Jump to content

வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்

Recommended Posts

படித்ததில் பிடித்தது:

வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்...

எங்கள் தோழி...

50 வயதைக்  கடந்தவள்..

அவள் பிறந்தநாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின்  மரண செய்தி... 

பேரதிர்ச்சி எங்களுக்கு..

அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை  அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்...

எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை,  எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்...

ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று..

அதில் தொனித்த வேதனையை  எங்களால் இனம் காண முடிந்தது..

அவள் இறந்து  1 மாதமாயிற்று...

பாவம் அவள் கணவர்...

இப்போது எப்படி சமாளிக்கிறாரோ?? பயணம் செய்யும் பணியில் இருந்து கொண்டு பிள்ளைகளை, தன் வயதான தாய் தந்தையரை எப்படி கவனிக்கிறாரோ என வருத்தம் தோன்ற, எதாவது உதவி செய்ய முடிந்தால் செய்யலாம் என அவரை அலைபேசியில் அழைத்தேன்.. 

பதில் இல்லை. அரை மணி கழித்து அவரே அழைத்து, தான் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்படியே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் , அதனால்தான் உடன் அழைப்பை ஏற்க வில்லை என மன்னிப்பு கோரினார்.. 

எப்படி இருக்கிறீர்கள் என்றேன்..

பயணம் செய்யும் பொறுப்பிலிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு ஊரிலிருந்தே வேலை செய்யும் பொறுப்பிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம்..

வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்.

சமையல் செய்வதற்காக ஒருவரை நியமித்து அவரே கடையிலிருந்து பொருட்களை வாங்கி வருமாறும் பணித்திருக்கிறாராம்..தன் தாய் தந்தையரை பார்த்துக் கொள்ள செவிலியர்களை நியமித்திருக்கிறாராம்..

பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்..

"பிள்ளைகள் நலம்..நான் பார்த்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் சுமூக நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறோம்.." என்றார்..

சிறிது நேரம் பேசிவிட்டு, முடித்தேன் ...

என் கண்கள் குளமாகியது. என் தோழி நினைவிற்கு வந்தாள். பள்ளி தோழிகள் சந்திப்பிற்கு அவள் வரவில்லை, காரணம் அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை. அவளின் அண்ணன் மகள் திருமணத்திற்கு அவளால் போக முடியவில்லை , காரணம் அவள் வீட்டில் ரிப்பேர் நடந்து கொண்டிருந்தது, எங்கள் தோழியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை, காரணம் அவள் பிள்ளைகளுக்கு தேர்வு..நாங்கள் அனைவரும் இணைந்து சென்ற  திரைப்படத்திற்கு அவள் வரவில்லை, காரணம் இரவு உணவு சமைக்க வேண்டும்..

இப்படி எத்தனை இனிமையான தருணங்களை அவள் இழந்திருக்கிறாள்..

அவளுக்காக அவள் வாழவே இல்லை..

மற்றவர்களுக்காக மட்டுமே  வாழ்ந்திருக்கிறாள்..இறுதி வரை அவள் எதிர்நோக்கிய பாராட்டும் அங்கீகாரமும் இத்தனை செய்தும் கூட அவளுக்கு கிடைக்கவே இல்லை..

இப்போது அவளிடம் சொல்ல துடிக்கிறேன்

இந்த உலகத்தில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல, யாரை இழந்தாலும் அவரைச் சார்ந்திருப்போர் சிறிது நாட்களில் அவரின்றி வாழ பழகி விடுவார்கள்.. தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் அவளது முதல் கடமை என மற்றவர்கள் நினைப்பதும், அவளும் அவர்களுக்கு முதல் உரிமை கொடுத்து விட்டு  இரண்டாவதாக தன்னைப் பார்த்துக் கொள்வதும்,  நான் இல்லை என்றால் என் வீடு தடுமாறி விடும் என்றெல்லாம் நினைப்பது நம் மனதின் அறியாமை...அப்படி நினைத்து ஒரு நாள் கூட அவள் அவளுக்காக வாழவில்லை..

ஆனால் இதையெல்லாம்  சொல்வதற்கு அவள் இப்போது உயிருடன் இல்லை...

தோழிகளே..

எத்தனை .பொறுப்புகள் இருந்தாலும், எத்தனை பணிகள் இருந்தாலும்

உங்களுக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.. 

அது உங்கள் நேரம்..

உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்...ஆடுங்கள், பாடுங்கள், என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள் 

பள்ளி, கல்லூரி தோழிகளிடம் பேசுங்கள்,பகிருங்கள், சிரியுங்கள்..வாழ்க்கையை அனுபவியுங்கள்..

இது உங்கள் வாழ்க்கை.. உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள்.. 

