Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த லொஹான் ? பின்னணி தொடர்பில் ஒரு தேடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
tamilnews1%2B%25287%2529.jpg

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ,அநுராதபுர சிறைச்சாலைக்குள் கடந்த 12ஆம் திகதி  கைத்துப்பாக்கியுடன்  சென்று இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் முழங்காலிட வைத்தார் எனவும் , அன்றைய தினம் இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மதுபோதையில் நண்பர்களுடன் சென்று அட்டகாசம் புரிந்ததாகவும் , அவரின் நண்பர்களுக்கு தூக்கு மேடையை சுற்றிக்காட்டியதாகவும் , அப்போது அவர் கையில் கைத்துப்பாக்கி  இருந்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. 
 
கூட சென்ற அழகு ராணி. www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25285%2529.jpg

அன்றைய தினம் அவரது நண்பர்கள் கூட்டத்தில் திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் கலந்து கொண்ட புஷ்பிகா டி.சில்வாவும் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இவர் வெற்றி பெற்றதாக மேடையில் அறிவிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டு ஒரு சில நிமிடங்களில் இவரின் கிரீடம் பறிக்கப்பட்டு சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறாக அன்றைய தினம் நண்பர்களுடன் மதுபோதையில்  சிறைச்சாலைகளுக்குள் கைத்துப்பாக்கியுடன் சென்று அட்டகாசம் புரிந்தமை தொடர்பில் பல தரப்பினரும் கடுமையான  கண்டனங்களை  தெரிவித்து வருவதுடன் , அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரி வருகின்றனர்.   www.tamilnews1.com 
 
பதவியை இராஜினாமா
 
tamilnews1%2B%25281%2529.png

அந்நிலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் தற்போது தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். 
 
புகழ்பூத்த அரசியல் குடும்பத்தின் நெருங்கிய உறவினர். 
 
tamilnews1%2B%252810%2529.jpg

காலம் சென்ற முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவின் மருமகன் தான் லொஹான் ரத்வத்தே , www.tamilnews1.com 
 
tamilnews1%2B%252812%2529.jpg

அதனால் அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மச்சான் ஆவார். www.tamilnews1.com 
 
தந்தை ரத்வத்தே 
 
tamilnews1%2B%25282%2529.jpg

லொஹானின் தந்தையார் தான் ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த. இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சி காலமான  1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது. தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25283%2529.jpg

1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாவது ஈழ யுத்தம் ஆரம்பமான போது, விடுதலைப்புலிகளுக்கெதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவரது தலைமையின் கீழ் பிரதான பங்கை வகித்து இராணுவ நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன. www.tamilnews1.com 
 
1995 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாத இறுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த யாழ்ப்பாணத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது, இவர் முக்கிய பங்கை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
 
5656.jpg

லொஹானின் தந்தை வழி  தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக இருந்தவர்கள்.(அவரின் தாத்தா , தந்தை)
 
tamilnews1%2B%25281%2529.jpg

இவரின் தாத்தா ஹரிஸ் லெக்கே ரத்வத்தே  தலதா மாளிகையின்  தியவதன நிலமேயாகவும், 1947 - 1952ஆம் ஆண்டு கால பகுதியில், ஐக்கிய தேசிய கட்சியின் மாவன்னல  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 
 
தியவதன நிலமேwww.tamilnews1.com 
 
56564.jpg

தியவதன நிலமே என்பது ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான பரிபாலன பொறுப்புக்கு உரியவர். .www.tamilnews1.com 

தலதா மாளிகைக்கு காணிக்கையாக அரசர் காலத்தில் வழங்கப்பட்ட ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சொத்துக்களை பரிபாலிக்கும் பொறுப்பு தியவதன நிலமேயின் கடமைகளில் ஒன்றாகும்.
 
