Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடராசாவின் பயன்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடைப்பயிற்சி நல்லது... ஏன், எதற்கு, எப்படி? #LetsWalk

நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும் பலருக்குத் தெரிந்திருக்காது.

பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதாலும், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும்.
 
தினமும் ஒருவர் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள்.
 
* தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன.
 
* நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
 
* ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்.
 
* தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.
 
* உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், அதனால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும். 

https://tamil.webdunia.com/

நான் நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் தவறாமல் நடந்து வருகின்றேன். மதியம் 12 இல் இருந்து 12:35 வரைக்கும் நடந்த பின் மீண்டும் மாலை 6 மணியளவில் மீண்டும் 35 நிமிடங்கள் நடக்கின்றேன். குளிர்காலத்தில் வீட்டில் உள்ள Treadmill லிலும், மிச்ச காலங்களில் வெளியிலும் நடக்கின்றேன். 18000 அடிகள் (11 கிலோ மீற்றர்) நடந்தும் இருக்கின்றேன்.

இதன் மூலம் உடம்பு மேலும் பருமனாவது நின்றதுடன், என் உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நடந்து வந்தபின் புத்துணர்ச்சியாக இருக்கும். 

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

கனசனம் பனிக்காட்டில் உழன்று திரிய போகுதுகள்  ஏன் இந்த கொலவெறி நீங்க சொன்னதை செய்தி இணைச்சவரும் சொல்லணுமே அத முதலில கேட்டு கிளியர் பண்ணினால் நாங்களெல்லாம் பின்னால நடக்க ரெடி

  • கருத்துக்கள உறவுகள்

ரை பண்னி பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

பாஸ்ட்டாய் நடந்தீர்களா அல்லது ரிலாக்சான நடையா ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

 இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

மனிசிட்ட அடிவாங்கிறதைப் பற்றி தானே சொல்லுகின்றிர்கள். 

4 hours ago, சுவைப்பிரியன் said:

ரை பண்னி பார்ப்போம்.

முயற்சி உடையார் களைப்பு அடையார்.

47 minutes ago, ரதி said:

பாஸ்ட்டாய் நடந்தீர்களா அல்லது ரிலாக்சான நடையா ?

Brisk walk என்ற வேக நடை. Treadmill என்றால் incline இனை 3 வரைக்கும் இடைக்கிடை கூட்டி நடப்பதுண்டு.

கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன். எதுவும் உண்ணாமல், பால் தேனீர் போன்றவை குடிக்காமல் நடந்தால் அல்லது ஓடினால், உடல் தனக்கு தேவையான சக்தியை சேமித்து வைத்து இருக்கும கொழுப்பில் இருந்து தான் எடுக்க பார்க்கும். இல்லா விடில் carb, sugar போன்றவற்றில் இருந்தே எடுக்கும். வயிறு குறைய வேண்டும் என்பவர்கள் வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லாவிடின் வாரத்துக்கு மூன்று தரமாவது முயன்று பார்க்கலாம்.

22 minutes ago, zuma said:

மனிசிட்ட அடிவாங்கிறதைப் பற்றி தானே சொல்லுகின்றிர்கள். 

கம்பெனி ரகசியங்களை வெளிவிட கூடாது..

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனசனம் பனிக்காட்டில் உழன்று திரிய போகுதுகள்  ஏன் இந்த கொலவெறி நீங்க சொன்னதை செய்தி இணைச்சவரும் சொல்லணுமே அத முதலில கேட்டு கிளியர் பண்ணினால் நாங்களெல்லாம் பின்னால நடக்க ரெடி

அவர் இதில் சீனியர் எங்களுக்கு எல்லாம்..

  • கருத்துக்கள உறவுகள்

எனது  வேலை இடத்தில்... மட்டுமே,
சராசரி 12 கிலோ மீற்றரும், 30 மாடிப் படிகளும் ஏறி இறங்குவேன்.

அதனால்... எவ்வளவு சாப்பிட்டாலும்,  பியர் குடித்தாலும்,
வண்டி, தொந்தி.. விழ விடாமல் காப்பாத்துது. :grin:

நடராஜா... உடம்புக்கு, நல்ல ஆரோக்கியமானது.
பதிவுக்கு... நன்றி, குமாரசாமி அண்ணா. :)

9 minutes ago, நிழலி said:

கம்பெனி ரகசியங்களை வெளிவிட கூடாது..

