Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினத்தன்று வடக்கு கிழக்கை புரெவி தாக்கியிருந்தால் மகிழ்ச்சி.! -பொன்சேகா வெறிப்பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தன்று வடக்கு கிழக்கை புரெவி தாக்கியிருந்தால் மகிழ்ச்சி.! பொன்சேகா வெறிப்பேச்சு

IMG-20201204-110755.jpg

மாவீரர் தினத்திற்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறிப் பேச்சை பேசியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.. அப்படி என்னதான் பேசினார் பொன்சேகா?

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்கேசா தெரிவித்தமையே எதிர்ப்புக்கு காரணம்..

நாடாளுமன்றில் நேற்றைய உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“சிவிலியன்கள் இறுதிப்போரில் கொலை செய்யப்படவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் இயக்கமே கட்டாயப்படுத்தி சிவிலியன்களை முன்னணியில் நிறுத்தி போராடினார்கள்.

அப்படியிருந்தும் நாங்கள் பலரையும் மீட்டோம். புனர்வாழ்வுக்கு அனுப்பினோம்.

இதேவேளை மாவீரர் தினத்தை கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம்.

மக்களுக்கு சேதம் ஏற்பட வேண்டும் என நான் கூறவில்லை. இருப்பினும் மாவீரர்கள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது.

இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதாகும். இங்கிலாந்தில் கூட பிரபாகரனின் பதாதையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டபோது பொலிஸாரினால் அகற்றப்பட்டது.

எமது நாட்டில் அது செய்திருந்தால் நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பார்கள். எமது தரப்பிலுள்ள மனோ கணேசன் கூட மாவீரர்நாள் குறித்து நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்த போதிலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.

சிலர் ஜே.வி.பியுடன் மாவீரர்களை ஒப்பீடு செய்கிறார்கள். ஆனால் ஜே.வி.பியினர் மிகவும் சிறிதளவான போராட்டத்தை நடத்திய போதிலும் நாட்டைப் பிரிக்க செயற்படவில்லை.

மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை தலைதூக்க இடமளிக்கமாட்டோம் எனக் கூறியுள்ளார் என தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம் :

https://vanakkamlondon.com/world/srilanka/2020/12/93210/

உப மூலம் :

https://www.seithy.com/breifNews.php?newsID=256791&category=TamilNews&language=tamil

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

புரெவிக்கு கூட நல்ல மனசு என்று சொல்லலாம்.. அது வடக்குக் கிழக்கை பாதிக்க நினைத்திருந்தால்.. பெருமளவில் சிதைத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இயற்கைக்கு கூட ஒரு நெகிழ்வு இருக்கென்று வைத்துக் கொண்டால்...

இந்தச் சிங்கள வெறியன்களுக்கு மனிதமே கிடையாது. இப்படியான கொடிய மனநிலை கொண்ட மனோ வியாதி உள்ளவர்களை மனிதர்கள் மத்தியில் விட்டு வைப்பது மிகவும் ஆபத்தான ஒன்று.

ஆனால்.. எங்கட சம் சும் கும்பல் இவனுக்கும் வாக்கு கேட்டு இதே வடக்குக் கிழக்கு மக்களை இவனுக்கு புள்ளடி போட வைச்ச சாணக்கியம் இருக்கே.. சொல்லி வேலையில்ல. அந்த வாக்குச் சீட்டுக்களை குப்பையில் போடச் சொல்லி இருந்தால்.. அது சாணக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் முந்திவிட்டீர்கள் 
இந்த வெறியனுக்கு தான் தேசிக்காய்கள் வாக்குப்போடச்சொல்லி நம்ம மக்களும் குத்தோ குத்து என்று 
குத்தியவர்கள் அதற்கு பரிகாரமாக தான் இப்போ மூஞ்சியிலேயே குத்தியிருக்கிறான் 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின்  உண்மை  முகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நீங்களே ".." ஆல் அடித்து கொள்ளுங்கள் - கூட்டமைப்புக்கு சிவாஜிலிங்கம் அறிவுரை.!

