Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏன் 800 படத்தை எதிர்க்க வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
0324789E-6FB2-4A5B-90D1-E1FC66A55F7F.jpeg
 

 

ஈழத்தில் நடந்த தமிழர்போராட்டம் இயக்க வடிவம்பெற்று பின்னர் ஒரு பகுதியில்ஆட்சி அமைத்து அதன் பின்னர்வல்லரசுகளின் ஆசியுடன்புலிகளுக்கு எதிரான ஒருஅநீதியான போராக மாறி, லட்சக்கணக்கானோர் இனஅழித்தொழிப்புக்கு ஆளானதைஅறிவோம். இந்த விசயத்தில் ஒருவினோதம் பின்னர் நடந்தது - இந்த இன அழிப்புக்கான மொத்தபழியையும் புலிகளின் மீதேசுமத்துவது. இதை victim blaming என்பார்கள். தலித்துகள் கூலிங்கிளாசும்ஜீன்ஸும் அணிந்து வன்னியப்பெண்களை ஏமாற்றுகிறார்கள்என பாமக பேசுவதைப் போல. ஒரு பலாத்காரம் நடந்தால் ஒருதரப்பினர் அந்த பெண்ஒழுக்கங்கெட்டவள் எனப்பேசுவதைப் போல. திட்டமிட்டதாக்குதல் மூலம் ஒரு தரப்புமக்களைக் கொன்று விட்டுஅவர்களும் தான் கலவரத்தில்ஈடுபட்டார் என்பதைப் போல. யூதர்களை ஜெர்மனியில்நாஜிக்கள் அழித்தொழித்தபோது ஒரு சாரார் - நாஜிஅல்லாதோர் கூட - “இந்தயூதர்களும் சளைத்தவர்கள்அல்ல, அவர்களின் தன்னலமேஇந்நிலைக்குக் காரணம் எனபழியை மாற்றிப் போட்டார்கள்.

 இந்த பாதிக்கப்பட்டவர்களைபழிப்பதில் தமிழர்களும் ஒருபகுதி ஈழத்தமிழர்களும்ஈடுபடுவதை அறிவோம். ஏன்இப்படி செய்கிறார்கள்?

 

இரண்டு காரணங்கள்:

 

1) “நாங்கள் அமைதியைவிரும்புகிறோம்” - மணிரத்னம்போன்றோரின் படைப்புகளில்இப்படியான ஒரு தொனி வரும். இது ஒரு கார்ப்பரேட்வாதகதையாடல் - நவதாராளவாதபொருளாதாரம் கொழிப்பதற்குஅமைதி அவசியம். ஆனால்இந்த அமைதிக்குள் இருக்கும்போது தான் மக்கள் உங்கள்கண்முன்னால் பெருங்கூட்டமாய்அழிக்கப்பட்டதைப்பார்க்கிறீர்கள். அப்போது ஒருநிம்மதியின்மை ஏற்படுகிறது - உற்பத்தி, நுகர்வு, துய்ப்பு எனஇருப்பதே அமைதி’. இதில்உள்ளார்ந்து உங்கள்நினைவுகள் சார்ந்த ஒருநிம்மதியிழப்பு வரும் போதுஅப்பழியை பேசிப்பேசிபாதிக்கப்பட்டவர்கள் பால்போட்டு விடுவது. அநீதிஇழைத்தவர்கள் மீதுபோடலாமே? முடியாது. அவர்களே உங்கள் முதலாளிகள். அவர்களே ஆளும் வர்க்கம். அவர்கள் நிம்மதியிழந்தால்உங்கள் நிம்மதியும் கெட்டுவிடும் என அஞ்சுகிறீர்கள்.

 

அமைதியை விரும்புவோர் ஏன்அமைதிக்கு மிக அதிகமாய்குந்தகம் விளைவித்தோரைகுற்றம் சாட்டுவதில்லை என்பதில்தான் உள்ளது இந்த பாசாங்கின்மையம்.