அவர் இதில் சீனியர் எங்களுக்கு எல்லாம்..

நிழலி

யார்... இவர்? புது, ஆளாக  இருக்குது...  :grin:

Edited by தமிழ் சிறி

6 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி

யார்... இவர்? புது, ஆளாக  இருக்குது...  :grin:

அதுதானே... பார்க்க களையா, அப்புறாணியாக, கருணையுள்ளவராக... யாராக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அதனால்... எவ்வளவு சாப்பிடடாலும்,  பியர் குடித்தாலும்,
வண்டி, தொந்தி.. விழ விடாமல் காப்பாத்துது.
நடராஜா... உடம்புக்கு, நல்ல ஆரோக்கியமானது.
பதிவுக்கு... நன்றி, குமாரசாமி அண்ணா. :)

ன நாளாய் எனக்கு ஒரு டவுட்டு...!

வண்டிக்கும், தொந்திக்கும்  பெரிய வித்தியாசங்கள்  ஏதும் இருக்கோ?

வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்...! அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்..!

எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு...!

கிழமைக்கு  மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க  வேண்டும்..😅

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

அதுதானே... பார்க்க களையா, அப்புறாணியாக, கருணையுள்ளவராக... யாராக இருக்கும்!

நிழலி... இது, உங்களது படமா?
சில வருடங்களுக்கு முன்பு பார்த்த உங்களது படங்களில்,
மெல்லிய முகத் தோற்றமாக இருந்தது.
இப்போ... கொஞ்சம், உடம்பு வைத்திருக்குது போல் தெரிகின்றது. :)

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புங்கையூரன் said:

ன நாளாய் எனக்கு ஒரு டவுட்டு...!

வண்டிக்கும், தொந்திக்கும்  பெரிய வித்தியாசங்கள்  ஏதும் இருக்கோ?

வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்...! அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்..!

எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு...!

கிழமைக்கு  மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க  வேண்டும்..😅

புங்கை அண்ணா.... சில இடங்களில்,
தமிழ் ஈழ தமிழர்களையும், தமிழக தமிழர்களையும்  குழப்புற மாதிரி...
வண்டி, தொந்தி  என்று கலந்து அடிச்சு  விட வேணும். :grin:

அப்ப தான்... இவங்கள் இரண்டு பேரும்  சேர்ந்து...
ஒறிஜினல்  தமிழ் எது? என்று... ஒரு முடிவுக்கு வருவாங்கள்.. 😎
என்ற படியால்தான்... அப்படி, சும்மா  வீம்புக்கு, எழுதினேன்.  😜

22 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி... இது, உங்களது படமா?
சில வருடங்களுக்கு முன்பு பார்த்த உங்களது படங்களில்,
மெல்லிய முகத் தோற்றமாக இருந்தது.
இப்போ... கொஞ்சம், உடம்பு வைத்திருக்குது போல் தெரிகின்றது. :)

என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன்.

இரு வருடங்களுக்கு முன் இருந்ததை விட 5 கிலோ குறைந்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன்.

இரு வருடங்களுக்கு முன் இருந்ததை விட 5 கிலோ குறைந்துள்ளேன். 

எனக்கும்...  "கொரோனா" நேரத்தில்,
சலூன் பக்கம்  போக, பயமாக இருப்பதால்....
எனது மகள், தான்... கடந்த ஒரு வருடமாக, தலை  மயிர் வெட்டி விடுவார்.

நாளைக்கு... எனக்கு, முடி இறக்கு விழா... நடக்கப் போகுது.
அதுக்கு... இப்பவே... நேரம் ஒதுக்கி  வைத்து விட்டேன்.

