Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சகோ 

அப்படி என்றால் அமைப்பின்

நூற்றுக்கணக்கான கட்டுமானங்களில் இருந்தவர்கள் பற்றி நாம் அறியவில்லை என்று தான் அர்த்தம் சகோ. இனிமேல் அப்படி ஒரு அமைப்பை உருவாக்க எவராலும் முடியாதபோது அவர்கள் பற்றி விமர்சனம் செய்ய கல் மனம் வேண்டும். அது வேண்டுமானால் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்க கடவது. 

அண்ணா,

அமைப்பின் கட்டொழுங்கை நான் விமர்சிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியும். அண்மைகாலமாக நான் முன்பு வைத்த முடிவெடுக்கும் பாங்கின்பால்பட்ட விமர்சனங்களையும் இப்போ வைப்பதில்லை என்பதும் தெரியும்.

இங்கே விமர்சனத்தை வைப்பவர்கள் மட்டும் அல்ல.

விமர்சனத்தை எதிர்போரும் கவி அருணாசலத்தின் சித்திரம் போல கீறல் விழுந்த ரெக்கோர்டாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

அதனால்தான் சம்பந்தம்மில்லாத ஹிட்லர் உவமானத்தை எடுதேன்.

ஆரோக்கியமான விவாதத்துக்கு இடமில்லாத எந்த கட்டமைப்பும் ஒரு அளவுக்கு மேல் தாக்குபிடிக்காது. ஆகவே செயல் அளவுக்கு பேச்சும், வாசிப்பும், விவாதமும் அவசியம்.

இதை மட்டுமே நான் சொல்ல வந்தேன்.

Edited by goshan_che

  • Replies 161
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியின் தலைப்பே சுமந்திரனின் அரசியல் ஆதரவு தளத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்தை கொண்டது என்பது வெளிப்படை. செய்தி வேறு வழியில் வெளிவரமுன்பே முந்திக்கொண்டு இதை சுமந்திரனின் சாதனையாக காட்டுவதுதான் இந்த செய்தியின் முதல் நோக்கம் என நான் கருதுகிறேன்.

இந்த சந்திப்புக்கு சுமந்திரனுடன் தமிழர் தரப்பில் இருந்து யார் அவருடன் சேர்ந்து போனார்கள் என்ற விபரம் தரப்படாமல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவர் மட்டும் தான் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு இருந்தால் அதுபோன்ற முட்டாள்தனம் வேறு இருக்கமுடியாது.

தமிழர் தரப்பில் ஆயிரம் அரசியல்வாதிகள் இருக்கலாம். ஆனால் தமிழருக்கென்று சிறந்த இராஜதந்திரிகள் இருக்கிறார்களா என்று கேட்டால் அது அனைத்து தமிழர்களும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம்.

சுமந்திரன் வேண்டுமானால் ஒரு அரசியல்வாதியாக இருந்துகொள்ளட்டும் ஆனால் அவர் தன்னை ஒரு இராஜதந்திரி என்று சொல்லிக்கொள்வதற்கு  அவர் இன்னும் நீண்ட பயணம் செல்லவேண்டும். இங்கு மீண்டும் தான் ஒரு  கற்றுக்குட்டிதான் என்பதை நிரூபித்துவிட்டார்.

இலங்கை அரசுக்கு இனியும் கால அவகாசம் கொடுக்க கூடாது என்று ஆணித்தரமாக அனைவரும் கூறிவரும் இன்நிலையில் சமயோசிதமற்ற  இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு  இலங்கை அரசுக்கு  மாற்று உபாயங்களை பற்றி சிந்தித்து செயலாற்றுவதற்கான கால அவகாசத்தை சுமந்திரன் வழங்கிவிட்டார்.

தமிழர் தரப்பு சிறந்த இராஜதந்திரிகளை உருவாக்க வேண்டும். எமது அரசியல்வாதிகள் இந்த பணியை தங்கள் கையில் எடுத்து கொள்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணா,

ஒரு இராணுவத்தில் வரும் கட்டளைக்கு பணித்து மறு யோசனையின்றி பாய்ந்து தாக்க கூடிய 5 லட்சம் பேர் இருப்பார்கள்.

