Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 நாள்களில் 11 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டது கோத்தா அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”அபிவிருத்தி என்பது கொங்கிரீட் காடுகள் அல்ல. அது மக்களின் வாழ்வோடு இணைய வேண்டும்.”
”ஆட்சியாளர்கள் எப்போதும் மக்களின் ஏழ்மையை விற்கிறார்கள்.”
2004 இல் ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸின் எதன்ஸ் (Athens, Greece) இடம்பெற்றது. அதற்காக கிரீஸ் அரசாங்கம் வானளாவிய கட்டிடங்களை கட்டி எழுப்பினார்கள். பெரும் மைதானங்களை நிர்மாணித்தார்கள்.
உலகெங்கும் இருந்து போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக பெரும் மாடி வீடுகளை அமைத்தார்கள்.
அந்த காலத்தில் ஆளும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து, மக்களுக்கு உரையாற்றிய கிரீஸின் எதிர்கட்சித்தலைவி, "என்றாவது ஒருநாள், இந்தக் கொங்கிரீட்டுகளையே நீங்கள் உண்ண வேண்டிய நிலை ஏற்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
2008 இல் நடந்தது என்ன? உலகத்திலேயே வங்குரோத்தான அரசாக கிரீஸ் வீழ்ச்சி அடைந்தது.
நீங்கள் இன்று கிரீஸுக்கு சென்று பாருங்கள், அங்கு அந்த வீதிகளை, கட்டிடங்களை பராமரிக்க முடியாமல் அரசாங்கம் திணறுவதைக் காணலாம்.
இப்போது இலங்கையில் இருந்து மத்தியதர வகுப்பினர், நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
அபிவிருத்தி என்பது கொங்கிரீட் காடுகள் அல்ல. அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்க வேண்டும்.
இலங்கையின் சூரியவெவ மைதானம் இருக்கும் வீதியை சென்று பாருங்கள், பேஸ்லைன் வீதியை விடவும், 6 பிரிவுகளைக் கொண்ட பெரிய வீதியாக கட்சி தருகிறது.
அந்த வீதியை அண்மித்து வாழும் மக்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது.
பாடசாலை முடிந்து வரும் மாணவர்கள், விளாம்பழ பருவ காலத்தில், வீதியோரம் விளாம்பழம் விற்கிறார்கள். எலுமிச்சை பருவ காலத்தில் எலுமிச்சையும், தோடம் பழ பருவத்துக்கு தோடையும் விற்கிறார்கள்.
விசாலமான விதி இருக்கிறது ஆனால் பாடசாலை விட்டு வரும் பிள்ளைகள், வீதியோரம் மாங்காய், விளாங்காய் விற்கிறார்கள். இந்த விசாலமான வீதிக்கும் மக்களது வாழ்க்கைக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை.
மில்லியன் கணக்கான மக்கள் ஏழ்மையில் மூழ்கிப்போய் இருக்கிறார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் எப்போதும் அந்த ஏழ்மையை விற்கிறார்கள். நாம் இதை மாற்ற வேண்டாமா?
(ஹரேந்திர ஜயலால் தொகுத்து வழங்கும் "நாடு யாருக்கு" நிகழ்ச்சியியில் போது ஜே.வீ.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்து இது.)
May be an image of 1 person, beard and standing
 
  • Replies 72
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

245812881_4286860851442320_6628189796476

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாதவூரான் said:

அக்னி, தமிழ் மக்கள் கோத்தாவிற்கு போட்டிருந்தால் எல்லாம்நல்லாநடந்திருக்குமா?சும்மா பகிடி விடாதேங்கோ

நான் எப்போது சொன்னேன் எல்லாம் நடந்திருக்கும் என்று ...?
வாக்கை சஜித்துக்கு போட்டு கோத்தாவிடம்  கும்மாங்குத்து வாங்குவதை விட ,கோத்தாவிற்கே போட்டு ஊமைக்குத்து வாங்குங்கள் என்றே சொன்னேன், குத்து வாங்குவது உறுதியாகிவிட்டது வாங்கும் குத்தின் உக்கிரத்தையாவது குறைக்கப்பாருங்க என்று தான் சொன்னேன். அண்ணை 7 வருடம் பட்டை சிங்கள ஏரியாவில் உத்தியோகம் பார்த்தவன் என்ற அடிப்படையில் , அப்போது பரிட்சயமான சில துவேஷ பண்டாக்களுடன் தொடர்பு இப்போதும் உண்டும், ஜனாதிபதி தேர்தலின்போது அவர்களது வலைப்பின்னல் எப்படி சிங்களவர்களை பன்சாலை மூலம் ஒன்று திரட்டி அந்த திரள்சக்தி மூலம் குத்தோ குத்து என்று கோத்தாவுக்கு குத்தப்போகிறார்கள் என்பதை அப்போதே இவர்கள் மூலம் அறிந்துகொண்டேன்     

