந்து வீசும் போது கைகளை மடக்குதல் ஆகவே ஆகாது, என்ற விதியை முரளிக்காக, கைகளை குறித்த பாகை வரை மடக்கலாம் என மாற்ற வைத்தனர். இந்த விதி மாற்றம் பூகோள அரசியலால் மட்டுமே ஏற்பட்டது. விதி இப்படி மாறி இருக்காவிட்டால் - முரளி இன்றைக்கும் chucker தான். எனவே ஒரு ஏமாற்றுகாரனை போற்றத் தேவையில்லை. வேணும் என்றால் Shane Warne ஐ பற்றி படம் எடுக்கலாம்.

2. முரளி தனக்கு தமிழ் தெரியாது என 1992 முதல் சொல்லி வந்தது உண்மை. எனக்கு தனிபட்ட அனுபவம் உண்டு. ஆர்னோல்ட் ஒரு போதும் அப்படி சொன்னதில்லை. முரளி போல் ராஜபக்சேகளுக்கு ஆர்னோல்ட் ஆலவட்டம் பிடிக்கவும் இல்லை. ஆகவே யாழ்பாண வம்சாவழி ஆர்னோல்ட், கண்டி முரளி என்ற பார்வை அபத்தமானது.

3. இலங்கையில் ஒரு பொறுப்பான நிலையில் இருக்கும் எவரும் இன முறுகல் பற்றி வாயே திறக்க முடியாது என்பதே உண்மை. இங்கே எழுதும் பலரும் இலங்கைக்கு கொலிடே போனால் கூட நவதுவாரங்களையும் மூடியபடிதான் போய் வருவார்கள். ஆகவே முரளி கருத்து சொல்லாமல் இருந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர் எதிர் பாட்டு, மிகவும் மோசமாக பாடியவர். ஆகவே அவர் விமர்சனத்துகுரியவரே.

4. புள்ளி 3 இல் சொன்ன காரணதுக்காக முரளி படத்தில் நடிக்க வேண்டாம் என வி.சே யை கேட்பது நியாயமானதே.

5. ஆனால் இனி படத்தை ஓட்டி பார், சினிமா வாழ்கையையே செஞ்சிடுவோம், அவகாசம் தந்தோம் இனி வேலையை காட்டுவோம், என்று எக்காளம் இட்டு, நேற்று வரை தமிழன் என்று கொண்டாடிய ஒருவரை இன்று தெலுங்கன் எனப் பழிப்பது எல்லாம் சுத்த மடமை.  எதிர்ப்பை பதிவு செய்வது வேறு, அநாகரீகமாக ஒருவரின் சிருஸ்டிக்கும் தனியுரிமையில் தலையிடுவது வேறு.

6. இந்த திரியை வெளியில் இருந்து வாசிக்கும் போது இங்கே கருத்து எழுதும் பலரின் முகங்களை காண முடிந்தது. கிட்டதட்ட பிக்பாஸ் பார்த்த உணர்வு. லைக்காவுடன் உறவு வைக்கும் சீமான் விசே யை எதிர்கிறார். சுரேன் ராகவனுக்கு பூச்செண்டு கொடுத்த பாரதிராஜா வி.சே யை எதிர்கிறார். இதைதானே நாமும் செய்தோம் என்ற லஜ்ஜையே இல்லாமல்.

7. இதை போலவே யாழில் தமது நண்பர்கள் குழாமில் இருப்பவர்களின் “இலங்கை விசுவாசத்தை” கண்டும் காணாமல் போபவர்கள், அதை எதிர்த்து ஒரு கேள்வியாயினும் கேட்காதவர்கள் - முரளி சட்டையில் சிங்க கொடி இருந்ததே, நான் முதலில் இலங்கையன் பிறகு தமிழன் என சொன்னாரே என கெம்பி எழுபுகிறார்கள். முரளி கிடக்கட்டும். உங்கள் நட்பு வட்டத்தில் இதை ஒத்த இலங்கை அபிமான கருத்துகள் வந்தபோது, நீங்கள் ஆற்றிய எதிர்வினைதான் என்ன? உங்கள் யாழ் கள நட்புகளுக்கு ஒரு அளவுகோல், முரளிக்கு இன்னொரு அளவு கோலா? அப்போ முரளி உங்களுக்கு நண்பன் என்றால் அதிலும் அடக்கி வாசிப்பீர்கள்!

