Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT  காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது.

அமேரிக்காவில் IT  காரர்களுக்கான H1B விசாவுக்கான புதிய வழிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்திய IT காரர்கள்  எதிர்பார்ப்பது போல, பைடேன் பெரிய மாறுதல்களை செய்ய மாட்டார். காரணம் இந்த முடிவுகள் ஒரு ஆய்வுக்குழுவினால் எடுக்கப்பட்டது.

ஆகவே, இந்த அருமையான சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கனேடிய, பிரிட்டிஷ் கடவுசீட்டு வைத்திருக்கும் இந்தியர்கள், மிக சரியாக இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்துகிறார்கள்.

இன்னும் முக்கியமான விடயம். ஒன்லைன் வேலைகள் மூலமாக, ஒருவர், விசா, இம்மிகிரேஷன் எல்லாம் தாண்டி, பிறிதொரு நாட்டில் வேலை செய்யக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்பதை கவனியுங்கள்.

இன்று Aamazon Web Services (AWS), Azure கிளவுட் தொடர்பான வேலைகள் சும்மா துள்ளி ஆடுது. ஒரு நாளுக்கு, £500 முதல் £1,000 வரை போகிறது.

சும்மா, வெட்டி பொழுதினை போகாமல், உருப்படியாக எதையாவது செய்வோமா?

Software Engineer/Developer - Devops - Cloud - AWS

Location - Remote

Rate - £600 per Day

Our client, a leading bank is looking for a talented Software Engineer/Developer, who has a strong passion for cloud, Devops and AWS.

They are a focused team of exceptionally talented engineers, developers and designers committed to helping deliver value through use of latest technologies and ideas including blockchain, AI, Chatbots, Big Data etc. and developing our team through continued learning and challenging the ways of working to accelerate innovation trough agility, design thinking and hypothesis driven development.

Technical Solutions Architect - Urgent!

Remote - £650 p/Day

ContractPosted by: Cloud Consulting 

Posted: Wednesday, 20 January 2021 

IT  என்றவுடன் இந்தியர்கள் என்று நினைப்பதும் தவறு.

தென் ஆப்பிரிக்கர்கள் முதல், சிம்பாபே வரை உள்ளே வருகின்றனர். அண்மையில் நைஜீரியா காரர்கள் அதிகமாக வருகின்றனர்.

நம்மவர்களோ, நியாப்பிளப்புகளிலும், சப்பைக்கட்டுதல்களிலும் பொழுதை போக்குகின்றனர்.

முக்கியமாக, எம்மவர்களின் ஒரே தொழில் தரும், கணக்கியல்துறை, மென்பொருள் வளர்ச்சியினால் பெரும் ஆபத்தினுள் சிக்கி உள்ளது.

கேட்டால், நான் டபிள் அக்கௌன்டன்ட், பீலா வேறு. வருமுன் காப்போன் ஆக  இருங்கள்.

Edited by Nathamuni

  • Replies 110
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு நாதம்.

அது சரி யாரப்பா உந்த டபுள் எக்கவுண்ட்டன், ஒரு பதிவு போடும் அளவுக்கு உங்கள கடுப்பேத்தி இருக்கிறார்🤣. ரெய்னேற்ஸ் லேன் முடக்கில கடை வச்சிருக்கிறவரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனம் இங்கே லண்டனில் ஒரு ஆள் தேடியது. ஆங்கிலம் போதும், பிரஞ்ச்  தெரிந்திருந்தால் நல்லம்.... இதுதான் அவர்கள் சொன்னது.

நண்பர் ஒருவர் கிளம்பி போனார்.  பிரான்ஸ் தமிழரை, ஒரு இளைஞரை, தனது உதவியாளராக அழைத்துக் கொண்டு.... இவர் தமிழ் பேச, அவர் பிரெஞ்சில் விளாச, அவர்கள் அகமிழந்து போனார்கள்.

நல்ல காசு வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.... 

அது ஒரு உலகம்.

