Jump to content

பாவற்கொடியும் நானும்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம்  எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே  என்று அண்ணா பின்வாங்க, ஒரு வாழ்த்துமடலினுள் வைத்து அனுப்புமாறு ஆலோசனை கூறினேன்.  ஒரு வாரம் வரும் வரும் என்று பார்க்க இரு வாரங்களின் பின் வந்து சேர்ந்தது வாழ்த்துமடல். வாழ்த்து மடலை பார்த்தபோதே எனக்கு விளங்கீட்டுது அண்ணாவின் நப்பித்தனம். ஆறு பாகல் விதைகள், ஆறு புடோல். அதில் மூன்று கட்டைப் புடோல் மற்றையது நீளமானது என்றும் எழுதியிருக்க, சரி இதாவது வந்ததே என்று மகிழ்வோடு கடைக்காரரிடம் மரக்கறிகள் வரும் சிறிய regiform பெட்டிகளை வாங்கி வந்து அதற்குள் சிறிய சாடிக்களில் உரம் போட்டு விதைகளை நாட்டாச்சு.மேலே இன்னொரு மூடியால் மூடியும்  ஆச்சு.  ஒரு மாதமா ஒரு அசுமாத்தமும் இல்லை.  மே மாதம் முளைத்து நான்கு இலைகள் தெரிய அதை எங்கே நடுவது,  எப்பிடிப் பந்தல் போடுவது என்று ஒரே கற்பனை. வழமைபோல ஏற்கனவே தோட்டம் எல்லாம் காடாக்  கிடக்கு. உது எதுக்கு என்று மனிசன் தொடங்கியாச்சு. 

ஜெகதீஸ் அண்ணா என்று ஒருவர் வீட்டுத் தோட்டத்தில்  பாவல் நட்டு ஒரே காய்தாய். அந்த வீடியோ பார்த்த நான் அவருடன் தொடர்புகொண்டு அவரின் கொடிகளைப் பற்றி நலம் விசாரித்துவிட்டு என் பாவல் புடோல் பற்றி விபரம் சொன்னேன். இப்போதைக்கு வெளியே வையாதை பிள்ளை. ஜூன் மாதம் வெயில் வந்தால் தான் மரம் எழும்பும் என்றார். எனக்கோ கொடிகள் வளர வளர எப்படி வீட்டுக்குள் வைப்பது என்று எண்ணி எனது conservetry  உள் கொண்டுசென்று வைத்தேன். மே மாதக் கடைசியில் சாடையாய் வெயில் எறிக்க நல்ல பெரிய சாடிகளில் நல்ல உரம்போட்டு கன்றுகளை இடம் மாற்ற கிட்டத்தட்ட ஒரு மீற்றர் வரை கன்றுகள் வளர்ந்து புடோலிலும் பாகலிலும் பூக்களும் பூக்கத் தொடங்க எனக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ஒரு வாரம் போக இழைகள் எல்லாம் சுருண்டு சுருண்டு என்ன என்று பார்த்தால் ஒரே எறும்புகள். இந்த ஆண்டுபோல் என தோட்டத்தில் எறும்புகள் வந்ததே இல்லை. பல இடங்களில் எறும்பு. எதற்கும் அந்த அண்ணாவிடமே கேட்போம் என்று போன் செய்ய அவர் ஒரு ஸ்பிறே ஒன்றைப் பரிந்துரைக்க கடைகளில் தேடினால் இல்லை.  ஒருவாறு  ஒன்லைனில் ஒன்றுக்கு மூன்றாய் எறும்புக்கு ஸ்பிறே ஓடர் செய்து அடுத்த நாள் வந்ததும் ஆசை தீர சாடிக்களின் மேலே கீழே இலைகளில் எல்லாம் நன்றாக அடித்து இனிமேல் இந்தப் பக்கம் எப்பிடித் தலை வைத்துப் படுக்கிறீர்கள் என்று எண்ணியபடி நல்ல நின்மதியான தூக்கம்.

