Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

🤣 இன்பதேன் வந்து பாயுது காதினிலே…அந்த நாட்டு தேர்தல்தான். 

ஓ.......பணத்திற்காக வாக்களிக்கும் நாட்டு தேர்தலை பற்றி சொல்கின்றீர்களா?
:grin:

  • Replies 196
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

7 பக்கங்கள் தாண்டியும் ஒரு முடிவை காணவில்லை.

கடந்த 12 வருடங்களாக நடப்பது இது தான். இங்கு அலசி ஆராய்ந்து வைப்பதை அடுத்த தலைமுறை யாழுக்கு வந்து வாசித்து போட்டு தான் தமிழருக்காக அரசியலில் ஈடுபட போகின்றார்கள். 

பிறகென்ன 100 நாளில் தமிழீழம் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவுகளின் மூலம் துல்பெனின்  அரசியல் தார்ப்பரியத்தை, அரசியல் அடையாளத்தை புரிந்துகொண்டேன். 😒

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Sasi_varnam said:

இந்த பதிவுகளின் மூலம் துல்பெனின்  அரசியல் தார்ப்பரியத்தை, அரசியல் அடையாளத்தை புரிந்துகொண்டேன். 😒

குடும்பி தெரியுது என்று  இதைத்தான் நான் பலமுறை சொல்லியுள்ளேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

குடும்பி தெரியுது என்று  இதைத்தான் நான் பலமுறை சொல்லியுள்ளேன்

இனி என்ன செய்ய வேண்டும் என கேட்டுப்பாருங்கள். குடும்பியிலிருந்து ஈரும் பேனும் கொட்டிக்கொண்டேயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இனி என்ன செய்ய வேண்டும் என கேட்டுப்பாருங்கள். குடும்பியிலிருந்து ஈரும் பேனும் கொட்டிக்கொண்டேயிருக்கும்.

அதை இழுத்து அழிக்க முடியாது, ஒன்று குடும்பியை ஒட்ட வெட்ட வேண்டும் அல்லது நெருப்பு வைக்க வேண்டும். இல்லாவிடின் மற்றவர்க்கும் தொற்றும் அபாயமுண்டு சாமியோவ்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இனி என்ன செய்ய வேண்டும் என கேட்டுப்பாருங்கள். குடும்பியிலிருந்து ஈரும் பேனும் கொட்டிக்கொண்டேயிருக்கும்.

அதே தான்  அண்ணா

இங்க  சிலருக்கு ஏன்  கடிக்குது  என்று  தெரியாமல்  போகும் அளவுக்கு  இருக்கு??

நாம  ஏற்கனவே இதுகளிருந்து தப்பிக்க பழகியதால  ஏதோ தப்பிச்சோம்??

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் சே கம்பெடுத்து சுழற்ற வெளிக்கிட்டா பயபுள்ள கபித்தானை காணமுடிவதில்லை. பயமா? மரியாதையா? ஏதோ இருவருக்குள்ளும் இருக்கு, பொறுத்திருந்து பாப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2021 at 01:07, goshan_che said:

தேர்தல் முடிவோட கொஞ்சம் துவண்ட மாரி தெரிஞ்சது. தேற்றி கொண்டு வரட்டும்.

தேர்தலுக்கு முன்பே நான் எழுதியவைகளை படித்து இருந்தால் இப்படி ஒரு பதில் வந்திருக்காது கண்டதில்  சந்தோசம் தேர்தலுக்கு முன் இங்கு வருவியல் என்று ஜக்கம்மாவிடம் சோலி  உருட்டியதில் பதில் வருவியல் என்று இருந்தது நாங்களும் ஆர்வமாக இருந்தோம் ஆனால்  கணக்கு பிழைத்து விட்டது .

உண்மையில் தேர்தல் முடிவு சீமான் எதிர்பாளர்களுக்குத்தான் கசப்பானதுதான் .

On 25/5/2021 at 01:21, satan said:

 பெருமாள் தேர்தலில் நின்றவரா? 

தேடியதுக்கு நன்றி கலைத்துவிட்டால் கை கழுவ  குளத்தை  தேடி போகாமல் பேப்பரில் துடைத்து பழக சிறிது நாட்கள் எடுத்துக்கொண்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

தேர்தலுக்கு முன்பே நான் எழுதியவைகளை படித்து இருந்தால் இப்படி ஒரு பதில் வந்திருக்காது கண்டதில்  சந்தோசம் தேர்தலுக்கு முன் இங்கு வருவியல் என்று ஜக்கம்மாவிடம் சோலி  உருட்டியதில் பதில் வருவியல் என்று இருந்தது நாங்களும் ஆர்வமாக இருந்தோம் ஆனால்  கணக்கு பிழைத்து விட்டது .

