Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில்... எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க உதவும் இராணுவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க உதவும் இராணுவம்!

பிரித்தானியாவில்... எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க உதவும் இராணுவம்!

பிரித்தானியாவில் நான்காவது நாளாக தொடரும் நீண்ட வரிசைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடுதலுக்குப் பிறகு, எரிபொருள் விநியோக சிக்கல்களை எளிதாக்க இராணுவம் தயாராக உள்ளது.

பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் 150 இராணுவ லொறி ஓட்டுனர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 100,000க்கும் மேற்பட்ட லொறி ஓட்டுனர்கள் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சமீபத்திய மாதங்களில் உணவு விநியோகஸ்தர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட பல தொழில்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

சில இடங்களில் எரிபொருள் தீர்ந்து பல எரிபொருள் நிலையங்களில் வரிசைகளை ஏற்படுத்த மக்கள் தேவையில்லாமல் எரிபொருள் வாங்குவதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதால், பிரித்தானியாவில் லொறி ஓட்டுனர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால், எரிபொருளை பொதுமக்கள் மொத்தமாக வாங்கியதால் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து காலியாகின.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் போட்டி சட்டங்களை தற்காலிகமாக இரத்து செய்துள்ள அரசாங்கம், எரிபொருள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் இணைந்து செயற்பட அனுமதி அளித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு லொரி ஓட்டுநர்கள் ஐந்தாயிரம் பேருக்கு தற்காலிக விசா கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2021/1241697

  • கருத்துக்கள உறவுகள்

100,000 மேற்பட்ட வெற்றிடம் ஆனால் 150 இராணுவ ஓட்டுநர்கள்…. முடியுமா???

ஊடகங்கள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

100,000 மேற்பட்ட வெற்றிடம் ஆனால் 150 இராணுவ ஓட்டுநர்கள்…. முடியுமா???

ஊடகங்கள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றன. 

ஊடகங்கள் மக்களை முட்டாள் ஆக்குகின்றன..

பிரிக்ஸிற் ஆதரவு தெரிவித்த தீவிர பழமைவாத அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் இருந்து இப்போழுதுவரை ஈவிரக்கம் இன்றி பொய்களை சொல்லி மக்களை முட்டாள் ஆக்குகின்றனர்..

ஆர்பம் முதலேபிரிக்ஸிற்கு ஆதரவு தெரிவித்த தீவிர பழமைவாத வலதுசாரி மக்கள் அதிலிருந்து வெளியவரமுடியாமல் தங்களை தாங்களே முட்டாள் ஆக்குகின்றனர்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பஸ்ஸை பொறிஸ் ஓட்டி மக்களை முட்டாளாக்கி ஓட்டு வாங்கியது சாதனை.

A789-BCAB-6-B32-4-B26-814-F-8-D962-D64-D

அதை கூட தட்டிக்கேட்காமல் ஊடகங்கள் இன்று ஆமி வருகிறது என்று கதை விடுகின்றன. ஆமி வருவதாக இருந்தாலும் வார இறுதியில் தான்….

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இந்த பஸ்ஸை பொறிஸ் ஓட்டி மக்களை முட்டாளாக்கி ஓட்டு வாங்கியது சாதனை.

A789-BCAB-6-B32-4-B26-814-F-8-D962-D64-D

அதை கூட தட்டிக்கேட்காமல் ஊடகங்கள் இன்று ஆமி வருகிறது என்று கதை விடுகின்றன. ஆமி வருவதாக இருந்தாலும் வார இறுதியில் தான்….

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஊடகங்கள் மக்களை முட்டாள் ஆக்குகின்றன..

பிரிக்ஸிற் ஆதரவு தெரிவித்த தீவிர பழமைவாத அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் இருந்து இப்போழுதுவரை ஈவிரக்கம் இன்றி பொய்களை சொல்லி மக்களை முட்டாள் ஆக்குகின்றனர்..

ஆர்பம் முதலேபிரிக்ஸிற்கு ஆதரவு தெரிவித்த தீவிர பழமைவாத வலதுசாரி மக்கள் அதிலிருந்து வெளியவரமுடியாமல் தங்களை தாங்களே முட்டாள் ஆக்குகின்றனர்..

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஊடகங்கள் மக்களை முட்டாள் ஆக்குகின்றன..