 

முரளிதரன் பேசும் போது, “முன்புபுலிகள் இருந்த போது பிரதானசாலை வழி போக  முடியாது, சிங்கள அரசியல் தலைவர்கள்மீது புலிகள் குண்டுபோடுவார்கள், தாக்குவார்கள், அதனால் நாங்கள் சுற்றிவளைத்து பயணிக்க வேண்டிவந்தது, ஒருநாளும் நிம்மதிஇருந்ததில்லை என்கிறார். ஆனால் எங்குமே அவர் சிங்களராணுவத்தினர்களும், சிங்களபேரினவாதிகளும் செய்தகொடுங்குற்றங்களைப் பற்றிப்பேசுவதில்லை. எளியோருக்கும்வலியோருக்கும் இடையேசண்டை நடக்கும் போதுஎளியோரை ஆதரிக்க வேண்டும்என்பது உலக நியதி. இதில்தமிழர்-சிங்களவர் வித்தியாசம்கூட இரண்டாம் பட்சமே. முரளிதரனால் ஏன் அப்படி செய்யமுடியவில்லை என்றால்அவருக்கு சிங்களஅரசியல்வாதிகளின் ஆதரவுவேண்டும் என்பதால் அல்ல. அதற்கு அவர் அமைதியாகஇருந்து விட்டுப் போகலாமே. அவர் அடிமனத்தில் இந்தஎண்ணமே இருக்கிறது - அவருக்கு நிம்மதி வேண்டும் - உள்ளார்ந்த நிம்மதி - அதற்குநினைவுகள் ஏற்படுத்தும்நிம்மதிழப்பு  அவருக்கு பெரும்தொந்தரவாகிறது. அதற்காகவேஇப்படிப் பேசுகிறார்.

 

அடுத்து இலங்கையைபிரதிநுத்துவம் செய்த தமிழராகமுரளிதரனுக்கு தன் தேசியம்சார்ந்த ஒரு பிரச்சனைஏற்படுகிறது - அவருக்குஇலங்கை அரசுஆரம்பத்திலிருந்தே எல்லா விதஆதரவுகளையும், மரியாதையையும் கொடுக்கிறது. அவரது பந்து வீச்சுசட்டவிரோதமானது என சர்ச்சைவெடித்த போது இலங்கைகிரிக்கெட் வாரியம் கடைசிவரை அவருக்காக போராடியது. சிங்கள் ரசிகர்களும் அவருக்காககைதட்டுகிறார்கள். அவர்இலங்கை தேசியவாதத்தைஏற்கிறார். ஆனால்ஈழப்போராட்டம் அவருக்கு ஒருமுரணை, அதனாலானஅகத்தொந்தரவை அளிக்கிறது. பிற தமிழர்களுக்குவரலாற்றுரீதியாகவேஇத்தகையை மரியாதையும்ஆதரவும் இலங்கை அரசால் ஏன்வழங்கப்படவில்லை எனயோசிக்க அவர் தயாரில்லை. ஏனென்றால் அவரது தேசியஉணர்வை அது நொறுக்கி விடும். இலங்கை இறையாண்மைஒருவித சிங்கள இறையாண்மைஎனப் பார்க்க அவர்விரும்பவில்லை. “இவன்கள் ஏன்இப்படி தொந்தரவுகொடுக்கிறார்கள்?” என்றேஅவரது மனம் சிந்திக்கும். அதுஏன் மாறாக சிந்திக்கவில்லைஎன்பதற்கு அடுத்து வருகிறேன்.

 

2) அரசியல் நீக்கம்:

அரசியல் நீக்கமானதுநவதாராளாவாதத்தின்அடிப்படையான ஒரு கொள்கை, அது மக்களிடையே ஒரு பொதுசுபாவமாகப் படிகிறது. நீங்கள்நமது பள்ளிக்கல்வியில் இருந்தேஅரசியல்ரீதியான கருத்துக்களைஎங்கும் பொதுஉரையாடல்களில் காணமுடியாது. நமது பொழுதுபோக்குநிகழ்ச்சிகளிலும் அரசியல்சித்தாந்த கருத்துக்கள் இராது. நான் கல்லூரியில் சமூகவியல்வகுப்புகளில் போய் அமர்வேன். அங்கு சமூகப் பிரச்சனைகள்சார்ந்து தீவிர விவாதங்கள் எழும்போது மாணவர்கள் இவற்றைஅதிகமும் தமது தனிப்பட்டகண்ணோட்டத்தில் இருந்தேநோக்குவதை, மிக மிகஅரிதாகவே அரசியல் சார்ந்து, சித்தாந்தம் சார்ந்துயோசிப்பதைக் காண்கிறேன். ஏனென்றால் இந்த மாணவர்கள்தனியார் பள்ளிகளால்பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அங்கு மாணவர்கள் செய்தியைக்கூட வெறும் செய்தியாக, அரசியலற்றதாகவேபார்ப்பார்கள். அரசுப்பள்ளிகளும்ஒன்றும் மேலில்லை.

