Jump to content

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை...


யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை!  

65 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

என் இனிய நண்பர்களே என் புனைப்பெயர் லாலி இந்த இணையத்தோடு இணைந்து பயன்பெற இங்கு வந்துள்ளேன். -

வெறு கருத்துக்கள பெயர்களை குறிப்பிடுவதை தவிர்ப்பது நல்லது- யாழ்பாடி

இது சில தினங்கள் முன்னர் ஒருவர் வேறொரு கருத்துகளத்தை பற்றி கூறிய போது மட்டுறுத்தினர் ஒருவரினால் எச்சரிக்கப் பட்டது. தாயகப்பறவைகள் கருத்துகளம் பற்றி வாதம் நடக்கும் போது இந்த விதி எங்கே போனது? தாயகபறவைகளிளும் கருத்துக்களம் இருக்கிறது அது பற்றியும் கருத்தாடல்கள் நடக்கிரது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோர் விதியா? :D:huh:. தாயகப்பறவைகள் கருத்துக்களால் இந்த திரியில் இத்தனை கருத்து மோதல்கள் நடக்கின்றன. அதையும் கவனிப்பாரில்லை :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜோன் கவார்டிட்ட கேட்க அவர் சொன்னார்" வயலண்ஸ் அகேயின்ஸ்ட் வூமன், அவுஸ்ரெலியா சேயிஸ் நோ" சிட்னி மக்களே இந்த டயலக்கை கேட்டு இருப்பீங்கள் உது தான் என்ட டயலக்கும்..சிட்னியில ஒரு ஆண்பிளை கடவுளுக்கு தான் கோவில் இருக்கும் மிச்ச 3 பொம்பிளைகளுக்கும் கோவில் இருக்கு...ஆனால் ஒரு கோவில்..

அப்ப நானும் வரட்டோ :P

Link to comment
Share on other sites

ஜோன் கவார்டிட்ட கேட்க அவர் சொன்னார்" வயலண்ஸ் அகேயின்ஸ்ட் வூமன், அவுஸ்ரெலியா சேயிஸ் நோ" சிட்னி மக்களே இந்த டயலக்கை கேட்டு இருப்பீங்கள் உது தான் என்ட டயலக்கும்..சிட்னியில ஒரு ஆண்பிளை கடவுளுக்கு தான் கோவில் இருக்கும் மிச்ச 3 பொம்பிளைகளுக்கும் கோவில் இருக்கு...ஆனால் ஒரு கோவில்..

அப்ப நானும் வரட்டோ :P

தெளிவா குழப்பீட்டீங்க, போய்ட்டு வாங்க

Link to comment
Share on other sites

வணக்கம்,

கலைஞன் இணைத்த "யாழ் இணையத்தில் பெண்களின் பரிதாப நிலமை" என்ற தலைப்பு அவருடைய தனிப்பட்ட கருத்து. தன்னுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு (கருத்துக்கள விதிமுறைகளை மீறாத வகையில்) அவருக்கு முழுச்சுதந்திரமும் இருக்கிறது. அந்தக் கருத்தில் ஏனைய கள உறவுகளுக்கு உடன்பாடில்லையெனின், அத்தலைப்பின் கீழ் எழுதலாம் - விவாதிக்கலாம் (கருத்துக்கள விதிமுறைகளை மீறாத வகையில்). அதற்கான முழுச்சுதந்திரமும் அனைவருக்கும் இங்குண்டு. அதற்கப்பால் சென்று, "யாழ் இணையத்தில் ஆண்களின் பரிதாப நிலமை" என்ற புதிய தலைப்பைத் தொடங்குவதென்பது விசமத்தனமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதே தலைப்பை கலைஞன் தொடங்குவதற்கு முன்னர் தொடங்கியிருந்தால் - அது நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. ஆகவே, அத்தலைப்பு நீக்கப்பட்டது என்பது பாகுபாட்டினால் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இனி இத்தலைப்புத் தொடர்பான சில கருத்துக்கள்:

