Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி!

கொரோனா தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி!

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட மருத்துவர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவரும் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் – என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு அந்தக்கட்சியின் தலைமையகத்தில் நேற்றுமுற்பகல் நடைபெற்றது.
அதில் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் தெரிவித்ததாவது:
கம்பஹா மாவட்டத்தில் சில நாள்களுக்குள் 12 ஆயிரத்து 555 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்று கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற கம்பஹா மாவட்ட செயலணிக் கூட்டத்தில் உறுதியானது. குறித்த தொற்றாளர்களில் 4 ஆயிரம் பேர் வரையிலேயே மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். எனினும், கம்பஹா மாவட்டத்தில் பதிவாகிய தொற்றாளர்கள் என சுகாதார அமைச்சால் வெளியிட்பபட்ட எண்ணிக்கையை கூட்டினால் 3ஆயிரம்வரைதான் வருகின்றது. எனவே, யாரை ஏமாற்றுவதற்கு இங்கு முயற்சி எடுக்கப்படுகின்றது? திட்டமிட்ட அடிப்படையில் தரவுகள் மாற்றியமைக்கப்படுவது இதன்மூலம் உறுதியாகின்றது.

ஓகஸ்ட் 5 ஆம் திகதி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமனர். எனினும், 2 ஆயிரத்து 669 தொற்றாளர்கள் என்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல ஓகஸ்ட் 6 முதல் 11வரை நாளாந்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் 3 ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் என்ற அடிப்படையிலேயே அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான நாளாந்த தகவல்களை மாற்றியமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது என்பது உறுதியாகின்றது.ஆய்வுக்கூட பரிசோதனை முடிவுகள் குறிப்பிட்ட சிலரின் கைகளுக்கு மட்டுமே செல்லும் நிலைமை காணப்படுகிறது. யார் இவ்வாறு தவறான தகவல்களை வழங்குவது, அவர்களின் நோக்கம் என்ன?

சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்றுநோய் பிரிவின் விசேட மருத்துவர்கள் இருவரும், இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவருமே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இந்த இராணுவ அதிகாரி யாரென்பதை இராணுவத் தளபதி தேடிப்பார்க்க வேண்டும்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை ஸ்தம்பிதமடைய செய்வதே அந்த மூவரினதும் நோக்கமாக உள்ளது. வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில்தான் ஜனாதிபதி முடிவுகளை எடுக்கின்றார். எனவே, ஜனாதிபதியையும் தவறாக வழிநடத்துகின்றனர்.

ஆட்சியை ஸ்தம்பிதமடைய வைக்கவும், மக்களை பலிக்கடாவாக்குவதற்கும் இவ்வாறான நடவடிக்கைமூலம் முயற்சி எடுக்கப்படுகின்றது. எதிரணியின் தேவையை நிறைவேற்றும் பணியும் இடம்பெறுகின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, இறப்பு விகிதத்தை அதிகரித்து காண்பிக்கும் சூழ்ச்சித் திட்டமும் இதன் பின்னணியில் உள்ளது. எனவே, தொற்று நோயுடன் விளையாட முற்படும் இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். – என்றார்.

https://newuthayan.com/தொற்றாளர்-தொகை-திட்டமிட்/

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் இருங்கோ! உதுகளை மறைக்க இப்போ அவசரமாய் வடக்கில் புலிகள் முளைக்கப்போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, satan said:

கொஞ்சம் இருங்கோ! உதுகளை மறைக்க இப்போ அவசரமாய் வடக்கில் புலிகள் முளைக்கப்போகிறார்கள்.

புலிகள் இருந்திருந்தால் வழமை போல் அவர்கள் பெயர் சொல்லி இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

புலிகள் இருந்திருந்தால் வழமை போல் அவர்கள் பெயர் சொல்லி இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்திருப்பார்கள்.

இருந்தாலும் என்ன? "குண்டுகளோடு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள்." என்று செய்தியை  போட்டால், சிங்களம் வாயைப்பிளந்து அதுதான் முக்கிய செய்தி என்று மற்றவையெல்லாம் மறந்து, மறைந்து விடும். வேண்டுமென்றால் ஒரு சீன வெடியையும் கொழுத்திப் போடுவிட்டால் விஷயம் முடிஞ்சுது.   

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் மட்டுமல்ல இதர மற்ற விடயங்களிலும் இலங்கையரசின் புள்ளி விபரம் முன்னுக்குப்பின் முரணாகவுள்ளது, இலங்கையின் வேலையின்மை விகிதம் 5% குறைவாகவுள்ளது அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட அவ்வாறான நல்ல புள்ளி விபரமில்லை, அங்கு பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளதாக தனியொருவன் குறிப்பிட்டிருந்தார் ஆனால் பணவீக்கம் 5% குறைவாகவுள்ளது, போர்  இடம் பெறும் காலத்தில் இராணுவ இழப்புதொடர்பாக பிழையான புள்ளிவிபரங்களை வெளியிடுவதாக கூறுவார்கள், அரசு திட்டமிட்டே பிழையான புள்ளி விபரங்களை வெளியிடுகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

அரசேறிய விதமே சரியில்லை. புள்ளி விபரம் மட்டும் எப்படி சரியாகும்?    

