Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனுக்கு நினைவேந்தல் : கைதான கஜேந்திரன் உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

01__1_.jpeg

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர் , அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்த யாழ்ப்பாண பொலிஸார் , அவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை  கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல்  பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது, அதற்கு பொலிஸார் தடை விதித்தனர். 

20210923_143650.jpg

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று வாக்கு மூலம் பெற்ற பின்னரே பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

அதேவேளை யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.திலீபனுக்கு நினைவேந்தல் : கைதான கஜேந்திரன் உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலீபனுக்கு அஞ்சலி: கைதான யாழ்.எம்.பிக்கு பொலிஸ் பிணை ; த.தே.கூ கண்டனம்

என்.ராஜ்

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு  கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து மூவரிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Tamilmirror Online || திலீபனுக்கு அஞ்சலி: கைதான யாழ்.எம்.பிக்கு பொலிஸ் பிணை ; த.தே.கூ கண்டனம்

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவுநாளை அனுஸ்டிக்க அரசுதடுப்பதை மக்கள் எதிர்ப்பது எல்லாம் உணர்வுபூர்வமான் விடயங்கள்.. ஆனால் கஜெந்திரன் நேற்று செய்ததை பார்த்தேன் அது ஒரு காமெடி வீடியோ.. இந்திய அரசியல்வாதிகள் செய்வதுபோல் அரசியல் ஸ்டண்டுக்கு அனுதாப ஆதரவு உண்டாக்க செய்ததுபோல் இருந்தது.. எல்லாம் செட்டப்பு.. ஒராள் வீடியோ எடுக்க கத்திகுழற ரெண்டுமூண்டு பொம்பிளையள்.. இத்தனைக்கும் பொலிஸ் அவரை அமைதியாகத்தான் கூட்டி செல்கிறது..இந்த பொம்பிளையள் ரெடியா நிண்டதுபோல் குழறிகூப்பாடு போடுதுகள்.. பூரா ஓவர் ரியாக்ஸன்😀 இதுகள் ஓவர் ரியாக்சன் போடாமல் விட்டிருந்தால் சம்பவம் இயல்பா இருந்திருக்கும் போல இருக்கு.. உப்பிடி எண்டா அந்த சண்டை நேரம் வீடுவீடா ஆமிஒட்டுக்குழு காடையனுவள் சுட்டுக்கொண்டு திரியேக்க கைதுகள் நடேக்கேக்க எங்கட பிள்ளையளிண்ட தாய்தேப்பன் கத்திகுழறினத என்னெண்டு சொல்லுறது.. இது இந்தாள் பொலிஸ் கைதுசெய்வான் எண்டு தெரிஞ்சு அரசியலுக்காக வீம்புக்கு அங்கபோய் கைதுசெய்யப்படுவதற்காக செய்ததுபோல் செய்றகையாக அப்பிடியே தெரியுது.. உதிலஒரு ஜீவன் இல்ல உண்மை இல்லை.. ஒரு வேளை மேலிடத்தால பொலிஸ்க்கு இதெல்லாம் அரசியலுக்குதான் வாறன் ரெடியா இருங்கோ எண்டு சொல்லிட்டுதான் வரப்பட்டதோ தெரியல..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு முகநூல்  பதிவு............

ஓம் நண்பர்களே மீண்டும் ஒரு தடவை ...
நீங்கள் சொல்வதுபோல் ..
கஜேந்திரன் செய்வது அரசியல்தான் .
2000மாம் ஆண்டில் முகமாலையில் சிக்குண்ட மக்களை தற்துணிவோடு மீட்கச்சென்றதும் சீற்றுக்காகத்தான் ...
சுடுகலன்கள் சூழ முதல் பொங்குதமிழ் செய்ததும் சீற்றுக்காகத்தான் ...
ராணுவக்கட்டுப்பாட்டினுள் 2000 இன் முன்னர் நிகழ்த்திய போராட்டங்கள் ஒவ்வொன்றும் சீற்றுக்காகத்தான் ..
2000 ஆயிரத்தின் பின்னர் மாணவர் பேரவையூடு நின்றதும் சீற்றுக்காக, பரமேஸ்வராச்சந்தியின் ராணுவ வாகனத்தால் இடித்து வீழ்த்தப்பட்ட வளைவுதனில் தொங்கியது சீற்றுக்காக , புங்குடுதீவு தர்சினிமுதல் சிவகாம்பிகை வரை பாலியல் வல்லுறவுக்கெதிராக போராடியது சீற்றுக்காக ..
பல்கலை மாணவர்களோடு கைகோர்த்து நின்றதும் சீற்றுக்காக.. ..
அந்தவகையில் நேற்று தீபம் ஏற்றச்சென்றது கைதாகியது எல்லாமும் சீற்றுக்காகத்தான் ..
90ஸ் அலப்பறைகள் ..
வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் அலைப்பறைகட்கப்பாற்பட்டவன் இவன்..👇
 