உண்மையில் தேர்தல் முடிவு சீமான் எதிர்பாளர்களுக்குத்தான் கசப்பானதுதான் .

தேடியதுக்கு நன்றி கலைத்துவிட்டால் கை கழுவ  குளத்தை  தேடி போகாமல் பேப்பரில் துடைத்து பழக சிறிது நாட்கள் எடுத்துக்கொண்டேன் .

பெரும்ஸ்,

உங்களை கண்டதும் சந்தோசம்.

தேர்தலை விடுங்கோ “வென்றால் மகிழ்சி, தோற்றால் பயிற்சி”. (என்னத்துக்கு பயிற்சி? அடுத்த தேர்தலில் எப்படி தோற்பது என்று🤣).

சும்மா பகிடிதான் டென்சன் ஆக வேண்டாம்.

தேர்தல் முடியும் மட்டும் வருவதில்லை என்ற முடிவோடதான் இருந்தனான். ஆனால் எல்லா ஆரூடங்களையும் ரசித்து வாசித்தேன். 

தேர்தல் முடிய உள்ளவருவம் எண்டா உந்த Facebook பாவிச்சு உள்ள வாற வழி வேலை செய்யன் எண்டுட்டு.

பிறகு சுகங்கள் எப்படி. ஊசி எல்லாம் போட்டிருப்பியள். 

நேற்று கமின்ஸ் பொரிச தோச்ச்சு தொங்கவிட்டார் பார்த்தனியளோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சும்மா பகிடிதான் டென்சன் ஆக வேண்டாம்.

மற்றவரை போல் அல்ல ஆனால் சீமானின் எல்லாப்பக்கமும் அந்தாள்மேல் புழுதி அடித்தாலும் அந்தாள் எழுந்துகொண்டுதான் இருக்குது நான் நினைக்கிறேன் இவ்வளவுக்கு அவரை வளர்த்து விட்டது அவரின் எதிரிகள் தான் .

7 minutes ago, goshan_che said:

பிறகு சுகங்கள் எப்படி. ஊசி எல்லாம் போட்டிருப்பியள். 

போன கிழமைதான் முதலாவது பைசர் என்றார்கள்  ஊசி போடுபவர் ஒவ்வாமை ஏதும் இருக்கா என்று கேட்க்க பின்னால் தமிழில் கதைத்து சத்தம் வர தலையை திருப்பிய ஒரு கனபொழுதுகளில் வெறும் ஊசியை மஞ்சள் நிற குப்பை பெட்டியில் போட்டு விட்டு முடிந்தது என்கிறார் சந்தேகத்தில் என்னம்  போடவில்லையா என்று கேட்க சிரித்துக்கொண்டே டன்  எழுந்து சென்று அடுத்த அறையில் 15 நிமிட நேரம் ஓய்வெடுக்கவும் என்று சொல்கிறார் குழப்பமாக சென்று அமர்தேன் அடுத்தநாள் சிறிய நோவுதான் ஊசி உண்மையிலே போட்டதுக்கு  அறிகுறியாக  இருந்தது .சிலது இரண்டாவது ஊசிக்குத்தான் ஆட்டம் காட்டுமோ தெரியலை .

அவர்கள் 15 நிமிடம்  அமர சொன்ன அறையில் ஒருத்தர் விடாமல் அனைவரும் மணப்பெண் போல் தலையை குனிந்தபடி போனை நோண்டிக்கொண்டு இருந்தார்கள் நமக்கு போனை பறித்து வீட்டில் வைத்துள்ளார்கள்  போன இடத்தில் ஏதாவது அவசர போன் வந்து ராகு காலம் ஆகாமல் இருக்கணும் எனும் முன்எச்சரிக்கையாம். 