உங்களுக்கான இன்பத்தை  மற்றவர்களுக்காக தொலைத்து விடாதீர்கள்..

நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே, மற்றவர்களை மகிழ்விக்க முடியும்..

 இறுதியாக ஒரே ஒரு வார்த்தை..

 வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்...

அனுபவித்து வாழுங்கள்

வாழ்க்கை அழகானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அறிவுரை இப்படித்தானிருக்கும்

வாழ்வு  ஒருமுறைதான்

வாழ்வு  அழகானது

வாழ்வு  இனிமையானது

ருசிகரமானது

மிக மிக  சந்தோசமானது

அந்த வாழ்வு  உங்களுக்கானது

அதை எவருக்காகவும் வாழாதீர்கள்

என்ன  காரணத்துக்காகவும்

எந்த நேரத்திலும் அதை வீணாக்கி விடாதீர்கள்

அது போனால்  திரும்பி வராது???

(எனது மகளின் திருமணவீட்டில் சில  நிமிடங்கள் நான் எனது  மகளுக்குக்காகவும்  மருமகனுக்காகவும் பேசினேன். ஒரு  நாள் இங்கே இணைக்கலாம்)

நன்றி பதிவுக்கு  தங்கச்சி.........

Link to comment
Share on other sites

45 minutes ago, தமிழினி said:

இந்த உலகத்தில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல, யாரை இழந்தாலும் அவரைச் சார்ந்திருப்போர் சிறிது நாட்களில் அவரின்றி வாழ பழகி விடுவார்கள்.. தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் அவளது முதல் கடமை என மற்றவர்கள் நினைப்பதும், அவளும் அவர்களுக்கு முதல் உரிமை கொடுத்து விட்டு  இரண்டாவதாக தன்னைப் பார்த்துக் கொள்வதும்,  நான் இல்லை என்றால் என் வீடு தடுமாறி விடும் என்றெல்லாம் நினைப்பது நம் மனதின் அறியாமை...அப்படி நினைத்து ஒரு நாள் கூட அவள் அவளுக்காக வாழவில்லை..

மிகவும் உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை சரியான பாதையை நோக்கி வழிகாட்டுகின்றது .......நன்றி சகோதரி.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை மிகவும் நெருடிய கதை....!

சிலரது இயல்பே....எல்லாப் பொறுப்புக்களையும் தனது தலையில் தூக்கிச் சுமந்து கொள்வது...!

உங்கள் நண்பி...அனேகமாகக் குடும்பத்தில் முதலாவது பிள்ளையாகப் பிறந்திருப்பார் என்பது எனது அனுமானம்!

அவளது குழந்தைகள், அவள் பட்ட கஷ்டங்களை...நிச்சயம் அவதானித்திருப்பார்கள்!

அவர்கள் தந்தைக்கு ஒரு நாள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

நன்றி தமிழினி....!

Link to comment
Share on other sites

On 8/7/2021 at 21:33, புங்கையூரன் said:

மனதை மிகவும் நெருடிய கதை....!

சிலரது இயல்பே....எல்லாப் பொறுப்புக்களையும் தனது தலையில் தூக்கிச் சுமந்து கொள்வது...!

உங்கள் நண்பி...அனேகமாகக் குடும்பத்தில் முதலாவது பிள்ளையாகப் பிறந்திருப்பார் என்பது எனது அனுமானம்!

அவளது குழந்தைகள், அவள் பட்ட கஷ்டங்களை...நிச்சயம் அவதானித்திருப்பார்கள்!

அவர்கள் தந்தைக்கு ஒரு நாள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

நன்றி தமிழினி....!

நன்றி புங்கையூரான் அண்ணா. இந்த ஆக்கத்தை நான் சுட்டது முகநூலில் இருந்து அதனால் விபரங்கள் எதுவும் தெரியவில்லை.

நம்மில் அனேகமானவர்கள் மற்றவர்களுக்காகவே வாழப்பழகிவிட்டோம். இனிவரும் தலைமுறை எம்மைப்போல் வாழாமல்  தமக்கான வாழ்க்கையை அனுபவித்து வாழ்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2021 at 11:17, தமிழினி said:

ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று..

அனேகமான பாராட்டுக்கள் இறந்த பின் தான் கிடைக்கின்றன.

அதிலும் மரணவீட்டில் ஒவ்வொருவரும் தனக்கு தனக்கு தெரிந்ததை சொல்ல இறந்தவர் ஏறத்தாள ஒரு தியாகியாகி விடுவார்.

இணைப்புக்கு நன்றி சகோதரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கம் சொல்வதை ஏற்று கொண்டாலும், அந்த கணவனில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

இதே தியாகங்களை ஊருக்கு ஊர் ஓடி வேலை பார்க்கும் அவரும் செய்திருப்பார் அல்லவா? ஆனால் ஆம்பிளை - யாருடனும் போய் என்னை பாராட்டுவார் இல்லையே என சொல்லி வருந்தி இருக்கமாட்டார்.