1 hour ago, விசுகு said:

கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்க வேண்டிய தேசியப்பட்டியல் ஆசனத்தை பறித்து தனதாக்கிக் கொண்டது உட்பட....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல்தொடர்பில் சபையில் கேள்வி ஏழுப்புவோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 (எம்.நியூட்டன்)

தனிமைப்படுத்தல் சட்டத்தை பொலிசாரே மீறினர் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல்தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி ஏழுப்புவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றபோது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில்  கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவுத் தூபிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனியாகத்தான் சென்றார். மக்களை அணிதிரட்டவில்லை. வருடா வருடம் குடும்பத்தோடு அமைதியாக அஞ்சலி செலுத்துவார். அது போல இம்முறையும் கடந்த நாட்களில் அஞ்சலி செலுத்திவந்தார்.

ஆனால் 23 ஆம் திகதி  அஞ்சலி செலுத்த முயன்ற போது அங்கிருந்த பொலிஸார் தடுத்தனர். எதற்காக தடுக்கிறீர்கள்? நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதா? என பாராளுமன்ற உறுப்பினர்  பொலிஸாரிடம் வினாவினார். எனினும் பொலிஸார் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவு கூற முடியாது என கூறியே அவ்விடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை கைது செய்தனர்.

எனினும் கஜேந்திரன் எம்.பி கைது செய்யப்பட்டு விடுவிக்கும் நேரத்தில்  நினைவுகூறுவது தவறு என நாங்கள் வழக்கு தாக்கல் செய்யவில்லை கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாலே கைது செய்தோம் என பொலிஸார் கூறினர்.

கஜேந்திரன் எம்.பி சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே நினைவேந்தல் செய்ய முற்பட்டார். பொலிஸாருக்கும் தனக்கும் இடையில் ஒரு சமூக இடைவெளியைக் கூட அவர் பின்பற்றியிருந்தார். ஆனால் பொலிஸாரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டனர்.

அராஜகமாக கஜேந்திரனின் உடலை பிடித்து, காலால் தட்டி கலவரம் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.அவர் கைது செய்யப்பட்டதை அறிந்து அவ்விடத்திற்குச் சென்ற எமது கட்சியின் இரு பெண் உறுப்பினர்கள் பொலிஸாரால் சட்டவிரோதமாக கையாளப்பட்டனர்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் எம்.பி கைது செய்யப்பட்டிருந்தால் அவர் அவ் நினைவிடத்திற்குச் சென்ற பொழுதே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏன் கற்பூரம் ஏற்றி நினைவேந்தல் செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

கஜேந்திரன் எம்.பியை கைது செய்தமைக்கு கொரோனா விதிமுறைகள் காரணமல்ல, நினைவேந்தல் செய்தமையே காரணம் என தெரிகிறது. ஏனெனில் நினைவேந்தல் மேற்கொண்ட இடத்தில் கஜேந்திரன் எம்.பி மாத்திரம் இருக்கவில்லை. ஊடகவியலாளர்கள் இருந்தார்கள், திலீபனின் நினைவிடத்தில் பொலிஸார் வந்தததை அறிந்ததும் பல பொதுமக்களும் கூடினார்கள்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் எம்.பி மீது நடவடிக்கை எடுத்திருந்தார்கள் எனில் ஏன் அங்கு கூடிய மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உண்மையில் கஜேந்திரன் எம்.பி சுகாதார விதிமுறைகளை மீறவில்லை. அவர் நினைவேந்தல் மேற்கொண்டமைக்காவே கைதுசெய்யப்பட்டார்.

யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெனான்டோ மற்றும்  சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். 27 ஆம் திகதி பொலிஸாரின் நடவடிக்கைகளை பொறுத்து எமது நடவடிக்கைகள் தொடரும். இது தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம் .

சபாநாயகருக்கும் தெரியாமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கஜேந்திரன் எம்.பியின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம். சட்டரீதியான ஆலோசனைகளையும் பெறவுள்ளோம்.

