Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறுதலாக பிறகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுக்கு வந்த பின்புதான் சொந்தமாக தொலைபேசி வைத்திருக்க கூடிய நிலை வந்தது.அந்த கால கட்டத்தில் பட்டன் அழுத்தி  இலக்கங்களை தெறிவு செய்யும் தொழில் நுட்பம் கொண்ட தொலை பேசிதான் பிரபலம் .வீட்டின் வரவேற்பறையில் ஒரு தொலைபேசியை தொலைபேசி நிறுவன ஊழியர்கள் இணைத்து விட்டு சென்றார்கள்.அத்துடன் இரண்டு மகாபாரத புத்தகத்தையும் இலவசமாக தந்துவிட்டு சென்றார்கள்.ஆர்வக் கோளாறு காரணமாக புத்தகத்தை உடனடியாக திறந்து பார்த்தேன் ,ஒரு புத்தகம் தொலைபேசி பாவனையாளர்களின்  பெயர்களும் இலக்கங்களும் ,மற்றது வியாபார ஸ்தாபனங்களின் இலக்கங்களும் பெயர்களுமாக இருந்தது.தொலைபேசி வைக்கும் மேசையாக அந்த புத்தகத்தை பாவிக்கலாம் என்ற யோசனை இந்த புத்திஜீவிக்கு வரவே அதை அமுல் படுத்திவிட்டு மனைவியின் பாராட்டுக்காக காத்திருந்தேன் .

"எப்படி என்ட ஐடியா" தொலை பேசி இருந்த இடத்தை கண்ணால் காட்டினேன்

"....நேற்று சப்பட்டையின்ட கடையில் வாங்கின டெலிபோன் மேசையை பூட்டி போட்டு இதில வையுங்கோவன்"

 "இதில வைச்சாலும் வடிவாக தானே இருக்கு?,அதை ரிட்டேன் பண்ணி போட்டு காசை எடுப்போம்"

"ஐயோ இன்னும் ஊங்களுக்கு சீப் புத்தி விட்டு போகுதில்லை,10 டொலர் தானே"

" நாட்டு காசுக்கு 500 ரூபா?எவ்வளவு செய்யலாம் "

"நம்ம நாட்டு கணக்கு பார்த்து கொண்டிருந்தியளோ இந்த நாட்டில வாழ முடியாது....விசர் கதையைவிட்டிட்டு அலுவலை பாருங்கோ"

இப்படி மனிசி 25 வருசத்துக்கு முதல் திட்டினது இப்பவும் நினைவிலிருக்கு அதற்கு பிறகு இன்றுவரை நான் நாட்டுகணக்கு பார்க்கிறதில்லை ....

வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது சில சமயம் தொலைபேசி அலரும் செய்த வேலையை அரைகுறையில் விட்டிட்டு ஓடி வந்து எடுக்கும் பொழுது மறுமுனையில் தொடர்பை எடுத்தவர்கள் துண்டித்து கொண்டது தெரியவரும் . சில சமயங்களில் நேரம் கெட்ட நேரங்களில் அதாவது நடு நிசியில் வெளிநாடுகளிலிருந்து அழைப்புக்கள் வரும் கட்டிலால் எழும்பி போய் எடுக்க சோம்பலாக இருக்கும் அதனால் இருவரும் தூக்கம் போல நடித்து அந்த தொலைபேசி தொல்லையை தட்டிகழித்த சம்பவங்களும் உண்டு. இரண்டாம் தடவை ,மூன்றாம் தடவையும் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் போய் எடுப்பேன்

நானும் கொட்டாவி விட்ட படியே பேசுவேன் "‍ஹலோ ஹ ‍ஹ லொ லொ"

மறு முனையில் பேசுபவர்கள் "பதட்டத்துடனே என்ன நித்திரையே இப்ப எத்தனை மணி உங்க" என்பார்கள்

"இரவு 1 மணி,உங்க எத்தனை ம ம ணி"

"எங்களுக்கு பகல் ஒரு மணி சரியா 12 மணித்தியாலம் வித்தியாசம் , சரி சரி நீங்கள் படுங்கோ சனிக்கிழமை எடுக்கிறன்"

போனை வைத்துவிட்டு போய் படுக்கும் பொழுது

"யாரப்பா போன் எடுத்தது இந்த நேரத்தில"

"வேற யார் உம்மட மாமி தான் ,அவவுக்கு பொழுது போகுதில்லை போல எங்கன்ட நித்திரையை குழப்பி கொண்டு"

புறு புறுத்த படியே உறங்கிவி டுவேன்.