ஆனால் யுத்த நகர்வுகளை கற்று, திட்டமிட்டு, வரலாற்றை வாசித்து அதில் பாடம் படித்து, வளங்களை கணக்கிட்டு அதை சரியே பகிர்ந்து, யோசனைகளை முன் வைத்து அதை விவாதிப்பதன் மூலம் தக்க முடிவுகளை ஒரு கற்ற, வாசிக்கும், யோசிக்கும், விவாதிக்கும் இடைவெளி உள்ள தலைமை உள்ள இராணுவமே 5 லட்சம் செயல் வீரர்களின் செயலால் பெறபட்ட நல்விழைவுகளை நீண்ட கால நோக்கில் தக்கவைக்ககூடியதாக இருக்கும்.

ஹிட்லர் போல் செயல், வினைதிறனான அமைப்பை கட்டி எழுப்பியவர்கள் அரிது. ஆனால் விவாததுக்கு இடம் இல்லாமையால், ஒரே நேரத்தில் பிரிட்டனுடனும், சோவியத்துடனும் மோதும் மோசமான முடிவை எடுத்து, அழிந்து போனார்.

அப்படியாயின் செகுவாரா? ஏன் அழிக்கப்பட்டார்....இனி வரும் காலங்களில் சீனா அதிபர்Xi Jinping என்ன நடக்கும் என்று தெரியவில்லை ....தனிநபர்கள் ஆட்சி செலுத்தும்(கடாபி,சதாம்) பொழுது அவர்களை திட்டமிட்டு அழிப்பது  அல்லது அவர்களை தொடர்ந்து வெற்றிகரமான  அரசியல் செய்ய விடாமல் தடைகளை விதிப்பது இது தான் உலக ஒழுங்கு ...சிறிலங்கா என்ற தேசியத்தை ஒழுங்காக வழிநடத்தாமையின் காரணமே இன்றைய இந்த நிலை....சேர் பொன் ராமநாதன் போன்றோர் அன்று சிந்தித்து பெருபான்மை மக்களுடன் கை கொர்த்து நடக்க முற்பட்ட செயலை பெருபான்மை இனம் இன்று வரை சரியாக பயன் படுத்தவில்லை இனி பயன்படுத்த போவதில்லை....71 ஆண்டு ஜெ.வி.பி கிளர்ச்சிக்கு  சீனா காரணம்,எமது கிளர்சிக்கு இந்தியா காரணம் .....இவர்களின் தலையீட்டு முக்கிய காரணம் ..பூர்வீக குடிகள் என மார்பு தட்டும் குடிமக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vanangaamudi said:

இந்த செய்தியின் தலைப்பே சுமந்திரனின் அரசியல் ஆதரவு தளத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்தை கொண்டது என்பது வெளிப்படை. செய்தி வேறு வழியில் வெளிவரமுன்பே முந்திக்கொண்டு இதை சுமந்திரனின் சாதனையாக காட்டுவதுதான் இந்த செய்தியின் முதல் நோக்கம் என நான் கருதுகிறேன்.

இந்த சந்திப்புக்கு சுமந்திரனுடன் தமிழர் தரப்பில் இருந்து யார் அவருடன் சேர்ந்து போனார்கள் என்ற விபரம் தரப்படாமல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவர் மட்டும் தான் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு இருந்தால் அதுபோன்ற முட்டாள்தனம் வேறு இருக்கமுடியாது.

தமிழர் தரப்பில் ஆயிரம் அரசியல்வாதிகள் இருக்கலாம். ஆனால் தமிழருக்கென்று சிறந்த இராஜதந்திரிகள் இருக்கிறார்களா என்று கேட்டால் அது அனைத்து தமிழர்களும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம்.

சுமந்திரன் வேண்டுமானால் ஒரு அரசியல்வாதியாக இருந்துகொள்ளட்டும் ஆனால் அவர் தன்னை ஒரு இராஜதந்திரி என்று சொல்லிக்கொள்வதற்கு  அவர் இன்னும் நீண்ட பயணம் செல்லவேண்டும். இங்கு மீண்டும் தான் ஒரு  கற்றுக்குட்டிதான் என்பதை நிரூபித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இலங்கை அரசுக்கு இனியும் கால அவகாசம் கொடுக்க கூடாது என்று ஆணித்தரமாக அனைவரும் கூறிவரும் இன்நிலையில் சமயோசிதமற்ற  இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு  இலங்கை அரசுக்கு  மாற்று உபாயங்களை பற்றி சிந்தித்து செயலாற்றுவதற்கான கால அவகாசத்தை சுமந்திரன் வழங்கிவிட்டார்.

