Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மக்களுக்கான இரு பெரும் குடிநீர் திட்டங்கள் : பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மக்களுக்கான இரு பெரும் குடிநீர் திட்டங்கள் : பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார்

யாழ்ப்பாணம் மற்றும் பளை பகுதிகளில் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 24000 கன மீற்றர் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த தொடக்க நிகழ்வு (Virtual inauguration) இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட உள்ளதுடன், நயினாதீவில் முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட நீர் விநியோக திட்டம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

May be an image of 2 people, people sitting and indoor

நயினாதீவு திட்டத்தின் மூலம் 5000 பயனாளர்களுக்கு சுத்தமான நீர் வழங்கப்படவிள்ளது. 

இதேவேளை, தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தின் நீட்சியாக ஒரு இலட்சம் மக்களைப் பயனாளர்களாக உள்ளடக்கும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டத்தின் கீழ், 284 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய்களை அமைக்கும் திட்டம் உள்ளடக்கிய - யாழ் மாநகர விநியோக திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

யாழ் மாநகர விநியோகம் மற்றும் தாளையடி SWRO திட்டங்கள் 2023ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்படுவதுடன், இதனூடாக மூன்று இலட்சம் பயனாளர்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வகுக்கப்பட்ட அசல் மூலத்திட்டமானது -

அந்த பகுதி விவசாயிகளால் எழுப்பப்பட்ட ஐயங்களினாலும், அந்த பகுதி அரசியல்வாதிகளின் இடையூறுகளினாலும் ஏற்கெனவே கைவிடப்பட்டுவிட்டதன் காரணமாகவே தாளையடி SWRO திட்டம் தொடங்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/114185

இது ஒரு அரசியல் ஏமாற்றாக இல்லாமல்  மேற்கூறப்பட்ட தகவல்களின் பிரகாரம் மக்களுக்கு பலனளிக்கும் திட்டமாக இருந்தால் பாராட்டப்படவேண்டிய செயல் திட்டமே. 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

இது ஒரு அரசியல் ஏமாற்றாக இல்லாமல்  மேற்கூறப்பட்ட தகவல்களின் பிரகாரம் மக்களுக்கு பலனளிக்கும் திட்டமாக இருந்தால் பாராட்டப்படவேண்டிய செயல் திட்டமே. 

அதே...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இது ஒரு அரசியல் ஏமாற்றாக இல்லாமல்  மேற்கூறப்பட்ட தகவல்களின் பிரகாரம் மக்களுக்கு பலனளிக்கும் திட்டமாக இருந்தால் பாராட்டப்படவேண்டிய செயல் திட்டமே. 

திட்டம் பாரட்டக்கூடியது.  ஆனால் இது எமது வடமாகாணசபை செய்ய வேண்டிய திட்டம் மகிந்த அரசு செய்வது கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் வேலைத்திட்டம் இதனை ஆதரிப்பது ஒற்றை ஆட்சியை ஆதரிப்பதாகும்

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு திட்டம் பற்றி யாருக்காவது தெரியுமா? இதற்கு எங்கே இருந்து நீர் உறிஞ்சப்படுகிறது?

தாளையடி திட்டம் என்பது வெறும் அறிவிப்பு என்றே நினைக்கிறேன். கடல்நீரை நன்னீராக்குவத்ற்கு அமைக்கபடும் தொழில் சாலைக்கு எங்கே இருந்து funding வருகிறது? இதன் மூலம் 2023 இல் யாழுக்கு நீர் வர போகுது என்றால் குழாய் பதிக்கும் வேலைக்கு யார் funding? ஏன் கிளிநொச்சி, தாளையடியில் இருந்து யாழ் நகருக்கு வர 283 கிமி தூரத்துக்கு குழாய்கள் தேவை? இதன் சூழலியல் விளைவுகள் எப்படி சமன் செய்யபடும்? இதன் நீண்ட கால செலவை யார் ஏற்பர்?

மகிந்த ஏதாவது செய்வதாக காட்ட விட்ட புருடா அறிவிப்போ?