இங்கை பார்த்தால், ஒரே சில்லலெடுப்பா கிடக்குது.... தயவுடன், உந்த பிரயோசனம் இல்லாத,  நியாயப்பிளப்புகளை பார்ட் டைம் வேலையாக்கிப்போட்டு, fulltime வேலை செய்யுங்கோ. 

அடிப்படை ஆங்கில அறிவு உள்ளவர்கள், அங்கே அல்லலுறும் சமூகத்துக்காகவாவது உழையுங்கோ.

suddenly world WENT online and the demand for IT skills shot up like never before!!! 

Power BI Developer

  • London, South East
  • £450.00 - £550.00 per day
  • Hays
  • Contract
  • Posted 3 days ago

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி, கேட்க நல்லா தான் இருக்குது....

எங்க தொடங்கிறது? எண்டுதானே நினைக்கிறியள்?

database ஒன்றை முதலில் படித்து அறிந்து கொள்ளுங்கள். சரி, எங்கே?

youtube தான் உங்களது starting point.

அங்கைபோய் ms sql அல்லது oracle db type  பண்ணி, எதுக்கு, அதி கூடிய likes, நல்ல comments இருக்குது என்று பார்த்து, தொடங்குங்கள்.

முக்கியமாக, this year என பில்டர் பண்ணி, கொள்ளுங்கள், அதன் மூலம், புதிய version என்பதை உறுதிப்படுத்தலாம்.

வாழ்த்துக்கள்..... பட்டையை கிளப்புங்கள்....

நம்மாலும்  முடியும்.... கிளம்புங்கோ...

கனடாவில் நடந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், வந்த கார்கள் அனைத்துமே, மிக விலை கூடிய, தமிழரின், அரசியல், பொருளாதார பலத்தினை காட்டி செல்லுகின்றது என்று குமுறுகிறது சிங்கள பத்திரிகை.

அவனை.... இன்னும் வயித்தெரிச்சல் பட வைப்போம்..... கிளம்புங்கள், அய்யா... கிளம்புங்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

Power BI Developer

  • London, South East
  • £450.00 - £550.00 per day
  • Hays
  • Contract
  • Posted 3 days ago

என்னது Power BI க்கே நாளுக்கு 450 பவுண்ட்ஸா ...?
அண்ணை  மாரே யாராவது எனக்கு U.K வீசா  எடுத்து தரமாட்டீர்களா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்னது Power BI க்கே நாளுக்கு 450 பவுண்ட்ஸா ...?
அண்ணை  மாரே யாராவது எனக்கு U.K வீசா  எடுத்து தரமாட்டீர்களா 

அனுபவம் இருக்குதோ? எங்கை செய்தனியள்?

நல்ல பதிவு நாதம்.

Power BI, Big data போன்றவற்றுக்கான அடிப்படைகளை படிப்பதற்கும் இன்னும் ஏராளமான துறைசார் படிப்பின் ஆரம்ப கட்டங்களை கற்பதற்கும் பின்வரும் இலவச இணையம் நன்கு உதவுகின்றது. 

https://www.coursera.org/

IT துறைக்கு மட்டுமல்ல எண்ணற்ற விடயங்களை கற்க முடியும் இந்த தளத்தில். என் நண்பன் ஜூட் பிரகாஷ் இதன் மூலம் யூதர்களின் வரலாற்றை படித்து Certificate ஒன்றையும் பெற்று இருக்கின்றான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

சிறப்பு,

ஆனாலும், யூதர்களின் வரலாற்றில் சான்றிதழ் வாங்கி பயன் தான் என்ன என்று புரியவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி நேற்று  எனது  மக்களுடன் உரையாடியபோது...

தற்பொழுதே கிட்டத்தட்ட இதே  சம்பள நிலையில் தான் தாங்களும் உள்ளார்கள்  என்றும்

ஆனால் என்ன சில  நிறுவனங்கள் இவர்களை எடுத்து  தாமும் பங்கிட்ட உழைத்துக்கொள்கின்றன.

