Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... நீங்கள் யாழ்  கட்டதுரை, என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டீர்கள்.
அது யாரென்று... யோசிக்க, பல முகங்கள் கண் முன்னே வந்து போனது. 
அதனை உறுதிப்  படுத்த, நீங்கள் அவரின் பெயரை...
"பப்ளிக்கில"...  சொல்ல விருப்பம் இல்லாவிட்டால்,   ப்ளீஸ்... தனி மடலில், ரெல் மீ. 😂

மற்றது இந்த அரிசி விசயத்தைப் பற்றி... கனக்க  கதைக்க வேண்டி உள்ளதால்,
இன்று, பின்னேரம்... விலாவரியாக கதைப்போம். 🤣

கோதாரிவிழ இண்டைக்கு வெள்ளிக்கிழமை என்ன......கிழிஞ்சுது கவுனி 😁

  • Replies 156
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2021 at 19:10, goshan_che said:

ஜேர்மனி வாசிகள் முடிந்தால் உறுதிப்படுத்தவும். அங்கே இப்போ டயபிடிஸ் என உறுதி செய்தால் அதன் பின் மாத்திரைகள் கொடுப்பதில்லையாம்? நேரே ஊசிதானாம். உள்ளதில் பக்கவிளைவு குறைவான விடயம் என்பதாலாம். 

Type 2 diabetes வரும்  காரணம் insulin resistance என்று கூறுகிறார்கள். முதலில் Type 2 diabetes அடையாளம் காணும் போது insulin அளவு அதிகமாக இருக்குமாமே. ஜஸ்ரின் அண்ணாக்கு கூட தெரிந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

Type 2 diabetes வரும்  காரணம் insulin resistance என்று கூறுகிறார்கள். முதலில் Type 2 diabetes அடையாளம் காணும் போது insulin அளவு அதிகமாக இருக்குமாமே. ஜஸ்ரின் அண்ணாக்கு கூட தெரிந்திருக்கலாம்.

இது உண்மை - அதனால் தான் நீரிழிவின் நிலை என்னவென்று ஆராயாமல் ஏன் ஐரோப்பாவில் இன்சுலின் எல்லோருக்கும் கொடுக்கிறார்கள் எனக் குழம்புகிறேன்.  எங்கள் உடலில் இரண்டாம் வகை நீரிழிவு ஆரம்பிக்கும் போது நடப்பது இது தான்: (மேலேயுள்ள படத்தோடு சேர்த்து வாசியுங்கள்)

1. இன்சுலின் சாதாரண அளவில் இருக்கும், ஆனால் இன்சுலின் வேலை செய்யாமல் விடும் (insulin resistance,  இன்சுலின் கதவு எனும் insulin receptor பழுதடைவது காரணம்)

2. இதனால் உடல் குழூக்கோசைப் பாவிக்காமல் குழூக்கோஸ் இரத்தத்தில் தேங்கும் - எனவே குழூக்கோஸ் கூடும்.

3. கணையம் இதைப் பார்த்ததும் மேலும் மேலும் இன்சுலினைச் சுரக்கும் (எனவே இன்சுலின் கூடும்!).

இரண்டாம் வகை நீரிழிவின் அடுத்த நிலை (உணவுக் கட்டுப் பாடில்லை, மருந்தும் ஒழுங்காக எடுப்பதில்லை என்று வைத்துக் கொண்டால்)

4. மிக அதிக இன்சுலின் இரத்தத்தில் தொடர்வதால் இன்சுலின் கதவு இன்னும் இறுகப் பூட்டிக் கொள்ளும் (desensitization) - எனவே  இரண்டாம் வகை நீரிழிவு இன்னும் தீவிரமாகும்.

5. இப்போது கணையமும் இன்சுலினைச் சுரந்து களைத்துப் போய் செயல்பாட்டைக் குறைக்கும் (insulin deficiency). 

6. இப்போது, இன்சுலின் பற்றாக்குறையும், செயல்படாத இன்சுலின் கதவோடு சேர்ந்து கொள்வதால் - இரண்டாம் வகை நீரிழிவும், முதலாம் வகை நீரிழிவும் சேர்ந்த நிலை ஏற்படும். 