பிரிக்ஸிற் ஆதரவு தெரிவித்த தீவிர பழமைவாத அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் இருந்து இப்போழுதுவரை ஈவிரக்கம் இன்றி பொய்களை சொல்லி மக்களை முட்டாள் ஆக்குகின்றனர்..

ஆர்பம் முதலேபிரிக்ஸிற்கு ஆதரவு தெரிவித்த தீவிர பழமைவாத வலதுசாரி மக்கள் அதிலிருந்து வெளியவரமுடியாமல் தங்களை தாங்களே முட்டாள் ஆக்குகின்றனர்..

ஊடகங்களில் கார்டியனையும், டைம்சையும் தவிர பெரும்பாலானவை பிரெக்சிற்றை ஆதரித்தன. காரணம் அவர்களின் முதளாலிகளின் பொருளாதார நலனுக்கு பிரெக்சிற் தேவைப்பட்டது.

ஆகவே அவை பிரெக்சிற்றைபற்றிய பொய்யை கேள்வி கேட்க மட்டும் இல்லை, பரப்பவும் செய்தன.

இப்போ ஆமியை standby இல் நிற்க சொல்லி இருக்கு இன்னும் deploy பண்ணவில்லை.

வெற்றிடம் 100,000 என்றாலும் எண்ணை டாங்கர் ஓடுபவர்கள் எண்ணிக்கை அவ்வளவு இல்லை. ஆகவே 150 இராணுவ வீரர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

தவிர இந்த panic buying அரசின் வார்த்தைகளை நம்பாமையாலே ஏற்படுகிறது. மக்களை சொல்லி குற்றம் இல்லை.

போரிஸ் ஜோன்சனை நம்பி நான் ஒரு பாவித்த டிசூ பேப்பரை கூட கொடுக்கமாட்டேன்🤣.

ஆமியை கண்டால் நம்பிக்கை வரும், நிலமை வழமைக்கு திரும்பும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

அடுத்த தேர்தலில் யூரோவில் இணைவோம் என்ற கொள்கையை முன்வைத்து எதிர்கட்சி தேர்தலில் நின்றால் வெல்லுமா?.  நீங்கள் யாருக்கு வாக்கு போடுவிர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

அடுத்த தேர்தலில் யூரோவில் இணைவோம் என்ற கொள்கையை முன்வைத்து எதிர்கட்சி தேர்தலில் நின்றால் வெல்லுமா?.  நீங்கள் யாருக்கு வாக்கு போடுவிர்கள்?

கந்தையா அண்ணைக்கு  குறும்பு  கூடிப்போச்சு???🤣

ரொம்ப  தூரம்  போயாச்சு  அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

கந்தையா அண்ணைக்கு  குறும்பு  கூடிப்போச்சு???🤣

ரொம்ப  தூரம்  போயாச்சு  அண்ணை

இருக்கலாம் இந்த நிலை நீடித்தால் சிலசமயம்  யூ.கே மக்கள் இணையுமாறு  போராட்டங்களை நடந்துவர்களாயின்   என்ன செய்வார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

அடுத்த தேர்தலில் யூரோவில் இணைவோம் என்ற கொள்கையை முன்வைத்து எதிர்கட்சி தேர்தலில் நின்றால் வெல்லுமா?.  நீங்கள் யாருக்கு வாக்கு போடுவிர்கள்?

அடுத்த தேர்தலில் சாத்தியம் இல்லை. ஆனால்  பிரெக்சிற்றுக்கு போட்டவர்கள் பெரும்பாலும் வயசாளிகள். பலரை கொவிட் கொண்டுபோய் விட்டது. பலர் இன்னும் கொஞ்சகாலத்தில் காலமாகி விடுவார்கள். இளையோர் 2016இல் இருப்பதற்குத்தான் ஆதரவு அதிகம் கொடுத்தார்கள். ஆகவே நிலமை இப்படியே மோசமாக போனால், 10 வருடத்தில் இந்த கோரிக்கை வலுக்கலாம்.

ஆனால் முன்னர் போல சலுகைகள், பவுண்டை வைத்திருப்பது சரி வருமா? அப்படி இல்லை என்றால் கஸ்டம்.

