Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

என்னுடைய கேள்வி எல்லாம்  அவர் அவதானிப்பும், அவர் எழுத்தும் பற்றியது தான். 
மி .நீ  = புலூசைட்டை மாறன். 
சரி அவர் தான் உங்கள் தோஸ்து என்று சொன்னீர்களே, அவரிடமே சொல்லுங்கள் "அதுவும் இது இளமானி செயல்திட்டம் - பகிரங்கமாகக் கிடைக்காது. பரீட்சகருக்குத் தான் நேரே போகும்"   தவிர வந்தவர்களை வைத்து எல்லா 80/90   புலம்பெயர் மனிதர்களையும் முட்டாள் பட்டம் கட்டும் அவர் மேதாவி தனத்தையும் 

நான் எதற்கு இடையில்? - அவரே பார்த்துக்  கொண்டிருப்பார் இப்போது, தனது அவதானிப்புகள் எவ்வளவு மெய்யானவை என்றும் புரிந்து கொண்டிருப்பார். 80/90 வெளியேறிகள் எல்லாரையும் அவர் ஒரே பெட்டியில் போட்டதாக நான் நினைக்கவில்லை! - உங்களை எது அப்படி நினைக்கத் தூண்டியது எனப் புரியவில்லை?

அனேகமாக மாணவரின் ஆய்வுக் கட்டுரை வெளியே பிரசுரமாக வாய்ப்புகள் குறைவு - ஆனால் கிருபன் யூ ரியுபில் வந்து இணைத்தால் ஒலி-ஒளி வடிவ அறிக்கையைக் காணலாம்!

  • Replies 254
  • Views 19.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

அதுவும் இது இளமானி செயல்திட்டம் - பகிரங்கமாகக் கிடைக்காது. பரீட்சகருக்குத் தான் நேரே போகும், அனேகமாக. 

இராண்டு York பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒன்று பிரித்தானியாவில், ஒன்று கனடாவில். இரண்டிலும் கடந்த வார இறுதியில் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் வேறு பலர் தமிழர் பிரச்சினைகளைப் பற்றியும், கனடியத் தமிழரைப் பற்றியும் எழுதிய thesis, published papers கிடைத்தன!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

2009 இல் பல பதாகைகள் தயாரிக்கப்பட்டன. அவை புலம்பெயர் நாடுகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பாவிக்கப்பட்டன.

2009 ஆரம்பத்தில் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றுகூட எழுதப்பட்டது! அதன் பின்னர் பல மாதங்கள் நான் யாழில் எழுதவில்லை (சண்டை உக்கிரமான காலம் என்பதால் withdrawal syndrome) வந்திருந்தது!

ஓம் முதலாவது இது நியாபகம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கிருபன் said:

இராண்டு York பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒன்று பிரித்தானியாவில், ஒன்று கனடாவில். இரண்டிலும் கடந்த வார இறுதியில் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் வேறு பலர் தமிழர் பிரச்சினைகளைப் பற்றியும், கனடியத் தமிழரைப் பற்றியும் எழுதிய thesis, published papers கிடைத்தன!

நானும் தேடினேன் கிடைக்கவில்லை. மாணவியின் பெயர் வேறு பல வடிவங்களில் எழுத பட கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

என்னுடைய கேள்வி எல்லாம்  அவர் அவதானிப்பும், அவர் எழுத்தும் பற்றியது தான். 
மி .நீ  = புலூசைட்டை மாறன். 
சரி அவர் தான் உங்கள் தோஸ்து என்று சொன்னீர்களே, அவரிடமே சொல்லுங்கள் "அதுவும் இது இளமானி செயல்திட்டம் - பகிரங்கமாகக் கிடைக்காது. பரீட்சகருக்குத் தான் நேரே போகும்"   தவிர வந்தவர்களை வைத்து எல்லா 80/90   புலம்பெயர் மனிதர்களையும் முட்டாள் பட்டம் கட்டும் அவர் மேதாவி தனத்தையும் 

தலைமுறைகள் மாறும் போது வரைமுறைகளும் மாறுமே.

இங்கே நான் ஒரு தலைமுறை பிணக்கையும் காண்கிறேன்.

