Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடா சந்திரசேகரின் ஒலிப்பதிவும் சிரஞ்சீவியின் மறுப்பும்

Featured Replies

சிரஞ்சீவியின் மறுப்பறிக்கை.

25/04/2021
பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று தலைமையினை கோருகின்றேன்..

நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா அவர்கள் சற்றும் உண்மை கலக்காத பொய்யினை கட்டவிழ்த்து விட்டு, சிரஞ்சீவி ஆகிய என்னைப்பற்றி அவதூறு பரப்பும்படி ஒருவருடன் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்றினை கேட்க நேரிட்டது.

தமிழர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக கட்டமைக்கப்பட்வருகின்ற  நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா பேசியிருப்பது உண்மையென எண்ணி தொடர்ந்தும் தனிப்பட்ட அழைப்புக்களில் இதன் உண்மை தன்மை குறித்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தடா ஐயா பேசிய எல்லா விடயங்களுக்கும் அவரே பொறுப்பானவர். அதன் உண்மை தன்மை குறித்த விளக்கத்தினையும் அவரே  வழங்க வேண்டும். ஆயினும்  அவர் ,  என்னைப்பற்றி பரப்ப முற்பட்டுள்ள பொய்கள் குறித்து  தெளிவுபடுத்த வேண்டய கடமை எனக்கு உள்ளது. , என்னைப்பற்றி அவர் பேசிய விடயத்தில் துளியளவும் உண்மையும் இல்லை என்பதனை பொதுவெளியில் தெரிவித்துக் கொள்கின்றேன். உண்ணும் உணவுத்தட்டில் அசிங்கப்படுத்தும் செயலை செய்திருக்கின்றார் என்பதே  வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது. என் மீதான அவதூறு பொதுவெளியில் வந்துள்ளமையால் பொதுவெளியில் விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன். ஐயா தடா  தயாராக உள்ளாரா  என்பதை மட்டும் தெரியப்படுத்தவும்.

பொய்களும் உண்மைகளும் 

பொய் 1: சத்தியமங்கலத்தில் இருபது ஏக்கர் காணி வாங்கி விவசாயம் மற்றும் பண்ணை  செய்கின்றேன்.. கொளத்தூர் மணி அண்ணாவின் தயவில் வாழ்கின்றேன்.

உண்மை: என்னிடமோ எனது குடும்பத்தாரிடமோ பினாமியிடமோ சொந்தமாக ஒரு சதுர அடி நிலம் கூட இல்லை என்பதை தெரியப்படுத்துகின்றேன்.. கொளத்தூர் மணி அண்ணா மட்டுமல்ல வேறு எவரது தயவிலும் நான்  வாழவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் . அவ்வாறு காணி இருப்பதை உறுதிப்படுத்தினால்  பேராசை கொண்ட தடா ஐயா அவர்கள் இருபது ஏக்கார் நிலத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

பொய் 2: RAW agent ஆக செயற்படுகின்றேன்.

உண்மை: பெரியவர் தடா சந்திரசேகர்  ஐயாதான் அதற்கு தலைவராக இருந்து  அதில் என்னையும் அவர்   இணைத்துக் கொண்டிருந்தால் அவ்விடயம் உண்மையாக இருக்கலாம்.  அவ்வாறு இல்லாவிட்டால் அதில் எதுவித உண்மையும் இல்லை. அவர் மிகப்பெரிய வழக்கறிஞராக உள்ளார் . அவரே இவ்விடயத்தை உறுதி செய்து வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். ஒருவரின் உண்மைத்தன்மையினை சீர்குலைக்க வேண்டுமாயின் அவரை இந்திய உளவுத்துறை, சிங்கள உளவுத்துறை , RSS ,திராவிட கைக்கூலி என்று முத்திரை குத்தி ஒதுக்குவதை நாம்தமிழர் வழமையாக வைத்துள்ளார்கள். அதன் பிதாமகரான நீங்கள் என் மீதும் அவ்வாறான சேற்றை வாரி இறைக்க முற்பட்டுள்ளீர்கள்.

பொய் 3: பொட்டம்மான் உயிரோடு இருப்பதாக காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்தேன். அந்த செய்தி வார இதழில்  செய்தியாக  வந்தது. அதனால்  RAW  agent. (பொட்டம்மான் உயிரோடு இல்லை என்று செய்தி வந்திருந்தாலும்,  பொட்டம்மான் உயிரோடு இல்லை என்று காவல்துறைக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார் . அதனை திட்டமிட்டு  ஊடகங்களுக்கு பேட்டியும்  கொடுத்துள்ளார் ,  போராட்ட சிந்தனையில் உள்ளவர்களை அதிலிருந்து விலக வைப்பதற்காக RAW சொல்லியே சிரஞ்சீவி செயற்பட்டார் என்றும் நாக்கை பிரட்டிப் பேசக்கூடிய மகாநடிகன் ஐயா நீங்கள். அது வேறு கதை. இருக்கட்டும்)

உண்மை: பத்திரிக்கைச் செய்தி இணைத்துள்ளேன்- தடுப்பில் இருந்த என்னை பார்க்க வந்த வழக்கறிஞர் ஊடாகவே அந்த பேட்டி கொடுக்கப்பட்டதாக வார இதழிலில்  பதிவாகி இருந்தது . என்னைப்பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்காக , நான் கைதாகி சில நாட்களில் ஒரு தடவை பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா வந்து சென்றார்   (என்னை சந்திக்க வந்த போது தடா ஐயா நாம் தமிழர் கட்சியில் இணைந்திருக்கவில்லை. மூத்தவர் பழ.நெடுமாறன் ஐயா அவர்களுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.). தடா ஐயா என்னைபார்த்து சென்ற  பின்னரேயே வார இதழ் ஒன்றில் மேற்குறித்த செய்தி வெளியாகி இருந்தது. எனது கைதுக்கும் செய்தி வெளியாகிய திகதிக்கும்  இடைப்பட்ட காலப்பகுதியில் வேறு வழக்கறிஞர் எவரும் என்னைப் பார்க்க வரவில்லை.தடா ஐயாவின் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த செய்தி வழங்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் இப்போது தோன்றுகின்றது. இந்த செய்தி வெளிவந்த பின்னர் காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறையினரின் கடுமையான விசாரணைகளை எதிர்கொள்ள நேரிட்டது. . என்னுடன் தடுப்பில் இருந்தவர்கள் விசாரணை தொல்லைகளை அறிந்த சாட்சிகளாக இப்போதும் உள்ளனர்.

