Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்

Shyamsundar IUpdated: Fri, Jun 11, 2021, 22:21 [IST]

திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் பிரபாகரன் குறித்து திருச்சியை வினோத் என்பவர் செய்த டிவிட் காரணமாக இன்று திருச்சியில் அவர் பணியாற்றும் கார் நிறுவனத்தில் மிரட்டப்பட்டார்.

கண்டனம்

இந்த நிலையில் நால்வர் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தலைவர்

தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்துள்ளனர்.

கண்டனம்

இவர்களை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு.

குற்றம்

இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-condemns-the-arrest-of-you-tuber-duraimurugan-and-4-others/articlecontent-pf558984-423721.html

  • Replies 101
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

இந்த டிவீட் போட்ட ஆள் - கருணாநிதி இறந்த போது, எப்ப பாடிய எடுப்பீங்க பிஸினஸ் படுக்குது என்றும் டிவீட் போட்டுள்ளார்.

திருச்சியில் வியாபரம் செய்கிறார்.

அதே மாரி பல பெரிய தலைகளையும் போட்டு வறுத்துள்ளார். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

நேற்று தலைவரை பற்றி மோசமாக ஒரு டீவீட்டை போட்டுள்ளார் அல்லது போடவைத்துள்ளனர்.

வேண்டும் என்றே சீண்டும் பதிவு அது.

எதிர்பார்த்தது போலவே தம்பிகள் கடுப்பாகி கடைக்கு போவோம் என மிரட்டினார்கள்.

போலீசுக்கு இதையெல்லாம் தெரியபடுத்தியும், இவர்களை போக விட்டு, அவரை மறுப்பு வீடியோவும் வெளியிட வைத்து, சாகவாசமாக கைது பண்ணியுள்ளார்கள்.

நோக்கம் தமிழ் தேசிய அரசியல் = வன்முறை, அடாவடி அரசியல் என நிறுவுவதுதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுக ஆட்சி வந்தால் இனி ஒரே குஷிதான். :grin:

2 hours ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

பிரெஞ்சு புரட்சியின் அடிநாதமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்.(freedom of expression) அப்படிப்பட்ட பிரான்சில் தினமுரசு பத்திரிகை தடை செய்யப்பட்டதாகவும் அந்த தடையை மீறி அப்பத்திரிகையை விற்ற ஒரு கடைக்காரருக்கு அதை விற்க வேண்டாம் என்று புரிய வைக்கப்பட்டபோது அவரின் உடம்பில் பல இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதாக இங்கு யாழ் களத்திலேயே சில நாட்களுக்கு முன்பு  பெருமை பேசப்பட்டதே. அதைப் போன்ற ஒரு புரிதல் தான் அங்கும். 😂😂 

  • கருத்துக்கள உறவுகள்

மானம்,ரோசம்,சூடு,சுரணை உள்ள தம்பிகளுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இந்த டிவீட் போட்ட ஆள் - கருணாநிதி இறந்த போது, எப்ப பாடிய எடுப்பீங்க பிஸினஸ் படுக்குது என்றும் டிவீட் போட்டுள்ளார்.

எமது தலைவரைப்பற்றி அவர்கள் இன்றும் எப்படியெல்லாம் கேவலமாக டிவீட் போடுகின்றார்கள். கவனிக்கேல்லையோ இல்லை சுடேல்லையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

எமது தலைவரைப்பற்றி அவர்கள் இன்றும் எப்படியெல்லாம் கேவலமாக டிவீட் போடுகின்றார்கள். கவனிக்கேல்லையோ இல்லை சுடேல்லையோ?

அதே பதிவில் நான் போட்டதை 👇 நீங்கள் காணேல்லயோ?

1 hour ago, goshan_che said:

நேற்று தலைவரை பற்றி மோசமாக ஒரு டீவீட்டை போட்டுள்ளார் அல்லது போடவைத்துள்ளனர்.

வேண்டும் என்றே சீண்டும் பதிவு அது.

நீங்கள் என்ன எதிர்பார்கிறியள் அண்ணை. தலைவரை பற்றி எவனோ ஒரு மடயன் மோசமா எழுதினா, அதை இங்க காவி கொண்டந்து பரப்போணும் எண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

சாட்டை...  துரை முருகன் கைது, என்பது...
தீம்கா... தனது, சொந்த விருப்பு வெறுப்பில், 
இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிகின்றது.

தமிழக முதல்வர் ஸ்ராலின் ஐயா  அவர்கள்...
முதலில்,  தமிழன் பிரசன்னாவின், மனைவியின் இறப்புக்கு.... 
என்ன காரணம், என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.    