தியவதன நிலமே தெரிவானது தேர்தல் மூலம் இடம்பெறுவதுடன் தேர்தலின்போது 150 விஹாரைகளின் விஹாராதிபதிகள் மற்றும் தேரர்கள், 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள் உட்பட 301 பேர் வாக்களிப்பார்கள். www.tamilnews1.com 
 
தியவதன நிலமேயாக தெரிவு செய்யப்படுபவர், 10 வருடங்களுக்கு பதவியிலிருக்க முடியும்.www.tamilnews1.com 
 
 லொஹான் ரத்வத்தே
tamilnews1%2B%25287%2529.jpg

அவ்வாறான ஒரு பதவி வகித்த பௌத்த பாரம்பரிய கண்டிய சிங்கள சமூகத்தை சேர்ந்த குடும்பத்தை சேர்ந்தவரே லொஹான் ரத்வத்தே. 
 
இவர் 1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி கண்டியில் பௌத்த பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார். தனது கல்வியினை கண்டியில் உள்ள Trinity கல்லூரியில் கற்றார். www.tamilnews1.com 
 
கண்டி உடதலவின்ன படுகொலை www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25289%2529.JPG

கண்டி உடதலவின்ன பிரதேசத்தில் கடந்த 2001.12.05 அன்று  தேர்தல் தினத்தில் வாக்கு பெட்டிகளை எடுத்து சென்ற பேருந்தின் பின்னால் வானில் சென்று கொண்டிருந்த முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர். www.tamilnews1.com 
 
தாக்குதலாளிகளிடம் இருந்து அவர்கள் தப்பித்து வேறு பாதை ஊடாக வானில் சென்ற போது அவர்களின் வாகனம் மறிக்கப்பட்டு  வாகனத்தினுள் இருந்த ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு 10 ஆதரவாளர்களையும் கொலை செய்த பின்னர் வாகனத்திற்கு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. www.tamilnews1.com 
 
தந்தையும் மகன்களும் கைது www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25284%2529.jpg

இந்த சம்பவத்தின் சந்தேக நபர்களாக அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தவும், அவரது புதல்வர்களான லொகான் ரத்வத்த, சாணுக ரத்வத்த ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் நிரபராதிகள் என 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மேல் நீதிமன்றினால்  தீர்ப்பளிக்கப்பட்டு மூவரும் விடுவிக்கப்பட்டனர். www.tamilnews1.com 
 
அதேவேளை குறித்த வழக்கில் இராணுவத்தை சேர்ந்த ரஞ்சித் விஜேரத்ன, சுனில் டீ சில்வா, கமல் விஜயரட்ன, அனுரகுமார, புத்திதிசாநாயக்க ஆகியோர் குற்றவாளிகளாக காணப்பட்டனர். www.tamilnews1.com 
 
 80 குற்றச்சாட்டுக்கள்

2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதிக்குள் பொது தேர்தல் சமயத்தின்போது உடதலவின்ன பகுதியில் 10 முஸ்லிம் இளைஞர்களை மிலோச்சத்தனமாக சுட்டுக் கொன்றமை, ஐந்து முஸ்லிம் இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்படுத்தியதன் மூலம் இவர்களை படுகொலை செய்ய முயன்றமை, 250 1655 என்ற இலக்கமுடைய வாகனத்தில் பயணம் செய்தவர்களை படுகொலை செய்வது தொடர்பில் சட்டவிரோதமாக கூடி ஆராய்ந்தமை, அரசியல் எதிரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, வாக்காளர்களை வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவிடாமல் தடுத்தமை, வாக்காளர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தியமை, வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப் பெட்டியை பலவந்தமாக கொள்ளையிட்டமை உட்பட மொத்த 80 குற்றச்சாட்டுகள் இவ்வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.www.tamilnews1.com 

ரத்வத்தைக்கு எதிரான 31 குற்றச்சாட்டுக்கள்www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25286%2529.jpg

இந்த வழக்கில்  அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக 31 குற்றச்சாட்டுக்களும் அவரது புதல்வர்கள் இருவருக்கும் எதிராக 32 குற்றச்சாட்டுக்களும் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.www.tamilnews1.com 

இந்த வழக்கு விசாரணையை அடுத்து 706 பக்கம் கொண்ட தீர்ப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரால் வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் அனுருத்த ரத்வத்தையும் அவரது இரு மகன்மார்களும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். www.tamilnews1.com 
 
குற்றவாளிகளாக காணப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக தலா ஒவ்வொருவருக்கும் நூறு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.www.tamilnews1.com 

