Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, வாத்தியார் said:

மக்கள் நாங்கள் தமிழர்கள் என உணர்ந்து செயற்பட தொடங்கியுள்ளார்கள்.
திராவிடர்கள் நாங்கள்.... எங்கள் கொள்கை திராவிடக் கொள்கை...    எனக்கூறி... தமிழர்கள் மேலே சவாரி செய்யும் அரசியல் பல வருடங்களாக தொடர்ந்த நிலைமையில்....

சீமான்
தமிழர் நாம் எங்கள் தேசம் தமிழ்த் தேசம் என்ற கொள்கையுடன் வந்ததால் ஒரு தமிழ்த் தேசிய உணர்வு தமிழ் நாட்டில் வேரூன்ற ஆரம்பித்துள்ள நிலையில் இப்படியான மாற்றங்கள் வரும் ஐயா.

அந்த மாற்றம் நிலையெடுக்க பல அழுத்தங்கள் வருவதால்  கால அவகாசம் தேவை
ஆனால் சீமான் மாறாமல் இருக்க வேண்டுமல்லவா

7 minutes ago, விசுகு said:

கேள்விக்கு நன்றி அண்ணா

இங்கே சிங்களத்தையே அவர்கள் நல்லவர்கள் தான் தமிழர்கள் தான் தேவையற்று சண்டைக்கு போய் அவர்களின் உறவை தடை செய்கிறார்கள் என்பவர்கள், நம்புபவர்கள் இருக்கிறார்கள்

அவர்களிடம் நான் சொல்லும் கருத்து எடுபடுமா? அதை நம்புகிறீர்களா?

ஆனாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

பட்டறிவு தான் காரணம். ஈழத்து அனுபவம் (தலை வைக்க ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தது போல்)

தமிழகத்தின் சொந்த அனுபவம் (கன்னடம், பர்மா, பம்பாய் மற்றும் தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் அடி வாங்கியது. மாற்றாந்தாய் பிள்ளையாக நடாத்தப்பட்டது பழிவாங்கப்பட்டது)

இறுதியாக இருக்கும் இந்த ஒரேயொரு மண்ணையும் தமிழையும்    இழந்து விடக்கூடாது என்ற தீர்க்கமான முடிவு தான் காரணம்.

  • Replies 152
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழகன் said:

தினசரி வாழ்வில் தமிழ் பேசாதவர்கள் உள்ளார்ந்த தமிழ் தேசியவாதிகளாக இருக்க வாய்ப்பில்லை. 

நீங்கள் சொன்னது உண்மை தான். அவர்கள் தமிழ்தேசியம் பேசுவது ஏமாற்றுவதற்காக.  வெளிநாட்டில் இருந்து சென்று ஈழதமிழர்களுக்கு தலைமை தாங்கும் ஆசையும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

https://photos.app.goo.gl/1BhThPtX7WwmrmP37

https://photos.app.goo.gl/eFumCo2Tgk9Kgg5k7

விஜயகாந்தின் கட்சி எடுத்த வாக்குகள் 0 ,45 வீதமாம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்த வாக்குகள் 1,06 வீதம் 

கமல்ஹாசன் கட்சி எடுத்த வாக்குகள் 2,45 வீதம் 

பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த வாக்குகள் 4,04 வீதம்

இனி இவர்கள் சீமானைத்தேடி வருவர். 

இவர்கள் ஒன்று சேர்ந்தால் 30 வீத மக்கள் ஒன்றிணைவர்

கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழகன் said:

இது எனது நிலைப்பாடு அல்ல. ஆனால் அதிமுக+பிஜேபி+அமமுக+பாமக கூட்டணியில் சேரும் நிலையை அண்ணன் எடுத்தால் அது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை பாதிக்குமா? பாதிக்க கூடாது என்பதே என் வேண்டுதல்.

உங்கள் அண்ணர் எடுக்கும் நிலைபாட்டை வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் தலையால் நின்று உறுதியான ஆதரவு தருவார்கள் கவலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, விளங்க நினைப்பவன் said:

உங்கள் அண்ணர் எடுக்கும் நிலைபாட்டை வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் தலையால் நின்று உறுதியான ஆதரவு தருவார்கள் கவலை வேண்டாம்.

நீங்கள் எந்த கொள்கை சார்பாக நின்று கதைக்கின்றீர்கள்?