அடுத்த நாள் எழும்பியவுடன் மனிசியிட்ட சொன்னேன் கட்டிலுக்கு பக்கத்தில இருக்கிற சைட் டெபிலில் ஒரு போனை  வைப்போம் அப்ப அழைப்பு  வந்த‌வுடனே எடுக்க முடியும் என்றேன்.

மனிசியும் சம்மதம் தெரிவிக்க பழைய போன் ஒன்றையும், கெபிலும் ,அடப்பட்டர் எல்லாம் வாங்கி நம்மட தொழில் நுட்ப திறனை பாவித்து பாவனைக்கு உகந்ததாக மாற்றி விட்டேன் .

தொலை பேசி வேலை செய்கின்றதா பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு வெள்ளைக்கு போன் அடிச்சு என்ட வீட்டுக்கு அழைப்பு எடு என்றேன் அவனும் எடுத்தான்  இரண்டு தொலைபேசியும் வீர் என்று அலர தொடங்கிவிட்டது.

வெள்ளைக்கு நன்றி தெரிவித்து போனை வைத்தபின்பு வொலுயுமை குறைக்கும் வழியை கண்டுபிடித்து குறைத்து விட்டேன்

. தொல்லை கொடுப்பவை வசதியாக அருகில் இருந்தமையால் நாங்களும் நேரம் காலம் தெரியாமல் அவர்களுக்கு எடுக்க அவர்களும் எங்களுக்கு எடுக்க தொலைபேசி இல‌க்கம் சொந்தம் பந்தம் மட்டுமன்றி ,நண்பர்கள்   ,ஊரில் தெரிந்தவர்கள் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் என போய் சேர்ந்துவிட்டது .

இரண்டும் மாதம் அமர்களமாக மச்சான்,மாமன்,ஒன்றவிட்ட மாமா  மச்சான் என ஒரே பாசப்பிணைப்பில் இருந்தோம்.ஒரு கட்டத்தில் எல்லாம் கதைத்து முடிந்து கதைப்பதற்கு வேறு விடயங்களின்றி  என்ன சாப்பாடு சாப்பிட்டிங்கள் இன்று என கேட்கும் அளவுக்கு போயிருந்தது .

இரண்டுமாதத்தின் பின்பு தபால் பெட்டியில் மிகவும் மொத்தமான ஓர் கடிதவுறை இருந்தது. உடைத்து பார்த்தேன் 858 டொலர் சொச்சத்துக்கு தொலைபேசி கொம்பேனி பில் அனுப்பியிருந்தான் .திகைத்து விட்டேன் குறிப்பிட்ட காலத்தினுள் பணத்தை செலுத்தாவிடின் தண்டப்பணம் கட்ட வேண்டும் என வேறு குறிப்பிட்டிருந்தது. 

 பில்லை வைத்து ஆராச்சி செய்ய தொடங்கினேன் ..யார் யாருக்கு எடுத்திருக்கிறோம் என்னுடைய சொந்தங்கள் எத்தனை ,மனைவியின் சொந்தங்கள் எத்தனை யார் அதிக நேரம் கதைத்தது இப்படி ஆராச்சி செய்து மெல்லமாக மனிசியின் மேல் குற்றசாட்டை போட்டேன்

"உம்மட ஆட்களுடன் நீர் கதைச்ச நேரம் அதிகம்"

"என்ன ? நீங்கள் தானே சிநேகிதப்பெடியங்களுடன் அலட்டி கொண்டிருக்கிறனீங்கள் "

"பார் இந்த நம்பர் உன்ட மாமியின்ட, அரை மணித்தியாலம் கதைத்திருக்கிறீர் 150 டொலர் வந்திருக்கு"

"800 லொலருக்கு ஊரில எவ்வளவு செய்திருக்கலாம்"

"சும்மா புறுடா விடாதையுங்கோ எச்சில் கையால காகம் விரட்ட மாட்டியள் அதுக்குள்ள வந்திட்டியள் ஊருக்கு பண்ணுவன் படுப்பன் என்று"

"சரி சரி இதுக்கு போய் சண்டயை பிடிக்காமல் காசு கட்டுகின்ற விடயத்தை பார்ப்போம்... இனிமேல் தேவையில்லாமல் எடுக்காமல் இருப்போம்"   

தொலைபேசி கொம்பனியிடம் பேசி தவனை முறையில் பணம் கட்டுவதாக சொல்ல அவர்களும் சம்மதிச்சு  மாதம் எவ்வளவு கட்டமுடியும் என கேட்டார்கள்,மாதம் 100 டொலர் என்று கூறவே அவர்கள் சம்மதித்தார்கள்.