 குசா அண்ணை/ விசுகு அண்ணை எல்லாம் உண்மையில் எனக்கு/வாலிக்கு முந்திய தலைமுறை.

அவர்களது வெளிநாட்டு வாழ்கை = எனது வயது அண்ணளவாக.

நான் வெளிநாடு வந்த ஆண்டு திருமணம் முடித்திருந்தால் (பதின்மவயதின் முடிவில் ) இப்போ இந்த மாணவி போல் இளமானி படிப்பை முடிக்கும் நிலையில் என் பிள்ளை இருக்கும்.

ஆகவே இங்கே 3 தலைமுறைகள் சம்பந்த படுகிறன. 

ஒரு புள்ளியில் 65+ நடுவில் 40+ மறு புள்ளியில் 20+.

மீநி என்னை விட சற்றே இளயவர். 

அவர் நீலச்சட்டை மாறனாகவே இருந்தாலும் (🤣) அவர் அவரதும் அதன் பிந்தியதும்மான தலைமுறைகளின் கருத்தை பிரதிபலிக்கிறார் எனலாம்.

அத்தோடு எமது எதிர்கால அரசியல் பற்றிய பார்வை நிச்சயம் நாட்டை விட்டு 1999 க்கு முன் வெளியேறியோரை விட அதன் பின் வெளியோரியோருக்கு வித்தியாசமாக இருப்பது நான் கண்ட உண்மை (எப்போதும் இல்லை, பொதுவாக). 

இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும் போது பார்வைகள் மாறுவது இயல்பானதே.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

தலைமுறை மாறலாம்

புதியவர்கள் தலைமை தாங்கலாம்

ஆனால் வரலாறு ஒன்று தான்

அது தெரிந்திருக்கணும் 

அந்த வரலாற்றை பதித்தவர்கள் அதனூடு நின்றவர்கள் கனம் செய்யப்படணும். அதில் ஒரு பகுதி தான் எம் வயோதிபர்கள்

இவை தூக்கி எறியப்பட்டால் வெறும் சுயநல விசமிகளின் கூடாரமே மிஞ்சும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

அந்த வரலாற்றை பதித்தவர்கள் அதனூடு நின்றவர்கள் கனம் செய்யப்படணும்.

எதுவித மனக்கிலேசமும் வேண்டாம்  விசுகு ஐயா! நீங்கள் கனம் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

எதுவித மனக்கிலேசமும் வேண்டாம்  விசுகு ஐயா! நீங்கள் கனம் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்!

உங்கள் புரிதல் அவ்வளவு தான் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2021 at 03:03, குமாரசாமி said:

சிங்கள புது ஜெனரேசன் அப்பிடி ஏதும் புதியதாய் மாறுபட்ட சிந்தனையாய் சிந்திக்கின்றதா?
நான் அறியவில்லை.

அவர்கள் சிந்திப்பதால் தான் இன்று அதிகமாக மாணவர்கள் யூனியிலையும் கொழும்பிலையும் சர்வ சாதாரணமாக திரிந்து படிக்கிறார்கள் இல்லையென்றால் நிலை தலை கீழ் இதை சொன்னால் ஏற்றுக்கொள்ளுவியளோ தெரியாது . 

On 16/6/2021 at 03:32, putthan said:

எனது கணிப்பின் படி......புலம்பெயர்ந்து வாழும் புதிய தலைமுறையினர் இந்த பழைய சிவப்பு சிந்தனைகளை தாண்டி வேறு விதமாக சிந்திக்கிறார்கள் .....

என்ன என்று சொன்னால்தானே தெரியும் புத்தன்  மற்றபடி எப்படி சிந்தித்தாலும் ஒட்டுற சோறு மட்டுமே ஒட்டும் பீசா, பர்கர் எல்லாம் ஒட்டாது சாரே

On 16/6/2021 at 11:37, shanthy said:

பறவாயில்ல ஒருக்கா உழக்கீட்டு போங்கோவன்🤣 என்ன வரப்போகுது 10பக்கம் தானே 🤭

அக்கா கிருபன் இணைச்ச கட்டுரை தெளிவா சொல்லிட்டுது ஆனால் ஏற்றுக்கொள்ள மனசு உறுத்துகிறது ஆனால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிருபன் இணைச்ச கட்டுரை தெளிவா சொல்லிட்டுது ஆனால் ஏற்றுக்கொள்ள மனசு உறுத்துகிறது ஆனால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 

ஆசான் ஒரு கட்டுரையில் சொன்னதை கொஞ்சம் மாத்தியிருக்கின்றேன்..

