Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம்.

                முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம்.

               ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.

               பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது.

               ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும்.

                சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம்.

                  ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது.

                நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger)

                 படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம்.

                 அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை.

                 காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று.

                    இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும்.

                    பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில்  10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது.

                    ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம்.

                    வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது.

                    இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம்.

                    இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை.

                    ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனின்... மலரும் நினைவுகளை வாசித்து மகிழ்ச்சி அடைந்தோம்.

65 சதத்துக்கு... 👍🏼 007 ஜேம்ஸ் பொண்ட் படம், அருமையான காலம். 😁

கஸ்தூரியார் வீதிக்கும், பிரவுண் வீதிக்கும் இடையில் உள்ள பிள்ளையார்  கோவில் குளத்தின்  அருகில் உள்ள வாசிகசாலையை குறிப்பிடுகின்றீர்கள் என நினைகின்றேன். 

அரச மரத்தின் கீழ்... அழகான சூழலில் அமைந்துள்ள வாசிகசாலை அது. 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண்.
நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்?

நாங்கள் எங்களுக்குள்ள கலரி எண்டு சொன்னால் கெளரவப் பிரச்சனை எண்டு சொல்லிக் காந்திக் கிளாஸ் என்று தான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்!

ஈழப்பிரியன்...அனுபவங்களைக் கொஞ்சம் நீட்டினால் என்ன?😄

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண்.
நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?

வாசிகசாலைக்கு.... உள்ளே போய் பார்க்கவில்லை ஈழப்பிரியன்.

சிறிய வகுப்பு படிக்கும் போது... அந்த ஒழுங்கையால்தான் பாடசாலைக்கு வருவோம்.

நாங்கள்,  😁 சாமத்தியப் பட்டாப் பிறகு...‼️ சைக்கிள் வாங்கித் தந்த பின்,

இந்து மகளிர் கல்லூரி இருக்கும், அரசடி வீதியை பாடசாலைக்கு வரும் வழியாக பாவிக்க தொடங்கி விட்டோம். 😂

16 minutes ago, புங்கையூரன் said:

எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்?

நாங்கள் எங்களுக்குள்ள கலரி எண்டு சொன்னால் கெளரவப் பிரச்சனை எண்டு சொல்லிக் காந்திக் கிளாஸ் என்று தான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்!

ஈழப்பிரியன்...அனுபவங்களைக் கொஞ்சம் நீட்டினால் என்ன?😄

புங்கை.... இப்ப இங்கை, விடிய மூண்டு மணி.

நித்திரை தூக்கத்திலை... நீராவியடி பிள்ளையார், உடனே  நினைவிலை வர மாட்டன் எண்டுட்டார். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்களும் நம்மாளுதான், நன்றி பழைய நினைகவுகளை பகிர்ந்த திற்கு.

பள்ளியை கட் பண்ணி சுத்தவதில் தனி சுகம், அதுவும் ஒரு நண்பன் கிடைத்துவிட்டால் சொல்லி வேலையில்லை,

6ம் வகுப்பில் நானும் எனது நண்பனும் ஆறு மாத த்துக்கு மேல் பள்ளி பஸ் தரிப்பிடத்தில் இறக்கி திரும்ப வீடு வரை நடைதான், வரும் வழியில் ஒரே சுற்றலும் & பம்பலும் தான்.

யாரோ கண் வைக்க எங்கள் சொந்த காரா அண்ணாவிடம் அகப்பட்டு வீட்டில் நடந்த பூசையை மறக்க முடியாது😢, அதன்பின் பலத்த கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தான் பள்ளி செல்வது 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை. நான் அங்கு நிரந்தர உறுப்பினர். அங்கிருந்துதான் ஏராளமான புத்தகங்கள் எடுத்து வாசித்தனான். எனது வீட்டுக்கு அருகில்தான் அது இருந்தது. அவரது மனைவியும் இந்து மகளிர் பாடசாலையில் ஆசிரியை என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னால் லிங்கம் அரவை மில் இருந்தது. அதனால் அடிக்கடி அரிசி, தூள் அரைக்க போகும்போது அந்த நூலகத்துக்கு போய் அதுவே வழக்கமாகி விட்டது...... முன்பு புதுப்படம் 65 சதம். பழைய படம் 35 சதம். கூட ஒரு 10 சதம் இருந்தால் நல்ல தேநீருடன் ஒரு வடை,சுசியும்,பகோடா,போண்டா எதோ ஒன்று வாங்கி சாப்பிட முடியும்....... நல்லதொரு நினைவு மீட்டல் பிரியன்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்!

ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு?

தம்பி...ஒரு ரூபாய்..!😄

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.....அந்த ஆணமும் றோஸ்சும் என்ன சுவை..... நினைக்கும்போது இப்பவும் நாவில் நிக்குது.....!  👍

மலரும் நினைவுகள் எப்பவுமே அருமையாக இருக்கும். ஈழப்பிரியன் அண்ணாவின் நினைவுகளும் அப்படியே

அது சரி ஜேம்ஸ் பொன்ட் படம் என்றால் வயது வந்தவர்களுக்குரிய படமாக இருந்திருக்குமே?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்?

4 hours ago, suvy said:

நீங்கள் சொல்வது நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக "செங்கை ஆழியான்" அவர்களின் வீட்டோடு சேர்ந்த வாசிகசாலை.

இருவரும் என்னை பிழையான வாசிகசாலைக்கு கூட்டி செல்கிறீர்கள்.பள்ளிக்கு பேரூந்தில் வர தொடங்கிய காலத்தில் இருந்து (யாழ்-கோப்பாய் ரூட்) ஆனைப்பந்தியில் இறங்கி நாலவர்வீதி பிரவுண்வீதி நீராவியடிப் பிள்ளையார் கோவிலடி ஊடாகவே நடந்து பள்ளிக்குப் போவோம்.

நான் சொன்ன வாசிகசாலை கன்னாதிட்டி பக்கமாக உள்ள வாசிகசாலை.

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்..

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் தோழர்..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்!

ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு?

தம்பி...ஒரு ரூபாய்..!😄

மதியநேர சாப்பாட்டு பொதியுடன் பிளவுஸ் வரை போய் றோஸ் வாங்கி(10 சதம்)சாப்பிட்டிருக்கிறேன்.இன்றுவரை எப்படி ஒரு றோஸ் சாப்பிட்டதில்லை.

4 hours ago, புங்கையூரன் said:

ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்!

ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு?

தம்பி...ஒரு ரூபாய்..!😄

மொக்னிடம் அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன்.
புட்டும் ரசமும் சாப்பிட்டாலே தனிசுவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

அட நீங்களும் நம்மாளுதான், நன்றி பழைய நினைகவுகளை பகிர்ந்த திற்கு.

பள்ளியை கட் பண்ணி சுத்தவதில் தனி சுகம், அதுவும் ஒரு நண்பன் கிடைத்துவிட்டால் சொல்லி வேலையில்லை,

6ம் வகுப்பில் நானும் எனது நண்பனும் ஆறு மாத த்துக்கு மேல் பள்ளி பஸ் தரிப்பிடத்தில் இறக்கி திரும்ப வீடு வரை நடைதான், வரும் வழியில் ஒரே சுற்றலும் & பம்பலும் தான்.

யாரோ கண் வைக்க எங்கள் சொந்த காரா அண்ணாவிடம் அகப்பட்டு வீட்டில் நடந்த பூசையை மறக்க முடியாது😢, அதன்பின் பலத்த கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தான் பள்ளி செல்வது 🤣

ஊரில ஒரு பிரச்சனை சின்னன் சிறிசுகள் ஏதாவது குழப்படி என்றால் அப்பா அம்மா வீட்டுக்காரருக்கு மட்டுமல்ல ஊரவனுக்கே பதில் சொல்ல வேண்டும்.
தெருவீதிகளில் வைத்து சாத்தியும் விட்டுடுவாங்கள்.

1 hour ago, நிழலி said:

அது சரி ஜேம்ஸ் பொன்ட் படம் என்றால் வயது வந்தவர்களுக்குரிய படமாக இருந்திருக்குமே?

இது தவறான எண்ணம்.
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் அப்படியான படங்கள் இல்லை.