 

 ஏன் ஒரு சமூகம் அரசியலையோசிக்க வேண்டும், ஏன்அரசியல் சார்ந்து ஒருவிசயத்தைப் பார்க்க வேண்டும்?

 

ஒரு சமூகம் குடிமை சமூகமாகமாற அது அதிகார அரசியலில்பங்கேற்க வேண்டும். அதிகாரஅரசியலுக்குள் வர அதுசித்தாந்த அரசியலை ஏற்கவேண்டும். இல்லாவிடில் அதுதொடர்ந்து சுரண்டப்படும், இனவாத அழிப்புக்கு ஆளாகும், இதை உணராமலே சதாகையேந்தும் நிலையில்இருக்கும், இதைஉணராதிருக்கும்படிநவதாராளாவாதம் நுகர்வுவாழ்க்கையில் மக்களைஅதிகமாய் தள்ளும்: நமதுவேலைகள் நம்மை நமதுஇருப்பில் இருந்துஅந்நியப்படுத்துகின்றன, வெறுமை தோன்றும். வெறுமைஅதிகமாக நாம் குடி, கேளிக்கை, சினிமா என சீரழிவோம். அரசியல் பேச்சு எழும் போதுஇவர்கள் நம்மிடம் அரசியல்பேசினால் நிம்மதி போய் விடும், நிலையின்மை வரும், வறுமைஏற்படும் எனஅச்சுறுத்துவார்கள். இவைபொய்ப்புரட்டு என யோசிக்கும்நிலையில் நாம் இருக்கமாட்டார்கள். நாம் ஒரு குடிமைசமூகமாக அல்ல நுகர்வுசமூகமாகவே எஞ்சுவோம்.

 

 தேர்தலின் போது பணம் வாங்கிவாக்களிக்கிறார்கள் எனஇம்மக்களை கேலி வேறுபண்ணுவோம். எல்லாவற்றையும்நுகர்வாக்கும் இந்தபொருளாதார அமைப்பேதேர்தலிலும் ஊழலைக் கொண்டுவருகிறது என நமக்குப் புரியாது. நான் அரசியலற்றவன், நடுநிலைஎன்று பேசிகிறவர்கள்இப்படியாக நுகர்வைத் தவிரஎதுவும் முக்கியமில்லை எனசிந்திக்கும் அப்பாவிகளே’. இவர்களே புலிகள் உள்ளிட்டஆயுதமேந்திய குழுக்களின்போராட்டத்தைஆதரிக்காதவர்கள். ஏனென்றால்இவர்கள் என்றுமேஅரசியல்மயப்பட்டதில்லை. வெள்ளைக்காரர்கள் இந்தியதுணைக்கண்டத்தை ஆண்டகாலத்தில் இருந்தே இவர்கள்அப்படித்தான். வெள்ளையர்கள்நல்லவர்கள் என நம்புவதேநிம்மதியாக ஒரு காலத்தில்இங்கு இருந்தது. (வெள்ளையர்கள் இந்தியாவைசிறப்பாக ஆண்டார்கள்என்பதான வசனங்களைஅடிக்கடி பெருமூச்செறிந்துசொல்வார்கள்.) வெள்ளையர்காலனியவாதத்தின்பிள்ளைகளான நம்மைப்போன்றே ஒரு பகுதி இலங்கைத்தமிழர்களும் இருந்தார்கள். அவர்கள் அரசியல் நீக்கத்தைவிரும்பினார்கள். “சிங்களவாதத்துக்கு எதிரானபோராட்டம் எங்கள் அன்றாடவாழ்க்கையை பாதித்தது, ‘நிம்மதியை ஒழித்தது, புலிகளால் நாங்கள்நிம்மதியிழந்தோம்.” எனக்கோரும் இவர்கள் வேறெந்தவிதத்தில் (அஹிம்சையாகப்) போராடினார்கள்? தமிழர்சார்பான அரசியல் கட்சிகள்தோன்றின காலத்தில் இருந்தேஅங்கு பிரச்சனைகள் இருந்தன. ஆனால் பேரினவாதத்துக்குஎதிராக ஒட்டுமொத்த மக்களும்திரண்டு தெருவுக்கு வந்தார்கள்என எந்த வரலாறும் அங்குஇல்லை.