இதுவே மனைவி இறக்க அந்த கணவன் இறந்திருந்தால்? இன்சூரன்ஸ் பணம் வந்திருக்கும் எல்லாரும் அவரை மெல்ல மெல்ல மறந்து தத்தம் காரியங்களில் மூழ்கிப்போயிருப்பார்கள்.

மனைவி இறந்தால் டெனிஸ் விளையாட கூடாதா? அதை அவரை ஆற்று படுத்தும் ஒரு செயலாக நண்பர்கள் செய்தும் இருக்கலாம்.

எவ்வளவு பொறுப்பாக, வேலை மாற்றல் எடுத்து, மனைவியின் வேலைகளை எல்லாவற்றையும் கவனிக்க பொறுப்பான ஏற்பாடுகளை 1 மாதத்தில் செய்து முடித்துள்ளார் - நிச்சயம் அவருக்கு ஒரு சபாஷ்.

ஆக்கத்தை எழுதியவர் இந்த செய்தியை உயிருடன் இருக்கும் போது தோழிக்கு சொல்லி இருக்க வேண்டும். இப்போ கணவன் தேவதாசாக திரியவில்லை என்று குறைப்படாமல்.

இதை முகபுத்தகத்தில் எழுதினால் - நட்பு வட்டத்தில் யாரை சொல்கிறார் என்பது இலகுவாக தெரியும். இதெல்லாம் இழி குணம் அல்லவா?

வாழ்க்கையை வாழுங்கள் நிச்சயமாக - ஆனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது. அவர்கள் வாழ்வில் உங்களுக்கு தெரியாத, நீங்கள் எதிர்பாராத காரணங்கள் இருக்கும்.

Stop judging, start living.

Link to comment
Share on other sites

11 minutes ago, goshan_che said:

இந்த ஆக்கத்தை வாசித்தபோது நீங்கள் பார்த்த கோணத்தில் எல்லோரும் பார்க்கப்போவதில்லை. அந்த பெண்ணின் கணவரை குறை சொல்வதாக நான் பார்க்கவில்லை மாறாக அந்த பெண் தனக்காகவும் சிறிது நேரம் செலவழித்திருக்கலாம் என்று தான் தோன்றியது. அதைத்தான் அந்த தோழியும் குடும்பம் குடும்பம் என்று தமக்காக எந்த நேரத்தையும் செலவுசெய்யாத பெண்களுக்கு சொல்லமுனைகின்றார்.

moral of this story: வாழ்க்கை அழகானது அதை அனுபவித்து வாழுங்கள்!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழினி said:

எழுத்தின் moral உடன் நான் முற்றாக உடன்படுகிறேன். இதை முன்பே சொல்லிவிட்டேன்.

உலகில் யாரும் இன்றியமையாதவர் அல்ல என்பது மிகவும் உண்மை. 

ஆனால் அதை சொன்ன விதம் மிக தவறானது.

கணவன் டெனிஸ் விளையாடப்போனது இந்த கதையில் சொல்லப்பட்டதன் நோக்கம் என்ன? அதை சொல்லாமல் moral ஐ சொல்லி இருக்கவே முடியாதா?

ஒரு குடும்பம் அதன் தலைவியை இழந்து நிற்கிறது. அதை பற்றி நட்பு வட்டத்தில் இப்படியா எழுதுவது? (முக புத்தகம் என்பதால் ஒரே நண்பர்கள்தான் இருப்பார்கள்).

இதை வாசிக்கும் கணவனின், பிள்ளைகளின் மனது எப்படி அந்தரிக்கும்?

எமது வாழ்கையில் we all take each other for granted. இது எல்லார் குடும்பங்களிலும் உண்டு.

சே….இருக்கும் போது இன்னும் ஒரு நகை செய்து கொடுத்திருக்கலாம், கொஞ்சம் இலகுவாக வாழ வசதி செய்திருக்கலாம், அந்த கோவிலுக்கு இன்னொரு முறை கூட்டி போயிருக்கலாம், அந்த விரும்பிய பாடலை இன்னொரு முறை பாடி காட்டி இருக்கலாம், அதிகம் சுமையுறாமல் ஒரு வேலையாளை வைத்திருக்கலாம், அவர் கேட்டது போல ஒரு சுற்றுலா போயிருக்கலாம் ……எல்லா கணவன், எல்லா மனைவிகளும் இப்படி நிச்சயம் நினைப்பார்கள்.

தனது துணையை கொஞ்சமேனும் taken for granted இல்லாத தம்பதி என்றால் அது இலட்சிய தம்பதியாகவே இருக்கும்.