8 hours ago, Justin said:

அதன் பின்னே இருந்த உண்மையான காரணம் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு. "எமக்குக் கண்போனாலும் பரவாயில்லை, முஸ்லிம்களுக்கு மூக்குப் போக வேணுமென்ற" வெறுப்பு வாக்கு!

off course ஒருவகையில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் தற்போதைய முஸ்லீம் அரசியல்வாதிகளின் நெருக்குவாரமற்ற நிம்மதிக்கு காரணம் முஸ்லீம் அரசியல்வாதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டு வீட்டில் உட்காரவைக்கப்பட்டமையே, இந்த நெருக்குவாரங்கள் புலம் பெயர் எலைட்ஸ்ட்களுக்கு தெரியாது, அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்  

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

நீங்கள் எதிர்பார்த்த இக்கட்டுக்கு இலங்கை வந்து விட்டது ஆனாலும் புலம்பெயர் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கவே திட்டம் போடுகிறார்களே ஒழிய ஒரு நியாமான தீர்வையும் தர முயற்சிப்பதாக காட்ட கூட இல்லை.

 புலம்பெயர் தமிழர்கள் ஏன் தங்களுடைய பொருளாதார, கல்வி  இன்னோரன்ன வளங்களை பயன்படுத்தி 
தற்போதைய நிலைமையில் இலங்கையில் தங்களுடைய பொம்மை அரசை நிறுவ முயற்சிக்கக்கூடாது....?
சிங்களவனுக்கு இலங்கையை சிங்களவன் ஆண்டால் போதும்,  இதற்குண்டான வெளி இப்போது திறந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் கோத்தாவை ஆட்சியில் வைத்துக்கொண்டும், இந்திய proxy கூத்தமைப்பை அரசியலிலும் வைத்துக்கொண்டு   அதனை செய்ய முடியாது.  இப்படியெல்லாம் முயற்சிக்க முன் எமக்கு அருகிலிருக்கும் நிரந்தர சாபமான இந்திய பிடியிலிருந்து ஈழ தமிழர் அரசியலை விடுவிக்க வேண்டும்,  
 கோத்தாவை சிங்களவர்களை வைத்தே திரத்தவும் வைக்க வேண்டும், எம்மிடம் அந்தளவுக்கு அரசியல் செய்யக்கூடிய சாணக்கியர்கள் உண்டா என்பதே கேள்வி,  
அதற்காக சாணக்கியனை  சொல்லிபோடாதீங்கோ, அந்தாள் பெயரில் மட்டும்தான்    

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கோத்தா வர வேண்டும் என்று தான் விரும்பினேன் ...உப்ப இலங்கையில் இருக்கும் தலைவர்களில் கோத்தா , மகிந்தா சகோதரர்களை விட திறமையானவர்கள் இல்லை என்பது என் கருத்து...இவர் என்ற படியால் தான் நாடு இந்தளவிற்கு இருக்கு ...இதே சஜீத்,ரணில் என்றால் இன்னும் அதாள பாதாளத்திற்கு போயிருக்கும்.
கொரோனா என்னும் கொடிய நோய் வந்திருக்கா விட்டால் பொருளாதாரத்தை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து இருப்பா.
முந்தைய அரசுகள் பாதீடுகளில் விட்ட பிழை இப்பத்தைய அரசினை பாதிக்கின்றது  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

இப்பவும் உங்களுக்கு விளங்கவில்லையா..?

கொரோனாவினால் பாதிக்கப்படாத நாடுகள் ஏதும் உள்ளதா?

2005 இலிருந்து 10 ஆண்டுகள் 2015 வரை தொடர்ச்சியாக, பின்னர் 2019 இலிருந்து இன்று வரை. இடையில் அந்த 4 வருடங்கள் தானா உங்களுக்கு பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

இப்பவும் உங்களுக்கு விளங்கவில்லையா..?

கொரோனாவினால் பாதிக்கப்படாத நாடுகள் ஏதும் உள்ளதா?

2005 இலிருந்து 10 ஆண்டுகள் 2015 வரை தொடர்ச்சியாக, பின்னர் 2019 இலிருந்து இன்று வரை. இடையில் அந்த 4 வருடங்கள் தானா உங்களுக்கு பிரச்சனை?