இவர்களுக்கு வேலைக்கு  கரண்டி மற்றும் அழுத்தம் குறைவு என்பதால்

தாம்  இதையே  விரும்புவதாகவும்  தொடர்வதாகவும் சொன்னார்கள்

நன்றி  நாதம் பதிவுக்கும்  நேரத்துக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

ஆனால் என்ன சில  நிறுவனங்கள் இவர்களை எடுத்து  தாமும் பங்கிட்ட உழைத்துக்கொள்கின்றன.

நீங்க சொல்வது கன்சல்டண்சி நிறுவனங்கள். 

இதனைதான் இந்திய கன்சல்டண்சி நிறுவனங்கள் செய்கின்றன. விசா எடுத்து, கூட்டி வந்து, பெரும் பணத்தினை வாங்கி, கச்சான் கொட்டைகளை வீசி எறிந்து  விட்டு, தாம்  கொழுப்பது. 😳

மொழி, கலாசாரம், குடியுரிமை உள்ள நம்மவர்கள், நேரடியாக களத்தில் குதிக்க வேண்டும்.  

இதிலை, படிப்புக்கு அப்பால், வியாபாரம் உள்ளது.

அக்கினியத்திரா சொன்னதை கவனித்தீர்களா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அனுபவம் இருக்குதோ? எங்கை செய்தனியள்?

அண்ணை நமது துறையே அதுதான் 
நான் .Net Full stack developer
(ASP .NET MVC, Web API) 
front end: Jquery frameworks (nodeJS,React, Angular),Tweeter Bootstrap
Cloud:  Azure devops, 
பிசினஸ் இன்டெலிஜென்ஸிற்கு SSRS,Crystal Reports ,Power BI 
Backend: Entitiy Framework (ORM),MS SqlServer and OracleDB 
இவற்றில் தான் நமது முழு நேர வேலையே, Power BI க்கே இவ்வளவு கொடுக்கினம் என்றால் 
நாமெல்லாம் அங்கேயிருந்தால் ஓவர்நயிட்டில அம்பானி தான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நல்ல பதிவு நாதம்.

Power BI, Big data போன்றவற்றுக்கான அடிப்படைகளை படிப்பதற்கும் இன்னும் ஏராளமான துறைசார் படிப்பின் ஆரம்ப கட்டங்களை கற்பதற்கும் பின்வரும் இலவச இணையம் நன்கு உதவுகின்றது. 

https://www.coursera.org/

IT துறைக்கு மட்டுமல்ல எண்ணற்ற விடயங்களை கற்க முடியும் இந்த தளத்தில். என் நண்பன் ஜூட் பிரகாஷ் இதன் மூலம் யூதர்களின் வரலாற்றை படித்து Certificate ஒன்றையும் பெற்று இருக்கின்றான்.

ஜூட் ஏ எல் சோதனையையே கதறடிச்ச மண்டைய்காய் உதை படிக்காமலே பாஸ் பண்ணி இருப்பார் 👍🏿

1 hour ago, Nathamuni said:

சிறப்பு,

ஆனாலும், யூதர்களின் வரலாற்றில் சான்றிதழ் வாங்கி பயன் தான் என்ன என்று புரியவில்லையே?

முதுகில் நடுவில் கடிக்கும் போது இலகுவாக சொறிய உதவும் நாதம்.

எப்போதும் எல்லாரும் படிப்பை பணம் பார்க்கும் கருவியாக மட்டும் பார்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை நமது துறையே அதுதான் 
நான் .Net Full stack developer
(ASP .NET MVC, Web API) 
front end: Jquery frameworks (nodeJS,React, Angular),Tweeter Bootstrap
Cloud:  Azure devops, 
பிசினஸ் இன்டெலிஜென்ஸிற்கு SSRS,Crystal Reports ,Power BI 
Backend: Entitiy Framework (ORM),MS SqlServer and OracleDB 
இவற்றில் தான் நமது முழு நேர வேலையே, Power BI க்கே இவ்வளவு கொடுக்கினம் என்றால் 
நாமெல்லாம் அங்கேயிருந்தால் ஓவர்நயிட்டில அம்பானி தான் 

அக்னி,

எங்கட கிருபன் ஜியும் உந்த துறைதான். பாருங்கோவன் ஆறுமாதத்தில ஆள் பிரைவெட் ஜெட் வாங்காட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனம் இங்கே லண்டனில் ஒரு ஆள் தேடியது. ஆங்கிலம் போதும், பிரஞ்ச்  தெரிந்திருந்தால் நல்லம்.... இதுதான் அவர்கள் சொன்னது.