இந்த உயிரியல் படி:

👆நிலை 3 இல் இருக்கும் ஒருவருக்கு இன்சுலின் கதவை வேலை செய்ய வைக்கும் மருந்துகளைத் தான் கொடுக்க வேண்டும் - அதிகமாகப் பயன் படுவது மெற்fபோமின் (metformin).

நிலை 6 இல் தான் இன்சுலினைக் கொடுக்க வேண்டிய தேவையேற்படும். 

எனவே, ஏன் "நீரிழிவு என்று கண்டு கொண்டதும் இன்சுலினைக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்" என்பது எனக்கு விளங்கவில்லை!
 
Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2021 at 01:54, Justin said:

கீழே இருக்கும் படத்தை அன்புடன் நானே தயாரித்திருக்கிறேன்😂. விடயம் இதை விட சிக்கல் என்றாலும், உங்கள் கேள்விக்கு இது பதில் தருமென நினைக்கிறேன்: இன்சுலின் போய் அதன் கதவை எங்கள் உறுப்புகளில் திறந்தால் தான், உடல் கலங்கள் சீனிக்கு கதவைத் திறக்கும்! 

அனேகமாக வயது போன பின்னர் வருவது, இன்சுலின் சுரக்கும், ஆனால் போய் அதன் கதவைத் திறக்க இயலாத நிலை - எனவே சீனியும் கலங்களுக்குள் வர முடியாமல் இரத்தத்தில் தேங்கும். இது வேறு பிரச்சினைகளையும் கொண்டு வரும். 

Picture1.jpg

படத்தை காணவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2021 at 16:24, Justin said:

3 minutes ago, ஏராளன் said:

படத்தை காணவில்லையே?

Picture1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

நேரம் எடுத்து வரைபடங்களுடன் விளக்கம் தந்ததிற்கு முதற்கண் நன்றி.

முதியவர்களுக்கு நோய்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளையவர்களையே இந்த இன்சுலின் பிரச்சனை  பிடிக்கின்றது. உடலில் உள்ள எல்லா அவயங்களுக்கும் மாற்று சிகிச்சை இருக்கும் போது இங்கே இதற்குரிய உறுப்பு மட்டும் ஏன் வேறுபட்டு நிற்கின்றது?

 எல்லா நோய்களும் ஒரே மாதிரியாக இல்லாமலிருப்பது தான் காரணம். ஒரு புற்று நோய்க்கட்டி வந்தால் அதை சிகிச்சை மூலம் அகற்றி விட்டால் அது பூரண குணமாக்குதல்.

ஆனால், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற சிக்கலான காரணங்களால் உருவாக்கும் நோய்களை மருந்துகள் மூலம் கட்டுப் படுத்தி, சாதாரண வாழ்க்கை வாழலாமேயொழிய சில புற்று நோய்க்கட்டிகள் போல அகற்றி விட முடியாது. 

இன்று இளம் ஆட்களுக்கும் இரண்டாம் வகை நீரிழிவு வருகிறது - வாழ்க்கை முறை தான் பிரதான காரணமென நினைக்கிறேன் (உலக ரீதியில் 39% பேர் அதிக உடல்நிறையுடன் இருக்கின்றனர் என்றால் அதற்குள் இளையோரும் அடங்குவது தவிர்க்க இயலாதது தானே?) .

நீரிழிவைப் பொறுத்த வரை, தற்போது வழக்கத்திலிருக்கும் மருந்துகளும், நோயுற்றவரின் முன் முயற்சியில் நிகழும் வாழ்க்கை மாற்றமும் மட்டுமே நோயால் பாதிப்படையாமல் இருக்கப் போதுமானவை!  

