Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் உள்ளாடை பஞ்சம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2021 at 10:20, தமிழ் சிறி said:

Happy Lungi Dance GIF by Brodha V

நான்... உள்ளாடை அணிவது இல்லை என்ற படியால்.
எனக்கு இது.... பிரச்சினை  இல்லை. :grin:  🤣

பிரச்சனை மட்டுமல்ல இதில் பல ஆரோக்கியமான விடயங்களும் அடங்கியுள்ளன தமிழ் சிறி. இதுபற்றி நான் படித்து அறிந்தவற்றை இதோ தருகிறேன்:-

ஆண்கள் உள்ளாடை அணியாமல் இருந்தால், தாம்பத்தியத்தில் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன..?
மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்னர் இருந்தே இந்த உள்ளாடைகள், ஆடைகள் எதுவுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தனர். கால மாற்றம் அடைந்த பின்னர் உடைகளை மனிதர்கள் அணிய தொடங்கினர். அதிலும் குழந்தை பருவத்தில் நாம் பெரும்பாலும் பிறந்த மேனியாகவே இருந்து பழகி வந்திருப்போம். ஒரு கால கட்டத்திற்கு மேல், இந்த பழக்கம் மாறி உள்ளாடை அணியும் பழக்கம் நமக்கு வந்து விட்டது. உள்ளாடை அணியாமல் இருப்பதால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என உள்ளாடைகளை பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சுகமான உணர்வு..!
உள்ளாடை பற்றிய ஆய்வுகளில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது. உள்ளாடை அணியாமல் இருக்க கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு தனி விதமான உணர்வை தருகிறதாம். காற்று சுலபமாக அந்தரங்க உறுப்புகளுக்கு செல்வதால் சுகமான நிலையை உணர்வதாக தெரிவிக்கின்றனர்.

நோய் தொற்றுகளுக்கு
உள்ளாடை அணியாமல் இருந்தால் நோய் கிருமிகளின் இருந்து பெரும்பாலும் உங்களை காத்து கொள்ளலாம். நாள் முழுக்க உள்ளாடை அணிந்து கொண்டே இருப்போருக்கு சங்கடமான உணர்வு ஏற்படுவதோடு, நோய் தொற்றுகளும் உண்டாகும். இதனால் அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்பட்டு பிறகு புண்ணாக மாறி விடும்.

ஆண்மை அதிகரிப்பு
உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே ஆண்மை அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சிகள் கூறியுள்ளன.
காரணம், உள்ளாடை அணியாமல் இருந்தால் அந்தரங்க உறுப்பின் தட்பவெப்பம் குறைந்து விந்தணுக்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும். அத்துடன் இதன் எண்ணிக்கையும் கூடுமாம்.

சங்கடம் தவிர்..!
உள்ளாடை அணியும் ஆண்களை விட உள்ளாடை அணியாமல் இருக்கும் ஆண்களுக்கே சுகமான நாளாக அமைகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. வருடத்தின் 365 நாட்களும் இப்படி உள்ளாடை அணிந்திருப்பது நல்லதல்ல. இது ரத்த ஓட்டத்தை முற்றிலுமாக குறைத்து விடும்.

சிறப்பான தாம்பத்தியம்
உள்ளாடை அணியாமல் ஆண்களும் பெண்களும் உறங்கும் போது, சிறப்பான தாம்பாத்திய உணர்வை பெற இயலும். மேலும், இருவருக்குள்ளும் ஆரோக்கியான உறவு ஏற்படுத்த இது ஒரு பலமாக இருக்க கூடும், என்று உளவியல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.

பெண்களுக்கு எப்படி.?
ஆண்களுக்கு விந்தணுக்களின் ஆரோக்கியம் கூடுகிறதென்றால் பெண்களுக்கு வேறு சில நன்மைகள் ஏற்படுகின்றன. பெண்களின் பிறப்புறுப்பு அதிகம் இறுக்கம் ஏற்பட்டால் வறட்சி தன்மை அதிகரிக்கும். இது நாளடைவில் பெண்ணுறுப்பிற்கு பாதிப்பை தருமாம். பெண்கள் தூங்கும் போது உள்ளாடை இல்லாமல் உறங்குவது இது போன்ற பாதிப்பில் இருந்து காக்குமாம்.😋🧐
 
  • Replies 52
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

பெண்கள் தூங்கும் போது உள்ளாடை இல்லாமல் உறங்குவது இது போன்ற பாதிப்பில் இருந்து காக்குமாம்.😋🧐

யாரோ இருட்டுக்குள் வேலி பாய்கின்றவரின் விருப்பங்களை பட்டியல் போட்டமாதிரி இருக்கு😜

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

நாங்கள் இங்கு design design ஆ போட்டுக் கொண்டு அங்கு உள்ளவர்களை தைச்சு போடு என்பது சரியா?

ஆட்சியில் உள்ளவர்களின் தவறுக்கு சாதாரண மக்கள் பலிக்கடாவா???