பொய் 4: எனது வழக்கினை நடாத்தி விடுதலை வாங்கி கொடுத்தாக கூறியுள்ளார். 

உண்மை: என் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தது. அதில் பிரதான வழக்கு, ஒன்பது வருடங்களாக மாவட்ட நீதிமன்றத்திலும், பின்னர் உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்றது. எனது வழக்கறிஞர்களாக மதுரை பகத்சிங் அண்ணாவும், தம்பி ராஜீவ்காந்தியுமே செயற்பட்டார்கள். அவ்வேளைகளில் ஒரு நாள் கூட சந்திரசேகர் ஐயா எனக்காக நீதிமன்றம் வந்ததும் கிடையாது. எனது வழக்கிற்காக அவரை வழக்கறிஞராக ஒருபோதும் நான் நியமித்ததும் கிடையாது!    வழக்கறிஞர்  ராஜிவ்காந்தியை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததாக சொல்லுகின்ற விடயமும் மிகவும் பொய்யானது. நாம் தமிழர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வழக்கறிஞர் பகத்சிங் அண்ணா  வழக்கறிஞர் காமராஜ், வழக்கறிஞர் பாலாஜி, வழக்கறிஞர் ராஜிவ்காந்தி ஆகியோர் எனது தொடர்பில்  இருந்தார்கள். நாம் தமிழர் அமைப்பாக தொடங்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பின்னர் தான்  வழக்கறிஞர் பாலாஜி., வழக்கறிஞர் ராஜிவ்காந்தி போன்றோரால் தாங்கள் நாம் தமிழர் கட்சியில்  இணைக்கப்பட்டீர்கள் (2011) என்பதை கூட மறந்து விட்டீர்களா ? தடா ஐயா கட்சிக்குள் வந்தால் நல்லது பேசிப்பாருங்கள் என்று வழக்கறிஞர்  பாலாஜியிடம் கூறியதே நான் தான் என்பது கூட நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ராஜிவ்காந்தி மாற்று கட்சிக்கு சென்று விட்டார்  அதனால் அவரிடம் கேட்க முடியாது. வழக்கறிஞர் பாலாஜி இருக்கின்றார் . அவரிடம் கேட்டு தெரிந்து  கொள்ளுங்கள் ஐயா . அண்ணன் சீமான் அவர்களுடன் சேர்ந்து செயற்பட அழைத்தபோது அண்ணன் சீமான் குறித்து நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை நீங்கள் மறந்திருக்கலாம். எனக்கு நினைவிருக்கின்றது. அதனை பொது வெளியில் சொல்ல விரும்பவில்லை.

பொய் 5: தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சி காலத்தில் சிறப்பு முகாம்கள் எல்லாம் மூடப்பட்டு என்னையும் அங்கிருந்து விடுதலை செய்தார்கள்.

உண்மை: சிறப்பு முகாம் நடைமுறை இன்று வரை நடைமுறையில்தான் உள்ளது. அவ்வாறு சிறப்பு முகாம் மூடப்பட்டு நான் விடுதலையாகவில்லை. வழக்கறிஞர் பிரபு  அவர்களின் ஏற்பாட்டில் வழக்கறிஞர் ரூபஸ் அண்ணா மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே விடுதலையானேன்.

பொய் 6: எனது குடும்பத்தினரை முகாமிலிருந்து வெளியே எடுத்து தங்க வைத்து பராமரித்ததாக கூறியுள்ளார். 

உண்மை: எனது குடும்பத்தினர் எந்த முகாமில் இருந்தார்கள்?. எங்கே வீடு எடுத்து தங்க வைத்து இருந்தீர்கள் ?  என்பது குறித்து ஐயாவே விளக்கமளிக்க வேண்டும்

பொய் 7 என்னைக் கண்டால் கதைக்க மாட்டாராம் . பிடிக்காதாம் .

உண்மை: இவர் பெரியவர் என்ற மரியாதை மட்டுமே எனக்கிருந்தது. வழமையாகவே போதையில் இருப்பவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பது எனது வழக்கம். அந்த அடிப்படையில் ஐயாவை  கண்டால் நான் ஒதுங்கிக்கொள்வது என்பது தான் உண்மை .தனது வீட்டுக்கு வரும்படியும் "நீங்களெல்லாம் எனது வீட்டுக்கு வருவது பெருமை" என்று கூறியவர்தான் ஐயா " தடா .  *அது வேற வாய் இது நாற வாய்" என்பது போல் இப்போது  பேசியுள்ளார்.

பொய் 8: ராஜிவ்காந்தி ,மற்றும் கல்யாணசுந்தரத்தை கட்சியிலிருந்து வெளியேற்றிய போது அவர்களுக்காக வக்காலத்து வாங்க வந்தேனாம். 

உண்மை : ஐயா பெரியவரே உங்களை போன்று வன்மத்துடன்  கருத்து சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் எனக்கில்லை. அண்ணன் சீமான் அவர்களுக்கு அனைவரது  கூட்டு செயற்பாடுகளும் இந்த தேர்தல் நேரத்தல் அவசியம் என்பதால் கட்சியிலிருந்த மாநில பொறுப்பிலிருந்தவர்கள்  வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது பொருத்தமாக அமையாது என்பதாலேயே இது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தை தெரியப்படுத்தி இருந்தேன். இந்த விடயத்தை பதிவு பண்ணும் இன்றைய நாள் வரை ராஜீவ்காந்திக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் அவர்களுக்காக நான் உங்களுடன் பேசிய விடயம் கூட  தெரியாது என்பது தான் உண்மை. பலமான சக்தியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்ததில் என்ன வன்மம் இருக்கின்றது என்பதை தெரியப்படுத்தினால் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

பொய் 9: RSS ன் கைக்கூலியாக செயற்படுகின்றேன். 

உண்மை : கற்பனை கலக்காத பொய் . இதனை உறுதி செய்யுங்கள் பெரியவரே . நான் உங்களுடன் பொய்களை பரப்பும்  கூட்டுக் களவானியாக சேர்ந்து கொள்கின்றேன்.

பொய் 10: அண்ணன் சீமானுக்கெதிராக சதி செய்தேனாம் 

உண்மை: அண்ணன் சீமான் அவர்களை தலைமைக்கு அறிமுகம் செய்து வைத்தவன் என்கின்ற முறையில் அவருக்கும் எனக்கும் இடையில் புரிதல் இருக்கின்றது .- (இது குறித்த ஆதாரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளது.) அவருக்கெதிராக சதி செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. உங்களைப்போன்ற பெரியவர்கள் இவ்வாறான நிலைமையினை ஏற்படுத்தாமல் இருப்பதே சாலச் சிறந்தது.

