Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னோட்டங்களை வாசியுங்கள். சுவாரசியமானது...

  • Replies 215
  • Views 22.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மலையகத்தை சேர்ந்த தகுதியில்லாத , அங்கவீனமுற்ற இளைஞனுக்காய் போராடி அவரை அணியில் சேர்த்து பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த சிங்கள அரசிற்கு ஒரு ஓ போடுவம் 

திருந்துவதற்கு இடமிருப்பதாகத்தெரயவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 19:18, Justin said:

உங்களிடம் இல்லாத இந்த அக்கறையை, அரசியலில் செய்தி கூட வாசித்தறியாத  முரளியிடம் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?  

அரசியலில் செய்தி கூட வாசித்து அறியாதவர் அது சம்பந்தமான கேள்விகள் வரும்போது அதைப்பற்றிய புரிதல் எனக்கில்லை அதனால் நான் கருத்துக்கூற விரும்பவில்லை என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து காணாமல் போனவர்களுக்காக போராடும் தாய்மார்களை நாடகமாடுவதாக கூறியிருக்க தேவையில்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் புகழின் உச்சாணி கொம்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் கதைப்பது செய்கைகள் எல்லாம் யோசித்து செய்யணும் சமூக ஊடகங்கள் பார்த்து கொண்டு தருணம் பார்த்து அவர்களின் பிழையை சுட்டிக்காட்ட வெளிக்கிடும் முன்பு என்றால் நாலு ஊடகங்களை கையுக்குள் வைத்து இருந்தால் காணும் இலகுவாக வெள்ளையடிப்பு செய்து விடுவார்கள் காலம் மாறி விட்டது என்பதை உணர மறுக்கிறார்கள் உதாரணத்துக்கு  திமுகவும் பெரும் நம்பிக்கையில் தமிழ்நாட்டின் பாரிய ஊடகங்களை பினாமி பெயர்களின் வாங்கி குவித்தார்கள் இல்லை அரைவாசி பங்குதாரர் ஆகி தங்களுக்கு வேண்டிய  செய்தியை போட்டு இலகுவாக அரசியல் சதுரங்கம்  செய்யலாம் என்று நம்பினார்கள் ஆனால் சமூக ஊடக வீரியம் அவர்களின் எண்ணத்தை கவுட்டு  கொட்டி விட்டது .

எதாவது ஊடகம் பொய்யான தகவலை கொடுத்தாலே அடுத்தநாள் டுவிட் முகநூல் போன்றவற்றில் வறுத்தெடுத்து விடுகிறார்கள் .

இவ்வளவு சொல்லியும் விஜய்சேதுபதி அமைதி கொண்டு இருப்பது இனி அவர் சினி பீல்டீல் தலைமுழுக வேண்டியதுதான் இல்லை முரளிதரன் டேவிட் கமரூனுக்கு  பொய்யான தகவலை கொடுத்துவிட்டேன் மன்னிப்பு கோரினால் நிலைமை ஓரளவுக்கு சரியாகும் கல்கியில் எனக்கு தமிழ் வராது என்று பேட்டிகொடுத்தவர்  இன்று தான் தமிழன் என்று அலறுவதுக்கு காரணம் இந்த சமூக ஊடக களோபரம் இனியாவது உணர்ந்து கொள்வார்கள் என்று பார்த்தால் திருந்துவதுக்கு  சான்ஸே இல்லை .

இங்கு திரிகளில் முரளிக்கு ஆதரவாய்  குத்தி முறிபவர்கள் வெளியில் உள்ள சமூக ஊடகங்களில்  என்ன நடக்குது என்று கொஞ்சம் எட்டி பார்க்கணும் அவற்றை  இங்கு இணைக்க முடியாது கள விதி அப்படி ஆனாலும் காலம் மாறிக்கொண்டு உள்ளது 3000 பேருக்கு மேல் உள்ள பின்தொடர்பவர்கள் உள்ளவர்களின் முகநூலோ அல்லது மற்றைய சமூக ஊடகத்தை சேர்ந்தவர்களின் இணைப்புகளை இங்கு இணைக்கலாம் என்று மாற்றம் கொண்டுவருவது நல்லது போல் இருக்கு நிர்வாகம் சிந்திக்கணும் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Eppothum Thamizhan said:

