Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் என்று வைரமுத்து அறிவித்துள்ளார்.

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.

அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.

202105291601510253_1_Vai._L_styvpf.jpg

வைரமுத்து

ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.
ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். 
தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/05/29134119/2685895/Tamil-cinema-vairamuthu-announced-onv-award-ll-return.vpf?fbclid=IwAR1DO1N4WML_t7wjBiRK2ET8NwH26Sak-McXCp5TMH3KJCqJHcbMaXFsQis

  • Replies 180
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் விருது கொடுக்கவே இல்லை அதுக்குள் எப்படி திருப்பிக் கொடுக்க முடியும்.🤥

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வயிரமுத்துவை யாரும் உரசிப்பார்க்கத் தேவையில்லை பத்தரை மாற்றுத் தங்கம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவர் பாலியல் கொடுமைகளை மறைக்க பழையதையெல்லாம் தூசு தட்டி மறைக்க பார்கின்றார்கள். வைரமுத்து செய்தது/ செய்யாதது...சரி/பிழை தெரியாது.ஆனால் தற்போது நடந்திருப்பது பாடசாலை மாணவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பதை கவனத்தில் எடுங்கள்.

Bild

தமிழன் யாரென்று தமிழனைத் தவிர மற்ற எல்லோருக்கும் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சோசல் மீடியா வந்தபின் உலகம் நன்கு மாறிவிட்டது. 

தனிநபர்கள் ஆளையாள் பிளக் மெயில் செய்வதற்கும், பழிவாங்குவதற்கும் சோசல் மீடியா நல்ல வசதியாகிவிட்டது. ஒன்லைனில் விரோதங்களை வெளிப்படுத்துவது, பல்வேறு ஒன்லைன் மோசடிகள் நாளாந்த வாழ்வின் பகுதியாகிவிட்டன. சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது ஒரு வகை. திட்டமிட்டு சோசல்மீடியாவில் சாணி அடிப்பது  இன்னோர் வகை. 

எமக்கு வைரமுத்து என்கின்ற பாடல் ஆசிரியர், கவிஞர் அவர் பாடல்கள், கவிதைகள் வாயிலாக பரீட்சயம். ஆனால், வைரமுத்து என்கின்ற தனிமனிதனின் குணாம்சங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, நடத்தை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. 

திருக்குறள் உலகப்பொதுமறை என போற்றப்படுகின்றது. இதை இயற்றியவர் திருவள்ளுவர் என சொல்லப்படுகின்றது.

திருவள்ளுவர் காலத்தில் சோசல்மீடியா பாவனை காணப்பட்டால்.... அவருக்கும் சாணி அடி???

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே இந்த நிகழ்வை பற்றி நாம் எழுந்தமானமாக கருத்து சொல்வது தவறு என இன்னொரு திரியில் சொல்லி இருந்தாலும்.

நாம் ஈழத்தமிழர் இதில் ஏன் சும்மா மண்டையை போட்டு உடைக்கிறோம்?

முள்ளிவாய்கால் நேரம் ஸ்டாலின், கனிமொழி, காஸ்பர் எல்லாரையும் விட தினமும் காலையில் கருணாநிதி போன் போட்டு கதைக்கும் நிலையில் அவரின் நடைபயண நண்பனாக இருந்தவர் வை.மு.

நியாயமாக பார்த்தால் சுபவி போன்றோர் முயன்றளவு கூட முள்ளிவாய்க்காலை நிறுத்த இவர் முயலவில்லை.

அதை விட கொடுமையாக எல்லாம் முடிந்த பின் வந்து “முள்ளிவாய்க்கால் போய் வந்தேன்” என ஒப்பாரி வேறு வைத்தார்.