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சிறித்தம்பி! நான் இப்ப ஒரு உண்மையை சொல்லப்போறன். உந்த கவுனி அரிசி என்னெண்டு என்ரை கண்ணிலை பட்டது எண்டதை சொல்லுறன். என்ரை வீட்டுக்கு கிட்டடியிலை  தமிழ் நண்பர் ஒராள் இருக்கிறார். எப்பாலும் இருந்திட்டு சந்திச்சு கதைப்பம். இஞ்சை யாழிலை ஆரைப்போல இருப்பார் எண்டால் ம்....ம்.....ம்.....ம் கிட்டத்தட்ட எங்கடை கட்டதுரை மாதிரியெண்டு  சும்மா வைப்பமே. 🤣

இப்ப பிரச்சனைக்கு வாறன்....😎

என்னெண்டால் அந்த தமிழ் நண்பரை கிட்டடியிலை சந்திச்ச முட்டம் கேட்டார் தம்பி உங்கினேக்கை எங்கேயும் மாப்பிளை சம்பா அரிசி வாங்கலாமோ எண்டார்.நானெண்டால் உந்த அரிசியை இப்பதான் கேள்விப்படுறன். ஏன் என்ன விசயம் உந்த அரிசியிலை என்ன இருக்கெண்டு கேட்டன்....நரம்பு தளர்ச்சிக்கு நல்லதாம் எண்டு கேள்விப்பட்டனடாப்பா.அதுதான் நானும் ஒருக்கால் சாப்பிட்டு பாப்பம் எண்டிருக்கிறன் எண்டார்...🥰

நானும் வீட்டை வந்து  கூகிள்ளை தேடினால் கன அரிசி அயிட்டங்கள் சாரமாரியாய் வந்து விழுந்துது. அதிலை அம்பிட்டதுதான் கவுனி அரிசி....

சரி இப்ப மாப்பிளை சம்பா அரிசிக்கு வருவம்..... என்ரை ஜேர்மன் கட்டதுரை  மாப்பிளை சம்பா என்னத்துக்கு தேடினவர் எண்டு ஆராயஞ்சு பாத்தால் எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சுது....அதை என்ரை வாயாலை என்னெண்டு சொல்லுவன் மாப்பிளை சம்பா  எதுக்கு விசேசம் எண்டதை நீங்களே போய் பாருங்கோ...😁

விவசாய குடும்பம் என்கிறீர்கள் சம்பா அரிசி வகை பற்றி தெரியாதா ?... நான் மட்டுக்கு போய் தான் சாப்பிட்டுப் பழகினான்...அங்கு இந்த வித அரிசி வகைகள் பேமஸ் ...அண்மையில் கிரீச் சம்பா அரிசி தமிழ் கடையில் வாங்கி வந்து சமைத்தேன் ...மட்டுவை நினைவு படுத்தியது . அதன் சுவை சொல்லி வேலையில்லை 
 
On ‎26‎-‎10‎-‎2021 at 21:02, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று லண்டனில் கருப்பு அரிசி தேடிக் களைத்துவிட்டேன். கடைசியில் ஒரு சைனீஸ்  கடையில் கிடைத்தது.

எந்த கடையில் வாங்கினீர்கள் ?...என்ன விலை 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் நல்லதென்கிறார்களே?

பாவற்காயை பச்சையாய் அரைத்துப் போட்டு குடிக்கினம் ...வெண்டிக்காயை முனையை வெட்டிப் போட்டு முதல் நாள் ஊற போட்டு அடுத்த நாள் குடிக்கினம் ...சில பேருக்கு குறையிதாம் என்று சொல்லினம் 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

எனவே, ஏன் "நீரிழிவு என்று கண்டு கொண்டதும் இன்சுலினைக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்" என்பது எனக்கு விளங்கவில்லை!

இது எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதை என்னிடம் சொன்னவர் மருத்துவதுறையில் இல்லை ஆனால் உயிரியல் துறையில் உள்ளார். டைப் 1 ஐ சொல்கிறீர்களா என கேட்ட போது இல்லை என்றார்.

அவர்தான் எனக்கு டைப் 1.5 என்ற விடயத்தை பற்றி சொன்னவர். அதே போல் insulin resistance பற்றியும்.