சின்னனில் காய்ச்சல் தடிமன் என்றால் அரசு ஆஸ்பத்திரிகளில்  எதுக்கும்  பென்சிலின் தான் பெரிய எலக்ரிக் சுடுதண்ணி கேத்திலில் ஊசிகளை போட்டு நன்றாக கொதிக்க வைப்பார்கள் ஊசி போடும் அறைக்கு போகுமுன்பே அந்த மனம் ஒருவித பயத்தை கொடுக்கும் முதலில் ஒவ்வாமை ஊசி போடுவார்கள் அதுக்கு கையை நீட்ட சொல்லுவார்கள் அப்போது மாத்திரம் சிறிது அநேகமா மாமா தான் கூட்டி வருபவராக இருப்பார் பாவப்பட்டு இறுக்கி பிடித்து இருப்பவர் சற்று அசந்து போகும் நேரம் பார்த்து யன்னலால் பாய்ந்து பக்கத்தில் உள்ள வேப்பமரத்தில் சர  சர  என்று ஏறிவிடுவது உண்டு மத்தியான சாப்பாட்டுக்கு கூட இறங்குவதில்லை அங்கு ஏற்கனவே நம்மை போல் அருகில் உள்ள மரங்களில் நம்ம கள்ள குளம் குளிக்கும் கூட்டுக்கள்  இருப்பினம்  அப்படி இருந்து விடுகதை படங்களின் பெயர் முதல் எழுத்து சொல்லி விளையாடுவது உண்டு இதைப்பார்த்து பெண்தாதிகள் ஏகத்துக்கு கடுப்பாயி வாங்கடா ஒருநாள் மாட்டாமலா போவீங்கள் என்று முறைப்பது உண்டு அப்போ அதுகளை பார்த்தால் நரகத்தில் என்னைசட்டியில் வதக்கும் அரக்கிகள் போல் பிரமை வருவதை தவிர்க்க முடியாது . என்ன காகம் முட்டை பொரிக்கும் காலத்தில் ஏறக்கூடாது என்பது நீதி .😀

53 minutes ago, goshan_che said:

நேற்று கமின்ஸ் பொரிச தோச்ச்சு தொங்கவிட்டார் பார்த்தனியளோ?

லொற்றி.  சீட்டுக்கட்டு .பணத்துக்கு விளையாடும் வீரர்கள் உள்ள அணிகளின் கிரிக்கட். உதைபந்து பக்கம் போவதே இல்லை  நேரவிரயம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சீமானை கொஞ்சம் தள்ளி வைப்பம். நான் சொல்லாட்டிலும் என் நிலைபாடு உங்களுக்கு தெரியும்தானே🤣.

பைசர் அநேகருக்கு பிரச்சனை கொடுக்கேல்ல. நான் ரெண்டும் போட்டுட்டன். ஓக்ஸ்போர்ட்தான்.

முதலான் கொஞ்சம் காய்ச்சல் குணம் காட்டினது. ரெண்டாம் சரியான தலையிடியை தந்தது.

மூளைல அடைப்போ எண்டு மனிசி பயந்தபோதும் நான் அசரவில்லை - அது மூளை உள்ளவைக்குத்தான் வருமாம் எண்டு எனக்கு தெரியும் 🤣

உங்கள் மரத்தில் ஒளிந்தகதை போல் இல்லை ஆனால் பள்ளியில் ஊசி போட வந்த சமயம் பாற்றூமில் போய் ஒளிந்தும் சரிவரேல்ல. எனக்கு பழைய பள்ளியில் போட்டது என்ற ஒரு உடான்சையும் எடுத்து விட்டேன். எங்க தளும்ப காட்டு என்று போட்டு சரக் எண்டு ஏத்தி போட்டாங்கள்.

அது பிறகு சீழ்கட்டி கொஞ்சகாலம் ஒரே கை நோ. முக்கூட்டு வக்சீன் என நினைக்கிறேன். அநேகமாக இலங்கையில் படித்த எல்லாரும் கையில் ஒரு தளும்பு இருக்கும்.

நான் கேட்டது Boris Johnson ஐ நேற்று அவரின் முன்னாள் உதவியாளர் பாராளுமன்றில் காலை வாரியதை.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

மூளைல அடைப்போ எண்டு மனிசி பயந்தபோதும் நான் அசரவில்லை - அது மூளை உள்ளவைக்குத்தான் வருமாம் எண்டு எனக்கு தெரியும் 🤣

இது என் வீட்டிலும் நடந்தது

எனக்கு காய்ச்சல் வந்தது

மனுசிக்கு வரல

அதுக்கு  நான் அது  மனுசருக்குத்தான் 🤣 ஊசி போட்டால் தாக்கம் வரும் என்று  சொல்லி  சமாளிச்சன்

போன  கிழமை என் அக்கா ஊசி  போட்டவா

அவாவுக்கும்  காய்ச்சல் வரல

மனுசி போட்டுக்குடுக்குது

ஏனாம் உங்க  அக்காவும் மனித  குலத்தில இல்லையோ என்று??🤣🤣

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ஏனாம் உங்க  அக்காவும் மனித  குலத்தில இல்லையோ என்று??

வாயைக் கொடுத்து நல்லாய் மாட்டுபட்டியளோ? கேள்விக்கு  பதில் என்னவாயிருக்கும்? இதற்கு மேலும் மாட்டுப்படாமலிருக்க வேண்டுமானால் வாயை பொத்திக்கொண்டு, தலையை மட்டும் ஆட்டியிருக்கவேண்டும்.

