Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப கால பொறுப்பாளர் சிறீ காலம் ஆகினார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப கால பொறுப்பாளர் சிறீ காலம் ஆகினார்!

breaking

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய தளபதி கிட்டு அவர்களால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பளராக விளங்கிய சிறீ காலம் ஆகினார்.

 1984ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலைக் கழக உதவி விரிவுரையாளரான அப்பையா சிறீதரன் (சிறீ) களம் பல கண்ட போராளியாக மட்டுமன்றி ஒரு அரசியல் போராளியாகவும் விளங்கியவர்.

 1985ஆம் ஆண்டு யாழ் குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப காலப் பொறுப்பாளராக விளங்கிய சிறீ, பின்னர் பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் பிரித்தானியக் கிளையின் பொறுப்பாளராகவும், தமிழ் அகதிகள் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனமாகிய ரி.ஆர்.ரெக் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் நீண்ட காலம் பணிபுரிந்தவராவார்.

 ஒரு சிறந்த பண்பாளரான சிறீ அவர்கள் புற்றுநோய்க்கு ஆளாகிய நிலையில் 07.12.2020 அன்று காலம் ஆகினார்.

https://www.thaarakam.com/news/6409b661-d8bb-4df0-983a-29bc53f95555

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஸதாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் காலமானார்

WhatsApp-Image-2020-12-07-at-4.51.07-PM.
 28 Views

தமிழீழ விடுதலைப் புலிகளால் பொருளாதார அபிவிருத்திக்கான கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அப்பையா சிறீதரன் Root Sri அவர்கள் பிரித்தானியாவில் சுகவீனம் காரணமாக டிசம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை சாவடைந்துள்ளார்.

இந்த தமிழீழ ஆய்வு நிறுவனமே பின்னர் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமானது.

WhatsApp-Image-2020-12-07-at-4.51.07-PM.

பிரபலமான பௌதீகவியல் ஆசிரியராக இருந்து தமிழீழ விடுதலை விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 இல் இணைந்த இவர் ஒரு சிறந்த கல்விமான். மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் பல்வேறு தளங்களில் அரும்பணியாற்றியவர். தாயகத்திலும் பிரித்தானியாவிலும் பல்துறை கல்வியாளர்களை உருவாக்கிய இவர் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு இலக்கு செய்தி நிறுவனம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.

https://www.ilakku.org/தமிழீழ-ஆய்வு-நிறுவனத்தின/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.......!  

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

மிகுந்த மென்மையான சுவாபம் உடைய பழகுவதற்கு இனியவர். கேணல் கிட்டுவின் சிந்தையில் உயித்த டி ஆர் டெக் நிறுவனத்தை திறம்பட வழி நடத்தி பல புலம்பெயர் உறவுகள் கல்வியில் மேன்மையடைய உதவியவர்.

ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவர்களை ஈழம் இழந்து வருகிறது. கண்ணீர் அஞ்சலிகள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

கேணல் கிட்டுவின் சிந்தையில் உயித்த டி ஆர் டெக் நிறுவனத்தை திறம்பட வழி நடத்தி பல புலம்பெயர் உறவுகள் கல்வியில் மேன்மையடைய உதவியவர்.

நானும் ஏ லெவல் படித்து ஒரு வருட இடைவெளியில் ரி ஆர் ரெக்கில் Pascal உம் C புரோக்கிராமும் word perfect உம் பயின்றேன். சிறீ அண்ணாவை கண்ட நினைவு இல்லை. 

கணிணியை பயப்பிடாமல் கையாள ஏடுதொடக்கி வைத்த இடம்  என்பதில் எப்போதும் நன்றியுணர்வு உள்ளது.  DOS prompt இல் என்ன செய்வது விழி பிதுங்கி நின்றபோது “dir” என்ற command ஐ அடித்து பல திறப்புக்களைத் தொடக்கியவர் ராமசர் (ராம் மாஸ்ரர் அல்லது அன்ரன் ராஜா).

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

நான் அங்கே படிக்கவில்லை ஆனால் எனக்கு தெரிந்த பலர், இங்கே கற்றார்கள்.