8. முடிவாக - மேலே புள்ளி 7இல் பார்த்தது போல - யாழ் களத்தில் எழுதுபவர்கள் முதல், சீமான், பாரதிராஜா வரை எல்லார் அணுகுமுறையில் தெறிப்பதும் சுயநலமே. 

இன அபிமானம், தார்மீக கோபம் எதுவுமில்லை. எமக்கு வேண்டபட்டவர் செய்தால் மூடிகொண்டிருப்போம். அதுவே ஒரு நடிகர், பொது வெளியில் உள்ளவர் என்றால் - ஆச்சோ, போச்சோ என்று எழுதுவோம்.

மக்கள் செல்வன், மக்களின் மன ஓட்டத்துக்கு மதிப்பளித்து முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒரு தாழ்மையான வேண்டுகோள். அவ்வளவுதான்.

மற்றவர்கள் சுயநலத்தோடு முரளிக்கு எதிராய் எழுதுகிறார்கள் என்று சொல்லும் நீங்கள் என்ன மாதிரியான ஆள்?
முரளி சிங்களவராகவே இருந்திட்டு போகட்டும் ....அவரையே அல்லது அவர் விளையாடும் முறை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்  அதற்காக அவர்  பந்து வீச்சாளர் இல்லை என்று சொல்வது கேவலம்.
சர்வதே கிரிக்கெட் சபை , வீரர்கள் ,நடுவர்கள் , அவதானிகள் ,பயிற்சியாளர்கள்,மருத்துவர்கள் ,விஞ்ஞனானிகள்  எல்லோரையும் விட நீங்கள் சொல்வது தான் சரி ...இந்தியா முரளிக்கு ஆதரவு கொடுத்ததா?...உங்களுக்கே இது ஓவராய்த் தெரியவில்லை.
முரளியின் படத்தில் சேதுபதி நடிக்க கூடாது இங்கே குத்தி முறிந்தவர்களை விட நீங்கள் எழுதியது தான்  கேவலத்திலும் கேவலம்.
பி;கு ;  நான் அன்று தொட்டே இலங்கையணியின் தீவிர ரசிகை ...ஆனால் ஆரம்பத்தில் இருந்தே  முரளியை  பிடிக்காது ...எனக்கு பிடிக்காது என்பதற்காய்  அவர் சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்றாகி விடாது 

  • Replies 215
  • Views 22.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

இது திரிக்கு சம்பந்தமற்ற விடயம். ஆனால் நான் சொன்ன விதி மாற்றம் பற்றி கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.

http://news.bbc.co.uk/sport1/hi/cricket/3998397.stm 

ஸ்பின் பந்து வீசுபவர்கள் 5 பாகையால் மட்டுமே மடக்கலாம் என்ற விதி 15 பாகை வரை மடக்கலாம் என்று மாற்றப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

இவ்வளவு கதைக்கும் முரளி.. தன்னை ஒரு தற்காலிக அணித்தலைவராகக் கூட சொறீலங்கா கிரிக்கெட் அணியோ.. கிரிக்கெட் போட்டோ தெரிவு செய்யாமைக்கு விளக்கம் சொல்லட்டும் பார்க்கலாம்..!! 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இது திரிக்கு சம்பந்தமற்ற விடயம். ஆனால் நான் சொன்ன விதி மாற்றம் பற்றி கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.

http://news.bbc.co.uk/sport1/hi/cricket/3998397.stm 

ஸ்பின் பந்து வீசுபவர்கள் 5 பாகையால் மட்டுமே மடக்கலாம் என்ற விதி 15 பாகை வரை மடக்கலாம் என்று மாற்றப்பட்டது.