யாழ் கருத்துக்களம் ஒரு சுதந்திரமான கருத்துத்தளம். அனைவரும் இங்கு கருத்துக்களை முன்வைக்கலாம். சுதந்திரம் என்று இங்கு குறிப்பிடப்படுவது கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக :huh: . கருத்துக்கள விதிமுறைகளில் எங்கும் ஆண், பெண் போன்ற எந்தப் பாகுபாடுகளும் பார்க்கப்படவில்லை. பாகுபாடு பார்த்து எந்த நிர்வாக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

கிருபன் குறிப்பிட்டது போல் சமூகத்தில்/உலகத்தில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளதோ - அதையேதான் யாழ் கருத்துக்களம் பிரதிபலிக்கிறது. அதேநேரத்தில், யாழ் கருத்துக்களத்தில் இணைந்துள்ள பெண் உறுப்பினர்களுடனான ஏனைய சக உறவுகளின் அணுகுமுறை பெரும்பான்மையாக (!) நட்புடனும் புரிந்துணர்வுடனுமே இருந்திருக்கிறது - தொடர்கிறது. இது எனது வாசிப்பில் நான் கண்டறிந்த விடயம்.

இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் யாவும் கருத்துக்கள உறுப்பினர்களின் சொந்த(?) கருத்துக்கள். அதற்கு "யாழ் கருத்துக்களம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது" என்பது கருத்துக்கள விதிமுறையில் உள்ள விடயம்.

யாழ் இணையத்தில் சில காலங்களாக பெண்கள் மீதான கீழ்வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது...

1. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை கிளறுதல்

2. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை குறிப்பிட்ட ஒரு செய்தித் தலைப்புடன் ஒப்பிட்டு கதைத்தல்

3. கருத்து எழுதும் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து தாக்குதல்

4. தனிப்பட்ட பெண்ணிற்கு அறிவுரை கூறுவது போல் கூறிக்கொண்டி உண்மையில் பலர் முன்னிலையில் அந்தப் பெண்ணை நையாண்டி செய்தல்

இப்படியான நிலை யாழில் இருப்பது உண்மை. ஆனால், அது ஆண்-பெண் பாகுபாடு பார்த்து நடப்பதில்லை என்பதுவும் உண்மை. இவற்றுக்கெதிராக கருத்துக்கள நிர்வாகம் கருத்துக்கள விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

யாழ் இணையத்தில் சில காலங்களாக பொதுப்படையில் பெண்கள் மீது கீழ்வரும் தாக்குதல்கள் நடக்கின்றது....

1. பெண்வர்க்கத்தை நையாண்டி செய்து கவிதை எழுதி ஒட்டுதல்

2. குறிப்பாக உலகச் செய்திகளில், உலகில் எங்காவது ஒரு மூலையில் நடைபெறும் ஆண்கள் சார்பான ஒரு சம்பவத்தை இணைத்துவிட்டு பின் அதை வைத்து பெண்கள் மீது தாக்குதல் செய்தல்

இது கருத்துக்கள விதிமுறைகளை மீறாதவகையில் நடக்கும்போது கருத்துக்கள நிர்வாகம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டியுள்ளது. எனவே, அக்கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனின் - அதற்கான உங்கள் எதிர்வினையை முன்வைப்பது சிறந்தது.

யாழ் இணையத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் நடப்பதால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள்...

1. யாழ் இணையத்தில் பெண்கள் இணைவதற்கு தயக்கம் காட்டுதல்

2. யாழ் இணையத்தில் பெண்கள் கருத்து எழுதுவதற்கு தயக்கம் காட்டுதல்

3. யாழ் இணையத்தில் உள்ள பெண் கள உறவுகள் இணையத்தில் இருந்து விலகிச் செல்லல்

3. யாழ் இணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் தனிப்பட்ட பெண்களிற்கு ஏற்படும் மன உலைச்சல்கள் மற்றும் அவமானங்கள்

பொதுவாகவே பெண்கள் பொதுவிவாதங்களில் பங்குபற்றுவது குறைவு. அவர்கள் தமக்குள்ளாக ஒரு தயக்கத்தையும் - பயத்தையும் கட்டியெழுப்பியுள்ளார்கள். இது தமிழ்ச் சமூகம் சார்ந்த வெளிப்பாடு. அதற்கு யாழ் கருத்துக்களமும் அதன் போக்கும் தான் காரணம் என்பது எந்தளவு சரியென்பது தெரியவில்லை. பெண்கள் துணிவுடனும், தன்நம்பிக்கையுடனும், தயக்கமின்றியும் கருத்துக்களத்தில் இணையலாம் - கருத்தாடல்கள் செய்யலாம். அதற்கு பெண்கள் தாம் தான் தயாராக வேண்டும்.