ஆனால் ஊரில் சில AB வீதிகளின் காப்பெட் போடும் பணி கொவிடிலும் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு திட்டமென்ன.. தீவகத்தில் போடப்பட்ட வேக வீதிகளே நடுவழியில் கிடக்குதாம். 

இது தண்ணி வரும்.. ஆனால் வராது கதை தான். எல்லாம் அரசியல் விளம்பரம். இதில் தாடியர் இன்னொரு பக்கம் கத்த.. அங்கஜன் இன்னொரு பக்கம் கத்துவார். பெரிய பாஸ் இப்படிக் கத்துவார். 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் தம்ம்பியாருடன் கதைத்தனான் மண்கும்பானுக்கு அருகில் பென்னாம் பெரிய ஒரு தண்ணீர் தொட்டி மிக உயரமாகக் கட்டியிருக்கினமாம் யாழ்ப்பாணத்தில நிண்டு பாத்தாலே தெரியுமாம் நான் நினைக்கிறன் சாட்டியிலிருந்து நயினாதீவுக்குக் கொண்டுபோகினம் போல இருக்கு.  gravity water supply system என நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு சுத்தமான குடி நீரை திட்டமிட்டு பெற்று கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

திட்டம் பாரட்டக்கூடியது.  ஆனால் இது எமது வடமாகாணசபை செய்ய வேண்டிய திட்டம் மகிந்த அரசு செய்வது கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் வேலைத்திட்டம் இதனை ஆதரிப்பது ஒற்றை ஆட்சியை ஆதரிப்பதாகும்

அப்ப வடமாகாண சபை இனியொரு தரம் உருவாகி நித்திரைச் சோம்பல் முறிச்சு எழும்பி தண்ணீர்த் திட்டம் தரும் வரை மக்கள் குடத்தோட நடந்து உடற்பயிற்சி எடுக்கட்டும் என்கிறீர்கள் போல?😎

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

அப்ப வடமாகாண சபை இனியொரு தரம் உருவாகி நித்திரைச் சோம்பல் முறிச்சு எழும்பி தண்ணீர்த் திட்டம் தரும் வரை மக்கள் குடத்தோட நடந்து உடற்பயிற்சி எடுக்கட்டும் என்கிறீர்கள் போல?😎

ஜேர்மனியில் எந்த ஒரு தேர்தலும்  ஒரு வினாடிகூட பிந்தி நடத்தப்படவில்லை மட்டுமல்ல எந்த அரசியல் வாதியும் தலையிடுவதில்லை இங்கே நான் எட்டு தேர்தலை கண்டு இருக்கிறேன் ஐந்து தேர்தலில் வாக்குப்பதிவு செய்துள்ளேன் நான் இருக்கிறது சின்ன நகரில் எமக்கு தண்ணீர் தருவது மின்சார சபை மத்தியரசு இதில்  தலையிடுவதில்லை இந்த சின்ன நகரம் மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது ஜேர்மனியின் தலைநகராக பொன் மாநகர் இருந்துள்ளது பொன்னின் நகரபிதா ஒரு இந்தியததமிழன் பெயர் அசோக்குமார் தமிழன் ஒருவன் நகரபிதாவாயிக்கிறான். என்று தேர்தல் நடத்தப்படமால் விடவில்லை   சட்டவிரோதமாக யாழ் மாகாண சபையை முடக்கி வைத்து கொண்டு...பெய்கின்ற மழையை கடலில் விட்டு உப்பு நீராக்கி அதை மீண்டும் எடுத்து  வடிகட்டி குடிநீர் தருகிறேன் எனப் தமிழனை பிரிந்து வைக்கிறார்கள் அப்போ ஏன் பேச்சுவார்த்தை? தீர்வு என்னாத்துக்கு அவனே அனைத்தும் செய்யட்டும் என்று விடலாம் இல்லையா? ஜேர்மனியில் நாங்கள் வாழ்ந்து வருவதாலும்  இலங்கையில் தமிழருக்கு ஒரு நிரந்திரமான தீர்வு வேண்டும் என்று விரும்புவதாலும் இலங்கை அரசின் செயல் அருவருப்பாய் தெரிகிறது எனவே… அந்தப் பதிலை  எழுதினேன் அதில் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்