ஐ.நா. அமர்வுகள் நடைபெறுகின்ற நிலையில் கூட பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். கஜேந்திரனை கண்ணியமாக அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாது கற்பூரம் கொளுத்தும் போதே பொலிஸார் நினைவேந்தலை தடுக்கும் முகமாக செயற்பட்டனர்.

தமிழ் தேசத்து மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கொடுக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறுகின்றோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல்தொடர்பில் சபையில் கேள்வி ஏழுப்புவோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஒரு முகநூல்  பதிவு............

ஓம் நண்பர்களே மீண்டும் ஒரு தடவை ...
நீங்கள் சொல்வதுபோல் ..
கஜேந்திரன் செய்வது அரசியல்தான் .
2000மாம் ஆண்டில் முகமாலையில் சிக்குண்ட மக்களை தற்துணிவோடு மீட்கச்சென்றதும் சீற்றுக்காகத்தான் ...
சுடுகலன்கள் சூழ முதல் பொங்குதமிழ் செய்ததும் சீற்றுக்காகத்தான் ...
ராணுவக்கட்டுப்பாட்டினுள் 2000 இன் முன்னர் நிகழ்த்திய போராட்டங்கள் ஒவ்வொன்றும் சீற்றுக்காகத்தான் ..
2000 ஆயிரத்தின் பின்னர் மாணவர் பேரவையூடு நின்றதும் சீற்றுக்காக, பரமேஸ்வராச்சந்தியின் ராணுவ வாகனத்தால் இடித்து வீழ்த்தப்பட்ட வளைவுதனில் தொங்கியது சீற்றுக்காக , புங்குடுதீவு தர்சினிமுதல் சிவகாம்பிகை வரை பாலியல் வல்லுறவுக்கெதிராக போராடியது சீற்றுக்காக ..
பல்கலை மாணவர்களோடு கைகோர்த்து நின்றதும் சீற்றுக்காக.. ..
அந்தவகையில் நேற்று தீபம் ஏற்றச்சென்றது கைதாகியது எல்லாமும் சீற்றுக்காகத்தான் ..
90ஸ் அலப்பறைகள் ..
வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் அலைப்பறைகட்கப்பாற்பட்டவன் இவன்..👇
 
நான் அந்தக்காலங்களில் புலிகள் இருந்த நேரத்தில் அவரின் நடவடிக்கைகள் பற்றி பேசவில்லை.. அப்பொழுதெல்லாமிவரிடமும் இன்னும் பல அந்த நேரத்தில் இளம் அரசியல்துடிப்புகொண்ட பொதுவிடயங்களுக்காக போராடிய ஒவ்வொருவரிடமும் உண்மை இருந்தது.. ஓர்மம் இருந்து.. மண்ணையும் மக்களையும் நேசித்த நேர்மை இருந்தது.. இவற்றுக்கெல்லாம் பின்னால் போராளிகளின் வீரம் செறிந்த போராட்டம் தந்த உணர்வு,உத்வேகம்,வீரம்,அடங்காப்பற்று இருந்தது.. ஆனால் இன்று போராளிகளும் இல்லை போராட்டமும் இல்லை.. காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும்.. இவர் வேறு இன்று முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார்.. முன்னர் செய்த நல்லவற்றுக்காக இன்று அவர் அரசியல்வாதியாக செய்யும் விடயங்கள் மேல் விமர்சனம் வைக்ககூடாது என்றால் கருணாவை இவரை விட 1000ம் மடங்கு கருணா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் ஆகிவிடுவார்.. 

நான் எந்த விருப்புவெறுப்புமில்லாமல் சாதாரண பொதுமகனாக அந்த வீடியோவை பாத்துதான் எனமனசில் பட்டதை சொன்னேன்.. ஈழத்து அரசியல்மேல் நம்பிக்கை புலிகளோடு எனக்கு போய்விட்டது.. இப்ப இருக்கும் எந்த அரசியல்வாதியும் எமக்கு அரசியல் தீர்வு எதையும் பெற்றுக்கொடுக்கபோவதில்லை என்பது என் நம்பிக்கை.. தீர்வு பெற்று தருவேன் என்று உசுப்பேத்தல் அரசியல்செய்பவர்களைவிட மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினையை தீர்த்துவைக்கும் அரசியல்வாதிமேல் தீர்வுபெற்றுதருவதாக சொல்லி ஏமாற்றி வாக்குவாங்கும் அரசியல்வாதிகளை விட பலமடங்கு நல்ல அபிப்பிராயம் இருக்கு..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