அவரின்  கூற்றுப்படி எல்லா டைப் டயபிடீசும் ஓட்டோ இமுயூன் அடிப்படையிலானவையே என்கிறார்.  டைப் 1 பிறப்பிலேயே வருகிறது.

டைப் 2 வில் ஓட்டோ இமுயூன் கண்டிசனால் இன்சுலின் ரெசின்டன்ஸ் வந்து, அது உடல் பருமனை கூட்டி, டயபிடீசை தருகிறது.

1.5 இரெண்டுக்கும் இடைப்பட்டது என்கிறார்.

அவரை பொறுத்தவரை ஓட்டோ இமுயூன் கண்டிசன் ரிஸ்க் ஏலவே உள்ள ஒருவரில் டைப் 2 வை trigger பண்ணும் ஒரு காரணி என்பதை தவிர டயபிடிசில் லைவ்ஸ்டைலின் தாக்கம் குறைவு என்கிறார்.

உங்களுக்கு ஓட்டோ இமுயூன் தாக்கம் தூண்டபட ஏது நிலைகள் இருந்தால், உணவு பழக்க வழக்கத்தினால் அது டைப் 2 வை தரும்.

இந்த ஏது நிலை இல்லாவிடில் எவ்வளவு வெயிட் போட்டாலும், சீனி சாப்பிட்டாலும் டைப் 2 வராது என்கிறார் (இப்படி 70 வயசுக்கு மேலான சிலரை எனக்கு தெரியும்). 

இதை நானும் ஒரு எடுகோளாகவே கருதுகிறேன்.

ஆனால் இப்போதைய டயபடீஸ் பற்றிய ஏற்று கொள்ளபட்ட விளக்கம் எவ்வளவு தூரம் பூராணமானது என்பதிலும் எனக்கு சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கோதாரிவிழ இண்டைக்கு வெள்ளிக்கிழமை என்ன......கிழிஞ்சுது கவுனி 😁

கு.சா.., இந்தக் கடை உங்களது தானே? 😜

https://i.postimg.cc/LsJWJLLH/rice.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

கு.சா.., இந்தக் கடை உங்களது தானே? 😜

https://i.postimg.cc/LsJWJLLH/rice.jpg

😂கோதாரி விழ -கு.சா விட நம்பரும் பப்ளிக்கில போட்டு விட்டார் வன்னியர் (எனக்கு, இதை திறக்கும் போது குசா - பரிமளம் தம்பதியரின் படமும் கீழே வந்தது - கூகிளின் ஏரியாவுக்குரிய விளம்பரமோ தெரியாது , ஆனால் இதோ அந்தப் படம்!)

:103_point_down:

aHR0cDovL2NsLmltZ2hvc3RzLmNvbS9pbWdoL2ltYWdlL2ZldGNoL2FyXzM6MixjX2ZpbGwsZV9zaGFycGVuOjEwMCxmX2pwZyxnX2ZhY2VzOmF1dG8sd18xMDIwL2h0dHA6Ly9pbWdob3N0cy5jb20vdC8yMDIxLTA1LzU1NTY5My9kYTI2ZWRkMTM5OTY1YTI5N2ZkYjBiNGU2MGNmNTFmMi5wbmc.webp?v=1635533905-r170aXyCMDeIBrKZMfMd3gUDiNeMFOvnALXSDW_n4nU

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Justin said:

நிலை 3 இல் இருக்கும் ஒருவருக்கு இன்சுலின் கதவை வேலை செய்ய வைக்கும் மருந்துகளைத் தான் கொடுக்க வேண்டும் - அதிகமாகப் பயன் படுவது மெற்fபோமின் (metformin).

உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு மருந்திற்கு மாற்றீடாக இதை சாப்பிடலாம் அதை சாப்பிடலாம் என வைத்தியர்கள் பரிந்துரை செய்வார்கள். உதாரணத்திற்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பால் உணவுகள் நல்லதென கூறுவார்கள்.அதே போல் இன்சுலின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உணவுவகைகள் ஏதாவது உள்ளதா? குறிப்பாக மெற்fபோமினுக்கு ஈடாக  உணவு/பதார்த்தங்கள் ஏதாவது உள்ளதா?