கடந்த ஆண்டு உங்கள் நாட்டின் தேர்தலை உலகமே கண்டு சிரித்தது எனவே… உங்களுக்கு இலங்கை அரசின் செயல்கள் சரியாகவே தெரியும் 

2009 ஆம் ஆண்டு திருகோணமலை இருந்து முள்ளிவாய்க்கால் வரை உணவுப்பொருக்களையும் குடிநீர் வகைகளையும் தடைசெய்து ஒய்வு இன்றி  துரத்தி துரத்தி தமிழன் தலையில் குண்டு மழை பொழிந்தபோது குடம் வைத்துக்கொண்டு உடல் பயிற்சி செய்தவர்களா?

4 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் எந்த ஒரு தேர்தலும்  ஒரு வினாடிகூட பிந்தி நடத்தப்படவில்லை மட்டுமல்ல எந்த அரசியல் வாதியும் தலையிடுவதில்லை இங்கே நான் எட்டு தேர்தலை கண்டு இருக்கிறேன் ஐந்து தேர்தலில் வாக்குப்பதிவு செய்துள்ளேன் நான் இருக்கிறது சின்ன நகரில் எமக்கு தண்ணீர் தருவது மின்சார சபை மத்தியரசு இதில்  தலையிடுவதில்லை இந்த சின்ன நகரம் மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது

கந்தையா அண்ணை.

ஜேர்மனியையும் பங்களாதேசிடம் இருந்தே கடன் வாங்கும் இலங்கையையும் ஒப்பிடுவது கொஞ்சம் டூமச் சாக இல்லையா?🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

கந்தையா அண்ணை.

ஜேர்மனியையும் பங்களாதேசிடம் இருந்தே கடன் வாங்கும் இலங்கையையும் ஒப்பிடுவது கொஞ்சம் டூமச் சாக இல்லையா?🤣
 
ஆமாம் ஒத்துக்கொள்கிறேன்   இலங்கையில் பாராளுமன்ற தேர்தல்...ஐனதிபதி  தேர்தல்  நடககிறது  ஆனால் வடமாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை காரணம் என்ன? குறைந்த அதிகாரம் இருக்கலாம் செயல்பாடுகளில் குறைபாடு இருக்கலாம் தொடர்ந்து இயங்கினால். இவை நிவர்த்தி ஆகும் இதேவேளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வேறு அதனை எறக்கும் தமிழர்கள் சிலர் நினைத்தால் கவலையளிக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் எந்த ஒரு தேர்தலும்  ஒரு வினாடிகூட பிந்தி நடத்தப்படவில்லை மட்டுமல்ல எந்த அரசியல் வாதியும் தலையிடுவதில்லை இங்கே நான் எட்டு தேர்தலை கண்டு இருக்கிறேன் ஐந்து தேர்தலில் வாக்குப்பதிவு செய்துள்ளேன் நான் இருக்கிறது சின்ன நகரில் எமக்கு தண்ணீர் தருவது மின்சார சபை மத்தியரசு இதில்  தலையிடுவதில்லை இந்த சின்ன நகரம் மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது ஜேர்மனியின் தலைநகராக பொன் மாநகர் இருந்துள்ளது பொன்னின் நகரபிதா ஒரு இந்தியததமிழன் பெயர் அசோக்குமார் தமிழன் ஒருவன் நகரபிதாவாயிக்கிறான். என்று தேர்தல் நடத்தப்படமால் விடவில்லை   சட்டவிரோதமாக யாழ் மாகாண சபையை முடக்கி வைத்து கொண்டு...பெய்கின்ற மழையை கடலில் விட்டு உப்பு நீராக்கி அதை மீண்டும் எடுத்து  வடிகட்டி குடிநீர் தருகிறேன் எனப் தமிழனை பிரிந்து வைக்கிறார்கள் அப்போ ஏன் பேச்சுவார்த்தை? தீர்வு என்னாத்துக்கு அவனே அனைத்தும் செய்யட்டும் என்று விடலாம் இல்லையா? ஜேர்மனியில் நாங்கள் வாழ்ந்து வருவதாலும்  இலங்கையில் தமிழருக்கு ஒரு நிரந்திரமான தீர்வு வேண்டும் என்று விரும்புவதாலும் இலங்கை அரசின் செயல் அருவருப்பாய் தெரிகிறது எனவே… அந்தப் பதிலை  எழுதினேன் அதில் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்

