Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் பிரதேச சபையும் முன்னணி வசமானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பத்மநாதன் மயூரன் வெற்றி பெற்றுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) மதியம் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசுதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டனர். தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதன்படி மதுசுதனன் 08 வாக்குகளையும் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர்.

spacer.png

மதுசுதனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினர் என 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மயூரனுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்கள், சுயேட்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தல ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேர் சபை அமர்பில் கலந்து கொள்ளவில்லை.

நல்லூர் பிரதேச சபையும் முன்னணி வசமானது! | NewUthayan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வசமானது என்பதுதான் சரியானதாய் இருக்கும்.. 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் எல்லாத்தையும் சந்திரிக்கா அம்மையார் ஈபிடிபி வசப்படுத்தி வைச்சிருந்தார். இப்ப.. இப்படி ஆகுது. என்ன எம்மவர்களுக்கு இதுவே அரசியலாகிவிட்டது இப்போ. மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை. பதவி ஆசையும்.. போட்டியுமே... விஞ்சி இருக்கிறது. 35 வருட ஆயுத வழி இனவிடுதலைப் போராட்டத்தின் பலாபலன் இதுதானோ...??!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

35 வருட ஆயுத வழி இனவிடுதலைப் போராட்டத்தின் பலாபலன் இதுதானோ...??!

நல்லதொரு மாற்றம்! நீங்களும் ஆயுதப்போராட்டத்தின் பலாபலன் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறீர்கள். 👌 நானும் உங்களைப் போலவே கேள்விகள் கேட்காமல் தியாகங்களை வரவேற்ற காலம் ஒன்றிருந்தது. கேள்விகள் கேட்பதன் மூலமே தவறுகளை திருத்தி முன்னேற முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஒரு காலத்தில் எல்லாத்தையும் சந்திரிக்கா அம்மையார் ஈபிடிபி வசப்படுத்தி வைச்சிருந்தார். இப்ப.. இப்படி ஆகுது. என்ன எம்மவர்களுக்கு இதுவே அரசியலாகிவிட்டது இப்போ. மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை. பதவி ஆசையும்.. போட்டியுமே... விஞ்சி இருக்கிறது. 35 வருட ஆயுத வழி இனவிடுதலைப் போராட்டத்தின் பலாபலன் இதுதானோ...??!

ஆயுதப் போராட்டத்தின் பலாபலன் அல்ல...

அகிம்சைப் போராட்டத்தின் தோல்வி———>ஆயுதப் போராட்டமாக எம் மீது  எமது மூதறிஞர்களால்(😏) திணிக்கப்பட்டது—->
ஆயுதப் போராட்டம் தோல்வியல்ல. முடித்து வைக்கப்பட்டது. ஏனென்றால் நாங்கள் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்த காரணத்தால். இந்த ஆயுதப் போராட்டம்தான் எம் எல்லோரையும் தமிழர்களாக உலகுக்கு அடையாளம் காட்டியது.

தற்போது ஆயுதங்கள் இல்லையே தவிர, போராட்டத்திற்கான காரணங்களும், தேவையும் அப்படியேதான் இருக்கின்றன. ஆயுதப் போராட்டம் தோல்வியென்றால் அகிம்சைப் போராட்டம் வென்றுவிட்டதா என்ன.. 🤔

எனவே ஆயுதப் போராட்டத்தை வைவோர் அதனை எம் கையில் தந்த அகிம்சைப் போராட்டத்தையுமல்லவா கேள்வி கேட்க வேண்டும். 