டிஸ்கி: கொரோனா நேரத்தில்...  "மகள், தந்தைக்கு ஆற்றும் உதவி...  முடி வெட்டி விடுவதே"    

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலுடம் உண்மை. நான் கடந்த  4 மாதங்களாக தினமும் 40 நிமிடங்கள் நடக்கிறேன்.எனக்கள் மாற்றத்தை உணர்கிறேன் நடக்க முதலும் நடந்த பின்னரும் இரத்தை அழுத்தத்தைச் சோதித்தால் ஆச்சிரியமாக இருக்கும். நடைக்குப் பின் இரத்த அழுத்தம் நன்றாகக் குறைந்திருக்கும். நித்திரையும் நன்றாக வரும். 3 கிவரையில் எடையம் குறைந்துள்ளது. உடலுக்குப் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். ஆரம்பத்;தில் மிகவும் கஜ்ரமாக இருந்தது. இப்nபொழுது ஒரு நாள் நடக்கா விட்டாலும் ஏதோ குற்ற உணர்வாக இருப்பது போல் உள்ளது.தினமும் 10 ஆயிரம்  காலடடிகள் நடக்கிறேன். மிகவும் இலகுவான நடைதான். இனி மெதுவாகக்கூட்டலாம் என்று என்ற எண்ணி இருக்கிறேன். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடக்கம் பொழுது சம தரையில் நடக்க முயற்சிக்கவும். அரம்பத்தில்  நான் எனது நடைப்பயிற்சியில் சிறிய  பிட்டி ஒன்றை  ஒவ்வொரு நாளும் என் நடைப்பயிற்சியில் ஏறி இறங்கினேன். மழஙஃ;கால்சிரட்டைக்கீழ் கடுமையான வலி. வைத்தியரிடம் காட்டவேண்டி வந்தது. அவர்சொன்னார் சமதரையில் நடக்கச் சொல்லி; சமதரையில் நடக்கும்பொழுது எந்த வலியும் இருக்க வில்லை. ஆகவே நடவுங்கள் நலமாக இருங்கள்.
பிற்குறிப்பு.
அந்த விசயத்திற்கு தினமும் சைக்கிள் ஓடுங்கள் பிறகு பாருங்க எல்லாம் அனுபவம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நடை பயன்கள் நல்ல தகவல்
நடப்பதினால் பல மணித்தியாலங்களை இழந்து விடுவோம் அதிலும் பார்க்க ரக்சி பிடித்து கொண்டு போகலாம், வசதி முக்கியம்  என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சிலர் சொல்வார்கள் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனசனம் பனிக்காட்டில் உழன்று திரிய போகுதுகள்  ஏன் இந்த கொலவெறி நீங்க சொன்னதை செய்தி இணைச்சவரும் சொல்லணுமே அத முதலில கேட்டு கிளியர் பண்ணினால் நாங்களெல்லாம் பின்னால நடக்க ரெடி

தம்பி ராசன்! வேலை முடிஞ்சு வீட்ட போகேக்கை கல்லடி பாலத்துக்கு கிட்ட இறங்கி நீந்தினாலே மூச்சு பயிற்சி தானாய் வரும். பேந்தென்ன சொல்லவே வேணும். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நிழலி said:

நான் நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் தவறாமல் நடந்து வருகின்றேன். மதியம் 12 இல் இருந்து 12:35 வரைக்கும் நடந்த பின் மீண்டும் மாலை 6 மணியளவில் மீண்டும் 35 நிமிடங்கள் நடக்கின்றேன். குளிர்காலத்தில் வீட்டில் உள்ள Treadmill லிலும், மிச்ச காலங்களில் வெளியிலும் நடக்கின்றேன். 18000 அடிகள் (11 கிலோ மீற்றர்) நடந்தும் இருக்கின்றேன்.

இதன் மூலம் உடம்பு மேலும் பருமனாவது நின்றதுடன், என் உயர் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நடந்து வந்தபின் புத்துணர்ச்சியாக இருக்கும். 

இவற்றை விட 'முக்கியமான' விசயத்தில் கனக்க நேரம் தாக்குப் பிடிக்கவும் முடியும் (Sustaining time)

எல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

ன நாளாய் எனக்கு ஒரு டவுட்டு...!

வண்டிக்கும், தொந்திக்கும்  பெரிய வித்தியாசங்கள்  ஏதும் இருக்கோ?

வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்...! அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்..!

எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு...!

கிழமைக்கு  மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க  வேண்டும்..😅

வண்டி இருந்தால் கொஞ்சம் எட்டிக் குனிய கால் தெரியும்.....!