இவற்றை ஒப்பாரியாய் கூட சொல்லி அழுவார்கள். அப்போது, அப்படி இல்லை என்று சொல்லி அவர்களை தேற்றுவதுதான் மனிததன்மை. மாறாக “இப்படி வேலை வாங்கியே கொன்னுடீங்களே” எனும் தொனியில் பொதுவெளியில் எழுதுவதல்ல.

இந்த கணவனுக்கு மனைவிக்குள்ளும் ஒரு புரிந்துணர்வு இருந்திருக்கும். இதை எழுதியவர் அறியாத தியாகங்களை மனைவி பொருட்டு அந்த கணவன் செய்திருக்கலாம்.

ஆனால் இவை பற்றி எதுவுமே இவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

இதனால்தான் மற்றயவர் விடயத்தில் பெரும்பாலானவர்கள் தலையிடுவதில்லை. What you see is the tip of the iceberg. 

இந்த கருத்தாளருக்கு தன் கருத்தை சுவைபட சொல்ல வேண்டும். அவ்வளவுதான். 

இப்படி மற்றவன் குடும்ப விசயத்தில் அநாவசியமாக நியாயம் பிளப்பவர்களுக்கு இது ஒரு கருத்து சொல்லும் சந்தர்பம் ஆனால் மனைவியை, தாயை இழந்து நிற்போருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் தாம் படும் துன்பங்களை வெளியில் சொல்வது குறைவு.
அதனால் பல கதைகள் பலருக்கு தெரிவதில்லை.

கணவன் மரணித்த பின்  ஏக போக வாழ்க்கை வாழும் பெண்களும் உள்ளார்கள். அந்த கதைகளை எழுதினால் தலை வெடிக்கும்.

வாழ்க்கை இருபாலருக்கும் பொதுவானது. அதை அனுபவித்து வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கை இதுதான், சந்தோஷங்களும் துக்கங்களும் நாள் போக போக கடந்து போய்விடும், நாம்தான் எம் வாழ்கையை எப்படி வாழப்போகின்றோம் முடிவெடுக்கனும், நல்ல பதிவு, நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

உங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி. பதிவின் moral சரியாக இருந்தாலும், உங்களுடைய கருத்தும் உண்மையானதே..

துக்கத்தை ஒவ்வொருவரும் அனுஷ்டிக்கும்/அதிலிருந்து மீளும் முறைகள் வேறு வேறு இருந்தாலும் பொதுவான எதிர்பார்ப்பைதான் இந்த பதிவு கூறுகிறது..மற்றவர்களுடைய judgementக்காக நாங்கள் வாழவேண்டும் என்பதில்லை எனக்கூறினாலும் இதுவே கணவன் இறந்து மனைவி ஒரு மாதம் முடியுமுன் வெளியே நண்பிகளுடன் சென்றால் எப்படி எடுத்துக்கொள்ளும் இந்த சமூகம்? இதுபோல இன்று பதிவை அவர்களது நண்பர்கள் வெளியிட மாட்டார்களா?. என்னால் சிலவற்றை வெளிப்படையாக கூறமுடியாதுள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது இருபாலாருக்குமே பொதுவானது என எவ்வளவுதான் கூறினாலும் சமூகம் என்ன கூறிவிடுமோ என்ற நிலையில் செயல்படுவதும் அதிகளவு மாறவில்லை. 

எங்களுடைய சமூகத்தில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களுடைய judgementக்காக வாழ்ந்து தங்களது வாழ்வை மட்டுமல்ல சில நேரங்களில் அவர்களை சார்ந்தவர்களையும்   கஷ்டப்படுத்துகிறார்கள் என்பதைதான் அதிகம் பார்க்கிறேன்.. 

ஆனாலும் உங்களது கருத்துக்கள் சில முற்றிலும் சரியானதே.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி பிரபா. உண்மையில் இந்த கட்டுரையில் ஒரு பெரிய உள்முரண் உள்ளது.

இங்கே இந்த கணவன் என்ன செய்கிறார்?

தனது கடமைகளை செய்கிறார். ஆனால் முடிந்தளவு அவர் வாழ்க்கையையும் வாழ்கிறார்.

இதைதான் தன் தோழி செய்யவில்லை என குறைப்படும் கட்டுரையாளர் - அதை செய்யும் கணவரை மறைமுகமாக தாக்குகிறார்.

வாழும் போது அந்த மனைவி கொஞ்சம் தன் விடயங்களில் நேரத்தை செலவழித்திருந்தால் “கணவன் கஸ்டபட்டு உழைக்கிறார், வீட்டை பார்க்காமல் இவ சோக்கு பண்ணுறா” என்றும் இதே சமூகம் எழுதி இருக்க்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.