இந்த அகிம்சைப் போராட்டம் எமக்குப் பெற்றுத் தந்ததென்ன.. 🤥

அழிவு மட்டும்தானே... 😂😂

ஆனால் நாங்கள் அதனைக் கேள்விக்குள்ளாக்கப் போவதில்லை. ஏனென்றால் அகிம்சைப் போராட்டத்தின் ஆரம்பத்தைக் கேள்விக்குள்ளாக்குவோமானால் எமது(?) முன்னாள்த் தமிழ்த் தலைமைகளின் இழி நிலையும் போலித்தனமும் வெளிவந்துவிடும். 😂😂

இறுதியில் போராட்டத்திற்கான தேவை உண்மையிலேயே இருந்ததா என்பதும் இருந்தது என்றால் அது யாருக்கு போராடுவதற்கான தேவை இருந்தத் என்று முடியும்....☹️

தேவையா இது... 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கபிதன்...  அருமையான, பதில். :) 

1 hour ago, கற்பகதரு said:

நல்லதொரு மாற்றம்! நீங்களும் ஆயுதப்போராட்டத்தின் பலாபலன் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறீர்கள். 👌 நானும் உங்களைப் போலவே கேள்விகள் கேட்காமல் தியாகங்களை வரவேற்ற காலம் ஒன்றிருந்தது. கேள்விகள் கேட்பதன் மூலமே தவறுகளை திருத்தி முன்னேற முடியும்.

இதுவரை... நீங்கள், "புலி வாந்தி"  மட்டுமே...  எடுத்து வந்த உங்களிடம்,
"முன்னேற்றம்" என்ற சொல்லை...  கேட்கவே,  கேவலமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

35 வருட ஆயுத வழி இனவிடுதலைப் போராட்டத்தின் பலாபலன் இதுதானோ...??!

தியாகம் அழிக்கப்பட போலியும், சுயநலமும் வளர்ந்திருக்கு.  தியாகத்தை கொச்சைப்படுத்தி, போலியை முன்னிலைப்படுத்த முனைகிறார்கள் போலியின் முகவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

நல்லதொரு மாற்றம்! நீங்களும் ஆயுதப்போராட்டத்தின் பலாபலன் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறீர்கள். 👌 நானும் உங்களைப் போலவே கேள்விகள் கேட்காமல் தியாகங்களை வரவேற்ற காலம் ஒன்றிருந்தது. கேள்விகள் கேட்பதன் மூலமே தவறுகளை திருத்தி முன்னேற முடியும்.

கோட்டுப் போட்ட சட்டாம்பிகள் நடத்திய அகிம்சை போராட்டமும் சிங்களவனிடம் தோற்றிட்டு.. அதேபோல்.. வரிப்புலி போட்ட ஆயுதப் போராட்டமும் மெளனிச்சிட்டுது.

ஆனால்.. பிரச்சனைகள் அப்படியே இருக்க.. இன்னும்.. பல பிரச்சனைகள் கூடி இருக்க.. செய்த தியாகங்களை கேலிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலனற்ற.. இந்த அரசியலை பற்றி இன்றைய அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டுமே.. தவிர சிங்களவனையும்.. சிங்கள அரச ஒட்டுக்குழுக்களையும் தாஜாப்படுத்தும் அரசியல் அல்ல.. மக்களின் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nedukkalapoovan said:

உங்களின் கவலை எல்லோருடைதும்தான். 

1 hour ago, nedukkalapoovan said:

கோட்டுப் போட்ட சட்டாம்பிகள் நடத்திய அகிம்சை போராட்டமும் சிங்களவனிடம் தோற்றிட்டு.. அதேபோல்.. வரிப்புலி போட்ட ஆயுதப் போராட்டமும் மெளனிச்சிட்டுது.

அகிம்சைப் போராட்டம் தோற்றதால் தான் ஆயுதப் போராட்டம் உருவானது. இது வரலாறு. இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.  

பேச்சுவார்ததையில் ராஜதந்திரமாக நடந்து பெறக் கூடியதைப் பெற்று போராட்டத்தை கெளரவத்துடன் அடுத்த தலைமுறைக்கு  கைமாற்றியிருந்தால் அது மெளனிப்பு. அடுத்த தலைமுறை றிலே ஓட்டம் போல இலகுவாக தனது இலக்கை அடைந்திருக்கும். 

கடைசி கிளிநொச்சியுடன் மெளனித்திருந்தால் லடசக்கணக்கான மக்களின் முள்ளிவாய்கால் பேழிழப்பையாவது தவிர்ததிருகலாம்.