தொடர்ச்ச்சியான யுத்தங்கள் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி , ஊழல்கள் , கொரோனா , முந்தைய அரசுகள் பொருளாதாரத்தில் , பாதீட்டில் விட்ட பிழைகள் தற்போதைய நிலைமைக்கு காரணம் 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

தொடர்ச்ச்சியான யுத்தங்கள் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி , ஊழல்கள் , கொரோனா , முந்தைய அரசுகள் பொருளாதாரத்தில் , பாதீட்டில் விட்ட பிழைகள் தற்போதைய நிலைமைக்கு காரணம் 

உங்களுக்கு தெரிந்தது கூட கோத்தாவிற்கு தெரியவில்லை…😜

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

இப்பவும் உங்களுக்கு விளங்கவில்லையா..?

கொரோனாவினால் பாதிக்கப்படாத நாடுகள் ஏதும் உள்ளதா?

2005 இலிருந்து 10 ஆண்டுகள் 2015 வரை தொடர்ச்சியாக, பின்னர் 2019 இலிருந்து இன்று வரை. இடையில் அந்த 4 வருடங்கள் தானா உங்களுக்கு பிரச்சனை?

கோத்தா நல்லவர் பாருங்கோ! உந்த கொரோனாதான் வந்து கெடுத்துப்போட்டுது. மக்களின் இறையாண்மையை காக்க பல நாடுகளோடு யுத்தங்கள் செய்து,  பொருதி,   நிதி ஒதுக்கி களைச்சுப்போனார். இல்லையென்றால் சிங்கப்பூரை வென்றிருப்போம் தன்னிறைவில்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

கோத்தா நல்லவர் பாருங்கோ! உந்த கொரோனாதான் வந்து கெடுத்துப்போட்டுது. மக்களின் இறையாண்மையை காக்க பல நாடுகளோடு யுத்தங்கள் செய்து,  பொருதி,   நிதி ஒதுக்கி களைச்சுப்போனார். இல்லையென்றால் சிங்கப்பூரை வென்றிருப்போம் தன்னிறைவில்.

மக்கள் மட்டுமல்ல புத்திமான்கள், அரசியல் மேதாவிகள் உட்பட்ட அனைவருமே தலையை விட்டு வாலின் ஆட்டங்களையே விமர்சனத்திற்கு உள்ளாக்கி நாட்டை எப்படிக் கட்டியெழுப்பலாம் என்று சிந்திப்பதாகவே தெரிகிறது. நாட்டினுள் வதியும் சிறுபான்மை இனங்களை அழித்து அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றி இலங்கை என்ற நாட்டைத் தனிச்சிங்கள நாடாக உருவாக்கவேண்டும் என்ற சிந்தனையைச் சிங்களப் பிக்குகள் தங்கள் தலையில் கொண்டுள்ளவரையில் நாடு அதள பாதாளத்தை நோக்கிப் பயனிப்பதை எவராலும் தடுக்க முடியாது. .  

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப்போட்ட சிங்களமக்களே தங்களை நொந்துகொண்டு, ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று தலையில அடிக்குதுகள். நாங்கள் என்னடாவென்றால்: கோத்தா நல்லவர், வல்லவர் என்று தலையில வைச்சு  தாங்குகிறோம். ஆனால்  இருப்பதோ வெளிநாட்டில். நாட்டில் மிஞ்சப்போவது இனவாதிகளும், பிக்குகளுமே. எஞ்சி  இருக்கும் கொஞ்சப்பேரிடம்  அடிவாங்கியே சாகப்போகினம் அல்லது சும்மா இருந்து வளர்த்த வயிறு கருகி சாகவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக  நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 7% அதிகமாக அரசின் செலவுகள் உள்ள நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்குகின்ற நிலையில் இருப்பதாகக்கூறுகிறார்கள், இலங்கை 80 களின் ஆரம்ப பகுதியில் ஏறத்தாழ 7% விகிதமாக இருந்ததாகவும் அதன் பின்னர் ஒரு போதும் அந்த நிலமைக்கு செல்லவில்லை (அதன் பின்னர் சராசரியாக 10%), போர் முடிந்த்த பின் அது மேம்பட்டது

graph_country.php?p=0&c=Sri-Lanka&i=government_size

அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு சமமாக கல்வி, மருத்துவம், ஆயுள் காலம் என்று சமூக அபிவிருத்தியில் முன்னிற்கிறது, இலஙகையரசு அன்று தொட்டு இன்றுவரை அதற்காக செலவு செய்கிறது.

https://data.worldbank.org/indicator/SE.XPD.TOTL.GD.ZS?end=2018&locations=LK&start=1973&view=chart

பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் வருமான இடைவெளி மிகவும் குறைவு. 