Screenshot-2020-12-04-15-59-14-120-org-m

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் உங்களுக்கு நீங்களே "..." ஆல் அடித்துக்கொள்ளுங்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புரேவி புயல் மாவீரர்நாள் காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் தாக்கியிருந்தால் தான் மகிழ்ந்திருப்பேன் என்று சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.

அதே போல ஆறு ஆயிரம் பேரே இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபை இரண்டு கட்டங்களாக வெளியிட்ட அறிக்கையில் இறுதிப்போரில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் 80 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

சரத்பொன்சேகா தற்போது சொல்லியிருக்கின்ற கருத்தின் ஊடாக அவர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான எண்ணம் கொண்டவர் விடுதலைப்புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள் என்று தெரிவித்த சிவாஜிலிங்கம்,

சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று தமிழ் மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலின் போது கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நீங்கள் உங்களுக்கு நீங்களே ".." ஆல் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை சஜித் பிரதேமதாஸவும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு கோரியிருந்ததையும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

http://aruvi.com/article/tam/2020/12/04/19947/

டிஸ்கி

.. சுய தணிக்கை 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு மட்டமான சிந்தனையுடன்... சிங்களவன் இருக்கின்றான். 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

சிங்களத்தின்  உண்மை  முகம்

1 hour ago, தமிழ் சிறி said:

என்ன ஒரு மட்டமான சிந்தனையுடன்... சிங்களவன் இருக்கின்றான். 😡

சிங்களம் எப்ப பொய்யான முகத்தோடை இருந்திருக்கு?
சிங்கள அரசியல்வாதிகள் எப்ப நல்ல சிந்தனையோடை பேசியிருக்கிறார்கள்?

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உங்களை நீங்களே ".." ஆல் அடித்து கொள்ளுங்கள் - கூட்டமைப்புக்கு சிவாஜிலிங்கம் அறிவுரை.!

Screenshot-2020-12-04-15-59-14-120-org-m

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் உங்களுக்கு நீங்களே "..." ஆல் அடித்துக்கொள்ளுங்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புரேவி புயல் மாவீரர்நாள் காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் தாக்கியிருந்தால் தான் மகிழ்ந்திருப்பேன் என்று சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.

அதே போல ஆறு ஆயிரம் பேரே இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபை இரண்டு கட்டங்களாக வெளியிட்ட அறிக்கையில் இறுதிப்போரில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் 80 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

சரத்பொன்சேகா தற்போது சொல்லியிருக்கின்ற கருத்தின் ஊடாக அவர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான எண்ணம் கொண்டவர் விடுதலைப்புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள் என்று தெரிவித்த சிவாஜிலிங்கம்,

சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று தமிழ் மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலின் போது கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நீங்கள் உங்களுக்கு நீங்களே ".." ஆல் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை சஜித் பிரதேமதாஸவும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு கோரியிருந்ததையும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

http://aruvi.com/article/tam/2020/12/04/19947/

டிஸ்கி

.. சுய தணிக்கை 

இவர் இப்போது அப்படி கூறினாலும், அந்த நேரத்தில் அந்த கூடடணியில்தான் இருந்தார். எனவே இவர் இப்போது இப்படி சொல்லிக்கொண்டு தப்பிக்க முடியாது.

எந்த காலத்திலும் யாருக்காவது தமிழ் மக்கள் ஒட்டு போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜே ஆர் , பிரேமா, சந்திரிகா, மகிந்த, சிறிசேன, கோத்த இவர்கள் யாருக்காவது ஓட்டுபோடவேண்டிய நிலைமை.