அரசியலில் செய்தி கூட வாசித்து அறியாதவர் அது சம்பந்தமான கேள்விகள் வரும்போது அதைப்பற்றிய புரிதல் எனக்கில்லை அதனால் நான் கருத்துக்கூற விரும்பவில்லை என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து காணாமல் போனவர்களுக்காக போராடும் தாய்மார்களை நாடகமாடுவதாக கூறியிருக்க தேவையில்லையே!!

அப்படித் தான் அவர் செய்திருக்க வேண்டும், செய்யாதது தவறு, சொன்னதும் தவறு என்று தான் சொல்லியிருக்கிறேனே நீங்கள் சுட்டிய கருத்தின் மேலே?

ஆனால், நீங்கள் மேற்கருத்தைப் பிய்த்தெடுத்த இடத்தில் போய், அங்கே நான் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்கா, இப்ப இங்க காணாமால் போவோர் பற்றி கண்ணீர் வடிப்போருக்கு தகுதி இருக்கா என்று ஒருக்கா சொல்ல இயலுமா?

25 minutes ago, பெருமாள் said:

இப்ப எல்லாம் புகழின் உச்சாணி கொம்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் கதைப்பது செய்கைகள் எல்லாம் யோசித்து செய்யணும் சமூக ஊடகங்கள் பார்த்து கொண்டு தருணம் பார்த்து அவர்களின் பிழையை சுட்டிக்காட்ட வெளிக்கிடும் முன்பு என்றால் நாலு ஊடகங்களை கையுக்குள் வைத்து இருந்தால் காணும் இலகுவாக வெள்ளையடிப்பு செய்து விடுவார்கள் காலம் மாறி விட்டது என்பதை உணர மறுக்கிறார்கள் உதாரணத்துக்கு  திமுகவும் பெரும் நம்பிக்கையில் தமிழ்நாட்டின் பாரிய ஊடகங்களை பினாமி பெயர்களின் வாங்கி குவித்தார்கள் இல்லை அரைவாசி பங்குதாரர் ஆகி தங்களுக்கு வேண்டிய  செய்தியை போட்டு இலகுவாக அரசியல் சதுரங்கம்  செய்யலாம் என்று நம்பினார்கள் ஆனால் சமூக ஊடக வீரியம் அவர்களின் எண்ணத்தை கவுட்டு  கொட்டி விட்டது .

எதாவது ஊடகம் பொய்யான தகவலை கொடுத்தாலே அடுத்தநாள் டுவிட் முகநூல் போன்றவற்றில் வறுத்தெடுத்து விடுகிறார்கள் .

இவ்வளவு சொல்லியும் விஜய்சேதுபதி அமைதி கொண்டு இருப்பது இனி அவர் சினி பீல்டீல் தலைமுழுக வேண்டியதுதான் இல்லை முரளிதரன் டேவிட் கமரூனுக்கு  பொய்யான தகவலை கொடுத்துவிட்டேன் மன்னிப்பு கோரினால் நிலைமை ஓரளவுக்கு சரியாகும் கல்கியில் எனக்கு தமிழ் வராது என்று பேட்டிகொடுத்தவர்  இன்று தான் தமிழன் என்று அலறுவதுக்கு காரணம் இந்த சமூக ஊடக களோபரம் இனியாவது உணர்ந்து கொள்வார்கள் என்று பார்த்தால் திருந்துவதுக்கு  சான்ஸே இல்லை .