ஏன் ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் சாதிக்க கூடாதா ? ...அவர்களுக்காக விதிமுறை மாற்றியதில் உங்களுக்கு என்ன வந்தது 

காலம் ,காலமாய் கிரிக்கெட் சம்மந்தமான விதி முறைகள் மாறிக் கொண்டே தான் வந்து கொண்டு இருக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஏன் ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் சாதிக்க கூடாதா ? ...அவர்களுக்காக விதிமுறை மாற்றியதில் உங்களுக்கு என்ன வந்தது 

காலம் ,காலமாய் கிரிக்கெட் சம்மந்தமான விதி முறைகள் மாறிக் கொண்டே தான் வந்து கொண்டு இருக்குது 

ஊனமுற்றோர் ஊனமுற்றோர் கிரிகெட்டில் விளையாட வேண்டும்.

ஊனத்தை காட்டி விதியை மாற்றுவது, அதுவரை விளையாட்டை விதிக்கமைய விளையாடிய அத்தனை பேருக்கும் செய்யும் அநியாயம்.

இதற்கு கிரிகெட்டில் பல உதாரணங்கள் உண்டு. ஒரு கால் இயலாத நல்ல பட்ஸ்மன் ஓட முடியாது என்பதால், ஆட வரும் போதே ரன்னரை கூட்டி வர முடியாது.

வேறு வழியில்லை அவர் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

அதே போல், முரளியும் “கையை நிமிர்த முடியாத குறை உள்ளவர்”- அவரும் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

நான் முரளியை அவரின் பாடசாலை நாட்கள், சிறிலங்கா A க்கு தென்னாபிரிக்கா போன காலம் தொட்டு அவதானிப்பவன்.

அவரின் அரசியலை அவரின் விளையாட்டோடு ஒரு போதும் குழப்பியதில்லை. 

சொல்லப்போனால், ருவான் கல்பகேயை பின் தள்ளி முரளி முன்னுக்கு வர வேண்டும் என ஒரு இனமானம் மிக்க தமிழ் சிறுவனாக வேண்டியவனும் கூட.

மார்டின் குரோ, டரல் ஹாப்பர் சொன்ன போது கூட அவர்கள் மீது கோபம்தான் வந்தது.

ஆனால் என்றைக்கு முரளி கையை மடக்கித்தான் எறிகிறார் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து அதற்கு அவரின் தோள்மூட்டை காரணம் என சொல்லி, விதியையும் மாற்றினார்களோ, அன்றில் இருந்து ஆதரிப்பதில்லை.

ஏனென்றால் அது இதுவரை விதியின் படி விளையாடியவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

தொண்டமான் இல்லாமல் இருந்தால் முரளிக்கு அணியில் இடம் கிடைத்திராது.

கதிர்காமர் இல்லாமல் இருந்தால் 95ல் கதை முடிந்திருக்கும்.

எல்பி டபிள்யூ உட்பட பல விதிகள் காலம் காலமாக மாறினாலும், எந்த காரணமும் இன்றி ஒரு குறித்த நாடுகளின் அழுத்தத்தால் இந்த விதி மாற்றப்பட்டது அநீதியானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரதி said:

சங்கா இப்ப நல்லவரா அண்ணா:unsure: கொஞ்ச காலத்திற்கு முந்தி இதே யாழில் அவரை துரோகி என்று எழுதின நினைவு 

யுத்தம் எப்படா முடியும் என்று காத்திருந்த புலி ஆதரவு தேசியவாதிகள் யுத்தம் முடிந்த கையேடு ஓடிப் போய் ஊரில் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கவில்லை...முரளி வெளிப்படையாய் சொன்னார் ...அவர்கள் சொல்லவில்லை ...யுத்தம் முடிந்த கையேடு மகிந்தாவோடு டீலிங் வைத்திருந்த லைக்கா சுபாஸ்கரனை விட முரளி துரோகி ...ஐயோ ஐயோ 
 
இந்த இணைப்பு சம்பந்தமாய் நான் ஏதாவது எழுதியிருக்கிறனோ இல்லையே...😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ragaa said:
On 16/10/2020 at 00:06, விளங்க நினைப்பவன் said:

பஞ்சாயத்துத் தலைவியை  சாதி காரணமாக கூட்டங்களில் தரையில் அமர வைத்து திருப்த்திபட்ட தமிழ்நாட்டுக்கு அவசியமான பிரச்சனை தான்