தாக்கு பிடிக்க முடியாது என்று தெரிந்தும் இறுதிவரை மக்களை அழைத்து சென்று எதிரியிடம் பலி கொடுத்த பின்னர், போக வேறு வழியின்றி மெளனிப்பதற்கு பெயர் மெளனிப்பா? அடுத்த தலைமுறையிடம் தாம் உருவாக்கிய பலத்துடன் கையளிக்காமல் எல்லாவற்றையும் அழித்துவிட்டு மைனஸ் நிலையில் கொடுப்பது மெளனிப்பா? 

அகிம்சை போர் தோல்வியடைந்தது.   ஆயுதப்போர் படு தோல்வி அடைந்தது  அடுத்த புதிய தலைமுறை புதிய பரிணாமதில் சிந்தித்து வெற்றியடையும்  என்ற நம்பிக்கை மட்டும் தான் மிஞ்சி உள்ளது. அந்த நம்பிக்கையுடன்   நாம் அனைவரும் வாழ்வோம். அது வரை மிகுதி வாழ்வையாவது என்ஜோய் பண்ணுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

ஆயுதப் போராட்டத்தின் பலாபலன் அல்ல...

அகிம்சைப் போராட்டத்தின் தோல்வி———>ஆயுதப் போராட்டமாக எம் மீது  எமது மூதறிஞர்களால்(😏) திணிக்கப்பட்டது—->
ஆயுதப் போராட்டம் தோல்வியல்ல. முடித்து வைக்கப்பட்டது. ஏனென்றால் நாங்கள் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்த காரணத்தால். இந்த ஆயுதப் போராட்டம்தான் எம் எல்லோரையும் தமிழர்களாக உலகுக்கு அடையாளம் காட்டியது.

தற்போது ஆயுதங்கள் இல்லையே தவிர, போராட்டத்திற்கான காரணங்களும், தேவையும் அப்படியேதான் இருக்கின்றன. ஆயுதப் போராட்டம் தோல்வியென்றால் அகிம்சைப் போராட்டம் வென்றுவிட்டதா என்ன.. 🤔

எனவே ஆயுதப் போராட்டத்தை வைவோர் அதனை எம் கையில் தந்த அகிம்சைப் போராட்டத்தையுமல்லவா கேள்வி கேட்க வேண்டும். 

இந்த அகிம்சைப் போராட்டம் எமக்குப் பெற்றுத் தந்ததென்ன.. 🤥

அழிவு மட்டும்தானே... 😂😂

ஆனால் நாங்கள் அதனைக் கேள்விக்குள்ளாக்கப் போவதில்லை. ஏனென்றால் அகிம்சைப் போராட்டத்தின் ஆரம்பத்தைக் கேள்விக்குள்ளாக்குவோமானால் எமது(?) முன்னாள்த் தமிழ்த் தலைமைகளின் இழி நிலையும் போலித்தனமும் வெளிவந்துவிடும். 😂😂

இறுதியில் போராட்டத்திற்கான தேவை உண்மையிலேயே இருந்ததா என்பதும் இருந்தது என்றால் அது யாருக்கு போராடுவதற்கான தேவை இருந்தத் என்று முடியும்....☹️

தேவையா இது... 😂😂😂😂

நன்றி சகோ. உண்மையில் நாம் அடுத்த கட்டத்துக்கு போக முயற்சி செய்கின்றோம் என்றால் இந்த தெளிவாவது இருந்தாகணும். இன்று நடக்கும் நாடகங்கள் அனைத்துக்கும் இந்த தெளிவின்மையும் கிடைத்த இடைவெளியில் கிடாய் வெட்டுவதும் தான் நடக்கிறது. ஒரு விடுதலை போரை அடுத்து எங்கே நிறுத்துவது என்பதை அதனை வழி நடாத்துபவரே முடிவு செய்யணும். கதை எழுதுபவர்கள் வேண்டுமானால் கிளிநொச்சியில் நிறுத்தி இதற்கு 1972 லேயே நிறுத்தி இருக்கலாமே என தொடரும் போடலாம்!

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, tulpen said:

அகிம்சைப் போராட்டம் தோற்றதால் தான் ஆயுதப் போராட்டம் உருவானது. இது வரலாறு. இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.  