இங்கு திரிகளில் முரளிக்கு ஆதரவாய்  குத்தி முறிபவர்கள் வெளியில் உள்ள சமூக ஊடகங்களில்  என்ன நடக்குது என்று கொஞ்சம் எட்டி பார்க்கணும் அவற்றை  இங்கு இணைக்க முடியாது கள விதி அப்படி ஆனாலும் காலம் மாறிக்கொண்டு உள்ளது 3000 பேருக்கு மேல் உள்ள பின்தொடர்பவர்கள் உள்ளவர்களின் முகநூலோ அல்லது மற்றைய சமூக ஊடகத்தை சேர்ந்தவர்களின் இணைப்புகளை இங்கு இணைக்கலாம் என்று மாற்றம் கொண்டுவருவது நல்லது போல் இருக்கு நிர்வாகம் சிந்திக்கணும் 

பெருமாள், இந்த சமூக ஊடக குப்பை மேடுகளை, ஏதோ அரிய நூலகம் போல "எட்டிப் பார்க்க வேணும்" என்று நீங்கள் ஆலோசனை சொல்வது நகைப்பிற்குரியது! இதே களத்தில் இன்னொரு திரி இந்த சமூக ஊடக குப்பை மேட்டின் நாற்றத்தினால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய எக்ஸ்ரா வேலையை மட்டூக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

இப்ப இதை எல்லா இடமும் போடலாம் என்று விதி தளர்த்தினால், அவர்கள் காசுக்கு மட்டூக்களை அமர்த்தித் தான் கிளீன் செய்ய வேண்டியிருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

முரளி கதைக்காமல் இருந்திருக்க வேண்டும். கதைத்த பின்னாவது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

முரளி ஒன்றும் பபா இல்லை. 2009 வரை ஒதுங்கி இருந்தவர், அதன் பின் தனக்கு எது சுயநலமாக அனுகூலம் தரும் என்பதை கணித்தே திருவாய் மலர்ந்தார்.

ஆகவே இப்போ மன்னிப்பு கேட்டாலும் அது இதயசுத்தியானது அல்ல.

ரசல் ஆர்னால்ட், மத்யூஸ், புஸ்பகுமார இப்படி தமிழ் அல்லது தமிழ் பின்புலம் உள்ளோர் இருந்ததை போல “மூடிகொண்டிருக்க” முரளியாலும் முடிந்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

ஆகவே வி சேயை படத்தை புறகணிக்குமாரு கோருவதில் தவறில்லை.

கோரிக்கைக்கு மேலதிகமாக படம் வந்த பின் பார்க்காமல் விடலாம். ஒரு அடையாள எதிர்ப்பை பதிவு செய்யலாம்.

ஆனால்  முடக்குவோம், முட்டுவோம் என மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பது மோசமான அணுகுமுறை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

பெருமாள், இந்த சமூக ஊடக குப்பை மேடுகளை, ஏதோ அரிய நூலகம் போல "எட்டிப் பார்க்க வேணும்" என்று நீங்கள் ஆலோசனை சொல்வது நகைப்பிற்குரியது! இதே களத்தில் இன்னொரு திரி இந்த சமூக ஊடக குப்பை மேட்டின் நாற்றத்தினால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய எக்ஸ்ரா வேலையை மட்டூக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

இப்ப இதை எல்லா இடமும் போடலாம் என்று விதி தளர்த்தினால், அவர்கள் காசுக்கு மட்டூக்களை அமர்த்தித் தான் கிளீன் செய்ய வேண்டியிருக்கும்!

அரைகுறையாய் படித்துவிட்டு வேறு ஒரு திரியை பற்றி இங்கு புலம்புவது குழுவா சேர்ந்து பெட்டிசம் போட்டு அந்த திரியை நாசம் பண்ணிவிட்டு முழுமையாய் முடிக்கவில்லை எனும் ஆதங்கத்தில் திரியியல் என்பது விளங்குது இங்கு பலோவோர்ஸ் எனும் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையை பார்த்து குப்பைகளை கழித்து தரமானவர்களின் பதிவுகளை இங்கு இணைக்கலாமே எனும் வழியை பற்றியே எழுதினனான் . இப்படி எடுத்துக்கெல்லாம் உரட்டுபோட்டுக்கொண்டு நிக்கும் உங்களால் 500 பின் தொடருபவர்களை கொண்டுவருவது குதிரைக்கொம்பாக இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆனால்  முடக்குவோம், முட்டுவோம் என மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பது மோசமான அணுகுமுறை.