தொலைபேசி இணைப்பை துண்டித்து கொள்ளலாமா என இருவரும் பேசி கொண்டிருக்கும் பொழுது எனது அம்மா கொழும்பில் இருக்கின்ற படியால் அவருடன் உரையாட தேவை என்ற காரணத்தால் அந்த முடிவை மாற்றி  கிழமையில் ஒரு நாள் மட்டும் வெளிநாட்டுக்கு எடுப்பதாக இருவரும் தொலைபேசிக்கு மேல் அடித்து உறுதி  மொழி எடுத்துகொண்டோம்.

வெளிநாட்டு அழைப்புக்கள் தொடர்ந்து வந்தன ஆனால் நாங்கள் தொடர்ந்து எடுக்கவில்லை .

" நாங்கள் தான் உங்களை தேடி அழைக்க வேணும் நீங்கள் எடுக்கமாட்டியள் என்ன"

என குற்றசாட்டுக்கள் வர தொடங்கின .வேலைப் பளு காரணமாக எடுக்க முடியவில்லை,குழந்தைகளை பார்க்க வேணும் அது இது என சாட்டுக்களை சொல்ல அவர்களும் தொடர்ந்து அழைப்பதை நிறுத்தி விட்டார்கள்

நண்பனிடம் நடந்த விசயத்தை சொல்ல 

"உனக்கு விசரா என்ன மண்டை கழன்று போச்சே, நான் 50 சத குற்றியோட இரண்டு மணித்தியால்ம் கனடா ,இங்கிலாந்து எல்லாம் கதைக்கிறனான்  நாளைக்கு என்னோட வா கூட்டிக்கொண்டு போறன்"

" ஏங்கேயடா இருக்கு அந்த கொமினிக்கேசன் சென்றர் "

"உன்ட வீட்டுக்கு பக்கத்தில தான்"

"என்ட வீட்டுக்கு பக்கத்திலயா?இவ்வளவு நாளும் என்ட கண்னில படவில்லையே"

"நாளை இரவு பத்து மணிக்கு ரெடியா இரு நான் வந்து கூட்டிக்கொண்டு போறன்"

"இரவு 10 மணிக்கே ?,அடுத்த நாள் வேலையடா"

"வேலையா ? 50 சத கொல் முக்கியாமா?'

" சரி , நாளைக்கு வா"

அடுத்த நாள் சொன்னபடியே நேரத்திற்கு வந்தான்.

"ரெடியா போக "

"இரு வாரன் கார் திறப்பை எடுத்துகொண்டு"

"உதுல இருக்கிற சென்ரருக்கு உனக்கு கார்,காரோட பிறந்து வளர்ந்தவர் தானே....வா"

"சரி சரி வாரன்"

வெளியே வந்தவுடன் வீட்டுக்கு அருகிலிருந்த டெலிபோன் பூத்துக்குள்ள போனான்

"டேய் இது சென்ரரே பூத் அல்லோ"

"சும்மா சத்தம் போடாத சனம் வரமுதல் உள்ள வா"

உள்ளே சென்றவுடன் அதன் உரிமையாளன் போன்று பொக்கற்றிலிருந்த 50 குற்றியை எடுத்தான் ரஜனிஸ்டைலில் ரிசிவரை எடுத்து காதில் வைத்தான்

நான் கண்னால் சைகை காட்டியவுடன் நம்பரை அடி என்றான்.டெலிபோனில் திருகுதாளங்கள் செய்து கொண்டிருந்தான்

கிளிக் என்ற சத்தம் வந்தவுடன்  அவசரம் அவசரமாக கண்ணைகாட்டினான் நானும் நம்பர்களை  சூழட்டினேன்.

மறு முனையில் நண்பன்

"ஹலோ யார்"

"நான்டா அவுஸ்ரேலியாவிலிருந்து..."