பேச்சுவார்ததையில் ராஜதந்திரமாக நடந்து பெறக் கூடியதைப் பெற்று போராட்டத்தை கெளரவத்துடன் அடுத்த தலைமுறைக்கு  கைமாற்றியிருந்தால் அது மெளனிப்பு. அடுத்த தலைமுறை றிலே ஓட்டம் போல இலகுவாக தனது இலக்கை அடைந்திருக்கும். 

கடைசி கிளிநொச்சியுடன் மெளனித்திருந்தால் லடசக்கணக்கான மக்களின் முள்ளிவாய்கால் பேழிழப்பையாவது தவிர்ததிருகலாம்.

தாக்கு பிடிக்க முடியாது என்று தெரிந்தும் இறுதிவரை மக்களை அழைத்து சென்று எதிரியிடம் பலி கொடுத்த பின்னர், போக வேறு வழியின்றி மெளனிப்பதற்கு பெயர் மெளனிப்பா? அடுத்த தலைமுறையிடம் தாம் உருவாக்கிய பலத்துடன் கையளிக்காமல் எல்லாவற்றையும் அழித்துவிட்டு மைனஸ் நிலையில் கொடுப்பது மெளனிப்பா? 

அகிம்சை போர் தோல்வியடைந்தது.   ஆயுதப்போர் படு தோல்வி அடைந்தது  அடுத்த புதிய தலைமுறை புதிய பரிணாமதில் சிந்தித்து வெற்றியடையும்  என்ற நம்பிக்கை மட்டும் தான் மிஞ்சி உள்ளது. அந்த நம்பிக்கையுடன்   நாம் அனைவரும் வாழ்வோம். அது வரை மிகுதி வாழ்வையாவது என்ஜோய் பண்ணுவோம். 

அருமையா சொன்னீங்க துல்பன்..👍

நம்ம ஆட்கள் ஜனநாயக அரசியலுக்கு பழக்கமில்லாதவர்கள்.. அவர்களுக்கு இது அதிர்ச்சியாகதான் இருக்கும்.. எனக்கு தமிழ்நாடு அரசியலுடன் பரிச்சயம் இருப்பதால் அதிர்ச்சி ஒன்னும் இல்லை..கொஞ்சம் கொஞ்சமா நம்ம ஊர் சனங்களும் பழகிடும்.. ஆனா இந்த புலம்பெயர்ந்த ஆட்கள் 2009 க்கு முன்னான ஈழத்து உலகில் வாழ்வதால் இப்படி பல அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டி இருக்கும் மனச தேற்றிக்குங்க..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

ஆயுதப் போராட்டத்தின் பலாபலன் அல்ல...

அகிம்சைப் போராட்டத்தின் தோல்வி———>ஆயுதப் போராட்டமாக எம் மீது  எமது மூதறிஞர்களால்(😏) திணிக்கப்பட்டது—->
ஆயுதப் போராட்டம் தோல்வியல்ல. முடித்து வைக்கப்பட்டது. ஏனென்றால் நாங்கள் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்த காரணத்தால். இந்த ஆயுதப் போராட்டம்தான் எம் எல்லோரையும் தமிழர்களாக உலகுக்கு அடையாளம் காட்டியது.

தற்போது ஆயுதங்கள் இல்லையே தவிர, போராட்டத்திற்கான காரணங்களும், தேவையும் அப்படியேதான் இருக்கின்றன. ஆயுதப் போராட்டம் தோல்வியென்றால் அகிம்சைப் போராட்டம் வென்றுவிட்டதா என்ன.. 🤔

எனவே ஆயுதப் போராட்டத்தை வைவோர் அதனை எம் கையில் தந்த அகிம்சைப் போராட்டத்தையுமல்லவா கேள்வி கேட்க வேண்டும். 