இது காலம் பிந்தியது #TamilsTraitorVijaysethupathi 

போட்டு தாக்குதுகள் ஒரு பக்கத்தில் அண்ணமலை  பல்கலை கழக உரிமை பறி போகுது என்று கத்தினாலும்  யார் கேட்க்கிறார்கள் அவங்களா போதுமென்று நினைக்கும் மட்டும் ஓடும் .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இது காலம் பிந்தியது #TamilsTraitorVijaysethupathi 

போட்டு தாக்குதுகள் ஒரு பக்கத்தில் அண்ணமலை  பல்கலை கழக உரிமை பறி போகுது என்று கத்தினாலும்  யார் கேட்க்கிறார்கள் அவங்களா போதுமென்று நினைக்கும் மட்டும் ஓடும் .

இதன் பின் மாற்று தேடி நாத வுக்கு வாக்கு போட்ட பலர், ம.நி. மை பக்கம் திரும்ப கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அரைகுறையாய் படித்துவிட்டு வேறு ஒரு திரியை பற்றி இங்கு புலம்புவது குழுவா சேர்ந்து பெட்டிசம் போட்டு அந்த திரியை நாசம் பண்ணிவிட்டு முழுமையாய் முடிக்கவில்லை எனும் ஆதங்கத்தில் திரியியல் என்பது விளங்குது இங்கு பலோவோர்ஸ் எனும் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையை பார்த்து குப்பைகளை கழித்து தரமானவர்களின் பதிவுகளை இங்கு இணைக்கலாமே எனும் வழியை பற்றியே எழுதினனான் . இப்படி எடுத்துக்கெல்லாம் உரட்டுபோட்டுக்கொண்டு நிக்கும் உங்களால் 500 பின் தொடருபவர்களை கொண்டுவருவது குதிரைக்கொம்பாக இருக்கும் .

நீங்கள் நாடும்  மாற்றத்தை முழுவதும் உள்வாங்கி  எழுதியது. பெட்டிசத் திரி என்ற ஒன்று நான் திறக்கவேயில்லை, தனிப் பெட்டிசனும் போடுவதில்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்கள்? எனவே எதையாவது நம்புங்கள்! 

 ஏன் மூவாயிரம் பேர் தொடர்ந்தால் அது பகிரத் தக்க கருத்து என்ற வகைக்குள் அடங்கும்?

ஒரு ஒப்பீட்டுக்கு 80 மில்லியன் பேர் தொடரும் ட்ரம்பின் கீச்சகப் பதிவு 70% பொய்யும் புரட்டும்! 

சூழல் பாதுகாப்பு பற்றி விளக்கும் விஞ்ஞானி பிறையன் கொக்ஸின் கீச்சகப் பதிவைத் தொடர்வோர் 3 மில்லியன் பேர், ஆனால் அவர் பகிர்வது பெரும்பாலும் facts மட்டுமே! 

கருத்துக் களத்தில் நீங்களே எழுதுங்கள்.  

சமூக வலை ஊடகங்கள் என்றிருக்கும் பகுதியில் இந்த சமூக வலைக் குப்பைகளைக் கொட்டுங்கள்.

சுத்தம் செய்வோரின் வேலை இலகுவாகும் அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

உங்களை போலத்தான் நானும் பயித்தியக்கார ஆஸ்பத்திரி என்று முகநூலை திட்டுவது உள்ளே போனபின் தான் தெரிந்தது அந்த குப்பைகளுக்குள்ளும் மாணிக்கம் கள் உள்ளன என்று . பிளாக்குகளில்  எழுதிக்கொண்டு இருப்பவர்கள் தங்கள்வசதிக்கு ஏற்றது போல் மாறிவிட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அப்படித் தான் அவர் செய்திருக்க வேண்டும், செய்யாதது தவறு, சொன்னதும் தவறு என்று தான் சொல்லியிருக்கிறேனே நீங்கள் சுட்டிய கருத்தின் மேலே?