அதுவே... உங்கள் தந்தையார் தந்த, நல்லாட்சியாக இருக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

சார்ஜிக்கள் ஸ்டரைக்…🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சார்ஜிக்கள் ஸ்டரைக்…🤭

ஒரு வீடியோவுக்கு வந்த பின்னூட்டத்தில் "புரிதல் ஏற்படுத்த ஏன்யா பத்துப் பேர் போனீங்க?" என்று கேட்டிருந்தார் ஒருவர். பத்து சர்ஜன்கள் சேர்ந்து செய்திருக்க வேண்டிய மேஜர் சர்ஜரி தான் போல!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

வேற என்ன, அண்ணன் சீமானின் ஆலோசனையில் பச்சை மட்டை அடி தான். 😜

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள காணொளியில் கைதுக்கான போதுமான விளக்கம் உள்ளது.

எனவே பொறுமையுடன் காணொளியைக் கேட்கவும்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் பச்சை மட்டை கத்தி கோடரி கொண்டு சென்று மிரட்டியதுக்கு 
சாட்சியாக யாழ்களத்தில் பலர் இருக்கும்போது 

இப்படி பச்சை தனமாக போட்டோ போடுகிறார்கள் 

உள்ளதை உள்ளபடியே உளறும் உலக விஞ்ஞானிகள் 
இங்கே இருப்பது இந்தியாவுக்கு தெரியாது போல 

E3mz-NaUUAUD2tb?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

பிரெஞ்சு புரட்சியின் அடிநாதமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்.(freedom of expression) அப்படிப்பட்ட பிரான்சில் தினமுரசு பத்திரிகை தடை செய்யப்பட்டதாகவும் அந்த தடையை மீறி அப்பத்திரிகையை விற்ற ஒரு கடைக்காரருக்கு அதை விற்க வேண்டாம் என்று புரிய வைக்கப்பட்டபோது அவரின் உடம்பில் பல இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதாக இங்கு யாழ் களத்திலேயே சில நாட்களுக்கு முன்பு  பெருமை பேசப்பட்டதே. அதைப் போன்ற ஒரு புரிதல் தான் அங்கும். 😂😂 

"பாட்டி... சுட்ட, வடை போல... "
நல்ல, புளகாங்கிதமாக, கதை சொல்கிறீர்கள். 

2 hours ago, ஈழப்பிரியன் said:

மேலே உள்ள காணொளியில் கைதுக்கான போதுமான விளக்கம் உள்ளது.

எனவே பொறுமையுடன் காணொளியைக் கேட்கவும்.
நன்றி.

இதை யாருக்கு கூறுகிறீர்கள்? தெரிந்தும் நித்திரை போல் நடிப்பவர்கள் இவர்கள் எல்லாம். நாளைக்கு பிடித்தவர்களே தவறு நடந்து விட்டது என்றாலும் இவர்கள் அடம்பிடிக்கும் கூட்டம். ******

2 hours ago, Maruthankerny said:

அவர்கள் பச்சை மட்டை கத்தி கோடரி கொண்டு சென்று மிரட்டியதுக்கு 
சாட்சியாக யாழ்களத்தில் பலர் இருக்கும்போது 

இப்படி பச்சை தனமாக போட்டோ போடுகிறார்கள் 

உள்ளதை உள்ளபடியே உளறும் உலக விஞ்ஞானிகள் 
இங்கே இருப்பது இந்தியாவுக்கு தெரியாது போல 

E3mz-NaUUAUD2tb?format=jpg&name=small

இந்த படத்தை போல்             எத்தனையோ பாத்தாச்சு. இது சினிமாவில் வந்த காட்சி. நாங்கள் எங்கள் ஆராய்ச்சி யாளர்கள் சொன்னால் மட்டுமே நம்புவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

"புரிதல்" ஏற்படுத்தி மறுப்புக் காணொளி வெளியிட வைத்தார்களா? என்ன மாதிரியான புரிதல் என்று மேலதிக செய்திகள் சொன்னாத் தானே பேசலாம்?😜

புரிதலெண்டா புரிதல் தான் பிறகென்ன குறுக்கு விசாரணை. மூச்சுக்காடாமல் செய்தியை வாசிச்சிட்டுப் போக வேணும். 🤭🤣

4 hours ago, zuma said:

வேற என்ன, அண்ணன் சீமானின் ஆலோசனையில் பச்சை மட்டை அடி தான். 😜

இது வன்முறையைத் தூண்டும் கருத்து zuma. 😀

அண்ணன் ஒருபோதும் வன்முறையை தூண்டும் நபர் இல்லை. 🤭

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எமது தலைவரைப்பற்றி அவர்கள் இன்றும் எப்படியெல்லாம் கேவலமாக டிவீட் போடுகின்றார்கள். கவனிக்கேல்லையோ இல்லை சுடேல்லையோ?