 ஆயுதம் ஏந்திய, ஏந்தாத இந்தபோராட்டங்களும், எதிர்ப்புகளும் தோன்றிய போதேதமிழர் சமூகம் இலங்கையில்தீவிரமாய்அரசியல்வயப்படுகிறது. எதற்குப்போராடணும், அமைதியாகப்போலாமே எனக் கேட்டவர்கள், இன்றும் கேட்பவர்கள்அரசியல்வயப்படுவதை, ஒருகுடிமை சமூகமாய்உருமாறுவதை விரும்பாதவர்கள். அவர்கள் பேரினவாதத்தால் தாம்ஒடுக்கப்படுவதை கண்மூடிஏற்றுக்கொண்டே, எல்லாவன்முறைகளின் பழியையும்ஆயுதம் தரித்த போராளிகள் மீதுபோடுவதை வசதியாககருதினார்கள். அவர்களேஇன்றும் புலம்பெயர் தமிழர்மத்தியில் புல்லுருவிகளாய் இருக்கிறார்கள்.

 

நான் வலியுறுத்தி சொல்கிறேன் - நான் ஆயுதமேந்தியபோராட்டத்தைஆதரிக்கவில்லை. (வலியவனேஅதில் ஜெயிக்க முடியும்.) ஈழத்தில் அது ஏற்பட்டு விட்டது. அதில் வெல்வதற்கான சக்திபுலிகளுக்கு இல்லை என்றதால்தோற்றார்கள், ஆனால்தோல்வியின் பக்கத்தில் நிற்பதேநீதி. இப்போது போய் அதன்மொத்த பழியையும் புலிகள் மிதுபோடுவது கயவாளித்தனம்.

 

புலிகள் ஆயுதமேந்தியபோராட்டத்தை பெரும்இயக்கமாய்தோற்றுவித்திருக்காவிட்டால்அங்கு மக்கள் அமைதியாக, புன்னகை பூத்த படிவாழ்ந்திருப்பார்கள் என ஒருதரப்பினர் நம்புகிறார்கள். இல்லை. சிறுபான்மைத்தமிழர்களை எதிரியாக்கிய ஒருஇனவாத அரசியல் அங்கு நீண்டகாலமாய் வாக்கரசியலாகிஇருக்கிறது. அதைத் தக்கவைக்க அவர்கள் பல விதஒடுக்குமுறைகளை அவிழ்த்துவிட்டபடி இருந்திருப்பார்கள். எந்த அடிப்படை உரிமையும்இல்லாத அடிமைகளாக்கிநாயாய் நடத்தியிருப்பார்கள். புலிகளின் இயக்கம் இதில் ஒருஇடைநிறுத்தத்தை கொண்டுவந்தது, ஆனால் யுத்தம் வெடித்தபோது சிங்களவர்கள் தம் நீண்டகாலத் திட்டத்தைநிறைவேற்றினார்கள். ரத்தத்தைக் காட்டி சிங்களமக்களை இப்போதைக்குஅமைதிப்படுத்திஇருக்கிறார்கள். ஆனால்இனவாதத்தின் ரத்தவெறிசுலபத்தில் அடங்காது. அடுத்தஅரை நூற்றாண்டில் அவர்களின்பெரும்பான்மைவாத அரசியலைப்பொறுத்து இந்தியாவில் உள்ளCAA போன்ற பலஒடுக்குமுறைகள் அங்கும்சட்டரீதியாகவே நிகழும். எல்லாபேரினவாத அரசியலும்இறுதியில் ஜெர்மனியிலே போய்முடியும். தவிர்க்கவே முடியாது. அடுத்த அரை நூற்றாண்டுக்குள்இங்கு இஸ்லாமியரும் அங்குதமிழர்களும் மீண்டும் குடியுரிமைஇழப்பு, அடிப்படை உரிமைகள்இழப்பு போன்ற கொடுமைகளைபரவலாக - சட்டரீதியாக - சந்திப்பார்கள். இரண்டுநாடுகளிலும் தடுப்பு முகாம்கள்அன்றாட எதார்த்தமாகும். அப்போது இலங்கையில்பழிபோட (போராட) புலிகள்இருக்க மாட்டார்கள்

 