இவருக்கு என்ன ஆனால் எமக்கென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
  •  
     
1
 
வைரமுத்து பாலுறவுக்கு அழைத்தாரா இல்லையா என்று தெரியாது.அதை நிரூபிப்பதும் மிகவும் கடினம் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
நடைமுறை ஒழுக்கம் சார்ந்த பார்வையை ஒரு புறம் வைத்துவிட்டுப்பார்த்தால்,
வைரமுத்து அழைத்தார் என்றால் சம்பந்தப்பட்ட நபரின் ஏற்பு அல்லது மறுப்புடன் முடிந்துவிடக்கூடிய இரு நபர்களுக்கு இடையிலான விவகாரம்.
மறுத்த பின்னரும் வைரமுத்து தனது செல்வாக்கை வைத்து மிரட்டினார்,வாய்ப்புகளைத் தடுத்தார் என்றால் அது நிரூபிக்கக் கடினமானதல்ல.
வாய்ப்புகளை பாடகிக்குத் தடுப்பதென்றால் வைரமுத்துவால் அதை நேரடியாகச் செய்யமுடியாது, இசையமைப்பாளரிடமோ,இயக்குநரிடமோ,தயாரிப்பாளரிடமோ கூறித்தான் செய்திருக்கமுடியும்.
அப்படி எவரும் இன்னாருக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என்று வைரமுத்து தங்களிடம் கேட்டதாக இதுவரைக் கூறவில்லை.
வைரமுத்து பாலியல் உறவுக்கு அழைத்தார் என்பதைத் தாண்டி அவர் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அழுத்தம் கொடுத்தாரா என்று உறுதியாகக் கூறமுடியாது.
இன்றைய நவீன பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அழைத்தார் என்பதை ஒரு குற்றமாக வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. அழைத்தார் என்றால் மறுத்துவிடலாம் அல்லது திட்டி அவமானப்படுத்திவிடலாம்.அதைத் தாண்டி அழுத்தம் கொடுத்தார் என்றால் அதைக் குற்றமாகக் கருதலாம்.
அழைத்தார் என்பதையே எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றமாகக் கருதினால் அது அழைக்காத ஆண்களைக்கூட பழிவாங்கப் பயன்படும் ஆயுதமாக மாறும் வாய்ப்பு அதிகம்.
வைரமுத்து அழைத்திருந்தால்கூட அதற்கு அதிகமாகவே தண்டனையைப் பெற்றுவிட்டார்.இன்று அவர் தனது வாழ்நாள் சேமிப்பான நற்பெயர் புகழ் அனைத்தையும் இழந்து அவமானத்தைச் சுமந்து நிற்கிறார்.
அவரின் நிலையில் நம்மை ஒரு கணம் நிறுத்திப் பார்த்தால் அவர் எத்தனை தூரத்துக்கு அந்த அவமானத்தை அனுபவிக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.
இதற்கும் மேலாக இன்னுமொரு மாநிலத்தில் எல்லாம் வைரமுத்துவை அவமானப்படுத்துவது சாடிஸம்.
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

ம்..ம்ம்ம்.... 

தமிழ்..... பயன் பெறும்....

அதுதான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ம்..ம்ம்ம்.... 

தமிழ்..... பயன் பெறும்....

அதுதான் காரணம்.

ம்ம்ம்…இவர் பெரிய கம்பன்…

திரை வெளிச்சம் மட்டும் இல்லாவிட்டால் இவர் ஜஸ்ட் இன்னொரு கவிஞர்.

காசி ஆனந்தன், புதுவை, அறிவுமதி, மேத்தா, அப்துல் ரஹ்மான்…

தமிழ் இஸ் குவைட் ஆல் ரைட், டோண்ட் வொறி.

புதுவை ஐயா எங்கே எண்டு கூட தெரியவில்லை - அவருக்கு பொங்குவார் யாருமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ம்..ம்ம்ம்.... 

தமிழ்..... பயன் பெறும்....

அதுதான் காரணம்.

எண்ட குருவாயூரப்பா! 

அப்ப தமிழ் பயன்பெறும் என்ற நோக்கத்திற்காக தெலுங்கு வழி வந்த கருணாநிதியிடம் இந்த "மென் அணுகுமுறையை" நீங்கள் ஏன் பின்பற்றவில்லை?  

(ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு "பட்ஜ்" , இப்ப தமிழ் பட்ஜில் வந்து நிக்குது!)

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கால நக்கீரனில் இருந்து.. இந்தக் கால வைரமுத்து வரை கவிஞர்களுக்கு சோதனை வருவது இயல்பு.

ஒரு சில பேரின் காழ்புணர்ச்சிக்கு.. விருதைப் பரிசீலிக்கும் பலவீனமான இடத்தில் இருந்து விருதை வாக்குவதை விட அதை நிராகரிப்பது.. தமிழுக்கும்.. தமிழ் கவிஞனின் திறமைக்கும் சிறப்பு எனலாம்.

வாழ்க வைரமுத்து ஐயா. கொரோனா காலத்தில்.. இந்த விருது விழாக்களுக்கு போவதும் ஆபத்து. நிராகரிப்பதே நல்லது.

பழுத்த மரத்தின் மீது கல்லெறியும் கூட்டமும் உண்டு... கவுண்டு கிடக்கும் வெளவ்வால்களும் உண்டு. அதையும் தாண்டி.. பழங்கள்.. சுவைக்க மறுப்பதில்லை. மரங்கள் கனி தர மறப்பதில்லை. 

காழ்புணர்ச்சிகளை.. உறுதியோடு கடந்து சென்று விடுங்கள்.. தகாததை நிராகரித்து வென்று விடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வைரமுத்து செய்தது/ செய்யாதது...சரி/பிழை தெரியாது.ஆனால் தற்போது நடந்திருப்பது பாடசாலை மாணவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பதை கவனத்தில் எடுங்கள்.

30க்கும் அதிகமான மாணவிகள் தங்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி நடந்தது என்று பொலிசில் முறைபாடு செய்ததையிட்டு ஆசிரியர் கைது செய்யபடுகிறார்.சின்மயி பொலிசில் முறைபாடே செய்யவில்லையே. பாடசாலை மாணவர் பாலியல் துஷ்பிரயோகத்திலும் அபிலாஷ் போன்றவர்கள் கேட்கலாம் ஒரு பெண்ணிடம் பாலியல் முயற்சி செய்யாத ஆண்கள்  இங்கு உண்டா என்று.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:
  •  
     
  •  
     
1
 
வைரமுத்து பாலுறவுக்கு அழைத்தாரா இல்லையா என்று தெரியாது.அதை நிரூபிப்பதும் மிகவும் கடினம் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
நடைமுறை ஒழுக்கம் சார்ந்த பார்வையை ஒரு புறம் வைத்துவிட்டுப்பார்த்தால்,
வைரமுத்து அழைத்தார் என்றால் சம்பந்தப்பட்ட நபரின் ஏற்பு அல்லது மறுப்புடன் முடிந்துவிடக்கூடிய இரு நபர்களுக்கு இடையிலான விவகாரம்.
மறுத்த பின்னரும் வைரமுத்து தனது செல்வாக்கை வைத்து மிரட்டினார்,வாய்ப்புகளைத் தடுத்தார் என்றால் அது நிரூபிக்கக் கடினமானதல்ல.
வாய்ப்புகளை பாடகிக்குத் தடுப்பதென்றால் வைரமுத்துவால் அதை நேரடியாகச் செய்யமுடியாது, இசையமைப்பாளரிடமோ,இயக்குநரிடமோ,தயாரிப்பாளரிடமோ கூறித்தான் செய்திருக்கமுடியும்.
அப்படி எவரும் இன்னாருக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என்று வைரமுத்து தங்களிடம் கேட்டதாக இதுவரைக் கூறவில்லை.
வைரமுத்து பாலியல் உறவுக்கு அழைத்தார் என்பதைத் தாண்டி அவர் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அழுத்தம் கொடுத்தாரா என்று உறுதியாகக் கூறமுடியாது.
இன்றைய நவீன பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அழைத்தார் என்பதை ஒரு குற்றமாக வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. அழைத்தார் என்றால் மறுத்துவிடலாம் அல்லது திட்டி அவமானப்படுத்திவிடலாம்.அதைத் தாண்டி அழுத்தம் கொடுத்தார் என்றால் அதைக் குற்றமாகக் கருதலாம்.
அழைத்தார் என்பதையே எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றமாகக் கருதினால் அது அழைக்காத ஆண்களைக்கூட பழிவாங்கப் பயன்படும் ஆயுதமாக மாறும் வாய்ப்பு அதிகம்.
வைரமுத்து அழைத்திருந்தால்கூட அதற்கு அதிகமாகவே தண்டனையைப் பெற்றுவிட்டார்.இன்று அவர் தனது வாழ்நாள் சேமிப்பான நற்பெயர் புகழ் அனைத்தையும் இழந்து அவமானத்தைச் சுமந்து நிற்கிறார்.
அவரின் நிலையில் நம்மை ஒரு கணம் நிறுத்திப் பார்த்தால் அவர் எத்தனை தூரத்துக்கு அந்த அவமானத்தை அனுபவிக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.
இதற்கும் மேலாக இன்னுமொரு மாநிலத்தில் எல்லாம் வைரமுத்துவை அவமானப்படுத்துவது சாடிஸம்.