இதை நேற்று மு.பு பார்த்ததும் சிரிப்பு ,சிரிப்பாய் இருந்தது ...இந்த பிழைப்பு பிழைப்பதற்கு தமிழ்ப் படம் எடுக்க போகலாம் .. அவற்ற தம்பியைகாப்பாற்ற  மகிந்தாவின் காலில் விழுந்து எப்படி மீட்டார் என்று தெரியும்  ...அண்மையில்  கூட மகிந்தாவின் அலுவலகத்தில் போய் கூழை கும்பிடு போட்ட படம் வந்திருந்தது ....இவரை விட சும் எவ்வளவோ மேல். 

பொதுசனத்தையாவது அமைதியாய் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த விட்டு இருக்கலாம் ...எல்லாத்தையும் தன சுயநலனுக்காய் குழப்பிக் கொண்டு ...கேடு கெட்டவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கு பிள்ளைகுட்டி குடும்பம் அம்மா அப்பா இருந்தும் எதிலும் ஒட்டாமல் எப்பவும் மரணம் அதன் பின் நான் இனிமேல் இல்லை என் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் அழிந்துவிடும் எதுவுமே நிரந்தரம் இல்லை எனும்போது எதுக்கிந்த உலகம் உருவானது போன்ற எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டு ஒரு ஞானிபோல் சூனியத்துள் எதிலும் ஒட்டாமல் வாழ்ந்தன்.. புல்லா எதிர்மறை எண்ணங்களால் சூழ்ப்ப்பட்டு.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளியவர முயற்சிக்கிறன் அதுக்கு யாழும் யாழ் உறவுகளும்கூடஒருகாரணம்.. இன்னொரு திரியில் பல உறவுகள் சொன்னதுபோல் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த நிறைய முயற்சி எடுக்கிறன்..

அதுபோலத்தான் இவரும் இவர் கூட்டாளிகளும்.. பூரா எதிர்ப்பரசியலிலேயே காலத்தை ஓட்டுவது.. அவர்கள் காலம் பதவியில் இருந்தபடியே முடிந்துவிடும்.. ஆனால் இவர்கள் எதிர்ப்பரசியலை நம்பி பின்னால் போன மக்கள் காலத்துக்கும் ஏழைகளாகவே வாழ்ந்து சாகவேண்டியதுதான்.. 

  • கருத்துக்கள உறவுகள்

241405279_3096486147342816_6968075891424

  • கருத்துக்கள உறவுகள்

242860723_10158059050281822_680293551474

242706951_10158059050541822_729434158243

242418665_10158059050716822_103981807047

242271139_10158059050731822_465821348467

  • கருத்துக்கள உறவுகள்+

சத்தியமான, உண்மையைச் சொன்னால் எனக்கும் உதைப் பார்க்க சிரிப்புதான் வந்தது...

😒😂

நான் முதலில் அந்த அன்ரிமார் கத்திக்குழற ஏதோ ஒரு ஐயாவை இழுத்துக் கொண்டு போறாங்களே சிங்களவர் என்டுதான் நினைச்சனான். உடன வேசுபுக்கில் ஓடிப்போய் கைதுசெய்யப்பட்டவர் யாரென தேடிப் பார்த்தாப் பிறகுதான் தெரிந்தது, உது ஒரு முசுப்பாத்தி நாடகம் என்டு.🤦

குறிப்பா அந்த குனிஞ்சு எழும்புறதைப் பார்க்க தமிழ்நாட்டில சசிகலா சத்தியம் செய்தது போல இருக்கு😂😂

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

https://www.ndtv.com/world-news/3-arrested-for-holding-remembrance-event-for-ex-ltte-terrorist-get-bail-2552399

இந்தியாக்காரனின் பகிடிகள்😆

Thileepan, The Ex-Terrorist🤣

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்க வேண்டிய தேசியப்பட்டியல் ஆசனத்தை பறித்து தனதாக்கிக் கொண்டது உட்பட....

@தனிக்காட்டு ராஜா எலக்சன் வெண்ட பின் ஒருக்கா அம்பாறைக்கு வந்து போன நியாபகம்.

அதுக்கு பிறகு இவர் அந்த பக்கம் ஏதேனும் எம்பி நிதி ஒதுக்கீட்ட செலவழித்தாரா? வந்தாரா? குறை கேட்டரா?

