Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலை

ReutersCopyright: Reuters

கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் முன்னரே திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான கனடிய நபர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு க்யூபெக் மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்திருக்கும் மிக மோசமான தாக்குதலாகும் இது.

முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி பால் வைட் தெரிவித்துள்ளார்.

74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தனியே முஸ்லிம்கள்  மீதான தாக்குதல் என்று  நாம் தாண்டிவிட  முடியாது

நாம்   ஒவ்வொருவரும் எமது  அடுத்த தலைமுறையை எந்த  இடத்தில் விட்டுள்ளோம் என்று  சிந்திக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தனியே முஸ்லிம்கள்  மீதான தாக்குதல் என்று  நாம் தாண்டிவிட  முடியாது

நாம்   ஒவ்வொருவரும் எமது  அடுத்த தலைமுறையை எந்த  இடத்தில் விட்டுள்ளோம் என்று  சிந்திக்கணும்

அகதி என்றோ அல்லது வெளிநாட்டுக்காரன் என்றோ அல்லது கறுப்பன் என்று சொல்லியோ தக்குதல் நடத்தப்பட்டால் அது பொதுவாகவே புலம்பெயர்ந்தவர்கள் வெளிநாடுகளில்  எதிர்பார்க்ககூடிய ஒன்றுதான்.

ஆனால் ஒரு மதக்காரன் என்று பலமுறை உலகின் பல பாகங்களில் இவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகிறதென்றால் இவ்வளவு வெறுப்புணர்வு ஏற்படுவதற்கு  இவர்கள் பிற இனங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதும் ஆராயப்படணும்.

கொல்லப்பட்ட  இந்த முஸ்லீம்களுக்கும் அதேவேளை 

லொறி ஏத்தி நசுக்குவது, கத்தியால் குத்துவது, குண்டுகள் வைப்பது,துப்பாக்கிசூடு,தலை துண்டிப்பு,காரால் மோதுவது என்று முஸ்லீம்களால் இதுவரை கொல்லப்பட்ட மக்களுக்கும் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

உங்களை இவ்வாறு எழுத தூண்டியது மீடியாக்கள் 
வீண் பரப்புரை மூலம் எங்களை மூளைச்சலவை செய்கிறார்கள் 

கனேடிய இராணுவம் இதுவரை முஸ்லீம் நாடுகளில் கொன்றவர்களின் 
எண்ணிக்கையை பார்த்தால் அது வேறு கணக்கு. 

இந்த முஸ்லீம் தீவிரவாதம் என்பதை வளர்ப்பது இஸ்திரேல் 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரை ஏற்றி படுகொலை

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரை ஏற்றி படுகொலை

டொரண்டோ:

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் லண்டன் நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவர்கள் மீது காரை மோதினார். இதில் அவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் மீண்டும் அவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் அவர்கள் கார் சக்கரங்களில் சிக்கி நசுங்கினர். இந்த கோர சம்பவத்தில் 74 மற்றும் 44 வயதான 2 பெண்கள், 46 வயதான ஒரு ஆண் மற்றும் 15 வயதான சிறுமி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் அந்த குடும்பத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பினான்.‌அதனை தொடர்ந்து காரை மோதி தாக்குதல் நடத்திய அந்த வாலிபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.‌

தாக்குதல் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை
 
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளியை போலீசார் தேடினர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே முதற்கட்ட விசாரணையில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என தெரியவந்தது.‌ எனவே இது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.‌ இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

https://www.maalaimalar.com/news/topnews/2021/06/09012346/2718206/Tamil-News-family-of-four-killed-in-premeditated-Canada.vpf

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்து தாக்குதல்- பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்

1-26-696x465.jpg
 9 Views

கனடாவில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வாகனத்தை மோதச்செய்து  தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் இறந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். மதிஹா சல்மான் (44), சல்மான் அஃப்சல் (46), யாம்னா அஃப்சல் (15), அஃப்சலின் 74 வயது தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