நன்றி சகோ

மிகச்சரியான கருத்து

எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கும் என்பார்கள்

வைரமுத்து செய்தது சரியா என்பதைபோல இவர்களும் வளரும் வரை வாயை எதை வைத்து ஒட்டிக்கொண்டு இருந்தார்கள் என்பதும் ஆராயப்படணும் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ம்ம்ம்…இவர் பெரிய கம்பன்…

திரை வெளிச்சம் மட்டும் இல்லாவிட்டால் இவர் ஜஸ்ட் இன்னொரு கவிஞர்.

காசி ஆனந்தன், புதுவை, அறிவுமதி, மேத்தா, அப்துல் ரஹ்மான்…

தமிழ் இஸ் குவைட் ஆல் ரைட், டோண்ட் வொறி.

புதுவை ஐயா எங்கே எண்டு கூட தெரியவில்லை - அவருக்கு பொங்குவார் யாருமில்லை.

கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலக யுத்தம் போன்ற ஆக்கங்களை வாசித்தால், அவரையும் அவரது தமிழையும் நேசிப்பீர்கள்.

****

2018 ஜனவரியில் தொடர்ந்து மூன்று வாரங்கள் 4 பாலியல் பலாத்கார வழக்குகள் இங்கிலாந்தில், நீதிமன்றத்தால் தூக்கி வீசப்பட்டன.

சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனைத்துமே, குறித்த பெண்களின் கதைகளின் உண்மைத்தன்மையினை பகுத்தறியாது வழக்கு தொடுத்தமைக்கும், போலீசாரையும், முடிக்குரிய வழக்கு தொடரகத்தினை கண்டித்தன. ஒரு வழக்கில், பெண் அனுப்பிய, ஆணை அன்று இரவு ஆணுறை  உடன் வருமாறு கூறிய sms தகவலை நீதிமன்றில் சொல்லாமல் மறைத்தமை தொடர்பில் விசாரணை அதிகாரி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதாவது அந்த பெண்ணே அவரை அழைத்து இருக்கிறார், பின்னர் பாலியல் வல்லுறவு என்று முறைப்பாடு ஒன்றினை (வேறு வாக்குவாதம் ஒன்று அடுத்த நாள் நடந்ததால்) கொடுத்து சிக்க வைக்க முயன்று இருக்கிறார்.

(இதுக்கு லிங்க் கேட்க்காதீங்கோ, தேட நேரமில்லை)😁

டாக்ஸி பணம் கொடுக்கும் பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிய, வெள்ளை பெண், பங்களாதேஷ் டாக்ஸி டிரைவர் தன்னை காரினுள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சொல்லி போலீசார் அந்த டிரைவரை கைது செய்தனர். நல்ல காலமாக, வாக்குவாதம் ஆரம்பித்த போதே, தெய்வாதீனமாக சாம்சுங் தொலைபேசியில் பதிவு செய்ததால் தப்பினார். பெண் 9 மாதம் சிறை சென்றார்.