மருந்து தயாரிக்கும் கொம்பனிகள் இயற்கை மருத்துவங்களை மூடி மறைக்கின்றது என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே பொது வெளியில் உலாவுகின்றது. இது எந்தளவிற்கு உண்மை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரதி said:

விவசாய குடும்பம் என்கிறீர்கள் சம்பா அரிசி வகை பற்றி தெரியாதா ?... நான் மட்டுக்கு போய் தான் சாப்பிட்டுப் பழகினான்...அங்கு இந்த வித அரிசி வகைகள் பேமஸ் ...அண்மையில் கிரீச் சம்பா அரிசி தமிழ் கடையில் வாங்கி வந்து சமைத்தேன் ...மட்டுவை நினைவு படுத்தியது . அதன் சுவை சொல்லி வேலையில்லை 

இலங்கையின் வடபகுதியில் எல்லா நெல்லுகளும் விதைப்பதில்லை. 
கூடுதலாக மொட்டைக்கறுப்பன் தான். மற்றும்படி சங்கக்கடையிலை கூப்பனுக்கு வாற சேரல் பச்சை எண்ட சிவப்பு அரிசி.மற்றது சீனாக்காரன்ரை வெள்ளைப்பச்சை அரிசி.மற்றது மிச்சாட்டு....

தொதல் ஈழத்து உணவு

 http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-prn1/q71/1013506_206225486168487_509864190_n.jpg
தொதல்
ஈழத்து தமிழர்கள்உணவில் ஏதாவது ஒருவகையில் தேங்காய் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.
அதனாலேயே
தொதல் அங்கு பிறந்தது என்று சொல்லலாம்.

தேவையானவை[தொகு]
நான்கு தேங்காய்கள்
ஒரு சுண்டு சிவத்தப் பச்சைஅரிசி (சேரல்பச்சை)
இரண்டு கிலோ கித்துள்பனங்கட்டி அல்லது சர்க்கரை அல்லது சீனி (brown suger)
முந்திரிப்பருப்பு (தேவையான அளவு)
ஏலம் (சுவைக்கேற்ப)
செய்முறை[தொகு]
அரிசியை ஊறவைத்து இடித்தோ, அரைத்தோ மாவாக எடுத்துக் கொள்ளவும். (வறுக்கக் கூடாது)
தேங்காய்களைத் துருவி தண்ணீர் கலந்து கெட்டியான பாலாக பிளிந்து எடுத்துக் கொள்ளவும்.
பிளிந்து எடுக்கப் பட்ட பால், சர்க்கரை, அரிசிமா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இருப்புச்சட்டியில் இட்டு அளவான சூட்டில், சட்டியில் எண்ணெய் பிறந்து, ஒட்டாத பதம் வரும்வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சரியான பதம் வரும்போது வாசனைக்கு தூளாக்கிய ஏலத்தினையும், சுவைக்கு சிறிதாக்கிய முந்திரிப்பருப்பையும் சேர்த்து தட்டையான பாத்திரத்தில் பரப்பி விட வேண்டும். சூடு ஆறியதும் விருப்பத்துக்கு ஏற்ற வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 17:57, ரதி said:

விவசாய குடும்பம் என்கிறீர்கள் சம்பா அரிசி வகை பற்றி தெரியாதா ?... நான் மட்டுக்கு போய் தான் சாப்பிட்டுப் பழகினான்...அங்கு இந்த வித அரிசி வகைகள் பேமஸ் ...அண்மையில் கிரீச் சம்பா அரிசி தமிழ் கடையில் வாங்கி வந்து சமைத்தேன் ...மட்டுவை நினைவு படுத்தியது . அதன் சுவை சொல்லி வேலையில்லை 
 
எந்த கடையில் வாங்கினீர்கள் ?...என்ன விலை 

இங்குள்ள சைனீஸ் கடை ஒன்றில். 1 kg - £4. 99. இந்தியன் கடைகள் ஒன்றிலும் இல்லை. onlin இல் வாங்கலாம்.   

