Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டில் இளைஞர்கள் - அம்பலப்படுத்தும் அரசியல் முக்கியஸ்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுடன் நேற்றைய தினம் காணொளி வழியாக நடத்திய பேச்சுவார்தையின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவரதன அரசியல், பொருளாதாரம், கல்வி, சுற்றுலாத்துறை, தகவல் தொழிநுட்பம் மற்றும் விவசாயம் என பல துறைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

இவரது ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்திகள் இன்றும் தொடர்கிறது. திறந்த பொருளாதார கொள்கையினையுடைய சீனா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளன.

இந்நாடுகளில் அரச தலைவர்கள் மாற்றமடைந்துள்ளார்கள். ஆனால் பொருளாதார கொள்கை ஒருபோதும் மாற்றமடையவில்லை. ஆட்சி மாற்றம் பெறும் போது பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் ஒருபோதும் பொருளாதார ரீதியில் முன்னேற்றடைய முடியாது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் பெறும் போது பொருளாதார கொள்கையும் மாற்றமடைகிறது. இதுவே பொருளாதார பாதிப்பிற்கு பிரதான காரணியாக உள்ளது.

தற்போது அமுலில் உள்ள திறந்த பொருளாதார கொள்கையிலும் ஒரு சில மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. மட்டுப்பாடுகளை தளர்த்தினால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, அரசியல், ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளார்கள். இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும். நாட்டை முன்னேற்றும் பொறுப்பை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். தற்போதைய அரசியல் நிலைமையை மக்கள் அடியோடு வெறுக்கிறார்கள்.

உண்மையான மற்றும் நிலையான கொள்கையுடைய அரசாங்கத்தை தோற்றுவிக்க எண்ணுகிறார்கள். இதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மாற்றமடைந்துள்ளது.

பொருளாதாரம், சுகாதாரம், ஜனநாயகம் மற்றும் சுற்றுசூழல் உள்ளிட்ட பிரதான விடயங்களை கொண்ட குறுகிய காலத்திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியவர்களையும், எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களையும் ஒன்றிணைத்து அரசியலில் மாற்றம் ஏற்படுத்த எம்மால் முடியும்.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறுகிய காலத்திட்டத்திற்கமைய சரி செய்தால் நாட்டை 20 வருட காலத்திற்குள் முன்னேற்றமடைய செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/ranil-wickramasinghe-warning-1631950743

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான தமிழ் இளைஞர்கள்  இந்த  முடிவுக்கு  வந்து  பல  காலமாச்சு

இன்று சிங்கள  இளைஞர்களும்....???

இவ்வளவு   கோடிகளையும் உயிர்  உடமைகளையும்  பறித்து

இது  சிங்களவருக்கே சொந்தமானது என்று நாட்டைப்பிடித்து இறுதியில் யாருமற்ற ...............????

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அநேகமான தமிழ் இளைஞர்கள்  இந்த  முடிவுக்கு  வந்து  பல  காலமாச்சு

இன்று சிங்கள  இளைஞர்களும்....???

இவ்வளவு   கோடிகளையும் உயிர்  உடமைகளையும்  பறித்து

இது  சிங்களவருக்கே சொந்தமானது என்று நாட்டைப்பிடித்து இறுதியில் யாருமற்ற ...............????

நான் ஏற்கனவே எழுதியதுதான் நாடு திறக்கப்படுமாயின் பல ஆயிரக்கணக்கான பேர் வெளியேறவே உள்ளனர்.😴😴😴

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஏற்கனவே எழுதியதுதான் நாடு திறக்கப்படுமாயின் பல ஆயிரக்கணக்கான பேர் வெளியேறவே உள்ளனர்.😴😴😴

எங்க தான்யா போகப் போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்க தான்யா போகப் போகிறார்கள்?

சிலர் அகதி கோரிக்கை (ஐரோப்பிய நாடு) சிலர் வேலைக்காக, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்ண யாரை கேட்டாலும் இனி இங்கு இருந்து என்ன செய்வது என வெறுப்பாகவே பேசுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சிலர் அகதி கோரிக்கை (ஐரோப்பிய நாடு) சிலர் வேலைக்காக, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்ண யாரை கேட்டாலும் இனி இங்கு இருந்து என்ன செய்வது என வெறுப்பாகவே பேசுகின்றனர்.