12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்..

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் தோழர்..👍

உலகத்தில் பல இடங்களுக்குப் போயிருந்தும் இதுவரை இந்தியா போகவில்லை.
சுகமாக இருந்தால் மனைவியை கோவில்குளம் என்று அழைத்துப் போக விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதிலிருந்து அது கன்னாதிட்டி சந்தி.(நகைக்கடைகள் அதிகம் இருக்கும்). அதில் இடது பக்கம் போனால் ஒரு அம்மன் கோவிலும் அதன் வீதியில் ஒரு மோட்டர் சைக்கிள் கராஜ்சும் (அப்பாமணியின் கராஜ், மகன்மார் நடத்தினவை) இருக்கு அதன் அருகில் என்று நினைக்கிறேன்.நான் அங்கு போனதில்லை......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

ஆமாம் சுவி பள்ளியில் இருந்து யாழ் நோக்கி போகும் போது நகைக்கடைகள் தொடங்குமிடத்தில் இடதுபக்கமாக 100-200 மீற்றர் போனால் இடதுகை பக்கமாக வாசிகசாலை வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா அறிவாலயம் நல்லதொரு நினைவூட்டல்.

நான் தான் இப்பிடியெண்டு பாத்தால் என்னோடை வந்து சேர்ந்ததுகள் என்னை விட மோசமாய் கிடக்கு....:379:

பள்ளிக்கூடத்தை கட் அடிச்சு தியேட்டர் ,கடைச்சாப்பாடு,வீட்டிலை காசு களவெடுப்பு......இன்னும் இரண்டு விசயங்கள் வெளியிலை வரவேணுமே???????? :thinking_face: :406:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட நான் கூட தோழர் ஏதோ அலுவல் காரணமா சென்னையில் உள்ள தீம்கா ஒபீஸ் உள்ள போயிட்டார் ..என உள்ள வந்தனன்..

யோவ் புரட்சியர்! உது ஆகலும் ஓவர் யா...😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான் தான் இப்பிடியெண்டு பாத்தால் என்னோடை வந்து சேர்ந்ததுகள் என்னை விட மோசமாய் கிடக்கு..

வீட்டுக்கு வீடு வாசல்படி.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 08:57, ஈழப்பிரியன் said:

சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.

இப்படியான உதவிகள் நண்பர்கள் தான் செய்வார்கள் அதுதான் நண்பேன்டா என்று சொல்லுயினம் போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இப்படியான உதவிகள் நண்பர்கள் தான் செய்வார்கள் அதுதான் நண்பேன்டா என்று சொல்லுயினம் போல

உயிரும் கொடுப்பான் தோழன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவு இவ்வ்ளவு நாடகளாக என் கண்ணில் படவில்லை .தாமதத்துக்கு மன்னிக்கவும். இளமைக் கால நினைவுகளை அசைபோடுவது மீண்டும் பள்ளிக்குப்போவது போல .தொடர்ந்தும் உங்கள்  நினைவுகளை அசை போடுங்கள். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

இப்பதிவு இவ்வ்ளவு நாடகளாக என் கண்ணில் படவில்லை .தாமதத்துக்கு மன்னிக்கவும். இளமைக் கால நினைவுகளை அசைபோடுவது மீண்டும் பள்ளிக்குப்போவது போல .தொடர்ந்தும் உங்கள்  நினைவுகளை அசை போடுங்கள். 
 
யாழ் இந்துக் கல்லூரி ஆண்கள் கல்லூரி என்றபடியால் உங்கள் கண்களில் படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 22:47, குமாரசாமி said:

இன்னும் இரண்டு விசயங்கள் வெளியிலை வரவேணுமே???????? :thinking_face: :406:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

Just now, Kandiah57 said:

கிடைக்காமால்

ஈழப்பிரியன் உங்கள் இளமைகால நினைவுகள் அருமை.  சிறப்பாக அதை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நீராவியடி அதை சுற்றி வர இருக்கும் இடங்கள் யாழ் இந்துக்கல்லூரியின் சுற்றாடல் எனது பாடசாலை நினைவுகளையும் மீட்டிப்பார்க்க வைத்துவிட்டது. தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.