அவர்கள் மோதிக் கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நடந்த தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல் என்று கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, இது இந்த நாட்டில் வெறுப்புணர்வுக்கோ இனவாத போக்குக்கோ இடமில்லை என கருதுவோர் உண்டென்றால், பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தையின் முகத்தை பார்த்து எப்படி என்னால் அதை தெரிவிக்க முடியும்? இஸ்லாமோஃபோபியா என்பது உண்மையில்லை என்பதை எப்படி அந்த சிறாரின் குடும்பத்தினரின் கண்களை பார்த்து என்னால் எப்படி தெரிவிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.ilakku.org/?p=51947

மிகவும் மனதை வருத்துகின்ற நிகழ்வு இது. பாகிஸ்தானில் இருந்து வந்து குடியேறி சாதாரண வாழ்வு வாழ்ந்த குடும்பம் இன்று ஒரு யூத இன 20 வயது இளைஞனால் சிதைக்கப்பட்டு இருக்கு. மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் ஒரே நாளில், ஒரே வினாடியில் அப்பா, அம்மா, அக்கா, பாட்டி ஆகியோரை கண் முன்னாலேயே கொடூரமாக இழந்து யாருமற்ற ஒரு அனாதையாகி ஆகியுள்ளார்.

அடிப்படைவாத பாகிஸ்தானிய சிந்தனைகளில் இருந்து விலகி கனடாவின் வாய்ப்புகளை பயன்படுத்தி, மனைவி PhD யின் இறுதி ஆண்டிலும், மகள் உயர் பாடசாலையிலும் கற்று வந்துள்ளனர்.

ஞாயிறு பின்னேரம் பூங்காவில் காலாற நடந்து விட்டு வருவோம் என்று புறப்பட்ட இக் குடும்பம் முஸ்லிம் ஆக இருக்கின்ற ஒரே ஒரு காரணத்தினால் சிதைக்கப்பட்டு விட்டனர்.

On 8/6/2021 at 15:33, Maruthankerny said:

உங்களை இவ்வாறு எழுத தூண்டியது மீடியாக்கள் 
வீண் பரப்புரை மூலம் எங்களை மூளைச்சலவை செய்கிறார்கள் 

கனேடிய இராணுவம் இதுவரை முஸ்லீம் நாடுகளில் கொன்றவர்களின் 
எண்ணிக்கையை பார்த்தால் அது வேறு கணக்கு. 

இந்த முஸ்லீம் தீவிரவாதம் என்பதை வளர்ப்பது இஸ்திரேல் 

2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இஸ்லாம் மதத்தில் இந்த 50 வருடங்கள் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற ஒன்று தோன்றியிருக்கு. இதை தோற்றுவித்தவர்கள் சியோனிஸ்டுகளும், அமெரிக்கர்களும், மேற்குகும் தான். 

இஸ்லாமியர்கள் ஒரு வகையில் பலியாடுகள். இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மேற்குலகின் நிகழ்சி நிரல்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரல்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இஸ்லாமியர்கள் ஒரு வகையில் பலியாடுகள். இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மேற்குலகின் நிகழ்சி நிரல்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரல்.

கொஞ்சம் விரிவாக  எழுதலாமே நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இஸ்லாம் மதத்தில் இந்த 50 வருடங்கள் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற ஒன்று தோன்றியிருக்கு. இதை தோற்றுவித்தவர்கள் சியோனிஸ்டுகளும், அமெரிக்கர்களும், மேற்குகும் தான். 

இஸ்லாமியர்கள் ஒரு வகையில் பலியாடுகள். இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மேற்குலகின் நிகழ்சி நிரல்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரல்.

ஐ ஸ் ஸ்  அல்கெய்தா  தலிபான் போன்றவர்களால் 
கொல்லப்படுவது அதிகமானவர்கள் முஸ்லிம்களே 

அந்த தீவிரவாத அலையை ஓயாது பாதுகாக்க 
அப்ப அப்போ சில பிறமதத்தவர்கள் மீதும் இவ்வாறு நடக்கிறது 
தவிர அவர்கள் மீது உமிழப்படும் வெறுப்பின் உச்சத்தை ஜீரணிக்க முடியாது 
தனி நபர்களின் செயல்பாடாகவே அநேகமான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன 