இதனால் இப்போது, மிக கவனமாக இந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். ஆகவே இந்த பெண்கள் குறித்த பாலியல் விவகாரங்களை கவனமாக அதன் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டுமே அன்றி சும்மா எழுந்தமானமாக முடிவு எடுக்க முடியாது.

யாருக்கு தெரியும், நமக்கும் அந்த நிலைமை வரலாம், ஆகவே, பெண்களுடன் தனியே பேசுவதாக இருந்தால், போனை ஓன் பண்ணி வைக்க வேண்டும்.😜

தவிர, நான் நேற்று ஒரு சின்மயி சுஜ வீடியோ பகிர்ந்தேன். சின்மயின் தனி மனி(சி)த   ஒழுக்கம் குறித்த சந்தேகங்கள் எனக்கு உண்டு. ஒரு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், அதுவும் சக பாடகி, சுசி மீது லாகவமாக மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தான் தப்பிக்க முனைவது, தான் சம்பந்தமான விடயம் எதையோ மறைப்பதாக  அப்பட்டமாக தெரிகிறது.

உண்மையில் சுசி மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை. பாலியல் தாக்குதலால் மன அழுத்தத்தில் இருந்தார். தான் தனுசினால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்று அவரே ட்வீட் செய்து இருந்தார். அந்த மன அழுத்தத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தப்பிக் கொண்டார்கள் அயோக்கியர்கள்.

உண்மையில் நான் தனுசின் எந்த படத்தினையும் பார்ப்பதில்லை. ஒழுக்கம் இன்மை முறைகேடு. பாலியல் பலாத்காரம் கிரிமினல் வேலை.

பாலியல் பலாத்காரம் செய்து, கணவருக்கு பெரும் பணம் கொடுத்து, பெண்ணை மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி, தப்பித்தது எப்படிப்பட்ட கிரிமினல் வேலை என்று யோசித்தால், இந்த சின்மயி குறித்த தகவல்களை வெளியிட்ட அதே பெண்ணை, அதே சின்மயி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி எப்படி, தான் தப்பிக்க முனைகிறார் என்று புரியும்.

***

சுஜியின் டிவீட்டர் கணக்கினை ஹேக் பண்ணியவர்களுக்கு, மார்பிங்க் செய்ய வேண்டிய தேவை என்ன என்று யாரும் கேட்கவில்லை. அந்த பெண் போலீசுக்கு போகாததன் காரணம், அவரின் முன்னைய ஒழுக்கமின்மையாக, அது படம் பிடிக்கபட்டிருக்கலாம் என்ற கவலையாக இருந்திருக்கலாம். யாருக்கு தெரியும்.

3 hours ago, Justin said:

எண்ட குருவாயூரப்பா! 

அப்ப தமிழ் பயன்பெறும் என்ற நோக்கத்திற்காக தெலுங்கு வழி வந்த கருணாநிதியிடம் இந்த "மென் அணுகுமுறையை" நீங்கள் ஏன் பின்பற்றவில்லை?  

(ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு "பட்ஜ்" , இப்ப தமிழ் பட்ஜில் வந்து நிக்குது!)

கருணாநிதியை வெறுப்பது அவர் செய்த அரசியலுக்காகவே அன்றி தமிழுக்கு ஆக அல்லவே.
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலக யுத்தம் போன்ற ஆக்கங்களை வாசித்தால், அவரையும் அவரது தமிழையும் நேசிப்பீர்கள்.

இந்த மூன்றையும் படிக்கவும் இல்லை. படிக்கவும் போவதில்லை! ஆனால் தமிழை நேசிக்கத்தான் செய்கின்றோம். உண்மையில் மகாபாராதத்தை நவீன காவியமாக மீண்டும் தந்த ஜெயமோகனின் வெண்முரசு (26 நாவல்கள்) படித்தால் தமிழின் செழுமை புரியும்.