மீள இணைவதற்கு ஒரு தெளிவான திட்டம் காட்டப்பட்டு, அதனால் நாட்டுக்கு நன்மை என்று என் மனதுக்குபட்டால், நிச்சயம் மீள இணையவே போடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_cheஅவங்கள் சேர்க்கணுமே தல…

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

@goshan_cheஅவங்கள் சேர்க்கணுமே தல…

என்ன இருந்தாலும் நாங்கள் ஒரு ஜி7 நாடு, முன்னாள் சாம்ராஜ்யம் வேற, ஒரு அளவுக்கு மேல இறங்கி போகவும் முடியாது😂.

கஸ்டம்தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

@goshan_cheஅவங்கள் சேர்க்கணுமே தல…

சேர்ப்பார்கள்.  1.....யூரோவலயத்திலுள்ள. நாடு ஒன்று வெளியில் இருப்பதை விருப்பமாட்டார்கள். 2......யூகே  இணைந்தால்.  யூரோ பலமடையும்.   இந்த இணைவு யூகே கேட்டும் நடக்கலாம் அல்லது யூரோ கேட்டும் நடக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

100,000 மேற்பட்ட வெற்றிடம் ஆனால் 150 இராணுவ ஓட்டுநர்கள்…. முடியுமா???

ஊடகங்கள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றன. 

முகனூல், வட்சப்பிலிருந்து செய்திகளை வாசித்தால் முட்டாளாக மாட்டீர்கள்😂 (இதுவும் sarcasm!, விளங்கப் பழகிக் கொள்ளுங்கள்!) 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kandiah57 said:

அடுத்த தேர்தலில் யூரோவில் இணைவோம் என்ற கொள்கையை முன்வைத்து எதிர்கட்சி தேர்தலில் நின்றால் வெல்லுமா?.  நீங்கள் யாருக்கு வாக்கு போடுவிர்கள்?

அது ஒருக்காலும் நடக்காது.மக்களிடையே நல்லதை பரப்புவதை விட துவேசத்தை பரப்புவது வலு லேசுப்பட்ட விசயம். அதுவும் மற்றவர்களை பிரித்தாளுவதில்  பெரிய பிரித்தானியர் கை தேர்ந்தவர்கள்.உலகில்  இவர்களால்  பாதிக்கப்பட்ட நாம் முதன்மையானவர்கள் அல்லவா.😎

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் மின்சாரத்தில் ஓடும் காரை வாங்க வைக்கும் நோக்கில் நடக்கும் சதி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ரதி said:

எல்லோரையும் மின்சாரத்தில் ஓடும் காரை வாங்க வைக்கும் நோக்கில் நடக்கும் சதி 

கொலம்பசு....😁

  • கருத்துக்கள உறவுகள்

On 29/9/2021 at 20:59, ரதி said:

எல்லோரையும் மின்சாரத்தில் ஓடும் காரை வாங்க வைக்கும் நோக்கில் நடக்கும் சதி 

வார இறுதியில் மின்சார கார்கள் தொடர்பாக

UK electric car inquiries soar during fuel supply crisis

https://www.google.co.uk/amp/s/amp.theguardian.com/environment/2021/sep/27/uk-electric-car-inquiries-soar-fuel-supply-crisis

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கொலம்பசு....😁

ரதி மைண்ட் வாய்ஸ்..👇
 
என்னைய சுத்தி சதி  நடக்குது எப்பவும் ஒரு எழுமிச்சம் பழத்த கைல வச்சிக்கணும்…..😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை: ஆயத்த நிலையில் இராணுவம்

பிரித்தானியாவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை: ஆயத்த நிலையில் இராணுவம்

பிரித்தானியாவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு இராணுவம் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் ஏற்றிச் செல்லும் கனரக வாகன ஓட்டுநர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால், எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவசர அவசரமாக பெட்ரோலை வாங்க பொதுமக்கள் முயற்சி செய்கின்றமை காரணமாக பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

அதை அடுத்து, இராணுவ கனரக வாகன ஓட்டுநர்கள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் தேவைப்பட்டால் எரிபொருள் விநியோகத்தைச் சீர் செய்ய அவர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும் கூறப்பட்டது.

மேலும், வெளிநாட்டு ஓட்டுநர்களுக்குக் குறுகிய காலத்திற்கு விசா தள்ளுபடி செய்யப்படும் என்றும் பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்தது.