நண்பர் ஒருவர் கிளம்பி போனார்.  பிரான்ஸ் தமிழரை, ஒரு இளைஞரை, தனது உதவியாளராக அழைத்துக் கொண்டு.... இவர் தமிழ் பேச, அவர் பிரெஞ்சில் விளாச, அவர்கள் அகமிழந்து போனார்கள்.

நல்ல காசு வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.... 

அது ஒரு உலகம்.

இங்கை பார்த்தால், ஒரே சில்லலெடுப்பா கிடக்குது.... தயவுடன், உந்த பிரயோசனம் இல்லாத,  நியாயப்பிளப்புகளை பார்ட் டைம் வேலையாக்கிப்போட்டு, fulltime வேலை செய்யுங்கோ. 

அடிப்படை ஆங்கில அறிவு உள்ளவர்கள், அங்கே அல்லலுறும் சமூகத்துக்காகவாவது உழையுங்கோ.

suddenly world WENT online and the demand for IT skills shot up like never before!!! 

Power BI Developer

  • London, South East
  • £450.00 - £550.00 per day
  • Hays
  • Contract
  • Posted 3 days ago

இது உண்மையா ?...இப்போது வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக போலி விளம்பரங்கள் இணையத்தில்  வெளி வருகின்றது என்று கேள்விப்பட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இது உண்மையா ?...இப்போது வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக போலி விளம்பரங்கள் இணையத்தில்  வெளி வருகின்றது என்று கேள்விப்பட்டேன் 

அக்காவுக்கு  எல்லாத்துக்கும் சந்தேகப்படுவது ...
என்பதை கடலாக கற்று வைத்திருக்கிறார் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இது உண்மையா ?...இப்போது வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக போலி விளம்பரங்கள் இணையத்தில்  வெளி வருகின்றது என்று கேள்விப்பட்டேன் 

அக்கா, அது வேறு உலகம் என்று சொல்லி விட்டேனே....

இதிலை என்ன சுத்து மத்து இருக்கேலும்..... 

லிங்க்ட் இன் என்று ஒரு சமூக வலைத்தளம் கேள்விபட்டிருப்பியல்.... அதுவழியே தான் தொடர்புகள் வரும்.

நீங்கள் சொல்வது... அடிப்படை வகை வேலை வாய்ப்புகள் என்று நினைக்கிறேன்....  🙂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

அக்னி,

எங்கட கிருபன் ஜியும் உந்த துறைதான். பாருங்கோவன் ஆறுமாதத்தில ஆள் பிரைவெட் ஜெட் வாங்காட்டி.

😂

நான் ஒருபோதும் contractor ஆக வேலை செய்யவில்லை! எனவே பிரைவேற் ஜெற் எல்லாம் வாங்கமுடியாது.🤣🤣

Data analytics, ML, AI எல்லாம் இப்போது hot topics என்பதால் அவற்றில் கால் பதிப்பது நல்லது. 

தமிழில் கற்க மிகவும் நல்ல தளம் கணியம் http://www.kaniyam.com

மிகவும் பிரயோசனமான பல தொழில்நுட்பங்களைப் பற்றி முற்றிலும் இலவசமான தகவல்கள் உள்ளன.

கம்பனி ஊடாகவே பலவற்றை LinkedIn learning மூலம் கற்கலாம். அப்படி வசதி உள்ளவர்கள் எப்படியும் ஒரு மணி நேரமாவது தினமும் கற்பதற்கு பாவியுங்கள்.