வைரமுத்து நல்ல பாடலாசிரியர். அவரது திரைப்பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவர் நல்ல கவிஞர் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

மேலே நான் எழுதியதை மீண்டும் வாசித்து, (கடைசி நான்கு பத்திகள்) சின்மயி நம்பிக்கை கொள்ள கூடிய ஒருவரா என்று சொல்லுவீர்களா? 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Nathamuni said:

கருணாநிதியை வெறுப்பது அவர் செய்த அரசியலுக்காகவே அன்றி தமிழுக்கு ஆக அல்லவே.

 👋🏽அது....👍🏽 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

மேலே நான் எழுதியதை மீண்டும் வாசித்து, (கடைசி நான்கு பத்திகள்) சின்மயி நம்பிக்கை கொள்ள கூடிய ஒருவரா என்று சொல்லுவீர்களா? 🤔

சாரி.  நான் நாலாந்தர கொசிப்புக்களை படிப்பது குறைவு. படித்தாலும் நீதி சொல்லும் அளவிற்கு கனவான் இல்லை.😏

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

சாரி.  நான் நாலாந்தர கொசிப்புக்களை படிப்பது குறைவு. படித்தாலும் நீதி சொல்லும் அளவிற்கு கனவான் இல்லை.😏

அப்படியானால், வைரமுத்துவின் மீது குற்றம் சொல்வதே ஒரு அடிப்படை இல்லாத கொசிப் தானே கிருபன் அய்யா.

நான் வாசித்ததால் சொல்கிறேன், கண்ணால் காண்பதுவும் பொய், காதல் கேட்பதுவும் பொய், தீர விசாரிப்பதே உண்மை. அதுக்கு சின்மயி போலீசுக்கு போகவேண்டும். அதனை தடுப்பது, தனுஷ் விவகாரம். அது கிளறப்படும் என்பதால். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அப்படியானால், வைரமுத்துவின் மீது குற்றம் சொல்வதே ஒரு அடிப்படை இல்லாத கொசிப் தானே கிருபன் அய்யா.

சமூக வலைத்தளங்களில் நீதி கொடுக்கின்றோம் என்று தனிநபர்களின் தனிப்பட்ட விடயங்களில் அத்துமீறுவது கொசிப்புக்கு தீனி போடும் செயல்.

இந்த விடயங்கள் நீதிமன்று போய் சரியாக விசாரிக்கப்பட்டால் எவர் உண்மை சொல்கின்றார் என்பது புரியும். அப்படிப் போகமுடியவில்லை என்றால் நீதி கிடைக்காது என்று புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அடுத்த பரபரப்பு நியூஸ் தொடங்க எல்லோரும் இதனை மறந்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலக யுத்தம் போன்ற ஆக்கங்களை வாசித்தால், அவரையும் அவரது தமிழையும் நேசிப்பீர்கள்.

****

2018 ஜனவரியில் தொடர்ந்து மூன்று வாரங்கள் 4 பாலியல் பலாத்கார வழக்குகள் இங்கிலாந்தில், நீதிமன்றத்தால் தூக்கி வீசப்பட்டன.

சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனைத்துமே, குறித்த பெண்களின் கதைகளின் உண்மைத்தன்மையினை பகுத்தறியாது வழக்கு தொடுத்தமைக்கும், போலீசாரையும், முடிக்குரிய வழக்கு தொடரகத்தினை கண்டித்தன. ஒரு வழக்கில், பெண் அனுப்பிய, ஆணை அன்று இரவு ஆணுறை  உடன் வருமாறு கூறிய sms தகவலை நீதிமன்றில் சொல்லாமல் மறைத்தமை தொடர்பில் விசாரணை அதிகாரி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதாவது அந்த பெண்ணே அவரை அழைத்து இருக்கிறார், பின்னர் பாலியல் வல்லுறவு என்று முறைப்பாடு ஒன்றினை (வேறு வாக்குவாதம் ஒன்று அடுத்த நாள் நடந்ததால்) கொடுத்து சிக்க வைக்க முயன்று இருக்கிறார்.