கடந்த ஆண்டு உங்கள் நாட்டின் தேர்தலை உலகமே கண்டு சிரித்தது எனவே… உங்களுக்கு இலங்கை அரசின் செயல்கள் சரியாகவே தெரியும் 

2009 ஆம் ஆண்டு திருகோணமலை இருந்து முள்ளிவாய்க்கால் வரை உணவுப்பொருக்களையும் குடிநீர் வகைகளையும் தடைசெய்து ஒய்வு இன்றி  துரத்தி துரத்தி தமிழன் தலையில் குண்டு மழை பொழிந்தபோது குடம் வைத்துக்கொண்டு உடல் பயிற்சி செய்தவர்களா?

மேலே நிழலி கேட்ட கேள்வி தான் என்னுடையதும்: ஜேர்மனி, அமெரிக்கா, கனடா நிலையை இலங்கையில் எதிர்பார்த்தால், நீங்கள் , நான், நிழலி எல்லாரும் இலங்கையில் தான் இப்ப இருந்திருப்போம்!

மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் உண்டு! இது நிதர்சனம், யதார்த்தம். அவற்றைத் தீர்க்க இலங்கையின் எந்த மட்ட அரசு வந்தாலும்  அனுமதிக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. கடந்த தேர்தலில் அங்கஜனுக்குக் கிடைத்த வாக்குகளின் படி - தாயக மக்களின் நிலைப்பாடும் அது போலத் தான் தெரிகிறது!

இதில் அரசியல் வர்ணம் பூசுவோரை மக்கள் ஒதுக்கி வைப்பது அடுத்த தேர்தல்களில் வெளிப்படையாகத் தெரிய வரும். அப்போது மீண்டும் இது பற்றிப் பேசுவோம்! 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Elugnajiru said:

நேற்று நான் தம்ம்பியாருடன் கதைத்தனான் மண்கும்பானுக்கு அருகில் பென்னாம் பெரிய ஒரு தண்ணீர் தொட்டி மிக உயரமாகக் கட்டியிருக்கினமாம் யாழ்ப்பாணத்தில நிண்டு பாத்தாலே தெரியுமாம் நான் நினைக்கிறன் சாட்டியிலிருந்து நயினாதீவுக்குக் கொண்டுபோகினம் போல இருக்கு.  gravity water supply system என நினைக்கிறன்

எனது  ஊரிலும் இது  போன்று பெரிய தண்ணீர்  தொட்டி கட்டி  பல  வருடங்களாக  காய்ந்து  போய்க்கிடக்கு?

பூனகரி என்றார்கள்

இரணைமடு  என்றார்கள்

கடல்  தண்ணீரை  நன்னீர் ஆக்கிறம் என்றார்கள்

புண்ணியவான்கள் யாராவது  தண்ணியை விடுங்கடா  என்று சனம் ஏங்கிக்கிடக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நபருக்கு நாளொன்றுக்கு  80 லீட்டர் (24000x1000/300000) குடிநீர் என்பது மிக அதிகம். இதில் வேறு தேவைகளுக்கான தண்ணீரும் அடங்கும் என்றால் வீண் செலவும் சக்தி விரயமும் ஏற்படும். இந்த குடிநீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு அரசு பயன்படுத்தும் வழிகள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எனது  ஊரிலும் இது  போன்று பெரிய தண்ணீர்  தொட்டி கட்டி  பல  வருடங்களாக  காய்ந்து  போய்க்கிடக்கு?