9 hours ago, பெருமாள் said:

நமக்கு போனை பறித்து வீட்டில் வைத்துள்ளார்கள் 

 நெருக்குவாரம் காலம்  முடிஞ்சு ராகுகாலம் தொடருதாமில... 

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் , கோஷான் சேயின் நாடு ஆரம்பத்தில் தவறுவிட்டாலும் இன்று கோவிட் தடுப்பூசி போடுவதில் உலகத்திலேயே முன்ணணியில் நிற்கிறது 😎

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் , கோஷான் சேயின் நாடு ஆரம்பத்தில் தவறுவிட்டாலும் இன்று கோவிட் தடுப்பூசி போடுவதில் உலகத்திலேயே முன்ணணியில் நிற்கிறது 😎

போக்காட்ட வேண்டிய, அரசுக்கு அதிகம் செலவு வைக்கும் ஆக்களை எல்லாம் அனுப்பி போட்டு இப்ப வரி கட்ட கூடியவர்களை பாதுகாக்கிறார்கள் என்றும் சொல்லாம் வி.நி.

எல்லாம் காசு, பணம், துட்டு, மனி, மனி.

  • கருத்துக்கள உறவுகள்

13 hours ago, satan said:

வாயைக் கொடுத்து நல்லாய் மாட்டுபட்டியளோ? கேள்விக்கு  பதில் என்னவாயிருக்கும்? இதற்கு மேலும் மாட்டுப்படாமலிருக்க வேண்டுமானால் வாயை பொத்திக்கொண்டு, தலையை மட்டும் ஆட்டியிருக்கவேண்டும்.

 நெருக்குவாரம் காலம்  முடிஞ்சு ராகுகாலம் தொடருதாமில... 

இவை சின்ன சின்ன குறும்புகள்

ஊடல்கள்

இவை  தான்  வாழ்வின்  சுவையான  காலங்கள்

இவை என்  வீட்டில்  அதிகமாக இருக்கும்  ஒரு  சொத்து😍

  • கருத்துக்கள உறவுகள்

2009 இலேயே மறுத்திட்டாங்கள். இவை என்னத்தையாம் வெட்டிப்புடுங்கினவை. சும்மா சவுண்டு விட்டது தான் மிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

இவை சின்ன சின்ன குறும்புகள்

ஊடல்கள்

இவை  தான்  வாழ்வின்  சுவையான  காலங்கள்

இவை என்  வீட்டில்  அதிகமாக இருக்கும்  ஒரு  சொத்து😍

உண்மைதான் விசுகர்! நமது அன்றாட உணவில் அறுசுவை சேர்ந்தாற்தான் அந்த உணவு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இனிப்பு மட்டும் இருந்தால்  சக்கரை வியாதி, உறைப்பு மட்டுமே என்றால் இரத்தக்கொதிப்பு, உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம்.  அசடு, சுடுதண்ணி, பச்சைத்தண்ணி, இளிச்ச வாய் என்கிற பட்டபெயரும் வரும். எல்லாம் கலந்து இருந்தால் எல்லாவற்றையும் கையாளக்கூடிய எளிய மனிதர் அவரிடம் மனம் விட்டு பேசலாம் எண்டு அணுகுவார்கள் உறவுகள்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2021 at 23:14, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் , கோஷான் சேயின் நாடு ஆரம்பத்தில் தவறுவிட்டாலும் இன்று கோவிட் தடுப்பூசி போடுவதில் உலகத்திலேயே முன்ணணியில் நிற்கிறது 😎

இந்த திரி எங்கேயோ போகுது எனினும்  இங்கு இந்தியன் வைரஸ் அட்டகாசத்தை ஆரம்பிக்குமோ என்று பயப்பிடுகிறார்கள் https://coronavirus.data.gov.uk/ இரண்டாயிரம் பரவல் நிலையில் இருந்து நான்காயிரம் ஆகியுள்ளது Suppressed என்ற பகுதிகளில் முன்பு வெள்ளையாக இருந்தவை பச்சை நிறத்துக்கு மாறுகின்றன இது பற்றி @nedukkalapoovanஅவர்களுக்கு துறைசார்ந்த அனுபவம் உண்டு இப்படியானவர்கள் வந்து விளங்கப்படுத்தினால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் ஆனால் அவர்களுக்கும் நேரம் கிடைக்கணும் இங்கு வருவதுக்கு .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால் மேலும் பாரிய விளைவுகள் ஏற்படும் -சம்பந்தன் எச்சரிக்கை

1-23-696x392.jpg
 49 Views

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் விளைவாகவே,  அமெரிக்க காங்கிரசில், இலங்கை குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக போரின் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட இனநல்லிக்கணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குதல் என்று பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.