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

கோவிட் மட்டுமல்ல இதர மற்ற விடயங்களிலும் இலங்கையரசின் புள்ளி விபரம் முன்னுக்குப்பின் முரணாகவுள்ளது, இலங்கையின் வேலையின்மை விகிதம் 5% குறைவாகவுள்ளது அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட அவ்வாறான நல்ல புள்ளி விபரமில்லை, அங்கு பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளதாக தனியொருவன் குறிப்பிட்டிருந்தார் ஆனால் பணவீக்கம் 5% குறைவாகவுள்ளது, போர்  இடம் பெறும் காலத்தில் இராணுவ இழப்புதொடர்பாக பிழையான புள்ளிவிபரங்களை வெளியிடுவதாக கூறுவார்கள், அரசு திட்டமிட்டே பிழையான புள்ளி விபரங்களை வெளியிடுகிறதா?

ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வருகிறது எங்களாலேயே விளங்க்கிக்கொள்ள முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

கோவிட் மட்டுமல்ல இதர மற்ற விடயங்களிலும் இலங்கையரசின் புள்ளி விபரம் முன்னுக்குப்பின் முரணாகவுள்ளது, இலங்கையின் வேலையின்மை விகிதம் 5% குறைவாகவுள்ளது அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட அவ்வாறான நல்ல புள்ளி விபரமில்லை, அங்கு பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளதாக தனியொருவன் குறிப்பிட்டிருந்தார் ஆனால் பணவீக்கம் 5% குறைவாகவுள்ளது, போர்  இடம் பெறும் காலத்தில் இராணுவ இழப்புதொடர்பாக பிழையான புள்ளிவிபரங்களை வெளியிடுவதாக கூறுவார்கள், அரசு திட்டமிட்டே பிழையான புள்ளி விபரங்களை வெளியிடுகிறதா?

இது இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல வசி.

காலாகாலமாக ஒவ்வொரு விடயத்திலும் அரசுகள் பச்சை பொய்யை சொல்லியே வந்துள்ளன.

ஆனால் சில விடயங்களை மூடி மறைக்க முடியாது.

ஆனால் இதை வைத்து மக்களை திசை திருப்பும் முகமாக பொய் செய்திகளை பரப்புவோரும் உண்டு.

உதாரணமாக யாழ்களத்யில் கொரோனா 1ம், 2ம் அலைகளின் போது இலங்கையில் நிலமை படுமோசம், மக்கள் ஆயிரகணக்கில் சாகிறார்கள் என்பது போல தகவல்கள் பரப்பபட்டது.

நானும் இன்னும் பல யாழ்கள உறவுகளும் தமது தொடர்புகளை விசாரித்த போது அப்படி இல்லை என்றே பதில் வந்தது.

அதை இங்கே எழுதிய போது - எம்மை இலங்கையின் ஒற்றர்கள் என்ற ரேஞ்சில் திட்டி தீர்த்தார்கள்.

ஆனால் இப்போ?

உண்மையிலே நிலமை மோசமான போது உண்மை வெளி வருகிறதுதானே? இப்போ களுபோவில ஆஸ்பத்திரி, இராகம ஆஸ்பத்திரியில் இருந்து வரும் வீடியோ, போட்டோ போல அப்போதும் வந்திருக்க வேண்டும் அல்லவா?

ஆகவே 1ம், 2ம் அலையில் இலங்கையில் நிலமை நன்றாக இருந்தது, இப்போ இல்லை என்பதுதான் உண்மை.

தமிழராக பிறந்த நம் எல்லாருக்கும் இலங்கை மீது தீராத கடுப்பு உண்டு.

ஆனால் அதற்க்காக எம் கற்பனையில் உதித்தவற்றை செய்தி, கருத்து என்று பரப்புவதால் எமதும், யாழ்களத்யின் நம்பகதன்மை பாதிக்குமே ஒழிய, இலங்கைக்கு இதில் எந்த நட்டமும் இல்லை.

பிகு

இது உங்களுக்கான கருத்து அல்ல. ஆனால் இலங்கை மீதான கடுப்பில், இலங்கைக்கு சேறடிப்பதாக நினைத்து எமக்கு நாமே ஆப்படிக்க்கும் போக்கு அதிகரிப்பதாக படுகிறது. குறிப்பாக தடுப்பூசி பற்றிய திரிகளில். அதனால் உங்கள் கருத்தை இரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டேன்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட நாசகார வேலை தான். 