பூனகரி என்றார்கள்

இரணைமடு  என்றார்கள்

கடல்  தண்ணீரை  நன்னீர் ஆக்கிறம் என்றார்கள்

புண்ணியவான்கள் யாராவது  தண்ணியை விடுங்கடா  என்று சனம் ஏங்கிக்கிடக்கு?

உங்கட ஊரில தண்ணீர்த்தொட்டி மாத்திரமா கேட்பாரற்றுக்கிடக்குது. கோவில்கள் கோடி கோடியாகச் செலவுசெய்து கட்டிமுடிக்கப்பட்டு அதற்கு உள்நுழைவு வளைவுகளும் பலகோடிகள் செலவுசெய்து கட்டப்பட்டு. தவிர அம்பலவாணர் அரங்கம் கட்டப்பட்டு மாடு மழைவெயிலுக்கு ஒதுங்க விட்டபடி இப்படி ப்லவிடையங்கள் அங்கு காணக்கிடக்குது.

அண்மையில் நான் போனபோது அந்தவேளைகளில் வாழ்ந்தவர்கள் பூவரசங் கதியாலால் நிரைச்சுக்கு எல்லைவேலி அமைத்து அக்காணிகளில் வாழ்ந்த சுவடுகளின் அடையாளமாக நிறையப் பூவரச மரங்கள் காணப்பட்டது இப்போ அதுகளையும் வெட்டி விறகாக்கப்படுகிறது எனக் கேள்விப்பட்டன். தவிர இடம்பெயர்ந்து வந்தபோது பல்லாயிரக்கணக்கான கால்நடைகளை அப்படியே விட்டு வந்ததால் அவை பராமரிப்பல்லாது ஆனால் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் ஒரு இனமாகி மாறி நிறயவே காணப்பட்டது அதையும் கறிக்கடைக்காகக் காவுகொடுத்தாயிற்று.

சூழலியலாளர்கள் அப்படிக்கைவிட்டும் தப்பித்துவாழும் மாடுகளை அப்படியே பாதுகாத்து எதிர்காலத்தில் வறட்சியான சூழலில் பலன் தரக்கூடியசிறந்த கால்நடைகளை உருவாக்கலாம் எனக்கருதியிருந்தனர் அவை எல்லாமே அநியாயமாகக் கைநழுவிப்போய்விட்டது.

உங்களுக்கு நினைவிருக்கலாம் ஒரு நேவிக்கொமாண்டர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு நெடுந்தீவுக் குதிரைகள் சிலதை எந்தவித அனுமதியும் இல்லாது விற்பனை செய்ததை. நெடுந்தீவுக்குதிரைகளது அருமை அவர்களுக்குத் தெரிகிறது எமக்கு எங்கே புரியப்போகுது.

கண்ணில் தெரியும் புங்குடுதீவைச்சேர்ந்த அனைவரையும் கும்பிட்டுக் கும்பிட்டுக் கூறினேன் இந்தக் கோய்ல் மண்டபம் தேர், தேர்முட்டி கட்டுறதை விட்டுட்டு ஆழுக்கு ஆள் குறைந்தது இரண்டு சூரிய மின் தகடுகளை வாங்கி குறிப்பிட்ட பிரதேசத்தில் வைத்துப் பராமரித்து தீவுப்பகுதிக்கும் மிகுதியானதை யாழ் நகருக்கும் விற்கலாம் என ஆனால் இவன் என்ன லூசன் இப்படிக் கதைக்கிறான் எனக்க்கூறிக்கொண்டு நழுவிப்போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Elugnajiru said:

இவன் என்ன லூசன் இப்படிக் கதைக்கிறான்

எனக்கும்  இதே  பெயர்  தான்

அதனால தான்  ஏதோ  என்னால  முடிஞ்சதை என் குடும்பத்தோட  சேர்ந்து செய்து  கொண்டு வாறன்