ஒரு காலத்தில்  சிங்கப்பூர் பார்த்து ஏங்கிய இலங்கையை இந்த நிலைக்கு  கொண்டு  வந்தது யார்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக இளையவர்கள் நாட்டை விட்டு கிளம்புவதால் நாட்டுக்குத்தான் கேடு .

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் ஒரு சீற்றும் எடுக்க முடியாத ஒருவர் நாடுபற்றீ  பாடமெடுக்கிறார்.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிலர் அகதி கோரிக்கை (ஐரோப்பிய நாடு) சிலர் வேலைக்காக, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்ண யாரை கேட்டாலும் இனி இங்கு இருந்து என்ன செய்வது என வெறுப்பாகவே பேசுகின்றனர்.

உலக நாடுகள் பூரா கொரோனா ...இந்த நேரத்தில் எந்த ஐரோப்பிய நாடு  விசா  கொடுக்குது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சிங்கள இராணுவத்தை விட்டும் ஓடுங்கள். 

ஊதிப் பெருத்த இராணுவத்திற்கு சம்பளம் கொடுக்க எங்கால காசு வருகுது..???! ஒட்டுக்குழு வால்பிடிகளை அரசியல் கூலிகளாக வைச்சிருக்க எங்க இருந்து காசு வருகுது..???!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஏற்கனவே எழுதியதுதான் நாடு திறக்கப்படுமாயின் பல ஆயிரக்கணக்கான பேர் வெளியேறவே உள்ளனர்.😴😴😴

ஏதோ எல்லா வெளிநாடுகளும் எல்லா கதவு யன்னலையும் திறந்து வைச்சிருக்கிற மாதிரி....😁
அப்பிடி வந்தாலும் படிச்சு பட்டம் எடுத்தவையள் தான் கஸ்டப்பட்டு வரலாம்.
மற்றும் படி கோப்பை ,கக்கூஸ் கழுவ நாங்கள் இருக்கிறம்...😎

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு முதலே கனடாவில் இருந்து ஐரோப்பா அவுஸ்ரோலியாவரை  தங்கள் நாட்டிற்குள் இலங்கையர் வருவதற்கு அனுமதித்தார்களா 🤔

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிலர் வேலைக்காக, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு

ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் எதிர்காலம் கேள்விக்குறி, தங்கள் மக்களையே பாதுகாக்க தத்தளிக்குது. மத்திய கிழக்கு நாடுகள் போரால் அழிந்து அங்குள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.  நாம் நமது நாட்டிலேயே  அழிக்கப்பட்டு விரட்டப்பட்டு வேறு நாட்டில்  நிம்மதி தேடினால் இனிமேல்  கிடைக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

உலக நாடுகள் பூரா கொரோனா ...இந்த நேரத்தில் எந்த ஐரோப்பிய நாடு  விசா  கொடுக்குது :unsure:

எத்தனையோ பேர் spouse Visa, Family member(s) of settled person, Student visa என்று பிரித்தானியாக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

10 நாட்கள் Hotel களில் தனிமைப்படுத்தி விடுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

கொரோனாவுக்கு முதலே கனடாவில் இருந்து ஐரோப்பா அவுஸ்ரோலியாவரை  தங்கள் நாட்டிற்குள் இலங்கையர் வருவதற்கு அனுமதித்தார்களா 🤔

படிக்க அனுமதி உண்டு CIMA மூன்று எடுத்துவிட்டு நான்காவதை இங்கு எடுப்பவர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு விசா கொடுத்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

ஒரு காலத்தில்  சிங்கப்பூர் பார்த்து ஏங்கிய இலங்கையை இந்த நிலைக்கு  கொண்டு  வந்தது யார்???

இந்த கேள்வி நம்மிடம் கேட்டு பலன் இல்லை அண்ண

21 hours ago, ரதி said:

உலக நாடுகள் பூரா கொரோனா ...இந்த நேரத்தில் எந்த ஐரோப்பிய நாடு  விசா  கொடுக்குது :unsure:

பல தொழிலதிபர்கள் வேலைக்கு தேவையென ஆள் எடுக்கிறார்கள் தானே. 

