Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தும் என உணர்வதாலும், திரும்ப திரும்ப ஓரே விடயத்தை கதைப்பதால் ஒரு பயனும் இல்லை.. எனது கருத்தை நீக்கிவிட்டேன்..

அவரவர் வாழ்க்கை அவரவர் இஷ்டம்

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • Replies 386
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் யாழ்கள நிர்வாகிகளை குறிப்பிடவில்லை. யாழ்களத்தில் செய்தி வராமல், இணைக்காமல் விட்டிருப்பார்களோ  என்று உறுப்பினர்களை தான் நினைத்தேன் இந்த  இரண்டு  தமிழ் பெண் திருமணத்திற்கு இங்கே வந்த பயங்கரமான  எதிர்ப்பை பார்த்த பின்பு

இரண்டு தமிழ் பெண்கள?. இல்லை ஒரு. தமிழ் பெண் ணா 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தும் என உணர்வதாலும், திரும்ப திரும்ப ஓரே விடயத்தை கதைப்பதால் ஒரு பயனும் இல்லை.. எனது கருத்தை நீக்கிவிட்டேன்..

அவரவர் வாழ்க்கை அவரவர் இஷ்டம்

என்னதான் 30 - 40 வருடங்களாக புலம்பெயர்ந்து முதலாளித்துவ, தாராளவாத ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும், தமிழர்கள் மூடுண்ட சமூகமாகவே உள்ளனர். இதனால்தான் இந்தத் திரியில் தன்பால் ஈர்ப்புடைய பெண்களின் திருமணத்தை ஒவ்வாமையுடன் பார்க்கும் ஆசாரவாதிகளின் கருத்துக்கள் காட்டுகின்றன. 

தன்பாலீர்ப்பையும் விலங்குகளுடனான புணர்ச்சியையும் (beastility) தராசில் சமப்படுத்தி பிறழ்வாகப் பார்ப்பவர்கள் சமூக மாற்றங்களையும் தன்பாலீர்ப்பாளரின் மீதான பார்வைகள் மாறிவருவதையும் தெரியாமல் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக்கொண்ட தீக்கோழிகள்தான். இப்படியான ஆசாரவாதிகள் தங்கள் குடும்பங்களுக்கும் தன்பாலீர்ப்பாளர்கள் வந்துவிடப்போகின்றார்களே என்ற பயத்தோடுதான் இந்தச் செய்தியை அணுகின்றார்கள். பிள்ளைகளை தமிழ்ப்படங்களில் வரும் காதல்களைக் காட்டி வளர்த்தால் இப்படியான பயம் வருவதையும் தவிர்க்க இயலாதுதானே!😉

ஆனால் தன்பாலீர்ப்பாளர்கள் சமூகத்தில் மிகச் சிறுபான்மையினர் என்பதால் நிகழ்தகவின்படி தமிழ்ப் பிள்ளைகளிலும் மிகமிகச் சிறிய பங்கினரே தன்பாலீர்ப்பாளர்களாக இருப்பர்.  எனவே அதிகம் பயப்படவேண்டாம்.

அவர்களை சக மனிதர்களாக மதித்து, கேலி செய்யாமல் இருந்தாலே போதும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில கனக்க படித்த  மேதாவிக்கூட்டங்கள் இங்கே யதார்த்த கருத்து சொல்பவர்களை புலம்பெயர்ந்தும் இன்னும் திருந்தாத தமிழர்கள் என்று வழிமொழிய ஆரம்பித்து விட்டனர்.

நன்று.....

உலக நாடுகளில் எத்தனை நாடுகளில் ஓரின சேர்க்கை முறையை அனுமதிக்கின்றார்கள் என்பதை மேதாவிகள் கவனிக்கவில்லை போலும்....தமிழர்களாகிய நாம் ஏதாவது சொன்னால்  ஆசாரவாதிகள் என மகுடம் சூட்டிவிடுவார்கள்.சுருக்கமாக சொன்னால்  ஒரினசேர்க்கையை அனுமதிக்காத நாடுகள் முட்டாள் நாடுகள்.

 இதுக்கெல்லாம் ரஷ்ய பிரதமர் புட்டின் தான் சரி......ஒட விட்டு பின்னாலை இரண்டு போட...😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அண்ணா

எதை  அனுமதிக்கணும்?

எதை  தாமதிக்கணும்?

எதை தள்ளி  வைக்கணும் ? என்பனவற்றை தூர நோக்கோடு சிந்தித்து 

முடிவுகளை  எடுத்தலே சரியானதும்

நீண்ட கால அடிப்படையில் பயன்  தரக்கூடியதுமாகும்

ஆனால் இங்கே நாம் இயற்கைக்கு  எதிரானவற்றை போற்றவேண்டியதில்லை  என்று  தான்  சொல்கின்றோம்

அதற்கு  எமது தேசியக்கொள்கைவரை  கேள்விக்குள்ளாக்கப்படுகிறது

ஆதிவாசிகளாக  கூட கேலி செய்யப்படுகின்றோம்

இங்கே  எமக்கு மறுதலையாக  எழுதியோர்  கூட தம்மை சுற்றி  எம்மை  போன்ற நிலைப்பாடுடையோரே அதிகம்  என்று  எழுதியபின்பும்.......??