லொக்டவுன் என்பதால் நேரம் கிடைக்கும், பலதையும் கற்கலாம் என்று போன மார்ச்சில் நினைத்தது ஒரு வாரத்திலேயே பிழைத்துவிட்டது. வீட்டில் குஷியாக இருப்பவர்களுக்கு Broadband ஐ சீராகக் கொடுக்கும் வேலையில் இருப்பதால், சேவையில் தடங்கல் வரும் பலரின் கோபத்தையும், பழிகளையும் குறைக்கும் வழிவகைகளை ஆராய்ச்சி எல்லாம் நம் தலையில் விழுந்து உள்ளது!  சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து வந்த புதிய CEO இன் connectivity பிரச்சினையைத் தீர்ப்பதிலும், அதற்கு விளக்கம் கொடுப்பதிலும் கடந்த இரண்டுநாள் போய்விட்டது.! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சரி ஜெட் வேண்டாம் ஒரு கப்பலாவது வாங்கி தேம்சில நிப்பாட்டுங்கோ, அடுத்த ஒன்றுகூடலை நடத்தலாம்🤣.

அமெரிக்கன் சீஈஓ எண்டால் கடுமையா வேலை வாங்குவாங்களே?

சம்பளம் கூட என்று அமெரிக்க கொம்பனிக்கு போய், இதுக்கு கேரளாவுக்கு அடிமாடாய் போகலாம் என்ற நிலைக்கு ஆகின சிலரை எனக்கு தெரியும்.

ஒப்பந்த வேலைக்கு போவதில்லை என்பது சரியான முடிவே.

ஒரு வயசுக்கு மேல் work-life balance ரொம்ப முக்கியம். Contract வேலையில் இது கஸ்டம்.

மேலே விசுகு அண்ணாவின் பிள்ளைகள் மிக தெளிவாக சொன்னதும் இதைதான்.

வாழும் வயதில், வாழாமல் இரவு பகலாக ஓடிவிட்டு, 65க்கு மேல் நோய் சூழ, care-homeஇல் இருந்து பாங் பலன்சை பார்த்து இன்புறுவதில் என்ன பயன்🤣.

சும்மா இருப்பதே சுகம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

அக்கா, அது வேறு உலகம் என்று சொல்லி விட்டேனே....

இதிலை என்ன சுத்து மத்து இருக்கேலும்..... 

லிங்க்ட் இன் என்று ஒரு சமூக வலைத்தளம் கேள்விபட்டிருப்பியல்.... அதுவழியே தான் தொடர்புகள் வரும்.

நீங்கள் சொல்வது... அடிப்படை வகை வேலை வாய்ப்புகள் என்று நினைக்கிறேன்....  🙂

ஓ நீங்கள் படித்த ஆட்கள் எல்ல😉 தெரியாத்தனமாய் வந்திட்டன் ...மறந்து போயிட்டன் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சரி ஜெட் வேண்டாம் ஒரு கப்பலாவது வாங்கி தேம்சில நிப்பாட்டுங்கோ, அடுத்த ஒன்றுகூடலை நடத்தலாம்🤣.

அமெரிக்கன் சீஈஓ எண்டால் கடுமையா வேலை வாங்குவாங்களே?

சம்பளம் கூட என்று அமெரிக்க கொம்பனிக்கு போய், இதுக்கு கேரளாவுக்கு அடிமாடாய் போகலாம் என்ற நிலைக்கு ஆகின சிலரை எனக்கு தெரியும்.

ஒப்பந்த வேலைக்கு போவதில்லை என்பது சரியான முடிவே.

ஒரு வயசுக்கு மேல் work-life balance ரொம்ப முக்கியம். Contract வேலையில் இது கஸ்டம்.

மேலே விசுகு அண்ணாவின் பிள்ளைகள் மிக தெளிவாக சொன்னதும் இதைதான்.

வாழும் வயதில், வாழாமல் இரவு பகலாக ஓடிவிட்டு, 65க்கு மேல் நோய் சூழ, care-homeஇல் இருந்து பாங் பலன்சை பார்த்து இன்புறுவதில் என்ன பயன்🤣.