அது வேறொன்றுக்காகவுமல்ல. இதை யார் நல்ல பொய்யன், அல்லது நல்ல இனவாதி என்பதட்காகவே. இல்லாவிட்ட்தால் கெடட பொய்யன், இனவாதியை தெரிவு செய்ய நேரிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சரத்பொன்சேகா தற்போது சொல்லியிருக்கின்ற கருத்தின் ஊடாக அவர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவரை வைத்து போரை நடத்திய ராஜபக்ஷக்கள் செல்லாக்காசாக்கியபோதும், இவன் செய்த  அத்தனை அழிவுகளையும் மறந்து இவனுக்கு வாக்குப்போட்ட மக்கள் மேல் இவனுக்குள்ள வக்கிரபுத்தி,   இவனை இன்னும் கீழே கொண்டுபோகுமேயொழிய உயர வழியேயில்லை. இவன் எப்படிப் போர்க்களத்தில் எம் மக்களுக்குகெதிராக செயற்பட்டிருப்பான்? எம்மக்கள் எவ்வளவு கொடுமைகளை சந்தித்திருப்பார்கள்? விமல் சொல்லும்  இரத்தத்தைக் காண துடிக்கும் போதை மருந்துகளை எடுத்து காட்டேரிகள் போல இரத்தம் குடிக்க எப்படி என் மக்களை கடித்து குதறியிருப்பார்கள்? இவர்கள் நமக்கு நல்லது செய்வார்களாம். இன்னும் நம்புது சில கூட்டம். ஒருவேளை இப்படிப்பேசினால் ராஜபக்க்ஷ கொம்பனி தன்னையும் அணைத்துக்கொள்ளும் என்று எண்ணியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

இவர் இப்போது அப்படி கூறினாலும், அந்த நேரத்தில் அந்த கூடடணியில்தான் இருந்தார். எனவே இவர் இப்போது இப்படி சொல்லிக்கொண்டு தப்பிக்க முடியாது.

எந்த காலத்திலும் யாருக்காவது தமிழ் மக்கள் ஒட்டு போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜே ஆர் , பிரேமா, சந்திரிகா, மகிந்த, சிறிசேன, கோத்த இவர்கள் யாருக்காவது ஓட்டுபோடவேண்டிய நிலைமை.

அது வேறொன்றுக்காகவுமல்ல. இதை யார் நல்ல பொய்யன், அல்லது நல்ல இனவாதி என்பதட்காகவே. இல்லாவிட்ட்தால் கெடட பொய்யன், இனவாதியை தெரிவு செய்ய நேரிடும்.

ஐயா வங்காலை, 2010 சனாதிபதி தேர்தலில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டார். அது தெரியுமா உங்களுக்கு?

7 minutes ago, MEERA said:

ஐயா வங்காலை, 2010 சனாதிபதி தேர்தலில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டார். அது தெரியுமா உங்களுக்கு?

ஐயா மீரான், அவர் வென்றாரா தோதரா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Robinson cruso said:

இவர் இப்போது அப்படி கூறினாலும், அந்த நேரத்தில் அந்த கூடடணியில்தான் இருந்தார்

1 hour ago, MEERA said:

ஐயா வங்காலை, 2010 சனாதிபதி தேர்தலில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டார். அது தெரியுமா உங்களுக்கு?

1 hour ago, Robinson cruso said:

ஐயா மீரான், அவர் வென்றாரா தோதரா?

இப்படியெல்லாம் பேசி தம்மை நிலைநாட்டுவதற்கு திறமை வேண்டும். இருக்க வேண்டிய இடம் வேறு.....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

ஐயா மீரான், அவர் வென்றாரா தோதரா?

அவர் என்ன செய்தார் என்பதே தற்போதைய விடயம்.

பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

என்ன ஒரு மட்டமான சிந்தனையுடன்... சிங்களவன் இருக்கின்றான். 😡

எல்லாத்தையும் விட படு மோசமானது ஐநாவில் தமிழர் பிரதி நிதி என்று சொல்லிக்கொண்டு அங்கு இனப்படுகொலையே நடக்கவில்லை என்று சொல்லி போர்க்குற்ற விசாரணை இல்லாமல் செய்த சுமத்திரன் அவன் தன்னும் 5அல்லது  6 ஆயிரம் என்கிறான் ஆனால் சுமத்திரன் ஐநாவில் என்ன சொன்னவர் அங்கு இனப்படுகொலையே நடக்கவில்லை என்று சிங்களவன் சிங்களவனே அவன் எப்பவும் மாறப்போவதில்லை முதலில் எங்களுக்குள் இருக்கும் கருணாக்களை அடையாளம் காணவேணும் .