மாற்றுபடி மிக திட்டமிடலுடன் நடந்த தாக்குதல் அனைத்தும் 
சந்தேகத்துக்கு இடமானவையே  பல செய்தி மறைப்புக்கள் இருக்கிறது 
உதாரணம்  9/11  லண்டன் ரயில் குண்டுவெடிப்பு ... மாட்ரிட் ரயில் குண்டுவெடிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

மிகவும் மனதை வருத்துகின்ற நிகழ்வு இது. பாகிஸ்தானில் இருந்து வந்து குடியேறி சாதாரண வாழ்வு வாழ்ந்த குடும்பம் இன்று ஒரு யூத இன 20 வயது இளைஞனால் சிதைக்கப்பட்டு இருக்கு. மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் ஒரே நாளில், ஒரே வினாடியில் அப்பா, அம்மா, அக்கா, பாட்டி ஆகியோரை கண் முன்னாலேயே கொடூரமாக இழந்து யாருமற்ற ஒரு அனாதையாகி ஆகியுள்ளார்.

அடிப்படைவாத பாகிஸ்தானிய சிந்தனைகளில் இருந்து விலகி கனடாவின் வாய்ப்புகளை பயன்படுத்தி, மனைவி PhD யின் இறுதி ஆண்டிலும், மகள் உயர் பாடசாலையிலும் கற்று வந்துள்ளனர்.

ஞாயிறு பின்னேரம் பூங்காவில் காலாற நடந்து விட்டு வருவோம் என்று புறப்பட்ட இக் குடும்பம் முஸ்லிம் ஆக இருக்கின்ற ஒரே ஒரு காரணத்தினால் சிதைக்கப்பட்டு விட்டனர்.

On 8/6/2021 at 07:12, valavan said:

அகதி என்றோ அல்லது வெளிநாட்டுக்காரன் என்றோ அல்லது கறுப்பன் என்று சொல்லியோ தக்குதல் நடத்தப்பட்டால் அது பொதுவாகவே புலம்பெயர்ந்தவர்கள் வெளிநாடுகளில்  எதிர்பார்க்ககூடிய ஒன்றுதான்.

ஆனால் ஒரு மதக்காரன் என்று பலமுறை உலகின் பல பாகங்களில் இவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகிறதென்றால் இவ்வளவு வெறுப்புணர்வு ஏற்படுவதற்கு  இவர்கள் பிற இனங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதும் ஆராயப்படணும்.

கொல்லப்பட்ட  இந்த முஸ்லீம்களுக்கும் அதேவேளை 

லொறி ஏத்தி நசுக்குவது, கத்தியால் குத்துவது, குண்டுகள் வைப்பது,துப்பாக்கிசூடு,தலை துண்டிப்பு,காரால் மோதுவது என்று முஸ்லீம்களால் இதுவரை கொல்லப்பட்ட மக்களுக்கும் அஞ்சலிகள்.

ம்.... ஈழத்தமிழர்கள் பற்றிய ஆராய்வின் முடிவை நாம் 2009ல் பார்த்தோம். யாழ் களத்திலும் இன, மத துவேஷிகள் எழுதுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இஸ்லாம் மதத்தில் இந்த 50 வருடங்கள் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற ஒன்று தோன்றியிருக்கு.

ஓம் ஓம் இந்த 50 வருடங்கள் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் எல்லாம், அதற்கு முன்பு முஸ்லிம் மதம் அமைதியையும் அன்பையும் உலகத்திற்கு  வழங்கியது. முகமது கதீஜாவுடன்  ஒருவனுக்கு ஒருத்தி என்று முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி உலகத்திற்கே வழிகாட்டினார்.
முஸ்லிம் மதத்தின் வரலாற்றை 2000 ஆண்டுகள் என்று நிழலி குறைத்துவிட்டாரே.2000 மேலே + 1600 வருடங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் ஓம் இந்த 50 வருடங்கள் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் எல்லாம், அதற்கு முன்பு முஸ்லிம் மதம் அமைதியையும் அன்பையும் உலகத்திற்கு  வழங்கியது. முகமது கதீஜாவுடன்  ஒருவனுக்கு ஒருத்தி என்று முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி உலகத்திற்கே வழிகாட்டினார்.
முஸ்லிம் மதத்தின் வரலாற்றை 2000 ஆண்டுகள் என்று நிழலி குறைத்துவிட்டாரே.2000 மேலே + 1600 வருடங்கள்.