12 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் எந்த கொள்கை சார்பாக நின்று கதைக்கின்றீர்கள்?

யாரும் தமிழ் தான் எங்கள் மொழி  அது எங்கள் உயிர் என்று சொன்னால் அவர்களை ஒரு கை பார்ப்பது தான் கொள்கை.. (முக்கியமாக அடிமையாக வாழ்வது) 

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது எமது இனத்தின் சாபக்கேடு

ஒருவர் கள்ளனாக இருக்கலாம்

அதை பரம்பரை பரம்பரையாக தொடரலாம். அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட வாக்கு கேட்கலாம் வெல்லலாம்.

ஆனால் தேசியத்தை விரும்புபவராக இருந்தால் மட்டும் நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பம் மட்டும் அல்ல உங்கள் குழந்தைகள் பேரப் பிள்ளைகளும் தூயவர்களாக இனத்துக்காக உயிரைக் கூட கொடுக்கக்கூடிய தியாகம் உள்ளவராக வாழ்ந்தால் கூட போதாது நிரூபித்து காட்டணும்

தேசியம் என்றவுடன் பலருக்கு "தூய" என்கின்ற நினைவிற்கு வந்து தொலைத்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும். 

அவர்கள் எப்போதுமே கலப்பு, அMழ்ந்து போதல், கரைந்து போதல், நிறமிழத்தல் என்பவற்றில் அடிபட்டு பலவீனமாக இருப்பார்கள். 

பலவீனர்களுக்கு எரிச்சல் இலகுவாக வருமல்லவா..😀

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

1) நீங்கள் சொன்னது உண்மை தான். அவர்கள் தமிழ்தேசியம் பேசுவது ஏமாற்றுவதற்காக. 

2) வெளிநாட்டில் இருந்து சென்று ஈழதமிழர்களுக்கு தலைமை தாங்கும் ஆசையும் உள்ளது.

1) கரைந்து அமிழ்ந்து சுயம் இழந்தவர்களுக்கு எல்லாமே மாயப் பெருவெளியாகத் தெரிவதில் வியப்பில்லை.

2) நினைக்க மட்டுமே தெரிந்தவருக்கு சமகால உலக நடப்புகள் தெரியாமல் இருப்பதில் வியப்பேதும் இல்லை. 

நிற்க,

உங்களுக்கு பிள்ளைகளிருந்து, அவர்கள் நேர்த்தியாக வளர்க்கப்பட்டு, அவர்கள் ஈழத்துடன் தொடர்பிலிருந்து,  அவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க விரும்பாமல், தனது தாய்நாட்டிற்கு சமூக, அரசியல், பொருளாதார சேவை செய்ய  விரும்பினால் உங்களால் என்ன செய்ய முடியும்...🤥

இப்படியான ஒன்றை உங்களால் கற்பனை செய்யத்தானும் முடியுமா..?

முடியாதே..🤥

ஏனென்றால் நீங்கள் நினைக்க விரும்புபவர். நினைப்பவரல்லவே...

🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

https://photos.app.goo.gl/1BhThPtX7WwmrmP37

https://photos.app.goo.gl/eFumCo2Tgk9Kgg5k7

விஜயகாந்தின் கட்சி எடுத்த வாக்குகள் 0 ,45 வீதமாம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்த வாக்குகள் 1,06 வீதம் 

கமல்ஹாசன் கட்சி எடுத்த வாக்குகள் 2,45 வீதம் 

பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த வாக்குகள் 4,04 வீதம்

இனி இவர்கள் சீமானைத்தேடி வருவர். 

இவர்கள் ஒன்று சேர்ந்தால் 30 வீத மக்கள் ஒன்றிணைவர்

கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

ஆனால் இந்த கணக்கு இப்படியான இலகுவான கணக்கும் அல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

விசிக 6 சீட்டில் 1%
நாம் 245 சீட்டில் 7%
ஆனால் நாம் தனியே, அவர்களோ பெரும் கூட்டணியில் ஆகவே இதை இப்படி ஓப்பிடல் சரிதானா?

அடுத்து விசிகவோ, பாமகவோ நம் தலைமை ஏற்று வரப்போவதில்லை. மக்கள் நல கூட்டணி பாடம் போதும்.