இவரை அம்பாறைக்கு ஜூனியர்-ஜூனியர் பொன்னர் நேந்து விட்டவர்🤣, அதுதான் கேக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

@தனிக்காட்டு ராஜா எலக்சன் வெண்ட பின் ஒருக்கா அம்பாறைக்கு வந்து போன நியாபகம்.

அதுக்கு பிறகு இவர் அந்த பக்கம் ஏதேனும் எம்பி நிதி ஒதுக்கீட்ட செலவழித்தாரா? வந்தாரா? குறை கேட்டரா?

இவரை அம்பாறைக்கு ஜூனியர்-ஜூனியர் பொன்னர் நேந்து விட்டவர்🤣, அதுதான் கேக்கிறன்.

ஒரு தடவை வந்தவர்  என நினைக்கிறன் மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக அதன் பிறகு ஆளே இல்ல. 

இங்கு அரசு தரும் நிதிகளை கூட திட்டமிட்டு செலவு செய்ய மாட்டார்கள்.அது மட்டுமில்லாமல் இந்த கொரோனா காலம் உதவி செய்வார்கள் என பார்த்ததால் எல்லா அரசியல் வாதிகளையும் தான் சொல்கிறேன் யாரும் பெரிதாக  உதவி செய்ய வில்லை செய்வது அனைத்தும் புலம்பெயர்ந்த மக்களே இந்த இடத்துல அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இங்கு உள்ளவர்கள் எச்சி கையால்கூட காக்கை விரட்டாத ஆட்கள்.(செல்வந்தர்கள்).

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள்தான் வாய் கிழிய வடக்கு-கிழக்கு ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள்.

80 சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் கஜேந்திரனின் தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்க முழுகாரணம் கிழக்கில் அவர்கள் கட்சிக்கு விழுந்த வாக்குகளே.

நியாயாமாக இந்த சீட்டை கிழக்குக்கு கொடுத்திருக்க வேண்டும்.

அந்த கோரிக்கை எழுந்த போது - கஜேந்திரன் அம்பாறையின் எம்பி போல செயற்படுவார் என்றார்கள்.

குறைந்த பட்சம் வருடம் ஒரு தரம் வந்து, தன் நிதி ஒதுக்கீட்டில் சில திட்டங்களையாவது செய்திருப்பார் என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நல்ல எதிர்பார்ப்பு ஆனால் எல்லா அரசியல் வாதியும் தன்னையும் தன் நலன் சார்ந்த அனைத்தையும் திறம்பட செய்வதில் முக்கியமாக இருக்கிறார்கள் உதாரணமாக கொரியா வேலைவாய்பு, அரச சலுகைகள், அரசாங்கம் ஒதுக்கும் அபிவிருத்திக்காக வேலைத்திட்டங்களில் பங்கு இவர்களை நம்பி பலன் இல்லை இதில் யாவரும் அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'சீமான் கண்டனம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர செல்வராஜை கொடுரமாகத் தாக்கி கைது செய்த சிங்கள இனவெறி அரசின் கோர வன்முறைச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்'

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2021 at 03:19, பாலபத்ர ஓணாண்டி said:

. எல்லாம் செட்டப்பு.. ஒராள் வீடியோ எடுக்க கத்திகுழற ரெண்டுமூண்டு பொம்பிளையள்.. இத்தனைக்கும் பொலிஸ் அவரை அமைதியாகத்தான் கூட்டி செல்கிறது..இந்த பொம்பிளையள் ரெடியா நிண்டதுபோல் குழறிகூப்பாடு போடுதுகள்.. பூரா ஓவர் ரியாக்ஸன்😀 இதுகள் ஓவர் ரியாக்சன் போடாமல் விட்டிருந்தால் சம்பவம் இயல்பா இருந்திருக்கும் போல இருக்கு..

பாலபத்ர ஓணாண்டி, 

நீங்கள்தான் வீடியோவை போட்டனீங்கள். திரும்ப ஒருக்கா பாருங்கோ, கஜன் கற்பூரம் கொளுத்த, காவலர்கள் காலால  தட்டிவிடத்தான் பொம்பிளையள் கத்ததொடங்கிறார்கள்.

Edited by பிரபா

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன்MP கைது திட்டமிட்ட செயலா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கஜேந்திரன்MP கைது திட்டமிட்ட செயலா?

திட்டமிட்டபடி திட்டத்தோடு போயிருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.