தமிழர் தரப்பு சிறந்த இராஜதந்திரிகளை உருவாக்க வேண்டும். எமது அரசியல்வாதிகள் இந்த பணியை தங்கள் கையில் எடுத்து கொள்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

பிரித்தானிய தூதுவரை யார் சந்திப்பது என்பதை தீர்மானிப்பது சுமந்திரனோ, கஜனோ, விக்கியில் அல்ல. பிரித்தானிய தூதுவராலயம்.

அவர்கள் “நீங்கள் வாங்கோ” எண்டு கூப்பிட்டால் “துணைக்கு செல்வத்தையும் கூட்டியரட்டே, வந்து பற்றீஸ் மட்டும் சாப்பிடுவார்” என்றா கேட்க முடியும்?

3 minutes ago, putthan said:

அப்படியாயின் செகுவாரா? ஏன் அழிக்கப்பட்டார்....இனி வரும் காலங்களில் சீனா அதிபர்Xi Jinping என்ன நடக்கும் என்று தெரியவில்லை ....தனிநபர்கள் ஆட்சி செலுத்தும்(கடாபி,சதாம்) பொழுது அவர்களை திட்டமிட்டு அழிப்பது  அல்லது அவர்களை தொடர்ந்து வெற்றிகரமான  அரசியல் செய்ய விடாமல் தடைகளை விதிப்பது இது தான் உலக ஒழுங்கு ...சிறிலங்கா என்ற தேசியத்தை ஒழுங்காக வழிநடத்தாமையின் காரணமே இன்றைய இந்த நிலை....சேர் பொன் ராமநாதன் போன்றோர் அன்று சிந்தித்து பெருபான்மை மக்களுடன் கை கொர்த்து நடக்க முற்பட்ட செயலை பெருபான்மை இனம் இன்று வரை சரியாக பயன் படுத்தவில்லை இனி பயன்படுத்த போவதில்லை....71 ஆண்டு ஜெ.வி.பி கிளர்ச்சிக்கு  சீனா காரணம்,எமது கிளர்சிக்கு இந்தியா காரணம் .....இவர்களின் தலையீட்டு முக்கிய காரணம் ..பூர்வீக குடிகள் என மார்பு தட்டும் குடிமக்கள்

சே விவாதததுக்கு உவப்பான அமைபுக்களிலா இருந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vanangaamudi said:

இலங்கை அரசுக்கு இனியும் கால அவகாசம் கொடுக்க கூடாது என்று ஆணித்தரமாக அனைவரும் கூறிவரும் இன்நிலையில் சமயோசிதமற்ற  இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு  இலங்கை அரசுக்கு  மாற்று உபாயங்களை பற்றி சிந்தித்து செயலாற்றுவதற்கான கால அவகாசத்தை சுமந்திரன் வழங்கிவிட்டார்.

வணங்காமுடி, இந்தக் கால அவகாசம் வழங்கச் சொல்லி யார் கேட்கிறார்களாம்? உங்களுக்கு ஏதும் தெரியுமா இதைப் பற்றி?

இன்னொரு சந்தேகம்: கால அவகாசம் கொடுக்காமலிருத்தல் என்றால் என்ன? அதாவது, "இனி ஒன்றும் பிரேரிப்பதில்லை, சொன்னதைச் செய் என்று இலங்கையை அனுப்பி வைப்பதா?" அப்படிச் சொன்னால் இலங்கை என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யும்?
 
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

அண்ணா,

அமைப்பின் கட்டொழுங்கை நான் விமர்சிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியும். அண்மைகாலமாக நான் முன்பு வைத்த முடிவெடுக்கும் பாங்கின்பால்பட்ட விமர்சனங்களையும் இப்போ வைப்பதில்லை என்பதும் தெரியும்.

இங்கே விமர்சனத்தை வைப்பவர்கள் மட்டும் அல்ல.

விமர்சனத்தை எதிர்போரும் கவி அருணாசலத்தின் சித்திரம் போல கீறல் விழுந்த ரெக்கோர்டாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

அதனால்தான் சம்பந்தம்மில்லாத ஹிட்லர் உவமானத்தை எடுதேன்.

ஆரோக்கியமான விவாதத்துக்கு இடமில்லாத எந்த கட்டமைப்பும் ஒரு அளவுக்கு மேல் தாக்குபிடிக்காது. ஆகவே செயல் அளவுக்கு பேச்சும், வாசிப்பும், விவாதமும் அவசியம்.

இதை மட்டுமே நான் சொல்ல வந்தேன்.