"டேய் என்னடா இந்த நடுச்சாமத்தில எடுக்கிறாய் வைச்சுப்போட்டு நாளைக்கு விடிய எடுடா"என்றான்

"சரி மச்சான் வைக்கிறேன்"ரிசிவரை வைக்க பக்கத்தில நின்ற நம்ம நண்பன் ரிசர்வர் புடுங்கி எடுத்தான்

"டேய் எவ்வளவு கஸ்டப்பட்டு எடுத்தனான் நீ என்னடா என்றால் கட் பண்ணுகிறா"

"அவன் நித்திரையடா,வைக்கசொல்லுறான்"

"இந்த நம்பரை சுழட்டு நான் லண்டனுக்கு கதைச்சு பார்க்கிறேன்"

நானும் அவன் சொல்படி செய்தேன் .அவன்

ஹலோ என்று சிரித்தபடியே ரிசர்வை காதினுள் வைத்தான்.

நான் வெளியே எட்டிப்பார்த்தேன் கையில் ஐம்பது சத குற்றியுடன் ஐந்தாறு வந்தேறுகுடிகள் வரிசையாக நின்றார்கள்.

"மச்சான் வெளியில் ஆட்கள் நிற்கினம் போவோமா"

"நீ போடா வீட்டை நான் இன்னும் ஒரு அரை ம்ணித்தியாலம் கதைச்சு போட்டு வாரன்"

என்று ரிசைவரின் பேசும்பகுதியை கையால் பொத்தியபடியே சொன்னான்..

"என்னப்பா நேற்று டெலிபோனில் கணநேரம் கதைச்சனீங்கள் போல இருக்கு எவ்வளவு காசு வந்தது"

"நான் ஒருசதமும் செலவளிக்கவில்லை ,அவன் நித்திரையில் இருந்தான் ஒன்றும் கதைக்கவில்லை...ஆனால் என்னோட வந்தவன் 50 சத குற்றியை போட்டு அரைமணித்தியாலத்துக்கு மேல் லண்டனுக்கு கதைச்சவன்"

"அப்ப என்னையும் நாளைக்கு கூட்டிக்கொண்டு போங்கோ நாளைக்கு மாமியோடா கனடாக்கு கதைக்க"

"உந்த கள்ள வேலை செய்து கதைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ,உமக்கு தேவை என்றால் அவனை கூட்டிக்கொண்டு போய் மாமியோட எடுத்து கதையும்"

"அவனோடா நான் எப்படி போறது விசர் கதை கதைக்கிறீயள்"

"பின்ன பேசாமல் இரும்"

இரண்டு வருடங்கள் கழித்து கையடக்க தொலைபேசி அறிமுகமானது மெல்ல மெல்ல எல்லொரும் வாங்க தொடங்கிச்சினம் அதை பார்க்க எனக்கும்ஆசை வந்துவிட்டது.

வீட்டுக்கு ஒர் கையடக்க தொலைபேசி வாங்க கூடியதாக இருந்தது. இன்று போல் வீட்டில் வாழும் ஒருத்தருக்கு ஒன்று என்ற காலம் அல்ல அது..

நில தொலைபேசி,கையடக்க தொலைபேசி இரண்டையும் பராமரிப்பதற்கு செலவு அதிமாக இருந்தது.

கொஞ்ச காலம் மற்றைய நாடுகளில் வாழும் உறவுகள் ,நண்பர்களின் தொடர்பு குறைந்து விட்டது.தூரத்து உறவுகள் நண்பர்களின் பாசமா அல்லது பணமா என்ற கேள்வி எழுந்தது.பதிலை மனம் சொன்னது பணம் தான்டா இதில் எண்ண சந்தேகம் விசரா ?....

சில தொலைபேசி நிறுவனங்கள் விளம்பர படுத்தினார்கள் மலிவு விலையில் சில நாடுகளுக்கு தொடர்பு கொள்ளமுடியுமென்று ஆனால் நாங்கள் இணைந்து கொள்ளவில்லை..ஒரு தடவை  பட்ட அனுபவம் எம்மை பயப்படுத்தியது.

அரிசி வாங்க சிறிலங்கா ஸ்பைஸ் கடைக்கு போனேன் .அங்கு விளம்பரப்படுத்தியிருந்தார்கள் பத்து டொலருக்கு 2 மணித்தியாலம் பேசலாம் கனடா,அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளுக்கு ...

"அண்ணே என்ன இது புது டிலா இருக்கு நீங்களே இணைப்பு கொடுக்கிறினீங்கள்,"

"இல்லைடா தம்பி இப்ப புதுசா இவங்கள் கார்ட் கண்டுபிடிச்சிருக்கிறாங்கள் ...இதை  சுரண்டிபோட்டு நம்பரை

அடிச்சு போட்டு விரும்பின நாட்டு நம்பரை அடி ,இந்தா கொண்டு போய் அடிச்சு பார்"

அரிசியையும் கார்ட்டையும் வாங்கி கொண்டு வீட்டை போனேன்.