18 hours ago, குமாரசாமி said:

ஏதோ எல்லா வெளிநாடுகளும் எல்லா கதவு யன்னலையும் திறந்து வைச்சிருக்கிற மாதிரி....😁
அப்பிடி வந்தாலும் படிச்சு பட்டம் எடுத்தவையள் தான் கஸ்டப்பட்டு வரலாம்.
மற்றும் படி கோப்பை ,கக்கூஸ் கழுவ நாங்கள் இருக்கிறம்...😎

கழுவியாவது நிம்மதியாக இருக்கலாமென அவர்களும் நினைத்து இருக்கலாம்தானே செய்யும் தொழில் எதுவென்று இருக்கு திருடாமல் ஏதாவது ஒரு தொழிலை செய்து வாழ்தாலே போதும். தொழில் பற்றி கதைக்கும் ஒருவரும் உதவ போவதில்லை அந்த நேரத்துல. 

வீசா இருந்தா சொல்லுங்க சாமி😊

17 hours ago, satan said:

ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் எதிர்காலம் கேள்விக்குறி, தங்கள் மக்களையே பாதுகாக்க தத்தளிக்குது. மத்திய கிழக்கு நாடுகள் போரால் அழிந்து அங்குள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.  நாம் நமது நாட்டிலேயே  அழிக்கப்பட்டு விரட்டப்பட்டு வேறு நாட்டில்  நிம்மதி தேடினால் இனிமேல்  கிடைக்குமா? 

 நிம்மதி கிடைக்கும் எங்கேயாவது சென்றிட வேண்டிய நிலையாக கூட இருக்கலாம் சார்ரன்.

7 hours ago, MEERA said:

எத்தனையோ பேர் spouse Visa, Family member(s) of settled person, Student visa என்று பிரித்தானியாக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

10 நாட்கள் Hotel களில் தனிமைப்படுத்தி விடுகிறார்கள்.

முடிஞ்சா ரதியை ஒரு மாதகாலம் ஸ்ரே பண்ணச்சொல்லுங்க பார்ப்பம் மீதியை

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தம்பி(சித்தப்பாவின் மகன்) வந்தவர், அவரும் வெளிநாடு போகப்போறன் என்று சொல்லுறார். நான் சொன்னன் ஏஜன்சிக்கு காசு கட்டி போவதை நினைக்க வேண்டாம், அங்குள்ள பெண் பிள்ளை யாரையும் திருமணம் முடித்து செல்வது நல்லது என்று. எல்லாம் இனி அமையவேணுமே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பல தொழிலதிபர்கள் வேலைக்கு தேவையென ஆள் எடுக்கிறார்கள் தானே. 

இது யார் சொன்ன கதை உங்களுக்கு :unsure:

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

முடிஞ்சா ரதியை ஒரு மாதகாலம் ஸ்ரே பண்ணச்சொல்லுங்க பார்ப்பம் மீதியை

ரதியின் உறவுகள் ஊரில் வசிக்கிறார்கள் 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நேற்று தம்பி(சித்தப்பாவின் மகன்) வந்தவர், அவரும் வெளிநாடு போகப்போறன் என்று சொல்லுறார். நான் சொன்னன் ஏஜன்சிக்கு காசு கட்டி போவதை நினைக்க வேண்டாம், அங்குள்ள பெண் பிள்ளை யாரையும் திருமணம் முடித்து செல்வது நல்லது என்று. எல்லாம் இனி அமையவேணுமே!

கொஞ்சமாவது படித்துவிட்டு வர சொல்லுங்க நாங்க பட்ட கஷ்ட்டம் மற்றவர் படகூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

படிக்க அனுமதி உண்டு CIMA மூன்று எடுத்துவிட்டு

இலங்கையில் இருந்து குடும்பத்துடன் இணையும் விசா மாணவர் விசாக்களில் வருகிறார்கள் என்று தெரிந்து இருக்கிறேன். இங்கு அரசியல் முக்கியஸ்தர் ரணில் விக்ரமசிங்க சொன்னதையும், பேசப்படுவதை பார்த்தால் இலங்கையில் உள்ளவர்கள் வெளியேற முடிவு எடுத்ததும் வெளிநாடுகள் அழைக்க தயாராக உள்ளது போன்று இருந்தது.

4 hours ago, ஏராளன் said:

நான் சொன்னன் ஏஜன்சிக்கு காசு கட்டி போவதை நினைக்க வேண்டாம், அங்குள்ள பெண் பிள்ளை யாரையும் திருமணம் முடித்து செல்வது நல்லது என்று. எல்லாம் இனி அமையவேணுமே!