இப்பத்தான் தெரிகின்றது விளக்கம் எந்தளவிலுள்ளது. தமழ்நாட்டில் உள்ளவர்களுக்குள்ள உணர்வின் ஒரு சதவீதமும் இல்லை

சாதி வெறி காரணமாக பெண் தலைவரை தரையில் அமரவைத்து இன்பம் காணும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குள்ள அருவருக்க தக்க சாதி வெறி உணர்வின் ஒரு சதவீதமும் என்னிடம்  இல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்

11 hours ago, ரதி said:

 நான் அன்று தொட்டே இலங்கையணியின் தீவிர ரசிகை ...ஆனால் ஆரம்பத்தில் இருந்தே  முரளியை  பிடிக்காது ...எனக்கு பிடிக்காது என்பதற்காய்  அவர் சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்றாகி விடாது

சிங்கள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை மட்டும்தான் பிடிக்குமோ?🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஊனமுற்றோர் ஊனமுற்றோர் கிரிகெட்டில் விளையாட வேண்டும்.

ஊனத்தை காட்டி விதியை மாற்றுவது, அதுவரை விளையாட்டை விதிக்கமைய விளையாடிய அத்தனை பேருக்கும் செய்யும் அநியாயம்.

இதற்கு கிரிகெட்டில் பல உதாரணங்கள் உண்டு. ஒரு கால் இயலாத நல்ல பட்ஸ்மன் ஓட முடியாது என்பதால், ஆட வரும் போதே ரன்னரை கூட்டி வர முடியாது.

வேறு வழியில்லை அவர் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

அதே போல், முரளியும் “கையை நிமிர்த முடியாத குறை உள்ளவர்”- அவரும் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

நான் முரளியை அவரின் பாடசாலை நாட்கள், சிறிலங்கா A க்கு தென்னாபிரிக்கா போன காலம் தொட்டு அவதானிப்பவன்.

அவரின் அரசியலை அவரின் விளையாட்டோடு ஒரு போதும் குழப்பியதில்லை. 

சொல்லப்போனால், ருவான் கல்பகேயை பின் தள்ளி முரளி முன்னுக்கு வர வேண்டும் என ஒரு இனமானம் மிக்க தமிழ் சிறுவனாக வேண்டியவனும் கூட.

மார்டின் குரோ, டரல் ஹாப்பர் சொன்ன போது கூட அவர்கள் மீது கோபம்தான் வந்தது.

ஆனால் என்றைக்கு முரளி கையை மடக்கித்தான் எறிகிறார் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து அதற்கு அவரின் தோள்மூட்டை காரணம் என சொல்லி, விதியையும் மாற்றினார்களோ, அன்றில் இருந்து ஆதரிப்பதில்லை.

அதன் பின்னரும் மனத்தளவில் ஒரு தமிழன் 

அதிலும் மலையகத்தை பிரதிநிதிப்படுத்துபவன்

ஆடுகிறானே என்ற பரிதாபம் காரணமாக எதிராக  எழுதுவதில்லை

ஆனால் என்று  எமது இறப்பு  அல்லது தோல்வி தனக்கு வாழ்வில்  சந்தோசம் என்றாரோ

அன்றுடன் மனிதனாக கூட மரியாதையில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, விசுகு said:

அதன் பின்னரும் மனத்தளவில் ஒரு தமிழன் 

அதிலும் மலையகத்தை பிரதிநிதிப்படுத்துபவன்

ஆடுகிறானே என்ற பரிதாபம் காரணமாக எதிராக  எழுதுவதில்லை

ஆனால் என்று  எமது இறப்பு  அல்லது தோல்வி தனக்கு வாழ்வில்  சந்தோசம் என்றாரோ

அன்றுடன் மனிதனாக கூட மரியாதையில்லை

இதற்காக மட்டுமே இவரை/ இவர் சம்பந்தப்பட்டதை வெறுக்கின்றோம் என்கிறோம்.
விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இதற்காக மட்டுமே இவரை/ இவர் சம்பந்தப்பட்டதை வெறுக்கின்றோம் என்கிறோம்.
விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள்.