எமது தலைவர் பற்றி யேர்மனியில் பல மாற்றுக் கருத்தாளர்கள் என்போர் காலம் காலமாக கேவலமாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அதை இதுவரை யேர்மனியில் யாரும் புரிய வைக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

தேனீ, சிந்தனை, தூண்டில் என்று கனக்க சஞ்சிகைகள் வந்தது. இப்போதும் அவர்கள் இணைய வெளியில் தலைவரை போராளிகளை மோசமாக எழுதி வருகின்றனர். 

சாட்டை முருகன் போல ஒருவர் இங்கு இருந்தால் இங்கேயும் புரிதல் நிறையப்பேருக்கு கிடைக்கும். 

ஆனால் துயரம் அப்படி ஒருவர் இல்லாமல் போய்விட்டது. 😭

8 hours ago, goshan_che said:

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்

நீங்கள் இந்தத்திரியை நிச்சயம் 20 பக்கம் ஓட வைப்பியள் என்பது நிச்சயம். 🤔🤔🤔🤔🤔

27 minutes ago, shanthy said:

புரிதலெண்டா புரிதல் தான் பிறகென்ன குறுக்கு விசாரணை. மூச்சுக்காடாமல் செய்தியை வாசிச்சிட்டுப் போக வேணும். 🤭🤣

இது வன்முறையைத் தூண்டும் கருத்து zuma. 😀

அண்ணன் ஒருபோதும் வன்முறையை தூண்டும் நபர் இல்லை. 🤭

   ஊரில் இப்ப இதைத்தான் கூறுகிறார்கள். ஏனெனில் அங்குள்ளவர்கள் படும்பாடு அவர்களுக்குதான் தெரியும். நீங்கள் இரவில் திரியுங்கள தெரியும். ஆசிரியர்கள் இதைவிட கஸ்டம். அவர்கள் மாணவர்களுக்கு பயம் கல்லால்தான் எறிவுலும். 

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்

இது விவரமான திசைதிருப்பும் செயல்போல தெரிகிறது.

இப்படியே திராவிட கட்சிகளும்,தமிழ் தேசிய உணர்வுள்ள கட்சிகளும் தங்களுக்குள் சொல்லிவைத்தால் போல அடித்துக்கொண்டால், எழுவர் விடுதலை நிச்சயம் இப்பொழுது நடக்கப்போவது இல்லை.

ஈழத்தமிழர்களை நோக்கிய தவறான புரிதலுக்கு மீண்டும் வித்திட காய் சாதுர்யமாக நகர்த்தப்படுகிறது. தினசரிகளில் செய்திகளும் அப்படியே வெளியிடப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, shanthy said:

எமது தலைவர் பற்றி யேர்மனியில் பல மாற்றுக் கருத்தாளர்கள் என்போர் காலம் காலமாக கேவலமாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அதை இதுவரை யேர்மனியில் யாரும் புரிய வைக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

தேனீ, சிந்தனை, தூண்டில் என்று கனக்க சஞ்சிகைகள் வந்தது. இப்போதும் அவர்கள் இணைய வெளியில் தலைவரை போராளிகளை மோசமாக எழுதி வருகின்றனர். 

சாட்டை முருகன் போல ஒருவர் இங்கு இருந்தால் இங்கேயும் புரிதல் நிறையப்பேருக்கு கிடைக்கும். 

ஆனால் துயரம் அப்படி ஒருவர் இல்லாமல் போய்விட்டது. 😭

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இது விவரமான திசைதிருப்பும் செயல்போல தெரிகிறது.

இப்படியே திராவிட கட்சிகளும்,தமிழ் தேசிய உணர்வுள்ள கட்சிகளும் தங்களுக்குள் சொல்லிவைத்தால் போல அடித்துக்கொண்டால், எழுவர் விடுதலை நிச்சயம் இப்பொழுது நடக்கப்போவது இல்லை.

ஈழத்தமிழர்களை நோக்கிய தவறான புரிதலுக்கு மீண்டும் வித்திட காய் சாதுர்யமாக நகர்த்தப்படுகிறது. தினசரிகளில் செய்திகளும் அப்படியே வெளியிடப்படுகிறது.

மிக தெளிவாக புரிந்து வைத்துள்ளீர்கள் வன்னியன் அண்ணா. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

நீங்கள் இந்தத்திரியை நிச்சயம் 20 பக்கம் ஓட வைப்பியள் என்பது நிச்சயம். 🤔🤔🤔🤔🤔

இல்லை. இந்த திரியில் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.