பொய் 11: அண்ணன் சீமான் அவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வேனாம் எனது தில்லு முல்லை அறிந்து என்னை அண்ணன் துரத்தி விட்டாராம் (ஏன் இந்த நயவஞ்சக குணம்?)

உண்மை:  நான் விடுதலையாகி ஒரு வருடம் மட்டுமே சென்னையில் தங்கி இருந்தேன். அக்காலப்பகுதியில் முக்கிய தேவைகளின் அடிப்படையில், அண்ணன் சீமான் அவர்கள் அழைத்தால் மட்டுமே சந்திக்க செல்வதுண்டு..!! ஒரு சில காரணங்களுக்காக நானே தான் அங்கிருந்து ஒதுங்கி இருந்தேன் என்பது அண்ணன் சீமானுக்கு தெரியும். என்னைத் தொடர்பு கொள்வதற்கு மூன்று வருடங்களாக எவ்வாறான முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே தற்போதும் உள்ளது. எனவே நீங்கள் செய்யும் போலிப்பிரச்சாரங்கள் எதுவும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை புரிந்து கொண்டு அண்ணன் சீமான் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்காமல் தாங்கள் ஒதுங்கி கொள்ளவதே நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும்.. அண்ணன் சீமானை அமைப்பு சார்ந்து முதலில் தொடர்பு கொண்டது யார் என்பது தொடக்கம் அவருடன்  தொடர்ந்து பயணித்தது வரையான ஆட்கள் எல்லோரும் தற்போதும் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் என்பது அண்ணனுக்கு தெரியும். கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்யாமல் தாங்கள் இருந்தாலே இனத்துக்கு செய்கின்ற  மாபெரும் செயலாக அமையும் .

என்னை மிரட்டினால் உங்களின் காலடியில் இருப்பேன் என்றும் இல்லையென்றால் கடத்தி கொலை செய்வேன் என்றும் கதை அளந்துள்ளீர்கள். உங்கள் வயதுக்கேற்ப உங்கள் செயற்பாடுகளை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெளிப்படுத்துகின்ற வீர வசனங்களில் அல்ல உங்கள் மீதான மரியாதை . நீங்கள் பிறரை அணுகும் குணத்தில் தான் உள்ளது .

நன்றி 
சிரஞ்சீவி

  • Replies 50
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

குறிப்பு : இந்த பதிவை இட்டமைக்காக எனது பூர்வீகம் எல்லாம் கிளறி எடுத்து பதிவிடும் உறவுகளுக்கு வணக்கம்.

எனது நண்பனும் கூட களமாடிய நண்பனுமான சிரஞ்சீவியின் குரல் வெளிவரவேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் இந்த பதிவே தவிர வேறெந்த உள்நோக்கம் எனக்கு இல்லை. மேலே உள்ள காணொளி கூட தடா சந்திரசேகர் என்ன பேசினார் என்பதற்காகத்தான் இணைக்கபட்டிருக்கிறது. 

சீமானின் பக்தி மிகுதியில் வலைத்தளங்களில் காணொளி பதிவிடும் உறவுகள், தங்கள் உயிரைக்கொடுத்து போராடிய தளபதிகளுக்கு கிட்டவும் நிற்க முடியாது, ஆனால் எழுதும் கருத்துகளில் காட்டும் தேசிய பாசம் பிழையான் பாதைக்கு இட்டுசெல்லும்.

சிரஞ்சீவி, பொட்டம்மானின் நிர்வாகத்தில் இந்தியாவுக்கு பொறுப்பாக இருந்த முக்கிய தளபதி. சீமானை பொட்டம்மானை சந்திக்க வைப்பதை ஒழுங்குபடுத்தியவர். 

அண்மையில் சீமானின் ஒலிப்பதிவில் (திராவிட கும்பலினால் மிமிக்கிரி செய்ததாக மூடி மறைத்த) குறிப்பிடப்படும் பொட்டம்மானின் தளபதி. 

சீமானின் வன்னி நடமாட்டங்களை ஒழுங்குபடுத்திய கண்காணித்த புலனாய்வு பொறுப்பாளர்.

இனி உங்கள் தெரிவுக்கே விட்டுவிடுகிறேன்.

யார் வேணுமென்றாலும் என்னையோ, சிரஞ்சீவி மாஸ்ரரையோ, பொட்டம்மானையோ துரோகி என்றாலும், திராவிட செம்பு என்றாலும், ரோவின் கையாள் என்றாலும், கோத்தாவின் பணத்தில் இயங்குவது என்று முழங்கினாலும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் நாங்கள் உங்களுக்காக போராடியவர்கள், இன்னும் போராடிக்கொண்டே இருப்போம். 

ஒவ்வொரு நாள் காலையிலும் மண்மீது ஆணையிட்டு சத்தியபிரமாணம் செய்ததை உயிர் போனாலும் விட்டுக்கொடுக்கபோவதில்லை.

நன்றி 

பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பகலவன் உனக்கு காலம் பிழையடா. பேசாம இரு ராசா.

  • தொடங்கியவர்
1 minute ago, shanthy said:

தம்பி பகலவன் உனக்கு காலம் பிழையடா. பேசாம இரு ராசா.

காலப்பிழைக்காக காத்திருக்க முடியவில்லை. நேற்று அம்மானுக்கு இன்று சிரஞ்சீவிக்கு. 

கூட களமாடியவனை கொச்சைபடுத்துவதை பார்த்து சும்மா இருக்கும் மனப்பக்கும் இன்னும் வரவில்லை. புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறோம். இதன் பாதை போய் சேரும் இடம் என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்தமையால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

சிரஞ்சீவியின் பதிவை எந்த ஊடகம் வெளிப்படுத்தும் என்று தெரியவில்லை. யாழ்களம் போராடியவர்களின் பதிவை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் தான் பதிவிட்டேன். சிரஞ்சீவி மாஸ்ரருக்கு நிறைய நன்றி கடமைப்பட்டு இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

தகுந்த தலைமையற்று

வழிகாட்ட எவருமற்று

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில்

அவரவருடன் அந்தந்த இடங்களில் சேர்ந்தவர்களுடன் கைகோர்த்து செயற்படும் 

இன்றைய தமிழினத்தின் இரண்டும் கெட்டான் நிலையில்

எமக்குள் புரிதலும் விட்டு கொடுப்புகளும் சில நேரங்களில் கண் காது வாயை மௌனமாகவே தாண்டி செல்தலும் கூட தேவையாக இருக்கிறது

நீண்ட தூர பயணத்தில் இதுவும் கடந்து போக கடவது.…....