செயலற்ற விவாதங்கள் பூச்சியமே என்பது கடந்த 11 வருட காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நன்றி சகோ 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

செயலற்ற விவாதங்கள் பூச்சியமே என்பது கடந்த 11 வருட காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நன்றி சகோ 

விவாதங்களற்ற செயல்களுக்கு என்ன நடந்தது? செயல் நடந்தது, அதை விட வேற என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

செயலற்ற விவாதங்கள் பூச்சியமே என்பது கடந்த 11 வருட காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நன்றி சகோ 

செயலலற்ற விவாதங்களும்,

விவாததுக்கு இடமற்ற செயல்களும் என்பதை

1948 இல் இருந்து காண்கிறோம்.

🙏🏾

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கற்பகதரு said:

அப்படி யாரும் எழுதியதாக உங்களை தவிர வேறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் சிறிலங்காவில் தீர்வை எப்படி உருவாக்குவது என்று உங்களுக்கு தெரியவில்லை என்பது தெளிவானது. ஆகவே மற்றவர்கள் எழுதுவதை ஆழமாக படியுங்கள். விளங்காவிட்டால், பணிவுடன் விளக்கம் கேட்டு புரிந்து கொள்ளப்பாருங்கள்.

இயக்கங்கள் ஆரம்பிக்க முதலும் எதையும் புடுங்கவில்லை.
இயக்கங்கள் ஒடுங்கிய பின்னரும் எதையும் புடுங்கியதாக தெரியவில்லை.

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பட்டியலிட்டு எழுதுங்கள். தெரிந்து கொள்வோம்.

26 minutes ago, விசுகு said:

செயலற்ற விவாதங்கள் பூச்சியமே என்பது கடந்த 11 வருட காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நன்றி சகோ 

விசுகர்! இது பற்றி முன்னரும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
எனினும் மீண்டுமொருமுறை கூறுகின்றேன்.

இங்கே மறுதலிப்பு கருத்துக்களை வைப்பவர்கள் இருக்கும் இடமும் களமும் வேறு. அவர்கள் அந்த கோணத்தில் தான் நிற்பார்கள்.

தமிழர்களின் கோணம் முற்றிலும் வேறு பட்டது. அதை விளங்கிக்கொள்வது  அவர்கள் வேலை அல்ல.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

இயக்கங்கள் ஆரம்பிக்க முதலும் எதையும் புடுங்கவில்லை.
இயக்கங்கள் ஒடுங்கிய பின்னரும் எதையும் புடுங்கியதாக தெரியவில்லை.

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பட்டியலிட்டு எழுதுங்கள். தெரிந்து கொள்வோம்.

விசுகர்! இது பற்றி முன்னரும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
எனினும் மீண்டுமொருமுறை கூறுகின்றேன்.

இங்கே மறுதலிப்பு கருத்துக்களை வைப்பவர்கள் இருக்கும் இடமும் களமும் வேறு. அவர்கள் அந்த கோணத்தில் தான் நிற்பார்கள்.

தமிழர்களின் கோணம் முற்றிலும் வேறு பட்டது. அதை விளங்கிக்கொள்வது  அவர்கள் வேலை அல்ல.

1. இடையிலும் எதையும்.....

2. இதை நான் முற்றிலும் ஏற்கிறேன் யாழ்பாணத்தில் கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் எல்லாம் எடுத்த வாக்கை காட்டிலும், டக்லஸ்+அங்கயன்+அன்னம் எடுத்த வாக்குகள் அதிகம்.

இங்கே எழுதும் இரெண்டு தரப்புக்கும் முற்றிலும் வேறானது இந்த கோணம்.

  • கருத்துக்கள உறவுகள்
House%20copy.png
112,9673 Seats
ITAK31.46%
 
Bicycle.png
55,3031 Seats
AITC15.4%
 
Hand.png
49,3731 Seats
SLFP13.75%
 
Veena.png
45,7971 Seats
EPDP12.75%
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, goshan_che said:

1. இடையிலும் எதையும்.....

2. இதை நான் முற்றிலும் ஏற்கிறேன் யாழ்பாணத்தில் கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் எல்லாம் எடுத்த வாக்கை காட்டிலும், டக்லஸ்+அங்கயன்+அன்னம் எடுத்த வாக்குகள் அதிகம்.

இங்கே எழுதும் இரெண்டு தரப்புக்கும் முற்றிலும் வேறானது இந்த கோணம்.