நன்றி  சகோ

உங்களது  ஆதங்கத்துக்கும் நேரத்திற்கும்

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியோடு இலங்கையை ஒப்பிடுவது ரூ மச்சே தான். வடமாகாண சபை நிர்வாகத்துடன் யேர்மன் நகர நிர்வாகத்தை ஒப்பிடுவதும் ரூ மச்.
எனக்கு விளங்காதது இவ்வளவு சிறந்த நாட்டில் கோவிட் தடுப்பூசிக்கு எதிரான கொள்கை கொண்ட நேஸ் ஒருவர் கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக உப்பு தண்ணீரை  மக்களுக்கு ஏற்றிய போது _ நூற்று கணக்காணவர்களுக்கு இல்லை ஆயிரகணக்காணவர்களுக்கு _  மேல் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் :rolleyes:

Regional broadcaster NDR says 8,557 people have been asked to go back for repeat vaccinations, and so far about 3,600 new appointments have been confirmed.

https://www.bbc.com/news/world-europe-58186032

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

மேலே நிழலி கேட்ட கேள்வி தான் என்னுடையதும்: ஜேர்மனி, அமெரிக்கா, கனடா நிலையை இலங்கையில் எதிர்பார்த்தால், நீங்கள் , நான், நிழலி எல்லாரும் இலங்கையில் தான் இப்ப இருந்திருப்போம்!

மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் உண்டு! இது நிதர்சனம், யதார்த்தம். அவற்றைத் தீர்க்க இலங்கையின் எந்த மட்ட அரசு வந்தாலும்  அனுமதிக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. கடந்த தேர்தலில் அங்கஜனுக்குக் கிடைத்த வாக்குகளின் படி - தாயக மக்களின் நிலைப்பாடும் அது போலத் தான் தெரிகிறது!

இதில் அரசியல் வர்ணம் பூசுவோரை மக்கள் ஒதுக்கி வைப்பது அடுத்த தேர்தல்களில் வெளிப்படையாகத் தெரிய வரும். அப்போது மீண்டும் இது பற்றிப் பேசுவோம்! 

நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் ஒருகாலத்தில் இலங்கையை விட கேவலமாக இருந்துள்ளன ஆனால் இன்று அவர்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள்?ஏன் இலங்கையையும் இன்று அவர்கள் இருக்கும் நிலைக்கு வரமுடியாது?

வடமாகாண சபை தேர்தல் ஒழுங்காக நடத்தப்பட்டு  எந்த இடையுருமின்றி சுயமாக இயங்க அனுமதித்ததால் வடமாகாண சபை இலங்கை முழுவதும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செய்யும் கடந்த காலத்தில் வடமாகாண சபை சுயமாக இயங்க அனுமதிக்கப்படவில்லை அதனால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

மேல் பந்தி உண்மை!

கீழ் பந்தி: யார் அனுமதிக்கவில்லை?

6 hours ago, Justin said:

மேல் பந்தி உண்மை!

கீழ் பந்தி: யார் அனுமதிக்கவில்லை?

1987 ல் வட கிழக்கு மாகாண சபையை  இயங்க விடாமல்  இடையூறு செய்து அடம் பிடித்த நாம் இன்று வடக்கு மாகாண சபையை இயங்க விட்டாலே போதும் என்ற நிலைக்கு வந்திருப்பது நல்ல முன்னேற்றம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

கீழ் பந்தி: யார் அனுமதிக்கவில்லை?

1..அரசாங்கம் விக்கியார். முதலமைச்சர் நிதியம் நிறுவ இலங்கை அமைச்சரிடம் விண்ணப்பித்திருந்தார். அதை நிராகரித்து விட்டார்கள் இதற்க்கு தமிழ்தேசியகூட்டமைப்பும் ஆதரவு வழங்கவில்லை.  எனெனில்  இவ்வாறு அனுமதி வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி செய்து  வடமாகாணமும் வடமாகாணமக்களும் வளர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்பதால் மற்றும்  ஒரு திட்டம் வடமாகாண சபைக்கு நேரடியாக வந்தபோது அரசாங்கம் அத்திட்டம் எமக்கு ஊடக செய்யவேண்டும் எனவும் 1/3 கமிஷன் கேட்டு இருந்தார்கள்...