ஆனால், நீங்கள் மேற்கருத்தைப் பிய்த்தெடுத்த இடத்தில் போய், அங்கே நான் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்கா, இப்ப இங்க காணாமால் போவோர் பற்றி கண்ணீர் வடிப்போருக்கு தகுதி இருக்கா என்று ஒருக்கா சொல்ல இயலுமா?

அதற்குமேலே  இருந்த கருத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீங்கள் எதையும் சொல்லவேயில்லை ஆனால் இதை எழுதியபின் அடுத்த பக்கத்தில் அந்த கருத்து இருந்ததை கவனித்தேன்.

நீங்கள் கேட்ட கேள்வி இம்முறையும் ராஜபக்சேக்கள் வரவேண்டும் என்றுசொன்னவர்களுக்கானது. நான் அப்படி எதுவுமே சொல்லாததால் அதற்கு நான் பதிலளிக்கவில்லை. 

அதற்காக  2005இல் ராஜபக்சேவை ஜனாதிபதியாக வரச்செய்தது பிழையென புலிகள் போரில் மௌனித்தபிறகு  சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. அதுவே வேறுவிதமாக முடிந்திருந்தால் ஆகா ஓகோ என்று இங்குவந்து கருத்துசொல்லியிருப்பீர்கள். அப்போது அவர்களுக்கிருந்த இருதெரிவுகளில் ஒன்றை தெரிவுசெய்தனர். அப்போது அவர்களுக்கு அதுசரியென தென்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

சரி, திரியைத் திசை திருப்பாமல் பதில் தர முனைகிறேன். அந்த 2005 முடிவு (அது குறித்து எனக்கு கருத்தெதுவும் இல்லை) அதன் விளைவுகள் உருவாகி 11 வருடங்களுக்குப் பின்னரும் "இராச தந்திரமான முடிவு தான்" என்று இன்னும் வாதாடும் ஒருவரிடம் தான் அதைக் கேட்டிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அப்போது அவர்களுக்கிருந்த இருதெரிவுகளில் ஒன்றை தெரிவுசெய்தனர். அப்போது அவர்களுக்கு அதுசரியென தென்பட்டிருக்கலாம்.

நன்றி தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக விலகு-விஜய் சேதுபதிக்கு தொடரும் சிக்கல்!பகிரங்க வேண்டுகோள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பி பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவனை ஏன் சுட்டார்கள் விஜய் சேதுபதிக்குகேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளீதரன் பரிசுத்தமடைகிறாரா??.🤔

Sethupathy.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. 

படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/19155403/1985648/vijay-sethupathi-steps-out-from-800-movie.vpf

800 படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் - விஜய் சேதுபதிக்கு முரளிதரன் வேண்டுகோள்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. 
 
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர். 
 
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறது
 
என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தாப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை . அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்
 
ஒவ்வொரு முறை எனக்கு எற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்ததோ. திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன் அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
 
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதாவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை டக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு

800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு

சென்னை, 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

நெட்டிசன்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வந்தனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

800 படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விஜய் சேதுபதி இதற்கு விளக்கமளித்தார். அதில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் 800 படம் வெளியாகும்போது கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கும் என்றும், நான் கேட்ட கதை என்னவென்று எனக்குத்தான் தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.  தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், முத்தையா முரளிதரன் மீண்டும் இந்த விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி நன்றி... வணக்கம்... என விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/19153453/Vijay-Sethupathi-decides-to-quit-film-800.vpf

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரனின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோக செயல்  உலகம் முழுக்க பரவ செய்த 800 படக்குழுவுக்கு நன்றிகள் .

#AntiTamilKalananithiMaran #GenocideSupporterMurali

சன்ரைஸ் பயிற்சியாளர் அங்கிருந்தும் ஆளை தூக்க சொல்லி தொடங்குகிறார்கள் காணமல் போனோரின் தாய் மாரின் சாபம் விடாது திரத்துகிறது .

இம்முறை மாறன் அரசியல் நொடி அனல் பறக்கும்  என்று எதிர்பார்க்கலாம் .