கிழக்கு மாகாணத்தை விட வடபகுதி மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டுபவர்கள். நானறிந்தவரையில் ஜேர்மன் மக்களை விட யாழ்ப்பாணத்து மக்கள் வாக்களிப்பதை உரிமையாக செய்பவர்கள்.
அண்மைக்கால தேர்தல்களில் வெறுப்பரசியல் மிக தெளிவாக வேலை செய்கின்றது. இதற்கு காரணம் நமது மூத்த பூத்த தமிழ் அரசியல்வாதிகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

செயலலற்ற விவாதங்களும்,

விவாததுக்கு இடமற்ற செயல்களும் என்பதை

1948 இல் இருந்து காண்கிறோம்.

🙏🏾

ஒரு விடுதலை போராட்டம் நடக்கும்போது அங்கே பேச்சுக்கோ விமர்சனங்களுக்கோ அல்லது எதிர்க்கருத்துக்கோ அதி குறைந்த அளவே இருக்கும் என்பது நீங்கள் அறியாதது அல்ல. மேலே சிலர் எழுதும் கருத்துக்கள் விடுதலைப் போரை முன்னெடுத்து உயிரையே கொடுத்தோரை ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் என்று எழுதியிருப்பதை ஏற்றுத் தான் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் அப்படி ஒரு நகர்வே வேண்டாம் சகோ.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கிழக்கு மாகாணத்தை விட வடபகுதி மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டுபவர்கள். நானறிந்தவரையில் ஜேர்மன் மக்களை விட யாழ்ப்பாணத்து மக்கள் வாக்களிப்பதை உரிமையாக செய்பவர்கள்.
அண்மைக்கால தேர்தல்களில் வெறுப்பரசியல் மிக தெளிவாக வேலை செய்கின்றது. இதற்கு காரணம் நமது மூத்த பூத்த தமிழ் அரசியல்வாதிகள் தான்.

கிழக்க்கில் தமிழர் வாக்குகளை மட்டும் எடுத்தாலும் இப்போதும் தமிழ் தேசிய வாக்குகளே அதிகம்.

தமிழர்களின் கலாச்சார தலைநகரில்தான் சிங்கள அல்லது சிங்கள ஆதரவு கட்சிகளிக்கு, தமிழ் தேசிய கட்சிகளை விட வீழ்ந்த வாக்குகள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கிழக்க்கில் தமிழர் வாக்குகளை மட்டும் எடுத்தாலும் இப்போதும் தமிழ் தேசிய வாக்குகளே அதிகம்.

தமிழர்களின் கலாச்சார தலைநகரில்தான் சிங்கள அல்லது சிங்கள ஆதரவு கட்சிகளிக்கு, தமிழ் தேசிய கட்சிகளை விட வீழ்ந்த வாக்குகள் அதிகம்.

அதே கலைச்சார நகரில் தான் தம்மை கொல்ல அரசு எந்த விசயத்தையும் பரப்பும் என்று பயப்படும் மக்களும் வாழ்கின்றனர் சகோ.  

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் பிரித்தானியவுடனைந்து. பிரோணை  கொண்டுவந்தாலும் வரவிட்டலும் இரண்டும் ஒனறே. எனெனில். இலங்கை   இதனைத்திரும்பப்பெறும்.எமக்குள்ள ஓரேவழி தமிழர்சனத்தொகையைப்பெருக்கி இலங்கைப்பாரளுமன்றத்தைக்கைப்பற்றுவதுதான். 1970ஆம் ஆண்டிலிருத்ததைவிட இன்று மூன்றுமடங்கு  மக்கள் தொகையுடன் பாலஸ்தினமக்கள் உள்ளனர் .😜👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:
House%20copy.png
112,9673 Seats
ITAK31.46%
 
Bicycle.png
55,3031 Seats
AITC15.4%
 
Hand.png
49,3731 Seats
SLFP13.75%
 
Veena.png
45,7971 Seats
EPDP12.75%
 
மன்னிக்க வேண்டும் நான் தான் தவறுதலாக சொல்லி விட்டேன்.

தமிழ் தேசிய கட்சிகள் மூன்றையும் கூட்டினால் 56% சதவீதம் வருகிறது.

ஆகவே நான் கூறியதை,

கலாச்சார தலைநகரில் தமிழ் தேசிய கட்சிகள் வெறும் 6% வாக்கை மட்டுமே அதிகமாக பெறும் அளவுக்கு மக்களின் சிந்தனை கோணம் மாறியுள்ளது என வாசிக்கவும்.

நன்றி நுணா. 

