Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MCC: பயன்பெறும் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கம்.! 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MCC: பயன்பெறும் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கம்.! 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.!

Screenshot-2020-12-17-10-54-20-166-com-a 

எம்.சி.சி எனப்படும் அமெரிக்க மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலேனியம் சவால் ஒத்துழைப்பு குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று முன்தினம் கூடிய மிலேனியம் சவால் ஒத்துழைப்பு சபையின் பணிப்பாளர் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நடப்பு அரசாங்கம் இருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், அப்போதைய பிரதமராக பதவிவகித்த ரணில் விக்ரமசிங்க அவசரமாக இந்த உடன்படிக்கையில் கைச்சாதிடும் யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தபோது, பெரும் எதிர்ப்பலை எழுந்திருந்தது.

நடப்பு அரசாங்கம் இது குறித்து அமெரிக்காவுடன் பேசுவதாக தெரிவித்து வந்தபோதும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை

இந்த நிலையில், இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த உடன்படிக்கையின் கீழ் பயன்பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வருடாந்த தேர்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, எம்.சி.சியின் இயக்குநர்கள் குழு பெனின், பர்கினா பெசோ, கோட் டி ஐவரி மற்றும் நைகர் ஆகியவற்றை பிராந்திய ஒருங்கிணைப்பிற்கான திட்டங்களுக்கு தகுதி வாய்ந்ததாக மீண்டும் தேர்வு செய்துள்ளது.

அத்துடன், சிறிய வளர்ச்சிக்கு மலாவி, மொசாம்பிக், திமோர்-லெஸ்டே மற்றும் டுனிசியா முதலான நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எத்தியோப்பியா, கென்யா மற்றும் காம்பியா ஆகியவை ஆரம்பநிலை திட்ட மேம்பாட்டுக்காகவும், இந்தோனேசியா, கொசோவோ மற்றும் லெசோதோ முதலான நாடுகளின் வளர்ச்சிக்கு அந்த சபை தமது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://aruvi.com/article/tam/2020/12/17/20457/

  • Replies 56
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதாலை  பெரிய இழப்பு ஒன்றுமில்லை ஸ்ரீ லங்கா வுக்கு பெரிய இழப்பு ஒன்றுமில்லை கொஞ்சம் பாய்ந்து வருவினமே சொறி லங்காவுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இதாலை  பெரிய இழப்பு ஒன்றுமில்லை ஸ்ரீ லங்கா வுக்கு பெரிய இழப்பு ஒன்றுமில்லை கொஞ்சம் பாய்ந்து வருவினமே சொறி லங்காவுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் .

அப்படிச் சொல்லக்கூடாது பெருமாள், விபச்சாரிகள் இழப்பத்கு ஒன்றுமில்லை. அவர்களுக்கு வரவேண்டியது வந்துதான் தீரும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக விலகல் 

MCC aid flow has stopped as government is still on the fence regarding the  programme's House

2002 இலிருந்து தன்னால் தெரிவுசெய்யப்படும் வளர்முக நாடுகளுக்கு அமெரிக்க உதவித்திட்டமான மில்லேனியம் சவால் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா  பண உதவிகளைச் செய்துவருகிறது. அரசியல், சமூக உரிமைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கூறல், அரசாங்கத்தின் செயற்பாட்டுத் திறன், சட்ட நீதி அமுலாக்கம், ஊழல்கள் மீதான நடவடிக்கைகள், நோய்த்தடுப்பு வீதம், மக்களின் சுகாதார சேவைகளுக்கான செலவீனம், பெண்பிள்ளைகள் ஆரம்பக் கல்வியைப் பூர்த்திசெய்யும் அளவு, பொதுக்கல்வித்திட்டத்தில் செலவிடப்படும் பணதின் அளவு, தேசிய வளங்களை பாதுகாத்தலும் பாவித்தலும், பணவீக்கம், வர்த்தக கொள்கை, நிலம் மீதான உரிமை, சட்ட அமுலாக்கம், பொருளாதாரக் கொள்கை, புது வர்த்தகங்களை ஸ்தாபிக்கும் திறன் ஆகிய பல காரணிகளின் அடிப்படையிலேயே இவ்வுதவித்திட்டத்திற்கான நாடுகள் அமெரிக்காவினால் தெரிவுசெய்யப்படுகின்றன. 