இந்த அகிம்சைப் போராட்டம் எமக்குப் பெற்றுத் தந்ததென்ன.. 🤥

அழிவு மட்டும்தானே... 😂😂

ஆனால் நாங்கள் அதனைக் கேள்விக்குள்ளாக்கப் போவதில்லை. ஏனென்றால் அகிம்சைப் போராட்டத்தின் ஆரம்பத்தைக் கேள்விக்குள்ளாக்குவோமானால் எமது(?) முன்னாள்த் தமிழ்த் தலைமைகளின் இழி நிலையும் போலித்தனமும் வெளிவந்துவிடும். 😂😂

இறுதியில் போராட்டத்திற்கான தேவை உண்மையிலேயே இருந்ததா என்பதும் இருந்தது என்றால் அது யாருக்கு போராடுவதற்கான தேவை இருந்தத் என்று முடியும்....☹️

தேவையா இது... 😂😂😂😂

அஹிம்சைப் போராட்டம் தோல்வி கண்டது உண்மை. அதில் ஈடுபட்டிருந்த சில தலைவர்கள் இரத்த திலகமிட்டு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்ததும் (பின்னர் அவர்களாலேயே கொல்லப்பட்டதும்) உண்மை. 

ஆனால், எத்தனை ஆயிரம் மக்களை அவர்கள் விருப்பமின்றியே அஹிம்சைப் போராட்டம் செய்தோர் கொன்றனர் என்பது முக்கியமான கேள்வி! அவர்கள் இரத்த திலகமிட்டதாலேயே அவர்கள் இங்கே கேவலமாக விமர்சிக்கப் பட்ட திரிகள் இருக்கின்றன. தேடிப் பாருங்கள். எனவே அவர்களை விட்டு விட்டு ஆயுதம் ஏந்தியோர் மட்டும் விமர்சிக்கப் படுகின்றனர் என்பது உங்கள் அபிப்பிராயம் மட்டுமே, உண்மையல்ல!

ஆயுதம் ஏந்தியோர் விமர்சிக்கப் பட பல காரணங்களை தாங்களே உருவாக்கி விட்டிருக்கின்றனர். இவை சாதாரணமாகப் பேசப் படக்கூடிய நிலை வரும் வரை தமிழர்களுக்கு தீர்வு தேடுவதிலும் இழுபறி தொடரும் என நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

உங்கள் கருத்தைப் பார்க்கும்போது ஆயுதப் போராட்டத்தால் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதனாற்றான் அதனை விமரிசனம் செய்கிறீர்கள் என்பதும் உங்களுக்கு ஆயுதப் போராட்டத்தில் பங்கில்லை என்பது  போலுள்ளது.. 

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று ஒரு முதுமொழி இருக்கிறதல்லவா.. 🤥

சரி. எல்லாவற்றையும் விடுவோம். இப்போது தமிழர்கள் போராடுவதற்கான தேவை உள்ளதா.. 

இருந்தால் எப்படிப் போராடுவதாம்.. 😧

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருமையா சொன்னீங்க துல்பன்..👍

நம்ம ஆட்கள் ஜனநாயக அரசியலுக்கு பழக்கமில்லாதவர்கள்.. அவர்களுக்கு இது அதிர்ச்சியாகதான் இருக்கும்.. எனக்கு தமிழ்நாடு அரசியலுடன் பரிச்சயம் இருப்பதால் அதிர்ச்சி ஒன்னும் இல்லை..கொஞ்சம் கொஞ்சமா நம்ம ஊர் சனங்களும் பழகிடும்.. ஆனா இந்த புலம்பெயர்ந்த ஆட்கள் 2009 க்கு முன்னான ஈழத்து உலகில் வாழ்வதால் இப்படி பல அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டி இருக்கும் மனச தேற்றிக்குங்க..

ஜனநாயக அரசியல், தமிழக அரசியல்  அருமையான விளக்கங்கள். மாறிமாறி ஒருவருக்கொருவர் ஜால்ரா அடிச்சுக்கொண்டேயிருங்கோ அடுத்த தலைமுறை வானத்திலையிருந்து குதிச்சுவந்து போராட்டத்தை அடுத்தகட்டத்த்திற்கு எடுத்துப்போகும். பாலஸ்தீனமக்களின் இன்றையநிலையை பார்த்துமா கிடைப்பதை பெற்று அடுத்ததலைமுறைக்கு மாற்றும் ஐடியா எல்லாம் உங்களுக்கு வருகிறது. இதுக்குள்ள ஐடியா முத்துக்களென்றுகொண்டு வகுப்பெடுப்புவேற?.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பேச்சுவார்ததையில் ராஜதந்திரமாக நடந்து பெறக் கூடியதைப் பெற்று போராட்டத்தை கெளரவத்துடன் அடுத்த தலைமுறைக்கு  கைமாற்றியிருந்தால் அது மெளனிப்பு. அடுத்த தலைமுறை றிலே ஓட்டம் போல இலகுவாக தனது இலக்கை அடைந்திருக்கும். 