தமிழர்களுக்கு ஈழப்போரில்நடந்த உண்மை தெரியாது, அவர்கள் கற்பனை செய்துகண்ணீர் வடிக்கிறார்கள், போரின் போது எந்தஅழுத்தத்தையும்கொடுக்கவில்லை, இப்போதுஒப்பாரி வைக்கிறார்கள்என்பதெல்லாம் அநியாயம். தமிழர்களில் ஒரு சிறிய தரப்பினர்மட்டுமே ஈழ ஆதரவு அரசியலைமுன்னெடுக்கிறார்கள். ஆனால்கணிசமான தமிழர்கள் கடந்தஅரை நூற்றாண்டாகஅரசியல்வயப்படாமலே வெறும்நுகர்வு, சாதிய சமூகமாகஇருந்து வருகிறார்கள். அவர்களே இப்போதுபேஸ்புக்கிலும் முரளிதரனின்பாத்திரத்தில் விஜய் சேதுபதி ஏன்நடிக்கலாகாது, அது படைப்புசுதந்திரம், சினிமாவைஅரசியல்மயப்படுத்தக் கூடாது, தடை கோரும் அரசியல்பாசிசமாகும் என்றெல்லாம்அபத்தமாய் எழுதுகிறார்கள்.

இதற்கு என்னுடைய பதில் இது?

அப்படத்தின் படப்பிடிப்பைவன்முறை கொண்டு தடைசெய்தாலோ, படவெளியீட்டைதடுத்தாலோ தான் தப்பு. ஆனால்அப்படம் எடுக்க வேண்டாம் எனக்கோருவதில் எந்த தப்பும்இல்லை

அரசியல் இல்லாதகலைப்படைப்பே இல்லை; எந்தபடத்திலும் ஒரு மறைமுகபிரச்சாரம் உண்டு; இப்படம்நிச்சயமாய் சிங்களவர்-ஈழத்தமிழர் உறவைஅரசியல்நீக்கம் செய்து ஒரு லாலா லா விக்கிரமன் பட பாணிஉறவாக சித்தரிக்கவேவாய்ப்பதிகம். இல்லாவிடில்இரண்டு இனங்களுமே சமஅளவில் பாதிக்கப்பட்ட ஒருபோர் என பொய்யைகட்டியெழுப்பி எனும் வரலாற்றில்வெள்ளையடித்து விடுவார்கள்.

 

 ஒரு சுத்தமான விளையாட்டுப்படமாக இதை எடுக்கக்கூடாதா

முரளிதரன் பாத்திரத்தில் தமிழ்பேசி விஜய் சேதுபதி நடித்தாலேஅது அரசியல் படமாகி விடும். தவிர்க்கவே முடியாது. பாஜககட்சியில் இருக்கிற ஒருஇஸ்லாமிய தலைவரைப் பற்றிபடமெடுக்கிறார்கள் எனவைப்போம். (அதில் மம்முட்டிநடிக்கிறார் என நினைப்போம்.) என்னவாகும்? அவர்இஸ்லாமியர் பற்றி பேசாமல்நடித்தாலே கூட அங்கு ஒருஇந்துத்துவ பிரச்சார அரசியல்ஏற்பட்டு விடும். தவிர்க்கமுடியாது. ஒரே வழி இப்படத்தைநேரடியாய் சிங்களத்தில் எடுத்துவெளியிடுவது. படம் முழுக்கமுரளிதரன் பாத்திரம் தமிழ்அடையாளமே அற்றவராகசிங்கள் மொழி மட்டுமேதெரிந்தவராகக் காட்டட்டும். முரளிதரன் பிறப்பால் சிங்களவர், மதத்தால் பௌத்தர் எனக் காட்டிவிடுங்கள். பிரச்சனையே வராது. முடியாதில்லையா? அப்போதுபிரச்சனை வரத்தான் செய்யும்.

 

பிரச்சனையை யாருமேகிளப்பவில்லை. ஒரு திறந்தபுண்ணைப் போல அது ஏற்கனவேஅங்கு இருக்கிறது. அதைப்பாருங்கள் எனக் கோருகிறோம். அதைப் பற்றி பேசுங்கள், இனவாதிகளை தொடர்ந்துஎதிர்க்க இதைபயன்படுத்துங்கள் என்கிறோம்.