அவர்கள் நாம்  சொன்ன  எதை  ஏற்றுக்கொண்டார்கள் இதை ஏற்க ?? விளங்க அண்ணா???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அதன் பின்னரும் மனத்தளவில் ஒரு தமிழன் 

அதிலும் மலையகத்தை பிரதிநிதிப்படுத்துபவன்

ஆடுகிறானே என்ற பரிதாபம் காரணமாக எதிராக  எழுதுவதில்லை

ஆனால் என்று  எமது இறப்பு  அல்லது தோல்வி தனக்கு வாழ்வில்  சந்தோசம் என்றாரோ

அன்றுடன் மனிதனாக கூட மரியாதையில்லை

இங்கேதான் நாம் அனைவரும் பொதுவாக பிழை விடுகிறோம் என நினைகிறேன்.

தமிழன் என்றால், ஒடுக்கபட்ட சமூகத்தில் இருந்து வருபவன் என்றால் விதியை விரும்பியபடி வளைக்கலாமா? அதை நாம் கண்டும் காணாமல் விடவேண்டுமா?

விதி மீறல், விதி மீறல்தான் அண்ணை, இனம், நிறம், நண்பனா இல்லையா என்பதல்லாம் கருத்திலேயே வரக்கூடாது.

இப்படி தகுதி இல்லாதவர்களை நாமே “தமிழன்” என்ற ஒற்றைகாரத்துக்காக தூக்கி பிடிப்பதால்தான் அவர்கள் பின்னர் எதையும் சொல்ல, செய்ய துணிகிறார்கள்.

இது முரளியோடு நிற்காது. இன்னும் பலரை இப்படி தூக்கி வைத்து ஆடுகிறோம்.

காலம் தெளிவுபடுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது  தான் நாம் இருவரும் மாறுபடும் இடம்  சகோ

நான் உங்களது  கருத்தை மதிக்கின்றேன்

என்னிடமுள்ள  குறைபாட்டை  உணர்கின்றேன்

இருந்தாலும் என்னால் முடியாத  சில  விடயங்களில் இதுவும்  ஒன்று.

நாம் நாமாகவே இருப்போம்

ஏற்றுக்கொள்வோம் சகோ.

  • கருத்துக்கள உறவுகள்

விஜே சேதுபதியை கிழித்த ராஜ்கிரண்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதை சொல்லடா சார்... விஜய்சேதுபதிக்கு சண் மாஸ்டர் அதிரடி கேள்வி | 800 | Vijaysethupathi

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஊனமுற்றோர் ஊனமுற்றோர் கிரிகெட்டில் விளையாட வேண்டும்.

ஊனத்தை காட்டி விதியை மாற்றுவது, அதுவரை விளையாட்டை விதிக்கமைய விளையாடிய அத்தனை பேருக்கும் செய்யும் அநியாயம்.

இதற்கு கிரிகெட்டில் பல உதாரணங்கள் உண்டு. ஒரு கால் இயலாத நல்ல பட்ஸ்மன் ஓட முடியாது என்பதால், ஆட வரும் போதே ரன்னரை கூட்டி வர முடியாது.

வேறு வழியில்லை அவர் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

அதே போல், முரளியும் “கையை நிமிர்த முடியாத குறை உள்ளவர்”- அவரும் ஊனமுற்றோர் கிரிகெட்டில்தான் ஆட வேண்டும்.

நான் முரளியை அவரின் பாடசாலை நாட்கள், சிறிலங்கா A க்கு தென்னாபிரிக்கா போன காலம் தொட்டு அவதானிப்பவன்.

அவரின் அரசியலை அவரின் விளையாட்டோடு ஒரு போதும் குழப்பியதில்லை. 

சொல்லப்போனால், ருவான் கல்பகேயை பின் தள்ளி முரளி முன்னுக்கு வர வேண்டும் என ஒரு இனமானம் மிக்க தமிழ் சிறுவனாக வேண்டியவனும் கூட.

மார்டின் குரோ, டரல் ஹாப்பர் சொன்ன போது கூட அவர்கள் மீது கோபம்தான் வந்தது.