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரன் கோரிக்கை- 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்

October 19, 2020
 
Share
 
1-58-696x348.jpg
 26 Views

‘ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை விரும்பவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்,தனது வாழ்கைப்படமான 800 திரைப்படத்தில் இருந்து விலகுமாறு விஜய்சேதுபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டரில் ‘நன்றி, வணக்கம்’ என பதிவிட்டுள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டது 800 திரைப்படம். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனையில் சிங்களருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என உலகத் தமிழர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இருப்பினும் விஜய்சேதுபதி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தம்முடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான 800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் அறிக்கையில் கூறி உள்ளதாவது:

“விஜய் சேதுபதிக்கு அழுத்தம் எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.

விஜய்சேதுபதி விலக வேண்டுகோள் அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடுவதில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது.

நிச்சயம் படம் வரும் இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி இந்த சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி விலகல், முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கை வெளியா உடனேயே இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார் நடிகர் விஜயசேதுபதி. மேலும் அந்த பதிவில் நன்றி வணக்கம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் முத்தையா முரளிதரன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவது உறுதியாகியுள்ளது.

https://www.ilakku.org/முத்தையா-முரளிதரனின்-கோர/

18 minutes ago, பெருமாள் said:

முத்தையா முரளிதரனின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோக செயல்  உலகம் முழுக்க பரவ செய்த 800 படக்குழுவுக்கு நன்றிகள் .

அத்துடன் சிலரின் உண்மை முகங்களையும் கண்டறிய உதவியது👍

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுக்கு மதிப்பளித்த வி.சே க்கு நன்றி.

இந்த பிரச்சனையை கண்ணியமாக கையாண்டது - முரளியை கொண்டே விலகும் முடிவை அறிவிக்க வைத்தது - வி.சே மீதான அபிமானத்தை கூட்டியுள்ளது.

சரி இப்போதான் வி.சே விலகி விட்டாரே? இவரை மறுபடியும் தமிழனாக சேர்த்துகொள்வோமா🤣

அல்லாட்டி இன்னும் தெலுங்கன்தானா🤦‍♂️

இந்த சர்சையால் ரெண்டு நல்ல விடயங்கள் நடந்தது.

1. முரளி எப்படி பட்ட சுயநலமி என்பதை உலகம் அறிந்து கொண்டது

2. சாதிய அடிப்படையில் தமிழன் என்று இனத்தூய்மை பேசும் அரசியல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பது அப்பட்டமாகியுள்ளது.

ஆனால் இந்த படம் பாலிவுட்டில் இதை விட பெரிய அளவில் வரும் என நினைக்கிறேன்.

தம்பிகள் திரைசீலையை கிழிக்க தயாராகவும்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விஐய் சேதுபதி, உங்களின் மன உலைச்சல்தான் கடந்த சில நாட்களாக எங்களுக்கும், இதுவும் கடந்து போகும், நல்லதொரு கலைஞன் இன்னும் வளர வாழ்த்துகள்

21 minutes ago, goshan_che said:

1. முரளி எப்படி பட்ட சுயநலமி என்பதை உலகம் அறிந்து கொண்டது

2. சாதிய அடிப்படையில் தமிழன் என்று இனத்தூய்மை பேசும் அரசியல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பது அப்பட்டமாகியுள்ளது.

ஆனால் இந்த படம் பாலிவுட்டில் இதை விட பெரிய அளவில் வரும் என நினைக்கிறேன்.

தம்பிகள் திரைசீலையை கிழிக்க தயாராகவும்🤣

அதை புலம் பெயர் இன மானமுள்ள தமிழர்கள் பார்த்துக்கொள்ளவார்கள், சிங்கள கிந்திய தேசத்தைத் தவிர வேறு எங்கும் எடுக்கவிடமாட்டார்கள். 

எடுத்தாலும் பார்ப்பவர்கள் தமிழர்களா என யோசித்து பார்க்கட்டும்

இரண்டாவது விளங்கவில்லை விளங்கப்படுத்த முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.