அடுத்தநாள் காலை நல்ல வெயிலைக் கண்ட சந்தோசத்தில் தேனீரும் பருக்காமல் தோட்டத்துக்குப் போனால் நெஞ்செல்லாம் அடைச்சுப் போச்சு. அத்தனை கொடிகளும் எரிஞ்சுபோய்க் கிடக்கு. உடன அந்த அண்ணாவுக்கு போன் செய்தால், என்ன தங்கச்சி அடியில கொஞ்சம் அடிக்கிறதுக்கு இலைக்கு ஏன் அடிச்சியள் என்கிறார். அவரைத் திட்டவும் முடியாமல் மனிசனுக்கு போன் செய்து விடயத்தைச் சொல்ல, ஊரிலையே எரும்புக்கு பவுடர் தான் போடுறது. சரி இனி என்ன செய்யிறது. இண்டைக்கு வெயில் தானே தண்ணியை நல்லா விட்டுவிடு என்று சொல்ல..................... என்ன சொல்லி என்ன திரும்ப ஒரு குருத்துக் கூட வரேல்லை.  இனி என்ன செய்யிறது. அடுத்த ஆண்டு பார்ப்பம் என்று எண்ணியிருக்க, முளைக்காமல்  இருந்த ஒரு புடல் ஒரு சாடியில் இருந்து முளைத்துவர  இன்னொரு சாடியில் ஒரு பாகலும் முளைக்க என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இப்ப சீசன் தப்பி முளைத்து என்ன பயன். பிஞ்சுகள் எல்லாம் பழுத்துப் பழுத்து கொட்ட எனது கண்ணாடி அறையுள் அவர்களைக் கொண்டு வந்தாச்சு. சந்தோஷமா அவை படர்ந்தாலும், பிஞ்சு  பெருக்குமா காய்க்குமா என்ற சந்தேகம் எனக்கு. LED lights வாங்கிப் போடலாமா என்று எண்ண, அது கூடாது. எமக்கு  பார்வைக் கோளாறை உண்டாக்கும் என்கிறாள் மகள். யாராவது அதுபற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்கள். 

 • Like 8
 • Haha 1
Link to comment
Share on other sites

சுமே,

LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

சுமே,

LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.

இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் வரை பொறுக்க மாட்டியளோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

அந்த விவசயிகளை தேடிக்கொண்டு இருக்கிறன்  பாஸ் .

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.

தெரியவில்லை அண்ணா. ஆனால் என் வீட்டில் இருந்த சாதாரண மின்குமிழ்கள் அனைத்தையும் LED இற்கு மாற்றிக் கொண்டு வருகின்றேன். இதில் LED soft white இல் இருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு மிகவும் இதமாகவும் மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கின்றது. அத்துடன் மின்சார சக்தியை பெருமளவு சேமிக்க உதவுவதால் அரசும் இதை ஊக்குவிக்கின்றது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

சுமே,

LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.

வளர்க்கின்றதுதான். ஆனால் அவை மனிதர்களைப் பாதிப்பதாகவும் கூறுகிறார்கள்.

21 hours ago, பெருமாள் said:

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

சிலவேளை நீங்கள் வாங்கியது கறிவேப்பிலை போல இருக்கும் மற்ற மரமோ ???

21 hours ago, குமாரசாமி said:

இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.

கண்களுக்கும் தோலுக்கும் ஒவ்வாமை ஏற்படும் என்று இணையத்தில் இருக்கு.

15 hours ago, புங்கையூரன் said:

ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

அவை எந்த லைட் பாவிக்கினம் எண்டு கேட்டுப் பாருங்கோ😀

9 hours ago, Paanch said:

வெயில் நாடுகளில் வளர்ப்பது வேறு இங்கு வேறு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

தெரியவில்லை அண்ணா. ஆனால் என் வீட்டில் இருந்த சாதாரண மின்குமிழ்கள் அனைத்தையும் LED இற்கு மாற்றிக் கொண்டு வருகின்றேன். இதில் LED soft white இல் இருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு மிகவும் இதமாகவும் மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கின்றது. அத்துடன் மின்சார சக்தியை பெருமளவு சேமிக்க உதவுவதால் அரசும் இதை ஊக்குவிக்கின்றது.

நாங்களும் வீட்டில் எல்லாம் LED தான். அதன் வெப்பம் கன்றுகளுக்கு அதிகம். அதனால் பாதிப்பு இல்லை என்றே கூறுகின்றனர்.