இந்த வழக்கில் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவும் மகன்மாரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வரலியெத்தவும் விசாரணைகளின் போது ஆஜராகியிருந்தனர். சட்டமா அதிபரின் சார்பில் அன்றைய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆஜராகியிருந்தார்.www.tamilnews1.com 
 
அந்நிலையில்   இந்த தண்டனைக்கு எதிராக ஐந்து இராணுவ வீரர்களும் உயர்நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். www.tamilnews1.com 
 
4.jpg

இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இராணுவ வீரர்கள் ஐவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நிரபராதிகள் என தீர்ப்பளித்து 24ஆம் திகதி ஜூலை மாதம் 2009ஆம் ஆண்டு   விடுதலை செய்துள்ளது.www.tamilnews1.com 
 
tamilnews1%2B%252811%2529.jpg

அதேவேளை கடந்த 2016ஆம் ஆண்டு லொஹானின் சகோதரரான சானுக ரத்வத்தே 4.2 பில்லியன் அரச நிதி மோசடியில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 
இவ்வாறான பின்னணிகளை கொண்ட லொஹான் 2010ஆம் ஆண்டு முதல் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி வருகின்றார். www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25288%2529.jpg

அந்நிலையில் தற்போதுள்ள அரசாங்கத்தில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்தே கடந்த டிசம்பர் மாதம் 02ஆம் திகதி  சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். www.tamilnews1.com 
 
தற்போது அவர் தனது சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு பொறுப்பை  இராஜினாமா செய்துள்ளார். www.tamilnews1.com 
 
இணையங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
  • கருத்துக்கள உறவுகள்

லோகனும், தமையனும் தான் குமார் பொன்னம்பலம் கொலைக்கு திட்டம் தீட்டியவர்கள் என்று சண்டே லீடரில் வாசித்த நினைவு.

ஆமியில் ஒரு போதுமே இராத தேப்பன் ரத்வத்தை, ஆமி யூனிபோமில அலம்பறை பண்ணியதும் நடந்த கூத்து.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

ஆமியில் ஒரு போதுமே இராத தேப்பன் ரத்வத்தை, ஆமி யூனிபோமில அலம்பறை பண்ணியதும் நடந்த கூத்து.

அனுருத்த ரத்வத்த இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் (volunteer force) லெப்டினெண்ட் கேணல் தரத்தில் இருந்தார்.

முதலாம் ஜேவிபி கிளர்சியில் சிறீமாவோவை பாதுகாத்ததில் இவரும் (அப்போதைய) கேப்டன் டென்சில் கொபேகடுவமும் முக்கிய பாத்திரம் வகித்தனர்.

லெண்டினெண்ட் கேணலாக ஓய்வு பெற்ற இவர் - பிரதி பாதுகாப்பு அமைச்சராக ரிவிரெச மூலம் யாழை பிடித்தமையால் சந்திரிக்கா அவரை ஜெனரல் தரத்துக்கு தரமுயர்தினார்.

அதன் பின்னர் ஜெனரல் தர சீருடையோடு சுத்திகொண்டிருந்தார்.

ரத்வத்தையின் படையணி விபரம் கீழே.

https://alt.army.lk/slavf/

Edited by goshan_che
Reserve ➡️ Volunteer

  • கருத்துக்கள உறவுகள்

அனுருத்த ரத்வத்தைக்கு,  ஒரு கால் சிறிது ஊனம்  என்று வாசித்த நினைவு.
அவர் கைத்தடியுடன் உடன் தான்... நடப்பார்  என கேள்விப் பட்டேன். அவரா.. இவர்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அனுருத்த ரத்வத்தைக்கு,  ஒரு கால் சிறிது ஊனம்  என்று வாசித்த நினைவு.
அவர் கைத்தடியுடன் உடன் தான்... நடப்பார்  என கேள்விப் பட்டேன். அவரா.. இவர்?