யாழ் இணையத்தில் பெண்கள் மீதான தாக்குதல்களை நிருவாகம் தடுக்கும் வழிகள்...

1. யாழ்பிரியா தவிர மோகன், வலைஞன், யாழ்பாடி, இராவணன், மதன் மற்றும் இணையவன் அனைவரும் ஆண்கள். இங்கு மட்டறுத்துனர்களின் ஆண்: பெண் விகிதாசாரம் 6:1 என்ற விகிதத்தில் இருக்கின்றது. எனவே, இந்த ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்துவதோடு உடனடியாக இரண்டு பெண் மட்டறுத்துனர்களை யாழ் களத்தில் நியமிக்க வேண்டும். மட்டறுத்துனர்களின் ஆண்:பெண் விகிதாசாரம் சமநிலைப்படுத்தப்படும் வரை இனிமேல் மேலதிக ஆண் மட்டறுத்துனர்களை நியமிக்ககூடாது.

இங்கு மட்டுறுத்துனர்களை இணைக்கும் போது ஆண் பெண் பாகுபாடு பார்த்து இணைப்பதில்லை. :D

2. பெண்களை பொதுவில் நையாண்டி செய்யும் ஆக்கங்கள் யாழ் இணையத்தில் இணைக்கப்படுவதை தடை செய்தல் அல்லது அவ்வாறு இணைக்கப்பட்டவற்றை அகற்றுதல்

முன்னர் குறிப்பிட்டது போன்று ஒருவர் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு முழுச்சுதந்திரமும் இங்குள்ளது. அது விதிமுறைகளுக்குட்பட்டதாக இருப்பின் - அதை அகற்றுவதற்கு நிர்வாகம் துணியாது.

3. யாழ் இணையத்தில் கருத்து எழுதும் பெண்களை நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்கி எழுதப்படும் கருத்துக்களை அகற்றுதல்

இது ஆண் பெண் பாகுபாடு பார்த்து செய்யவேண்டியதில்லை. கருத்துக்கள விதிமுறைகளிலும் இப்படியான செயல்கள் பற்றித் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் இணையத்தில் பெண்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களை தவிர்ப்பதற்கு யாழ்கள பெண்கள் செய்யக்கூடியவை...

1. நீங்கள் தனிப்பட்ட அல்லது பொதுப்படையில் பெண்கள் மீது யாழ் இணையத்தில் தாக்குதல் நடாத்தப்படுவதை அவதானித்தால் அதை நிருவாகத்திற்கு ரிப்போர்ட் மூலம் அறிவித்தல்

2. செய்தித் தலைப்புடன் சம்மந்தப்படாத கருத்துக்கள் எழுதுவதை தவிர்த்தல்

3. அரட்டை களத்தில் கருத்து எழுதும் போது சற்று அவதானமாக இருத்தல். நீங்கள் பகிடியாக எழுதும் பதில் கருத்துக்களே பெண்கள் மீது நையாண்டி செய்யப்படும் கருத்துக்கள் எழுதப்படுவதை ஊக்குவிக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்

இதையே நானும் வழிமொழிகிறேன் :) பெண்களுக்கு மட்டுமல்ல - அனைத்துக் கள உறவுகளுக்கும். அதேநேரத்தில் இங்கே இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தவேண்டியுள்ளது. ஒன்று கருத்துக்களத்தில் சக பெண் உறுப்பினர் மீதான தாக்குதலா - அல்லது - பொதுவில் பெண்கள் மீதான தாக்குதலா என்பனவே அவை.

