Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனம்பழஞ் சூப்பி - ஜூட் பிரகாஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

இது நீங்கள் சுட்ட பனம்பழமா ....யாரிடம்.....!  😂

(நீங்கள் எங்கே  அதிகாலையில் பனங்காட்டுக்கு போகமாட்டியல் என்ற நம்பிக்கைதான்).

அண்ணை எனது பக்கத்து வளவில் இருக்கும் மரம் இது பனங்காட்டுக்கு போவது கிடையாது ஆனால் வேலைக்கு போகணும் தற்போது நண்பர்களுடன் வேலைக்கு செல்வது பாடசாலை பூட்டு என்ற படியால். இன்றுமுதல் 30 வரை வரை பொது முடக்கம் அறிவித்துள்ளார்கள் இனி வீட்டிலதான் 

கிழக்கில் எனக்கு தெரிந்து யாரும் சுட்டு பனம்பழம் சாப்பிடுவது இல்லை  ,இன்னொன்றும் சொல்ல வேண்டும் பிட்டுடன் பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் சாப்பிடலாம் நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

  • Replies 66
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உணவு மற்றும் மரங்கள் புதிதாக உருவாக்கி  வளர்வதற்கு மிகவும் கடினமான மண்ணில், பனை மரத்தின் உபயோகங்களை மனித திறனின் கூர்ப்பாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணை எனது பக்கத்து வளவில் இருக்கும் மரம் இது பனங்காட்டுக்கு போவது கிடையாது ஆனால் வேலைக்கு போகணும் தற்போது நண்பர்களுடன் வேலைக்கு செல்வது பாடசாலை பூட்டு என்ற படியால். இன்றுமுதல் 30 வரை வரை பொது முடக்கம் அறிவித்துள்ளார்கள் இனி வீட்டிலதான் 

கிழக்கில் எனக்கு தெரிந்து யாரும் சுட்டு பனம்பழம் சாப்பிடுவது இல்லை  ,இன்னொன்றும் சொல்ல வேண்டும் பிட்டுடன் பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் சாப்பிடலாம் நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

விறகு கடடைகளை எரித்து பின் அதில் இருக்கும் தணலில் பழத்தைச் சுட்டு சாப்பிடுங்கள், ஜூஸ் அந்தமாதிரி ஒழுகும் .....பிட்டுக்கு பிலாப்பழம் செம டேஸ்ட் தெரியுமா....இன்றே இரண்டையும் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்....வாழ்நாளில் 1/2 வாசியை வீணாக்கிப் போட்டியல் தனி.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

10 நாள் விடுமுறை செய்து பார்ப்போம் (பொது முடக்கம்)

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்"  என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்"  என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.

ஆணம் என்று சொல்வது அதிகம் முஸ்லீம்கள் அதிலும் தேங்காய்ப்பூ சொதியை பால் ஆணம் என்றே சொல்வார்கள் 

நல்ல பனம்பழம் விழும்போதே சற்று வெடித்துப் பிளந்துவிடும். தணல் பட்டும் படாமலும் பக்கவாட்டாக வைக்க வேண்டும். கருகாமல் அடிக்கடி சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நன்கு வேகத் தொடங்கியதும் தோலுக்கிடையில் பாணி வெளியேறி சூட்டில் எரிந்து பொசுங்கி நல்ல வாசனை வரும் 😀
 
ஏனோ தெரியவில்லை, இப்போது ஆர்வமில்லை. கடைசியாக யாழ்ப்பாணம் போனபோது சாப்பிட்ட பினாட்டு நான் முன்னர் சுவைத்த சுவையைத் தரவில்லை. இன்னும் சாப்பிட விருப்பமனது பனங்க்கொட்டை முளை வரும்போது அதைப் பிழந்து பூரான் சாப்பிடுவது. தேங்காய் போல் பெரிதாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும். பனங்கொட்டையை இரண்டாகப் பிழப்பதுதான் கடினம். மற்றது பனங் குருத்து. இதைச் சாப்பிட மரத்தையே தறிக்க வேண்டுமென்பதால் சாப்பிடுவதில்லை.