விரைவில் பாருங்கள்

பெரும் அவலநிலை அறிவிக்கப்பட்டு அவசர உதவிகள் கடன்கள் கொடுப்பனவுகள் கோரப்படும்.

இன்றுள்ள கடன்கள் மற்றும் மீளமுடியாத சுமைகளில் இருந்து மீள இதையும் சிங்களம் பாவிக்கும் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யாழ்களத்யில் கொரோனா 1ம், 2ம் அலைகளின் போது இலங்கையில் நிலமை படுமோசம், மக்கள் ஆயிரகணக்கில் சாகிறார்கள் என்பது போல தகவல்கள் பரப்பபட்டது.

நானும் இன்னும் பல யாழ்கள உறவுகளும் தமது தொடர்புகளை விசாரித்த போது அப்படி இல்லை என்றே பதில் வந்தது.

அதை இங்கே எழுதிய போது - எம்மை இலங்கையின் ஒற்றர்கள் என்ற ரேஞ்சில் திட்டி தீர்த்தார்கள்.

ஆனால் இப்போ?

உண்மையிலே நிலமை மோசமான போது உண்மை வெளி வருகிறதுதானே? இப்போ களுபோவில ஆஸ்பத்திரி, இராகம ஆஸ்பத்திரியில் இருந்து வரும் வீடியோ, போட்டோ போல அப்போதும் வந்திருக்க வேண்டும் அல்லவா?

ஆகவே 1ம், 2ம் அலையில் இலங்கையில் நிலமை நன்றாக இருந்தது, இப்போ இல்லை என்பதுதான்  

எம் கற்பனையில் உதித்தவற்றை செய்தி, கருத்து என்று பரப்புவதால் எமதும், யாழ்களத்யின் நம்பகதன்மை பாதிக்குமே ஒழிய, இலங்கைக்கு இதில் எந்த நட்டமும் இல்லை.

மிகச்சரியாகச் சொன்னீர்கள்.

யாழ்களத்தில் கொரோனா 1ம், 2ம் அலைகளின் போது இலங்கையில் நிலமை படுமோசம், மக்கள் ஆயிரகணக்கில் சாகிறார்கள் என்பது போல தகவல்கள் பரப்பபட்டு கொண்டிருந்த போது இலங்கையில் உள்ள தமிழர்களோ பிறந்த நாள் பாட்டி மற்றும் கொண்டாட்டங்களுக்காக  கொழும்பில் இருந்து யாழ்பாணம்  சென்றுவந்து கொண்டிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட நாசகார வேலை தான். 

விரைவில் பாருங்கள்

பெரும் அவலநிலை அறிவிக்கப்பட்டு அவசர உதவிகள் கடன்கள் கொடுப்பனவுகள் கோரப்படும்.

இன்றுள்ள கடன்கள் மற்றும் மீளமுடியாத சுமைகளில் இருந்து மீள இதையும் சிங்களம் பாவிக்கும் ☹️

அண்ணை சுனாமி காசையே ஆட்டையை போட்ட ஆக்கள் அவங்கள். கொஞ்சம் கொடுப்பது என்றாலும் அவர்கள் பகுதிக்குர்தான் அதிகம் கொடுத்தார்கள்.

அதே இங்கும் நடக்கலாம்.

ஆனால் நான் சொல்வது அதை அல்ல, கண்மூடித்தனமா எமது ஆற்றாமையில், இல்லாதது எல்லாத்தையும் இருப்பதாக எழுதும் போக்கு. அதைதான் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆகவே 1ம், 2ம் அலையில் இலங்கையில் நிலமை நன்றாக இருந்தது, இப்போ இல்லை என்பதுதான் உண்மை.

8 hours ago, goshan_che said:

இலங்கை மீதான கடுப்பில், இலங்கைக்கு சேறடிப்பதாக நினைத்து எமக்கு நாமே ஆப்படிக்க்கும் போக்கு அதிகரிப்பதாக படுகிறது.