இலஙையின் இராணுவ செலவுதான் தற்போதைய முதல் பிரச்சினையாகவுள்ளதாக கருதுகிறேன், இது தவறாகவும் இருக்கலாம், அதனை விட பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமான போக்குவரத்திற்கு அரசு வீதி, துறைமுக அபிவிருத்தியில் ஏற்கனவே முதலிட்டுள்ளது.

இலங்கை ஒரு விவசாய நாடு அதனால் எவ்வாறு சுயசார்பு பொருளாதாரம் முக்கியமாகவுள்ள அதே சமயம் அரசு இலங்கையில் உள்ள வழங்களை முழுமையாகப்பயன்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும், பொதுவாக கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கான வெளிநாட்டு சந்தைகளை உருவாக்கி கொடுக்கவேண்டும்.

இலங்கையின் முக்கியமான வளமான படித்த இளையோருக்கு வேலைத்திட்டங்களை உருவாக்க வசதி செய்யவேண்டும், ஒரு சிங்களப்பெண் கூறினார் தென் பகுதியில் ஒரு உயர் பாடசாலையில் இருந்து வெளியேறிய பதின்ம வயது வாலிபன், தகவல் துறையில் பட்டம் பெற்றவர்களை வேலைக்கமர்த்தி வெளிநாடுகளுக்கு சேவைகளை ஏற்றுமதி செய்கிறாராம்.

பல நாடுகளில் கணக்காய்வு, வாடிக்கையாளர் கவனிப்பு போன்ற சேவைகளை ஏற்றுமதி செய்கிறார்கள்.

வெளிநாடுகள் தற்போது தமது பாதீடுகளில் Digital eco system இற்கு செலவு செய்கிறார்கள்.

ஜப்பானில் வர்த்தக கல்வியை தொடர்பவர்களின் சதவிகிதம் சராசரியாக 50% உள்ளதாகக்கூறுகிறார்கள்.(இது உறுதிப்படுத்த முடியாத தகவல்)

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2021 at 17:37, பெருமாள் said:

உண்மைதான் 1350போன சிலிண்டர் 2700க்கும் வாங்கமுடியாமல் இருக்குதாம் .

நாங்க ஊரில் இருக்கும்போது சிலிண்டர் என்றால் என்ன என்று தெரியாது விறகு அடுப்புதான். பால்மா பைக்கட் என்றால் இலக்கரமாய் பார்ப்பினம் எல்லார் வீடுகளிலும் ஆடும் மாடும் இருந்தன . முட்டை கடையில் விற்பதை அதுக்குரிய முட்டை வைக்கும் கடுதாசி மட்டையை புதினமாய் பார்த்தோம் ஏனென்றால் அநேக வீடுகளில் சேவலும் கோழியும் எழுததா  விதியாய் வளர்த்தனர். அதைவிட திக்கம் பொலிகை பக்கம் இருப்பவர்களுக்கு தெரியும் அல்லது பொயிலை கண்டு  வாங்க வருபவர்களுக்கு தெரிந்து இருக்கும்  கிழமையில் ஒரு நாள் பாண் விக்க கூடாது மீறி பாண் பெட்டி காரன் வந்தால் அவ்வளவு பானும் ரோட்டில் அங்கபிரதட்சனை செய்யும் கூடவே பாண் கொண்டுவந்தவரும் உருளுவார்.   இப்ப என்னடா என்றால் பாண் இல்லாவிட்டால் உலகம் இருண்டு விடுமாம் 🤣கரண்டு வயர், பல்பு, சுவிட்ச் எல்லார் வீட்டிலும் இருந்தது கரண்டு மட்டும் இல்லை ஜாம் போத்தில் விளக்குத்தான் குசினிக்கும் படிப்பிற்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிப்பதுக்கும் கொடுப்பினை இல்லாமல் வடகிழக்கு தமிழ்மக்களை இதே சிங்கள அரசுகள் பொருளாதார தடை என்று மறைமுக இனவழிப்பு செய்தனர் இன்று வரலாறு  திரும்பி நிக்குது இன்னும் உண்டு உணவே இல்லாமல் காய்ந்த வயிறுடன் வரிசையில் கஞ்சிக்கு நின்றவர்கள் மீது செல்லடித்து விளையாடிய வீரர்களை மறக்காது பின் தொடரும் .