ஆனால் என்றைக்கு முரளி கையை மடக்கித்தான் எறிகிறார் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து அதற்கு அவரின் தோள்மூட்டை காரணம் என சொல்லி, விதியையும் மாற்றினார்களோ, அன்றில் இருந்து ஆதரிப்பதில்லை.

ஏனென்றால் அது இதுவரை விதியின் படி விளையாடியவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

தொண்டமான் இல்லாமல் இருந்தால் முரளிக்கு அணியில் இடம் கிடைத்திராது.

கதிர்காமர் இல்லாமல் இருந்தால் 95ல் கதை முடிந்திருக்கும்.

எல்பி டபிள்யூ உட்பட பல விதிகள் காலம் காலமாக மாறினாலும், எந்த காரணமும் இன்றி ஒரு குறித்த நாடுகளின் அழுத்தத்தால் இந்த விதி மாற்றப்பட்டது அநீதியானது.

விளையாட்டு விதிகள் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் விளையாட்டு வீரர்கள் ,அதனோடு சம்மந்தப்பட்டவர்கள்...ரூல்ஸ் படி இடம் இருந்ததால் தான் அனுமதி கொடுத்தார்கள்...அல்லது அவர்களே ஊனமுற்றோர் அணியில் போய் விளையாட சொல்லி அனுப்பி இருப்பார்கள் ...அந்த நேரம் இலங்கையணி புகழ் பெற்ற அணியாக கூட இருக்கவில்லை ...கத்துக் குட்டி அணியை சேர்ந்த ஒரு வீரருக்கு இரக்கம் பார்க்க வேண்டிய தேவை சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு தேவையில்லை ...எப்படித் தான் இருந்தாலும் உங்களிடம் இருப்பது அப்பட்டமான எரிச்சலும் ,பொறாமையும் தவிர வேறேதும் இல்லை...சர்வதேச கிரிக்கெட் வல்லுனர்களுக்கே பாடம் நடத்துபவராச்சே நீங்கள்🙂 ...இது பற்றி மேலும் இந்த திரியில் தேவையில்லாமல் விவாதித்து திரியை பூட்ட விரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இதற்காக மட்டுமே இவரை/ இவர் சம்பந்தப்பட்டதை வெறுக்கின்றோம் என்கிறோம்.
விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள்.

 அண்ணா ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் ...அவர் படத்தில்  நடித்தால் என்ன? ...அவரது கதையை யாரும் படமாய் நடித்தால் உங்களுக்கு என்ன ?...இந்த படம் என்ன மாதிரியாய் இருக்க போகுது என்று தெரியாது ...உண்மையில் சிங்கள புகழ் பாடும் படமாய் இருந்தால் , படம் வந்த பிறகு அனைவரும் புறக்கணித்தால் அது தான் உண்மையான வெற்றியாகும் ....அதை விட்டுட்டு போராட எவ்வளவோ தேவைகள் இருக்க உப்பு ,சப்பில்லாத விடயத்திற்கு போராடுவது என்பது கேவலம் இல்லையா?
 
9 hours ago, கிருபன் said:

சிங்கள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை மட்டும்தான் பிடிக்குமோ?🤔

அன்று தொட்டு இன்று வரை சனத் களு,அரவிந்த,மகாநாம ஹசான்,சங்கா என்னுடைய பேவரிட் வீரர்கள் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

விளையாட்டு விதிகள் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் விளையாட்டு வீரர்கள் ,அதனோடு சம்மந்தப்பட்டவர்கள்...ரூல்ஸ் படி இடம் இருந்ததால் தான் அனுமதி கொடுத்தார்கள்...அல்லது அவர்களே ஊனமுற்றோர் அணியில் போய் விளையாட சொல்லி அனுப்பி இருப்பார்கள் ...அந்த நேரம் இலங்கையணி புகழ் பெற்ற அணியாக கூட இருக்கவில்லை ...கத்துக் குட்டி அணியை சேர்ந்த ஒரு வீரருக்கு இரக்கம் பார்க்க வேண்டிய தேவை சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு தேவையில்லை ...எப்படித் தான் இருந்தாலும் உங்களிடம் இருப்பது அப்பட்டமான எரிச்சலும் ,பொறாமையும் தவிர வேறேதும் இல்லை...சர்வதேச கிரிக்கெட் வல்லுனர்களுக்கே பாடம் நடத்துபவராச்சே நீங்கள்🙂 ...இது பற்றி மேலும் இந்த திரியில் தேவையில்லாமல் விவாதித்து திரியை பூட்ட விரும்பவில்லை

