Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் ச‍ேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது.

E_xqtpwUUAAFKWQ.jpg

இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர்.

சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது. 

எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரசங்கம் அமைக்கப்படுமா என்பதை தெளிவாக கூறவில்லை.

இதனிடையே பல கனேடிய ஊடகங்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது.

கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையை வெல்ல 338 இடங்களில் 170 இடங்களைப் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/113705

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாரோ லிபரல் வராது என்றார்களே !!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

இங்கு யாரோ லிபரல் வராது என்றார்களே !!!!!!!!!!!!!!!!!!!

ஜஸ்டின் ட்ரூடோவினால் சட்டபூர்வமாக்கப்பட்ட சிவமூலிகை அடிச்சு போட்டு சொல்லியிருப்பார். 
ஜஸ்டின் ட்ரூடோ, சர்தார்ஜின் உதவியுடன் ஆட்சி அமைக்கவுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தேர்தல் 'சூதாட்டத்தில்' ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு; பிரதமர் பதவிக்கு ஆபத்தில்லை

2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஜஸ்டின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும். 2019இல் நடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன. இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.

முக்கிய எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய வம்சாவளியைச் ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரெட் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போது தேவையற்ற வகையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

"கடந்த காலத்தின் நாம் இணைந்து கடந்து வந்த கறுப்பு நாள்களை மறந்துவிடக்கூடாது. இனி வருங்காலத்தை இணைந்து கட்டமைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

கனடா தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெளிவான பாதையை மக்கள் காட்டியிருக்கிறார்கள்" என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

தெளிவான முன்னணி நிலவரங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், தபால் வாக்குகளை உள்ளடக்கிய முழுமையான அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில நாள்கள் ஆகும் என எதிர்பார்கப்படுகிறது.

கூடுதல் இடங்களைப் பெறும் நியூ டெமாக்ரட்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத்சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரட் கட்சி இந்த முறை குறைந்தது 27 இடங்களில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 103 இடங்களை இந்தக் கட்சி பெற்றிருந்தது. ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் இடங்களைப் பறிகொடுத்து வந்தது. 2019-ஆம் ஆண்டு கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 24 இடங்கள் கிடைத்தன.

தற்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் 27 இடங்களில் நியூ டெமாக்ரட் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அந்தக்கட்சி ஏறுமுகம் கண்டிருக்கிறது.

"உங்களுக்காகப் போராடுவதை நிறுத்திக் கொள்ள மாட்டோம்" என்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், ஜக்மீத் சிங் உரையாற்றினார். பணக்காரர்களுக்கு கூடுதல் வரி உள்ளிட்ட இடதுசாரி கொள்கைகளை நியூ டெமாக்ரட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

ஜக்மீத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் பரப்புரையில் கொரோனா பாதிப்பு முக்கிய அம்சமாகப் பேசப்பட்டது. பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் காலத்தில் தேர்தல் நடத்துவதற்கு அழைப்பு விடுத்ததற்காக ட்ரூடோவை எதிர்க் கட்சிகள் விமர்சித்தன.

கொரோனாவால் கனடாவில் 27 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். எனினும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளின் வரிசையிலும் கனடா இடம்பிடித்திருக்கிறது.

கனடாவில் இப்போது நடந்திருக்கும் தேர்தல் குறித்து அமெரிக்க, ஜரோப்பிய நாடுகள் பெரிய அளவில் அக்கறை காட்டாது எனத் தெரிகிறது. இருப்பினும் சர்வதேச அளவில் தாக்கம் இருக்காது எனக் கூறுவதற்கில்லை என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜெசிக்கா மர்பி.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அண்மையில் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் உடன்பாட்டில் சேர வேண்டும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

அதே நேரத்தில் ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் ஆழமான வர்த்தக, பொருளாதார, பாதுகாப்பு உடன்பாடுகளை மேற்கொள்ள ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி உறுதியளித்திருந்தது.