2...தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள்..இவர்கள் ஒவ்வொருவரும் வருடாந்தம்  எங்களுக்கு 6....10....15.....20.....மில்லியன் ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்வார்கள். வறிய நாடான இலங்கையால் இருபகுதிக்கும் நிதி ஒதுக்க முடியுமா?இப்படிப் பெற்ற நிதியில் என்ன செய்தார்கள்? எந்தவொரு கணக்காளரரும் மதிப்பீடு செய்ததில்லை. வேலையைப் பார்வையிட்டதுமில்லை வடமாகாண சபை உறுப்பினர்களும்  இதே மாதிரி தான் செயல்ப்பட்டார்கள்   தமிழ்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்...மாகாண சபை உறுப்பினர்கள் வடமாகாண சபையின் செயல்பட்டுக்கும். வளர்ச்சிக்கும் இடையூறு செய்தார்கள் 

உண்மையில் வடமாகாண சபை ஒரு திட்டத்திற்கான வேலையை கேள்விகள் மூலம் பல நிறுவனங்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி ஒன்றிடம்  வேலையை ஓப்படைத்து. வேலை முடிய...முடய..பார்வையிட்டு நிதியை அனுப்ப வேண்டும் இந்த செயலுக்கு. ஒட்டுமொத்த தமிழ் உறுப்பினர்கள் தடையாக இருந்தார்கள்  இதில் பலர் மாளிகை கடடியுள்ளார்கள்

வடமாகாணசபை தொடர்ந்து இயங்குமாயின் அது ஒரு வலுவான அரசாக வளர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு இதற்கு இலங்கை அரசும் தமிழ் உறுப்பினர்களும் தடையாக இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

1987 ல் வட கிழக்கு மாகாண சபையை  இயங்க விடாமல்  இடையூறு செய்து அடம் பிடித்த நாம் இன்று வடக்கு மாகாண சபையை இயங்க விட்டாலே போதும் என்ற நிலைக்கு வந்திருப்பது நல்ல முன்னேற்றம் தான். 

இடையூறு செய்தது உண்மை காரணம் ஒரு தீர்வை இல்லாமல் செயவதற்க்கு இல்லை  இலங்கை அரசின் கையில் ஆயுள் உள்ள ஒரு தீர்வை தமிழர்கள் விரும்பவில்லை இன்று வடகிழக்கு மாகாண சபை அரசாங்கத்தினால் சாக அடிக்கப்பட்டு விட்டது அன்று அவர்கள் செய்தது சரியாகும்  இதை இலங்கை அரசு மாகாண சபையை வலுப்படுத்தி செயல்பட அனுமதித்துதிருந்தால் அன்று அவர்கள் செய்தது பிழை என உறுதி படுத்திருக்கலாம் வடமாகாண  சபை தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை? இப்படி நடக்கும் என்று அப்போதோ அவர்களுக்கு தெரியும்.இதில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லை 

அரசாங்கம் நினைத்தால் எல்லா மாகாணசபைகளையும் நன்றாக இயங்க வைக்க முடியும்....அதுநேரம். முடக்கவும் முடியும் எந்த ஒரு தனி நபரும் அல்லது அமைப்புக்கள் இதில் மாற்றங்கள் செய்ய முடியாது இதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

1..அரசாங்கம் விக்கியார். முதலமைச்சர் நிதியம் நிறுவ இலங்கை அமைச்சரிடம் விண்ணப்பித்திருந்தார். அதை நிராகரித்து விட்டார்கள் இதற்க்கு தமிழ்தேசியகூட்டமைப்பும் ஆதரவு வழங்கவில்லை.  எனெனில்  இவ்வாறு அனுமதி வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி செய்து  வடமாகாணமும் வடமாகாணமக்களும் வளர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்பதால் மற்றும்  ஒரு திட்டம் வடமாகாண சபைக்கு நேரடியாக வந்தபோது அரசாங்கம் அத்திட்டம் எமக்கு ஊடக செய்யவேண்டும் எனவும் 1/3 கமிஷன் கேட்டு இருந்தார்கள்...