முன்பெல்லாம்  இவ்வாறான  திரிகளில்  ஆமாங்கடா 

இதில்  அதற்கு  சார்பாக எழுதுபவர்கள்  எல்லோரும் அந்த  மாதிரி  தானே  என்று  கடந்து  செல்வது  வழக்கம்

இப்ப  கொஞ்சம்  காது  கொடுத்து கேட்கத்தொடங்கியபின் ரொம்ப  வதை  படவேண்டி  இருக்கு.😭

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 23:39, வாலி said:

True Lust

On 28/9/2021 at 23:42, குமாரசாமி said:

நவ நாகரீக உலகு.அதில் ஓரின சேர்க்கையும் அடங்கும்.

எல்லாத்துக்கும் மேலால்,  ஓரினச் உறவில், எதை எப்படி செய்கிறார்கள் என்ற சுருக்கம் எனக்கு அறிய ஆவல்.

ஆண்களை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது; sodomite. 

பெண்கள்? 

scissors பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அனால் அது எப்படி திருப்திபடுத்தும்?

விரல்கள் அல்லது முட்டியை பாவித்து. அனால், இது ஆன் பெண் கலவியிலும்  நடப்பது. 

ஏனெனில், கலவியில் சகிப்புக்கு சவால் ஆக இருக்கும் வலி உணர்வு, உச்சம் அடையும் போது திருப்தியாகிறது. 

இப்போதும் பூனை இந மிருகங்களில் ஆன் குறியின் தலையில் (penile glans) காது சோணையை விட கடினமான கசியிழைத்தல் உருவாகி இருக்கும்   முட்கள் போல இருப்பது, மனித இன ஆணின்  குறியின் தலையில் (penile glans) இருந்து,  genetic mutation ஆல் இல்லாமல் போய்விட்டது.

அனால் மனிதன் அதை விடவில்லை, செயற்கை ஆண்குறியின் பலவற்றில் தலைப்பகுதியில் முட்கள் போல துருத்தி இருக்கும் உருவத்தில் அமைக்கப்படுகிறது.

பூனை இந மிருகங்களில், ஆன் மிருகம் குறியை வெளியே எடுக்கும் பொது யோனியின் சுவர்களில் கீறுவது (அப்போதே பெண் மிருகம் சினப்பதும்), பெண் மிருகம்  முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது. 
   
பொதுவாக கலவியில் ஏற்படும் வலி, அதன் மூலமான உச்சம், பெண் முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது.  

அதாவது, lesbians கலவியில் வலி இல்லை. அனால் உச்சமடைலயும், திருப்தியும் இருப்பதாக உணர்கிறர்கள் (முட்டையை வெளியேவது) புரியாத புதிர்.  

அனால், lesbians க்கும் அதை விளங்கப்படுத்த முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

அந்த தமிழ் பெண் தன் திருமணமானவர் என்பதை எப்படி இந்த சமூகத்திடம் தெரிவிக்க முடியும்?அந்த பெண்கள் இருவரும் சேர்ந்து திரியும்போது நண்பிகள் என்று கருத இடமுண்டு மற்றும் ஆண்களும் தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு எனவே கண்டிப்பாக திருமணவிழா செய்ய வேண்டும் அவர் இந்து என்பதால் இந்து முறைப்படி செய்தார் ஐயாரும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் ஒப்புக் கொண்டுள்ளார்கள் அவர் அங்கு ஐயர் என்று பதிந்து தொழில் செய்தால் சட்டப்படி மறுக்க முடியாது அப்படி மறுத்ததால் அனுமதி இரத்து செய்யப்படும் 

திருமணம் என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கம் சரி ஆனால் ஒருபால்லினத்தவர் இணுவது எப்படி திருமணம் என்று பெயரிடப்பட்டது?

இணைவது

இருவரும் மாறிமாறி தாலி கட்டிக்கொண்டார்களா? இல்லாவிட்டால் மற்ற பெண்ணை (தாலி இல்லாத) எப்படி கல்யாணம் ஆகிவிட்டது என்று கண்டு பிடிப்பது? எப்படி பார்த்தாலும் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணும்போது மோதிரம் மாற்றிக்கொள்வார்கள் தானே அதைவைத்து கண்டுபிடிக்கலாமே !

திருமணம் என்ற நிகழ்வில் ஒருபாலின இணைவுபற்றி ஏதும் இருப்பதாக தெரியவில்லை!

மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப்படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

சட்டம் சொல்வதை எல்லாம் என் முதுகில் ஏற்றி சுமக்கணும் என்று எந்த விதியும் கிடையாது. 

அருமையான கருத்து! நிச்சயமாகக் குருட்டதிர்ஷ்டம் தான் உங்களைப் பாதுகாக்கிறது! 👍

17 hours ago, ரதி said:

மேலே நான் உங்களிடம் கேட்டது மிருகங்களோடு பாலியல் உறவு கொள்ளலாம் என்று சட்டம் வந்தால் அதை ஆதரிப்பீர்களா என்று தான் ...அதற்கு இன்னும் பதில் வரவில்லை 

ரதி, ஏன் அது சட்ட விரோதமான செயல் என்று எழுதியிருக்கிறேன்! ஒரு தடவையல்ல! இரண்டு தடவைகள், வாசிக்க வேண்டியது உங்கள் பணியல்லவா?