https://www.bbc.com/tamil/global-58634675

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தேர்தலில் உண்மையான தோல்வியாளர் பசுமை கட்சி  ஆகும். அதன் தலைவர் Annamie Paul  அவர்கள் தனது கனவரின் மதமாகிய யூத மதத்துக்கு அண்மையில் மாறியவர் ஆவார் , அத்துடன் zionism எனும் தீவிர இஸ்ரேல் சார்பு நிலை கொண்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, zuma said:

நேற்றைய தேர்தலில் உண்மையான தோல்வியாளர் பசுமை கட்சி  ஆகும். அதன் தலைவர் Annamie Paul  அவர்கள் தனது கனவரின் மதமாகிய யூத மதத்துக்கு அண்மையில் மாறியவர் ஆவார் , அத்துடன் zionism எனும் தீவிர இஸ்ரேல் சார்பு நிலை கொண்டவர்.

ஆனால் டுருடோவுக்கும் பின்னடைவுதானே? தேவையில்லாமல் £350 மில்லியன் செலவழித்து இரெண்டு வருடம் முந்தி எலக்சன் வைத்தும் பெரும்பான்மையில்லை.

சர்தர்ஜி தான் இப்பவே ஒரு shopping list வைதுள்ளதாக சொல்கிறார். இவர்கள் மேலும் டுருடோவை வலதுசாரி அரசியலுக்கு இழுப்பார்கள்?

இறுதியில் இது டிரம்ப் போல ஒருவர் தேர்வாக வழிகோலவும் கூடும்?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

ஆனால் டுருடோவுக்கும் பின்னடைவுதானே? தேவையில்லாமல் £350 மில்லியன் செலவழித்து இரெண்டு வருடம் முந்தி எலக்சன் வைத்தும் பெரும்பான்மையில்லை.

சர்தர்ஜி தான் இப்பவே ஒரு shopping list வைதுள்ளதாக சொல்கிறார். இவர்கள் மேலும் டுருடோவை வலதுசாரி அரசியலுக்கு இழுப்பார்கள்?

இறுதியில் இது டிரம்ப் போல ஒருவர் தேர்வாக வழிகோலவும் கூடும்?

நான் உட்பட பலரும்  பெரும் தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுப்பில் தான் இருந்தோம். ஆனால் கன்சர்வேடிவ் கட்சியின் ஆளுகைக்கு உட்ப்பட்ட  Alberta மாகாணத்தில் கோவிட்டை  கட்டுப்படுத்துவதில்  படுமோசமாக தோல்வி கண்டு உள்ளார்கள். அறியப்படாத தேவதையை விட  அறியப்பட்ட பிசாசு நல்லது என அய்யாதுரைக்கு (JT) வாக்களித்து உள்ளனர். அதைவிட டிரம்பை போல் கடும் வலதுசாரியான  Maxime Bernier அவர்கள் கன்சர்வேடிவ் வாக்குகளை பிரித்துள்ளார். எதிர் காலத்தில் எதுவும் நடைபெறலாம் 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் தேர்தல் pooling station ஒன்றில் பணி புரிந்தேன்..கொரோனா முற்றுப் பெறாத நிலையில் மக்கள்  நிறையவே ஆர்வம் காட்டினார்கள்... மக்கள் அதிகம் வர மாட்டார்கள் என்று நினைத்தேன் அதற்கு எதிர்மாறாக இருந்தது.

36 minutes ago, zuma said:

நான் உட்பட பலரும்  பெரும் தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுப்பில் தான் இருந்தோம். ஆனால் கன்சர்வேடிவ் கட்சியின் ஆளுகைக்கு உட்ப்பட்ட  Alberta மாகாணத்தில் கோவிட்டை  கட்டுப்படுத்துவதில்  படுமோசமாக தோல்வி கண்டு உள்ளார்கள். அறியப்படாத தேவதையை விட  அறியப்பட்ட பிசாசு நல்லது என அய்யாதுரைக்கு (JT) வாக்களித்து உள்ளனர். அதைவிட டிரம்பை போல் கடும் வலதுசாரியான  Maxime Bernier அவர்கள் கன்சர்வேடிவ் வாக்குகளை பிரித்துள்ளார். எதிர் காலத்தில் எதுவும் நடைபெறலாம் 

அத்துடன் கனடா முழுதும் நிகழ்ந்த vaccination இற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பின்னனியில் கன்சர்வேட்டிவ் கட்சியும் இருந்ததாகவே பலர் கருதியமையும் காரணம். பெரும்பாலனோர் vaccine passport இற்கு ஆதரவு கொடுக்கும் போது, அதற்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது தோல்வியை தரும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

58 minutes ago, goshan_che said:

ஆனால் டுருடோவுக்கும் பின்னடைவுதானே? தேவையில்லாமல் £350 மில்லியன் செலவழித்து இரெண்டு வருடம் முந்தி எலக்சன் வைத்தும் பெரும்பான்மையில்லை.