அதே நந்திக்கடலின் ஓரத்தில் தமிழினம் கருகிக்கொண்டு இருக்க இதே முஸ்லீம் சமூகமும் சிங்கள மக்களும் கிரிபத் புக்கை கிண்டி சந்தோசம் கொண்டாட வில்லையா ?

அரசுமீது மட்டும் குற்றம் சொல்லி தப்பிக்க முடியாது .

நீங்க‌ள் எழுதின‌தை வாசிக்க‌ என் நினைவு 2009நோக்கி போகுது

இப்போது ஒட்டு மொத்த‌ ம‌க்க‌ளும் பாதிக்க‌ப் ப‌ட்டு இருக்கின‌ம்

சிங்க‌ள‌ ம‌க்க‌ளில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் அதே போல் த‌மிழ் பேசும் முஸ்லிம் ம‌க்க‌ளும் ப‌ல‌ர் இருக்கின‌ம்

நாடு போர‌ போக்கை பார்த்தா இன்னொரு சோமாலியா வென்சுவோலா போல‌  இல‌ங்கை வ‌ந்திடும் போல‌ இருக்கு

ம‌கிந்தா கொத்த‌பாய‌ இவ‌ர்க‌ள் இல‌ங்கைக்கு பிடிச்ச‌ ச‌ணிய‌ன்

இவ‌ர்க‌ள் ஆட்சியில் இருக்கும் வ‌ரை இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு இருன்ட‌ கால‌ம் தான்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலம்பெயர் தமிழர்கள் ஏன் தங்களுடைய பொருளாதார, கல்வி  இன்னோரன்ன வளங்களை பயன்படுத்தி 
தற்போதைய நிலைமையில் இலங்கையில் தங்களுடைய பொம்மை அரசை நிறுவ முயற்சிக்கக்கூடாது....?

இரெண்டு விசயம்:

1. எங்கள் மத்தியில் அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி பொம்மை அரசை நிறுவுவது என்றாலும் அவர்களுக்கு தெரியாமல் தான் நிறுவ வேண்டும் (indirect control) -அதுக்கு அவர்களுடன் நெருங்கி போக வேண்டும்.  அப்படி கிட்ட போனாலே உடனடியா துரோகி பட்டம் பார்சலில் வரும். அண்மைய உதாரணம் சுரேன் சுரேந்திரன். எனக்கு தெரியாது ஆனால் இப்படி ஒரு எண்ணத்தில் அவர் கோட்டவுக்கு பதில் சொல்லி இருக்கலாம் (ஊகம்). ஆனால் உடனே ஆளை கழுவில் ஏற்றிவிட்டோம்.

2. எம்மை பொம்மை அரசை நிறுவவிடும் அளவுக்கு அவர்கள் மோடையர்களாக எனக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

ம‌கிந்தா கொத்த‌பாய‌ இவ‌ர்க‌ள் இல‌ங்கைக்கு பிடிச்ச‌ ச‌ணிய‌ன்

எந்த சிங்களவன் ஆட்சியில் வந்தாலும் பாதிக்கப்படுவது தமிழன்தான் வேறு இனம் பாதிக்கப்பட்டு இருந்தால் அறியத்தரவும் ?

3 hours ago, பையன்26 said:

சிங்க‌ள‌ ம‌க்க‌ளில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் அதே போல் த‌மிழ் பேசும் முஸ்லிம் ம‌க்க‌ளும் ப‌ல‌ர் இருக்கின‌ம்

முன்பு இருந்திருக்கலாம் தற்போது இனவாத போதையில் அனைவரும் காலிமுகத்திடலில் நடந்த வெற்றி விழா காட்சி இருந்தால் பார்க்கவும் .

4 hours ago, பையன்26 said:

நாடு போர‌ போக்கை பார்த்தா இன்னொரு சோமாலியா வென்சுவோலா போல‌  இல‌ங்கை வ‌ந்திடும் போல‌ இருக்கு

அப்படி போகாது பக்கத்தில இந்தியா பிச்சை எடுத்தாவது கடன் கொடுக்கும் காரணம் அதே பஞ்சத்தால் தமிழ் ஈழம் உருவாக  கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் .அதே நேரம் தனது சொல் கேட்க்கும் சிங்கள  அரசை நிறுவி 13வது  என்று கீறல் விழ கதைத்து  கொண்டு இருப்பார்கள் தீர்வு மட்டும் கிடையவே கிடையாது தமிழர்களுக்கு .தீர்வு கிடைத்தால் வரும் செழிப்பின் வெண்மையை தாங்கமுடியாத சகுனிகள் நிறைந்த டெல்லி அதிகாரபீடம் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை நேற்று அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன்(Keerthi Tennakoon) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"ஒக்டோபர் 15 ஆம் திகதி அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் எதனை கூறினாலும் நாட்டில் பொருட்களின் விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளமை இந்த பணம் அச்சிட்டமைக்கான காரணம். 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்காக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 768 கோடி ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது.