20 hours ago, MEERA said:

அவர் என்ன செய்தார் என்பதே தற்போதைய விடயம்.

பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில்

செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாய் வாசி. இது புரிய உங்களுக்கு எதனை வருடம் செல்லுமென்று எனக்கு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

எல்லாத்தையும் விட படு மோசமானது ஐநாவில் தமிழர் பிரதி நிதி என்று சொல்லிக்கொண்டு அங்கு இனப்படுகொலையே நடக்கவில்லை என்று சொல்லி போர்க்குற்ற விசாரணை இல்லாமல் செய்த சுமத்திரன் அவன் தன்னும் 5அல்லது  6 ஆயிரம் என்கிறான் ஆனால் சுமத்திரன் ஐநாவில் என்ன சொன்னவர் அங்கு இனப்படுகொலையே நடக்கவில்லை என்று சிங்களவன் சிங்களவனே அவன் எப்பவும் மாறப்போவதில்லை முதலில் எங்களுக்குள் இருக்கும் கருணாக்களை அடையாளம் காணவேணும் .

பெருமாள், சும் இப்படி ஐ.நாவில் "இனப்படுகொலை நடக்கவில்லை" என்று பேசிய வீடியோ உங்களிடம் இருக்கா? இணையுங்கள் பார்ப்பம் ஒருக்கா!

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2020 at 21:32, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புரேவி புயல் மாவீரர்நாள் காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் தாக்கியிருந்தால் தான் மகிழ்ந்திருப்பேன் என்று சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.

2010 ம் ஆண்டு, நடந்து முடிந்த போரினால் களைத்து சொத்துக்களை இழந்து  உயிரிழந்த உறவுகளுக்காக அழுதுகொண்டிருந்தது தமிழினம். சிங்களமோ, அந்நிய நாட்டை வெற்றி கொண்டதுபோல் களிப்பில் வெற்றி விழா கொண்டாட தயாராகிக் கொண்டிருந்தது. தடுக்கவும் முடியாமல், தம்மைத் தேற்றவும் முடியாமல் கொழும்புத் தமிழர் அவமானதோடு செய்வதறியாது தவித்து நின்றனர். அந்நேரம்  பார்த்து  இயற்கை அன்னை கொட்டித் தீர்த்தாள் தன் கோபத்தையோ, கண்ணீரையோ தென்பகுதியெல்லாம் வெள்ளம். அழுத தமிழன் தன் கண்ணைத் துடைத்துக்கொண்டும், தன்னைத் தேற்றிக்கொண்டும் உதவி செய்ய முன்வந்தான் தென்னகத்துக்கு. புலம்பெயர்ந்தோர் தமதுறவுகளுக்கு அனுப்பிய உணவுக்கப்பலை நடுக்கடலில் தடுத்து நிறுத்திய அரக்கத்தனத்தையும்,  வன்னியில் கத்தோலிக்க உணவுக்களஞ்சியங்களை குண்டு போட்டு தகர்த்த வெறியாட்டத்தையும் மறந்து, தங்களிடம் உள்ளதை பகிர்ந்து உணவு லாரிகள் தென்னகம் நோக்கி புறப்பட்டன. இது தமிழனின் பெருந்தன்மை, பகைவனையும் மன்னிக்கும் தன்மை இது. போரில் இறந்த இராணுவத்தின் உடல்களை மரியாதையோடு அனுப்பிவைத்தபோதும் அவற்றை அங்கேயே போட்டு எரித்துவிட்டு காணாமற் போனோர் என்று தெரிவித்தவன், போர்க்களத்தில் போரிட மறுத்த, தப்பியோட முனைந்த படையினரை சுட்டுத் தள்ளிவிட்டு அதே காரணத்தைக் கூறி ஏழைக் கிராம பெற்றோரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

பெருமாள், சும் இப்படி ஐ.நாவில் "இனப்படுகொலை நடக்கவில்லை" என்று பேசிய வீடியோ உங்களிடம் இருக்கா? இணையுங்கள் பார்ப்பம் ஒருக்கா!