சும்மா இருப்பதே சுகம்🤣

5 நாளைக்கு 7 மணித்தியால வேலை

வருடத்துக்கு 9 கிழமை சம்பளத்துடன்  லீவு

மதியம் 12 இலிருந்து 2 மணிவரை சாப்பாட்டு நேரம்

அதில்  உடற்பயிற்சியிலிருந்து நீச்சல்  வரை  இலவசம்

(பக்கத்தில்  உதை பந்தாட்டத்துக்கும்  போய்வந்து நீச்சலடித்தபின் வேலைக்கு  திரும்பலாம்)

வேலைக்கு  உத்தரவாதம்

வேலை இல்லாவிட்டாலும்  சம்பளம்

இதை விட பெரியவனுக்கு  விருப்பமில்லை

ஆனால்  சின்னவருக்கு அண்ணனை சம்பளத்தில்  முந்த வேண்டும்  என்றால்.....???😂

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

5 நாளைக்கு 7 மணித்தியால வேலை

வருடத்துக்கு 9 கிழமை சம்பளத்துடன்  லீவு

மதியம் 12 இலிருந்து 2 மணிவரை சாப்பாட்டு நேரம்

அதில்  உடற்பயிற்சியிலிருந்து நீச்சல்  வரை  இலவசம்

(பக்கத்தில்  உதை பந்தாட்டத்துக்கும்  போய்வந்து நீச்சலடித்தபின் வேலைக்கு  திரும்பலாம்)

வேலைக்கு  உத்தரவாதம்

வேலை இல்லாவிட்டாலும்  சம்பளம்

நாடு பிரான்ஸ் அல்லது இத்தாலி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நாடு பிரான்ஸ் அல்லது இத்தாலி. 

பிரான்ஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்லுறது விசுகு அண்ணை, நாலு வருச படிப்பு கஷ்டம் தான், ஆனால் 40 வருச  சுகசீவனம்.

காரணம், மானேஜர் வைத்திருக்கிற மென்பொருளுக்கு, எப்ப பிரச்சனை வரும் எண்டு தெரியாது. பிரச்சனை மாதக்கணக்கில் வராமலும் போகலாம். சரி காசை ஏன் செலவழிப்பான் எண்டு நம்மை மாதிரி ஆட்களை வெளியே அனுப்பி, அடுத்த கிழமையே, நாங்கள் உள்ள வைத்து விட்டு வாற  சின்ன மென்பொருள் கன்னிவெடியல் வெடிக்க, கூப்பிடுவார் பாருங்கோ, அலறிக்கொண்டு....

அப்ப நாங்க விடுவோம் அருக்கானம்.... வேற வேலை தொடங்கீட்டன்.... பின்னேரம் ஏலுமெண்டா பார்ப்பம்.... அதுக்கு காரணம், காசை இன்னும் கூடக் கேட்க தான்....

ஒரு மணித்தியாலம், வேலை தடைப்பட்டாலும், தேவையான ஆளை, தயாராக வைத்திருக்காவிடில், மானேஜர் வேலை காலி. அவரிண்ட காசும் இல்லை. கம்பெனி காசு.... அதாலை.... கட்டாயம் ஒரு ஆள் வேணும்.... வைத்திருப்பார்.

மேனேஜர் வெள்ளை எண்டால், சிட்டில இருக்கிற, மசாலா தோசை கடைக்கு கொண்டு போய், இரண்டு தோசை வார்த்து விட, மனுசன் சிரிச்சு கொண்டு திரியும். அடுத்த முறை, நான் தான், காசு கொடுப்பேன்...ஆங்....

நான் முந்தியும் சொல்லி இருக்கிறேன். வேலையில போய், இன்டர்நெட்டில், கோசனோடை கும்மாங்குத்து, போட்டாலும் காசு விழும்.

இதனை புளுகளுக்கு சொல்லவைல்லை. IT நல்ல வேலை, நல்ல சம்பளம். வழமையான மானேஜர் மாரின் சொறி சேட்டைகள் இருக்காது. மிக முக்கியமாக, மிகப் பெரிய கம்பனிகளின் வாசல்கள் திறக்கும்.