இது 1950 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 2020 ஜனவரி முதலாம் திகதி வரையான 70 ஆண்டு காலத்தில் அச்சிடப்பட்ட பணத்தை விட 20 மடங்கு அதிகம். கடந்த 20 மாதங்களில் மாத்திரம் இந்தளவுக்கு பணத்தை அச்சிட்டது எனக் கூறுவது ஆச்சரியமானது.

இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 74.74 பில்லியன் ரூபாய் அதாவது 7 ஆயிரத்து 474 கோடி ரூபாய் பணத்தை மாத்திரமே அச்சிட்டிருந்தது.

அஜித் நிவாட் கப்ரால்(Ajith Nivard Capral) மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற பின்னர் இதுவரை 17 ஆயிரத்து 804 கோடி ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த 20 மாதங்களில் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு தொடர்ந்தும் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளளதுடன் வறிய மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் மீது, சீனி, கோதுமை மா போன்ற அத்தியசிய பொருட்கள் மூலம் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருக்கும் அந்நிய செலாவணி கடந்த வாரத்தில் வீழ்ச்சியடைந்தது.

இலங்கையின் வங்கி கட்டமைப்பை தாண்டி, உண்டியல் முறை மூலம் டொலர்கள் பரிமாற்றம் செய்யப்படும் கறுப்புடை நிதி வர்த்தகம் விரிவடைந்துள்ளது" எனவும் கீர்த்தி தென்னகோன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/the-central-bank-of-sri-lanka-printed-about-2-1634367055?itm_source=parsely-top

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

பேசாமல் தாழை அச்சிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்து, அதை பார்த்து பசியாற சொல்ல வேண்டி வரப்போகுது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்கள், என்று ஆலோசனை வழங்கியவர்கள் இதையும் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/10/2021 at 09:23, ரதி said:

தொடர்ச்ச்சியான யுத்தங்கள் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி , ஊழல்கள் , கொரோனா , முந்தைய அரசுகள் பொருளாதாரத்தில் , பாதீட்டில் விட்ட பிழைகள் தற்போதைய நிலைமைக்கு காரணம் 

 இனவாத சிங்களத்துக்குக்கு  பூசி மெழுக வந்துட்டாவு 🤣

ஜிப்சம் விகிதத்துடன் சிமென்ட் கலவை. எந்த பிளாஸ்டர் தேர்வு செய்ய வேண்டும் -  ஜிப்சம் அல்லது சிமென்ட்? நன்மைகள் மற்றும் தீமைகள் ஒப்பீடு

ஐ மீன் வெள்ளையடிக்க.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 இனவாத சிங்களத்துக்குக்கு  பூசி மெழுக வந்துட்டாவு 🤣

ஜிப்சம் விகிதத்துடன் சிமென்ட் கலவை. எந்த பிளாஸ்டர் தேர்வு செய்ய வேண்டும் -  ஜிப்சம் அல்லது சிமென்ட்? நன்மைகள் மற்றும் தீமைகள் ஒப்பீடு

ஐ மீன் வெள்ளையடிக்க.....🤣

அவவின்  அறிவு அவ்வளவே விட்டு விடுங்க .

1 hour ago, satan said:

பேசாமல் தாழை அச்சிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்து, அதை பார்த்து பசியாற சொல்ல வேண்டி வரப்போகுது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்கள், என்று ஆலோசனை வழங்கியவர்கள் இதையும் சொல்லலாம்.