உங்களுடன் கருத்தாடுவதில்லை எனும் முடிவில் உள்ளேன் ஏனென்றால் உங்களுக்கு மருத்துவம் பற்றிய அறிவு உண்டு அதுக்காக புலி  கசப்புணர்வுடன்   தமிழ் தேசிய  திரிக்குள்ளும் புகுந்து குதிரைக்கு கொம்பு என்று நிறுவும் ஆள் அந்த பிழையை சுட்டி காட்டினால் உடனே அவதூரான வார்த்தை பிரயோகம் நீங்கள் தான் முதலில் தொடங்கி வைப்பது அதன் பின் மற்றவர்கள் தொடங்க நிர்வாகத்துக்கு போட்டு கொடுக்கவா என்று சொல்லி சக கருத்தாளரை எதிரி போல் பாவிப்பது அதன் பின் நிர்வாகம் அந்த திரிக்கு வருமுன்னர் நல்ல பிள்ளையாய் நீங்கள்  முதல் எழுதிய தூஷண வார்த்தையை அழித்துவிடுவது மட்டுவும் பல சோலி உள்ளவர்கள் வந்ததும் கத்தி எடுத்து ஒரு விசுக்கு உங்களுக்கு இந்த யாழின் நடைமுறை விளங்கி பல திரிகளில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாய் யார் எழுதினாலும் உடனே வந்து முட்டாள்த்தனமாய் கொள்ளுப்படுவது அதன் பின் கருத்தாடலில் தோற்கும் போது  "நீங்கள்  எழுதிய கருத்துக்களை நீங்களே அழியுங்கள்  இல்லை நான் நிர்வாகத்துக்கு சொல்லவா" என்று மிரட்டும் மனிதர் எனவே இனி உங்கள் கேள்விகளுக்கு பதில் என்னிடம் இருந்து வராது நன்றி வணக்கம்  .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இது மிகச் சிறந்த முடிவு பெருமாள்! இதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், இதனால் நீங்கள் எதையும் ஆதாரம் இல்லாமால் எழுதி விட்டுப் பேசாமல் இருக்கும் சிறப்புரிமை உங்களுக்குக் கிடைக்கிறது! 

ஆனால் உங்கள் வழமையான பாணியில் உங்கள் கற்பனையை அள்ளி விட்டிருக்கிறீர்கள்: நான் எழுதியதை திருப்பி போய் அழிக்கும் வழக்கமே எனக்குக் கிடையாது. ஆனால், இந்த விதி மீறலான செயல் செய்வோர் உங்கள் கருத்துக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 

வளர்ந்தவர்கள் போல் உரையாட இயலாதோர் யாழில் உரையாட வேண்டிய அவசியம் இல்லையென்பது என் கருத்து!  

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எல்லாருமே வசதிகேற்ப கதைப்பவர்கள்தான். அதிலும் அரசியல்வாதிகள், இலங்கை அரசியல்வாதிகள்- சொல்லி வேலை இல்லை.

ஆகவே எமது அரசியலையும் இந்த அடிபடையில்தான் நகர்த்த வேண்டும். அப்பாவித்தனமாக இருக்க கூடாது.

1. 2010 இல் பொன்சேக்காவுக்கு வோட்டு போட்ட சகல தமிழருக்கும் தெரியும் அவர் எப்படிபட்ட இனவாதி என்பது. ஆனால் அது பொன்சேக்கா ஆதரவு வாக்கு இல்லை. மகிந்த எதிர்வாக்கு. அடுத்த பொதுத் தேர்தலில் பொன்சேக்காவின் கட்சிக்கு எமது மக்கள் கொடுத்த மரண அடியே எமது மக்களின் சிந்தனை ஓட்டம் என்ன என்பதை  சொல்ல போதுமானது. இது சகல ராஜதந்தரிகளுக்கும், உலகத்துக்கும் தெரியும். 