ஆகவே மீண்டும் தனித்து அல்லது அதிமுக+பிஜேபி+பாமக கூட்டணி என்பதுதான் அண்ணனின் தெரிவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலில் வளர்ச்சி கண்டுள்ள நாம் தமிழருக்கு வாழ்த்துகள்..! 👏

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை மீட்க வந்தவர்களை ஒதுக்கிவிட்டு இலங்கைத் தமிழர் நாம் ஒப்பாரி வைக்கிறோம். அதுபோல் தமிழ் மக்களை மீட்க வந்தவர்களை ஒதுக்கிவிட்டு இந்தியத் தமிழரும் ஒப்பாரி வைக்காவிட்டால்.... எங்களிடையே உள்ள  சொந்தம், பந்தம், அன்பு, பாசம், தொப்புழ்கொடி உறவெல்லாம் என்னாவது...🤔

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வந்திட்டுதா யாராம் வெற்றி.😜

தமிழக மிகவும் சிறப்பாக தமது தீர்பபை வழங்கியுள்ளார்கள். கடந்த 2016 தேர்தலிலும் இதேபோன்ற தீர்பபையே வழங்கினர். அறுதி பெரும்பான்மையுடனான அரசையும் அதே வேளை பலமான எதிர்க்கட்சியையும் 2016 ம் ஆண்டும் தேர்தெடுத்தனர். இப்போதும் அதேபோல தெளிவாக   தேர்ந்தெடுத்துள்ளனர். ஜனநாயகம் சிறப்பாக செயற்பட ஒரு பலமான எதிர்க்கட்சி தேவை.  அதிமுக கட்சியும் கணிசமான பலத்துடன் உள்ளது நல்லதே. மக்கள் ஆதரவுடன் இருக்கும் அதிமுக இனியும் மதவாத பிஜேபியன் அழுத்தங்களுக்கு அடிபணியாது தனது கட்சிக்கு உள்ள பலத்தை மேலும் உறுதியாக்குவதன் மூலம் 2026  தேர்தலில் வெற்றி பெறமுடியும்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தனித்துவத்துடன் செயற்படுவதன் மூலம் தமிழ்நாட்டில்  மதவெறி இனவெறி தூண்டி பதவி சுகத்தை அனுபவிக்க துடிக்கும்   அரசியல்வாதிகளையும் அதன் கும்பல்களையும்  ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

7 minutes ago, tulpen said:

தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

விசிக  .பாமக .இவர்கள் எல்லாம் யார் ? 

(என்ன செய்வது  அறிவு   அப்படித்தான் )

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, appan said:

தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

விசிக  .பாமக .இவர்கள் எல்லாம் யார் ? 

(என்ன செய்வது  அறிவு   அப்படித்தான் )

எப்போதும் அதற்காக போராடுபவர்களை விடுத்து அதனை வஞ்சகத்தனமாக தூண்டி விடுபவர்கள் மீது தான் அவர் கண் படும். 

ஏழாவது அறிவு என்று அதற்கு பெயராம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, விசுகு said:

எப்போதும் அதற்காக போராடுபவர்களை விடுத்து அதனை வஞ்சகத்தனமாக தூண்டி விடுபவர்கள் மீது தான் அவர் கண் படும். 

ஏழாவது அறிவு என்று அதற்கு பெயராம். 

லொறி லொறியாய் காசு கொண்டுவந்து வோட்டு வாங்கின கட்சிக்கு வக்காளத்து வாங்குறதுக்கும் ஒரு வரட்டுத்தைரியும் வேணும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

லொறி லொறியாய் காசு கொண்டுவந்து வோட்டு வாங்கின கட்சிக்கு வக்காளத்து வாங்குறதுக்கும் ஒரு வரட்டுத்தைரியும் வேணும்.🤣

குமாரசாமி அண்ணேய்....   இதை வரட்டு தைரியம் என்று சொல்வதை விட....

முட்டுக் குடுக்குறது, செம்பு தூக்குறது... என்று சொல்வார்கள்.  😂  🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த 10.5 உடன் பார்க்கையில் இது கொஞ்சம் சுணக்கம்தான் உறவே. அடுத்தடுத்த கட்சியை பலவீனபடுத்திய சில புல்லுருவிகள்தான் காரணம். 

தொடர்ந்தும் இப்படியாகாமல் பார்த்துகொள்ள வேண்டும். தம்பிகள் பாக்கியராசன், கார்த்தி, அண்ணன் தடா போன்றோர் அண்ணனுக்கு அரணாக அமையவேண்டும். 