உலகமே பயணக் கட்டுப்பாடுகளை விதித்து, கலங்கிக் கொண்டிருந்தவேளை இலங்கை வெளிநாட்டுப்பயணிகளை தட்டுவைத்தல்லோ அழைத்தது. சுவிஸ் போதகரை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தவேளை, தென் அரசியலாளர் வடக்கிற்கு ஏன் படையெடுக்க வேண்டும்? புலிகள் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு போகும் சாதாரண மக்களுக்கு  எத்தனை கெடுபிடிகள் வைத்தார்கள்? ஆனால் கொரோனா தனிமைப்படுத்த வேண்டியவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தார்கள். மக்கள் அரசாங்கத்தில்  கோபப்படுவது நிஞாயமில்லை என்கிறீர்களா? புலிகளை அழித்த இராணுவத்துக்கு இது ஒன்றும் பெரிதல்ல என்று மார் தட்டி இறக்கினார்களே, ஏன் முடியவில்லை? சொல்வது ஒன்று செய்வது வேறொன்று. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. போதிய அறிவுறுத்தல் வழங்குவதில்லை, சரிசமமாக நடத்துவதில்லை, அத்தியாவசிய தேவைக்கு வழியில்லை. எத்தனை நாளைக்கு வயிற்றை கட்டுப்படுத்த முடியும்? கடந்த காலத்தில் ஏமாற்றி, அழித்த அனுபவம் மக்களை சந்தேகக் கண்ணோடு நோக்க வைக்கிறது. நம்ம அரசியற் தலைவர்களும் அவ்வாறே. நொந்து போனவர்களை தேற்ற ஆளில்லை, ஆறுதல் அளிக்க முன்வருவாருமில்லை. மக்களின் நிலை யாரை நம்புவது என்பதே?            

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இந்த கேள்விகள் நியாயமானதே. 

இலங்கை தமிழர்களை மாற்றாந்தாய் மனநிலையோடு நடத்துவது ஒரு சந்தேகம் கூட இல்லை. அது ஒரு உண்மை. 

ஆனால் அதை ஒத்த உண்மைகள்தான்:

1. 1ம், 2ம் அலைகள் இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

2. கொவிட்டால் வர இருக்கும் risk ஓடு ஒப்பிட்டால் - சைனோபார்ம் ஊசியால் வர இருக்கும் risk பல மடங்கு குறைவு என்பதும்.

3. இலங்கை சொல்கிறதோ இல்லையோ தமிழர்கள் நாம் கோவிலை பூட்டி விட்டு நம்மை நாமே தற்காற்க வேண்டும்.

என்பதும். 

இலங்கை மீதான கடுப்பில் மேலே சொன்ன மூன்று உண்மைகளையும் திரித்து எழுதுவதால் - இலங்கைக்கு எந்த கெடுதலும் இல்லை -கெடுதல் முழுக்க எமது மக்களுக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊசியைப் போடுங்கள், அந்த ஊசியைப் போடாதீர்கள் என்று இங்கு யாரும் கூறவில்லை. இதைக்கேட்டு மக்கள் முடிவெடுப்பதும் இல்லை. ஒவ்வொரு ஊசியின் பலாபலன்களை தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். தெரிவு செய்வது அந்தந்த மக்கள்.. அவரவர் உயிர் அவரவர்க்கு பெரிது கடவுளும் மனிதனுக்கு மனச்சாட்சி என்று ஒன்றை கொடுத்துள்ளார். மனிதன் தானே விரும்பி சரியானதை செய்யவும், தவறானதை விலத்தவும்பூரண சுதந்திரத்தை அவனுக்கு கொடுத்துள்ளார். அதில் அவர் தலையிடுவதில்லை. இலங்கை அரசால் இழப்புகளையும் வலிகளையும் சுமந்து கொண்டிருக்கும் எவருக்கும் கடுப்பு இருக்கும் என்பதில் என்போன்றோருக்கு சந்தேகமில்லை. அதில் பிழையுமில்லை. ஆனால் கொரோனவை வைத்து விளையாடுமளவிற்க்கு முட்டாள்கள் கிடையாது. இழப்பு என்பது மனித வாழ்வில் எவ்வளவு துயரானது என்பது நமக்கு தெரியும். அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு. மக்கள் இயலாமையில் தவிக்கிறார்கள். அதை போக்குவது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. அதை விடுத்து பிரச்சனையை வேறு பக்கம் திசைதிருப்புவது தவறான உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊசியைப் போடுங்கள், அந்த ஊசியைப் போடாதீர்கள் என்று இங்கு யாரும் கூறவில்லையா😂

நல்லது நடந்தது  என்னவென்றால் இங்கே சொல்வதை பொருட்படுத்தாமல் இலங்கையில் உள்ளவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற தடுப்பூசிகளை போட்டு கொள்வதே 👍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இந்த ஊசியைப் போடுங்கள், அந்த ஊசியைப் போடாதீர்கள் என்று இங்கு யாரும் கூறவில்லை. இதைக்கேட்டு மக்கள் முடிவெடுப்பதும் இல்லை. ஒவ்வொரு ஊசியின் பலாபலன்களை தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். தெரிவு செய்வது அந்தந்த மக்கள்.. அவரவர் உயிர் அவரவர்க்கு பெரிது கடவுளும் மனிதனுக்கு மனச்சாட்சி என்று ஒன்றை கொடுத்துள்ளார். மனிதன் தானே விரும்பி சரியானதை செய்யவும், தவறானதை விலத்தவும்பூரண சுதந்திரத்தை அவனுக்கு கொடுத்துள்ளார். அதில் அவர் தலையிடுவதில்லை. இலங்கை அரசால் இழப்புகளையும் வலிகளையும் சுமந்து கொண்டிருக்கும் எவருக்கும் கடுப்பு இருக்கும் என்பதில் என்போன்றோருக்கு சந்தேகமில்லை. அதில் பிழையுமில்லை. ஆனால் கொரோனவை வைத்து விளையாடுமளவிற்க்கு முட்டாள்கள் கிடையாது. இழப்பு என்பது மனித வாழ்வில் எவ்வளவு துயரானது என்பது நமக்கு தெரியும். அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு. மக்கள் இயலாமையில் தவிக்கிறார்கள். அதை போக்குவது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. அதை விடுத்து பிரச்சனையை வேறு பக்கம் திசைதிருப்புவது தவறான உதாரணம். 