21 hours ago, பெருமாள் said:

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

நீங்கள் வாங்கியது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நான் கீழே உள்ளதை ஓடர் செய்து இன்றுதான் வந்திருக்கு.

https://www.amazon.co.uk/Indoor-Plants-Spectrum-Inches-Greenhouse/dp/B07PKSG12N/ref=sr_1_54?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632948195&sr=8-54

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சூரிய வெளிச்சத்தில் இருந்து தாவரங்களுக்கு தேவையான ஒளியின் பகுதி மனித கண்ணுக்கு தெரியும் ஒளியின் பகுதிக்குள் தான் அடங்குகிறது. ஆனால் பல தாவரங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் உள்ள பச்சை நிறம் மட்டும்  தேவையில்லை என்பதால் அதை வந்தவழியே(?) விட்டு விடுகிறது. அதனால்தான் தாவரங்கள் பார்வைக்கு பச்சையாக தெரிகின்றன.

கண்ணாடி வீட்டுக்குள் செல்லும்போது அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசினால் குளுகுளு கண்ணாடி அணிந்து கொள்ளவும். வீட்டு பாவனைக்கு தயாரிக்கப்பட்ட LED lights பயன்படுத்துவதால் மனிதருக்கு தாக்கமில்லை. கண்ணுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்குகளை வீட்டு பாவனைக்கு என விற்பனை செய்யப்படுவதில்லை.

தாவரங்கள் வளர்ப்பதற்கு மின் விளக்குகள் வாங்கும்போது சூரியவெளிச்சத்துக்கு ஒப்பானதான வெளிச்சம் அதிலிருந்து வருமா என்பதை நிச்சயப்படுத்திகொள்ளவும். பொதுவாக நிற வெப்பநிலை 6500K (கெல்வின்) கொண்ட குழாய் விளக்குகளை (tube lights) பயன்படுத்தி மரங்களை வளர்ந்த பின் அவை பூக்கும் பருவத்தில் 2000 K - 3000 K வெளிச்சம் தரும் வேறு குழாய் விளக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

கண்ணாடி வீட்டின் நிலப்பரப்பில் ஒவ்வொரு  சதுர மீற்றருக்கும் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் 36W வலுவுள்ள 6500 K  குழாய் விளக்குகளை பயன்படுத்தவும். உதவிக்கு வேண்டுமானால் grow lights (LED tube lights) பயன்படுத்தவும். இவை தாவரங்களுக்கு முக்கிய தேவையான சிவப்பு (அலைநீளம் 650-670 nanometer ) மற்றும் நீலம் (அலைநீளம் 430-450 nanometer ) ஆகிய இரு நிறங்களை மட்டும் வெளிப்படுத்தும்.

பொதுவாக தோட்டத் தாவரங்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் ஆலோசனையும் உதவியும்  பெற்றுக் கொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பனி நிறைந்த நாட்டில் வீட்டுத்தோட்டம் செய்து அசத்தும் புலம்பெயர் தம்பதியினர் !

IMG-20210928-WA0406-1140x620.jpg

புலம்பெயர் தமிழ் மக்கள் நாட்டை ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து   சென்றாலும் தமது அடையாங்களையும்  தமது பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும்  வாழ்ந்து  வருகின்றனர்

IMG-20210928-WA0405-225x300.jpg

அவ்வாறே பனிமலை கொண்ட கனடா நாட்டில்  ரொறன்டோ  நகரில் வாழும் குறித்த தம்பதியினர்  அங்கு  நமது  ஊரைப்போன்றே வீட்டு தோட்டத்தில்  பாகற்காய்  செய்கையை செய்து பலரின்  கவனித்தினை ஈர்த்ததுள்ளதுடன்  இவர்களின் இந்த முயற்சி  சமூக வலைதளங்களில் தற்போது  பெரிதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது

https://tamonews.com/news/46519/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2021 at 03:51, ஈழப்பிரியன் said:

அடுத்த வருடம் வரை பொறுக்க மாட்டியளோ?

அந்தப் பொறுமை இருந்தால் எங்கேயோ போயிருப்பனே.

20 hours ago, பெருமாள் said:

பனி நிறைந்த நாட்டில் வீட்டுத்தோட்டம் செய்து அசத்தும் புலம்பெயர் தம்பதியினர் !