15 hours ago, தமிழ் சிறி said:

ரதி... கேட்ட கேள்விக்கு... ஜஸ்ரின், 
சசிக்கு.... பதில், சொல்லியுள்ளார்... போலுள்ளது.  ஏன்  

வைத்தியர்கள்... ஒரு, நாளும்... 
மாத்தி,  💉ஊசி.... அடிக்கப் படாது. 💉
இது,  மகா.... பயங்கர,  தவறு.  :grin:

தமிழ்சிறிக்கு அடிக்கடி "தமிழ்" பிரச்சினை -பேரை மாற்றி சிறி என்று மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்😂:  

"சசி பதில் சொல்லியாகி விட்டது" என்ற வசனத்தில் "சசி" என்பது எழுவாய்!

இதன் அரிவரித்தமிழ் வடிவம்: சசி ஏற்கனவே இதற்குப் பதில் சொல்லி விட்டார் என்பதாகும் !

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

அருமையான கருத்து! நிச்சயமாகக் குருட்டதிர்ஷ்டம் தான் உங்களைப் பாதுகாக்கிறது! 👍

என்  மனச்சாட்சிக்கு  எது சரியாகப்படுகிறதோ அது தான்  சட்டம் விதி  ஏன் என் கடவுளே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சில கனக்க படித்த  மேதாவிக்கூட்டங்கள் இங்கே யதார்த்த கருத்து சொல்பவர்களை புலம்பெயர்ந்தும் இன்னும் திருந்தாத தமிழர்கள் என்று வழிமொழிய ஆரம்பித்து விட்டனர்.

நன்று.....

உலக நாடுகளில் எத்தனை நாடுகளில் ஓரின சேர்க்கை முறையை அனுமதிக்கின்றார்கள் என்பதை மேதாவிகள் கவனிக்கவில்லை போலும்....தமிழர்களாகிய நாம் ஏதாவது சொன்னால்  ஆசாரவாதிகள் என மகுடம் சூட்டிவிடுவார்கள்.சுருக்கமாக சொன்னால்  ஒரினசேர்க்கையை அனுமதிக்காத நாடுகள் முட்டாள் நாடுகள்.

 இதுக்கெல்லாம் ரஷ்ய பிரதமர் புட்டின் தான் சரி......ஒட விட்டு பின்னாலை இரண்டு போட...😁

சரியான கருத்து!

புட்டினின் ரஷ்யா உட்பட, உலக நாடுகளில் ஓரினச்சேர்க்கையை சட்ட விரோதமெனக் கருதும் நாடுகள் "முட்டாள்" நாடுகள் தான்! ஆனால், வெள்ளையாய் இருக்கிறவன் எல்லோரும் புத்தி சாலி தான் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருப்பதால், தமிழர்களை மட்டும் நாம் கண்டிப்பதாகத் தெரிகிறது. 

இன்னொரு விடயம்: bigot புட்டின் தன்னினச் சேர்க்கையாளர்களை மட்டும் ஓட விட்டுப் பின்னால் உதைக்கவில்லை. கறுப்பு, மாநிறத்தோல் கொண்டோருக்கும் ரஷ்யாவில் இதே  நிலை தான்.

அதனால் தான் எம்மவர் ரஷ்யாவுக்கு அகதிகளகப் போகவில்லை - ரஷ்யாவைப் பாஸ் பண்ணி மேற்கு ஐரோப்பாவுக்கு வந்தார்கள்!😉

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

என்னதான் 30 - 40 வருடங்களாக புலம்பெயர்ந்து முதலாளித்துவ, தாராளவாத ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும், தமிழர்கள் மூடுண்ட சமூகமாகவே உள்ளனர். இதனால்தான் இந்தத் திரியில் தன்பால் ஈர்ப்புடைய பெண்களின் திருமணத்தை ஒவ்வாமையுடன் பார்க்கும் ஆசாரவாதிகளின் கருத்துக்கள் காட்டுகின்றன. 

கிருபண்ணா... இப்படி தமிழ் சமூகத்தை குறை சொல்லிக் காட்டி கொண்டு அதே சமூகத்திற்கு தம்மை புரட்சியாளர்களாக.. சீர்திருத்தவாதிகளாக வேசம் போடுதல் தான் அதிகம் நடக்குது. 

இந்த ஒத்தபால் கவர்ச்சிக்கு எதிரான உணர்வு என்பது இயற்கையானது. இங்கு இங்கிலாந்தில் பாடசாலை மட்டத்தில் இருந்து இவை இருக்குது. அவற்றிற்கு எதிராக அரசும் கடும் சட்டங்களைப் போட்டு.. ஒத்தபால் கவர்ச்சியினரின் அடிப்படை உரிமைகளைப் (LGBT  உரிமைகள்) பாதுகாக்க முனையிறம் என்று சொன்னாலும்.. எல்லாத் தளங்களிலும்.. இந்த ஒத்தபால் கவர்ச்சி உறவுமுறைக்கு எதிரான இயல்பான மனநிலை உண்டு.