உண்மைதான் இங்கு நாம் எல்லாத்தையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்கள் களியாட்டங்கள் ஒன்றும் செய்யாமல் அழுது கொன்டு இருக்கவேணுமாம்.அவரகள் மகிழ்ச்சியாக இருப்பதை சர்வதேசம் எமக்கு தீர்வு தராதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யாரோ இருட்டுக்குள் வேலி பாய்கின்றவரின் விருப்பங்களை பட்டியல் போட்டமாதிரி இருக்கு😜

இது விருப்பமல்ல, இறைவனின் படைப்பு. நிலவின் அழகை இருளில்தான் காண வைத்துள்ளான்.😆 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மைதான் இங்கு நாம் எல்லாத்தையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்கள் களியாட்டங்கள் ஒன்றும் செய்யாமல் அழுது கொன்டு இருக்கவேணுமாம்.அவரகள் மகிழ்ச்சியாக இருப்பதை சர்வதேசம் எமக்கு தீர்வு தராதாம்.

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎09‎-‎2021 at 19:23, MEERA said:

ஏன் நீங்கள் முன்னர் தைச்சு போட்டனீங்களோ?

நான் எழுதினது விளங்கினதா ...உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிங்கள் என்று தான் சொன்னேன் 
 
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

எங்கேயாம்  போக  போகினம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் எழுதினது விளங்கினதா ...உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிங்கள் என்று தான் சொன்னேன் 

உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்…

ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

எங்கேயாம்  போக  போகினம்

அண்டவேர் இல்லாமல் வாழ்முடியாதென்று அசைலம் அடிக்கத்தான்....இந்த வலுவான காரணம் எங்கு கிடைக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்…

ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0

அக்காச்சிக்கு  விளங்கினாலும் விளங்காத மாதிரி கேள்வி கேட்பது ஒரு கலை அநேக சிங்கள நண்பர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் காணும் என்கிற நிலையில் உள்ளார்கள் .

உபரி ..இன்னும் சில மாதங்களில் இங்கும் விலை வாசி ஏறுவதை தடுக்க முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

இந்த புண்ணாக்கு... ஒடித்  திரிகின்ற கார் எல்லாம் …  உள்ளூர் தயாரிப்பா? :grin:

May be an image of 1 person and text that says 'ஜட்டி தைத்து கொடுப்பீங்களா சார்....கோத்தா எல்லாத்தையும் உருவிப்போட்டாரு...'

May be an image of 2 people, beard, people standing, sunglasses and beach

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

நான் எழுதினது விளங்கினதா ...உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிங்கள் என்று தான் சொன்னேன் 
 
எங்கேயாம்  போக  போகினம்

எங்கேயாவது போய் வாழவேண்டிய சூழ்நிலைதான் பணத்தட்டுப்பாடு வேலை இல்லாத திண்டாட்டம் அரசாங்கத்தின் கடன்சுமை மக்கள்மீது திணிக்கப்பட்ட நிலையி்ல் மக்கள் என்ன நினைப்பார்கள். சிலருக்கு பொருள் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை பணம் இருந்தும் பொருள் இல்லாத நிலையும் தான்

4 hours ago, alvayan said:

நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.  

எங்கேயாம்  போக  போகினம்

அண்டவேர் இல்லாமல் வாழ்முடியாதென்று அசைலம் அடிக்கத்தான்....இந்த வலுவான காரணம் எங்கு கிடைக்கும்.....

இப்ப இருக்கிற தலைமுறைக்கு சகலதும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இதில அண்டவேர வச்சி அசைலமும் அடிக்கலாம் வசதி படைத்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கேயாவது போய் வாழவேண்டிய சூழ்நிலைதான் பணத்தட்டுப்பாடு வேலை இல்லாத திண்டாட்டம் அரசாங்கத்தின் கடன்சுமை மக்கள்மீது திணிக்கப்பட்ட நிலையி்ல் மக்கள் என்ன நினைப்பார்கள். சிலருக்கு பொருள் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை பணம் இருந்தும் பொருள் இல்லாத நிலையும் தான்

இப்ப இருக்கிற தலைமுறைக்கு சகலதும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இதில அண்டவேர வச்சி அசைலமும் அடிக்கலாம் வசதி படைத்தவர்கள்

தனி ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள்…?

மக்கள் வீட்டுத்தோட்டம் செய்தும் உள்ளாடைகளை தைச்சு போட்டும் இருநேரம் சாப்பிட்டும் சிறீலங்காவின் பொருளாதரத்தை உயர்த்துகிறார்கள்.

சில நாட்களில் நாம் £ 100 கொடுத்து ஓரு சிறீலங்கன் ரூபாயை வாங்கப்போகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

இந்த புண்ணாக்கு... ஒடித்  திரிகின்ற கார் எல்லாம் …  உள்ளூர் தயாரிப்பா? :grin:

வெளிநாட்டு உள்ளாடைகள் அவசியமா எனக் கேக்கும் அரசியல்வாதிகள், பகிரங்கமாக தமது கீழ் ஆடைகளை கழற்றி தாம் போட்டு இருப்பது உள்நாட்டு ஜட்டியா, வெளிநாட்டு ஜட்டியா என பொது மக்களுக்கு காட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

உபரி ..இன்னும் சில மாதங்களில் இங்கும் விலை வாசி ஏறுவதை தடுக்க முடியாது .