இதற்கிடையில், Shell, BP, Esso ஆகிய எரிபொருள் நிறுவனங்கள், பிரிட்டனில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் உள்ளதாக வலியுறுத்தியுள்ளன.

https://athavannews.com/2021/1241884

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் வழங்கு இராணுவம்!

spacer.png
பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் வழங்கும் பணியைத் தொடங்குவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 200 சேவையாளர்கள் மற்றும் பெண்கள், அவர்களில் 100 ஓட்டுநர்கள், நிலையங்களில் அழுத்தத்தைக் குறைக்க தற்காலிக ஆதரவை வழங்குவார்கள்.

300 வெளிநாட்டு எரிபொருள் டேங்கர் ஓட்டுநர்கள் மார்ச் இறுதி வரை உடனடியாக பிரித்தானியாவில் வேலை செய்ய முடியும் என்றும் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த வாரம் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் பற்றாக்குறையால் எரிபொருள் விநியோகம் தடைபட்டது.

மக்கள் தங்கள் இயல்பான விலையில் வாங்கினால் போதுமான எரிபொருள் உள்ளது எனவும் எரிபொருள் நிலைய முன்கூட்டியே நிலைமை மேம்பட்டு வருவதாகவும், விற்பனை செய்வதை விட இப்போது அதிக எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், நாட்டின் சில பகுதிகள் மற்றய பகுதிகளை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை, ஆர்.ஏ.சி. மோட்டார் குழுவும் விநியோகங்களில் இடையூறு தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறியது. இருப்பினும் பல பகுதிகள் இன்னும் விநியோகப் பிரச்சினைகளை எதிர்கொண்டன.

பிரித்தானியாவில் 8,300 எரிபொருள் நிலையங்களில் கிட்டத்தட்ட 5,500ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், சுதந்திர எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களாக இருக்கும் அதன் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறிது மாற்றம் இருப்பதாகக் கூறியது.

பிரித்தானியாவில் உள்ள 1,100 தளங்களில் அதன் கணக்கெடுப்பில் 26 சதவீத பெட்ரோல் அல்லது டீசல் இருப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது. இது வியாழக்கிழமை 27 சதவீததத்திலிருந்து சற்று குறைந்தது.
https://athavannews.com/2021/1242437

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில். அரசையும் பிரக்சிட்டையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல. இது உண்மையில்.. தொழில் வழங்கினர்களினதும் எதிர்கட்சிகளினதும்.. குறிப்பாக தொழில்கட்சியினதும்.. தேவைகளை நோக்கி அரசுக்கு அழுத்தம் கொடுக்க நடக்கும் செயலாகவே தெரிகிறது. 

ஏனெனில்.. பிரிட்டனில் வேலை இல்லை என்று அரசு உதவித் தொகை பெறுவோரில்.. தகுதி உள்ள ஆக்களைப் பிடிச்சு பயிற்சி கொடுத்து.. இந்த வாகனங்களை ஓட்ட வைச்சால்.. விசயம் கச்சிதமாக முடியும்.

ஆனால்.. அப்படிச் செய்தால்.. ஊதியம் கனக்க கொடுக்கனும்.. சலுகை கொடுக்கனும்.. அது வருமானத்தை பாதிக்கும்.. அரசுக்கு நெருக்கடியை தராது.. இப்படி பல உள்நோக்கங்கள்.. இந்த செயற்கையான தோற்றப்பட்ட சூழ்நிலைக்குப் பின்னால் உண்டு.

மேலும்.. மக்களும்.. அநாவசியமாக.. அளவுக்கு மிஞ்சி எரிபொருளை கொள்வனவு செய்து பதுக்க முனையும் அதேவேளை.. பெற்றோல் நிலையங்களும் பதுக்கிவிட்டு.. இரவோடு இரவாக விலையேற்றம் செய்துவிட்டு காலையில் திறக்கின்றனர். அதெப்படி மாலையில்.. இல்லாத பெற்றோல்... காலையில் வந்திடுது.

சரி.. லொறி ஓட்ட ஆக்கள் இல்லையென்றால்.. வேறு சாத்தியமான வழிமுறைகளை ஆராயலாம். அதை விடுத்து உடனடியாக.. எல்லைகளை திற ஐரோப்பிய மலிவுக் கூலிகளை கூட்டி வா.. என்று கூவுவது எப்படி இந்தச் சூழலை நிரந்தரமாக தீர்க்க உதவும்.