"இஞ்சாரும் இப்ப எந்த நாட்டுக்கு டெலிபோன் எடுக்கலாம் "

"ஏன்னப்பா தேவையில்லாம் அடிச்சு காசை வீணாக்கிறீயள் ஒரு நிமிசத்துக்கு 35 சதம் எடுக்கிறாங்கள் கதைக்க தொடங்கினால் நீங்கள் கதைச்சு கொண்டேயிருப்பியள்"

 

"சிவத்தாரின்ட கடையில் ஒரு கார்ட் புதுசா வந்திருக்கு இரண்டு மணித்தியாலம் கனடா,ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு கதைக்கலாமாம், இந்த நேரத்தில் எந்த நாட்டுக்கு கதைக்க முடியுமென்று பாரும்"

"கனடாவுக்கு சரியா இருக்கும் மாமியோட கதைப்போம் கொண்டாங்கோ கார்ட்டை"

கார்டை கொடுத்தேன் டெலிபோனுக்கு அருகிலிருந்து  10 சத குற்றியால் சுரண்டி

அதிலிருந்த அறிவுத்தலுக்கு ஏற்ப பதிவுசெய்து ,மாமியாருக்கு எடுத்தாள்

"‍ஹலோ மாமியா "

"ஒம் நீங்கள் "

" மாமி நான் சுதா அவுஸ்ரேலியாவிலிருந்து என்னை மறந்து போனீங்களே"

" என்னடி இன்று அதிசயமா எடுத்திருக்கிறாய் ,மழை வரப்போகுது"

"இல்லை மாமி தெரியும்தானே வெளிநாட்டு வாழ்க்கை என்றால் ,வேலைக்கு போகவேணும், வீட்டு வேலை ,சமையல் பிள்ளைகளை படிபிக்க வேண்டும் அதுதான் நேரம் கிடைக்கிறதில்லை ...இன்றைக்கு கொஞ்சநேரம் கிடைச்சது அது உங்களுக்கு எடுத்தனான்"

" ஏன்டி உன்ட மனுசன் உதவி செய்யிறதில்லையே வீட்டு வேலைகளுக்கு"

" ம்ம்ம்ம் .சரியான யாழ்ப்பாணத்தான் அவர் அசைய மாட்டார்"

"என்ட மனுசனும் யாழ்ப்பாணத்தான் தான் ஆனால் நான் அவரை சொல்லி அரைவாசி வேலை செய்து போடுவேன் "

பொல்லை கொடுத்து அடிவாங்கி கொண்டிருக்கிரேன் என நினைத்தபடி குளியலறைக்கு சென்றேன்.

சுடுதண்ணி பைப்பை திறந்துவிட்டு அதில் சுடுதண்ணி வரும் வரை வெளியே பேசுவதை ஒட்டு கேட்க முயற்சி செய்தேன் ஒன்றும் கேட்கவில்லை .

குளித்து முடித்து வெளியே வந்தேன்

"ஒம் மாமி ,சரி மாமி நான் ஆறுதலாக பிறகு எடுக்கிறன் வைக்கடே பாய்ய்ய்"

"இவ்வளவு நேரமும் அவசரப்பட்டே கதச்சனீர்"

"கி கி கி "

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ரெலிபோன் ஒரு தொல்லை.உழைப்பையே திண்டுடம்.

அமெரிக்காவில் பெரிய கம்பனிகளுக்கு 1000-5000-10000 டெலர் பெறுமதியான காட்டுகள் கொடுத்து வைத்திருப்பார்கள்.
கம்பனியில் இருந்தே நம்பர் கசிந்துவிடும்.1-2 டெலர் கொடுத்து அந்த நம்பரை வாங்கி நாங்க கதைப்போம்.
அதைக் கடடை அடிக்கப் போகிறோம் என்று சொல்லுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

50 சத குத்தி போட்டு நானும் கதைச்சிருக்கிறேன் 

 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தொலைபேசி வரலாறை சொல்லப்போனால் பொழுது விடிஞ்சிடும்......!