அண்மையில் கூட இத்தகைய ஒத்தபால் பெண் தம்பதியை லண்டனில் பஸ்ஸில் வைச்சு மொத்து மொத்தென்று மொத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.. எல்லாம் பதின்ம வயதினர். 

ஆக.. இந்த இயற்கைக்கு முரணான.. உதவாத.. உறவுமுறைக்கு எதிரான சிந்தனை என்பது இயல்பானதே.. அதை தமிழ் சமூகமல்ல.. உலகில் உள்ள எல்லா இனங்குழுமத்திலும் காணலாம். இதை நீங்கள் தமிழ் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டா முன்வைப்பது என்பது.. சொந்த சமூகத்தை குறையுணர் கண்ணோட்டத்தில் கண்ட ஒரு வகை வெறுப்புணர்வின் மிகுதி என்று தான் சொல்லனும். ஒருவேளை சொந்த சமூகத்தை விட அடுத்த சமூகங்களை உன்னிப்பாக அவதானிக்க முடியாததும் காரணமாக இருக்கலாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எல்லாத்துக்கும் மேலால்,  ஓரினச் உறவில், எதை எப்படி செய்கிறார்கள் என்ற சுருக்கம் எனக்கு அறிய ஆவல்.

ஆண்களை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது; sodomite. 

பெண்கள்? 

scissors பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அனால் அது எப்படி திருப்திபடுத்தும்?

விரல்கள் அல்லது முட்டியை பாவித்து. அனால், இது ஆன் பெண் கலவியிலும்  நடப்பது. 

ஏனெனில், கலவியில் சகிப்புக்கு சவால் ஆக இருக்கும் வலி உணர்வு, உச்சம் அடையும் போது திருப்தியாகிறது. 

இப்போதும் பூனை இந மிருகங்களில் ஆன் குறியின் தலையில் (penile glans) காது சோணையை விட கடினமான கசியிழைத்தல் உருவாகி இருக்கும்   முட்கள் போல இருப்பது, மனித இன ஆணின்  குறியின் தலையில் (penile glans) இருந்து,  genetic mutation ஆல் இல்லாமல் போய்விட்டது.

அனால் மனிதன் அதை விடவில்லை, செயற்கை ஆண்குறியின் பலவற்றில் தலைப்பகுதியில் முட்கள் போல துருத்தி இருக்கும் உருவத்தில் அமைக்கப்படுகிறது.

பூனை இந மிருகங்களில், ஆன் மிருகம் குறியை வெளியே எடுக்கும் பொது யோனியின் சுவர்களில் கீறுவது (அப்போதே பெண் மிருகம் சினப்பதும்), பெண் மிருகம்  முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது. 
   
பொதுவாக கலவியில் ஏற்படும் வலி, அதன் மூலமான உச்சம், பெண் முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது.  

அதாவது, lesbians கலவியில் வலி இல்லை. அனால் உச்சமடைலயும், திருப்தியும் இருப்பதாக உணர்கிறர்கள் (முட்டையை வெளியேவது) புரியாத புதிர்.  

அனால், lesbians க்கும் அதை விளங்கப்படுத்த முடியவில்லை. 

இது இந்தத் திரிக்கு வெளியேயான உரையாடல், ஆனால் உங்கள் புரிதல்தவறு:  பூனை ஒரு induced ovulator. உடலுறவு நடக்கும் போது முட்டை சூலகத்திலிருந்து வெளிவிடப் படும். அதற்காகத் தான் அந்த ஆண்குறி அமைப்பு.

மனிதன் ஒரு induced ovulator அல்ல! பெண்ணின் முட்டை மாதவிடாய்க்கு சில நாட்கள் முன்பே வெளிவந்து விந்தின் வருகைக்காக பலோப்பியன் குழாயில் காத்திருக்கும். விந்து கிடைத்தால் கருக்கட்டல், கிடைக்கைவில்லையாயின் கருப்பையின் உட் சுவரோடு சேர்ந்து முட்டையும் அழிந்து விடும் (இதுவே மாதவிடாய்). 

இன்னொரு விடயம் முக்கியமானது. உடலுறவுச் சுகம் என்பது வெறுமனே ஆண்/பெண் குறிகளின் சேர்க்கையில் மட்டும் தங்கியில்லை. உடலின் ஏனைய பகுதிகளின் ஸ்பரிசம் (tactile stimuli)  கூட உச்ச நிலையை உடலுறவில் உருவாக்க முடியும் - விசேடமாக பெண்களில் இது அதிகம் சாத்தியம். 

எனவே,  ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-பெண் இணைகள் உடலுறவில்  உச்ச நிலையை அடைய வழிகள் ஏராளம்!  All roads lead to Rome!😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

கிருபண்ணா... இப்படி தமிழ் சமூகத்தை குறை சொல்லிக் காட்டி கொண்டு அதே சமூகத்திற்கு தம்மை புரட்சியாளர்களாக.. சீர்திருத்தவாதிகளாக வேசம் போடுதல் தான் அதிகம் நடக்குது. 