23 hours ago, குமாரசாமி said:

உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு மருந்திற்கு மாற்றீடாக இதை சாப்பிடலாம் அதை சாப்பிடலாம் என வைத்தியர்கள் பரிந்துரை செய்வார்கள். உதாரணத்திற்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பால் உணவுகள் நல்லதென கூறுவார்கள்.அதே போல் இன்சுலின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உணவுவகைகள் ஏதாவது உள்ளதா? குறிப்பாக மெற்fபோமினுக்கு ஈடாக  உணவு/பதார்த்தங்கள் ஏதாவது உள்ளதா?

மருந்து தயாரிக்கும் கொம்பனிகள் இயற்கை மருத்துவங்களை மூடி மறைக்கின்றது என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே பொது வெளியில் உலாவுகின்றது. இது எந்தளவிற்கு உண்மை?

கடந்த ஆண்டு ஒரு வன்னியில் இருக்கும் ஒரு வைத்தியர் உணவு முறையால் மருந்தின்றி இதை மாற்றலாம் என்று ஒரு காணொளியில் பேசியிருந்தார். எனக்கு வற்சப்பில் வந்திருந்தது. ஆனால் தேடுகிறேன் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2021 at 00:17, குமாரசாமி said:

மருந்து தயாரிக்கும் கொம்பனிகள் இயற்கை மருத்துவங்களை மூடி மறைக்கின்றது என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே பொது வெளியில் உலாவுகின்றது. இது எந்தளவிற்கு உண்மை?

எனக்கும் இந்த டவுட் கனகாலாமாய் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 21:52, Justin said:

 எல்லா நோய்களும் ஒரே மாதிரியாக இல்லாமலிருப்பது தான் காரணம். ஒரு புற்று நோய்க்கட்டி வந்தால் அதை சிகிச்சை மூலம் அகற்றி விட்டால் அது பூரண குணமாக்குதல்.

ஆனால், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற சிக்கலான காரணங்களால் உருவாக்கும் நோய்களை மருந்துகள் மூலம் கட்டுப் படுத்தி, சாதாரண வாழ்க்கை வாழலாமேயொழிய சில புற்று நோய்க்கட்டிகள் போல அகற்றி விட முடியாது. 

இன்று இளம் ஆட்களுக்கும் இரண்டாம் வகை நீரிழிவு வருகிறது - வாழ்க்கை முறை தான் பிரதான காரணமென நினைக்கிறேன் (உலக ரீதியில் 39% பேர் அதிக உடல்நிறையுடன் இருக்கின்றனர் என்றால் அதற்குள் இளையோரும் அடங்குவது தவிர்க்க இயலாதது தானே?) .

நீரிழிவைப் பொறுத்த வரை, தற்போது வழக்கத்திலிருக்கும் மருந்துகளும், நோயுற்றவரின் முன் முயற்சியில் நிகழும் வாழ்க்கை மாற்றமும் மட்டுமே நோயால் பாதிப்படையாமல் இருக்கப் போதுமானவை!  

ஜஸ்ரின் அண்ணை எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு, நேரம் இருக்கும் போது தெளிவுபடுத்துங்கள். அதாவது Type2 diabetes இல் Insulin போடும் நிலை வரும்போது Insulin resistance இருக்காதா? மற்றது Type2 diabetes ஐ கட்டுப்படுத்த நீரருந்தும் உண்ணாவிரதம் பயன்தரும் என்று சொல்கிறார்களே உண்மையா? இதன் போது கலங்களில் உள்ள கழிவுகள் உணவாகுமாமே.