சாத்தான், இலங்கையில் அதிகம் போடப் படும் சீனத் தடுப்பூசி பற்றிய விஞ்ஞான அடிப்படையற்ற கருத்துக்கள் இங்கே பகிரப் பட்டன. இராணுவம் அதிகம் ஊசி போடுகிற வட கிழக்கில், அவர்கள் உப்புத் தண்ணி போட்டார்கள் என்ற செவி வழிச் செய்தியும் இங்கே பரப்பப் பட்டது.

இதனால் , தடுப்பு முறைகள் மீது சந்தேகம் கொண்டு தாயகத்தில் மக்கள் பாதிக்கப் படமாட்டார்கள் என நினைக்கிறீர்களா?

முகநூல், வட்சப்பில் இருந்து யாழுக்கு பொது நலனுக்குப் பாதகமான செய்திகள் வருவது மட்டுறுத்துனர் நடவடிக்கைகளால் தடுக்கப் படுகின்றன - ஆனால், யாழில் இருந்து முகநூலுக்கு செய்திகள் போவதற்கு ஒரு தடையும் இல்லை! இந்த மாதிரியான பீதி கிளப்பும் செய்திகளை இங்கே பரப்புவது போன்று முகநூல், வட்சப் போன்றவற்றிலும் சில உறுப்பினர்கள் பரப்புவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!

எந்த அமைப்பையும், அதிகாரத்தையும் காட்டமாக விமர்சிக்கலாம், ஆனால் உண்மையான தரவுகளைப் பயன்படுத்தி விமர்சிக்க வேண்டும். வெறும் வெறுப்புணர்வு மட்டும் தான் விமர்சனத்திற்குக் காரணம் என்றால் அனேகமாக counter-productive ஆகத் தான் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழில் யாரும் அந்த ஊசியை போடுங்கள் இந்த ஊசியை போடவேண்டாம் என எழுதவில்லை. 

மேலும் அங்கு நடைபெறும் தேவையற்ற இராணுவ பிரசன்னம், இராணுவம் ஊசி போடுதல், கொரான தொற்றாளர்கள் தென்பகுதியிலிருந்து வடபகுதிக்கு குறிப்பாக யாழிற்கு கொண்டு செல்லல், ஊசியின் வினைத்திறன் போன்ற விடயங்களை பகிரப்பட்டன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிலருக்கு மெல்லுவதற்கு ஏதாவது ஒரு கருப்பொருள் வேண்டும். அதனால் அந்த கருப்பொருளை திரிக்கு திரி காவிக்கொண்டு திரிவார்கள். ஒரு விடயம் எதற்காக சொல்லப்பட்டது என்பதையும் மறந்து விடுவர். ஒரு கருப்பொருளை வைத்து பெரிய பெரிய கயிறெல்லாம் திரிப்பர்.😂

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதைத்தானோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இங்கு யாழில் யாரும் அந்த ஊசியை போடுங்கள் இந்த ஊசியை போடவேண்டாம் என எழுதவில்லை. 

மேலும் அங்கு நடைபெறும் தேவையற்ற இராணுவ பிரசன்னம், இராணுவம் ஊசி போடுதல், கொரான தொற்றாளர்கள் தென்பகுதியிலிருந்து வடபகுதிக்கு குறிப்பாக யாழிற்கு கொண்டு செல்லல், ஊசியின் வினைத்திறன் போன்ற விடயங்களை பகிரப்பட்டன.

போடுங்கள் போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்வதற்கும், "தமிழ் பகுதியில் சொத்தையான சீன ஊசியைப் போடுகிறார்கள், சிங்கள பகுதியில் நல்ல ஐரோப்பிய ஊசி போடுகிறார்கள்" என்று புரளி கிளப்பி விடுவதற்கும் இடையில் உள்ள தொடர்பு உங்களுக்கு விளங்கவில்லையென்பது புரிகிறது.😂

இராணுவப் பிரசன்னம் இப்போது தோன்றிய பிரச்சினையா? எல்லா நாடுகளிலும் இராணுவத்தின் ஒரு பிரிவை வைத்து கோவிட் சேவைகள் நடக்கும் போது ஏற்கனவே இராணுவம் பெரும்பாகம் வகிக்கும் இலங்கையில் இது அசாதாரணமானதா?