இன்னொன்று. பனம்பழச் சாற்றைப் பிழிந்து தேங்காய்ப் பால், சக்கரை கலந்து சோறு அல்லது பிட்டுக்குள் விட்டுக் குழைத்துச் சாப்பிட நன்றாக இருக்கும். முஸ்லிம் ஊர்களில் சோறு சாப்பிட்ட பின் இதை உண்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாரும் பனம் பிட்டு சாப்பிடவில்லைபோல் இருக்கிறது. பனங்களி சேர்த்து, அரிசிமாவில் குழைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி, நீத்துப்பெட்டியில் அவித்து, பின் தேங்காய்ப்பால், சீனி சேர்த்து கொதித்ததும் அவித்த உருண்டைகளை அந்தக்கலவையில் கொட்டி, பிரட்டி சாப்பிட்டுப் பாருங்கள். அதன் சுவையே தனி. அதோடு என்தாயார் சொல்வார், ஒருகாலத்தில் பனையோலையில் கூடை பின்னி, அதில் வெங்காயம் போட்டு கொழும்புக்கு அனுப்புவார்களாம். அன்று பல பெண்களை வேலைக்கு அமர்த்தி, ஒருபுறம் வெங்காயம் ஆய்வார்களாம், மறுபுறம் கூடை இளைப்பார்களாம், காலையில் வாகனம் வைத்து  தென்பகுதிக்கு வெங்காய ஏற்றுமதி கூட்டுறவுமூலம் நடந்ததாம். வெங்காய சாக்கு என்று வருவதற்கு முன் வெங்காய  கூடையே பயன்படுத்தினார்களாம். குழல் வடிவில் பெரிய ஓட்டை உடையதாய் இருக்குமாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பொது முடக்கம்)

முடக்கம்
 
அல்லது

அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நானும் மட்டக்களப்பில் பல காலம் வாழ்ந்துள்ளேன் அங்கு "சொதி" என்று சொல்லக் கேட்டதில்லை. "ஆணம்"  என்றுதான் சொல்லக் கேட்டுள்ளேன்.

யாழில் ஆணம் என்றால் குழம்பை தானே சொல்வார்கள்?!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Paanch said:

சுட்ட பனம்பழத்தைப் பழப்புளித் தண்ணியில் தோய்த்துச் சூப்பிய அந்நாள் ஞாபகத்திற்கு, நிழலி அவர்களின் பதிவு என்னைக் கொண்டு சென்றதுமட்டும் அல்லாது, யாழ்கள உறவுகள் சிலருக்கு எங்கள் பனை ஒரு கற்பகதரு என்றும், அதன் மகத்துவம் தெரியாதிருப்பதும் தெரியவந்தது, கற்பகதரு பற்றிப் பாரிசில் இருந்து யோகன் என்பவர் அன்று தந்த ஆக்கத்தை இங்கு தருகிறேன்.

பயனுள்ள தகவலை இணைத்தமைக்கு நன்றி.. இதன் மூல இணைப்பையும் ஒரு தரம் தந்து உதவமுடியுமா? 

Sydney Institute of Community Languageயினால், இங்கே கற்பிக்கும் மொழிகள், அவர்களது இனம், அவர்களது பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள், இந்த தகவல், இங்கே தமிழ்மொழியை கற்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.. 

இந்த தகவலின் மூல இணைப்பு இருந்தால் இதை என்னால் SICLEற்கு அனுப்பமுடியும்..

படங்களுடனும் இலகுவான மொழிநடையுடன் அதிகளவு பக்கங்கள் இல்லாமல் இருப்பதால்.. இந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்..

  • தொடங்கியவர்
15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

கூளில் தேடும் போது இரண்டு மூலங்கள் இதற்கு வருகின்றது.

படங்கள் இல்லாமல் 
http://johan-paris.blogspot.com/2006/08/blog-post_18.html

படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பனங்கூடல்களுக்குள் பிறந்து வளர்ந்தபோதும் (வீட்டில் பின் வளவில் இப்போதும் பனைகள் சில நிற்கின்றன), பனையில் இருந்து சாப்பிடக்கூடிய எல்லாவற்றையும் சாப்பிட்டும், பனம்பழம் மட்டும் சாப்பிட்டதில்லை!

அதை எப்போதும் மாடுகளுக்கே கொடுப்போம்.😀

ஒழுங்காக எண்ணை வைத்து தலை சீவாமல் பள்ளிக்கூடம் வருபவர்களை மாடு சூப்பின பனங்கொட்டை சிலும்பிக் கொண்டு வரக்கூடாது வாத்தியார், ரீச்சர்மார் சொல்லுவினம்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

கூளில் தேடும் போது இரண்டு மூலங்கள் இதற்கு வருகின்றது.

படங்கள் இல்லாமல் 
http://johan-paris.blogspot.com/2006/08/blog-post_18.html

படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

மிக்க நன்றி.. 

நான் அவர்களுக்கு இதை அனுப்பிவிடுகிறேன்.. 

இப்பொழுது 12 மொழிகள் சம்பந்தமான தகவல்களை எதிர்கால சந்ததிக்காக சேகரிக்க தொடங்கியுள்ளார்கள்.. அந்த 12 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. University of Sydneyயின் ஒரு அங்கம்தான் இந்த SICLEம்.. 