இந்த ஒத்தபால் கவர்ச்சிக்கு எதிரான உணர்வு என்பது இயற்கையானது. இங்கு இங்கிலாந்தில் பாடசாலை மட்டத்தில் இருந்து இவை இருக்குது. அவற்றிற்கு எதிராக அரசும் கடும் சட்டங்களைப் போட்டு.. ஒத்தபால் கவர்ச்சியினரின் அடிப்படை உரிமைகளைப் (LGBT  உரிமைகள்) பாதுகாக்க முனையிறம் என்று சொன்னாலும்.. எல்லாத் தளங்களிலும்.. இந்த ஒத்தபால் கவர்ச்சி உறவுமுறைக்கு எதிரான இயல்பான மனநிலை உண்டு.

அண்மையில் கூட இத்தகைய ஒத்தபால் பெண் தம்பதியை லண்டனில் பஸ்ஸில் வைச்சு மொத்து மொத்தென்று மொத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.. எல்லாம் பதின்ம வயதினர். 

ஆக.. இந்த இயற்கைக்கு முரணான.. உதவாத.. உறவுமுறைக்கு எதிரான சிந்தனை என்பது இயல்பானதே.. அதை தமிழ் சமூகமல்ல.. உலகில் உள்ள எல்லா இனங்குழுமத்திலும் காணலாம். இதை நீங்கள் தமிழ் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டா முன்வைப்பது என்பது.. சொந்த சமூகத்தை குறையுணர் கண்ணோட்டத்தில் கண்ட ஒரு வகை வெறுப்புணர்வின் மிகுதி என்று தான் சொல்லனும். ஒருவேளை சொந்த சமூகத்தை விட அடுத்த சமூகங்களை உன்னிப்பாக அவதானிக்க முடியாததும் காரணமாக இருக்கலாம். 

நெடுக்கர், மூன்று நான்கு பதின்ம வயதினர் சேர்ந்து பஸ்ஸில் வைத்து தம் பாட்டில் இருந்த ஒர் பாலின இணைகளை (அவர்களில் ஒருவர் மருத்துவர்) தாக்கியதை கிருமினல் தாக்குதலாக அல்லவா பார்க்க வேண்டும்? இதெல்லாம், பெரும்பான்மை மக்களின் நியாயமான அதிருப்தி வெளிப்பாடாகவா நீங்கள் பார்க்கிறீர்கள்? பெரும்பான்மையின் வன்முறைக்குப் பயந்து ஒதுங்கி அவர்கள் தம் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டுமென்கிறீர்களா? 

மேலும், இங்கிலாந்தில் பாடத்திட்டத்தில் ஒரு பாலுறவைப் பற்றிய பகுதிகளை அனுமதிக்க விடாமல் தடுத்ததில் பெரும்பங்கு குடியேறிகளான ஆசியர்கள் , முஸ்லிம்களுக்கு இருந்ததாக செய்திகளில் அறிந்தேன்.   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சில கனக்க படித்த  மேதாவிக்கூட்டங்கள் இங்கே யதார்த்த கருத்து சொல்பவர்களை புலம்பெயர்ந்தும் இன்னும் திருந்தாத தமிழர்கள் என்று வழிமொழிய ஆரம்பித்து விட்டனர்.

நன்று.....

உலக நாடுகளில் எத்தனை நாடுகளில் ஓரின சேர்க்கை முறையை அனுமதிக்கின்றார்கள் என்பதை மேதாவிகள் கவனிக்கவில்லை போலும்....தமிழர்களாகிய நாம் ஏதாவது சொன்னால்  ஆசாரவாதிகள் என மகுடம் சூட்டிவிடுவார்கள்.சுருக்கமாக சொன்னால்  ஒரினசேர்க்கையை அனுமதிக்காத நாடுகள் முட்டாள் நாடுகள்.

 இதுக்கெல்லாம் ரஷ்ய பிரதமர் புட்டின் தான் சரி......ஒட விட்டு பின்னாலை இரண்டு போட...😁

குமாரசாமி ஐயா, உங்களைப் போன்ற ஆசாரவாதிகள் ஏன் தாராளவாத சிந்தனை இல்லாதுஅ ஜனநாயகம் இல்லாத புட்டினின் ரஷ்யா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழமுடியவில்லை?

மேற்குநாடுகள் எல்லோரையும் தன்பாலீர்ப்பாளர்களாக மாறுங்கள் என்று கேட்கவில்லை. அவர்களும் 50-60 வருடங்களுக்கு முன்னர் மின்சார அதிர்ச்சி கொடுத்து தன்பாலீர்ப்பை மாற்றமுனைந்தவர்கள்தான். ஆனால் விஞ்ஞான ரீதியில் விளக்கங்கள் கிடைத்தபோது தன்பாலீர்ப்பாளர்களை சிறுபான்மையினராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இங்கு நிறுவனங்களில் வேலை செய்யபவர்களுக்கு சரியான பயிற்சிகளைக்கொடுத்து இப்படியான தன்பாலீர்ப்பாளரையும், பிற spectrum களில் உள்ளவர்களையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கின்றார்கள்.