ரசிஸ்யாவில்  வந்தது போல் நமக்கென்று தணிக்கை உண்டு அது தாண்டவில்லை இன்னும் யாழில் .அந்த செய்தி பாரிஸ் ஈழநாடு வில் வந்து பரிகாசம் அடைந்ததும் உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

 இனவாத சிங்களத்துக்குக்கு  பூசி மெழுக வந்துட்டாவு 🤣

ஜிப்சம் விகிதத்துடன் சிமென்ட் கலவை. எந்த பிளாஸ்டர் தேர்வு செய்ய வேண்டும் -  ஜிப்சம் அல்லது சிமென்ட்? நன்மைகள் மற்றும் தீமைகள் ஒப்பீடு

ஐ மீன் வெள்ளையடிக்க.....🤣

மேலே வசி எழுதினதை  ஒருக்கால் தயவு செய்து வாசியுங்கோ அண்ணா 

15 hours ago, பெருமாள் said:

அவவின்  அறிவு அவ்வளவே விட்டு விடுங்க .

உங்களை மாதிரி அறிவுக் கொழுந்துகளுக்கு நான் எழுதுவது விளங்காது தான் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

மேலே வசி எழுதினதை  ஒருக்கால் தயவு செய்து வாசியுங்கோ அண்ணா 

ரதி, இந்த அரசின் தவறான கொள்கைதான் மட்டும்தான் இப்படி நிகழ்வதற்கு காரணம் என்று கூறமுடியாது என்பது எனது அபிப்பிராயம் ஆனால் அரசின் தவறான கொள்கை நிலமையை மோசமடைய செய்துள்ளது உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகை, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய கடனை திருப்பியழித்தது, இரசாயன் உர இறக்குமதி தடை தேயிலை உற்பத்தியில் 50% வீழ்ச்சி. எனது கருத்து தவறாக இருக்கலாம்.

ஏராளன் கேட்ட கேள்வி போல பலருக்கு சந்தேகம் உண்டு (15000 பில்லியன் ரூபா அச்சிடப்படுதல்), எரிகிற வீட்டில் கொள்ளையடித்தால் கணக்கு காட்ட தேவையிருக்காது என்பது போல, ஏராளனது கேள்வி சிந்திகதூண்ட கூடிய கேள்விதான் அமெரிக்காவில் 1903 அல்லது 1905 சரியாக ஆண்டு நினைவில் இல்லை, வர்த்தகத்தில் திரவநிலை குறைவடைந்து, நாடு பொருளாதாரநெருகடியை சந்தித்தபோது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டால் நாடு ஓர் சரிவை சந்திக்கும் என்பதை உணர்ந்த ஜே பி மோர்கன் பங்கு சந்தை முதலீட்டாளருக்கு தேவையான பணத்தினை வங்கிகள் வழங்க வேண்டும் என ஆணையிட்டார், வங்கிகள் தம்மிடம் பணமில்லை என்ற போது அவசர கால் வைப்புகளை பயன்படுத்த கூறினார், அதனால் உடனடி தீர்வு ஏற்பட்டது அதன் 2 ஆண்டுகள் பின் $5 நாணயம் அரசினால் அச்சிட்டு வங்கிகளினூடாக வெளியிடப்பட்டதாகக்கூறுகிறார்கள் ஆனால் அந்த நாணயத்தினை மக்கள் இன்றுவரை காணவில்லை என கூறுகிறார்கள் ( உண்மைத்தன்மை தெரியவில்லை).

அது போல இலங்கை அர்சு செயற்படவில்லை என நம்புகிறேன் (எனது அபிப்பிராயம் மட்டுமே) எனெனில் இந்த தொகை ஏறத்தாழ $700 மில்லியன், அரசுக்கு 8 மாதகாலத்தில் 1.5 பில்லியன் கடன் வட்டி கட்ட வேண்டும் அரசின் அன்னிய செலாவணி இருப்பு ஏறத்தாழ 2 பில்லியனுக்கு குறைவாக உள்ளது. இந்தநிலையில் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியென அரசு பெரும்நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அரசு பெரும் பொறியில் சிக்கியுள்ளது ஒரு கதை சொல்வார்கள் ஆடு, புல், புலி என்று, இதை சதுரங்கத்தில்  இராசாவுக்கு வைத்த குறி என்பது போல.

புதிய பணம் அச்சிடுவது பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிகுள்ளாக்கும் ஒரு தற்கால தீர்வு அது எவ்வாறெனில் ஆப்பிழுத்த குரங்கினநிலை என்பது (எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே).

இப்போது அதற்காகவே உலகதமிழருடன் அரசு பேசவேண்டும் என விரும்புகிறது, இப்போது அரசுக்கு வேண்டியது ஒரு அவகாசம்.

அல்லது ஏதாவது ஒரு வெளிநாட்டிடம் கடனாக அல்ல மானியமாக பணம் பெறவேண்டும்.