தமிழ்த் தேசியத்தை மையப்படுத்தி யாழ் இணையம் செயற்படுவதாக பலர் கூறுகின்றார்கள். ஆனால், தமிழீழத்தில் பெண்களிற்கு கொடுக்கப்படும் கெளரவம், சமத்துவம் யாழ் இணையத்தில் கொடுக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். தமிழ்த்தேசியம் என்று கூறும் போது அங்கு பெண்களின் பங்கு ஆண்களிற்கு சரி சமனாகக் காணப்படுகின்றது. எனவே, யாழ் இணையத்தில் தமிழ்த்தேசியதிற்கு எதிரான கருத்துக்கள் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது போல் யாழ் இணையத்தில் பெண்களிற்கு எதிரான கருத்துக்கள் எழுதப்படுவதும் தடை செய்யப்படவேண்டும்.

முன்னர் குறிப்பிட்டதையே மீண்டும் குறிப்பிடுகிறேன். யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் கருத்துக்கள உறுப்பினர்களின் கருத்துக்கள். அவற்றுக்கு யாழ் கருத்துக்களம் பொறுப்பேற்காது. யாழ் இணையம் பெண்களை சமத்துவத்தோடே நோக்குகிறது. கருத்துக்களத்தில் இருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்தியல் அடிப்படைகள் இருக்கலாம். அவற்றை அவர்கள் கருத்துக்களத்தில் கருத்துக்களாக வெளிப்படுத்தலாம். அது சமூகத்தின் வெளிப்பாடு. எந்தவகையில் யாழ் இணையம் சமத்துவமாக நோக்கவில்லை என்று கருதுகிறீர்கள்? பெண்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வைக்க தடையேதுமுள்ளதா? பெண்களின் கருத்துக்கள் எந்தக்காரணமுமின்றி பெண்கள் என்பதால் மட்டும் நீக்கப்பட்டுள்ளனவா? பெண் உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களுக் எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையா?

கருத்துக்களத்தில் பெண்கள் பொதுவிவாதங்களில் பெருமளவு கலந்துகொள்வதில்லை என்பது உண்மைதான். அதற்கு அவர்கள் தனிப்படத் தமக்குள் கொண்டிருக்கும் தயக்கமே காரணம். அத்தோடு பெரும்பான்மையான பெண் உறுப்பினர்கள் இளைஞர்கள். ஆண் உறுப்பினர்களோடு ஒப்பிடும்போது தனிநபர் மீதான தாக்குதலை பெண் உறுப்பினர்கள் செய்வது மிக மிகக் குறைவு. அந்தவகையில் அவர்கள் மிகப்பொறுப்புணர்வோடு நடந்துகொள்கிறார்கள்.

யாழ் நிர்வாகம் அனைவருக்கும் ஒன்றை மறுபடியும் தெளிவுபடுத்திக்கொள்கிறோம

Link to comment
Share on other sites

அடுத்து, தாயகப்பறவைகளின் ஒவ்வொரு மாத இதழும் வரும்போது அதுபற்றி யாழ் கருத்துக்களத்தில் அறியத் தரப்படுகிறது. அது அவர்கள் தமது ஆக்கங்கள் பற்றிய கருத்துக்கள உறவுகளின் ஆக்கபூர்வமான விமர்சனத்தை வேண்டித்தான் செய்கிறார்கள். அதை நாம் விளம்பரமாக நோக்கவில்லை. யாழ் வழிகாட்டி பகுதியும் அதற்கானதாகத்தான் உள்ளது. அதில் எந்தத் தவறும் இருப்பதாக கருத்துக்கள நிர்வாகம் கருதவில்லை. தாயகப்பறவைகளை கருத்துக்கள உறவுகளின் கூட்டுவெளிப்பாடாகவே நாம் பார்க்கிறோம். எனவே, இதுதொடர்பாக இனியும் வீண் பிரச்சனைகளை வளர்க்காது இத்தோடு முடித்துக்கொள்வது நல்லது.

அது என்ன நிதர்சனம், ரிஷியின் பரபரப்பு போன்ற இனையங்களை பற்றி கேவலமாக விமர்சனம் வைக்கும் போது மட்டும் 100% கருத்து சுதந்திரத்தை கடைபிடித்த மட்டுநிறுத்தினர்மார் தாய்கபறவை என்றது நாகரிகம் பண்பாடு என்று எமக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை போடுவதை எப்படி நியாயப்படுத்தலாம்???????