பி.கு. தன்பாலீர்ப்பாளர்களை மதித்தாலும், gay bar க்கு போவதில்லை. 😌

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

ஆக.. இந்த இயற்கைக்கு முரணான.. உதவாத.. உறவுமுறைக்கு எதிரான சிந்தனை என்பது இயல்பானதே.. அதை தமிழ் சமூகமல்ல.. உலகில் உள்ள எல்லா இனங்குழுமத்திலும் காணலாம். இதை நீங்கள் தமிழ் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டா முன்வைப்பது என்பது.. சொந்த சமூகத்தை குறையுணர் கண்ணோட்டத்தில் கண்ட ஒரு வகை வெறுப்புணர்வின் மிகுதி என்று தான் சொல்லனும். ஒருவேளை சொந்த சமூகத்தை விட அடுத்த சமூகங்களை உன்னிப்பாக அவதானிக்க முடியாததும் காரணமாக இருக்கலாம். 

சமூகத்தில் பிற்போக்கான கருத்துக்கள் உள்ளவர்கள் எங்கும் உள்ளனர். போன வாரம் பார்க் ஒன்றில் என் கண் முன்னாலே சில பதின்ம வெள்ளைச் சிறுமிகள், இரண்டு வெள்ளைச் சிறுவர்களை poof என்று கேலி செய்தார்கள். அவர்களும் பதிலுக்கு இங்கு எழுதமுடியாத சொல்லால் வசைபாடினார்கள்.  அதற்காக அப்படியான பிற்போக்கு குணம் சரியென்று சொல்லமுடியுமா?

தமிழர்கள் மூடுண்ட சமூகமாக உள்ளொடுங்கி இருப்பதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆசாரவாதிகளாக இருக்கின்றனர். ஆனால் அவர்களின் சந்ததி அப்படி இருக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

நெடுக்கர், மூன்று நான்கு பதின்ம வயதினர் சேர்ந்து பஸ்ஸில் வைத்து தம் பாட்டில் இருந்த ஒர் பாலின இணைகளை (அவர்களில் ஒருவர் மருத்துவர்) தாக்கியதை கிருமினல் தாக்குதலாக அல்லவா பார்க்க வேண்டும்? இதெல்லாம், பெரும்பான்மை மக்களின் நியாயமான அதிருப்தி வெளிப்பாடாகவா நீங்கள் பார்க்கிறீர்கள்? பெரும்பான்மையின் வன்முறைக்குப் பயந்து ஒதுங்கி அவர்கள் தம் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டுமென்கிறீர்களா? 

மேலும், இங்கிலாந்தில் பாடத்திட்டத்தில் ஒரு பாலுறவைப் பற்றிய பகுதிகளை அனுமதிக்க விடாமல் தடுத்ததில் பெரும்பங்கு குடியேறிகளான ஆசியர்கள் , முஸ்லிம்களுக்கு இருந்ததாக செய்திகளில் அறிந்தேன்.   

அது பதியப்பட்ட சம்பவமானதால்.. செய்தியாகி வெளில வந்ததால்.. தெரியுது. ஆனால் சமூகத்தின் எல்லாம் மட்டங்களிலும்..இந்த ஒத்தபால் கவர்ச்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வு உள்ளதால் தான்.. அரசு இதற்கு மிணக்கட்டு.. காசு செலவழிச்சு பிரச்சாரங்களை கடும் சட்ட அமுலாக்கங்களை செய்ய முனைகிறது. ஆனால்.. அது அவ்வளவு இலகு இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். மனிதர்கள் என்ற வகையில்.. ஒத்தபால் கவர்ச்சினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால்.. மக்கள் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. கண்டும் காணாமல் இருப்போர் தான் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எல்லாத்துக்கும் மேலால்,  ஓரினச் உறவில், எதை எப்படி செய்கிறார்கள் என்ற சுருக்கம் எனக்கு அறிய ஆவல்.

இதற்கென தனியான தளங்கள் இருக்கின்றன. அங்கு போனால் போதிய விளக்கம் கிட்டும்😊

Lesbian ஆக இருப்பவர்கள் ஆண்களுடனான பாலியல் உறவில் விருப்பம் அற்றவர்கள் என்ற சுருக்கமான புரிதல் இருந்தாலே போதும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

குமாரசாமி ஐயா, உங்களைப் போன்ற ஆசாரவாதிகள் ஏன் தாராளவாத சிந்தனை இல்லாதுஅ ஜனநாயகம் இல்லாத புட்டினின் ரஷ்யா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழமுடியவில்லை?

இதை நான் பல விடயங்களில் அவரிடம் கேட்பேன்! இன்னும் சிலர் பேசும் விடயங்கள் வடகொரியா சிஸ்ரத்தை விரும்புகிறார்கள் போலக் காட்டும்! இந்த hypocrisy ஐ சுட்டிக்காட்டுவதால் தான் நான் "மரியாதையாகப் பேசாத" ஆளாகி விட்டேன்!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

தமிழர்கள் மூடுண்ட சமூகமாக உள்ளொடுங்கி இருப்பதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளமுடியாத ஆசாரவாதிகளாக இருக்கின்றனர். ஆனால் அவர்களின் சந்ததி அப்படி இருக்கப்போவதில்லை.