புலம்பெயர் சொந்தங்கள் தமது ஆடம்பரங்களை குறைத்து அண்ணனின் பொருளாதார அரணை இரெட்டிப்பாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சுடாலின் சத்தியப்பிரமாணம் எப்படி சொல்றார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது😄 இன்றும் அறிவாலயத்தில் அவர் பேசுவதை போடுவார்கள் என்று பார்த்தேன் அநியாயமாய் நேரம்தான் போனது சிலவேளை பின்பு போட்டார்களா தெரியலை .

நாடாள வந்தவர்கள் பாவிகளா இல்லை புண்ணியவான்களா என்று ஆட்சி காட்டிக்கொடுத்துவிடும் .

.நாள் ஒன்றின் கொரனோ  தொற்று விகிதம் 6 ஆயிரம் தாண்டிடுகின்றது .  பாவிகள் நாடு ஆண்டாள் கஷ்டப்படுவது மக்கள் தானே .

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

நான் நேற்று சொன்னேனே.

தேப்பன், உயிரோட இருக்கும் போதே, பொறுப்பு கொடுக்கவில்லை, நம்பிக்கை இருக்கவில்லை.

தமிழக மக்கள் இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் அளித்த 54% வாக்குக்குள், குறைந்து 43% ஆகி உள்ளது.

இவரது, நடவடிக்கைள் மேலே நம்பிக்கை இல்லாத, மனைவி துர்க்கா, மகன் உதயநிதியை துணை முதல்வராக்க நாண்டு கொண்டு நிக்கிறார்.

அநேகமா, இவரது நடவடிக்கை மூலம், சீமான் ஒரு மக்கள் ஆதரவு தலைமைத்துவத்துக்கு நகர்வார்.

அதேவேளை, பதவியில் இல்லாத எடப்பாடி, பன்னீர் தலைமைத்துவத்துக்கு அடிபடுவார்கள். தினகரன் மக்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாததால், அவர், அதிமுக தலைமத்துவத்துக்கு வர முடியாது. சசிகலா 70 வயது ஆகிறது. பிள்ளைகள் இல்லாத அவரும், அரசியலில் இருந்து ஒதுங்கியது நிரந்தரமாகும்.

ஆகவே, தமிழகம், தமிழம், திராவிடம் என்ற அரசியலில் விறுவிறுப்பாகும்.

***

சீமான், தனது சொந்த தொகுதியான நாடார்கள் நிறைந்த காரைக்குடியில் நின்று வென்று இருக்க முடியும்.

தனது சாதி மக்களை நம்பி, அங்கே போட்டி போடுகிறார் என்று சாதிய தலைவர் ஆக்கி விடுவார்கள் என்றே, வடக்கே, சென்னையில் போட்டி இட்டார்.

சாதியத்துக்குள் சிக்காமல், தமிழர் சாதிக்கு தலைமைதுவம் தாங்கும் நோக்கம்.

இதுவே, சிறப்பான தலைமைத்துவமும், நீண்ட நோக்கிலான திட்டமிடலும்.

பிரபாகரனுக்கும் சொன்னார்கள், தனியே போராடாமல், உமாவுடன் இணை, டெலோவுடன் இணை என்று, சரித்திரம் மிகுதியை சொல்கிறது. நீண்ட நோக்கிலான திட்டமிடலுக்கு உதாரணம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, appan said:

தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

விசிக  .பாமக .இவர்கள் எல்லாம் யார் ? 

(என்ன செய்வது  அறிவு   அப்படித்தான் )

நீங்க இப்படிக்கேக்கப் படாது. 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இவரது, நடவடிக்கைள் மேலே நம்பிக்கை இல்லாத, மனைவி துர்க்கா, மகன் உதயநிதியை துணை முதல்வராக்க நாண்டு கொண்டு நிக்கிறார்.

உதயநிதி பேச்சு இலகுவாக  மக்கள் மனதில் இலகுவாக பதியும் வண்ணம் உள்ளது அதிலும்  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லு விளையாட்டு கொஞ்சம் விடயம் இருந்தாலும் இவர் தலையெடுக்கமுதல் கட்சி இரண்டாக உடைந்துவிடும் கட்டுமரம் வாயால் வைத்திருந்த  ஒற்றுமை அந்த பொய்யும் பிரட்டும் இனி அம்பலமேறாது .