1 hour ago, விசுகு said:

அதே கலைச்சார நகரில் தான் தம்மை கொல்ல அரசு எந்த விசயத்தையும் பரப்பும் என்று பயப்படும் மக்களும் வாழ்கின்றனர் சகோ.  

அதை விட மோசமான கால நிலைக்குள்தான் 2009-2020 வரையான தேர்தல்களும் நடந்தன அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பிரித்தானிய தூதுவரை யார் சந்திப்பது என்பதை தீர்மானிப்பது சுமந்திரனோ, கஜனோ, விக்கியில் அல்ல. பிரித்தானிய தூதுவராலயம்.

அப்படி அல்ல. இராஜதந்திர முறையில் ஒரு நாட்டின் தூதுவரை குழுவாகவும் சென்று சந்திக்கலாம்.

4 hours ago, goshan_che said:

அவர்கள் “நீங்கள் வாங்கோ” எண்டு கூப்பிட்டால் “துணைக்கு செல்வத்தையும் கூட்டியரட்டே, வந்து பற்றீஸ் மட்டும் சாப்பிடுவார்” என்றா கேட்க முடியும்?

 "நீங்கள் வாங்கோ" என்று அழைத்தால் அது அவரின் தனிப்பட்ட விடயம். பற்றீஸ் அல்லது பொங்கல் சாப்பிடுவது இங்கு முக்கியமில்லை. இது போன்ற பொது விடயங்களை பேசும் சந்திப்புகளுக்கு குழுவாக செல்வதுதான் வழமை.  ஒரு நாள் திடீரென்று சுமந்திரன் காணாமல் போனால் அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்க இலகுவாக இருக்கும். 

4 hours ago, Justin said:

வணங்காமுடி, இந்தக் கால அவகாசம் வழங்கச் சொல்லி யார் கேட்கிறார்களாம்? உங்களுக்கு ஏதும் தெரியுமா இதைப் பற்றி?

இன்னொரு சந்தேகம்: கால அவகாசம் கொடுக்காமலிருத்தல் என்றால் என்ன? அதாவது, "இனி ஒன்றும் பிரேரிப்பதில்லை, சொன்னதைச் செய் என்று இலங்கையை அனுப்பி வைப்பதா?" அப்படிச் சொன்னால் இலங்கை என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யும்?

கால அவகாசம் கேட்பது அடுத்தடுத்து வரும் சிங்கள அரசுகள் தமது ஆட்சிகாலத்தை கஸ்டமில்லாமல் நகர்த்தி செல்லும் ஒரு உத்தியாகும். இந்தமுறை கால அவகாசம் எவரும் கேட்கவில்லை. கோத்தபாய ஆட்சியில் இணை அனுசரணை வழங்குவதிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகியதால் அப்படி கேட்கும் சந்தர்ப்பமும் இல்லை. எனினும் அதற்கான கதவை மூடும்படி தமிழ் தரப்பிலிருந்து வேண்டுகோளை முன்வைக்கலாம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் மேற்குலகு கடந்தகாலத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம். இந்த அழுத்தங்களால் இலங்கை மேலும்  மேலும் சீனாவை நோக்கிதான் சாயும் என்றால் மேற்குலகம் மீண்டும் பொறுமை காக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vanangaamudi said:

இந்தமுறை கால அவகாசம் எவரும் கேட்கவில்லை. கோத்தபாய ஆட்சியில் இணை அனுசரணை வழங்குவதிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகியதால் அப்படி கேட்கும் சந்தர்ப்பமும் இல்லை. எனினும் அதற்கான கதவை மூடும்படி தமிழ் தரப்பிலிருந்து வேண்டுகோளை முன்வைக்கலாம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் மேற்குலகு கடந்தகாலத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம். இந்த அழுத்தங்களால் இலங்கை மேலும்  மேலும் சீனாவை நோக்கிதான் சாயும் என்றால் மேற்குலகம் மீண்டும் பொறுமை காக்கும்.

எப்படி அழுத்தம் கொடுப்பது? ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிரான எந்த முடிவையும் வீட்டோ செய்யப்போவதாக சீனா கொழும்பில் வைத்து பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் என்ன விதமாக அழுத்தம் கொடுக்கலாம் என்பதை சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vanangaamudi said:

அப்படி அல்ல. இராஜதந்திர முறையில் ஒரு நாட்டின் தூதுவரை குழுவாகவும் சென்று சந்திக்கலாம்.