டி ஆர் டெக் சமாதான காலத்தில் கிளிநொச்சியில் நவீன தரத்தில் ஒரு கணணிக்கூடத்தையும் நிறுவியது.

தலைமைக்கு மிகவும் நெருக்கமானவரும் நம்பிக்கையானவரும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் முட்டை போட்ட ஆமை போல அமைதியாக பணிபுரிந்த சிறிதரன்!

CEC579BE-6A04-4D07-BD4B-D4CC1CD8F742-300

பகலவன்

இந்திய ராணுவ காலம் – குப்பிளான் பகுதியில் சிறியண்ணாவும் இரு போராளிகளும் ஓரிடத்தில் தங்கியிருந்தனர்.அவர்களில் ஒருவர் குப்பிளான் பகுதிப் பிரதேசப்பொறுப்பாளராக இருந்தவர் என்ற வகையில் மக்களுக்கு பரிச்சயமான முகம். அதிகாலைப் பொழுதில் வாகனசத்தங்கள் கேட்டன.பிரதானவீதியால் படையினர் செல்கிறார்கள் என ஒரு போராளி சொன்னபோது “இல்லை ;இது முற்றுகைதான்“ என உறுதியாக சொன்னார் சிறியண்ணா. காலையில் மக்கள் சொக்கவளவு சோதி விநாயகர் கோவிலடிக்கு சென்றனர். பாதுகாப்புக்காக இவ்வாறு மக்கள் கோவிலில் தஞ்சம் புகுவது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பித்த விடயம். அந்தக் கோவிலடிக்கு வந்த இந்திய இராணுவ அதிகாரி அங்கு கூடியிருந்த மக்களை ஒரு முறை நோட்டம் விட்டு விட்டு மேலங்கியை கழற்றி கையில் வைத்திருந்த இருவரை கூப்பிட்டார் ” ஆங்கிலம் தெரியுமா?“ எனக்கேட்டார். அவரால் கூப்பிடப்பட்டவர்களில் ஒருவர் பிரதேசப் பொறுப்பாளர் என்ற வகையில் யாரோ காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்ற நினைப்பில் இவர்களை பரிதாபமாக நோக்கினர் மக்கள். ” இங்கிருக்கும் யாரும் வெளியில் செல்லக்கூடாது; வெளியில் இருக்கும் எவரும் உள்ளே வரக்கூடாது. அத்துடன் எல்.ரி ரி .ஈ வந்தால் எங்களிடம் சொல்லவேண்டும். நீங்கள் இருவரும் இதனை மக்களுக்குச் சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றுசிறி யண்ணாவிடம் சொன்னார் அந்த அதிகாரி. ஏனெனில்சிறி யண்ணாதான் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொன்னவர். அந்தக்காலத்தில் இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மிகத் தெளிவாக இருந்தனர். இந்திய இராணுவத்தினர் ஆங்கிலத்தில் என்ன சொல்கிறார்களோ அதனை தமிழில் மொழிபெயர்த்து விட்டு கடைசியில் “எண்டு இவர் சொல்கிறார்” என்று முடிப்பார்கள். வாய் விட்டு சிரிக்கமுடியாது; பயம் ஒரு புறம்; கண்களாலேயே ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பினர். எப்படியோ பின்னர் போராளிகள் மூவரும் அங்கிருந்து அகன்று விட்டனர். அன்றைய முற்றுகையில் கற்கோவளப் பிள்ளையார் கோவிலடியில் ஒரு அப்பாவியைச் சாகடித்திருந்தனர் இந்தியப்படையினர்.