நல்ல நகைச்சுவையாக இருக்கின்றது கதை......நன்றி புத்ஸ் .....!  👌

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

"டேய் இது சென்ரரே பூத் அல்லோ"

"சும்மா சத்தம் போடாத சனம் வரமுதல் உள்ள வா"

உள்ளே சென்றவுடன் அதன் உரிமையாளன் போன்று பொக்கற்றிலிருந்த 50 குற்றியை எடுத்தான் ரஜனிஸ்டைலில் ரிசிவரை எடுத்து காதில் வைத்தான்

நான் கண்னால் சைகை காட்டியவுடன் நம்பரை அடி என்றான்.டெலிபோனில் திருகுதாளங்கள் செய்து கொண்டிருந்தான்

கிளிக் என்ற சத்தம் வந்தவுடன்  அவசரம் அவசரமாக கண்ணைகாட்டினான் நானும் நம்பர்களை  சூழட்டினேன்.

மறு முனையில் நண்பன்

ஜெர்மனியில் ஒரு D மார்க் குத்தியை  நூலில் கட்டி  ஒட்டியபடி 80  களிலேயே சொந்த பிசினஸ் செய்தவர்கள் பலர்😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

ஜெர்மனியில் ஒரு D மார்க் குத்தியை  நூலில் கட்டி  ஒட்டியபடி 80  களிலேயே சொந்த பிசினஸ் செய்தவர்கள் பலர்😀

இதில மகேசேன் பூத்தில் குடும்பமே நடத்தியவன்.😄

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கிங்ஸ்பேரி ரோட்டில ஒரு சமர் நாள் - அண்ணை ஒருவர் சாரத்தோட போன் பூத்துக்குள்ள கதிரை போட்டு இருந்து பேசியதை அம்மாவான என்ர கண்ணால கண்டனான்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, வாத்தியார் said:

ஜெர்மனியில் ஒரு D மார்க் குத்தியை  நூலில் கட்டி  ஒட்டியபடி 80  களிலேயே சொந்த பிசினஸ் செய்தவர்கள் பலர்😀

அந்தக் காலத்திலை  சிகரெட் மிசினுக்கை அஞ்சு மார்க் குத்தியை நூல் கட்டி இறக்கி....ஒட்டு மொத்த மிசினையே காலியாக்கினவங்கள் எல்லாம் இப்ப மற்றவன்  சிகரெட்டை இன்பமாய் இழுத்து விட மூக்கை பொத்துறாங்கள். 🤣

தன்னிவினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும். :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2021 at 14:43, ஈழப்பிரியன் said:

ரெலிபோன் ஒரு தொல்லை.உழைப்பையே திண்டுடம்.

அமெரிக்காவில் பெரிய கம்பனிகளுக்கு 1000-5000-10000 டெலர் பெறுமதியான காட்டுகள் கொடுத்து வைத்திருப்பார்கள்.
கம்பனியில் இருந்தே நம்பர் கசிந்துவிடும்.1-2 டெலர் கொடுத்து அந்த நம்பரை வாங்கி நாங்க கதைப்போம்.
அதைக் கடடை அடிக்கப் போகிறோம் என்று சொல்லுவோம்.

நன்றி ஈழப்பிரியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...டெலிபோன் பில்லுக்கு செலவளித்த காசுக்கு ஒர் கார் வாங்கியிருக்கலாம்...

22 hours ago, sathiri said:

50 சத குத்தி போட்டு நானும் கதைச்சிருக்கிறேன் 

 

இது ஒர் சர்வதேச பிரச்சனை..நீண்ட நாட்களின் எனது பகிர்வுக்கு கருத்து இட்டமைக்கு நன்றி சாத்திரியார்

21 hours ago, suvy said:

உந்த தொலைபேசி வரலாறை சொல்லப்போனால் பொழுது விடிஞ்சிடும்......!

நல்ல நகைச்சுவையாக இருக்கின்றது கதை......நன்றி புத்ஸ் .....!  👌

நன்றி சுவி ...இதை வைச்சு இன்னும் இரண்டு கிறுக்கல் கிறுக்கலாம் என்று இருக்கிறேன்

20 hours ago, வாத்தியார் said:

ஜெர்மனியில் ஒரு D மார்க் குத்தியை  நூலில் கட்டி  ஒட்டியபடி 80  களிலேயே சொந்த பிசினஸ் செய்தவர்கள் பலர்😀

நன்றி வாத்தியார் தகவலுக்கும் கருத்துக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

இதில மகேசேன் பூத்தில் குடும்பமே நடத்தியவன்.😄

நன்றி சுவைப்பிரியன் வாசிப்புக்கும் கருத்துக்கும்

11 hours ago, goshan_che said:

லண்டன் கிங்ஸ்பேரி ரோட்டில ஒரு சமர் நாள் - அண்ணை ஒருவர் சாரத்தோட போன் பூத்துக்குள்ள கதிரை போட்டு இருந்து பேசியதை அம்மாவான என்ர கண்ணால கண்டனான்🤣