இங்கிலாந்தில் இரண்டு நிறுவனங்கள் மதிய உணவு இலவசம். ஒன்று சாராய வியாபாரம்... கின்னஸ். அங்கே பார்க் றோயலில் வேலை செய்திருக்கிறேன். அடுத்தது பிபி பெட்ரோல் வியாபாரம். போனவருடம் சந்தர்ப்பம் வந்தது.... வேலை செய்து கொண்டிருந்த கொம்பனி மானேஜர் விடவில்லை. ஆகையால் போக வில்லை.

கின்னசில், வெள்ளிக்கிழமைகளில் ஸ்டாப் சோப் இல் 20% வரை கழிவு. காலையில் இருந்து, நண்பர்கள், லிஸ்ட் அனுப்புவார்கள்.....  இந்த கின்னஸ்  நிறுவனத்தில் நான் உள்ளே போகும் போது, நான் மட்டுமே பைனான்சில் 32 பேரில், வேறு நிறம். ஒரு கணக்காளனாக அங்கே போக எந்த சந்தர்ப்பமும் கிடையாது.

சிட்டில, சில காப்புறுதி நிறுவனங்கள், மாதத்தின் கடைசி வெள்ளி , காலை உணவு மட்டும் இலவசம்.

கனேரிவார்ப் HSBC வங்கியின் தலைமையகதின் கீழ்தளத்தில், பெரிய உணவு கூடம் உண்டு. எங்குமே பார்க்க முடியாத வகையில் பல உணவு தயாரிப்பு கவுன்டர்கள் இருக்கும். சீன, ஜப்பானிய, மெக்ஸிகோ, இந்திய, இத்தாலிய  என்று விரும்பிய கவுண்டர் போய், ஆர்டர் பண்ண, சமைத்தோ, தயார் செய்தோ தருவார்கள். subsidised price 

அது வேறு உலகம்.

பிச்சல் புடுங்கள், புண்ணாக்கு வேலை ஊரிலேயே செய்திருக்கலாம். இங்கை வந்தால், வந்த நோக்கத்துக்கு பலன் இருக்க வேண்டும் என்பதனை மறவாமல், வலு மிக்க உள உறுதியுடன் தயாராகுங்கள். 

****

உண்மையில், ஒரு சீக்கிய சிங்கனுடன் அசிஸ்டன்ட் அக்கௌன்ட் என்ற பரதேசி வேலையில் குமுறிக்கொண்டிருந்தேன். நான் கணக்கியல் துறையை சொல்லவில்லை. அந்த வேலையை, நான் இருந்த நிலையினை சொல்கிறேன்.

ஒரு தமிழக, சிவகாசி நண்பர், என்ன சார், டெய்லி லேட்டா வாறீங்க... என்ன பிளாட்போர்ம் என்றார்.... அப்படீன்னா என்ன என்றேன்?

அவருக்கு புரிந்து விட்டது. அப்புறம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு... தலையில் அடித்துக் கொண்டார். நாமெல்லாம் விசாவுக்கு அல்லாடுறோம்.... நீங்க பாஸ்போர்ட் வைத்துக்கொண்டே வேஸ்ட் சார் என்றார்.

இன்று அவர் தமிழகம் திரும்பி விட்டார். இனிய நண்பர். அவர் சொன்னதேயே திரும்பி சொன்னேன் மேலே. 

பிச்சல் புடுங்கள், புண்ணாக்கு வேலை ஊரிலேயே செய்திருக்கலாம். இங்கை வந்தால், வந்த நோக்கத்துக்கு பலன் இருக்க வேண்டும் என்பதனை மறவாமல், வலு மிக்க உள உறுதியுடன் தயாராகுங்கள். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இதைத்தான் சொல்லுறது விசுகு அண்ணை, நாலு வருச படிப்பு கஷ்டம் தான், ஆனால் 40 வருச  சுகசீவனம்.

இதைத்தான் நான் சொல்லி சொல்லி வளர்த்தேன் பிள்ளைகளை. 

இனி வாழ்வும் முடிவும் அவர்கள் கையில்.

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ்.... நல்லதொரு பதிவிற்கு நன்றி. 
எனக்குத் தெரிந்தவர்கள்,  IT சம்பந்தப் பட்ட துறைகளில்,
கல்வி கற்காததால்... அவர்களுக்கு, இது சரிவராது என நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.