எங்களிற்கு தந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் எங்களது பிள்ளைகளே பயனடைவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா... பனம் பழத்துடன், பனை மரத்தை பற்றிய அனைவரின் கருத்தும் அருமை. 👍

இலங்கையில்... வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டும் தான்.. 
அதிக பனை மரங்கள் உள்ளது என நினைக்கின்றேன்.

அதே... போல், தமிழ் நாட்டிலும்... திருச்சி, தஞ்சாவூர் போன்ற... 
சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தான்.. பனை மரங்களை அதிகம் கண்டுள்ளேன்.
இதற்கு ஏதாவது, விசேட காரணங்கள் உண்டா... என தெரியவில்லை.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த, தமிழர்களை...  "பனங் கொட்டைகள்" என்று,
மற்றைய மாவட்டத்தினர், சொல்லும் போது... எனக்கு கோபம் வருவதில்லை. :)
மாறாக... அதனை கேட்க,  எனக்கு  மகிழ்ச்சியாக இருக்கும். 🥰

மற்றவர்களுக்கு... என்ன உணர்வு ஏற்படுகின்றது என்பதை அறிய ஆவலாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

என் பதிவிற்கான மூலத்தை இங்குதான் கண்டெடுத்தேன். நன்றி நிழலி.🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆணம் என்று சொல்வது அதிகம் முஸ்லீம்கள் அதிலும் தேங்காய்ப்பூ சொதியை பால் ஆணம் என்றே சொல்வார்கள் 

நீங்கள் வீட்டிலை என்ன மாதிரி?
சொதியா ஆணமா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

யாழில் ஆணம் என்றால் குழம்பை தானே சொல்வார்கள்?!

குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம். 

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம். 

Quellbild anzeigen

நோ ....ஓ .....ஓ ....பாஞ்ச் . ஆணம் என்பது தனித்துவமானது.....சும்மா சொதியையும் குழம்பையும் ஆணத்துடன் சேர்த்து ஆணத்தின் மானத்தை வாங்கக் கூடாது.......!

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் எனக்கு தெரிந்து யாரும் சுட்டு பனம்பழம் சாப்பிடுவது இல்லை  ,இன்னொன்றும் சொல்ல வேண்டும் பிட்டுடன் பலாப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் சாப்பிடலாம் நாங்கள் சொதி, சம்பல் , இறைச்சிக்கறிதான் 

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆணம் என்று சொல்வது அதிகம் முஸ்லீம்கள் அதிலும் தேங்காய்ப்பூ சொதியை பால் ஆணம் என்றே சொல்வார்கள் 

7 hours ago, ஏராளன் said:

யாழில் ஆணம் என்றால் குழம்பை தானே சொல்வார்கள்?!

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் வீட்டிலை என்ன மாதிரி?
சொதியா ஆணமா? 😎

25 minutes ago, Paanch said:

குழம்பையும் ஆணம் என்றும் சொல்வதுண்டு. மற்றும்படி சொதியை ஆணம் என்றும், ஆணத்தைச் சொதி என்றும் சொல்வது அவரவர் நாட்டு வழக்கம். 

Quellbild anzeigen

24 minutes ago, suvy said:

நோ ....ஓ .....ஓ ....பாஞ்ச் . ஆணம் என்பது தனித்துவமானது.....சும்மா சொதியையும் குழம்பையும் ஆணத்துடன் சேர்த்து ஆணத்தின் மானத்தை வாங்கக் கூடாது.......!

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

என்னப்பா.... யாழ். களத்தில், சொதிக்கும், ஆணத்துக்கும்...  
வித்தியாசம் தெரியாதவர்கள், இத்தனை பேர் இருக்கிறார்களா?  

சொதி... என்பது, சைவ சாப்பாடு. விதி விலக்காக...  
சிலர், மீன் தலையை... போட்டு, சொதி வைப்பவர்களும் உள்ளார்கள்.

ஆணம்  என்பது, இஸ்லாமியர்களின்  சாப்பாடு.
அதற்குள்.. மாட்டு  எலும்பை.. அடித்து, நொருக்கி... 
அதற்கு உள்ளிருந்து எடுத்த, மச்சையை  கலந்து, சொதி  "ஸ்ரைலில்" செய்யப் படுவது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஆணத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் கிளர்ந்தெழுந்த சிறி, சுவி அண்ணாக்களுக்கு நன்றி 🤣.

ஆனால் சொதி சைவ சாப்பாடு என்று சொல்லி ஒரு பெரும் குண்டை தூக்கி போடுவதை ஏற்க முடியாது.