புலம்பெயர் தமிழ் மக்கள் நாட்டை ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து   சென்றாலும் தமது அடையாங்களையும்  தமது பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும்  வாழ்ந்து  வருகின்றனர்

அவ்வாறே பனிமலை கொண்ட கனடா நாட்டில்  ரொறன்டோ  நகரில் வாழும் குறித்த தம்பதியினர்  அங்கு  நமது  ஊரைப்போன்றே வீட்டு தோட்டத்தில்  பாகற்காய்  செய்கையை செய்து பலரின்  கவனித்தினை ஈர்த்ததுள்ளதுடன்  இவர்களின் இந்த முயற்சி  சமூக வலைதளங்களில் தற்போது  பெரிதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது

https://tamonews.com/news/46519/

கனடாவில் நிலமை வேறு. அங்கு குளிர் போன்றே வெப்பமும் அதிகம். எனவே எல்லாம் செழிப்பாக வருகின்றன. லண்டனில் இரண்டும் கெட்டான் நிலை.

22 hours ago, vanangaamudi said:

சூரிய வெளிச்சத்தில் இருந்து தாவரங்களுக்கு தேவையான ஒளியின் பகுதி மனித கண்ணுக்கு தெரியும் ஒளியின் பகுதிக்குள் தான் அடங்குகிறது. ஆனால் பல தாவரங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் உள்ள பச்சை நிறம் மட்டும்  தேவையில்லை என்பதால் அதை வந்தவழியே(?) விட்டு விடுகிறது. அதனால்தான் தாவரங்கள் பார்வைக்கு பச்சையாக தெரிகின்றன.

கண்ணாடி வீட்டுக்குள் செல்லும்போது அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசினால் குளுகுளு கண்ணாடி அணிந்து கொள்ளவும். வீட்டு பாவனைக்கு தயாரிக்கப்பட்ட LED lights பயன்படுத்துவதால் மனிதருக்கு தாக்கமில்லை. கண்ணுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்குகளை வீட்டு பாவனைக்கு என விற்பனை செய்யப்படுவதில்லை.

தாவரங்கள் வளர்ப்பதற்கு மின் விளக்குகள் வாங்கும்போது சூரியவெளிச்சத்துக்கு ஒப்பானதான வெளிச்சம் அதிலிருந்து வருமா என்பதை நிச்சயப்படுத்திகொள்ளவும். பொதுவாக நிற வெப்பநிலை 6500K (கெல்வின்) கொண்ட குழாய் விளக்குகளை (tube lights) பயன்படுத்தி மரங்களை வளர்ந்த பின் அவை பூக்கும் பருவத்தில் 2000 K - 3000 K வெளிச்சம் தரும் வேறு குழாய் விளக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

கண்ணாடி வீட்டின் நிலப்பரப்பில் ஒவ்வொரு  சதுர மீற்றருக்கும் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் 36W வலுவுள்ள 6500 K  குழாய் விளக்குகளை பயன்படுத்தவும். உதவிக்கு வேண்டுமானால் grow lights (LED tube lights) பயன்படுத்தவும். இவை தாவரங்களுக்கு முக்கிய தேவையான சிவப்பு (அலைநீளம் 650-670 nanometer ) மற்றும் நீலம் (அலைநீளம் 430-450 nanometer ) ஆகிய இரு நிறங்களை மட்டும் வெளிப்படுத்தும்.

பொதுவாக தோட்டத் தாவரங்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் ஆலோசனையும் உதவியும்  பெற்றுக் கொள்ள முடியும்.