நன்றி சே..வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....ஒரு வருடம் தான் அந்த் பூத் இருந்தது பிறகு கொம்பனி அதை மாற்றிவிட்டது

9 hours ago, குமாரசாமி said:

அந்தக் காலத்திலை  சிகரெட் மிசினுக்கை அஞ்சு மார்க் குத்தியை நூல் கட்டி இறக்கி....ஒட்டு மொத்த மிசினையே காலியாக்கினவங்கள் எல்லாம் இப்ப மற்றவன்  சிகரெட்டை இன்பமாய் இழுத்து விட மூக்கை பொத்துறாங்கள். 🤣

தன்னிவினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும். :cool:

நன்றி கு.சாமி ..வருகைக்கும் வாசிப்புக்கும்....கொம்னிகள் கண்டு பிடித்துவிடுவார்கள்... ஒருவருடம் தான் இப்படி சுத்துமாத்து செய்ய முடியும் பிறகு அவர்கள் வேறு தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க தொடங்கிவிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அருமை தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில பிரிட்டிஷ் ரெலிகொம்மின் ஃபோன் பூத்துக்குள் (வேற அர்த்தமாக விளங்கினால் நான் பொறுப்பில்லை🙃) பத்து பென்ஸ் நூல்விட்டது, கோட் நம்பர் பாவிச்சு இன்ரநாசல் கோல் எடுத்தது என்று ஃபோன் கதைக்கிறதில் பல விஞ்ஞானங்கள் இருந்தன.

நாங்கள் சமறிக்காசு கட்டி நண்பர்களோடு இருந்த வீட்டில் ரெலிபோன் யுனிற்றை கணக்கிடும் மெசின் இருந்தது. பக்கத்தில கொப்பியும் இருந்தது! ரெலிபோன் கதைப்பவர்கள் ஆரம்பம், முடிவு, எத்தனை யுனிற் பாவித்து என்பதையெல்லாம் எழுதவேண்டும்! அந்த மெசின் geiger counter மாதிரி டக் டக்கெண்டு சத்தம்போட்டுத்தான் எண்ணும். ரேடியோஅக்ரிவை கண்டமாதிரி வேகமாக ஓடினால் யாரோ இலங்கை உறவினர்களிடம் அல்லது சிங்கப்பூர், தாய்லாந்து, அல்லது ஆபிரிக்கா போன்ற நாடுகளில் வெளிநாடு வர இடையில் நிற்பவர்களிடம் கதைக்கின்றார்கள் என்று புரியும்.😁

இப்பவும் பழைய நினைவுகளுக்காக இரண்டு கொப்பி வைச்சிருக்கிறன்😁

புத்தர் மாதிரி பெருந்தொகை பில்லை நாங்கள் கட்டவில்லை. ஆனால் நான் இலண்டன் வர முதல் வருஷம் ஒருத்தர் கனடாவுக்கு ஃபோன் எடுத்து வெறியில் ஒழுங்காக கட் பண்ணாமல் விட்டு 800 பவுண்ட்ஸுக்கு மேல் பில் கட்டியிருந்தார்!!

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடலடி Fiber Cables கேபிள் வயர் வந்திருக்கா விட்டால் இன்னும் மேல் உள்ள கதைகள் தொடர்கதையாக இருக்கும் . சட்டிலைட் மூலம் அப்போது தகவல்கள் கடத்தப்பட இங்கும் வான் உயர தொலைபேசி விலைகள் ஆனாலும் சாட்டிலைட் சூடாகி  வெடித்துப்போகும் அளவுக்கு நம்ம ஆட்களின் கண்டுபிடிப்புக்கள் இருக்கும் .

போனில் டைவேற் பண்ணும் வசதியில் கொழும்பு லாட்ஜ் நம்பரை போட்டு விட்டு வேறு ஒரு நம்பரில் இருந்து அழைப்பை மேற்கொள்ள லோக்கல் காசில் மீற்றர்  ஓடும் அங்கு கனெக்சன் கிடைத்தவுடன் அந்த டைவேட்ஸ் வசதியை கான்சல் பண்ணி விடுவார்கள் அதன்பின் பில் வராது ஆனால் அதேநேரம் முன்பு செய்தது போல் பலருக்கு கொழுவி விடுவார்கள் பின்பு என்ன அந்த பத்து பேரும்  போன் சூடாகி  காதை  சுடுமட்டும்  கதைத்து  கொண்டு எதோ ஒரு படத்தில் விடிய விடிய நாயகனும் நாயகியும் போன் கதைக்கும் பாட்டு போல் கதைகள் நிறைய இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளை... மீட்ட  வைத்த, புத்தனுக்கு நன்றி.   :)