சுமார் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இலங்கைக்கான இந்த உத்தேச உதவித்திட்டத்திற்கான அனுமதியினை முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக வழங்கியிருந்தது. ஆனால், அதன்பின்னர் பதவியேற்ற கோத்தாவின் அரசு இத்திட்டத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்றும், தம்மால் கைச்சாத்திடமுடியாதென்றும் கூறிவந்தது.

இத்திட்டத்திற்கமைய சுமார் 350 மில்லியன் டொலர்கள் மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்யவென்றும், சுமார் 67 மில்லியன் டொலர்கள் வடமேல், வட மத்திய, கிழக்கு மாகாணங்களுக்கான நில அபிவிருத்திக்கென்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய அரசுக்கு ஆதரவான தென்னிலங்கைச் சக்திகள் இந்த ஒப்பந்தத்தினை முற்றாகக் கைவிடுமாறு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்திருந்தன. குறிப்பாக நில அபிவிருத்திக்கான திட்டம் என்பதன் மூலம் இலங்கையின் இறையாண்மை வெகுவாகப் பாதிக்கப்படப்போகிறதென்று அவை வாதிட்டு வந்தன. தேர்தலின் முன்னரும், அதன் பின்னரும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக இருந்த இவ்விடயம் இன்றைய அரசாங்கத்தின் தொடர்ச்சியான எதிர்ப்பினையே சந்தித்து வந்தது. அரசில் உள்ள சட்டவல்லுனர்களின் அறிவுரைக்கு அமைய இத்திட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதில்லையென்று அரசின் பிரதான அமைச்சர்கள் வெளிப்படையாக பேசிவந்தனர்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் கூடிய இந்நிறுவனத்தின் மத்தியகுழு, இலங்கைக்கான உத்தேச திட்டத்தினை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. 

இவ்வறிவிப்பினையடுத்து ஆளும்கட்சியின் பல முக்கியஸ்த்தர்கள் தமக்குக் கிடைத்த பெரு வெற்றியாக இதனைக் கருதுவதோடு, நாடு இனிமேல் சீனாவிலோ அல்லது ரஷ்ஷியாவிலோ தமது கடன் தேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதேவேளை, இந்த முடிவுபற்றி சந்தேகமான கருத்தினைவெளியிட்ட அரசியல் விமர்சகர்கள், சிங்களவர்கள் கம்யுனீசத்தின்மீதும் சர்வாதிகாரத் தலைமைமீதும் தீராத காதல் கொண்டவர்கள். ஆகவேதான் இன்று நாடு சீனா நோக்கிப் போவதோடு, நாட்டின் தலைவரும் சர்வாதிகாரிபோன்று செயற்பட்டு வருவதாகவும் கூறியிருக்கின்றனர். 
  
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இதாலை  பெரிய இழப்பு ஒன்றுமில்லை ஸ்ரீ லங்கா வுக்கு பெரிய இழப்பு ஒன்றுமில்லை கொஞ்சம் பாய்ந்து வருவினமே சொறி லங்காவுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் .

நாலு காலில்... பாய்ந்து வருவினம், எண்டு சொல்ல வேணும். 😁

  • கருத்துக்கள உறவுகள்

டொட்ட்டொடொய்ங்.....ங்...ங்..ங்

Strategic victory for China..

😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

இவ்வறிவிப்பினையடுத்து ஆளும்கட்சியின் பல முக்கியஸ்த்தர்கள் தமக்குக் கிடைத்த பெரு வெற்றியாக இதனைக் கருதுவதோடு, நாடு இனிமேல் சீனாவிலோ அல்லது ரஷ்ஷியாவிலோ தமது கடன் தேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

நாட்டை சைனா வுக்கு விக்காமல்  அடங்கமாட்டான்கள் போல் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • நிழலி changed the title to இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக விலகல்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, பெருமாள் said:

நாட்டை சைனா வுக்கு விக்காமல்  அடங்கமாட்டான்கள் போல் உள்ளது. 

அப்ப அகண்ட பாரதம் என்ன செய்யும்????

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அப்ப அகண்ட பாரதம் என்ன செய்யும்????

அணிலேற விட்ட நாய் தானே சிலருக்கு கடுப்பாகும் உண்மையும் அதுதான் அப்ப  தென்னிலங்கை துறைமுகம் 99 வருட குத்தகைக்கு போன போது  கிந்தியா இலங்கைக்கு பக்கத்தில் தான் இருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

டொட்ட்டொடொய்ங்.....ங்...ங்..ங்

Strategic victory for China..