அப்படியே ரிலே ஓட்டமோடி இலக்கையடைந்த ஒருபோராட்டத்தை சொல்லுங்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ஒரு விடுதலை போரை அடுத்து எங்கே நிறுத்துவது என்பதை அதனை வழி நடாத்துபவரே முடிவு செய்யணும்.

அவர்கள்தானே முடிவு செய்தார்கள்? அதன் விளைவை அனுபவித்தவர்களும் அனுபவிப்பவர்களும் அவர்கள் மட்டுமல்ல, நாமும் அல்லவா? அவர்கள் முடிவுகள் எங்களை கடுமையாக பாதித்திருக்கிறது, அவர்கள் அதற்கு பொறுப்பில்லையா? பாதிக்கப்பட்ட நாங்கள் அவர்களால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம் என்று சொல்லும் உரிமையை கூட அவர்களை ஆதரிக்கும், அவர்களோடு கூட நின்ற நீங்களே மறுக்கிறீர்களே? அந்த உரிமை கூட எங்களுக்கு இல்லையா? 

4 hours ago, Kapithan said:

இப்போது தமிழர்கள் போராடுவதற்கான தேவை உள்ளதா.. 

எந்த நாட்டு தமிழரை பற்றி கேட்கிறீர்கள்? கனடாவில் தமிழர் பிரதமருடன் தோளோடு தோளாக நின்று சீக்கியர்களின் பங்காரா இசைக்கு நடனமாடி தீபாவளி கொண்டாடும் அளவுக்கு நன்றாகத்தானே இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கற்பகதரு said:

அவர்கள்தானே முடிவு செய்தார்கள்? அதன் விளைவை அனுபவித்தவர்களும் அனுபவிப்பவர்களும் அவர்கள் மட்டுமல்ல, நாமும் அல்லவா? அவர்கள் முடிவுகள் எங்களை கடுமையாக பாதித்திருக்கிறது, அவர்கள் அதற்கு பொறுப்பில்லையா? பாதிக்கப்பட்ட நாங்கள் அவர்களால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம் என்று சொல்லும் உரிமையை கூட அவர்களை ஆதரிக்கும், அவர்களோடு கூட நின்ற நீங்களே மறுக்கிறீர்களே? அந்த உரிமை கூட எங்களுக்கு இல்லையா? 

அதுக்கு சில விடயங்களை நீங்கள் புரிந்து கொள்ளணும். ஒரு தகப்பனார் நிலையில் இருந்து பார்க்கணும். நாங்க இதன் பின்னர் உயிரோடிருப்பதே கனவு போன்றது தான். இதை எழுதும் போது கூட என் கண்கள் பனிக்கின்றன. 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

அவர்கள்தானே முடிவு செய்தார்கள்? அதன் விளைவை அனுபவித்தவர்களும் அனுபவிப்பவர்களும் அவர்கள் மட்டுமல்ல, நாமும் அல்லவா? அவர்கள் முடிவுகள் எங்களை கடுமையாக பாதித்திருக்கிறது, அவர்கள் அதற்கு பொறுப்பில்லையா? பாதிக்கப்பட்ட நாங்கள் அவர்களால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம் என்று சொல்லும் உரிமையை கூட அவர்களை ஆதரிக்கும், அவர்களோடு கூட நின்ற நீங்களே மறுக்கிறீர்களே? அந்த உரிமை கூட எங்களுக்கு இல்லையா? 