எப்படியோ கடல் வழியாக இந்தியா சென்றனர் இரு போராளிகள். அதில் சிறி யண்ணாவும் ஒருவர். இவர்கள் சென்னையில் கிட்டுவைச் சந்தித்தனர்.
எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் மாற்று ஏற்பாடுகளை செய்வதில் கிட்டு வல்லவர்.வீட்டுக்காவலில் இருக்கும்போதே திட்டமிட்டு செயலாற்றிய கிட்டு இயக்கத்தின் சார்பிலும் குறிப்பாக தனது சார்பிலும் மிக முக்கிய புள்ளிகளை சந்திக்க சிறியண்ணாவை அனுப்பிவைத்தார். பின்னாளில் இந்தியப்பிரதமரான வி.பி சிங் ,கர்நாடக முதலமைச்சர் இராமகிருஷ்ண ஹெக்டே,தி.மு.க தலைவர் கருணாநிதி, வைகோ ,தி. க தலைவர் வீரமணி, தமிழக முன்னேற்ற முன்னணி தலைவர் சிவாஜிகணேசன், பழ. நெடுமாறன் ஐயா என இப் பட்டியல் மிக நீண்டது. கம்யூனிஸ்ட்டு கட்சி பிரமுகர் ராஜேஸ்வர ராவ், தெலுங்கானா போராட்டத்தின் போது தங்களை இந்திய இராணுவத்தினர் எப்படி நடத்தினர் என சிறியண்ணாவுக்கு விபரித்தார். இந்தியப்படையினருடன் தாக்குப்பிடிக்க மாட்டீர்கள் என அனுதாபப் பார்வை தான் கம்யூனிஸ்களிடம் இருந்து வந்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு பயனுள்ளதாக அமையவில்லை.

கருணாநிதியுடனான சந்திப்பு ஓரளவு பயன் விளைவித்தது. இதில் வைகோ வின்பங்கு பெரிதாக இருந்தது.

இலங்கையில் இந்தியப்படையினர் தமது யுத்த நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மெரீனா கடற்கரையில் சிவாஜிகணேசன் உண்ணாவிரதம் இருந்தார். மேஜர் சுந்தரராஜன் உட்பட பல திரையுலகப் பிரமுகர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னாளில் இந்தியப்படையினரை திருப்பி அழைப்பதான முடிவை வி.பி.சிங் எடுப்பதற்கு சிறியண்ணாவுடனான சந்திப்பு வழிவகுத்தது.
`
யூ ரூ புரூட்டஸ்`என்று யூலிய சீசர் கேட்ட வினா உலக அரங்கில் பிரபலம். அதேபோல் “you too india ” என்ற தலைப்பில் ஒரு வலுவான ஆவணப் பதிவொன்றை வெளியிட கிட்டு முயற்சித்தார்.

இதற்காக இன்னொரு போராளியுடன் சென்று கன்னிமரா நூல் நிலையத்தில் சுமார் ஆறு மணித்தியாலயங்களை செலவிட்டார் சிறி யண்ணா. இந்தியஅரசியலில் கொடிகட்டி பறந்த அரசியல் வாதிகள் அனைவரும் தமது நெஞ்சைப் தொட்டுப்பார்க்கும் வகையில் வலுவான ஆவணங்களும் புகைப்படங்களும் இந் நூலில் இடம்பெற்றன .
இவ்வாறு சிறி யண்ணாவில் நம்பிக்கை வைத்து கிட்டு இம் முயற்சியில் இறங்கினார் என்றால் அதற்கு கடந்த கால அனுபவங்களே காரணம்.

“இதனை இதனால் இவன் முடிக்கும் – என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்பது பொய்யா மொழிப்ப புலவரின் கருத்து.ஏற்கெனவே கிட்டு யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளராக,தளபதியாக விளங்குகையில் இவரது பங்களிப்பை மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறார். “ஆயிரம் முட் டைபோட் ட ஆமையாக அலட்டிக்கொள்ளாமல் தன் பணிகளைச் செய்யும் போக்கு இவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. ஏற்கெனவே இந்தியாவுக்கு இவரையும் இன்னொரு முன்னைநாள் உதவி விரிவுரையாளரையும் அனுப்பி இருந்தனர் புலிகள்.அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பொருண்மியம் தொடர்பாக கற்று வந்து நாட்டில் ஆற்றிய பணிகள் மிகத் திருப்தியை அளித்திருந்தன.