தாயகப்றைவகள் பற்றிய தலைப்பில் டன் எழுதிய கருத்தில் தப்பு ஏதும் இருபதாக தெரியவில்லை அங்கு பண்பாடு அற்ற முறையில் ஏதுமே எழுதப்படவில்லை( நிதர்சனம், பரபர்ப்பு,மற்றும் அருள் வேல்ஸ்.) போன்றோர்களின் ஆய்வுகளை நக்கல் நயாண்டி செய்தது போல. பிறகு ஏன் எதோ டன் தாயகறவைகளை ஏதோ மானபங்க படுத்தியது போல துள்ளி குத்தித்து கொண்டு அதுக்க உப களபொறுப்பாளரும் தனது பொண்ணான நேரத்தை விணாக்கி கொண்டு.....................................

Link to comment
Share on other sites

நன்றி வலைஞன் அண்ணா உங்கள் தெளிவான விளக்கத்துக்கு.

நீங்களும் யாழ் கருத்துக்கள நிர்வாகத்திடமிருந்து பெண்கள் என்பதால் சலுகைகளை எதிர்பார்க்கிறீர்களா? பெண்கள் என்பதால் பரிதாபமாகவும் - அனுதாபத்தோடும் பார்க்கப்படவேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படியென்றால் - தயவுசெய்து மன்னிக்கவும். இன்றுவரை காலமும் யாழ் கருத்துக்களத்தில் பெண்களை ஆணுக்கு நிகரெனத்தான் நோக்குகிறோம். துணிவுள்ளவர்களாகத்தான் நோக்குகிறோம். நீங்கள் சமத்துவமாக ஏனைய கள உறுப்பினர்களால் நடத்தப்படவில்லை என்று நீங்கள் கருதினால் - அதற்கெதிரான உங்கள் கருத்துக்களை வைப்பதன் மூலம் தான் அதை மாற்றிக்கொள்ளலாம். அனுதாபங்களும் சலுகைகளும் எதையும் மாற்றிவிடப்போவதில்லை - அது மேலும் மேலும் உங்களை பலவீனமானவர்களாக்கும் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்
.

நான் ஒரு பெண் என்ற ரீதியில் இக்கருத்தை முன் வைக்கின்றேன். ஒருபோதும் யாழ்களத்தில் பெண்ணுக்கு சலுகை தாங்கோ எம்மை பரிதாபமாக பாருங்கள். பெண்ணுக்குதான் முதலிடம் இப்படி எல்லாம் கேட்க போவதில்லை. கருத்தை கருத்தால் வெல்லும் திறமை பெண்களிடம் இருக்கு. இதைத்தான் சக பெண் உறுப்பினர்களும் சொல்வார்களேன நம்புகின்றேன். பெண்கள் ஒன்றும் பலவீனமானவர்கள் இல்லை என்பது யாவரும் அறிந்த உண்மையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் சாரின் கள விதிக்குட்பட்ட விளக்கம் சரி..??!

ஆனால் ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியல்ல. தாயகப்பறவைகள் மாத சஞ்சிகையை இங்கு முன் வைக்கிறது விமர்சனத்துக்குத்தான் என்பது பகுதியான உண்மையே... தவிர அதில் வலைஞன் சார் மறுக்கிற விளம்பர நோக்கம் இல்லை என்று கூறிட முடியாது. அதை அவரால நிரூபிக்கவும் முடியாது.

காரணம்.. யாழில வாறங்களும் பார்க்கட்டும் என்றும் தான் இணைப்பைத் தருகினம். விமர்சனத்தை எதிர்பார்க்கிறவங்க அங்கையே வாறவங்கட்ட மட்டும் எதிர்பார்க்கலாம் தானே..??!

இதைத் தவறு என்று சொல்லேல்ல. வரவேற்கத்தான் வேணும். ஆனால் வலைஞன் சார் பகுதியாத்தான் உண்மைகளை ஒப்புக் கொள்ள முனைகிறார் என்பது கொஞ்சம் வெளிப்படுகிறது...!