Edited by விசுகு
பிழை திருத்தம்

3 hours ago, விசுகு said:

நீண்ட தூர பயணத்தில் இதுவும் கடந்து போக கடவது.…....

போய்ச் சேரப் போகும் இடம் புதைகுழி என்று தெரிந்த பின் பயணத்தில் சேர்ந்து நடக்க நினைக்கும் எம்மவர்ளுக்கு அது பற்றி தெரியப்படுத்துவது காலத் தேவை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகலவன் said:

எனது நண்பனும் கூட களமாடிய நண்பனுமான சிரஞ்சீவியின் குரல் வெளிவரவேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் இந்த பதிவே தவிர வேறெந்த உள்நோக்கம் எனக்கு இல்லை. மேலே உள்ள காணொளி கூட தடா சந்திரசேகர் என்ன பேசினார் என்பதற்காகத்தான் இணைக்கபட்டிருக்கிறது. 

ஐயா பகலவன், உங்களின் தளபதி சிரஞ்சீவி அவர்களுக்கும் வணக்கம்.

பகலவன் நீங்கள் ஒன்றை குறிப்பிட்டுள்ளீர்கள் சிரஞ்சீவி பொட்டம்மானின் இந்திய பொறுப்புக்கு தளபதி என்பது உண்மை. ஆனால் நீங்கள் இதில் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமகாலத்தில் தலைமையோடு மிக அருகில் வேறு சிலரும் இருந்தார்கள் அவர்களின் நம்பிக்கை உரியவர்கள் உலகம் பரப்பி தங்களது வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுக்கு ஒரு விடயத்தை குறிப்பிடுகிறேன் உங்களோடு இருந்த சக தளபதிகள், இரண்டாம் கட்ட தளபதிகள் இன்னும் வெளிநாடுகளிலும், உள்நாட்டில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் உங்களுக்குத் தெரிந்த எனக்குத் தெரிந்த சிலர் அதே நந்திக்கடல் வெளியில், வாவட்டி, கள்ளியடி, கரைச்சி குடியிருப்பு  இன்னும் சில பகுதிகளில் சில நலனுக்காக உருமாறி என்னவெல்லாம் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

ஆனால் அவர்கள் ஆடிய அந்த கொடூர ஆட்டம் சிங்களச் சிப்பாய்கள் கூட நடந்து கொள்ளவில்லை என ஒரு சிங்கள சிப்பாய் குறிப்பிடுகின்றார். இன்னும் உயிரோடு இத்தாலி நாட்டில் அதே தடயங்கள் உடன் இருக்கின்றார்.

“உங்கள் ஞாபகத்திற்கு திரு சுப்ரமணிய சுவாமி சில ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டார் இத்தாலியில் புலிகளின் உளவு தளபதி.”

சிங்களம் தனது தேவைகள் முடிய அவர்களை உரிய இடத்துக்கு அனுப்பி விட்டார்கள். அதில் ஒரு சிலர் இன்னும் உயிருடன் இந்திய நிலப்பரப்பிலும் மலேசிய இலங்கை தழுவி ஒரு கட்டமைப்பை உருவாக்கி தங்களின் சொத்துகளை நிர்வகித்து வருகின்றார்கள்.

அதே நபர்கள் ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் உள்ள பழைய, தப்பியோடிய முன்னாள் பொட்டு அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஒன்றாகச் சேர்ந்து இன்னும் என்னவோ எல்லாம் சுயநலத்துக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். யார் என்ன என்பது பிரித்தறிவது மிக மிக கடினம்.

உங்களின் தேடலுக்காக இருவர் சம்பந்தமான தகவல்களை தருகிறேன் அவர்களைப் பற்றி நீங்களே ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.    Lt. Col Tuan Nizam Muthaliff

2.    Kagusthan Ariaratnam (https://www.linkedin.com/pulse/typical-terrorist-cell-kagusthan-ariaratnam/)

இந்த இரண்டாம் நபர் புலிகளின் புலனாய்வு அணியைச் சேர்ந்தவர். முதல் யாழ்பாணம் இடப்பெயர்வுக்கு பொறுப்பாளர்.

அவர் அதே யாழ்ப்பாணத்தில் முன்னரங்க அரண்கள் அதனூடாக சிங்கள புலனாய்வாளர்கள் அவரோடு முதலாம் நபரோடு சேர்ந்து Anuruddha Ratwatte தலைமையில் முதல் யாழ் இடம்பெயர் விற்கு காரணமான புலி புலனாய்வு பொட்டம்மானின் அதி நம்பிக்கைக்குரிய தளபதி.

2006 ஆண்டில் ஒரு மறுசீரமைக்கப்பட்ட ஒரு  மறு சீரமைக்கப்பட்ட புலம்பெயர் தேசங்களில் சிங்கள அரசு ஒரு புலனாய்வு கட்டமைப்பை உருவாக்கி விற்றுள்ளது விட்டுள்ளது.

“உங்கள் ஞாபகத்திற்கு திரு சுப்ரமணிய சுவாமி சில ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டார் இத்தாலியில் புலிகளின் உளவு தளபதி.”

அது புலம்பெயர் தேசங்களில் தமிழ் செயற்பாட்டாளர்களின் துல்லியமான தகவல்களை சேகரிப்பதற்காக உருவாக்கியது, அதன் படிமுறை வளர்ச்சியில் அது விடுதலை என்கின்ற உணர்வோடு செயல்படுகின்ற அனைவரையும் பயங்கரவாதி, புலி என்ற முத்திரையோடு சேகரிப்பை வைத்துள்ளது.

உங்கள் ஞாபகத்துக்குகாக புலிகளின் ஆயுத மௌனிப்பின் வந்த நாள் புலிகளின் கட்டமைப்புகள் கைவிடப்பட்ட நாள். உங்களுக்கு தெரிந்தது போலவே அவரவர் தெரிந்த தங்களின் அயல்நாட்டு உள்நாட்டு தொடர்புகள் மூலமாக சரணடைதல் அல்லது அவர்களின் சுய முடிவுக்காக விடப்பட்டது. பிரதான காரணம் இந்திய புலனாய்வாளர்களின், இலங்கை அரசினுடைய செல்வாக்கு புலிகளின் மத்திய தலைமை வரை பரவி இருந்தது., தலைமைக்கு இருந்த ஒரே தெரிவு தலைமை கடைசி வரை கொண்டு உறுதியோடு மண்ணில் வாழ்வது, போராடி விழுவது இரண்டுமே நடந்தது.