1. இலங்கை அணி 1996 மார்சில் இல் உலக கோப்பை வென்றது. முரளியை முதன் முதலில் நோபால் பிடித்தது 1995 ஓக்டோபர்-டிசம்பரில். சர்ச்சை நீடித்து விதி மாறி, சர்ச்சை முடிவுக்கு வந்தது 2004இல். இலங்கை அப்போ கத்து குட்டி டீம் இல்லை. 

2. உங்களுக்கு கிரிகெட் அரசியலும் புரியவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஜனாதிபதியின் நேரடி பணிப்பில், வெளிவிவகார அமைச்சர் இறங்கி இலங்கை, இந்தியா அரசுகள், கட்டுப்பாட்டு சபையைகளை ஒரு அணியில் திரட்டி இதை சாதித்தார்கள். இந்தியாவின் பேச்சை மீறி ஐசிசியில் ஒன்றும் நடவாது. வல்லுனரும் புல்லுனரும், இந்தியாவின் முன் அடங்கியே போவார்கள். இதற்கு பல அண்மைய உதாரணங்கள் உண்டு. 

3. முரளி மீது பொறாமைபட நான் என்ன இன்னொரு சர்வதேச வீரரா🤦‍♂️. ஆனால் சிலரை போல் sofaவில் இருந்து பார்க்கும் ரசிகன் அல்ல நான். ஒரு குறைந்த மட்டத்திலாவது விளையாடி வருபவன். கிரிகெட் எனது அபிமான விளையாட்டு. “விதிப்படி (rules) மட்டும் அன்றி, மனச்சாட்சி (spirit of the game) யும் நட என வலியுறுத்தும் விளையாட்டு. இந்த விளையாட்டில் சூதாட்டம், கையை மடக்கி எறிதல் போன்றவை நடக்கும் போது, நானும் கவலைபடத்தான் வேண்டும். தனியே  சர்வதேச வீரர்களுக்கு மட்டுமான விளையாட்டில்லை இது -  அவர்களை போலவே எந்த மட்டத்தில் விளையாடும் வீரருக்கும் விதிகள் மீது அக்கறை இருக்க வேண்டும்.

4. முரளியை ஊனமுற்றோர் கிரிகெட்டில் விளையாட சொல்லி 1995 இலேயே அனுப்பி இருப்பார்கள். இருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசும், கதிர்காமரும் எடுத்த ராஜதந்திர நகர்வு, விதியையே மாற்றி முரளியை அனுமதிக்க வைத்தது.

5. எனக்கும் இதை பற்றி உரையாட ஆர்வம் இல்லை. நான் பொதுவாக கிரிகெட்டை படம் பார்ப்பது போல டிவியில் பார்பவர்களோடு, அதன் பிண்ணனி அரசியல், விதி நுணுக்கங்கள் பற்றி கதைக்க விரும்புவதில்லை. நீங்கள் கேட்டதால் பதில் சொன்னேன்.

5 hours ago, விசுகு said:

நாம் நாமாகவே இருப்போம்

ஏற்றுக்கொள்வோம் சகோ.

நிச்சயமாக. ஆனால் உங்கள் கருத்தை நானும் என் கருத்தை நீங்களும் உள்வாங்குவதும் அவசியம். இல்லாவிடில் இருவரும் அதே இடத்தில் நிற்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தை சேர்ந்த தகுதியில்லாத , அங்கவீனமுற்ற இளைஞனுக்காய் போராடி அவரை அணியில் சேர்த்து பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த சிங்கள அரசிற்கு ஒரு ஓ போடுவம் 

  • கருத்துக்கள உறவுகள்

முரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் மக்களின் கருத்தை ஏற்பாரா!!??