அவரே தான்

வவுனியாவில் புலிகளின்  கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் கெலியில் தவறுதலாக  இறங்கி

புலிகளால் தப்பிப்போக அனுமதிக்கப்படவர்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அனுருத்த ரத்வத்தைக்கு,  ஒரு கால் சிறிது ஊனம்  என்று வாசித்த நினைவு.
அவர் கைத்தடியுடன் உடன் தான்... நடப்பார்  என கேள்விப் பட்டேன். அவரா.. இவர்?

ஓம் அவர்தான். ரிவி ரெசவுக்காக நவீன சபுமல்குமாரயா என அழைக்கப்பட்டவர்.

ஒருமுறை இவர் போன ஹெலி கோளாறு காரணமாக புலிகள் பகுதியில் இறங்கி விட, பெரும் பிரயத்தனத்துடன் தப்பி வந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லொகான் ஒரு பெரிய விபசார வலையமைப்பை வைத்திருக்கின்றார். இலங்கையின் முன்னாள் மாடல்  அழகி மிசைல் என்னும் பெண் இவரின் மூலம் பெற்ற வாடிக்கையாளருக்கு இவர் தலையீடு இல்லாமல் தொடர்ந்தும் சேவைசெய்ததை கண்டுபிடித்து அந்த பெண் மீது அசிட் வீசி அழகை குலையச் செய்தவர். இவர் இலங்கை அழகிகளை வெளிநாட்டுக் கணவான்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடுசெய்யும் புரோக்கர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

புலிகளால் தப்பிப்போக அனுமதிக்கப்படவர்

அப்படியா? நான் நினைத்தேன் ஒரு கிராமவாசியை கடத்தி வைத்து ஓடி ஒளிந்து வந்தார் என?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அப்படியா? நான் நினைத்தேன் ஒரு கிராமவாசியை கடத்தி வைத்து ஓடி ஒளிந்து வந்தார் என?

கைது  செய்ய மேலிடத்து அனுமதி  புலிகளுக்கு கிடைக்கவில்லை  என்று  தான்  அந்தநேரம் தெரியவந்தது???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

அவரே தான்

வவுனியாவில் புலிகளின்  கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் கெலியில் தவறுதலாக  இறங்கி

புலிகளால் தப்பிப்போக அனுமதிக்கப்படவர்

16 minutes ago, goshan_che said:

ஓம் அவர்தான். ரிவி ரெசவுக்காக நவீன சபுமல்குமாரயா என அழைக்கப்பட்டவர்.

ஒருமுறை இவர் போன ஹெலி கோளாறு காரணமாக புலிகள் பகுதியில் இறங்கி விட, பெரும் பிரயத்தனத்துடன் தப்பி வந்தார்கள். 

விசுகு... கோசான்,  சொல்வதைப்  போலவே... நானும் வாசித்த நினைவு.
"கைக்கு எட்டியது... வாய்க்கு, எட்டவில்லையே..."   என்று பலநாள் கவலைப் பட்டேன்.  

இணையத்தில் வந்த செய்திகள் என்ற படியால்...
உண்மையில்... என்ன நடந்தது என்பது மர்மம்தான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

கைது  செய்ய மேலிடத்து அனுமதி  புலிகளுக்கு கிடைக்கவில்லை  என்று  தான்  அந்தநேரம் தெரியவந்தது???

தெரியவில்லை அண்ணை. நான் இக்பால் அத்தாசின் கட்டுரையில் இப்படித்தான் வாசித்த நினைவு. 

சில நேரம் இவர்கள் தப்பியதும், அவர்கள் அனுமதி வேண்டி சுணங்கியதும் ஒரே நேரத்தில் நடந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

அனுருத்த ரத்வத்தைக்கு,  ஒரு கால் சிறிது ஊனம்  என்று வாசித்த நினைவு.
அவர் கைத்தடியுடன் உடன் தான்... நடப்பார்  என கேள்விப் பட்டேன். அவரா.. இவர்?

எல்லாம் ஒரு நினைவில் இருந்து தான் எழுதினேன்.

அவரை ஜெனரல் ஆக, மருமகள் சந்திரிகா எடுத்த முடிவு, நக்கலுக்கு ஆளாகி, அவரும் பதவிசாக ஜெனெரலுக்குரிய உடுப்பு போட்டுகொண்டு திரிஞ்சதும் கேலி செய்யப்பட்டிருந்தது.