😂

இது வரை மேற்கு இலங்கை மீது பிரயோகித்து வந்த softly, softly approach முடிவுக்கு வருவதற்கான ஆரம்ப சமிக்ஞையாயும் இருக்கலாம்.

10 minutes ago, பெருமாள் said:

அணிலேற விட்ட நாய் தானே சிலருக்கு கடுப்பாகும் உண்மையும் அதுதான் அப்ப  தென்னிலங்கை துறைமுகம் 99 வருட குத்தகைக்கு போன போது  கிந்தியா இலங்கைக்கு பக்கத்தில் தான் இருந்தது .

சீனாவை இலங்கையில் இருந்து வலுகட்டாயமக வெளியேற்றும் வல்லமை தமக்கு இல்லை என்பது எம் எல்லோரையும் விட இந்தியாவுக்கு 60இல் இருந்தே தெரியும்.

அதே போல் சீனாவை இலங்கையில் இருந்து வெளியேற்றும் வல்லமை அமெரிக்காவுக்கு உண்டு என்பது சீனாவுக்கும் தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்ப அகண்ட பாரதம் என்ன செய்யும்????

கிந்தியனை தாண்டி 3000 கி.மீக்கு மேல போயாச்சு ..இனி இது இதுதான் தோழர் ..

Screenshot-2020-12-17-22-47-50-010-org-m

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கிந்தியனை தாண்டி 3000 கி.மீக்கு மேல போயாச்சு ..இனி இது இதுதான் தோழர் ..

Screenshot-2020-12-17-22-47-50-010-org-m

இப்பிடி பிரிச்சு எடுத்துட்டாலும் சந்தோசம் தோழர்.😁

Bild

18 hours ago, goshan_che said:

இது வரை மேற்கு இலங்கை மீது பிரயோகித்து வந்த softly, softly approach முடிவுக்கு வருவதற்கான ஆரம்ப சமிக்ஞையாயும் இருக்கலாம்.

சீனாவை இலங்கையில் இருந்து வலுகட்டாயமக வெளியேற்றும் வல்லமை தமக்கு இல்லை என்பது எம் எல்லோரையும் விட இந்தியாவுக்கு 60இல் இருந்தே தெரியும்.

அதே போல் சீனாவை இலங்கையில் இருந்து வெளியேற்றும் வல்லமை அமெரிக்காவுக்கு உண்டு என்பது சீனாவுக்கும் தெரியும்.

சீனா இப்போது தேடகிலே ஒரு முதலீடு செய்து டயர் தொழிச்சலை அமைக்கப்போகிறார்கள். அடுத்து இன்னுமோர் 1000 மில்லியன் டாலரில் துறைமுக நகர அபிவிருத்திக்கு முதலீடு செய்துள்ளார்கள். எனவே நிச்சயமாக சீன இப்போது முதலீடு (FDI ) என்ற ரீதியில் முழு இலங்கையிலும் கால் பாதிக்கப்போகிறார்கள். கடன் இல்லாமல் முதலீடு செய்யும்போது யாரும் ஒன்றும் சொல்ல முடியாது.

இங்குள்ள தொழில் சங்கங்கள் எல்லாமே சீனாவின் கைக்குள் இருப்பதால் , இந்தியா இங்கு எதை செய்தாலும் ஒரு எதிர்ப்பு வந்துகொண்டேயிருக்கும். கிழக்கு முனைய துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் பங்கு இலகுவாக இருக்க மாட்ட்து.

இப்போது இந்த அமெரிக்காவின் தீர்மானமும் கூட இப்போதய அரசுக்கு அரசியல்ரீதியாக லாபத்தைத்தான் கொடுத்திருக்கிறது. சீனாவின் உதவி இருக்கும் வரைக்கும் இலங்கை யாருக்குமே அஞ்சப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைமாதிரி, சீனாவை நம்பி எல்லோரையும் பகைச்சு, அவர் பின்னால் போக சீனா ஒதுக்கில்ல வைச்சு எல்லாத்தையும் உருவிப்போட்டு அமர வைக்கப்போகுது. அதன்பிறகு  அலறித்துடித்துப்போட்டு அடங்க வேண்டியான். 

  • கருத்துக்கள உறவுகள்

MCC வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது

MCC வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது

அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது. நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் செய்யும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

"உஸ்ம தெனதுரு" 20 இலட்சம் மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் காசல்ரீ நீர்தேக்கப்பகுதிக்கு அண்மித்த லெதண்டி தோட்டத்தில் மர கன்றுகள் இன்று (18) நாட்டப்பட்டது.