தமிழகத்தில் தங்கியிருந்த புலிகள் 8.8.88 அன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோதே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. (அன்று கிட்டு தங்கியிருந்த வீட்டில் இருந்தோர் தவிர) சுமார் ஒரு மாதத்தின் பின்னரே கிட்டுவும் சிறைக்குள் கொண்டுவரப்பட்டார்.
சிறைக்குள் மனித வரலாறு பற்றி சிறியண்ணா வகுப்புக்கள் எடுத்தார். குறிப்பாக மனிதனின் சண்டை முதலில் உணவுக்காகவே ஆரம்பித்தது. பின்னர் கொல்வதை விட அடிமையாக்குவது பயனளிக்கும் என முடிவெடுத்தான் மனிதன் என்பதிலிருந்து பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

கிட்டு “எங்களை விடுதலை செய்யுங்கள்; அல்லது நாட்டில் உள்ள எமது உறுப்பினர்களிடம் ஒப்படையுங்கள் ” என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து சென்னை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு கைதிகளாகவே விமானமூலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டனர் அனைவரும். இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறையிலிருந்த இந்திய படையினரின் சிறையில் அடைக்கப்பட் டார்சிறியண்ணா. கிட்டுவுடன் ஊனமுற்ற ,நோயாளிகளான ,ஒரு சிலர் மட்டுமே விடுதலையாகினர் .¨

இந்திய படையினர் வெளியேறத்தொடங்கிய காலத்திலேயே இவர் விடுதலை செய்யப்பட்டார்(.20.2.1990 அன்று)

1987 ல் இடைக்கால நிர்வாக சபைக்கு முதலில் பெயரிடப்பட்டவர்களில் இவரும் ஒருவர். கிழக்கு மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் என்பதாலேயே பின்னர் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

1992 ல் இங்கிலாந்துக்கு சென்ற பின்னரும் எங்கள் மக்கள் மீதான, சந்ததியினர் குறித்த அக்கறை சிறி யண்ணாவுக்கு மேலும் அதிகரித்தது. Child First (UK) அமைப்பை ஆரம்பித்து காத்திரமான பணிகளை மேற்கொண்டார். ஆரவாரமில்லாத அரசியல், எதிர்பார்ப்பில்லாத வகையில் இவரது பணிகள் அமைந்தன. கடுமையாக நோய்வாய்ப்பட்டபோதும் அடுத்த தலைமுறையினர் மீதான கரிசனையினால் ஆளு மைமிக்கவர்களாக பலரை உருவாக்கி எல்லாம் சரியாக நடக்குமாறு பார்த்துக்கொண்டார்.

கிட்டுவின் இழப்பின் போது “தோளில் தூக்கி சுமந்திருந்தால் துன்பம் ஆறிவிடும் என்று பாடல் எழுதினார் யோகன் பாதர்.
சிறி யண்ணாவின் இழப்பின் போது பெருமளவில் கூட முடியதளவுக்கான சூழ்நிலை ஏற்பட்டது நாமும் காணொளி மூலமே இவரது இறுதி நிகழ்வை காணமுடிந்தது. இதயம் கனத்தது. விழிகள் பனித்தன.

போய்வாருங்கள் சிறிதரனே உங்கள் நினைவுகள் மட்டும் எப்போதும் எம்மிடம் இருக்கும்.
 
https://www.meenagam.com/ஆயிரம்-முட்டை-போட்ட-ஆமை-ப/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதை எழுதியது எங்கள் பகலவன் அண்ணாவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

On 9/12/2020 at 22:20, goshan_che said:

நான் அங்கே படிக்கவில்லை ஆனால் எனக்கு தெரிந்த பலர், இங்கே கற்றார்கள்.

டி ஆர் டெக் சமாதான காலத்தில் கிளிநொச்சியில் நவீன தரத்தில் ஒரு கணணிக்கூடத்தையும் நிறுவியது.

தலைமைக்கு மிகவும் நெருக்கமானவரும் நம்பிக்கையானவரும். 

வன்னி டெக்????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

வன்னி டெக்????

ஓம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஓம்.

2003 இல் வன்னி  டெக்கில் 2 நாட்கள்  பார்வையாளராகவும் மாணவர்களோடும் பொறுப்பாளர்களோடும் கலந்து பேசுவும்  சந்தர்ப்பம் கிடைத்தது. மறக்கமுடியாத கனவின் நிஐ ஆட்சியை கண்டேன். அழிக்கப்படுவதற்கும்  இவையும்  ஒரு  காரணியானது😭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.