(இதுக்கு லிங்க் கேட்க்காதீங்கோ, தேட நேரமில்லை)😁

டாக்ஸி பணம் கொடுக்கும் பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிய, வெள்ளை பெண், பங்களாதேஷ் டாக்ஸி டிரைவர் தன்னை காரினுள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சொல்லி போலீசார் அந்த டிரைவரை கைது செய்தனர். நல்ல காலமாக, வாக்குவாதம் ஆரம்பித்த போதே, தெய்வாதீனமாக சாம்சுங் தொலைபேசியில் பதிவு செய்ததால் தப்பினார். பெண் 9 மாதம் சிறை சென்றார்.

இதனால் இப்போது, மிக கவனமாக இந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். ஆகவே இந்த பெண்கள் குறித்த பாலியல் விவகாரங்களை கவனமாக அதன் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டுமே அன்றி சும்மா எழுந்தமானமாக முடிவு எடுக்க முடியாது.

யாருக்கு தெரியும், நமக்கும் அந்த நிலைமை வரலாம், ஆகவே, பெண்களுடன் தனியே பேசுவதாக இருந்தால், போனை ஓன் பண்ணி வைக்க வேண்டும்.😜

தவிர, நான் நேற்று ஒரு சின்மயி சுஜ வீடியோ பகிர்ந்தேன். சின்மயின் தனி மனி(சி)த   ஒழுக்கம் குறித்த சந்தேகங்கள் எனக்கு உண்டு. ஒரு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், அதுவும் சக பாடகி, சுசி மீது லாகவமாக மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தான் தப்பிக்க முனைவது, தான் சம்பந்தமான விடயம் எதையோ மறைப்பதாக  அப்பட்டமாக தெரிகிறது.

உண்மையில் சுசி மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை. பாலியல் தாக்குதலால் மன அழுத்தத்தில் இருந்தார். தான் தனுசினால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்று அவரே ட்வீட் செய்து இருந்தார். அந்த மன அழுத்தத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தப்பிக் கொண்டார்கள் அயோக்கியர்கள்.

உண்மையில் நான் தனுசின் எந்த படத்தினையும் பார்ப்பதில்லை. ஒழுக்கம் இன்மை முறைகேடு. பாலியல் பலாத்காரம் கிரிமினல் வேலை.

பாலியல் பலாத்காரம் செய்து, கணவருக்கு பெரும் பணம் கொடுத்து, பெண்ணை மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி, தப்பித்தது எப்படிப்பட்ட கிரிமினல் வேலை என்று யோசித்தால், இந்த சின்மயி குறித்த தகவல்களை வெளியிட்ட அதே பெண்ணை, அதே சின்மயி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி எப்படி, தான் தப்பிக்க முனைகிறார் என்று புரியும்.

***

சுஜியின் டிவீட்டர் கணக்கினை ஹேக் பண்ணியவர்களுக்கு, மார்பிங்க் செய்ய வேண்டிய தேவை என்ன என்று யாரும் கேட்கவில்லை. அந்த பெண் போலீசுக்கு போகாததன் காரணம், அவரின் முன்னைய ஒழுக்கமின்மையாக, அது படம் பிடிக்கபட்டிருக்கலாம் என்ற கவலையாக இருந்திருக்கலாம். யாருக்கு தெரியும்.

கருணாநிதியை வெறுப்பது அவர் செய்த அரசியலுக்காகவே அன்றி தமிழுக்கு ஆக அல்லவே.
 