 "நீங்கள் வாங்கோ" என்று அழைத்தால் அது அவரின் தனிப்பட்ட விடயம். பற்றீஸ் அல்லது பொங்கல் சாப்பிடுவது இங்கு முக்கியமில்லை. இது போன்ற பொது விடயங்களை பேசும் சந்திப்புகளுக்கு குழுவாக செல்வதுதான் வழமை.  ஒரு நாள் திடீரென்று சுமந்திரன் காணாமல் போனால் அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்க இலகுவாக இருக்கும். 

கால அவகாசம் கேட்பது அடுத்தடுத்து வரும் சிங்கள அரசுகள் தமது ஆட்சிகாலத்தை கஸ்டமில்லாமல் நகர்த்தி செல்லும் ஒரு உத்தியாகும். இந்தமுறை கால அவகாசம் எவரும் கேட்கவில்லை. கோத்தபாய ஆட்சியில் இணை அனுசரணை வழங்குவதிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகியதால் அப்படி கேட்கும் சந்தர்ப்பமும் இல்லை. எனினும் அதற்கான கதவை மூடும்படி தமிழ் தரப்பிலிருந்து வேண்டுகோளை முன்வைக்கலாம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் மேற்குலகு கடந்தகாலத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம். இந்த அழுத்தங்களால் இலங்கை மேலும்  மேலும் சீனாவை நோக்கிதான் சாயும் என்றால் மேற்குலகம் மீண்டும் பொறுமை காக்கும்.

1. அது எப்படி வாங்கோ என்று அவர்கள் கூப்பிடுவதை பொறுத்து. குழுவாக வாங்கோ என்றால், குழுவாக போகலாம்.

நீங்கள் மட்டும் தனியாக வாங்கோ, என்றால் தனியாகத்தான் போக முடியும்.

இன்னார், இன்னாரை, இன்ன நேரத்தில் இன்னார் சந்திக்க விரும்புகிறார் என்பது எல்லாம் தெளிவாக சொல்லபட்டே இந்த சந்திப்புகள் நடைபெறும்.

முன்பு நடந்த பல சந்திப்புகளில் பற்றீசில் மட்டும் சிலர் கண்ணும் கருத்துமாக இருந்தமையால் அடுத்த சந்திப்புகளுக்கு அவர்கள் தவிர்கப்பட்டதும் உண்டு.

ஆகவே சுமந்திரனுக்கு தூவராலயத்தில் இருந்து வந்த அழைப்பு எப்படியானது என்பதை அறியாமல் சுமந்திரன் ஏனையோரை வெட்டி விட்டு தான் மட்டும் போனார் என நாம் எழுந்தமானமாக முடிவு செய்ய முடியாது. எந்த கூட்டமைப்பு எம்பியும் சும் தம்மை வெட்டி விட்டு போனதாக இதுவரை சொல்லவும் இல்லை.

2. மேலே சொன்னது கூட்டமைப்பு எமபிகளுக்கு மட்டும். சீவி கஜன் ஆகியோர் தூதவராலயங்களுக்கு போன் போட்டு, எம்முடனும் ஒரு தரம் கதையுங்கோவன் என்று கேட்க ஒரு தடையும் இல்லை. இவர்கள் கேட்டு அவர்கள் கொடுக்கவில்லையா, அல்லது கொடுக்கமாட்டார்க்ள் என்பதால் இவர்கள் கேட்கவில்லையா தெரியவில்லை.

3. இப்போதைய சுமந்திரன் தயாரித்த வரைபில் கால அவகாசம் பற்றிய சரத்து இல்லை என்பதை ஏற்று கொண்டமைக்கு நன்றி. 

நீங்கள் கூறிய விடயம் இலங்கையுட்பட ஏலவே 3 தடவை வலியுறுத்தியதை போல, என்ற வரிகளின் மூலம் சொல்ல பட்டிருப்பதாய்தான் நான் உணர்கிறேன். இல்லை இன்னும் கொஞ்சம் காரம் உப்பு சேர்க்க வேண்டும் என்றாலும் அதை கமுக்கமாக சுமந்திரனிடம் அல்லவா கூறி இருக்க வேண்டும் கஜனும் விக்கியரும்?

அதை விடுத்து நீங்களே ஒத்து கொண்ட கால அவகாசம் வழங்கும் ஒரு சரத்தும் இல்லை என்ற உண்மையை திரித்து, அப்படி இருப்பதாக மக்களுக்கு பொய் கூறி, மீடியாவை கூட்டி, சிறுபிள்ளைதனமாக, ராஜதந்திரம் இன்றி அல்லவா நடந்து கொண்டுள்ளார்கள் சீவியும் கஜனும்?