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தை சேர்ந்த தகுதியில்லாத , அங்கவீனமுற்ற தமிழ் இளைஞனை முன்னிறுத்தி இலங்கை செய்த அரசியலும், அதனால் சர்வதேச அரங்கில் 1992-2009 வரை இலங்கை அடைந்த ராஜதந்திர அனு கூலங்களையும் சீர்தூக்கி பார்த்தால்,  இலங்கை அரசுக்கு டபுள் ஓ போட தோன்றும்.

நாம் ஏன் 1948 இல் இருந்து ராஜதந்திர ரீதியில் மூக்குடைபடுகிறோம் என்பதும் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

ஏன் ஒரு வகையில் ஊனமுற்றவர்கள் சாதிக்க கூடாதா ? ...அவர்களுக்காக விதிமுறை மாற்றியதில் உங்களுக்கு என்ன வந்தது 

காலம் ,காலமாய் கிரிக்கெட் சம்மந்தமான விதி முறைகள் மாறிக் கொண்டே தான் வந்து கொண்டு இருக்குது 

ரதி, கிரிக்கெட் விளையாட்டு ஓரளவு தெரிந்த எல்லோருக்குமே தெரியும் முரளி பந்துவீசும்போது கையை மடக்கி எறிகிறார் என்று. அவருக்குக்காக ICC  rule ஐ தளர்த்தியிருக்க கூடாது. அவர் கட்டாயம் தனது திறமையை காட்ட நினைத்திருந்தால் அவர் ஒரு leg spinner ஆக தன்னை தயார்படுத்தியிருக்கலாம். ஏனென்றால் அவர் leg spin போடும்போது சரியாகத்தான் போடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

முரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்

விசுகர் முன்னர் இணைத்த தாமரை அவர்களின் கடிதம் பற்றித் தான் பேசுகிறார்கள் போல! அந்தக் கவித்துவம் மிக்க கடிதத்தின் இடையே ஒரு "கிளிப் கழட்டிய கிரனைட்டையும்" தாமரை அவர்கள் மறைத்து வைத்ததை எல்லாரும் மௌனமாகத் தாண்டி வந்து விட்டாதைக் கவனித்தேன்!

"தலைவர் நினைத்திருந்தால் முரளியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிவுக்கு வந்திருக்கும்!" என்பது தான் அந்த கிரனைட்டு!

 தாமரை போன்றோரை ஈழவருக்காக பேச அனுமதித்து மகிழும் நண்பர்களே, இவர் போன்ற உசார் மடையர்களில் இருந்து விலகி நடந்தாலே ஈழவருக்கு பிடித்த சனி ஒரு ஐந்து வீதமாவது நீங்கும்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

 அண்ணா ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் ...அவர் படத்தில்  நடித்தால் என்ன? ...அவரது கதையை யாரும் படமாய் நடித்தால் உங்களுக்கு என்ன ?...இந்த படம் என்ன மாதிரியாய் இருக்க போகுது என்று தெரியாது ...உண்மையில் சிங்கள புகழ் பாடும் படமாய் இருந்தால் , படம் வந்த பிறகு அனைவரும் புறக்கணித்தால் அது தான் உண்மையான வெற்றியாகும் ....அதை விட்டுட்டு போராட எவ்வளவோ தேவைகள் இருக்க உப்பு ,சப்பில்லாத விடயத்திற்கு போராடுவது என்பது கேவலம் இல்லையா?
 
அன்று தொட்டு இன்று வரை சனத் களு,அரவிந்த,மகாநாம ஹசான்,சங்கா என்னுடைய பேவரிட் வீரர்கள் 🤣🤣🤣

சொந்த இனத்திற்கே துரோகம் செய்தவர்களின் வரலாறு வெளியே தெரியக்கூடாது....அதுவும் ஒரு புனிதனாக.....

சரி விடுவோம்..
நீங்கள் முத்தையா முரளிதரனின் அரசியல் சம்பந்தப்பட்ட பேட்டிகளை பார்த்திருப்பீர்களென நம்புகின்றேன். அவர் சொன்ன கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா? முக்கியமாக காணாமல் போனவர்களின் தாய்மார் பற்றி........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.