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

https://en.wikipedia.org/wiki/Panic_of_1907

நான் கூறிய சம்பவம் 1907 என கருதுகிறேன் அது இந்த சம்பவமாக இருக்கலாம் என கருதுகிறேன், அவ்வாறு பார்த்தால் 2 வருடங்கள், 1909 எந்த விதமான கருத்தும் இணையத்தில் இல்லை அமெரிக்க அரசு $5 பணம் அச்சிட்டதாக எனவே மேலே கூறிய எனது தகவல் தவறானது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vasee said:

ரதி, இந்த அரசின் தவறான கொள்கைதான் மட்டும்தான் இப்படி நிகழ்வதற்கு காரணம் என்று கூறமுடியாது என்பது எனது அபிப்பிராயம் ஆனால் அரசின் தவறான கொள்கை நிலமையை மோசமடைய செய்துள்ளது உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகை, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய கடனை திருப்பியழித்தது, இரசாயன் உர இறக்குமதி தடை தேயிலை உற்பத்தியில் 50% வீழ்ச்சி. எனது கருத்து தவறாக இருக்கலாம்.

ஏராளன் கேட்ட கேள்வி போல பலருக்கு சந்தேகம் உண்டு (15000 பில்லியன் ரூபா அச்சிடப்படுதல்), எரிகிற வீட்டில் கொள்ளையடித்தால் கணக்கு காட்ட தேவையிருக்காது என்பது போல, ஏராளனது கேள்வி சிந்திகதூண்ட கூடிய கேள்விதான் அமெரிக்காவில் 1903 அல்லது 1905 சரியாக ஆண்டு நினைவில் இல்லை, வர்த்தகத்தில் திரவநிலை குறைவடைந்து, நாடு பொருளாதாரநெருகடியை சந்தித்தபோது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டால் நாடு ஓர் சரிவை சந்திக்கும் என்பதை உணர்ந்த ஜே பி மோர்கன் பங்கு சந்தை முதலீட்டாளருக்கு தேவையான பணத்தினை வங்கிகள் வழங்க வேண்டும் என ஆணையிட்டார், வங்கிகள் தம்மிடம் பணமில்லை என்ற போது அவசர கால் வைப்புகளை பயன்படுத்த கூறினார், அதனால் உடனடி தீர்வு ஏற்பட்டது அதன் 2 ஆண்டுகள் பின் $5 நாணயம் அரசினால் அச்சிட்டு வங்கிகளினூடாக வெளியிடப்பட்டதாகக்கூறுகிறார்கள் ஆனால் அந்த நாணயத்தினை மக்கள் இன்றுவரை காணவில்லை என கூறுகிறார்கள் ( உண்மைத்தன்மை தெரியவில்லை).

அது போல இலங்கை அர்சு செயற்படவில்லை என நம்புகிறேன் (எனது அபிப்பிராயம் மட்டுமே) எனெனில் இந்த தொகை ஏறத்தாழ $700 மில்லியன், அரசுக்கு 8 மாதகாலத்தில் 1.5 பில்லியன் கடன் வட்டி கட்ட வேண்டும் அரசின் அன்னிய செலாவணி இருப்பு ஏறத்தாழ 2 பில்லியனுக்கு குறைவாக உள்ளது. இந்தநிலையில் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியென அரசு பெரும்நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அரசு பெரும் பொறியில் சிக்கியுள்ளது ஒரு கதை சொல்வார்கள் ஆடு, புல், புலி என்று, இதை சதுரங்கத்தில்  இராசாவுக்கு வைத்த குறி என்பது போல.

புதிய பணம் அச்சிடுவது பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிகுள்ளாக்கும் ஒரு தற்கால தீர்வு அது எவ்வாறெனில் ஆப்பிழுத்த குரங்கினநிலை என்பது (எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே).

இப்போது அதற்காகவே உலகதமிழருடன் அரசு பேசவேண்டும் என விரும்புகிறது, இப்போது அரசுக்கு வேண்டியது ஒரு அவகாசம்.

அல்லது ஏதாவது ஒரு வெளிநாட்டிடம் கடனாக அல்ல மானியமாக பணம் பெறவேண்டும்.

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

அரசிலும் பிழை இருக்குது ...தொடர்ச்ச்சியாய் முந்திய அரசுகள் விட்ட பிழை ..இப்ப நிலைமை இறுகி விட்டது 
முற்று முழுதாய் சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடு .முற்றாக முடங்கி கிடக்கிறது ..வருமானமில்லை செலவுகள் அதிகம் என்றால் என்ன செய்வது 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.