இப்பகுதியில் உள்ள நீர் வளம், வன வளம் ஆகியனவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன், பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் உதவியுடன், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த மர நடுகை வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் அதிகாரிகள், இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள், சுற்றாடல் துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" எம்.சி.சி. உடன்படிக்கை இனி கைச்சாத்திடப்படாது. அதிலிருந்து அமெரிக்காவும் விலகிவிட்டது. எம்.சி.சி. உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது எனக்கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த கொள்கை தொடர்ந்தும் பின்பற்றப்படும். வேறு வடிவில், வேறு பெயரில் வந்தால் கூட ஏற்பதற்கு தயாரில்லை.

எதுஎப்படியிருந்தாலும் அமெரிக்காவுடனான எமது இராஜதந்திர உறவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அது அவ்வாறே தொடரும். அமெரிக்காவும் இதனை அறிவித்துள்ளது.

நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மாத்திரமே இந்த அரசாங்கம் செய்யும். தீங்கு விளைவிக்ககூடிய எதனையும் செய்யாது.

அதேவேளை, கொரோனா வைரஸ் முழு உலகுக்கும் சவாலாக அமைந்துள்ளது. நாம் முதலாவது அலையை கட்டுப்படுத்தினோம். 2ஆவது அலையையும் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கினால் 2ஆவது அலையையும் இலகுவில் கட்டுப்படுத்தலாம். எந்தவொரு முயற்சியையும் நாம் கைவிடவில்லை.

அமைச்சர்களுக்கு எதிராக எதிர்ப்பை வெளியிடும் ஜனநாயக உரிமை மக்களுக்கு இருக்கின்றது. அமைச்சர்கள் என்பவர்கள் சர்வ பலம் படைத்தவர்கள் அல்ல.

சுதந்திரக்கட்சிக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் கிடைக்கப்பெறவேண்டும். அதனை நாம் பெறுவோம். மோதுவதைவிட பேச்சுவார்த்தைமூலம் பயணிப்பதே சிறப்பு. பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

அத்துடன், தேர்தல் முறையில் மாற்றம் அவசியம். விருப்பு வாக்கு போட்டி இல்லாத தேர்தலையே மக்கள் விரும்புகின்றனர் என்றார்.
 
-மலையக நிருபர் சதீஸ்குமார்-

MCC வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது (adaderana.lk)

அமெரிக்காவுடனான உறவுகள் பாதிக்கப்படவில்லை- அமைச்சர் மகிந்தஅமரவீர

அமெரிக்காவுடனான உறவுகள் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மகிந்தஅமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆரம்பம் முதல் பின்பற்றிய நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே எம்சிசி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் இதேவேளை இதன் காரணமாக அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

mcc-agreement-1.jpg
எம்சிசி உடன்படிக்கையிலிருந்து விலகிய பின்னர் அமெரிக்கா உத்தரவாதங்களை வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டிற்கு சாதகமான திட்டங்களையே முன்னெடுக்கின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான உறவுகள் பாதிக்கப்படவில்லை- அமைச்சர் மகிந்தஅமரவீர – Thinakkural

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

சீனாவின் உதவி இருக்கும் வரைக்கும் இலங்கை யாருக்குமே அஞ்சப்போவதில்லை.

சீனாவின் உதவி மட்டுமல்ல, இயற்கையையும் புறம்தள்ளிவிட முடியாது. இயற்கையால் ஏற்படும் அனர்த்தங்கள் அனைத்தையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி இலாபம் அடைவதில், சிங்களப் பேரினவாத அரசுகள் பலே கில்லாடிகள் என்பதை அனுபவங்களே சிறுபான்மை இனங்களுக்கு உணர்த்தி வந்திருந்தாலும், அதனை நாங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த ஈனச் செயலை நிறுத்துவதற்கு எங்கள் தலைவர்கள் என்று இருப்பவர்கள் அனைவரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டதாகவும்  தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Robinson cruso said:

சீனா இப்போது தேடகிலே ஒரு முதலீடு செய்து டயர் தொழிச்சலை அமைக்கப்போகிறார்கள். அடுத்து இன்னுமோர் 1000 மில்லியன் டாலரில் துறைமுக நகர அபிவிருத்திக்கு முதலீடு செய்துள்ளார்கள். எனவே நிச்சயமாக சீன இப்போது முதலீடு (FDI ) என்ற ரீதியில் முழு இலங்கையிலும் கால் பாதிக்கப்போகிறார்கள். கடன் இல்லாமல் முதலீடு செய்யும்போது யாரும் ஒன்றும் சொல்ல முடியாது.