நான் மனதில் நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள்.. உலகின் மிகக்கொடூரமன மதவெறி முஸ்லீம்களினுடையது.. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இஸ்லாம் மதத்தில் இந்த 50 வருடங்கள் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற ஒன்று தோன்றியிருக்கு. இதை தோற்றுவித்தவர்கள் சியோனிஸ்டுகளும், அமெரிக்கர்களும், மேற்குகும் தான். 

இஸ்லாமியர்கள் ஒரு வகையில் பலியாடுகள். இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மேற்குலகின் நிகழ்சி நிரல்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரல்.

இஸ்ரேலிய இளைஞனால் அநியாயமாகக் கொல்லப்பட்ட முஸ்லீம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். உலகின் மிகக் கொடூரமான இடம் ஒன்றிலிருந்து தமது உயிர் காக்க கனடா வந்து தஞ்சம் கோரிய அவர்கள் கொல்லப்பட்டது ஏற்றுக்கொள்ளப்படமுடியாது என்பதுடன் அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியது.

ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதம் கடந்த 50 வருடங்களில் மட்டுமே மேற்குலகால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறதென்பது எம்மை நாமே ஏமாற்றுவது ஆகிவிடும்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு மேற்குலகு உதவிசெய்த காலமொன்று இருந்தது. கம்மியூனிசத்திற்கெதிரான போர் என்கிற போர்வையில் ஆப்கானிஸ்த்தானில் மேற்குலகு இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து இயங்கியது. அவ்வாறே 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் தனது காலணித்துவ நாடான பாலஸ்த்தீனத்தில் உலகம் முழுதும் சிதறடிக்கப்பட்டு வழ்ந்துவந்த யூதரில் ஆயிரக்கணக்காணோரை இங்கிலாந்து குடியேற்றியது. ஆக, நெடுங்காலம் தோற்கடிக்கப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் மீள் எழுச்சிபெற மேற்குலகின் இந்த நடவடிக்கைகள் ஓரளவிற்கு உதவின என்பதை மறுப்பதற்கில்லை.  ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது ஒன்றும் நேற்று உருவாக்கப்பட்டதல்ல. அம்மதம் ஆரம்பித்த காலத்திலிருந்தே இருப்பது, இப்போதும் அது வெளிக்கிளம்பி வேற்றினங்களை, மதங்களை 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அழித்ததுபோல அழிக்கப் பார்க்கிறது. 

சரித்திரத்தில் கடந்த 1000 வருடங்களுக்கு முன்னதாகவே இஸ்லாம் எனும் மதம் பல வேற்று மதத்தவர் மேலும், இனத்தவர் மேலும் மிகக் கொடூரங்களைப் புரிந்து கட்டாயமாகப் பரப்பப்பட்டது. சிலுவை யுத்தங்கள் ஏன் நடந்தவை என்பதை நோக்கினால் இஸ்லாம் எனும் மதம் மனித நாகரீகத்தை, வேற்றினங்களின் கலாசாரத் தொன்மியங்களை அழித்து அவற்றின் சமாதிகள் மீது கட்டப்பட்டது என்பது தெளிவாகும். இஸ்ரேலியர்கள் மதவெறியும், இனவெறியும் கொண்டவர்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அவர்கள் இவ்வாறு செயற்படுவதற்குக் காரணமாக அமைந்தவை எவை என்று பார்த்தால் நாம் அறிந்திராத இன்னொரு பக்கமும் துலங்கும்.

இவை ஒருபுறம் இருக்க, இங்கே கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எவ்வாறு பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வீதியால் சென்றுகொண்டிருந்த 90 பேரை அப்பாவிகள் என்று தெரிந்தும் பாரவூர்தியை வேகமாக ஓட்டிச் சென்று கொன்றார்களோ, அதுபோன்றதே இதுவும். எவ்வாறு பரீஸில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 140 இளவயதினரை முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்பதற்காக சகட்டு மேனிக்குச் சுட்டுக் கொன்றார்களோ, அதுபோலத் தான் இதுவும். மதவெறி பிடித்த மிருகங்கள், கண்டிக்கப்படவேண்டிய செயல், நிச்சயமாக. 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 15:33, Maruthankerny said:

உங்களை இவ்வாறு எழுத தூண்டியது மீடியாக்கள் 
வீண் பரப்புரை மூலம் எங்களை மூளைச்சலவை செய்கிறார்கள் 

என்னை போன்றவர்களை மீடியாக்கள் மூளை சலவை செய்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள், உங்களை போன்றவர்களை உங்களுடன் வேலை பார்க்கும் முஸ்லீம்கள் மூளை சலவை செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சலவைக்கு சலவை சரியா போச்சு என்று எடுத்துக்கொள்வோம்

5 hours ago, கற்பகதரு said:

ம்.... ஈழத்தமிழர்கள் பற்றிய ஆராய்வின் முடிவை நாம் 2009ல் பார்த்தோம். யாழ் களத்திலும் இன, மத துவேஷிகள் எழுதுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆம் மத துவேசம் என்றாலே என்னவென்று தெரியாத முஸ்லீம்கள்பற்றி எழுதியது தப்புத்தான்.

----------------------------------------------------------------------------------

இஸ்ரேல் அமெரிக்காவின் தூண்டுதலில் தான் இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகிறது மற்றும்படி அவர்கள் மிகவும் மென்மையானவர்கள் பாருங்கள்.

நமது பிள்ளையார் சிவனைகூடதான் மேற்குலகத்தினர் செருப்பு, உள்ளாடைகளில் எல்லாம் பதிவு செய்து நிந்தனை செய்திருக்கிறார்கள் அதுக்காக நாங்கள் எல்லாம் வாளோடும் குண்டோடுமா அலைந்திருக்கிறோம்? நாங்கள் இஸ்லாமியர்களைபோல் அமைதியை இன்னும் கற்றுக்கொள்ளவில்லையென்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

என்னை போன்றவர்களை மீடியாக்கள் மூளை சலவை செய்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள், உங்களை போன்றவர்களை உங்களுடன் வேலை பார்க்கும் முஸ்லீம்கள் மூளை சலவை செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சலவைக்கு சலவை சரியா போச்சு என்று எடுத்துக்கொள்வோம்

உங்களை மூளை சலவை செய்கிறார்கள் என்று நான் எழுதவில்லை 
என்ன காரணம் என்று தெரியவில்லை யாழ் களத்தில் அவசர அவசரமாக 
வாசித்து அவசர அவசரமான பதில்களை எழுத்துவதில்தான் எல்லோருக்கும் 
ஆர்வமாக இருக்கிறது.

எங்களை மூளை சலவை செய்கிறார்கள் என்றுதான் எழுதினேன் 
நான் சொல்ல வந்தது சாதாரண மக்கள் எங்கள் எல்லோரையும் 
உலகம் பூராகவே மூளை சலவை செய்கிறார்கள் என்றுதான் 
என்னையும்தான்  செய்கிறார்கள்.

நீங்கள் கூறுவதுபோல முஸ்லிம்களும் தம் பங்குக்கு செய்கிறார்கள் 

மார்ச் மாதம் 2011 இல் சிரிய சண்டை தொடங்குகிறது .......
ஓத்து வருடங்கள் கழித்து இன்றும் தொடர்கிறது.

யார் போராடுகிறார்கள்?
யாரோடு போராடுகிறார்கள்?
எங்கிருந்து வந்தார்கள்?
ஏன் வந்தார்கள்?
என்ன கொள்கையை வைத்து போராடுகிறார்கள்?
இவர்களுக்கான ஆயுதம் பணம் எங்கிருந்து வருகிறது?

இவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள முயற்சித்தாலே 
உங்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது 
தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த வீடியோவிலும் விட ஆழமான வீடியோக்கள் 
யூடூபில் உண்டு ......இதன் பின்னால் யார் இருக்கிறார்கள்?

உண்மையில் குர்ரானை ஒரு வார்த்தை தவறாது யார் வாசிக்கிறான் 
அவற்றை எவ்வாறு திசை திருப்பி முஸ்லிம்களை மூளை சலவை செய்கிறான் 
என்பதெல்லாம் நீங்கள் உள் இறங்கி பார்த்தாலே புரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.