அவரது காலத்தில் புலிகள் பெரும் வெற்றிகளை குவித்ததும் காரணமாக இருந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

எல்லாம் ஒரு நினைவில் இருந்து தான் எழுதினேன்.

அவரை ஜெனரல் ஆக, மருமகள் சந்திரிகா எடுத்த முடிவு, நக்கலுக்கு ஆளாகி, அவரும் பதவிசாக ஜெனெரலுக்குரிய உடுப்பு போட்டுகொண்டு திரிஞ்சதும் கேலி செய்யப்பட்டிருந்தது.

அவரது காலத்தில் புலிகள் பெரும் வெற்றிகளை குவித்ததும் காரணமாக இருந்திருக்கலாம். 

நாதமுனி... அந்த நேரம் அவரின்.. வாய்ப் பேச்சுகள், "கோயபல்ஸ்" தரத்தில், 
இப்போதைய... கெகலிய ரம்புக்வெல  போலிருந்தமையால்..
பலரை கடுப்பு ஏற்றியது, உண்மை. 

1 hour ago, Nathamuni said:

லோகனும், தமையனும் தான் குமார் பொன்னம்பலம் கொலைக்கு திட்டம் தீட்டியவர்கள் என்று சண்டே லீடரில் வாசித்த நினைவு.

குமாரின் கொலையில் தொடர்பானவர்கள் சந்திரிக்கா அம்மையாரும் அவரது செயலாளர் பாலபட்டபெந்தியும். இவர்களின் ஏற்பாட்டில் தான் மொரட்டுவ சமன், குமாருடன் நட்பாக பழகி கொழும்பு இராமகிருஷ்ண வீதிக்கு அவரது காரிலேயே அழைத்துச் சென்று சுட்டுக் கொலை செய்தார். இந்த மொரட்டுவ சமன் ஒரு முன்னால் பொலிஸ் கான்ஸ்டபிளாக இருந்தவர். சந்திரிக்கா அம்மையாரின் சனாதிபதி பிரிவில் உயர் பதவியில் பணியாற்றிய பத்தேகம சஞ்சீவ தீட்டிய கொலைத்திட்டத்தினை மொரட்டுவ சமன் தான் செயல்படுத்தியது.

இந்த பத்தேகம சஞ்சீவ இன்னொரு சம்பவம் ஒன்றில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மொரட்டுவ சமன், வேறோரு சம்பவம் ஒன்றில் கைதாகி ஈற்றில் இறந்து / அல்லது கொலையாகினார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

உங்கள் கூற்று சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நனறி நிழலி....

நான் நிணைவில் இருந்து தான் எழுதினேன்.

யாருக்காவது நிணைவு இருக்குதோ தெரியவில்லை.

போலிசாரின், குமார் கொலை விசாரணைக் குறிப்புகள் சண்டேலீடர் பத்திரிகையில் தொடராக வந்தது.

அதில் அவரது பலவீனமான மறுபக்கம் குறி்த்து தெரிய வந்தது.

அந்த பலவீனத்தை வைத்தே, அவர் வெளியே தனியே கார் சாரதியே இல்லாமல் வரவழைக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

அந்த குறிப்பிலேயே ரத்வத்தை மகன்கள் குறித்தும் வந்ததாக நிணைவு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்+
10 hours ago, விசுகு said:

அவரே தான்

வவுனியாவில் புலிகளின்  கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் கெலியில் தவறுதலாக  இறங்கி

புலிகளால் தப்பிப்போக அனுமதிக்கப்படவர்

10 hours ago, goshan_che said:

ஓம் அவர்தான். ரிவி ரெசவுக்காக நவீன சபுமல்குமாரயா என அழைக்கப்பட்டவர்.

ஒருமுறை இவர் போன ஹெலி கோளாறு காரணமாக புலிகள் பகுதியில் இறங்கி விட, பெரும் பிரயத்தனத்துடன் தப்பி வந்தார்கள். 

ஓமோம்... உண்மைதான்.