 

 800 படத்துக்கு எதிரான தீபரவட்டும்!
 

http://thiruttusavi.blogspot.com/2020/10/800.html

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன மூக்கைச் சுத்தி யோகாசனப் பொசிஷனில நின்ற படியான விளக்கமோ தெரியாது🤣

வி.சே தமிழ் பேசி நடித்தாலே அது முரளி typical தமிழன் என்று ஆகி விடுமாம்! முரளி தமிழன் தானே? கோத்தா கட்சியில் இருப்போரையே தமிழன் என்பதற்காக ஈழவர்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பும் காலத்தில் , மலையகத்தில் பிறந்த ஒருவரை தமிழர் என்பதற்கு மேலதிக சான்றிதழ் கேட்கும் பாணி வேறெங்கையோ இருந்து வரும் பாணி போல இருக்கே? 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

 

 

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

இதே விடயத்தை விவாதிக்கும் இன்னொரு திரியில் இணைத்திருக்கிறார்கள், முகனூல், கீச்சகம் என்பவற்றிலிருந்து! என்ன அங்கே முரளியைக் கண்டிக்கும் இணைப்புகள் தரப்பட்டதால் இந்தக் கேள்வி  வரவில்லையென நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க.. முரளியின் ரசிகன் கிடையாது.. சொறீலங்கா கிரிக்கெட் அணி விசிறியும் கிடையாது. அதனால்.. இந்தப் படத்தை பார்க்கனுன்னு ஒரு எண்ணமே இல்லை. 

முரளியின் காலத்தில் சேன் வோன்... ஜொன்ரி ரோட்ஸ்..  கன்ஸி கொரஞ்சே ரசிகனாக இருந்ததே அதிகம். 

1 hour ago, ரதி said:

 

புரியவில்லை என்பது மட்டும் தெரியுது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

அடுத்த திரியில் போய் கருத்து எழுதி ,பசசை  குத்தும் போது தெரியவில்லையா? ... அவர்களிடம் கேள்வி இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

அடுத்த திரியில் போய் கருத்து எழுதி ,பசசை  குத்தும் போது தெரியவில்லையா? ... அவர்களிடம் கேள்வி இல்லை 

உண்மையில் சரியாக கவனிக்கவில்லை தேடிக்கொண்டு இருக்கிறேன் அந்த பச்சை  குத்தலை நிர்வாகம் தூக்கிபோட்டுதோ  தெரியலை .

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

அடுத்த திரியில் போய் கருத்து எழுதி ,பசசை  குத்தும் போது தெரியவில்லையா? ... அவர்களிடம் கேள்வி இல்லை 

நீங்கள்  இணைத்தவரின் முகநூல் குழுமத்தை சேர்ந்தவர் அரசியலை தவிர்த்து மற்றதெல்லாம் சுவைபட எழுதுவார் இங்கு இணைக்கமுடியாது காரணம் ஆள் எழுதுவது முகப்பு புத்தகத்தில் மாத்திரமே அதனால் தான் கேட்டேன் சில திறமையானவர்கள் பிளாக் குடுக்கும் அரியண்டம் தாங்க முடியாமல் முகநூலில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதே விடயத்தை விவாதிக்கும் இன்னொரு திரியில் இணைத்திருக்கிறார்கள், முகனூல், கீச்சகம் என்பவற்றிலிருந்து! என்ன அங்கே முரளியைக் கண்டிக்கும் இணைப்புகள் தரப்பட்டதால் இந்தக் கேள்வி  வரவில்லையென நினைக்கிறேன்!

குரு £&@வினால் குற்றமில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

குரு £&@வினால் குற்றமில்லை 🤣

கடுப்புத்தான் வருகுது கோஷ் எது எண்டு விளக்குமாறு கேட்க்கிறேன் ?

யாழில் எழுதும் கருத்துக்களோ கொள்ளுபாடுகளோ சுடலையில் போடும் சடலம் போன்றது திரும்பிப்பார்க்காமல் போயிடனும் நோட்டிபிகேஷன் வந்தால் எட்டி பார்க்கலாம் .அதுதான் நம்ம விளையாட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கடுப்புத்தான் வருகுது கோஷ் எது எண்டு விளக்குமாறு கேட்க்கிறேன் ?

பெரிதாக ஒண்டுமில்லை பெரும்ஸ்.

முரளி பற்றிய மற்றைய திரியில் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் வீடியோ எல்லாம் - முரளி எதிர் அணியால் இணைக்கப்பட்ட போது எழாத கேள்வி, ரதி இங்கே முரளி ஆதரவாக இணத்தபோது எழுவதை சுட்டினேன்.