1985´ம்  ஆண்டளவில்... 
இங்கு ஒருவருக்கு, ஊரில் இருந்து திருமணம் பேசி...
படங்கள், சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பின்,
இரு பக்க பெற்றோரும், அவருக்கு  வர இருக்கும்... 
எதிர்கால மனைவியுடன், கதைக்கலாம் என்று..
ஒரு, தொலை பேசி இலக்கத்தைத் கொடுத்து விட்டார்கள்.

இந்தப் பெடியன்... தனது வீட்டு தொலை பேசியில்,
அந்தப்  பெண்ணிடம்,  வாய் உழையாமல்....
என்ன, கதைத்தானோ.. தெரியாது?
அந்த மாத, தொலைபேசி கட்டணம்.. 8000 மார்க் வந்து விட்டது.
(அது... இப்போதைய, 8000  ஐரோவிற்கும் அதிகமான பெறுமதி)

இந்த விடயத்தை... அப்போதைய, உள்ளூர்  ஜேர்மன் பத்திரிகையில்...
ஒரு தொழிற்சாலை,  பாவிக்கும் அளவிற்கு... 
ஸ்ரீலங்காவை சேர்ந்த ஒருவர், 
தொலை பேசியை... வீட்டில் இருந்து பாவித்துள்ளார் என்று செய்தி வந்தது.

ரோசக்காரப் பெடியன், சேர்த்து வைத்த காசை... உடனே கட்டி விட்டாலும்,

இது, அநியாய காசு.. என்றே, எனக்கு தோன்றுகின்றது.  🤔      

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2021 at 02:59, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை தோழர்..👍

நன்றி புரட்சி

 

On 27/5/2021 at 05:52, கிருபன் said:

ஒருத்தர் கனடாவுக்கு ஃபோன் எடுத்து வெறியில் ஒழுங்காக கட் பண்ணாமல் விட்டு 800 பவுண்ட்ஸுக்கு மேல் பில் கட்டியிருந்தார்!!

 

அவருக்கு தேவை... வெறியில் இப்படியான செயல்களை செய்து தண்டப்பணம் கட்டுவதை வெறிகாரார் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது

நன்றி கிருபன்

On 27/5/2021 at 15:20, பெருமாள் said:

  கொண்டு எதோ ஒரு படத்தில் விடிய விடிய நாயகனும் நாயகியும் போன் கதைக்கும் பாட்டு போல் கதைகள் நிறைய இருக்கு .

நன்றி பெருமாள் ....அந்த விடிய விடிய உரையாடலில் "பிறகு என்ன" "வேற"போன்ற சொற்கள் அதிகமாக வந்திருக்கும்

 

On 29/5/2021 at 08:08, தமிழ் சிறி said:

பழைய நினைவுகளை... மீட்ட  வைத்த, புத்தனுக்கு நன்றி.   :)

1985´ம்  ஆண்டளவில்... 
இங்கு ஒருவருக்கு, ஊரில் இருந்து திருமணம் பேசி...
படங்கள், சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பின்,
இரு பக்க பெற்றோரும், அவருக்கு  வர இருக்கும்... 
எதிர்கால மனைவியுடன், கதைக்கலாம் என்று..
ஒரு, தொலை பேசி இலக்கத்தைத் கொடுத்து விட்டார்கள்.

இந்தப் பெடியன்... தனது வீட்டு தொலை பேசியில்,
அந்தப்  பெண்ணிடம்,  வாய் உழையாமல்....
என்ன, கதைத்தானோ.. தெரியாது?
அந்த மாத, தொலைபேசி கட்டணம்.. 8000 மார்க் வந்து விட்டது.
(அது... இப்போதைய, 8000  ஐரோவிற்கும் அதிகமான பெறுமதி)

 

நன்றி தமிழ்சிறி ...அந்த கால கட்டத்தில் தொலைபேசி கட்டணம் மிகவும் அதிகம் ஒரு நிமிடத்திற்கு ...

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, putthan said:

நன்றி பெருமாள் ....அந்த விடிய விடிய உரையாடலில் "பிறகு என்ன" "வேற"போன்ற சொற்கள் அதிகமாக வந்திருக்கும்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.