பொன்சேகாவுக்கு போட்டதன் மூலம் எமது மக்கள் சொல்ல வந்த செய்தி, சேர வேண்டியவர்களுக்கு போய் சேர்ந்தது, loud and clear.  கமரெனின் இலங்கை விஜயம் உட்பட அதன் பின்னான பல நகர்வுகளில் இதன் பிரதிபலிப்பு இருந்ததை, உன்னிப்பாக கவனிப்பவர்கள் கண்டுகொள்வார்கள்.

2. 2005 இல் மேற்கின் வேண்டுகோளையும் மீறி தேர்தலை புறக்கணித்த நிலையில் மீண்டும் அப்படி ஒரு முடிவை தமிழர் தலைமை அப்போது எடுக்காமல் விட்டது சரியான முடிவே.

3. Politics is the art of the possible, the attainable — the art of the next best என்கிறார் அறிஞர் பிஸ்மார்க்.

அரசியல் என்பது முடியுமானதை, அடையகூடியதை - உள்ளதில் திறமானதை அடையும் கலை என்பது இதன் அர்த்தம்.

2010 இல் கூட்டு எதிர்கட்சிகள் என அடி எடுத்து வைத்த முயற்சிதான், 2015 ஆட்சி மாற்றத்தில் முடிந்தது. நிச்சயமாக ஒப்பீட்டளவில் இந்த காலம் இலங்கையில் தமிழர் உட்பட்ட சகல சிறுபான்மைக்கும் ஓரளவு கரைச்சல் குறைந்த காலமாக இருந்தது. 

யார் கண்டது, நல்லாட்சி அரசின் பங்காளிகளான ரணில், மைத்திரி, ஹக்கீம் என்போர் கொஞ்சம் விசால மனத்துடன், நாட்டின் நன்மை கருதி செயல்பட்டு 2015-2020 கொஞ்சம் நல்வழியில் பயன்படுத்தி இருந்தால் நாடு ஒரு நல்ல வழியில் போயிருக்கவும் கூடும்.

இது நடக்கவில்லை, நல்லாட்சியை போட்டடித்தார்கள் என்பதற்காக 2010 இல் 2015 இல் நடக்கவிருந்த ஆட்சி மாற்றத்துக்கு முதல் ஆளாக எமது மக்கள் எடுத்து வைத்த முதல் அடி தப்பென்றாகாது.

எமது மக்கள் தமது வலுவுக்கு உட்பட்டு, ஒரு கெளரவமான தீர்வுக்காக சகல வழிகளையும் முயற்சித்து பார்த்தார்கள். அதில் ஒன்றுதான் மகிந்த நீக்கம். இப்போ இதன் அடுத்த கட்டமாக அங்கஜனையும், பிள்ளையானையும் ஆதரிக்கிறார்கள்.

4. இங்கு ஒரு வினோத முரண் நகையாக இலங்கை தேர்தலை புறகணித்திருக்க வேண்டும் என்று கூறும் நெடுக்கு போன்றவர்களும், இல்லை பிள்ளையான் போன்ற மகிந்த ஆதரவு அரசியலே தேவை எனும் அக்னி போன்றோரும் ஒரே அணியில் வருவதையும் காண முடிகிறது 🤣. Politics makes strange bedfellows என்பது இதைத்தான் போலும்.

அதிலும் மிகலாவகமாக அக்னி - தான் ஆதரிக்கும் கட்சியில்தான் சரத் வீரசேகர உள்ளார் என்பதை மற(றை)த்து விட்டு பொன்சேக்கா மீது பாய்கிறார் 🤣.

பொன்சேக்கா இப்போ கதைப்பதற்கு  2010 இல் வோட்டு போட்டது பிழை என்றால். வீரசேகர முந்தநாள் கதைத்தற்கு கடந்த தேர்தலில் பிள்ளையானுக்கு போட்டதும் பிழைதானே?