இங்குள்ள தொழில் சங்கங்கள் எல்லாமே சீனாவின் கைக்குள் இருப்பதால் , இந்தியா இங்கு எதை செய்தாலும் ஒரு எதிர்ப்பு வந்துகொண்டேயிருக்கும். கிழக்கு முனைய துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் பங்கு இலகுவாக இருக்க மாட்ட்து.

இப்போது இந்த அமெரிக்காவின் தீர்மானமும் கூட இப்போதய அரசுக்கு அரசியல்ரீதியாக லாபத்தைத்தான் கொடுத்திருக்கிறது. சீனாவின் உதவி இருக்கும் வரைக்கும் இலங்கை யாருக்குமே அஞ்சப்போவதில்லை.

நான் இன்னொரு திரியில் சொன்னதை போல, இலங்கையில் அமெரிக்கா முழு மூச்சாக இறங்கி விளையாடினால் சீனா பின்வாங்குவதை தவிர வேறு வழியில்லை.

அந்த நிலைக்கு அமெரிக்கா வருமா, எப்போ வரும் என்பதுதான் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2020 at 00:58, பெருமாள் said:

இதாலை  பெரிய இழப்பு ஒன்றுமில்லை ஸ்ரீ லங்கா வுக்கு பெரிய இழப்பு ஒன்றுமில்லை கொஞ்சம் பாய்ந்து வருவினமே சொறி லங்காவுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் .

பெருமாள் கூப்பிட்டால் வராமல் இருக்கேலுமே?😊 

இது கோத்தா வேண்டாம் என்று மறுத்த உதவி ஏற்பாடு, அதனால் அமெரிக்கா விலகியதால் கோத்தாவுக்கு என்ன தோல்வி? ஒன்றுமில்லை. சீனா இழந்த பணத்தை இட்டு நிரப்பி விடும்!

MCC இன் சிறப்புகள் இரண்டு: 

1. இதை அமல்படுத்தும் நாடுகளின் பாராளுமன்றங்கள் இதை அங்கீகரிக்க வேண்டும். 

 (ரணில் அங்கீகரித்தார், கோத்தா அங்கீகரிக்க மாட்டேன் என்று சொல்லி பதவிக்கு வந்தார்) 

2. வழமையான USAID போலன்றி இந்த MCC யில் அரசியல் சாயங்கள், நிபந்தனைகள் அணிசேர்க்கும் அழுத்தங்கள் (குறைந்த பட்சம் எழுத்தில்) இல்லை! எனவே கோத்தா ஏற்றுக் கொண்டிருந்தால், அவருக்கு அரசியல் தீர்வுக்கான அழுத்தங்கள் இல்லாமலே அமெரிக்க டொலர்களில் உதவிகள் கிடைத்திருக்கலாம்! இனி USAID இனால் மட்டும் தான் அமெரிக்க உதவி கிடைக்கும், அது அமெரிக்க காங்கிரசினால் அடிக்கடி மேற்பார்வைக்குட்படும் ஒரு வழி முறை! (தமிழ் அமெரிக்கர்கள் கவனிக்க வேண்டும்!)

MCC திட்டத்தை சில நாடுகள் நிராகரிக்க சீனா தான் பின்னணி போல இருக்கிறது. நேபாளமும் இதை அங்கீகரிப்பதற்குத் தயங்குவதாகத் தெரிகிறது!  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

MCC திட்டத்தை சில நாடுகள் நிராகரிக்க சீனா தான் பின்னணி போல இருக்கிறது. நேபாளமும் இதை அங்கீகரிப்பதற்குத் தயங்குவதாகத் தெரிகிறது!  

நேபாள் 2017 ல் ஒப்பந்தம்  ஓகே பண்ணி பணமும் பம் பண்ணி விட்டுது US .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

நேபாள் 2017 ல் ஒப்பந்தம்  ஓகே பண்ணி பணமும் பம் பண்ணி விட்டுது US .