$610 மில்லியன்

  • கருத்துக்கள உறவுகள்+

May be an image of 1 person and text that says "மீண்டும் அரியணை ஏறும் கனடா தலைமை அமைச்சர் இயசுரின் இருடோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். CHOOSEFORWARD FORTEARD COOOERFXICER FORWARD CHIOESAR AYANCER CI0OL/AD ORWARO CHOOSE"

முடிஞ்சால் தமிழருக்கு ஏதேனும் அப்பிடியே .. கொஞ்சம்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

$610 மில்லியன்

C$610m  $470m   £344m கணக்கு சரிதானே பாஸ்? 

Just now, goshan_che said:

C$610m  $470m   £344m கணக்கு சரிதானே பாஸ்? 

ஹிஹி... நான் £ என்பதைக் கவனிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

ஹிஹி... நான் £ என்பதைக் கவனிக்கவில்லை.

நானும் கணக்கெல்லாம் பார்க்கவில்லை -பி பி சியில் வாசித்ததைதான் எழுதினேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நன்னிச் சோழன் said:

May be an image of 1 person and text that says "மீண்டும் அரியணை ஏறும் கனடா தலைமை அமைச்சர் இயசுரின் இருடோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். CHOOSEFORWARD FORTEARD COOOERFXICER FORWARD CHIOESAR AYANCER CI0OL/AD ORWARO CHOOSE"

முடிஞ்சால் தமிழருக்கு ஏதேனும் அப்பிடியே .. கொஞ்சம்

எங்கள் நாட்டை விட ரூடோவுக்கு சொந்தக்காரர்கள் போல் சிரியா மற்றும் நாட்டவர்கள் பற்றி சொல்லுங்கள் அழுது,அழுது உதவி செய்வார்..இது உண்மை..👋

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டி கட்டி… பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமருக்கு வாழ்த்துக்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டி கட்டினது எல்லாம் வேஷம் அவரது பாசம் எல்லாம் ஜிகாதிகள் மீது தான்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, யாயினி said:

எங்கள் நாட்டை விட ரூடோவுக்கு சொந்தக்காரர்கள் போல் சிரியா மற்றும் நாட்டவர்கள் பற்றி சொல்லுங்கள் அழுது,அழுது உதவி செய்வார்..இது உண்மை..👋

மறுதலிக்க முடியா உண்மை.

இந்தமுறை ரொரொன்ரோ  மற்றும் மொன்றியலில் ஆளுக்கு கிடைத்திருக்கு, ஏதேனும் செய்வார் என நினைக்கிறேன் (எனக்கு கனடா அரசியல் அறிவு ஒரு வீதமே)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

முடிஞ்சால் தமிழருக்கு ஏதேனும் அப்பிடியே .. கொஞ்சம்

தமிழ்நாட்டில் இருந்து கனடாவுக்கு குடிபெயர விரும்பும் பொறியியலாளர்களுக்கு குடிவரவை ட்ரூடோ இலகுவாக்குவாராம், தமிழருக்கு இது நல்லதுதானே? நன்றி சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, கற்பகதரு said:

தமிழ்நாட்டில் இருந்து கனடாவுக்கு குடிபெயர விரும்பும் பொறியியலாளர்களுக்கு குடிவரவை ட்ரூடோ இலகுவாக்குவாராம், தமிழருக்கு இது நல்லதுதானே? நன்றி சொல்லுங்கள்.

நல்ல விடையம்தானே... 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நன்னிச் சோழன் said:

மறுதலிக்க முடியா உண்மை.