தமிழக இளைஞர்களின் உணர்வுகளோடு அவர்களின் அரசியலை நாங்கள் சற்று கவனிப்போம். அதில் ஒரு இடங்களையும் நாங்கள் நிரப்ப வேண்டிய தேவை இல்லை. அவர்கள் தங்களுக்கான தலைவரையும் கொள்கைகளையும் வைத்துக்கொள்வார்கள்.

எங்களுடைய சாமர்த்தியம் இப்பொழுது மேலை நாடுகளிலும் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் கபடத்தனமான செய்திகளை மேலைத்தேய நாடுகளுடைய வடிவிலேயே அவர்களை அணுகி புரியவைப்பது, புரிய வைத்துக் கொண்டுள்ளோம். அதன் விளைவு டெல்லி சவுத் பிளாக் இப்பொழுது எங்களை தேடுவோரின் பட்டியலில் வைத்துக் கொண்டுள்ளது. இதில் சிந்தனைக்குரிய ஒவ்வொரு தமிழகம் தமிழ் குடியும் அடங்கும். உங்களுடன் கூட இருந்தவர்களை நம்ப முடியவில்லை.

காலம் வரும்போது இன்னும் விரிவாக மிக நுணுக்கமாக மாத்தையா தொடக்கம்  2009 அதன் பின் நடந்த விடயங்களை நான் உங்களுடன் யாழ் களத்தில் பதிவிடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தகுந்த தலைமையற்று

வழிகாட்ட எவருமற்று

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில்

அவரவருடன் அந்தந்த இடங்களில் சேர்ந்தவர்களுடன் கைகோர்த்து செயற்படும் 

இன்றைய தமிழினத்தின் இரண்டும் கெட்டான் நிலையில்

எமக்குள் புரிதலும் விட்டு கொடுப்புகளும் சில நேரங்களில் கண் காது வாயை மௌனமாகவே தாண்டி செல்தலும் கூட தேவையாக இருக்கிறது

நீண்ட தூர பயணத்தில் இதுவும் கடந்து போக கடவது.…....

3 hours ago, விசுகு said:

தகுந்த தலைமையற்று

வழிகாட்ட எவருமற்று

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில்

அவரவருடன் அந்தந்த இடங்களில் சேர்ந்தவர்களுடன் கைகோர்த்து செயற்படும் 

இன்றைய தமிழினத்தின் இரண்டும் கெட்டான் நிலையில்

எமக்குள் புரிதலும் விட்டு கொடுப்புகளும் சில நேரங்களில் கண் காது வாயை மௌனமாகவே தாண்டி செல்தலும் கூட தேவையாக இருக்கிறது

நீண்ட தூர பயணத்தில் இதுவும் கடந்து போக கடவது.…....

காலம் தன் கடமையை செய்யும்.....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகலவன் said:

குறிப்பு : இந்த பதிவை இட்டமைக்காக எனது பூர்வீகம் எல்லாம் கிளறி எடுத்து பதிவிடும் உறவுகளுக்கு வணக்கம்.

பகலவன் போராட்டத்தில் ஈடுபடவில்லை என லொஜிக்காக முன்னர் யாழ் களத்தில் நிறுவப்பட்டிருந்ததே!😃

17 hours ago, நிழலி said:

போய்ச் சேரப் போகும் இடம் புதைகுழி என்று தெரிந்த பின் பயணத்தில் சேர்ந்து நடக்க நினைக்கும் எம்மவர்ளுக்கு அது பற்றி தெரியப்படுத்துவது காலத் தேவை

மிக சுருக்கமான, ஆனால் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை மிக பெரிய பொருள் தரும்  கருத்து இது. 

சமாதான காலத்ததில் பேச்சுவார்ததையில் சிக்கல்கள் ஏற்பட்டு நாடு யுத்தத்தை நோக்கி மெதுவாக நகர்கையில்,  பல ஆய்வாளர்கள் தலைமையை குஷிப்படுத்தும் நோக்கில் உசுப்பேற்றும் அரசியல் ஆய்வுகளை மேற்கொண்டிருக்க மூத்த அரசியல் ஆய்வாளர் மு . திருநாக்கரசு மட்டும்   இதுபோன்ற சிலேடையான வசன நடைமூலம் தலைமைக்கு மென்மையான எச்சரிக்கைகளை,  தமிழீழ தேசிய தொலைக்காட்சி (NTT)  யின் அரசியல் ஆய்வுகளில் அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது மறைமுக எச்சரிக்கை ஏனோ புரிந்து கொள்ளப்படவில்லை. அதன. முடிவு அனைவரும் அறிந்ததே. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

உங்களுக்கு உடன்பாடு அற்ற விடயம் அல்லது உங்கள் வட்டத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களில் ***** *** முன்னர்

மேலே உள்ள மறுப்பறிக்கையை 

மேலே உள்ள காணோளியை முழுமையாக வாசித்தீர்களா?

கேட்டீர்களா?

இரண்டும் வெவ்வேறானவை

வெவ்வேறு தளத்தில் இருந்து வந்தவை 

காணோளியில் பேசுபவர் ஒரு அமைப்பு சார்ந்தவர் அவரது குறிக்கோள் வேறு

மறுப்பறிக்கை விட்டவர் அதற்கு மாறாக சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கியத்தை எங்கும் குறைத்து மதிப்பிடவில்லை எங்கும் தூற்றவில்லை.

மாறாக அண்ணன் சீமான் என்றும் தேவையான கட்சி நாம் தமிழர் என்றும் தான் முதலில் இருந்து இறுதி வரை சொல்கிறார்.

குறுக்கே புகுந்து கடா வெட்டும் வேலையை கூட மும்புவன்களையும் திறந்து செய்யலாம்

அதனால் தான் ஆரம்பத்திலேயே எழுதினேன் 

இதுவும் கடந்து போகும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2021 at 13:57, கிருபன் said:

பகலவன் போராட்டத்தில் ஈடுபடவில்லை என லொஜிக்காக முன்னர் யாழ் களத்தில் நிறுவப்பட்டிருந்ததே!😃

செம்பு தூக்கிகள் வராதவரை பாதுகாப்பு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2021 at 17:52, நிழலி said:

போய்ச் சேரப் போகும் இடம் புதைகுழி என்று தெரிந்த பின் பயணத்தில் சேர்ந்து நடக்க நினைக்கும் எம்மவர்ளுக்கு அது பற்றி தெரியப்படுத்துவது காலத் தேவை

 ஈழத்தமிழர் எனும் தாயக்கட்டையை உருட்டுகிரார்கள் உருளும் பக்கம் நமக்காக என இவர்களும் நம்புகிறார்கள் ஆனால் கட்டையில் இருப்பது எல்லாம் ஒரே இலக்கமே  பூச்சியம் என்று சத்தமா சொல்லலாம். 