கவனிக்க: இந்த கேள்வியை கேட்பது தேசிக்காயோ, கொச்சிகாயோ அல்ல, தமிழ் தேசிய எதிரியாக, தமிழின விரோதியாக யாழில் சிலரால் அடையாளம் காட்டபட்டிருக்கும் கோஷான்😀. ஆகவே தேசிக்காய் மந்திரம் இங்கே பலிக்காது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இலங்கை அரசியலில் மட்டுமல்ல, அமெரிக்க, பிறெக்சிற், போலந்து, பிறேசில் அரசியலிலும் மக்களின் நடவடிக்கைகளை விளக்க இப்போது பாவிக்கப் படும் ஒரு பதம்: cognitive dissonance.  

இதற்கு என்ன தூய தமிழ் என்று தெரியாது, ஆனால் எங்கள் மூளைக்குள் ஒன்றோடொன்று முரண்படும் எண்ணங்கள் , பார்வைகள் ஒரே நேரத்தில் குடியிருப்பதும் எம்மை இயக்குவதும் என்று எடுத்துக் கொள்ளலாம்! 

இதைத் தான் இங்கேயும் காண்கிறோம் என நினைக்கிறேன். 

23 hours ago, Justin said:

பெருமாள், சும் இப்படி ஐ.நாவில் "இனப்படுகொலை நடக்கவில்லை" என்று பேசிய வீடியோ உங்களிடம் இருக்கா? இணையுங்கள் பார்ப்பம் ஒருக்கா!

ஜஸ்டின், உங்கள் பார்வைக்கு சரத் வீரசேகரா இந்த வார சண்டே ஆப்செர்வருக்கு வழங்கிய செய்தியின் ஒரு பகுதியை இணைத்திருக்கிறேன். அதை வசித்து விட்டு நீங்கள் தீர்மானியுங்கள். அதை சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தி இருக்கிறேன்.

http://www.sundayobserver.lk/sites/default/files/news/2020/12/04/z_p04-Govt-on2.jpg

Q: Why cannot the TNA leaders sit with the Government and discuss their community’s problems if any rather than going behind foreign leaders and raising domestic issues at the Geneva sessions?

A: Those days TNA MPs took oath before the LTTE leader Prabhakaran prior to taking oath in Parliament. Now TNA MP Sumanthiran commemorated and paid tribute to the notorious LTTEer Pandithar who killed our security forces including those who were in custody. Sumanthiran has the audacity to pay respect to a killer of our security forces personnel by keeping his own STF escort outside his house. He then attends Parliament and talks about his parliamentary perks and privileges. Such high-handed acts must stop with immediate effect. Sumanthiran and other Tamil politicians who are always making hate speeches against the Sinhalese should be banned from coming to Parliament.

Q: You went to Geneva on your own accord and presented an objective picture of the alleged human rights abuses. Could you explain your experiences and the response you got?

A: I went to Geneva because the then Yahapalana Government accepted that we have committed war crimes.

Six world renowned war crime experts such as Sir Desmond de Silva QC, Sir Geoffrey Nice QC, Prof. Michael Crane, Prof. Michael Newton, Major General John Holmes and Rodney Dixon QC have given very clear reports that we have not committed any war crimes.

However, then Foreign Minister Mangala Samaraweera went to Geneva and accepted that we have committed war crimes and co-sponsored the infamous 30/1 UNHRC resolution against us. Therefore, it was approved by the UNHRC without any vote or debate.

When we accepted that fact, all 47 countries were not going to back us. That is why I went on my own to Geneva and presented the other side of the story within a very limited time that I was allocated. I think I have done my best. I am confident our Government will handle this issue very carefully.

  • கருத்துக்கள உறவுகள்

"பட்டால் அறிவான் சண்டாளன்" என்றொரு பழமொழி சொல்வார்கள். இந்த சண்டாளன் பட்டும் தெளியவில்லை. தமிழனை அழிக்கும் வெறியில் இயற்கையையும் கூப்பிடுகிறான். இவர்களுக்கு அழிவு இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் இயற்கையாற்தான்.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.