ஆம், அங்கீகரித்து விட்டது. சீன ஆதரவு மாவோயிஸ்டுகளின் எதிர்ப்பு இன்னும் இருக்கிறது. இதை வைத்தே கோத்தா தரப்பு போல ஆட்சியை மாற்ற முயற்சி நடக்கிறது!

https://thediplomat.com/2020/02/the-mcc-and-nepals-strategic-ties-with-the-us/ 

  • கருத்துக்கள உறவுகள்

நேபாள் உதவி பெற்றது அதனால் பாரிய இருக்குவாரங்கலில் இல்லை என்று அந்த நேரம் பீஜிங் கூட கூறியது நினைவில் உள்ளது ஆனால் நம்மாள்  ஆடுறா ராமா  ஆடுறா குரங்கு குட்டி போல் கரணமடித்து சைனா வை கவர் பண்ணிக்கொண்டு இருக்கிறார் அடுத்து வரும் மாதங்கள் சொறிலங்கா பாரிய நெருக்குவாரத்தை எப்படி எதிர்கொள்ள போகினம்  என்பது பாரிய கேள்வி .

இதில் பாதிக்கப்பட போவது தமிழர்களும்தான் . 

12 hours ago, goshan_che said:

நான் இன்னொரு திரியில் சொன்னதை போல, இலங்கையில் அமெரிக்கா முழு மூச்சாக இறங்கி விளையாடினால் சீனா பின்வாங்குவதை தவிர வேறு வழியில்லை.

அந்த நிலைக்கு அமெரிக்கா வருமா, எப்போ வரும் என்பதுதான் கேள்வி.

அது இலகுவாக இருக்க மாடடாது. சீனா அந்தளவுக்கு பொருளாதார ரீதியாகவும் , ராணுவ ரீதியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது அவர்கள் கடன் என்று இல்லாமல் முழு இலங்கையையும் முதலீடு (வெளி நாட்டு நேரடி முதலீடு FDi ) செய்வதன் மூலம் தங்களுக்கு கீழ் கொண்டு வரத்திடடமிட்டிருக்கிறார்கள்.

அதாவது இலங்கையை நேசித்து இலங்கை மக்களின் வாழவதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இல்லை. இங்கு முதலீடு  செய்யும் பணத்தினால் பெரிய நன்மையும் எட்டப்படப்போவதில்லை. என் என்றால் அதில் 80 % இட்கும் அதிகமான பணத்தை அவர்கள் கொண்டு போய் விடுவார்கள்.

அவர்களது தொழில்நுட்பம், இயந்திரங்கள், அவர்களது நிர்மாண பொருட்கள், வேலையாட்கள் என்று மீணடும் அவர்களே எல்லாவற்றையும் கொண்டு போய் விடுவார்கள். இதுதான் சீனவின் இலங்கையை கைப்பற்றும் நோக்கினாலான முதலீடுகள். அதட்கு பின்னர் அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ உல் நுழைவதே பிரச்சினையாக மாறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

நீங்க கனவுலகில் பறந்து  கொண்டு இருக்கிறீர்கள் .கொஞ்சம் தரைக்கும்  வந்து பாருங்க பாஸ் 

எல்லாம் சரி இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்க்கள் சைனாவுக்கா ஏற்றுமதி செய்கிறீர்கள் ? அப்படி செய்தால் உலகத்திலே கெட்டிக்கார நாடு சிறிலங்கா என்பேன் .

13 hours ago, Paanch said:

சீனாவின் உதவி மட்டுமல்ல, இயற்கையையும் புறம்தள்ளிவிட முடியாது. இயற்கையால் ஏற்படும் அனர்த்தங்கள் அனைத்தையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி இலாபம் அடைவதில், சிங்களப் பேரினவாத அரசுகள் பலே கில்லாடிகள் என்பதை அனுபவங்களே சிறுபான்மை இனங்களுக்கு உணர்த்தி வந்திருந்தாலும், அதனை நாங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த ஈனச் செயலை நிறுத்துவதற்கு எங்கள் தலைவர்கள் என்று இருப்பவர்கள் அனைவரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டதாகவும்  தெரியவில்லை.  

Paanch , இப்போது இவர்கள் மிக தந்திரமாக முதலீடு என்னும் விதத்தில் முழு இலங்கையிலும் ஊடுறுவப்போகிறார்கள். அதனை முதலீடுகளும் திரும்பவும் சீனாவுக்கே செல்லப்போகின்றது. எனவே யார் எதை செய்தாலும், சொன்னாலும் அதை தடுத்து நிறுத்த முடியாது. இது கடன் இல்லாத கடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.