6 hours ago, விசுகு said:

உங்களுக்கு உடன்பாடு அற்ற விடயம் அல்லது உங்கள் வட்டத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களில் ***** *** முன்னர்

மேலே உள்ள மறுப்பறிக்கையை 

மேலே உள்ள காணோளியை முழுமையாக வாசித்தீர்களா?

கேட்டீர்களா?

இரண்டும் வெவ்வேறானவை

வெவ்வேறு தளத்தில் இருந்து வந்தவை 

காணோளியில் பேசுபவர் ஒரு அமைப்பு சார்ந்தவர் அவரது குறிக்கோள் வேறு

மறுப்பறிக்கை விட்டவர் அதற்கு மாறாக சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கியத்தை எங்கும் குறைத்து மதிப்பிடவில்லை எங்கும் தூற்றவில்லை.

மாறாக அண்ணன் சீமான் என்றும் தேவையான கட்சி நாம் தமிழர் என்றும் தான் முதலில் இருந்து இறுதி வரை சொல்கிறார்.

குறுக்கே புகுந்து கடா வெட்டும் வேலையை கூட மும்புவன்களையும் திறந்து செய்யலாம்

அதனால் தான் ஆரம்பத்திலேயே எழுதினேன் 

இதுவும் கடந்து போகும் என்று.

எனது எழுத்து உங்களுக்கானதல்ல. ஆகவே இனிமேல்  கடந்து செல்லும், கடந்து செல்லும்  என்று திருப்பி திருப்பி எழுதாமல் கடந்தே சென்றுவிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, tulpen said:

எனது எழுத்து உங்களுக்கானதல்ல. ஆகவே இனிமேல்  கடந்து செல்லும், கடந்து செல்லும்  என்று திருப்பி திருப்பி எழுதாமல் கடந்தே சென்றுவிடுங்கள். 

எதை கடந்து செல்லணும் 

எதை கடக்கக்கூடாது கடக்க முடியாது என்பது எனக்கு தெரியும் சகோ 

அவ்வளவு பார்த்தாச்சு வாழ்வில்.

சீமான் மற்றும் சிரஞ்சீவி சார்ந்து உங்களுக்கே இவ்வளவு அக்கறை இருக்கும் போது எனக்கு இருக்கக் கூடாதா???

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2021 at 07:22, நிழலி said:

போய்ச் சேரப் போகும் இடம் புதைகுழி என்று தெரிந்த பின் பயணத்தில் சேர்ந்து நடக்க நினைக்கும் எம்மவர்ளுக்கு அது பற்றி தெரியப்படுத்துவது காலத் தேவை

பிறந்த எல்லா மனிதரும் இறுதியில் போய்  விழுவது புதைகுழியில்தான் 
அதுக்காக எல்லா தெருவிலும் வழிகாட்டி பலகைகளில் புதைகுழி  புதைகுழி 
என்று போடுவதுதான் அதி  புத்திசாலித்தனமா?? 

நீங்கள் இன்று எதை எழுதி இருப்பதால் 
தமிழகத்தில் இனி என்ன நடந்தாலும் நீங்கள் இதில்தான் தொங்கிக்கொண்டு 
நிற்கப்போகிறீகள் ... இனி இதுக்கு ஆதரவான செய்திகள் கிடைக்காதா?
என்று ஏங்கிக்கொண்டு இருக்க போகிறீர்கள் அப்படி வரும்போதெல்லாம் 
 வந்து நான் சொன்னது நடக்கிறதே என்று புகழாரம் அடைய போகிறீர்கள்.

தமிழ் இனத்தின் தேவை என்பது இவற்றை கடந்தது 
ஈழ  தமிழர்கள் இலங்கையில் எவ்வாறு உரிமைகளை இழந்தார்களோ 
அதிலும் தீவீரமான முற்றுகை தமிழகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது 
தமிழ் அழிப்பு தமிழ் இன அழிப்பு என்பது எவ்வளவு தீவிரமாகவும் மறைமுகமாகவும் 
இருக்கிறது என்பதை கீழடி ஆய்வுகளுக்கு என்ன நடந்து என்பதை சரியாக வாசித்தாலே புரியும். 

யாழ் களத்தில் சீமானுக்கு எதிராக கருத்து எழுதும் எல்லோருமே 
இதுவரையில் எந்தவிதமான  ஒரு கருத்தியல் காரணங்களோடு எழுதுபவர்கள் இல்லை 
உங்களைப்போலவே எதிராக எழுதியதால் .. இனி அதை தொடர்ந்தும் நம்புவதால் 
இன்று சீமான் குளிக்கவில்லை என்ற தாழ்ந்த தனிமனித வக்கிரகங்களில் இருந்து 
பேசியதில் இருக்க கூடிய எதாவது ஒரு சொற்பிழையில் தொங்கிக்கொண்டு நிற்பவர்கள்தான் 

இது ஒருவிதமான சுயஇன்ப அனுபவம்தான் 
தங்களை தாங்களே தடவி சுகம் கண்டு கொள்ளும் ஒரு சிற்பின்ப 
பொழுதுபோக்குக்கு சொந்த இனத்தின்  எதிர்கால இருப்பை கூட 
தங்களை அறியாமலே அடகு வைப்பவர்கள்தான்.

சீமானின் தர்க்கம் கருத்தியல் தவறானதாக கூட இருக்கலாம் 
மனிதன் பிரபஞ்சம் என்று பார்க்கும்போது நிச்சயமாக சீமானின் கருத்தியலில் 
தவறு  இருக்கிறது  ஒரு தனிமனிதன் எதற்ககா தமிழன் என்று  அடையாளம் பூண்டுகொண்டு 
சீமானை ஆதரிக்க வேண்டும்? நான் மனிதன் அவ்வளவே. 

ஆனால் இனம் என்ற அடையாளத்தை நோக்கி ஒரு மறைமுக அழிப்பே 
நடக்கும்போது சீமானின் கருத்தியல் எங்கு தவறாகிறது? என்பதை ஒரு கருத்தியல் 
மூலமாக எதிர்ப்பவர்கள் யாரும் இங்கு இல்லை .. அவ்வாறு அறிவு உடையவர்கள் 
இப்படியான குப்பைகளை காவி அதில் குளிர் காயப்போவதும் இல்லை.  