எனது நண்பர் செய்தால் குற்றம் இல்லை/கண்டும் காணாமல் போவோம் ஆனால் நமக்கு ஒவ்வாதோர் அதையே செய்தால் சுட்டி காட்டுவோம் என்ற போக்கின் ஒரு அங்கமாக இது என் மனதில் பட்டது. 

அதைதான் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பெரிதாக ஒண்டுமில்லை பெரும்ஸ்.

முரளி பற்றிய மற்றைய திரியில் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் வீடியோ எல்லாம் - முரளி எதிர் அணியால் இணைக்கப்பட்ட போது எழாத கேள்வி, ரதி இங்கே முரளி ஆதரவாக இணத்தபோது எழுவதை சுட்டினேன்.

எனது நண்பர் செய்தால் குற்றம் இல்லை/கண்டும் காணாமல் போவோம் ஆனால் நமக்கு ஒவ்வாதோர் அதையே செய்தால் சுட்டி காட்டுவோம் என்ற போக்கின் ஒரு அங்கமாக இது என் மனதில் பட்டது. 

அதைதான் சொன்னேன்.

உங்களுக்கு டான் அசோக் பற்றி தெரியாது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

உங்களுக்கு டான் அசோக் பற்றி தெரியாது போல் உள்ளது .

இல்லை- ஆள் பெரிய அப்பாடக்கரோ?

ஆனால் யார் இணைப்பு என்றாலும், யாழில் சமூகவலை பதிவுகளை  இணைகலாமா இல்லையா எனும் விதி அனைவருக்கும் பொதுவானதுதானே.

ஆனால் அவரின் கட்டுரையில் பிழை உண்டு. முரளிக்காக அர்ஜுன அம்பயரோடு முண்டியது 1995 இல். 1999இல் அல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை- ஆள் பெரிய அப்பாடக்கரோ?

அப்படித்தான்  பிரான்ஸ் தமிழிச்சி  போல் 

  • கருத்துக்கள உறவுகள்

பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை வைத்து சில முடிவுகள் எடுத்தால்  நல்லது போல் படுது .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அப்படித்தான்  பிரான்ஸ் தமிழிச்சி  போல் 

ஒ...நான் பேஸ்புக் போவதில்லை. தமிழச்சி ஜல்லிகட்டு நேரம் கலக்கி திரிந்தது தெரியும். பிறகு பார்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

 

 

இவ்வளவு பெருமைக்கும் அந்த ரோடு ரோடாய்  கத்திக்கொண்டு  இருப்பவனையே சேரும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:
4 hours ago, பெருமாள் said:

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

இதே விடயத்தை விவாதிக்கும் இன்னொரு திரியில் இணைத்திருக்கிறார்கள், முகனூல், கீச்சகம் என்பவற்றிலிருந்து! என்ன அங்கே முரளியைக் கண்டிக்கும் இணைப்புகள் தரப்பட்டதால் இந்தக் கேள்வி  வரவில்லையென நினைக்கிறேன்!

அதே தான் அது இங்கு வழக்கமாக நடப்பது தானே

2 hours ago, nedukkalapoovan said:

நாங்க.. முரளியின் ரசிகன் கிடையாது.. சொறீலங்கா கிரிக்கெட் அணி விசிறியும் கிடையாது. அதனால்.. இந்தப் படத்தை பார்க்கனுன்னு ஒரு எண்ணமே இல்லை. 

 

பிடிக்காததை பார்க்காமல் விடுவது இது தான் நியாயவாதிகள் செய்வது. எனக்கு பிடிக்காத படத்தில் அந்த நடிகர் நடிக்க கூடாது என்று அஜராகம் செய்ய மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

நீங்கள்  இணைத்தவரின் முகநூல் குழுமத்தை சேர்ந்தவர் அரசியலை தவிர்த்து மற்றதெல்லாம் சுவைபட எழுதுவார் இங்கு இணைக்கமுடியாது காரணம் ஆள் எழுதுவது முகப்பு புத்தகத்தில் மாத்திரமே அதனால் தான் கேட்டேன் சில திறமையானவர்கள் பிளாக் குடுக்கும் அரியண்டம் தாங்க முடியாமல் முகநூலில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் .

இவரைப் பற்றி எனக்குத் தெரியாது பெருமாள் ...என்னுடைய நண்பர் ஒருவர் மு.பு இணைத்திருந்தார் ...அதை நான் இங்கு இணைத்தேன் 

 

  • கருத்துக்கள உறவுகள்

122082992_1989903111166587_7016133446724 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.