இது பிரித்தானிய பெருந்தொழில் நிறுவனங்கள்.. எதிர்கட்சிகள்.. ஐரோப்பிய ஒன்றியம்.. போன்றவை திரைமறைவில் இருந்து பொரிஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கை. குறிப்பாக... AUKUS உடன்படிக்கைக்குப் பிறகு.. பிரான்ஸ் கடும் கடுப்பில் இருக்கும் சூழலில்.. இந்த நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதனை அரசு எப்படியாவது சமாளிக்கும். அந்த திறன் பொரிஸுக்கு உண்டு. 

மேலும் பொரிஸ் சொன்னது போலவே.. என் எச் எஸ்ஸுக்கு பெருந்தொகை பில்லியனை ஒதுக்கித் தானே இருக்கிறார். தப்பா ஒன்றும் சொல்லேல்லையே. பிரக்சிட் வரவேற்கத்தக்க ஒன்று. ஐரோப்பிய கொள்ளையர்களை விரட்டி அடித்தமை நல்லது. எமது வரி எமக்கே எங்கள் நாட்டுக்கே.. பயன்படட்டும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் வழங்கு இராணுவம்!

பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் எரிபொருள்  இராணுவம் வழங்கும்!

பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் வழங்கும் பணியைத் தொடங்குவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 200 சேவையாளர்கள் மற்றும் பெண்கள், அவர்களில் 100 ஓட்டுநர்கள், நிலையங்களில் அழுத்தத்தைக் குறைக்க தற்காலிக ஆதரவை வழங்குவார்கள்.

300 வெளிநாட்டு எரிபொருள் டேங்கர் ஓட்டுநர்கள் மார்ச் இறுதி வரை உடனடியாக பிரித்தானியாவில் வேலை செய்ய முடியும் என்றும் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த வாரம் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் பற்றாக்குறையால் எரிபொருள் விநியோகம் தடைபட்டது.

மக்கள் தங்கள் இயல்பான விலையில் வாங்கினால் போதுமான எரிபொருள் உள்ளது எனவும் எரிபொருள் நிலைய முன்கூட்டியே நிலைமை மேம்பட்டு வருவதாகவும், விற்பனை செய்வதை விட இப்போது அதிக எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், நாட்டின் சில பகுதிகள் மற்றய பகுதிகளை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை, ஆர்.ஏ.சி. மோட்டார் குழுவும் விநியோகங்களில் இடையூறு தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறியது. இருப்பினும் பல பகுதிகள் இன்னும் விநியோகப் பிரச்சினைகளை எதிர்கொண்டன.

பிரித்தானியாவில் 8,300 எரிபொருள் நிலையங்களில் கிட்டத்தட்ட 5,500ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், சுதந்திர எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களாக இருக்கும் அதன் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறிது மாற்றம் இருப்பதாகக் கூறியது.

பிரித்தானியாவில் உள்ள 1,100 தளங்களில் அதன் கணக்கெடுப்பில் 26 சதவீத பெட்ரோல் அல்லது டீசல் இருப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது. இது வியாழக்கிழமை 27 சதவீததத்திலிருந்து சற்று குறைந்தது.

https://athavannews.com/2021/1242437

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் டீசலுக்குள் பெற்றோலை ஊற்றாமல் விட்டால் சரி👍

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நந்தன் said:

ராணுவம் டீசலுக்குள் பெற்றோலை ஊற்றாமல் விட்டால் சரி👍

இனி site இல் இருந்து ஒராள் கூட போகணும் delivery நேரம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இனி site இல் இருந்து ஒராள் கூட போகணும் delivery நேரம்..

3 hours ago, நந்தன் said:

ராணுவம் டீசலுக்குள் பெற்றோலை ஊற்றாமல் விட்டால் சரி👍

எப்படி எண்ணையை ஏற்றுவது, இறக்குவது எண்டு 5 நாள் மட்டும் பயிற்சி கொடுக்கப்பட்டதாக கேள்வி. 

ஒரு டிரைவரும் அவருக்கு துணையா இன்னொரு ஆமிகாரனும் வருவினமாம்.

எண்ணையை இறக்குவது சிக்கலான/கஸ்டமான வேலையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.