இயக்கம் ஏதோ செய்து தான் உந்த தடிகாரனை தப்ப விட்டவங்கள். ஏனெண்டு சொன்னால், சிங்களவரின்ர ஒரு ஆங்கிலக் கட்டுரையிலை சிங்கள வான்படை ஏதோ சாகசம் செய்து உவரை மீட்டுக் கொண்டு வந்தது என்டு எழுதியிருந்தவங்கள். வாசித்த போதே விளங்கியது பொய்யென்று; அவ்வளவு சோடினை.(2009 பிறகு எழுதப்பட்ட கட்டுரை. இக்பால் அத்தாசின் கட்டுரையன்று). அதுக்குப்பிறகு ஒருநாள் விடுதலைப்புலிகளில்ல வாசித்தபோது தான் அந்த கோளாறான உலங்கு வானூர்தியின்ர படத்தோட உந்த செய்தியைக் கண்டனான்.

ஐயன்களே, உந்த விடயம் ஒரு 'விடுதலைப்புலிகள்' இதழில் உள்ளது. நான் வாசித்திருக்கிறேன்...
 முதலில் உந்த உலங்கு வானூர்தியைப் பாருங்கோ!

https://eelam.tv/watch/shot-down-helicopter-of-slaf_DXPF1XcoDYcRtPq.html

Edited by நன்னிச் சோழன்

ரத்வத்தை பயணம் செய்த உலங்கு வானூர்தி நெடுங்கேணி காட்டில் தான் கோளாறு காரணமாக தரையிறங்கியது.

அதை மூன்று மணி நேரத்துக்குள் சுற்றி வளைத்து, தமது கட்டுப்பாட்டுக்குள கொண்டு வரக்கூடிய அளவுக்கு புலிகளுக்கு ஆளணி வசதிகள் அன்று இருக்கவில்லை.

இதுதான் அன்றைய நிலவரம்.

அத்துடன் ரத்வத்தை காட்டினை ஒட்டிய கிராமத்தவர்கள் சிலரை பணயமாக பிடித்து இருந்தனர். 

ஆயினும் விடுதலை புலிகளிடம் இருந்த ஆளணி வசதியீன்மையும், தொடர்பாடல் சிக்கலுமே ரத்வத்தை தப்பிக்க வலுவான காரணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

இவரின் திடீரென பழுதாகிய ஹெலி இறங்கியது.. மன்னார் - வவுனியா வீதியை அண்டிய காட்டுப்பகுதியில். இவர் உதவிப் படையின் வழிநடத்தலில் கால்நடையாக வந்து.. பின்னர் தமிழ் விவசாயி ஒருவரை பயணக் கைதியாக்கி அவரின் வழிகாட்டலின் பெயரில் இராணுவத்தால் வவுனியாவுக்கு மீட்டு வரப்பட்டார்.

இவர் பயணித்த ஹெலி.. செயலிழக்கப்பட்ட நிலையில்... பின் புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.sundaytimes.lk/961208/frontm.html
 
அத்தாசின் 1996 கட்டுரை மேலே. நெடுக்ஸ் சொல்வது போல் வவுனியாவுக்கு வடமேற்கே, முன்னரங்கில் இருந்து 10 கிமி உள்ளே இறங்கியதாகத்தான் இதில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வவுனியா மன்னார் வீதியில் தான் கரையேறினார்.புலிகளுக்கு விடயம் காலம் கடந்தே போய் சேர்ந்தது.

இவர் பயணித்த உலங்கு வானூர்த்தி நெடுங்கேணி பகுதியில் புலிகளால் தாக்கப்பட்டு தப்பியது.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2021 at 02:40, விசுகு said:

கைது  செய்ய மேலிடத்து அனுமதி  புலிகளுக்கு கிடைக்கவில்லை  என்று  தான்  அந்தநேரம் தெரியவந்தது???

நான் கேள்விப்பட்டது இவர்களது ஹெலி இயந்திரக்கோளாறு காரணமாக காட்டிற்குள் தரையிறங்கியபோது பொதுமகன் ஒருவரால் பாதுகாப்பாக அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்பட்டுக் காப்பாற்றப்பட்டார்கள் என்றுதான். புலிகள் அந்தவிடத்திற்கு வருமுன்னரே அவர்கள் தப்பிவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.