தொந்தி என்றால் சுவரைப் பிடித்துக்கொண்டு குனிந்தாலும் உங்கட கால் தெரியாது......!  😁

8 hours ago, புலவர் said:

பிற்குறிப்பு.
அந்த விசயத்திற்கு தினமும் சைக்கிள் ஓடுங்கள் பிறகு பாருங்க எல்லாம் அனுபவம்தான்.

அதுக்காக சைக்கிள் ஓடினால் போற அலுவல் சைக்கிள் ஓடும்போதே முடிந்து விடுமோ என்று யோசிக்க வேண்டி இருக்கு .......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...? 

சாப்பாட்டில் எந்தக் குறையும் வைக்கவில்லை.பியரும் அளவோடு குடிப்பேன். ஆனால் அதிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கூடின பலன் கிடைக்கும். நான் வேக நடை 4ட நடப்பதில்லை .சாதாரண நடைதான். வேகநடை என்றால் இன்னும் பலன் கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

எனது  வேலை இடத்தில்... மட்டுமே,
சராசரி 12 கிலோ மீற்றரும், 30 மாடிப் படிகளும் ஏறி இறங்குவேன்.

அதனால்... எவ்வளவு சாப்பிட்டாலும்,  பியர் குடித்தாலும்,
வண்டி, தொந்தி.. விழ விடாமல் காப்பாத்துது. :grin:

சிறித்தம்பி! உங்கள் பொன்மேனி இப்படி இருக்குமா? 😷

Vijay facts on Twitter: "இதுல யாரு சிக்ஸ் பேக்ஸ் மாஸ் ..? Fav : #Vijay RT :  #SixPackSoori… "

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன்.

காலையில் சுடுநீர் குடித்தால் நல்லது என்கிறார்கள்.இதுபற்றி ஏதாவது கேள்விப்பட்டீர்களா?

18 hours ago, தமிழ் சிறி said:

எனது  வேலை இடத்தில்... மட்டுமே,
சராசரி 12 கிலோ மீற்றரும், 30 மாடிப் படிகளும் ஏறி இறங்குவேன்.

தொடர்நடை தான் பயன்தரும் என்கிறார்கள்.
நடக்கும் போது உடம்பு சூடாகி களைப்பு வந்து வியர்க்க வேண்டும் என்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன்! வேலை முடிஞ்சு வீட்ட போகேக்கை கல்லடி பாலத்துக்கு கிட்ட இறங்கி நீந்தினாலே மூச்சு பயிற்சி தானாய் வரும். பேந்தென்ன சொல்லவே வேணும்.

சகல உடற்பயிற்சிகளிலும் நீச்சல் தான் சிறந்தது என்கிறார்கள்.

17 hours ago, நிழலி said:

என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன்.

இதையே நிரந்தரமாக்கினால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

முயற்சி உடையார் களைப்பு அடையார்.

Brisk walk என்ற வேக நடை. Treadmill என்றால் incline இனை 3 வரைக்கும் இடைக்கிடை கூட்டி நடப்பதுண்டு.

கொஞ்ச நாட்களாக, காலையில் தண்ணீர் ஒரு சில்வர் பேணியில் குடித்து விட்டு எதுவும் சாப்பிடாமல் 45 நிமிடம் வேகமாக நடக்கின்றேன். எதுவும் உண்ணாமல், பால் தேனீர் போன்றவை குடிக்காமல் நடந்தால் அல்லது ஓடினால், உடல் தனக்கு தேவையான சக்தியை சேமித்து வைத்து இருக்கும கொழுப்பில் இருந்து தான் எடுக்க பார்க்கும். இல்லா விடில் carb, sugar போன்றவற்றில் இருந்தே எடுக்கும். வயிறு குறைய வேண்டும் என்பவர்கள் வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லாவிடின் வாரத்துக்கு மூன்று தரமாவது முயன்று பார்க்கலாம்.

பதிலுக்கு நன்றி ...உடம்பை விட வண்டியை குறைப்பது தான் பிரச்சனையாய் இருக்கு ...காலமை எழும்பி கோப்பி குடிக்காட்டி எனக்கு எந்த வேலையும் ஓடாது ...எதற்கும் பார்ப்பம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.