இந்தமுறை ரொரொன்ரோ  மற்றும் மொன்றியலில் ஆளுக்கு கிடைத்திருக்கு, ஏதேனும் செய்வார் என நினைக்கிறேன் (எனக்கு கனடா அரசியல் அறிவு ஒரு வீதமே)

ஹாரி ஆனந்தசங்கரிக்கு ஒரு அமைச்சர் அல்லது துணை அமைச்சர்  பதவி கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வேட்டி கட்டி… பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமருக்கு வாழ்த்துக்கள். 🙂

ரொராண்டா, தமிழர் விழாவில், புகுந்து, கொத்தி, கொத்து ரொட்டியை பிரசித்தப் படுத்திய வகையில் அந்தாளுக்குத் தான் எனது ஆதரவு....

இந்த கோதாரி சிக்கன் ரிக்கா மசாலாவை விடு.... உந்த ஜட்டத்தை அடிஎன்று, வேலையில் இருவருக்கு கொத்து பார்சல் கொடுக்க, உது என்னது எண்டு நெளிஞ்ச ஆக்களுக்கு, சிங்கன் கொத்துப் போடுற படத்தை காட்ட, வாயை பிளந்து கொண்டு அடித்து, இன்று வேலையிடம் முமுக்க கொத்து பேமஸ். 👍
 
அவனவன் வீட்ட டெலிவரி ஓடர் பண்ணி பார்ட்டி வைக்கிறாங்கள்....😁

நீ... மட்டன், சிக்கன் தானே ரெக்கமண்ட் பண்ணிணாய்..... பன்றில திண்டுபார் அட்டகாசமாக இருக்கும்... எண்டுதப்பா... வெள்ள....

பண்ணிப் பாருங்கவன்... 😋

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

C$610m  $470m   £344m கணக்கு சரிதானே பாஸ்? 

ரூபாலும் போடுங்க கோசான் அப்ப தான் இன்னும் கூடுதலாக தொகை தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

ரூபாலும் போடுங்க கோசான் அப்ப தான் இன்னும் கூடுதலாக தொகை தெரியும்.

🤣 கோடியிலா? லட்சத்திலா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

எங்கள் நாட்டை விட ரூடோவுக்கு சொந்தக்காரர்கள் போல் சிரியா மற்றும் நாட்டவர்கள் பற்றி சொல்லுங்கள் அழுது,அழுது உதவி செய்வார்..இது உண்மை..👋

முஸ்லிம்களின் வாக்குகளை எப்படி அள்ளுவது என ரூடோ அறிந்தே வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ரொராண்டா, தமிழர் விழாவில், புகுந்து, கொத்தி, கொத்து ரொட்டியை பிரசித்தப் படுத்திய வகையில் அந்தாளுக்குத் தான் எனது ஆதரவு....

இந்த கோதாரி சிக்கன் ரிக்கா மசாலாவை விடு.... உந்த ஜட்டத்தை அடிஎன்று, வேலையில் இருவருக்கு கொத்து பார்சல் கொடுக்க, உது என்னது எண்டு நெளிஞ்ச ஆக்களுக்கு, சிங்கன் கொத்துப் போடுற படத்தை காட்ட, வாயை பிளந்து கொண்டு அடித்து, இன்று வேலையிடம் முமுக்க கொத்து பேமஸ். 👍
 
அவனவன் வீட்ட டெலிவரி ஓடர் பண்ணி பார்ட்டி வைக்கிறாங்கள்....😁

நீ... மட்டன், சிக்கன் தானே ரெக்கமண்ட் பண்ணிணாய்..... பன்றில திண்டுபார் அட்டகாசமாக இருக்கும்... எண்டுதப்பா... வெள்ள....

பண்ணிப் பாருங்கவன்... 😋

கொத்து ரொட்டி... இங்குள்ள ஜேர்மன் காரருக்கும், மிக விருப்பமான உணவு.
இங்கு நடக்கும், கலாச்சார விழாக்களில்... அதன் ருசியை அறிந்த, வெள்ளைகள்..
கொத்து ரொட்டி கடைக்கு முன், வரிசை கட்டி நிற்கும். :)

ஆனால்... கொத்து ரொட்டி, தமிழர் சாப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.   :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.