இங்குள்ள இலங்கை பெண்கள் இலங்கையில் உள்ள ஆண்களை  திருமணம் செய்வது பல நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கழுவியாவது நிம்மதியாக இருக்கலாமென அவர்களும் நினைத்து இருக்கலாம்தானே செய்யும் தொழில் எதுவென்று இருக்கு திருடாமல் ஏதாவது ஒரு தொழிலை செய்து வாழ்தாலே போதும். தொழில் பற்றி கதைக்கும் ஒருவரும் உதவ போவதில்லை அந்த நேரத்துல. 

வீசா இருந்தா சொல்லுங்க சாமி😊

எனது ஊரில் என்னைப் போன்று கிட்டத்தட்ட 20 பேர் அளவில் தான் வெளியூர் வெளியேறியவர்கள். மற்றும் படி ஊரில் உள்ள அனைவரும் கடவுள் கிருபையால் இன்றுவரை நலமே உள்ளனர்.

இலங்கை அரசியலை தவிர நாடு நல்ல நாடு.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எனது ஊரில் என்னைப் போன்று கிட்டத்தட்ட 20 பேர் அளவில் தான் வெளியூர் வெளியேறியவர்கள். மற்றும் படி ஊரில் உள்ள அனைவரும் கடவுள் கிருபையால் இன்றுவரை நலமே உள்ளனர்.

இலங்கை அரசியலை தவிர நாடு நல்ல நாடு.

நாடு நல்ல நாடுதான் ஆனால் வாழ்க்கை செலவை சமாளிக்க பணம் வேண்டும் பணத்தை உழைக்க வேலைவாய்ப்பு வேண்டும். 

உடனே வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள் என நீங்க சொல்லாம் வயலுக்கு போதிய பசளை இல்லை.,கிருமி நாசினி இல்லை புதிய பூச்சி , புழுக்களை ஒழிக்க பழைய முறைகளை கையாள முடியாது. இந்த வருடம் நெல் (அரிசி) தட்டுப்பாடும் வரலாம்.

கடற் தொழில் இல்லை (மீன்பிடி குறைவு )

மரக்கறிகளை சந்தைப்படுத்த முடியாமையினால் நட்டம், பொருள் அதிக விலையும் தட்டுப்பாடும் இப்படி இருக்கும் போது மக்களும் என்ன செய்வார்கள்

12 hours ago, ரதி said:

இது யார் சொன்ன கதை உங்களுக்கு :unsure:

ரதியின் உறவுகள் ஊரில் வசிக்கிறார்கள் 
 
எனது நண்பர் அவர் அக்கா கடைக்கு என சென்றார் தற்போது அங்கதான் உள்ளார் கடையில்.

நாங்களும் இங்க தான் ஓடித்திரிகிறம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பல சிங்கள நண்பர்கள் ஒருகாலத்தில் கடும் இனவாதிகளக இருந்தவர்கள் இப்பொழுது எப்படா நாட்டை விட்டு ஒடலாம் என்று இருக்கின்ரார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாடு நல்ல நாடுதான் ஆனால் வாழ்க்கை செலவை சமாளிக்க பணம் வேண்டும் பணத்தை உழைக்க வேலைவாய்ப்பு வேண்டும். 

உடனே வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள் என நீங்க சொல்லாம் வயலுக்கு போதிய பசளை இல்லை.,கிருமி நாசினி இல்லை புதிய பூச்சி , புழுக்களை ஒழிக்க பழைய முறைகளை கையாள முடியாது. இந்த வருடம் நெல் (அரிசி) தட்டுப்பாடும் வரலாம்.

கடற் தொழில் இல்லை (மீன்பிடி குறைவு )

மரக்கறிகளை சந்தைப்படுத்த முடியாமையினால் நட்டம், பொருள் அதிக விலையும் தட்டுப்பாடும் இப்படி இருக்கும் போது மக்களும் என்ன செய்வார்கள்

எனது நண்பர் அவர் அக்கா கடைக்கு என சென்றார் தற்போது அங்கதான் உள்ளார் கடையில்.

நாங்களும் இங்க தான் ஓடித்திரிகிறம்

நல்லாட்சி(மைத்திரி அன்ட் கோ) காலத்திலும் மக்கள் வெளிநாடுகளுக்கு ஓடித்தப்பும் மனநிலையில் இருந்தார்களா ராசன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, colomban said:

என்னுடைய பல சிங்கள நண்பர்கள் ஒருகாலத்தில் கடும் இனவாதிகளக இருந்தவர்கள் இப்பொழுது எப்படா நாட்டை விட்டு ஒடலாம் என்று இருக்கின்ரார்கள்.

பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.