2...தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள்..இவர்கள் ஒவ்வொருவரும் வருடாந்தம்  எங்களுக்கு 6....10....15.....20.....மில்லியன் ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்வார்கள். வறிய நாடான இலங்கையால் இருபகுதிக்கும் நிதி ஒதுக்க முடியுமா?இப்படிப் பெற்ற நிதியில் என்ன செய்தார்கள்? எந்தவொரு கணக்காளரரும் மதிப்பீடு செய்ததில்லை. வேலையைப் பார்வையிட்டதுமில்லை வடமாகாண சபை உறுப்பினர்களும்  இதே மாதிரி தான் செயல்ப்பட்டார்கள்   தமிழ்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்...மாகாண சபை உறுப்பினர்கள் வடமாகாண சபையின் செயல்பட்டுக்கும். வளர்ச்சிக்கும் இடையூறு செய்தார்கள் 

உண்மையில் வடமாகாண சபை ஒரு திட்டத்திற்கான வேலையை கேள்விகள் மூலம் பல நிறுவனங்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி ஒன்றிடம்  வேலையை ஓப்படைத்து. வேலை முடிய...முடய..பார்வையிட்டு நிதியை அனுப்ப வேண்டும் இந்த செயலுக்கு. ஒட்டுமொத்த தமிழ் உறுப்பினர்கள் தடையாக இருந்தார்கள்  இதில் பலர் மாளிகை கடடியுள்ளார்கள்

வடமாகாணசபை தொடர்ந்து இயங்குமாயின் அது ஒரு வலுவான அரசாக வளர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு இதற்கு இலங்கை அரசும் தமிழ் உறுப்பினர்களும் தடையாக இருக்கிறார்கள் 

கந்தையா, 
1. அரசு அனுமதித்திருக்காது - இது அதிசயமில்லை. இலங்கையின் ஏனைய மாகாணங்களில் இப்படியொரு நிதியம் இல்லை! அப்படி மூன்றிலொரு பங்கு கேட்டிருந்தால், அதைக் கொஞ்சம் குறைத்துப் பேரம் பேசி ஆரம்பித்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்! ஏனெனில், எங்களுக்குக் காரியமாக வேண்டுமெனில் இலங்கையில் கையூட்டு வழமையான சிஸ்ரம்.

2. இதில் இருக்கும்  தகவல்களும் விக்கி ஐயா வெளியிட்டவை, எந்த ஆதாரமும்  பொது வெளியில் இல்லை! தனது வாகனம், விமானச் சீட்டுகள் மீதான அக்கறை, அமைச்சர்கள் மீது காரணமற்ற ஒழுக்க நடவடிக்கை, தனது உறவினருக்குப் பதவி கொடுக்க காட்டிய மும்முரம் - இவை போன்ற பல காரணங்களால் விக்கி ஐயாவின் வார்த்தைகள் உண்மைத் தன்மை குறைந்தவையாகத் தெரிகின்றன.

எனக்குத் தெரிந்தவரையில்: விக்கி ஐயா நிர்வாகத்தைக் கோட்டை விட்டு தேசிய அரசியலில் மிகை ஆர்வம் காட்டியதால் மிகக் கொஞ்சமே வட மாகாணசபை சாதித்தது. தங்களுக்கு ஒரு சொகுசான கட்டிடம் கட்டியது மட்டுமே அவர்கள் செய்த பெரிய செயல் திட்டம். மக்களுக்கு பயன் ஒன்றுமில்லை. கழுதை, மாடு, நாய் அதனதன் வேலையை மட்டும் பார்க்க வேண்டுமென்பார்கள் அல்லவா? அதை விக்கி ஐயா பின்பற்றியிருந்தால் சிறப்பான பலன் கிடைத்திருக்குமென்பது என் கருத்து!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மன்னிக்கவும் இந்த உங்கள் கருத்துகளுடன் உடன்படமுடியவில்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.