எந்த நாட்டு தமிழரை பற்றி கேட்கிறீர்கள்? கனடாவில் தமிழர் பிரதமருடன் தோளோடு தோளாக நின்று சீக்கியர்களின் பங்காரா இசைக்கு நடனமாடி தீபாவளி கொண்டாடும் அளவுக்கு நன்றாகத்தானே இருக்கிறார்கள்?

உண்மையான பக்கம் வெளிபபடுத்த வேண்டி வரும் என்று பயப்படுகிறீர்களா.. 🤥

எந்தப் பதிலும் கூற முடியாமல் இருக்கிறதோ... 😀

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த புலம்பெயர்ந்த ஆட்கள் 2009 க்கு முன்னான ஈழத்து உலகில் வாழ்வதால் இப்படி பல அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டி இருக்கும்

நீங்கள் சொன்னது உண்மையே பலவற்றில் இதை அவதானிக்கலாம்.
யாழ்பாண மாவட்டத்தில் மட்டுமே போட்டியிட்டு ஒரு தொகுதியை பெற்று கெண்ட கஜேந்திரகுமார் கட்சியை இலங்கை தமிழர்களை காப்பாற்ற வந்த தூதுவன் போல புலம்பெயர்ந்த தமிழர்கள் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா முடிவுப்புள்ளியை தொட்டுவிட்டார் போங்கோ. இதுக்குப்பிறகும்  இதுக்கு .......எதற்கு? எதற்காக கட்சிக்குள் புகுத்தப்பட்டாரோ ஒன்றொன்றாக நிதானமாக  சாதிக்கிறார். 

12 hours ago, கற்பகதரு said:

அவர்கள்தானே முடிவு செய்தார்கள்? அதன் விளைவை அனுபவித்தவர்களும் அனுபவிப்பவர்களும் அவர்கள் மட்டுமல்ல, நாமும் அல்லவா? அவர்கள் முடிவுகள் எங்களை கடுமையாக பாதித்திருக்கிறது, அவர்கள் அதற்கு பொறுப்பில்லையா? பாதிக்கப்பட்ட நாங்கள் அவர்களால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம் என்று சொல்லும் உரிமையை கூட அவர்களை ஆதரிக்கும், அவர்களோடு கூட நின்ற நீங்களே மறுக்கிறீர்களே? அந்த உரிமை கூட எங்களுக்கு இல்லையா? 

இப்படியான  நியாயபூர்வமான கேள்வியை தெளிவாக கேட்டால்  இங்கு உளசுத்தியுடன் எவரும் பதிலளிக்க மாட்டார்கள் என்பது எனது அபிப்பிராயம். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

இப்படியான  நியாயபூர்வமான கேள்வியை தெளிவாக கேட்டால்  இங்கு உளசுத்தியுடன் எவரும் பதிலளிக்க மாட்டார்கள் என்பது எனது அபிப்பிராயம். 

இந்த கேள்விக்கு எனது கண்ணீருடன் பதில் எழுதியிருந்தேன். ஆனால் உங்கள் பிரச்சனை வேறு. எம்மை குத்த காயப்படுத்த மட்டுமே இவ்வாயுதத்தை எடுக்குறீர்கள். இத்தனை வருட காலத்தில் நீங்கள் யாழில் செய்ததெல்லாம் இது மட்டுமே. 

11 minutes ago, விசுகு said:

இந்த கேள்விக்கு எனது கண்ணீருடன் பதில் எழுதியிருந்தேன். ஆனால் உங்கள் பிரச்சனை வேறு. எம்மை குத்த காயப்படுத்த மட்டுமே இவ்வாயுதத்தை எடுக்குறீர்கள். இத்தனை வருட காலத்தில் நீங்கள் யாழில் செய்ததெல்லாம் இது மட்டுமே. 

மன்னிக்கவேண்டும் விசுகு ஈழப்போராட்ட தோல்வியை தனியே “சென்றிமென்ற” உடனான பார்வையால்  மட்டும் கொண்டிருக்கும் நேர்மையான தமிழ் தேசிய உணர்வாளர் நீங்கள்.  ஜதார்தத உண்மைகளை தாங்கும் சகதி உங்களுக்கு இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.