நீங்கள் இப்படியே கற்பனை செய்துகிட்டு இருங்கோ. வெளிநாட்டு தமிழ் சந்ததி ஒன்றும் ஏலியன் உலகில் இல்லை. இந்த உலகில் தான் இருக்கினம். அவர்களின் பள்ளிகளில்.. அடிப்படை கேலி செய்தலே.. இந்த அடிப்படையில் தான் அதிகம் இருக்குது. ஒரு தடவை பள்ளி பஸ்ஸில் பயணிச்சு கவனமாக அவதானிச்சுப் பாருங்கள்.. என்ன நடக்குது என்று தெரியும்.

எடுத்ததிற்கும் தமிழ் சமூகத்தை குறை சொல்வது ஏற்புடையதல்ல. மேலும்.. இந்த ஒரு பால் கவர்ச்சி ஆக்கள்.. அந்தக் காலத்தில் வேம்படியில் கூட இருந்திருக்கினம். அப்படி இருந்த ஒரு அதிபர் பற்றிக் கூட கதைகள் உண்டு. அதற்காக.. தமிழ் சமூகம் அவரை வெறுக்கவில்லை.. மாறாக கண்டுகொள்ளவில்லை. அவ்வளவும் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஓரின சேர்க்கையாளர்களான பெண்கள் பதின்ம வயதினரால் தாக்கப்பட்ட சம்பவம் அவர்களின் ஓரு பாலின உறவு முறையின் மீதான வெறுப்பினால் அல்ல, அவர்களை முத்தமிடுமாறு கேட்டு அதில் கிளுகிளுப்பு அடைய நினைத்த முயற்சியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பதே செய்தி.

அப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் தெரசா மே அவர்கள் இந்த சம்பவம் பற்றி சொன்னது. 

"Nobody should ever have to hide who they are or who they love and we must work together to eradicate unacceptable violence towards the LGBT community."

நீங்கள் நேசிப்பவரை மறைக்கவேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

UK LGBT Hate Crimes Stats Make Shocking Reading.

New hate crimes data for the United Kingdom shows a shocking number of incidents targeting LGBT people. As I was reading these figures, the need for LGBT-inclusive classes in UK schools has never been more apparent.

The data, released last week, shows police recorded 14,491 crimes committed against people because of their sexual orientation in 2018-19.

https://www.hrw.org/news/2019/10/23/uk-lgbt-hate-crimes-stats-make-shocking-reading

எதை தான் சொல்லி சமாளிக்க முனைந்தாலும்... உண்மையை ஏற்றுக் கொள்வது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

முன்பெல்லாம்  இவ்வாறான  திரிகளில்  ஆமாங்கடா 

இதில்  அதற்கு  சார்பாக எழுதுபவர்கள்  எல்லோரும் அந்த  மாதிரி  தானே  என்று  கடந்து  செல்வது  வழக்கம்

இப்ப  கொஞ்சம்  காது  கொடுத்து கேட்கத்தொடங்கியபின் ரொம்ப  வதை  படவேண்டி  இருக்கு.😭

அண்ணா,

மாற்றம் ஒன்றே மாறாதது. ஒரு காலத்தில் ஓரின சேர்க்கையாளர்களை கட்டி வைத்து வெளுக்க வேண்டும் என கூறித்திரிந்த ஆள் நான். 

தன்பாலின ஈர்ப்புடையோருக்கு எமக்கு உரிய அதே கலாச்சரத்தின், மதத்தின், இனத்தின் மீதான பற்று இருக்கலாம் என ஏற்க மறுப்பதும், அவர்கள் ஓடி ஒளிந்து, சுயத்தை தொலைத்து வாழவேண்டும் என எதிர்பார்ப்பது, மத, கலாச்சார அனுஸ்டந்னங்களை அவர்கள் செய்தல் ஆகாது என்பதும் கூட இனவாதம், மதவாதம் போல ஒரு வகை prejudice (இதுக்கு தமிழ் தெரியவில்லை - தெரிந்தவர் கூறவும்)தான்.

சொல்லப்போனால் இது அவர்களை மனிதர் அற்றோர் ஆக்கும் செயல் (dehumanizing).  

ஆனால் பத்தாவது பக்கம் வரை இப்படி எழுதுபவர் எல்லாம் அப்படித்தான் என கடந்து போகாமல் நீங்கள் கருத்து பரிமாறி வந்ததே உங்கள் கருத்தில் பரிணாம வளர்சி ஏற்பட்டதையே காட்டுகிறதாக நான் கருதுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Ontarioவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (September 26) ஒருபாலின திருமணம் ஒன்றை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக கனடா இந்து குருமார் ஒன்றியம் நேற்று (வெள்ளி - October 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
May be an image of text
 
இந்து குருமார் ஒன்றியம் என்ன பதில் சொல்லப் போகிறது......சொல்ல வேண்டும் என்று தான் அன்று  வானொலி ஒன்றில் ஒரு அம்மா கேட்டு இருந்தார் அதற்கான பதில் ....
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

எல்லாத்துக்கும் மேலால்,  ஓரினச் உறவில், எதை எப்படி செய்கிறார்கள் என்ற சுருக்கம் எனக்கு அறிய ஆவல்.

ஆண்களை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது; sodomite. 

பெண்கள்? 

scissors பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அனால் அது எப்படி திருப்திபடுத்தும்?

விரல்கள் அல்லது முட்டியை பாவித்து. அனால், இது ஆன் பெண் கலவியிலும்  நடப்பது. 