ஏற்கனவே ஏறுமுகம்தான். ஜூலையில் 2% இருந்த பணவீக்கம் ஆகஸ்டில் 3.2%.

https://www.theguardian.com/business/2021/sep/15/uk-inflation-in-record-august-jump-as-food-and-drink-prices-rise

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

தனி ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள்…?

மக்கள் வீட்டுத்தோட்டம் செய்தும் உள்ளாடைகளை தைச்சு போட்டும் இருநேரம் சாப்பிட்டும் சிறீலங்காவின் பொருளாதரத்தை உயர்த்துகிறார்கள்.

சில நாட்களில் நாம் £ 100 கொடுத்து ஓரு சிறீலங்கன் ரூபாயை வாங்கப்போகின்றோம்.

நீங்க ரதிக்கு எழுதினாலும் நான் உன்மையை சொல்கிறேன் அண்ண ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் கூட பலர் நாட்டை விட்டு வெளியேற காத்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய கிழக்கிலிருந்து வந்த இளைஞர்கள் கூட தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மீண்டும் செல்ல ஆயத்தமாக உள்ளார்கள்.

காரணம் நீங்கள் அனைத்தும் அறிவீர்கள் நான் இங்கிருந்து உண்மையைத்தான் சொல்கிறேன் சில நேரம் நான் கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன் நாட்டை விட்டு வெளியேற அதாவது சம்பளமற்ற விடுமுறை எங்கேயாவது ஒரு நாட்டில் வேலை செய்யலாம் நிம்மதியாக என்ற நினைப்பில் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎09‎-‎2021 at 21:35, MEERA said:

உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்…

ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0

தனி, கல்யாணம் கட்ட முதலே வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்...கொரோனா ஒன்றும் அவரது  நிலமையை மாற்றவில்லை  
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

தனி, கல்யாணம் கட்ட முதலே வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்...கொரோனா ஒன்றும் அவரது  நிலமையை மாற்றவில்லை  
 
100% உண்மை தனியின் நிலமையை கொரோனா மாற்றவில்லை தற்போதய சிறீலங்கா அரசு மாற்றியுள்ளது. 

2019 நவம்பர் மாதத்திற்கு முன்னர் அவர் வெளிநாடு செல்லும் சிந்தனையில் இருக்கவில்லை…

  • கருத்துக்கள உறவுகள்

துணியில தைத்த கட்டுப் பென்ரர் மாற்று வழி. 30/40 வருசத்துக்கு முன்னர் இது பரவலா பாவனையில் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

Underwear என்றால் ஏன் எல்லோரும் ஆண்கள் அணியும் உள்ளாடை மட்டும் எனக் கருதுகிறீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

Underwear என்றால் ஏன் எல்லோரும் ஆண்கள் அணியும் உள்ளாடை மட்டும் எனக் கருதுகிறீர்கள்???

ஆணாக இருப்பதால் எங்களை மட்டுமே சிந்திக்கிறோம், தப்புத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

100% உண்மை தனியின் நிலமையை கொரோனா மாற்றவில்லை தற்போதய சிறீலங்கா அரசு மாற்றியுள்ளது. 

2019 நவம்பர் மாதத்திற்கு முன்னர் அவர் வெளிநாடு செல்லும் சிந்தனையில் இருக்கவில்லை…

தற்போது எனது நிலையும் இதே தான் 

7 hours ago, ஏராளன் said:

துணியில தைத்த கட்டுப் பென்ரர் மாற்று வழி. 30/40 வருசத்துக்கு முன்னர் இது பரவலா பாவனையில் இருந்தது.

இறுக்கமாக இருக்க வேண்டுமென நினைக்கிறன் இல்லையென்றால் ஆண்களுக்கு பார வேலை செய்பவர்கள் நிலை மருத்துவரையே நாடவேண்டி வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது எனது நிலையும் இதே தான் 

இறுக்கமாக இருக்க வேண்டுமென நினைக்கிறன் இல்லையென்றால் ஆண்களுக்கு பார வேலை செய்பவர்கள் நிலை மருத்துவரையே நாடவேண்டி வரலாம்.

பார வேலைகள் செய்வோர் அகன்ற பட்டிகள்(மேளம் அடிப்போர் கட்டும் பெல்ற்) கட்டலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 10:50, zuma said:

வெளிநாட்டு உள்ளாடைகள் அவசியமா எனக் கேக்கும் அரசியல்வாதிகள், பகிரங்கமாக தமது கீழ் ஆடைகளை கழற்றி தாம் போட்டு இருப்பது உள்நாட்டு ஜட்டியா, வெளிநாட்டு ஜட்டியா என பொது மக்களுக்கு காட்ட வேண்டும்.

வேண்டாம் சுமா.....அவர்களும் இதுதான் சாட்டு என்று சுமா கேட்டுட்டார் சும்மா காட்டுவோம் என்று காட்டினால் அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்குள் நாம் எந்த உள்ளாடை போட்டு இருக்கிறோம் என்று மற்றவர்களுக்கு எப்படி தெரியும் 
tw_lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.