தாயகப்பறவைகளும் அதை ஒத்துக் கொள்வார்கள். காரணம்.. தாயகப்பறவைகளின் அடிநாதமே யாழ் தான்..! யாழ் அதற்கு விளம்பர களமாவும் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அப்படி மறுப்பார்கள் என்றால் தாயகப்பறவைகள் நன்றி மறந்தவர்கள்..என்றாவர்..! :huh:

Link to comment
Share on other sites

சாணக்கியன் பல கருத்துக்களை ஒரே படத்தில் அருமையாக உள்ளடக்கி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

பலரும் நட்புறவாகவே கருத்தாடலில் ஈடுபடுவதாகவே நான் நினைக்கிறேன்.

இது தலைப்புக்கு சம்பந்தமில்லாத ஆனால் மேலே பலரும் கிண்டி கிளறும் விடயங்கள் பற்றியது

இந்த தலைப்பில் பழைய விடயங்களை கிண்டி ஏன் அவை மேலே வருகிறன என புரியவில்லை? :huh:

நாரதர் அந்த கவிதையை நான் இணைத்ததாக சொல்கிறீர்கள்? :lol: இணைத்தது நீங்களல்லவா?

//முன்பு இன்னொரு பகுதியில் எழுதப்பட்டது.

................................................................................

....

எழுதப்பட்டது: செவ்வாய் புரட்டாதி 27, 2005 5:07 pm Post subject:

--------------------------------------------------------------------------------

பஸ்சில் பயணிக்கும்

இருள்பிரியா விடிகாலையில்

பொழியத்தொடங்கும் மழையில்

காளான்களைப்போல

வாழ்வின் அழகிய கணங்கள்

முளைக்கத் தொடங்கலாம்

மழையில் நனைந்தபடி

ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்

அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்

அவசர அவசரமாக

உங்கள் கலாச்சார முகமூடிகளை.......

http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html

உங்கள் பார்வைக்கு

இதை வரைந்தவர் DJ தமிழன்.

சில வரிகளை நீக்கியுள்ளேன். இணைப்பில் சென்று

முழுமையான கவிதையை படிக்கலாம். -இராவணன் //

http://www.yarl.com/forum/index.php?showtopic=6700&st=60

மேலே அந்தத் தலைப்பில் டிசேயின் கவிதை களத்தில் இன்னொரு இடத்தில் போடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.எனது நினைவின் படி அதனை நீங்கள் தான் போட்டதாக எண்ணுகிறேன்.அது தவறென்றால் மன்னிக்கவும்,ஆனால் அந்தக் கவிதை நான் களத்தில் போட முன்னர் வேறு ஒருவரால் இணைக்கப்பட்டிருந்தது.

(அதற்காக அந்த கவிதையின் பேசு பொருளில் நான் கொண்டிருக்கும் உடன்பாட்டை கேள்விக்குள்ளாக்க தேவையில்லை)

அந்த விடயமும் கவிதையும் மீள வரவேண்டிய அவசியம்? :lol: வெண்ணில சொன்னதுக்கு என்பீர்கள். ஆனால் அந்த தலைப்பு முழுமையும் பார்த்தும் வெண்ணிலாவும், நீங்களும் பிரச்சனை பட்டதை காணவில்லையே? :rolleyes: ?

//சரி சுபா சொன்ன போல உங்கள் வீட்டு வரவேற்பறையில் இக்கவியை போஸ்ரல் அடித்து ஒட்டி வையுங்களன் ஆகா கலையம்சம் பொருந்திய கவி என எல்லோரும் ரசிக்க்றார்களா என பார்ப்போம். என்ன என்ன எங்கெங்கு எப்படி எப்படி பாவிக்கணும் என்பது தெரியாதா?//

http://www.yarl.com/forum/index.php?showto...6700&st=100

அவர் எந்த விடயத்தை சொன்னார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் பழைய தனிப்பட்ட பிரச்சனைகளை தூசு தட்டி எடுத்து மேலும் மேலும் பிரச்சனைகளை வளர்க்காமல் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.

கலைஞன் எது கேட்டாரோ அதை பற்றிய அவரவர் கருத்துக்களை வைப்பதும், அது ஆமா இல்லையா என்பது பற்றி அவரவர் கருத்துகளை வைப்பத்தும் விவாதிப்பதுவுமே பொருத்தமாக இருக்கும்.