  • கருத்துக்கள உறவுகள்

நான் சசிகலா, பன்னீர், எடப்பாடி பத்தித்தானே சொன்னேன். வேற எங்கோ விழவேண்டிய கத்தி, பிழையா விழுந்து விட்டுதோ? 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நான் நேற்று சொன்னேனே.

தேப்பன், உயிரோட இருக்கும் போதே, பொறுப்பு கொடுக்கவில்லை, நம்பிக்கை இருக்கவில்லை.

தமிழக மக்கள் இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் அளித்த 54% வாக்குக்குள், குறைந்து 43% ஆகி உள்ளது.

இவரது, நடவடிக்கைள் மேலே நம்பிக்கை இல்லாத, மனைவி துர்க்கா, மகன் உதயநிதியை துணை முதல்வராக்க நாண்டு கொண்டு நிக்கிறார்.

அநேகமா, இவரது நடவடிக்கை மூலம், சீமான் ஒரு மக்கள் ஆதரவு தலைமைத்துவத்துக்கு நகர்வார்.

அதேவேளை, பதவியில் இல்லாத எடப்பாடி, பன்னீர் தலைமைத்துவத்துக்கு அடிபடுவார்கள். தினகரன் மக்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாததால், அவர், அதிமுக தலைமத்துவத்துக்கு வர முடியாது. சசிகலா 70 வயது ஆகிறது. பிள்ளைகள் இல்லாத அவரும், அரசியலில் இருந்து ஒதுங்கியது நிரந்தரமாகும்.

ஆகவே, தமிழகம், தமிழம், திராவிடம் என்ற அரசியலில் விறுவிறுப்பாகும்.

***

சீமான், தனது சொந்த தொகுதியான நாடார்கள் நிறைந்த காரைக்குடியில் நின்று வென்று இருக்க முடியும்.

தனது சாதி மக்களை நம்பி, அங்கே போட்டி போடுகிறார் என்று சாதிய தலைவர் ஆக்கி விடுவார்கள் என்றே, வடக்கே, சென்னையில் போட்டி இட்டார்.

சாதியத்துக்குள் சிக்காமல், தமிழர் சாதிக்கு தலைமைதுவம் தாங்கும் நோக்கம்.

இதுவே, சிறப்பான தலைமைத்துவமும், நீண்ட நோக்கிலான திட்டமிடலும்.

பிரபாகரனுக்கும் சொன்னார்கள், தனியே போராடாமல், உமாவுடன் இணை, டெலோவுடன் இணை என்று, சரித்திரம் மிகுதியை சொல்கிறது. நீண்ட நோக்கிலான திட்டமிடலுக்கு உதாரணம்.

உண்மை தான் நாதா
ஏற்க‌ன‌வே க‌ரி நாடார் ந‌டிகை விஜ‌ய‌ல‌ச்சுமி அண்ண‌ன் சீமானின் தாயை இழிவு ப‌டுத்தின‌துக்கு கோவ‌ப் ப‌ட்ட‌வ‌ர்

சாதி சாக்க‌டை அர‌சிய‌ல‌ அண்ண‌ன் சீமான் அற‌வே விரும்ப‌ வில்லை 

இந்த‌ தேர்த‌லில் அண்ண‌ன் சீமான் செய்த‌ சிறு த‌வ‌று அக்கா காளிய‌ம்மாள‌ வ‌ட‌ சென்னையில் மீண்டும் வேட்பாள‌ரா நிருத்தி இருக்க‌லாம் 

க‌ளிய‌ம்மாள் சொந்த‌ ஊரில் போட்டியிட்டு 15000 வாக்குக‌ள் தான் பெற்றா , வ‌ட‌ சென்னையில் 56000 வாக்குக‌ள் 2019 பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்

பிழைக‌ள் ச‌ரிக‌ள் திருத்தி 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ச‌ரியா ப‌ய‌ணிப்பின‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இல்லை அது பாராளுமன்றம், பல சட்டசபை தொகுதிகள் சேர்ந்தது. இது ஒரு தொகுதி. கணக்கு சரியாய் வருகிறது. 

இந்த முறை தான் வேலையே செய்ய தொடக்கி இருக்கிறார்கள். அனுபவம் பெறுகிறார்கள்.

திமுக 1948 தொடக்கம், 1967 வரை 19 வருடம் போராடியது. காங்கிரசுக்கும், நீதிகட்சிக்கும் எதிராக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.