ஆசாரவாதிகள் எதையும் மாற விடமாட்டார்கள். எதையும் மாற்ற மாட்டார்கள். ஏன் அப்படி இருக்கிறார்கள்? ஆசாரம் என்பதே மாறாச்சடங்குதான். அந்தப்பிடிவாதம் கொண்டவர்கள்தான் ஆசாரவாதிகள். அவர்களின் வழிஅறிவார்ந்தது அல்ல. நடைமுறைநோக்கம் கொண்டதும் அல்ல. ஆசாரமார்க்கம் என்பது உறுதியாககடைப்பிடிப்பது மட்டுமே. எது நன்று எது தீது என்று, எது தேவை எது தேவையில்லை என்று, தாங்களேமதிப்பிடும் அறிவார்ந்த அளவுகோல்கள் அவர்களுக்கு இல்லை. அவர்களுடையது முன்னோர்சொல், முன்செல்லும் வழிகாட்டியின் சொல் ஆகிய இரண்டையும் முழுமையாக கடைப்பிடிப்பது அவர்களின்செயல்முறை. அந்த முன்னோர் சொல் எல்லாமே அவர்களுக்கு மரபுதான். அதனால் காலத்தில் உறைந்து நிற்கின்றார்கள்.”

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன என்று சொன்னால்தானே தெரியும் புத்தன்  மற்றபடி எப்படி சிந்தித்தாலும் ஒட்டுற சோறு மட்டுமே ஒட்டும் பீசா, பர்கர் எல்லாம் ஒட்டாது சாரே

இந்த கேள்வி கட்டுரையாளரிடம் கேட்க‌ வேண்டும் ...அவர்தான் புதிய தலைமுறையினர் என்று கட்டுரை தலைப்பை போட்டுவிட்டு தன்னுடைய 80 களின் சித்தாந்த சிந்தனையிலிருந்து கட்டுரை வரைந்திருக்கின்றார்....
மேற்கு மற்றும் சீனா போன்ற நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணிய வேண்டிய நிலையில் சிறிலங்கா மாதா இருப்பதற்கு முக்கிய காரணம் சிங்கள அரசியல்வாதிகளின் கெடு கெட்ட தூரநோக்கு .......பேகர் நூடில்ஸ் கிறிபத் ஒட்டுதோ என்று அவர்கள் சிந்திக்கட்டும்..
இளைய தலைமுறையினர் இங்கு மனித உரிமை என்ற வகையில் இந்த பிரச்சனையை நோக்கின்றனர் அந்த துறையில் பட்டம் பெறுகின்றனர் தூதரகங்கள், மற்றும் அரசுகளின் பிராந்திய கொள்கை வகுப்பு மையங்களில் பணிபுரிய தொடங்கி விட்டார்கள் ....ஆனால் அவர்கள் ஈழம் தமிழர்களுக்கு தீர்வு என்று சிந்திக்க போவதில்லை பாரிய இனவழிப்பு நடைபெற்ற ஓர் இடம் என்ற வகையில் சிந்திப்பார்கள் அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்......

சீனா கம்னிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் உலக வல்லரசாக் வேண்டும் என்ற சிந்தனையில் சிறிலங்காவில் சீனா வன்மினிட் நூடில்ஸ் போடுயினம் பார்ப்போம் எப்படி ருசி என்று....

ஆசியாவின் எழுச்சி என்று மகிந்தா கூவிக்கொண்டிருக்க ஆசியா பூர்வீகம் கொண்ட(தென் கோரியா) பெண்மணியை சிறிலங்காவின் தூதுவராக அமெரிக்கா நியமித்திருக்கின்றது,அம்மணியின் பெற்றோர்கள் தென் கோரியாவின் போர்காலங்களில் அமெரிக்காவில் குடிபெயர்ந்திருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்கள் சிந்திப்பதால் தான் இன்று அதிகமாக மாணவர்கள் யூனியிலையும் கொழும்பிலையும் சர்வ சாதாரணமாக திரிந்து படிக்கிறார்கள் இல்லையென்றால் நிலை தலை கீழ் இதை சொன்னால் ஏற்றுக்கொள்ளுவியளோ தெரியாது . 