ஏனெனில், கலவியில் சகிப்புக்கு சவால் ஆக இருக்கும் வலி உணர்வு, உச்சம் அடையும் போது திருப்தியாகிறது. 

இப்போதும் பூனை இந மிருகங்களில் ஆன் குறியின் தலையில் (penile glans) காது சோணையை விட கடினமான கசியிழைத்தல் உருவாகி இருக்கும்   முட்கள் போல இருப்பது, மனித இன ஆணின்  குறியின் தலையில் (penile glans) இருந்து,  genetic mutation ஆல் இல்லாமல் போய்விட்டது.

அனால் மனிதன் அதை விடவில்லை, செயற்கை ஆண்குறியின் பலவற்றில் தலைப்பகுதியில் முட்கள் போல துருத்தி இருக்கும் உருவத்தில் அமைக்கப்படுகிறது.

பூனை இந மிருகங்களில், ஆன் மிருகம் குறியை வெளியே எடுக்கும் பொது யோனியின் சுவர்களில் கீறுவது (அப்போதே பெண் மிருகம் சினப்பதும்), பெண் மிருகம்  முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது. 
   
பொதுவாக கலவியில் ஏற்படும் வலி, அதன் மூலமான உச்சம், பெண் முட்டையை வெளியேற்றுவதற்கு தூண்டுதலாக இருப்பது.  

அதாவது, lesbians கலவியில் வலி இல்லை. அனால் உச்சமடைலயும், திருப்தியும் இருப்பதாக உணர்கிறர்கள் (முட்டையை வெளியேவது) புரியாத புதிர்.  

அனால், lesbians க்கும் அதை விளங்கப்படுத்த முடியவில்லை. 

கடஞ்சா,

ஜஸ்டின் அண்ணா உயிரியல் விளக்கம் தந்துள்ளார் (அதில் எனக்கு சிலது விளங்கவில்லை என்பது வேறு விடயம்🤣).

ஆனால் நீங்கள் sex ஐயும் sexual orientation ஐயும் குழப்பிகொள்வதாக படுகிறது.

A person’s sexual attraction to other people, or lack thereof. Along with romantic orientation, this forms a person’s orientation identity.

Stonewall uses the term ‘orientation’ as an umbrella term covering sexual and romantic orientations.

லெஸ்பியனாக இருப்பவர்கள் கட்டாயம் செக்ஸில் ஈடுபடவேண்டும் என்றோ, அதில் இன்பம்/துன்பம் துய்க்க வேண்டும் என்றோ கூட இல்லை.

மாற்றுபாலினத்தவரை விரும்பும் எம்மை போலவே அவர்களுக்கும் இன்னொரு மனிதர் மீதான ஈர்ப்பானது both physical and emotional. இதில் இரெண்டும் இரு லெஸ்பியன்களிடையே இருக்கலாம், அல்லது ஒன்று மட்டும் இருக்கலாம்.

Asexual என்ற பாலின உணர்வே இல்லாதவர்கள் கூட கே, லெஸ்பியனாக தம்மை உணரலாம்.

அவர்கள் இன்பம் எப்படி துய்கிறார்கள் என்பதை இங்கே எழுதுவது சரியாக படவில்லை, கீழே உள்ள இணைப்பு லெஸ்பியன்கள் பற்றிய கற்பிதங்கள், preconceptions, misconceptions விளக்கமாக உடைக்கிறது.

இன்னொன்றையும் கவனியுங்கள். ஆணும் பெண்ணும் கூடி உள்ள உறவுகள் கூட, கலவியின்பம் மிக குறைவான, அல்லது அறவே அற்ற ஆனால் அந்நியோனமான உறவுகள் உள்ளன. அதை வைத்து அவர்களின் heterosexual orientation ஐ கேள்வி கேட்க முடியாதல்லவா?

https://www.healthline.com/health/healthy-sex/how-do-lesbians-have-sex

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, யாயினி said:
Ontarioவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (September 26) ஒருபாலின திருமணம் ஒன்றை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக கனடா இந்து குருமார் ஒன்றியம் நேற்று (வெள்ளி - October 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
May be an image of text
 
இந்து குருமார் ஒன்றியம் என்ன பதில் சொல்லப் போகிறது......சொல்ல வேண்டும் என்று தான் அன்று  வானொலி ஒன்றில் ஒரு அம்மா கேட்டு இருந்தார் அதற்கான பதில் ....
 
தகவலுக்கு நன்றி யாயினி.

இது எதிர்பார்ததுதான். இஸ்லாம், கத்தோலிக்கம் போன்றவை முழுதாக தடை செய்தமை. அங்கிலிக்கன் சபையை இந்த விடயம் இரு கூறாக்கியது என ஏனைய மதங்களில் முன்னமே எழுந்த சர்ச்சைதான். இப்போ இலங்கை தமிழ் இந்துக்களிடம் வந்துள்ளது.

All men (note not women🤣) are created equal என்று சபதம் இட்டு எழுந்த அமெரிக்க புரட்சியே, கறுப்பர்களை மனிதற்களாக ஏற்க கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியது. 

இது பேசு பொருளாகியதே ஒரு முன்னேற்றம்தான். 

#எறும்பூர கல்தேயும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.