இறால் சொதிக்கு வாழ்க்கை பட்ட கனபேர் உள்ளனர்🤣.

27 minutes ago, தமிழ் சிறி said:

53 minutes ago, suvy said:

நோ ....ஓ .....ஓ ....பாஞ்ச் . ஆணம் என்பது தனித்துவமானது.....சும்மா சொதியையும் குழம்பையும் ஆணத்துடன் சேர்த்து ஆணத்தின் மானத்தை வாங்கக் கூடாது.......!

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

ஆணத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் கிளர்ந்தெழுந்த சிறி, சுவி அண்ணாக்களுக்கு நன்றி 🤣.

ஆனால் சொதி சைவ சாப்பாடு என்று சொல்லி ஒரு பெரும் குண்டை தூக்கி போடுவதை ஏற்க முடியாது.

இறால் சொதிக்கு வாழ்க்கை பட்ட கனபேர் உள்ளனர்🤣.

கோசான்...  ஆணத்துக்கு, விளக்கம் சொல்ல... சுவியரும், நானும் மட்டுமல்ல,
அவுஸ்திலரேயாவில் இருந்து.. புங்கையூரானும், 
அமெரிக்காவில் இருந்து.. ஈழப் பிரியனும்,
கனடாவில் இருந்து... நிழலியும்  கிளம்பி... வந்து கொண்டிருக்கிறார்கள். :grin:

ஓமப்பா...  இறால் சொதியை, சொல்ல மறந்து விட்டேன்.
அதற்குள்... கொஞ்சம் தூக்கலாக... மிளகு தூளும், தேசிக்காய் புளியும்  விட்டால்,
ஓஓஓஓஓ... சொல்ல முடியாத, ருசியாய் இருக்கும். 😋

############  ############  #############

அட பகவானே! இது என்ன சோதனை!! | Memes on various issues - Tamil Oneindia

பகவானே.... இது, என்ன சோதனை?
வெள்ளிக்கிழமை நாளில், அதுகும்  நல்லூர் திருவிழா நடக்கிற நேரம்...
என்னை... இப்பிடி எல்லாம், எழுத வைச்சு...  
ஏன்... உன்,
திருவிளையாடலை காட்டுகின்றாய். 😢

"கந்தன் கருணையே,,, கருணை"  
ஞானப் பழத்தைப் பிழிந்து... 
முருகா... பழம் நீயப்பா...  ஞானப்  பழம் நீயப்பா... 
தமிழ் ஞான பழம் நீ அப்பா...  🙏 :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

ஆணத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் கிளர்ந்தெழுந்த சிறி, சுவி அண்ணாக்களுக்கு நன்றி 🤣.

ஆனால் சொதி சைவ சாப்பாடு என்று சொல்லி ஒரு பெரும் குண்டை தூக்கி போடுவதை ஏற்க முடியாது.

இறால் சொதிக்கு வாழ்க்கை பட்ட கனபேர் உள்ளனர்🤣.

மச்சசொதிக்கு றால் மட்டுமல்ல மீன் தலை, கணவாய் கூந்தல் மற்றும் சின்ன மீன்கள் திரளி, நகர,கார, தேற, சூடை போன்றவை சொதிக்காகவே  படைக்கப் பட்டவை அதிலும் கணவாய் மையுடன் சேர்த்து சொதி வைத்தால் கறுப்பாகத்தான் இருக்கும் ஆனால் சுவை அள்ளும் கோஷான்.......!  😂 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பழம் வேண்டுமா என்ன? பிரான்ஸ் பழம் 

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணை எனது பக்கத்து வளவில் இருக்கும் மரம் இது பனங்காட்டுக்கு போவது கிடையாது

ம்.... ம் .....  பத்துப்பிள்ளை பெத்தவவுக்கு, ஒரு பிள்ளை பெத்தவ முக்கிக் காட்டினாவாம், ஊரில உள்ள பழமொழி. கொரோனாவும் அதுவுமா  அனுப்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிற உங்களை  நான்  ஏன் தடுக்க போகிறேன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மச்சசொதிக்கு றால் மட்டுமல்ல மீன் தலை, கணவாய் கூந்தல் மற்றும் சின்ன மீன்கள் திரளி, நகர,கார, தேற, சூடை போன்றவை சொதிக்காகவே  படைக்கப் பட்டவை அதிலும் கணவாய் மையுடன் சேர்த்து சொதி வைத்தால் கறுப்பாகத்தான் இருக்கும் ஆனால் சுவை அள்ளும் கோஷான்.......!  😂 

😋 வாசிக்கவே வாயூறூதே🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.