அன்றும் அவர்கள் சிந்தித்ததினால் தான் சிங்கள பிரதேசங்களில் தமிழர்கள் கடை வைத்திருந்தார்கள். வீடுகள் வைத்திருந்தார்கள். சொந்த ஊரில் இருந்தது போல் இருந்தார்கள்.வெள்ளவத்தை,கொள்ளுப்பிட்டி,பம்பலப்பிட்டி என தமிழர்கள் வாழ்ந்தார்கள்.

என்னவொண்டு சிங்களத்துக்கு இனவாதம் முத்த பற தெமில எண்டு சொல்லி செல்லமாய் கன்னத்திலை தட்டினவங்கள் அவ்வளவுதான்...

மட்டக்களப்பு எல்லையள்லை சிங்களவன் அடிச்சு நொருக்கினாலும் பிரச்சனை இல்லை....அவர்களும் சிந்திக்கின்றார்கள் எண்டு நாங்கள் சொல்லுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2021 at 21:54, விசுகு said:

தலைமுறை மாறலாம்

புதியவர்கள் தலைமை தாங்கலாம்

ஆனால் வரலாறு ஒன்று தான்

அது தெரிந்திருக்கணும் 

அந்த வரலாற்றை பதித்தவர்கள் அதனூடு நின்றவர்கள் கனம் செய்யப்படணும். அதில் ஒரு பகுதி தான் எம் வயோதிபர்கள்

இவை தூக்கி எறியப்பட்டால் வெறும் சுயநல விசமிகளின் கூடாரமே மிஞ்சும். 

வரலாறும் மாறத்தான். வேண்டும் பழைய. வரலாற்றைப் புதியவரலாறாக் எற்றுக்கொள்ள முடியாது. புதியவர்கள். தலைமையேற்று. வரலாறு படைக்க. பழைய தலைமுறை  ஊக்கமும் ஆக்கமும் அளிக்கவேண்டும். மாறாக. பழைய வரலாற்றை திணிக்கக்கூடாது. அதைத்தான்  கட்டுரை சொல்லுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

வரலாறும் மாறத்தான். வேண்டும் பழைய. வரலாற்றைப் புதியவரலாறாக் எற்றுக்கொள்ள முடியாது. புதியவர்கள். தலைமையேற்று. வரலாறு படைக்க. பழைய தலைமுறை  ஊக்கமும் ஆக்கமும் அளிக்கவேண்டும். மாறாக. பழைய வரலாற்றை திணிக்கக்கூடாது. அதைத்தான்  கட்டுரை சொல்லுகிறது 

வரலாறு நமது  பரம்பரை  போன்றது

அதை மாற்றமுடியாது

மாற்றவும் கூடாது

அதிலிருந்து அடுத்த தலைமுறை வழிகளை  அல்லது  சிந்தனைகளை  மாற்றலாம்

ஆனால் அதுவும்  வெற்றி தருமா  என்றால் வரலாற்றை தான் புரட்டி பார்த்தாகணும்

அதுக்கு எமது  பிள்ளைகள் 

தாயக ஈடுபாடு  கொண்டவர்களாக

உள்  நாட்டு அரசியலில் ஆர்வம்  உள்ளவர்களாக

ஆகக்குறைந்தது

ஆகக்குறைந்தது

பெற்றோர் மீதாவது அக்கறை  உள்ளவர்களாக வளர்க்கப்படணும்

இது தான் முதல் கட்டம்

அத்திவாரம்

இதுவே  இல்லையென்றால்.....????

😢

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்/பெரியோர் மீதான மரியாதையென்பது அவர்களது தீர்வு தராத கொள்கைகளை மரியாதை நிமித்தம் ஏற்றுக் கொள்வதாக இருக்கக் கூடாது!