சீமானுடைய பாதை புதைகுழி நோக்கியது என்று நீங்கள் எழுதுவது 
உங்களை நீங்களே மகிழ்விக்கும் ஒரு அற்ப இன்பம் தவிர அதில் எந்த 
உண்மையும் இல்லை தொலைநோக்கு ரீதியான பார்வையும் இல்லை.
இருந்து இருப்பின் அதை எழுதி இருப்பீர்கள். அதுக்கு பற்றாக்குறை இருக்கும்போது 
இவ்வாறு எழுதி கொள்ள நேர்கிறது. 

என்னை பொறுத்தவரை எனக்கு சீமானோ .. சீமானின் மாமனோ தேவையில்லை 
எனக்கு என் இனம் வாழ எதிர்கால இருப்பை உறுதி செய்ய ஒரு பயணம் வேண்டும் 
அந்த பயணம் எந்த வடிவில் வருகிறது என்பதை .. துரதிஸ்ட்டவசமாக எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் 
நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு வடிவை பெறமுடியாத ஒரு துர்பாக்கிய நிலை 
எமக்கு எதிரிகளால் உருவாக்கப்படுகிறது. நாம் எதிரிகளின் அழிப்பு வேலைகளில் இருந்து எம்மை 
தற்காத்து கொள்ளவேண்டிய முதன்மை நிலையே அதற்கு முக்கிய காரணம். 

சீமான் தவறு செய்வாரா? 
ஆம் சீமான் எல்லாம் அறிந்த கடவுள் இல்லை தவறு செய்வார் 

சீமானின் அரசியல் தமிழருக்கு நன்மை மட்டுமே தருமா? தீமை இருக்காதா?
தீமை நிச்சயம் இருக்கும் ... தமிழ் இனத்தின் எதிரியின் முதல் இலக்கு சீமான் அல்ல
பிரபாகரன் அல்ல ... தமிழின் இருப்பு. ஆகவே எதிரி நேருக்கு நேர் வெளியில் வராதவரை 
எமக்கான தீதை சீமான் பிரபாகரன் போன்ற முன்னிலையாளர்கள் மூலம் ஏற்படுத்தவே முனைவான் 
காரணம் அது வெகு எளிதான வேலை. அவனுக்கு இன்னொரு சீமானை உருவாக்கி இருவரையும் மோத விடுவதன்  மூலமே அது எளிதாகிவிடும். 

அரசியல் பலம் 
பண பலம் 
அதிகார பலம் 
இவை எதுவும் அற்ற சீமானால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ 
அதில் இருந்து சீமான் 1000 மைல்களை கடந்து வெகுதூரம் பயணித்து விட்டார் 
சீமானுக்கு இனி சீமான் செத்தாலும் வெற்றிதான். அந்த பெரு வெற்றியில் எந்த புல்லையும் இனி யாராலும் 
புடுங்க முடியாது 

தமிழ் இனம் எங்கு பயணிக்கிறது?
எங்கு நின்று கொண்டு இருக்கிறது?
சீமானை எவ்வாறு உபயோகப்படுத்துகிறது?
என்பதுதான் கருத்தியல் வாதம் என்பது .... அதை நான் யாழ் களத்தில் எதிர்பார்ப்பதில்லை 
இப்படி இவற்றை இணைப்பவர்கள் வேறு எங்காவது இருந்தால் கொண்டுவந்து இணையுங்கள்

சீமானுக்கு எதிராக எழுத எமக்கும் ஒரு உந்துதலை அது தரலாம்   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இங்கு உங்களின் கருத்தை தவிர மற்றவர்களின் கருத்தை படிக்கவில்லை காரணம் இந்த தேர்தலில் சீமான் கணிசமான ஓட்டை பெற்றுள்ளார் என்பதையே இவ்வளவு திடீர் எதிர்ப்புக்கள் சொல்லமால் சொல்லுகின்றது எந்த பின்னணியும் இல்லாமல் பணம் இல்லாமல் இரு பெரும் திராவிட கட்சிகளுக்கும் குடைச்சல் கொடுக்க விடுவார்களா அதுதான் ஈழத்தையும்  சீமானையும் பிரித்து விட்டால் அவரின் வளர்ச்சியை தடுக்கலாம் என்று கனவு கண்டு இவ்வளவு வசை பாடல் ஆனால் சீமான் அந்த எல்லையை தாண்டி  10000 அடி  தாண்டி விட்டார் .ஆனாலும் திராவிடம் திரும்ப திரும்ப சீமான் மீது எங்களை வைத்து சீமான் மீது பழி  சொல்லும் இவற்றை விட கடுமையாக சொல்லும் தேர்தல் முடிவுகள் வரும் நேரம் இன்னும் கூடும்  சிலவேளை பிரபாகரனே சீமானை திட்டினார் என்று கூட  கொள்ளுபாடுகள்  வந்தாலும் அதிசயமில்லை இல்லை சீமானுக்கு இரண்டாவது பெண்டாட்டி என்று கூட காவடி துக்குவார்கள் அவரை எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆளை முன்னுக்கு கொண்டு வரணும்  எனும் வன்மம் வருவதை தடுக்க முடியவில்லை முக்கியம் சர்தார் போன்ற தமிழ் எதிரிகள் ஆமைக்கறி என்று கடைவாயில்  எச்சில் ஓட  எள்ளி  நகையாடும்  காணொளியின்  பின் சீமானின் தம்பி யானேன் . 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

சீமானுக்கு ஆதரவான தளம்கள்   subscribers எண்ணிக்கை அதி கூடியது இங்கு சீமானுக்கு எதிராக கம்பு சுற்றுபவர்களால் அல்லது எதிர்க்கும் தளம்களினால் அவற்றை முந்தமுடியாது முடிந்தால் கையோடை கொண்டு வந்து இணையுங்க பார்ப்பம் 😀

சர்தார் எல்லாம் டூ  மச் ஆட்டம் அவரின்  subscribers எண்ணிக்கையே வெறும் 1250 பேர் மட்டுமே அதற்குள் அவர் சீமானை எதிர்கிறாராரம் கேட்கவே சிரிப்பா  வருது .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சர்தார் எல்லாம் டூ  மச் ஆட்டம் அவரின்  subscribers எண்ணிக்கையே வெறும் 1250 பேர் மட்டுமே அதற்குள் அவர் சீமானை எதிர்கிறாராரம் கேட்கவே சிரிப்பா  வருது .

பெருமாள்,

பகலவன், குறித்து கிருபன் சொல்வதுடன், நகரலாம்.

இங்கே சில கேள்விகள் எழுகின்றன.

ஒரு புலி உறுப்பினர், இந்தியாவில், சத்தியமங்களம் காட்டு பகுதியில் ரெண்டு இருபது ஏக்கரில், வெவசாயம் செய்கிறாராம். நம்பும்படியாகவா உள்ளது?