இப்படி கத்துகுட்டிதனமாய் நடப்பவர்களை தூதுவராலய வளவுக்குள் எடுக்கவே ஏன் யோசிகிறார்கள் என்பது எனக்கு புரிகிறது. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இயக்கங்கள் ஆரம்பிக்க முதலும் எதையும் புடுங்கவில்லை.
இயக்கங்கள் ஒடுங்கிய பின்னரும் எதையும் புடுங்கியதாக தெரியவில்லை.

இயக்கங்கள் இருந்தபோது எல்லாவற்றையும் (நகைகள், பணம் மட்டுமல்ல, பிள்ளைகளையும் கூட) பிடுங்கி அழித்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தனின் அலசல் பல விடயங்களை தெளிவாகச் சொல்கின்றது. பலமான நாடு ஒன்றின் ஆதரவு இன்றி எதுவும் செய்யமுடியாது என்பதும், இந்தியாவை வெட்டி விளையாட முடியாதென்பதும் புரியவேண்டும்.

1 hour ago, கற்பகதரு said:

இயக்கங்கள் இருந்தபோது எல்லாவற்றையும் (நகைகள், பணம் மட்டுமல்ல, பிள்ளைகளையும் கூட) பிடுங்கி அழித்துவிட்டார்கள்.

ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை கொடுத்ததனர். இந்த ஆதரவை  ஆயுதப் போராட்டத்தின் விளைவான அதி உச்ச இழப்புக்களையும்  தாங்கொணா வேதனைகளையும் தாங்கியபடியே  30 வருடங்களாக அதைச் செய்தனர் என்பதை பலரும் மறந்து வீரம் பேசுவதில் பயனில்லை.

அந்த ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் சேர்ந்து தமது இரத்தத்தை கொடுத்து உருவாக்கிய பலத்தை ஒரு சிலரின் பொறுப்புணர்வு அற்ற உணர்சசிபூர்வமான முடிவுகளால் மண்ணோடு மண்ணாக்கி விட்டனர் என்பதே வேதனையான உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Eppothum Thamizhan said:

Satan , தயவுசெய்து விளக்கமுள்ளவர்களுடன்மட்டும் கருத்தாடுங்கள். நேரம் பொன்னானது!! மேலுள்ள கவி அருணாசலத்தின் சித்திரம் இங்குள்ள சிலருக்கும் கச்சிதமாக பொருந்துகிறது!

 அவர்கள் வாழும்போது தங்களுக்காகவோ, குடும்பத்துக்காகவோ வாழவில்லை. குடுபத்தினரை வெளிநாடுகளுக்கு குடியேறவோ, படிக்கவோ அனுப்பவில்லை. தங்களுக்குகாக பணம் சேர்க்கவில்லை ஏன் ஒழுங்காக சாப்பிடவில்லை. அவர் தம் மூச்சுள்ளவரை நிம்மதியாக வாழ்ந்தோம்.  எதுவுமே செய்யாமல், செய்யத்தெரியாமல் அவர்களை வசைபாடுவது மனதுக்கு வலிக்கிறது. இழப்புகளை, அழிவுகளை சந்தித்திருந்தால்கவலைப்படுவோமே தவிர காய்ந்த எலும்புகளை காவிக்கொண்டுவந்து கடித்து எம் இரத்தம் வெளியேற காய்ந்த எலும்பின் இரத்தம் என ரசிக்க முடியாது. எம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்த எதிரிக்கும் எமது வீழ்ச்சியை குத்திக்காட்டுபவனுக்கும் எந்தப் பேதமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

(நகைகள், பணம் மட்டுமல்ல, பிள்ளைகளையும் கூட) பிடுங்கி அழித்துவிட்டார்கள்.

நீங்கள் இவைகளை நினைத்து அவர்களை வெறுக்கிறீர்கள். நாங்கள் வாழும்வயதில் அவர்கள் மறைந்ததை எண்ணி அழுகிறோம். இப்படி நகை, பணம் என்று வாழ்ந்திருந்தால் அவர்களும் இன்று எம்முடன்  வாழ்ந்திருக்கலாம். வாழத்தெரியாதவர்கள், அவர்களுக்கு தெரிந்தது தம்மை இழந்தாவது விடுதலை வேண்டும் என்ற உணர்வு. அவர்களை இனியாவது உறங்க விடுங்கள் மண்ணுள். உங்களுக்கு புண்ணியமாகும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.