மேற்கு நாடுகளின் இளையோர் போல, எங்கள் முன்னைய தலைமுறை  இன்ன இன்ன விடயங்களில் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று வெளிப்படையாக சொல்லி விட்டு, "நாங்கள் உங்களை அன்பு செய்கிறோம்" என்றும் அதே வசனத்தில் சொல்லி விடக் கூடியதாக இருக்க வேண்டும்! 

இங்கே இருக்கும் சில கருத்துக்களைப் பார்க்கையில், இது எங்கள் சமூகத்தில் இன்னும் எட்டாக் கனி என்று தான் நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2021 at 12:54, விசுகு said:

தலைமுறை மாறலாம்

புதியவர்கள் தலைமை தாங்கலாம்

ஆனால் வரலாறு ஒன்று தான்

அது தெரிந்திருக்கணும் அந்த வரலாற்றை பதித்தவர்கள் அதனூடு நின்றவர்கள் கனம் செய்யப்படணும்.

4 hours ago, Kandiah57 said:

வரலாறும் மாறத்தான். வேண்டும் பழைய. வரலாற்றைப் புதியவரலாறாக் எற்றுக்கொள்ள முடியாது. புதியவர்கள். தலைமையேற்று. வரலாறு படைக்க. பழைய தலைமுறை  ஊக்கமும் ஆக்கமும் அளிக்கவேண்டும். மாறாக. பழைய வரலாற்றை திணிக்கக்கூடாது. அதைத்தான்  கட்டுரை சொல்லுகிறது 

1 hour ago, விசுகு said:

வரலாறு நமது  பரம்பரை  போன்றது

அதை மாற்றமுடியாது

மாற்றவும் கூடாது

அதிலிருந்து அடுத்த தலைமுறை வழிகளை  அல்லது  சிந்தனைகளை  மாற்றலாம்

இப்படி ஒருவருக்கு ஒருவர் முரணாக கருத்தெழுத முதல் வரலாறு என்றால் என்ன என்பதில் இருவரும் உடன்படுகிறீர்களா என்று பார்க்க வேண்டும்.

விசுகு சொல்வது வரலாறு ஒன்று என்பதே. அது உண்மை. வரலாறு நடந்ததை நடந்தவாறாக பதிந்து வைக்கிறது. உதாரணமாக, தமிழீழம் என்ற நாடு இலங்கைக்குள் உலக அங்கீகாரம் இன்றி உருவாகி செயற்பட்டு சில வருடங்களில் அழிக்கப்பட்டதென்பது வரலாறு. அந்த வரலாறு உண்மையானது, அது மாறாதது, அப்படி தமிழீழம் இருக்கவே இல்லை என்று இந்த வரலாற்றை மாற்றவும் கூடாது. 

அதே வேளை, அடுத்த தலைமுறை தமிழீழம் வேண்டாம், சர்வதேச அரசியல் - பொருளாதார கட்டமைப்பில் தமிழீழம் சாத்தியமில்லை, ஆகவே புதியதோர் இலங்கை செய்வோம் என்று முயன்று புதிய வரலாற்றை படைக்கும் போது அதுவும் வரலாற்றின் ஒரு அங்கம் ஆகும். அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, விசுகு போன்ற பழைய வரலாற்றின் பங்குதார்ர்கள்   அந்த வரலற்றை படைக்கும் அடுத்த தலைமுறையை கனம் பண்ண வேண்டும். விசுகர் என்ன சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு என்பது இரு பகுதிகளை கொண்டது.

1. நிகழ்வுகள்

2. நிகழ்வுகளுக்கான வியாக்கியானம்

முதலாவது காலத்துக்கும் மாறாது.

இரெண்டாவது காலத்துக்கு ஏற்ப மாறும்.

உலகை உய்விக்க வந்த செயல்திட்டமாக ஒரு காலத்தில் (70 வரைக்கும் கூட) யூகேயில் புகழபட்ட பிரித்தானிய குடியேற்ற வரலாறு இன்று அப்படி நோக்கப் படுவதில்லை. 