தெற்கில் இருந்து தொற்றாளர்களை வடக்கிற்கு அனுப்பினார்கள் என்பதும் பச்சைப் பொய்யல்லவா? இராணுவ ஹோட்டல்களுக்கு தனிமைப் படுத்தலுக்காக அனுப்பிய பயணிகளையும், தொற்றாளர்களையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவது யாருடைய அறியாமை?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இங்கு யாழில் யாரும் அந்த ஊசியை போடுங்கள் இந்த ஊசியை போடவேண்டாம் என எழுதவில்லை. 

மேலும் அங்கு நடைபெறும் தேவையற்ற இராணுவ பிரசன்னம், இராணுவம் ஊசி போடுதல், கொரான தொற்றாளர்கள் தென்பகுதியிலிருந்து வடபகுதிக்கு குறிப்பாக யாழிற்கு கொண்டு செல்லல், ஊசியின் வினைத்திறன் போன்ற விடயங்களை பகிரப்பட்டன.

சரியாகக் குறிப்பிட்டிருக்கிறீங்க. இந்த ரத்தினச் சுருக்கம் சிலருக்கு புரிய வாய்ப்பில்லை. அவர்கள் புலிகள் சிறுவர்களை பிடிச்சு போராட்டம் நடத்தினர் என்று மட்டும் எமது விடுதலைப் போராட்டத்தையே பிள்ளை பிடி போராட்டமாகச் சித்தரிக்க ஆரம்பித்தவர்கள் 2009 மே பின். 2009 மே பின் பிறப்பெடுத்த சிங்கள பெளத்த பேரினவாத தமிழ் விசுவாசிகளானவர்களிடம் இருந்து.. தப்பான பரப்புரைகளை.. கயிறு திரித்தல்களை தான் காண முடியும்.

இப்போதும்.. சொறீலங்காவில் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட வயது எல்லையை கடந்தும் சினோபாம் தான் போடப்படுகிறது.  இந்தச் செய்தியில் எந்த தவறும் கிடையாது. சிங்களப் பகுதிகளில் வேறு தடுப்பூசிகளுக்கான தெரிவுக்கு வழி இருக்கிறது. இது ஒரு பாரபட்சமான நடைமுறையாகும். இதனை வேறு அமைப்புக்களும் கண்டித்துள்ளன.

மேலும்.. உலகெங்கும் கொரோனா நோயாளிகள் பயணிகளை தனிமைப்படுத்த அந்த பயணிகள்.. நோயாளிகள் வசிக்கும் வந்திறக்கும் இடங்களை அண்மித்தே தனிமைப்படுத்தல் மையங்கள் இருக்கின்றன. காரணம்.. நோய்க்காரணியின் பரவலை கட்டுப்படுத்த. ஆனால் சொறீலங்காவில் மட்டும் தான் சிங்கள பகுதிகளில் இருக்கும் நோயாளிகளை தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி தனிமைப்படுத்தினம். தொற்றுள்ள உடலங்களை புதைக்கிறார்கள். இராணுவ முகாம்கள் நாடெங்கும் இருக்க.. தமிழர் பகுதிகளில் தான் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களை இராணுவ முகாம் அல்லது இராணுவ ஆக்கிரமிப்பு மையங்களில் உள்ள கொட்டல்களில் மக்களின் விருப்புக்கு எதிராக செய்தனர். இதனை அலை1 மற்றும் 2 இல் தமிழ் பகுதிகளில் மக்களே பகிரங்கமாக வீதிக்கு இறங்கி எதிர்த்தனர். அப்போது தமிழர் பகுதிகளில் கொரோனா தொற்று வெகு குறைவு. இதனை சொறீலங்கா இராணுவத் தளபதியே வடக்கு மக்கள் அலை 1 நல்ல ஒத்துழைப்பை வழங்கியதாகவும் இப்போ இல்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டார். ஆனால் தமிழர் பகுதிக்குள் கொரோனாவை கடத்தி வந்தவர்களில் சொறீலங்கா இராணுவத்தின் செயற்பாடுகளும்... தனிமைப்படுத்தல் மையங்களை இயங்க வைத்ததும்.. பொருண்மிய நோக்கம் மட்டுமே கருத்திற்கொண்டு.. தற்போதும் கூட மாகாணங்களுக்கிடையேயான போக்கு வரத்து தடை இருக்க.. புகையிரதங்கள் வடக்கு நோக்கி இயக்கப்படுகின்றன. இராணுவம் சிங்கள பெளத்த சுற்றுலாப் பயணிகள்.. அதிகளவில் அதில் பணிக்கிறதுடன்... இவர்களில் பலர் கொரோனா தொற்றுக்குரிய பரிசோதனை கூடச் செய்து கொண்டதில்லை என்பது குறிப்பித்தக்கது.. இவை..வடக்கு கிழக்கில் தொற்று அதிகரிப்பு...வகித்த பங்களிப்பை திட்டமிட்டு மறைத்துவிட்டனர். .. மறைத்து வருவதோடு..

சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியது போல்... கொரோனா தடுப்பு சட்ட விதிகள்..இராணுவ மயப்படுத்தப்பட்டு..  மக்களை.. பழிவாங்கவும்.. அரசுக்கு எதிரான கருத்தோட்டம் உள்ளவர்களை பழிவாங்கவும் பாவிக்கப்படுவதையும் காணலாம். இதையும் சிலர் பூசி மொழுகி இல்லாத்துக்கும் பச்சப் பொய் சாயம் பூசி.. சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களை கூட மறுதலிக்க வல்ல சிங்கள பெளத்த பேரினவாத அரசின் பாரபட்சத்துக்கு ஒத்தூதி வருகின்றனர். இது இவர்களின் வழமையாகிவிட்டது இன்று.

இவர்களைப் பொறுத்தவரை.. தமது கருத்தை யாழில் திணிப்பதும்.. அதன் மூலம்.. தம்மை சிறந்த அறிவாளி என்று பிரமையை உருவாக்கிக் கொள்வது... ஆகும். 

மக்கள்.. மக்கள் நலன் குறித்த எந்த எண்ணமும் இல்லை. இல்லாவிட்டால்.. அஸ்ராசெனிக்காவில் டி என் ஏ அதிகம் இருப்பதால்.. அது குருதி உறைதலுக்கு இட்டுச் செல்கிறது என்ற அஸ்ராசெனிக்கா தொடர்பான சொந்த தவறான விளக்கத்தை சினோபாம் வினைத்திறன் தொடர்பான கருத்தில் பதிய வேண்டிய அவசியம் என்ன..??!

எல்லா வக்சீன்களும் 100 சதவீதம் பாதுகாப்பானவை அல்ல. மேலும் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு ஏற்பவே தான் வினைத்திறன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சினோபாம் உட்பட சீன வக்சீன்கள் தொடர்பில் ஆற்றப்பட்ட ஆய்வுகள் தொடர்பில் சீனா உண்மையான தகவல்களை தான் பரிமாறிக் கொண்டதா என்ற சந்தேகமும் நிலவி வரும் நிலையில்.. சீன வக்சீனை கிட்டத்தட்ட எல்லா மேற்கு நாடுகளும் முற்றாகப் புறக்கணித்து விட்டுள்ளன. இதனடிப்படையில் சீன வக்சீன்கள் தொடர்பான வினைத்திறன் என்பது பலத்த சந்தேகத்துக்குரிய ஒன்று என்பதை அதனை மக்களிடம் திணிக்க முன் அந்த மக்கள் முன் சொல்ல வேண்டும்.

இந்த விடயத்தில் மக்கள் தமது உடலுக்குள் செல்லும் வக்சீன் தொடர்பில் தகுந்த அறிவூட்டப்படுவதோடு.. இயன்ற வரை.. சரியான தகவல் வழங்கப்பட்டு... அவை வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளப்படுதல் அவசியமாகும். ஏனெனில்.. ஒவ்வாத மக்களுக்கு ஒவ்வக் கூடியதை தெரிவு செய்யும் உரிமை உண்டு. அதனை சொறீலங்காவில் அரசும்.. இராணுவமும் முடிவு செய்யக் கூடாது. மருத்துவர்களும்.. மருத்துவ சேவை அமைப்புக்களும்.. விஞ்ஞான பூர்வ ஆய்வுகள்.. பரிசோதனைகள்.. தரவு பகுப்பாய்வுகள் மூலம் தீர்மானிக்க வேண்டும். 

இதுதான் இங்கு வேண்டப்படும் பகிரப்படும் முக்கிய கருத்துக்களின் தொனிப்பொருளாகும்.

மீரா நீங்கள் அதனை ரத்தினச் சுருக்கமாக்கி உள்ளீர்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Efficacy of Sinopharm's COVID-19 vaccines proved again in new trials - CGTN

சீன வக்சீன் செலவு குறைவானதும்.. பராமரிக்கச் சுலபமானதும்.. மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தற்காலிக அனுமதி பெற்றதும் என்ற அடிப்படையில்.. கூடிய அளவு வறிய நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சொறீலங்காவும் அடங்கும். ஆனால் சீன வக்சீனின் செயற்பாட்டுத் வினைத்திறன் இதன் மூலம் சிறப்பாக உள்ளது என்பதனை நிரூபிக்க முடியாது. இது வறிய நாடுகளுக்கு கொரொனாவை எதிர்த்துப் போராட உள்ள தெரிவுகளில் ஒன்று அவ்வளவும் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் தேவையாய் இருந்தால் என்னிடமே, அங்கேயே கேட்டிருக்கலாமே நெடுக்கர்?