இந்த தலப்பே தேவயற்றது என்றே எண்ணி இருந்தேன் அதனால் எதுவுமே எழுத நினைத்து இருக்கவில்லை, எனது பெயரைக் குறிப்பிட்டு வெண்ணிலா 'ஆனால் முந்தி நாரதர் சும்மா பெண்களை சீண்டியவர் தான். அதுவும் ஒரு டீஜே கவிதையைக் கொண்டு வந்து போட்டு. அதில் நானும் பாதிக்கப்பட்டவள் தான்' என்று எழுதி இருந்தது மன உழைச்சலைத் தந்தது.மன உழச்சல் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் வருவது.பழசைக் கிளற வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை.என்னைக் குறிப்பிட்டு ஒருவர் தவறான கருத்தை எழுதும் போது அதற்கு நான் தான் பதில் அழிக்க வேண்டி இருக்கிறது. நான் பதிலை எழுதும் போதே இது ஒரு சத்ததிற்க்கும் பிரயோசனம் இல்லாத விடயம் என்று தான் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன்.

இப்போது களத்தில் விதிமுறைகள் தெளிவாக்கப்பட்டு அவர் பழையவர் இவர் புதியவர் அவர் நன்றாகக் கவிதை எழுதுபவர் இவர் எழுதாதவர் என்று விதி முறைகளில் பாகுபாடு எதுவும் காட்டப்படாமால் அமுல் படுத்தப்படுகின்றன.தனி நபர் தாக்குதல்களைச் செய்வோர் கண்டிக்கப்படுகின்றனர்.முன்ன

Link to comment
Share on other sites

//ம்.. சில பழைய உறுப்பினர்கள் ஆறிப்போன ரணங்களை (வாசிக்கும் மற்றவங்கள் ஏதோ 'வலசு'கள் என்ற எண்ணத்தில்) கிளற ஆரம்பித்திருக்கிறார்கள். தயவுசெய்து இது கருத்துக்களம் என்பதை ஞாபகம் வைத்திருங்கள். அடிபிடி மடமல்ல//

பழைய விடயங்களுக்கு புதிய அர்த்தங்கள் கற்பிக்கப்படும் போது அவற்றை சீர் செய்ய பழைய விடயங்களைக் கிழறுவது தேவையானதாக இருக்கிறது.ஆதாரத்துடன் அவை மீள எடுத்துப் போடப் படுவது அதற்காகவே.ஏனெனில் வாசிப்பவர்கள் 'வலசுகள்' இல்லை என்பதற்காக.

இது கருத்துக் களம் தான்,அதனால் தான் முரண்பட்ட கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன.அண்ணா உங்கள் கதை நன்றாக இருக்கிறது தம்பி உன் கவிதை சுப்பரா இருக்கிறது என்று மாறி மாறி முதுகு சொறிய அல்ல கருத்துக் களம்.அடிபிடி மடமாக யாழ்க்களம் ஆகாது இருக்கத் தான் கள நியதிகளும் பொறுப்பாளரும் மட்டுறுத்தினர்களும் இருக்கிறார்கள்.விதி முறைக்கு உட்பட்டு கருத்தாடப்ப்படும் எந்தக் கருத்து முரண்பாடுகளையும் யாழ்க்களம் தடை செய்யவில்லை. இது கருத்துக்களுக்கும் அவை சார்பான முரண்பாடுகளும் விவாதிக்கப்படும் களம் என்பதனை நாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.இங்கே கருத்து முரண்பாடென்பதை அடிபிடியாக மாற்றாமல் பார்த்துக் கொள்ள பொறுப்பனவர்கள் இருக்கிறார்கள்.அப்படி அவர்களுக்குப் பட்டால் கருத்துக்களை தணிக்கை செய்கிறார்கள்

தனிப்பட பெயர் குறிப்பிட்டு ஒருவர் எழுதும் போது அதற்கான விளக்கத்தை அழிப்பது, வினைக்கான எதிர்வினை.அடிபிடி அல்ல, தன் நிலை விளக்கம். ஏனெனில் வேறு எவரும் அதற்கான விளக்கத்தையோ பதிலையோ இங்கு எழுதப்போவதிலை. :huh:

Link to comment
Share on other sites

:P சாணக்கியன் படம் பார்த்து கருத்தை புரிந்துகொள் என்று சொல்லி இருக்கின்றீங்க. :P பாவம் மோகன் அண்ணா எவ்வளவு தனிமடல்கள். அதுதான் தலையில் கையோ? :huh:

Link to comment
Share on other sites

இங்கையும் நாம வந்துட்டோமல............