இதனால்தான் வாழும் காலத்தில் விமர்சனங்களை சந்திதோரை அவர்களை வரலாறு புகழும் என்ற கருத்தில் history will be kind to him என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

உண்மை தான். சம்பவங்களை மாற்றவோ மறைக்கவோ கூடாது. இதற்காகத் தான் காய்தல் உவத்தலற்ற வரலாற்றாசிரியர்கள் எழுதிய நூல்களில் இருந்து மட்டுமே வரலாற்றின் சமபவங்களை அறிந்து கொள்ள வேண்டும்!

ஆனால், சம்பவங்களின் வியாக்கியானத்தை மாற்றுவது கருத்துரிமைக்குள் அடங்கும் என்பதால் இது என் வியாக்கியானம் என்று சொல்லி விட்டு வரலாற்றாசிரியர் அல்லாதோரும் எழுதலாம்.

சிலரால் எழுதப் படும் தமிழ் தேசிய வரலாறு, சம்பவங்களும் வியாக்கியானங்களும் உள் நோக்கத்தோடு எழுதப் படும் நிலையில், இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாத நிலை இருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

முன்னர் எல்லாம் history is written by the victors என்பார்கள். அதாவது வென்றவர்கள் தமக்கு சார்பாக வரலாற்றை எழுதுவார்கள் என்ற அர்த்தத்தில்.

ஆனால் இப்போ history can be written by any Tom, Dick and Harry, as long as they have a laptop என்றாகி விட்டது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஒரு கமெரா போன் இருந்தால் நாமும் வரலாற்று ஆசிரியர்தான்.

இப்படியானவர்கள் சம்பவங்களையே தமக்கு ஏற்றபடி பிழையாக எழுதுவார்கள். 

இவர்களின் வியாகியானத்தை பற்றி சொல்லவும் வேண்டுமா?

Edited by goshan_che
+a

6 minutes ago, goshan_che said:

முன்னர் எல்லாம் history is written by the victors என்பார்கள். அதாவது வென்றவர்கள் தமக்கு சார்பாக வரலாற்றை எழுதுவார்கள் என்ற அர்த்தத்தில்.

ஆனால் இப்போ history can be written by any Tom, Dick and Harry, as long as they have laptop என்றாகி விட்டது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஒரு கமெரா போன் இருந்தால் நாமும் வரலாற்று ஆசிரியர்தான்.

இப்படியானவர்கள் சம்பவங்களையே தமக்கு ஏற்றபடி பிழையாக எழுதுவார்கள். 

இவர்களின் வியாகியானத்தை பற்றி சொல்லவும் வேண்டுமா?

இப்போதெல்லாம் ஒரு கமராவும்  யூருயூப் ஐடியும் இருந்தால் வரலாற்று ஆசிரியர் ஆகிவிடலாம்.  வரலாறு தெரியாத ஒரு குறிப்பபிட்ட ஒரு தொகையினரை சந்தாதார‍ர் ஆக்கிவிட்டால் வரலாற்று துறை பேராசிரிய‍ர் ஆகிவிடலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இப்படி ஒருவருக்கு ஒருவர் முரணாக கருத்தெழுத முதல் வரலாறு என்றால் என்ன என்பதில் இருவரும் உடன்படுகிறீர்களா என்று பார்க்க வேண்டும்.

விசுகு சொல்வது வரலாறு ஒன்று என்பதே. அது உண்மை. வரலாறு நடந்ததை நடந்தவாறாக பதிந்து வைக்கிறது. உதாரணமாக, தமிழீழம் என்ற நாடு இலங்கைக்குள் உலக அங்கீகாரம் இன்றி உருவாகி செயற்பட்டு சில வருடங்களில் அழிக்கப்பட்டதென்பது வரலாறு. அந்த வரலாறு உண்மையானது, அது மாறாதது, அப்படி தமிழீழம் இருக்கவே இல்லை என்று இந்த வரலாற்றை மாற்றவும் கூடாது. 