அஸ்ட்ரா செனக்காவில் இருக்கும் காவி வைரசின் டி.என்.ஏ VITT இற்கு காரணமாக  இருக்கலாம் என்ற எடுகோளும், அதனால், அதன் அளவைப் பாதியாகக் குறைக்கலாம் என்ற ஆலோசனையும் விஞ்ஞான சஞ்சிகைகளில் வந்த கருத்து, தேடி வாசித்தால் அறிந்து கொள்ளலாம்! (இதே காரணம் ஜே அன்ட் ஜே, ஸ்புட்னிக் V ஆகியவற்றின் பக்க விளைவுகளுக்கும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்).

https://www.nature.com/articles/d41586-021-00998-w

ஏனைய கருத்துகளுக்கு உரிய திரியிலேயே பதில்கள் தரப்பட்டாயிற்று!

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

On 12/8/2021 at 15:46, Justin said:

உதாரணமாக: அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியில் இருக்கும் பெருமளவிலான டி.என்.ஏ காரணமாகத் தான் ஒரு மில்லியனில் நால்வருக்கு (இது மருத்துவ ரீதியில் அரிதான எண்ணிக்கை) குருதிக் கட்டி நிலை (VITT) ஏற்படுவதாக ஒரு வலுவான தியரி இருக்கிறது.

The vaccines produced by AstraZeneca and J&J both rely on adenoviruses, which carry the DNA encoding a coronavirus protein called spike into human cells. The cells’ protein machinery then uses the DNA to make the spike protein, and the body develops an immune response against it.

At present, researchers don’t know what component of these vaccines could be causing the unwanted immune response against platelet factor 4. “It could be caused by the vectors, it could be caused by the spike protein, it could be caused by a contaminant present in the vector,” says viral immunologist Hildegund Ertl at the Wistar Institute in Philadelphia, Pennsylvania.

இந்த இணைப்பை வழங்கும் போது.. உங்கள் முதற் கருத்தில்.. வலுவாக இருந்த தியரி.. இப்ப எடுகோள் ஆகி.. வலுவில்லாத.. இருக்கலாம்.. போகலாம்.. என்ற நிலைக்கு இறங்கி வந்ததெப்படி.

அப்பவே அந்த திரியில் இணையவனை கேட்டோம்.. எது சிறந்த கருத்தென்று.. அவரும் பதில் சொல்லவில்லை. இந்த கட்டுரையை நீங்கள் இங்கு பகிர முன்னர்.. எப்பவோ வாசித்தும் விட்டேன். 😃🤣

  • கருத்துக்கள உறவுகள்

தொற்றாளர்கள்,

மனைவியின் சிறியதாயார் கனடாவிலிருந்து சிறீலங்காவிற்கு கடந்த மே மாதம் திரும்பியிருந்தார். விமானநிலையத்தில் PCR பரிசோதனை பொசிரிவ். அப்படியிருந்தும் திருமலை நகர் பகுதி விடுதியில் 10 நாட்கள் + 4/5 நாட்கள் வீட்டில்.

இப்படி பல சம்பவங்கள் உண்டு…

நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்

போனவருடம் பரவல் இலங்கையில் நடந்தபோது நாங்க பிழையான தகவலை சொல்கிறார்கள் என்று சொல்ல வரிந்துகட்டிக்கொண்டு அப்படி நடக்க சான்ஸ் இல்லை அப்படி இப்படி கோத்தா அரசுக்கு சார்பாக கதைகளை அவிட்டு விட்டார் அவர் எழுதியது இப்பவும் இருக்கு .

பிழையான தகவலையும் தேவையற்ற உசுப்பேத்தலும் புலிகளை அழித்த எமக்கு கொர்னோவை அழிப்பது பெரிய வேலைகிடையாது பிளஸ் புத்த பிரான் கைவிடார் மந்திரித்த தண்ணீர் இப்படியானது உருட்டல் சுருட்டலுக்கும் சிங்களவர் மயங்கி சுகாதர திணைக்களம் கரடியாக  கத்தியும் யாரும் காது  கொடுத்து  கேட்கவில்லை விளைவு இன்றுள்ள நிலைமை மேலும் மேலும் தப்பு பண்ணுகிறார்கள் குறைத்து காட்டுவதன் மூலம் அஜாக்கிரதை உணர்வே மேலும் வளரும் என்பதை உணர மறுக்கிறார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.