அதுக்கு, சீமானுக்கு எதிராக, திமுக பக்கம் இருக்கும் கொளத்தூர் மணி அண்ணர் உதவியாம். அப்படியானால், தொலைபேசி விடயத்தில் கொளத்தூர் மணி ஊடாக திமுக இந்த விடயங்களில், அரசியல் காரணமாக, சம்பந்தப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம் தானே.

அனைத்தையுமே விடுங்கள், இந்திய அரச, புலனாய்வு அமைப்புகளுக்கு தெரியுமா, தெரியாதா? அல்லது பகலவன், தனது வரலாறையும் அடித்து விட்டு, யாரையாவது சிக்கலில் மாட்டி விடுகிறாரா என்ற கேள்வி வருகிறதே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பெருமாள்,

பகலவன், குறித்து கிருபன் சொல்வதுடன், நகரலாம்.

இங்கே சில கேள்விகள் எழுகின்றன.

ஒரு புலி உறுப்பினர், இந்தியாவில், சத்தியமங்களம் காட்டு பகுதியில் ரெண்டு ஏக்கரில், வெவசாயம் செய்கிறாராம். நம்பும்படியாகவா உள்ளது?

அதுக்கு, சீமானுக்கு எதிராக, திமுக பக்கம் இருக்கும் கொளத்தூர் மணி அண்ணர் உதவியாம்.

அனைத்தையுமே விடுங்கள், இந்திய அரச, புலனாய்வு அமைப்புகளுக்கு தெரியுமா, தெரியாதா? அல்லது பகலவன், தனது வரலாறையும் அடித்து விட்டு, யாரையாவது சிக்கலில் மாட்டி விடுகிறாரா என்ற கேள்வி வருகிறதே.

பகலவன் யாழில் எழுதும் கருத்தாளர்களை  சிறு பிள்ளைகள்  அல்லது அடி  முட்டாள் என நினைக்கிறார் போல் உள்ளது. சமீபத்தில் கூட இலங்கையில் இருந்து சென்றவர்களை சிறப்பு முகாமில் பிடித்து அடைத்து போட்டுள்ளார்கள் கியூ பிரிவு காரணம் அதில் ஒருத்தர் முன்னாள் புலி அதிலும் புணர் வாழ்வு பெற்றவர் இப்படி நிலைமை இருக்க பொட்டரின்  நேரடி ஆள் என்று சொல்லப்படும் சிரஜீவியை விட்டு வைத்துள்ளார்கள் இனி விளங்குபவர்கள் விளங்கி கொள்வார்கள் .

அரசியலில் அல்லது பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மீது ஆயிரம் பேர் விசுவாசியாக இருப்பார்கள் அதேபோல் ஆயிரம் பேர் எதிராளியாக இருப்பார்கள் இதுவழமையான ஒன்று ஆனால் சீமானின் மீது எங்களையும்  விட்டு அந்த எதிர்க்கும் 1000 பேரையும்  விட்டு சிங்களவனும் எதிர்கிறான் இலங்கை முஸ்லீமும்  எதிர்க்கிறார் இப்படி தமிழர்களின் எதிரிகளும் சீமானுக்கு எதிரியாகின்றனர் ஏன் என்று சிந்தித்தால்  உண்மை விளங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2021 at 18:11, விசுகு said:

சீமான் மற்றும் சிரஞ்சீவி சார்ந்து உங்களுக்கே இவ்வளவு அக்கறை இருக்கும் போது எனக்கு இருக்கக் கூடாதா???

அது மாத்திரம் தானா பொட்டம்மாமனின் பிறவி பகையாளிகள் கூட தமிழ்க்கடையில் நின்று சீமான் பொட்டம்மானை திட்டி போட்டாராம் சீமானை விடக்கூடாது என்று வரிந்து கட்டிக்கொண்டு இருக்கினம் லிவர்பூலில் இருக்கும் கருணாவின் பினாமி கடை சீமானின் கொடும்பாவி எரிக்காத கவலையில் இருக்கினம் என்றால் நிலைமை எப்படி இருக்கெண்டு பாருங்கோ 😀 இந்த நேரம் அன்பு தங்கச்சியை களத்தில்  காணவில்லை இருந்து இருந்தால் ஒரு நாலு பக்கம் சூடாக போகும் அளவுக்கு கருணா செய்தி உள்ளது .

மொத்தத்தில் புலியின் பகையாளிகள் அனைவரும் சீமானுக்கு எதிராக நிக்கினம் பொட்டம்மானை பேசியத்துக்காக .

நாளைக்கு இதே ஆட்கள் தலைவரை திட்டியவர்கள்  சீமானுக்கு எதிராக அநேகமா அண்ணெய்  சீமானை திட்டியவர்  அதை என் கண்ணாளை  பார்த்தனான் சூடம் ஏத்தி அடித்து சத்தியம் பண்ண ஆளை ரெடி பண்ணிவிட்டார்கள் அந்த கதை வரும்போது தலைவரின் படத்தை பச்சை குத்தி கொள்வார்கள் போலிலுள்ளது .😁

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

மொத்தத்தில் புலியின் பகையாளிகள் அனைவரும் சீமானுக்கு எதிராக நிக்கினம் பொட்டம்மானை பேசியத்துக்காக .

பொல்லாப்பு இல்லாமல், நமக்கு புரிந்த அளவில், சொல்ல வருவது என்னவெண்டால்....

..... சக்கடத்தார் சறுக்கி விழுந்தாராம் மீண்டும் குதிரை எற முடிவு பண்ணீட்டார்.... சப்பைமூக்கன் வேகம் அப்படி இருக்குது.

கொடுத்த கணவனை தேடிக்கொண்டிருக்கும் அரசியல் வாதி அக்கா, இரண்டு தரம் திருப்பி அனுப்பப்பட்டு, பத்து வருசமா விசாவே கிடைக்காமல், அங்கே போகமுடியாமல், அல்லாடும் சிவாண்ணார், பகலவன் யாரை சொல்லி கட்டுரை போட்டாரோ அவர், கொளத்தூர் மணி எல்லோரும், ஒரு கோட்டில் வருகின்றனர். 

வர மறுத்தவர் விமர்சிக்கப்படுகிறார்.

உள்ள வராம, என்ன கோதாரியும் பண்ணுங்கோ சக்கடத்தார், ஆனால், அனுபவித்த சனம் என்னவோ, சப்பைமூக்கன் பரவாயில்லை என்று தான் நினைக்கும். 

பட்டது போதும்...    

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=3oUgDKePihE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.