மிக்க நன்றி வணங்கா முடி. நான் வாங்கிய மின் விளக்குகள் சூரிய ஒளிக்கு ஒப்பானவை என்றுதான் போட்டிருந்தது. ஆனால் review வில் காண்பார்வைக்குச் சேதம் வரலாம் என்று போட்டிருந்தனர். அதுதான் .. .. ஒரே குழப்பம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு! புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று (வியாழக்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திறன்களை நிரூபிக்கும் வகையில் பல புதிய உள்நாட்டு அமைப்புகளை இந்த ஏவுகணை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏவுகணையானது இந்தியா-ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     https://athavannews.com/2022/1262888  
  • இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையிலேயே இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பதிவில் இரா.சாணக்கியன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனை மேற்கொள்ளுமாறும் இரா.சாணக்கியன் கோரியுள்ளார்     https://athavannews.com/2022/1262902  
  • சர்ச்சைக்குரிய கட்டுவான் – மயிலிட்டி வீதி – கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இராணுவம்!     யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதிவிடுவிக்கப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு , கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவான் – மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக காணப்படுகிறது. குறித்த 400 மீற்றர் நீளமான வீதியினை விடுவிக்க பல்வேறு கால கட்டங்களில் , பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை முன்னெடுத்து வந்திருந்தனர். அந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் , குறித்த வீதி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஆராயுமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாக்கு உத்தரவிட்டு இருந்தார். அதனை  குறித்த வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி , தனியார் காணிகளை ஆக்கிரமித்து அதனூடாக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அது தொடர்பில் அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இதேவேளை “1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு முன்னர் இருந்த வீதியை போல தற்போது முழுமையாக விடுவிப்பதுக்கு 25 மீற்றர் பின்நகர்த்தவேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டால் தற்போதைய நிலையில் இதற்கு சாத்தியமில்லாத தன்மையே அங்கு காணப்படுகின்றது. அதாவது, கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் சர்ச்சைக்குள்ள பகுதியின் கிழக்கு புறமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்புறமாக விமானப்படையின் முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்னால் விமான நிலையத்தின் சுற்று மண் அணை உள்ளது. இவ்வாறான நிலையில் 25 மீற்றர் தூரத்துக்கு வேலியை பின்நகர்த்துவதாயின் விமான நிலைய மண் அணை உள்ள பகுதியிலேயே வேலி நகர்த்த வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனையின் அடிப்படையில் இவ்விடயம் சாத்தியப்படாத நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 6 மீற்றர் வரை பாதுகாப்பு வேலியை பின்நகர்த்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ” என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்நிலையில் விடுவிக்கப்படுவதாக கூறப்படும் 400 மீற்றர் நீளமான வீதி தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில் , குறித்த பகுதியில் வீதி அமைக்கும் பணிகளுக்கான செப்பனிடல் பணிகளை இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அப்பகுதிக்கு செல்வோரை இராணுவத்தினர் ,இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். அத்துடன் புலனாய்வு பிரிவினர் அங்கு செல்வோரின் வாகன இலக்கங்கள் , உள்ளிட்டவற்றை பதிவு செய்து வருகின்றனர். அதேவேளை , வீதி செப்பனிடல் பணிகள் உள்ளிட்டவற்றை புகைப்படங்கள் எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களுக்கு மத்தியிலையே சர்ச்சைக்கு உரிய 400 மீற்றர் தூரமான வீதி விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.         https://athavannews.com/2022/1262896
  • தமிழரின் கவலைகளே இவர்கள்தான். கள்ளனிடம் நிஞாயம் கேட்பவருண்டோ? அதிலும் இதுகள் யாரிடம் எடுத்தார்களோ அவர்களை கள்ளர் ஆக்கும்போது கேட்க முடியுமோ? இவருக்கு குசும்பு கூடிபோய்ச்சு. தமிழரின் கவலை என்னவென்று தெரியாதவர், சொன்னால் மட்டும் விளங்கிவிடும்.
  • பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரினார் ஜனாதிபதி பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார். அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றும் போதே, அமைச்சர் தாரிக் அஹமட் இதனைத் தெரிவித்தார். தெற்காசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் சார்ந்த பொறுப்புகள், லோர்ட் தாரிக் அஹமட்டிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்திவலுத் துறையின் இலக்குகளை அடைவதற்கும் தொழில்நுட்பம்சார் தடைகளை வெற்றிகொள்வதற்கும் உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த லோர்ட் அஹமட், தனது நாட்டுக்குச் சென்றவுடன் இந்த விடயம் பற்றி கூடிய விரைவில் ஆராய்ந்து, அது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார். இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், லோர்ட் உறுதியளித்தார். இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார். இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023 இல் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், இரு நாடுகளின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.     https://athavannews.com/2022/1262906  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.