அதேநேரம், விசேடமாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி விகித்தபோது இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பேன் என்று கூறியிருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் நிரந்தமான சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்கான விருப்பத்தினை வெளியிட்டிருந்தார். ஆகவே ராஜபக்ஷ சகோதரர்கள் இருவருமே உள்நாட்டிலும்,சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்.

ஆனால் அவர்கள் அதனை நடைமுறையில் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கரிசனைகளை கொண்டிருக்கவில்லை. அதேநேரம், ஜனநாயகத்திற்கு முரணான கருமங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். இதனால் நாட்டின் ஸ்திரமற்ற நிலைமை நீடிக்கின்றது.

இவ்வாறான நிலையில் தான் அமெரிக்கா காங்கிஸால் இலங்கை பற்றிய முன் கூட்டத் தீர்மானம் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தகட்டமாக வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றபோது இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிருந்து விலகி நிற்க முடியாத நிலைமைகள் தீவிரமடையும்.

அரசாங்கம் இதுகாலவரையிலும் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிட்டு உடனடியாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லையேல் இதுபோன்ற பல விடயங்களுக்கு சர்வதேச ரீதியாக முகங்கொடுக்க நேரிடும். அடுத்துவரும்காலங்களில் இவ்விதமான பல காரியங்கள் நிகழலாம் என்றார்.

https://www.ilakku.org/?p=51769

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தை ஏமாற்ற ராஜபக்‌ஷ அரசு நினைத்தால் ஆபத்துத்தான் – எச்சரிக்கிறார் சம்பந்தன்

SAMPANTHAN025.png
 20 Views

இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று ராஜபக்ஷ அரசு நினைத்தால் அது மிகப்பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாத இக்கட்டான நிலையிலேயே ராஜபக்க்ஷ அரசு உள்ளது. எனவே, இந்த அரசு, தனது தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டியது மிகவும் அத்தியாவசியம். மாறாவிட்டால் அரசின் எதிர்காலம் சாத்தியமாக அமையாது.

இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஐரோப்பிய நாடாளுமன்றத் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்கின்றோம். தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சர்வதேச சமூகம், இலங்கை மீது பல பரிந்துரைகளை முன்வைத்து பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இதன்போது பல வாக்குறுதிகளையும் இலங்கை அரசிடமிருந்து சர்வதேசம் பெற்றுள்ளது. இதை இந்தியா செய்திருக்கின்றது, ஐரோப்பிய ஒன்றியம் செய்திருக்கின்றது, ஐ.நா. சபை செய்திருக்கின்றது, அமெரிக்கா செய்திருக்கின்றது.

இவ்வாறு பல நாடுகளும், நிறுவனங்களும் இலங்கை அரசிடமிருந்து பல்வேறு வாக்குறுதிகளைப் பெற்றுள்ளன. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்குப் பல நாடுகளாலும், நிறுவனங்களாலும் போதிய காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசு, இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேசசமூகத்தையும் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாத இக்கட்டான நிலையிலேயே இலங்கை அரசு உள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையேல் சர்வதேச அழுத்தங்கள் இலங்கை அரசு மீது மேலும் அதிகரிக்கும். அதை நாம் வரவேற்கின்றோம். ஏனெனில் அது சர்வதேச சமூகத்தின் கடமை. அந்தக் கடமையை சர்வதேச சமூகம் உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு போதியளவு உதவிகளை சர்வதேச சமூகம் வழங்கியிருந்தது. அதன்போது தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என்ற வாக்குறுதியை சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கியிருந்தது. ஆனால், அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வைப்பது சர்வதேச சமூகத்தின் கடமை. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கருமங்களை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும். தவறினால் நிலைமைகள் போகப்போக இன்னும் மோசமடையும்.

பலவிதமான தடைகள் இலங்கை மீது விதிக்கப்படலாம். அதாவது பயணத்தடை, பொருளாதாரத் தடை, மனித உரிமைகள் சம்பந்தமான தடைகள் எனப் பல தடைகள் வரலாம். எனவே, தான்தோன்றித்தனமாகச் செயற்படும் இலங்கை அரசு, தனது தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டியது மிகவும் அத்தியாவசியம். மாறாவிட்டால் அரசின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் சாத்தியமாக அமையாது” என்றார்.

https://www.ilakku.org/?p=52372

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.