அப்ப கருணநிதி. ..தமிழன் தானே? தமிழ் வளர்த்த ஒருவனை  ஏன்? தெலுங்கனென்று அழைக்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நடப்பது குழுவாதமே அன்றி வேறொன்றுமில்லை அங்கு நடப்பது வேறு இங்கு கதைப்பது வேறு நமக்கு இங்கு வேலையில்லை இன்னும் ஐந்தாறு பக்கத்துக்கு பத்த  வைப்பினம் போல் உள்ளது எஸ்கேப் 🏃‍♂️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kandiah57 said:

அப்ப கருணநிதி. ..தமிழன் தானே? தமிழ் வளர்த்த ஒருவனை  ஏன்? தெலுங்கனென்று அழைக்கிறீர்கள் 

தமிழ் வளர்த்த பல ஆங்கிலேயர்கள் இருக்கின்றார்கள். அவர்களை தமிழன் என்றா அழைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

சமூக வலைத்தளங்களில் நீதி கொடுக்கின்றோம் என்று தனிநபர்களின் தனிப்பட்ட விடயங்களில் அத்துமீறுவது கொசிப்புக்கு தீனி போடும் செயல்.

இந்த விடயங்கள் நீதிமன்று போய் சரியாக விசாரிக்கப்பட்டால் எவர் உண்மை சொல்கின்றார் என்பது புரியும். அப்படிப் போகமுடியவில்லை என்றால் நீதி கிடைக்காது என்று புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அடுத்த பரபரப்பு நியூஸ் தொடங்க எல்லோரும் இதனை மறந்துவிடுவார்கள்.

அதனால் தான் சொல்கிறேன். சின்மயி, ஸ்ரீ ரெட்டி, விஜயலட்சுமி எல்லோருமே குற்றம் சுமத்தியதின் பின்னணி காரணம் வேறு.

மூவரும் சினிமா உலகம். அது எப்படி பட்டது என்று எமக்கு புரியும்.

மேலும், புலவர் இணைப்பில் உள்ளது மிக சரியானது. சாதாரண வாழ்க்கையிலேயே, கணவன், 'என்னப்பா, என்ன மாதிரி' என்று தொடங்குவார்.... சும்மா படுங்கோ.... எனக்கு சரியான வேலை, ரெஸ்ட் வேணும் எண்டோன்ன கணவர் ஆப் ஆகிவிடுவார்.  அதன் பெயர் பாலியல் சீண்டுதல் இல்லை.

வைரமுத்து, கேட்டிருந்தால் தப்பிலேயே. இல்லை என்று போக வேண்டியதுதானே. சினிமா துறையில் சான்ஸ் வாங்கி கொடுக்க, யாரும் அவரை அணுகி இருக்கலாம், அவரும் கேட்டிருக்கலாம், சிலர் சம்மதித்து இருக்கலாம், சிலர் இல்லை என்று போயிருக்கலாம். அது தவறு இல்லை.

மேலும், ஒரு பாடல் பதிவுக்கு வீணை இசைக்கு, வீணை காயத்திரியை, இளையராஜா அழைத்து இருந்தார். அவரது அழகில் இளையராஜா கிரங்கிப் போய், அழைத்து, அழைத்து உருகினார். தன்னை (இரண்டாம்) கலியாணம் செய்தால் ராணி மாதிரி வைத்திருப்பேன் என்று சொல்லி இருக்கிறார். பெண், வெளிநாட்டில் இருந்த கணவருடன் போய் சேர்ந்து அங்கேயே இருந்து தப்பிக் கொண்டார். அது மோகம் அது பாலியல் சீண்டல் இல்லை.

தனுஷ் செய்ததாக சுசி சொன்னது, கிரிமினல் பாலியல் பலாத்காரம்.
 
13 minutes ago, பெருமாள் said:

இந்த திரியில் நடப்பது குழுவாதமே அன்றி வேறொன்றுமில்லை அங்கு நடப்பது வேறு இங்கு கதைப்பது வேறு நமக்கு இங்கு வேலையில்லை இன்னும் ஐந்தாறு பக்கத்துக்கு பத்த  வைப்பினம் போல் உள்ளது எஸ்கேப் 🏃‍♂️

வைரமுத்தரை பத்தி கதைத்தால், கருணாநிதியை கொண்டு வந்து இழுப்பது ஏன் என்று புரியவில்லை. நானும் எஸ்கேப்....

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.