இந்த பிரச்சினை முடிந்துவிட்டதா............சரி முடியாட்டி நானே முடித்து வைகிறேன் மாப்பி சார்பாக அனைத்து யாழ்கள பெண்களுக்கும்......................மாப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெளிவான விளக்கத்தை கொடுத்து வலைஞன் முடித்து வைத்து விட்டார்.

அதுவும் சாணக்கியனின் படம்..பொறுப்பளரின் கஷ்டத்தை அப்படியே எடுத்துரைக்கின்றது.

பாராட்டுக்கள் இருவருக்கும்.

அப்ப்போ யமுனாக்கா..

எனக்கு 1 சோடா அண்ட் 2 உழுந்து வடை..சொல்லி..பில்லையும் குடுத்து விடுங்கோ இல்லை குடுக்க சொல்லி விடுங்கோ..சரியோ (முடித்து வைக்க எண்டு வெளிக்கிட்டா சும்மா விடுவமோ?) :P

சரி நானும் வாறன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் எழுதுறதை நிர்வாகத்தினர் தூக்க மாட்டினமோ? இதுக்குள்ளும் வந்து உவங்கட சம்பந்தமில்லாத அலட்டல்களைப் போட்டுப் படிக்க முடியல்ல. எந்தப் பக்கத்தையும்.

Link to comment
Share on other sites

அப்ப்போ யமுனாக்கா..

எனக்கு 1 சோடா அண்ட் 2 உழுந்து வடை..சொல்லி..பில்லையும் குடுத்து விடுங்கோ இல்லை குடுக்க சொல்லி விடுங்கோ..சரியோ (முடித்து வைக்க எண்டு வெளிக்கிட்டா சும்மா விடுவமோ?) :P

சரி நானும் வாறன்..

வாங்கோ...............வாங்கோ இவள் அக்கா இன்றைக்கு தான் பார்கிறேன்............அது சரி விவாதத்தில எந்த பக்கம் கதைத்தனீங்க.............கதைத்த மாதிரி தெறியவில்லை.............சோடா கொடுகிறேன் என்றவுடன் வந்த மாதிரி இருக்கு...............சரி சரி வாங்கோ நாம எப்பவும் அட்டகாசமா தான் முடித்து வைப்போம்.............. :P

உழுந்து வடை வேறையா...............சரி சரி நம்ம அக்கவுண்டில உங்களுக்கு சோடாவும் உழுந்துவடையும் வாங்கி தாரேன் பிறகு எல்லாருக்கும் சொல்லி எல்லாரையும் என்னட்ட கூட்டி கொண்டு வறாதில்லை சொல்லி போட்டேன்................... B)

அது சரி இவளக்கா இப்ப நான் கதைத்தது அரட்டை மாதிரி தெரிகிறதோ...................உதுக்கு நான் உதாரணம் ஒன்று சொல்லவா இப்ப நமிதா தெறியுமோ அவா சொல்லி இருக்கா.........வருவீயா.வரமாட்டிய

Link to comment
Share on other sites

என்ன நடக்கிறது யாழில்???

ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடப்பது " அரட்டை" ஒன்றுதான் ;) ;) ;)

Link to comment
Share on other sites

உதுக்குத்தான் நான் ஆரம்பத்திலையே சொன்னனே அதாவது இந்த தலைப்பை மூடிவிடுங்கள் என்று...திரும்பவும் சொல்லுகிறேன் இங்கு எல்லாம் சரியாகத்தான் நடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் நான் ஆரம்பத்திலையே சொன்னனே அதாவது இந்த தலைப்பை மூடிவிடுங்கள் என்று...திரும்பவும் சொல்லுகிறேன் இங்கு எல்லாம் சரியாகத்தான் நடக்குது.

உண்மைதான் B)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.