அதே வேளை, அடுத்த தலைமுறை தமிழீழம் வேண்டாம், சர்வதேச அரசியல் - பொருளாதார கட்டமைப்பில் தமிழீழம் சாத்தியமில்லை, ஆகவே புதியதோர் இலங்கை செய்வோம் என்று முயன்று புதிய வரலாற்றை படைக்கும் போது அதுவும் வரலாற்றின் ஒரு அங்கம் ஆகும். அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, விசுகு போன்ற பழைய வரலாற்றின் பங்குதார்ர்கள்   அந்த வரலற்றை படைக்கும் அடுத்த தலைமுறையை கனம் பண்ண வேண்டும். விசுகர் என்ன சொல்கிறீர்கள்?

நான் கனம் பண்ண தயாராக மட்டும் அல்ல அதற்காக வழியையும் விட்டு பல வருடங்களாச்சு. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை?????

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, tulpen said:

இப்போதெல்லாம் ஒரு கமராவும்  யூருயூப் ஐடியும் இருந்தால் வரலாற்று ஆசிரியர் ஆகிவிடலாம்.  வரலாறு தெரியாத ஒரு குறிப்பபிட்ட ஒரு தொகையினரை சந்தாதார‍ர் ஆக்கிவிட்டால் வரலாற்று துறை பேராசிரிய‍ர் ஆகிவிடலாம். 🤣

இது நடக்கக் கூடாது என்பதால் தான் அதனை தியாகத்துடன் நடாத்தியவர்களால் அவை பதியப்படணும் என்கிறோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இது நடக்கக் கூடாது என்பதால் தான் அதனை தியாகத்துடன் நடாத்தியவர்களால் அவை பதியப்படணும் என்கிறோம். 

“If you win, you need not have to explain...If you lose, you should not be there to explain!” 
 Adolf Hitler

“வென்றிருந்தால் எப்படி வென்றோம் என்று விளக்கம் கொடுக்கவேண்டியதில்லை. தோற்றிருந்தால் விளக்கம் கொடுக்க இருக்கக்கூடாது” என்று ஹிட்லர் சொல்லியிருக்கிறார்!
 
எனவே தோற்ற தமிழர் தரப்பில் இருந்து சரியான வரலாறு எப்போதும் வராது. ஏனெனில் வரலாற்றைச் சொல்ல தகுதியானவர்கள் அனைவரும் இப்போது இல்லை அல்லது வாய் திறப்பதில்லை.

13 minutes ago, விசுகு said:

இது நடக்கக் கூடாது என்பதால் தான் அதனை தியாகத்துடன் நடாத்தியவர்களால் அவை பதியப்படணும் என்கிறோம். 

ஆனால் ஒருதலைப்பட்சமாக ஒருதரப்பு மட்டும் வரலாற்றை எழுதினால் அதை எதிர்காலத்தில் ஏற்றுக் கோள்ள மாட்டார்கள். யார் எழுதினாலும் நம்பக தன்மையுடன் அனைத்து தரப்பினரின்  தவறுகளையும் ஏற்றுக் கொண்டு எழுத வேண்டும். இல்லை என்றால் அது வெறும் ஒரு பக்க பிரச்சாரம் ஆகிவிடும். எதிர் காலத்தில் அதன் உண்மைத்தன்மையை ஆராயவார்கள். சும்மா எழுந்த பாட்டுக்கு இவர் தியாகம் செய்தார் இவர் எழுதினால் எல்லாம் சரியாக இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்ப முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

“If you win, you need not have to explain...If you lose, you should not be there to explain!” 
 Adolf Hitler

“வென்றிருந்தால் எப்படி வென்றோம் என்று விளக்கம் கொடுக்கவேண்டியதில்லை. தோற்றிருந்தால் விளக்கம் கொடுக்க இருக்கக்கூடாது” என்று ஹிட்லர் சொல்லியிருக்கிறார்!
 
எனவே தோற்ற தமிழர் தரப்பில் இருந்து சரியான வரலாறு எப்போதும் வராது. ஏனெனில் வரலாற்றைச் சொல்ல தகுதியானவர்கள் அனைவரும் இப்போது இல்லை அல்லது வாய் திறப்பதில்லை.

வெற்றியடைந்தால் சரித்திரம் தோல்வி என்றால் சம்பவம்....என்று நம்ம ஆள் சொன்னதை இது நினைவு படுத்துகின்றது....விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் ....ஆகவே தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று அர்த்தமில்லை.....
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.