Autophagy is the body's way of cleaning out damaged cells, in order to regenerate newer, healthier cells, according to Priya Khorana, PhD, in nutrition education from Columbia University. “Auto” means self and “phagy” means eat. So the literal meaning of autophagy is “self-eating. இது சம்பந்தமாகவும் உங்கள் கருத்தை சொல்லுங்கோ.

https://www.healthline.com/health/autophagy#benefits

இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களில் உள்ள விரத முறைகளுக்கும் autophagy ற்கும் ஏதும் தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 18:17, குமாரசாமி said:

உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு மருந்திற்கு மாற்றீடாக இதை சாப்பிடலாம் அதை சாப்பிடலாம் என வைத்தியர்கள் பரிந்துரை செய்வார்கள். உதாரணத்திற்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பால் உணவுகள் நல்லதென கூறுவார்கள்.அதே போல் இன்சுலின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உணவுவகைகள் ஏதாவது உள்ளதா? குறிப்பாக மெற்fபோமினுக்கு ஈடாக  உணவு/பதார்த்தங்கள் ஏதாவது உள்ளதா?

மருந்து தயாரிக்கும் கொம்பனிகள் இயற்கை மருத்துவங்களை மூடி மறைக்கின்றது என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே பொது வெளியில் உலாவுகின்றது. இது எந்தளவிற்கு உண்மை?

மெற்fபோமின் நான்கு வெவ்வேறு வழிகளில் இரத்தத்தில் சீனியைக் குறைக்கிறது. அந்த வழிகள் எல்லாவற்றையும் பிரதி செய்யும் இயற்கை உணவுகளை நான் அறியவில்லை. ஆனால், இரண்டு வழிகள் நீங்கள் மெற்fபோமினின் செயல்பாட்டைப் பிரதி செய்ய உதவும்:

1. குடலில் இருந்து உறிஞ்சப் படும் சீனியைக் குறைத்தல்: இது உணவுக்கட்டுப்பாட்டினால் ஓரளவு சாத்தியம்.

2. இன்சுலின் தொழிற்பாட்டை அதிகரித்தல்: இது மேலே வழி 1 உடன் சேர்த்து உடற்பயிற்சிகளை நாளாந்தம் செய்யும் போது சிறிது செய்யப் படலாம். முக்கியமாக எங்கள் தசைகள் மிகப் பெரியளவு சீனியை பாவிக்கும் அங்கங்கள். வாரம் இரண்டு, மூன்று தரம் மிதமான தசைப்பயிற்சிகள் மூலம் தசைகளில் இருக்கும் கொழுப்பைக் குறைத்து, அவற்றைப் பெரிதாக்கினால் இன்சுலின் தொழிற்பாட்டை சிறிது அதிகரிக்க முடியும்.

இன்னொருவரின் படுக்கயறை வரை பார்க்கக் கூடிய இணைய யுகத்தில் மருந்துக் கம்பனிகள் இயற்கை மருத்துவ வழிகளை எப்படி மறைக்க முடியும்? உண்மையில் மறைக்க ஒன்றும் இல்லை! சத்தான, சமமான உணவு முறை நலத்திற்கு நல்லது - ஆனால், நீரிழிவு போன்ற சிக்கலான நோய்களைக் குணமாக்கும் எந்த silver bullet உம் இயற்கை மருத்துவத்தில் இருப்பதாக நான் அறியவில்லை. அப்படி இருப்பதாகச் சொல்லி பாம்பெண்ணை விற்போர் தான் சில நிரூபிக்கப் பட்ட மருத்துவ முறைகளை மக்கள் கைவிட செய்து தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்கின்றனர் என நான் நினைக்கிறேன்.    

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2021 at 09:10, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணை எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு, நேரம் இருக்கும் போது தெளிவுபடுத்துங்கள். அதாவது Type2 diabetes இல் Insulin போடும் நிலை வரும்போது Insulin resistance இருக்காதா? மற்றது Type2 diabetes ஐ கட்டுப்படுத்த நீரருந்தும் உண்ணாவிரதம் பயன்தரும் என்று சொல்கிறார்களே உண்மையா? இதன் போது கலங்களில் உள்ள கழிவுகள் உணவாகுமாமே.

Autophagy is the body's way of cleaning out damaged cells, in order to regenerate newer, healthier cells, according to Priya Khorana, PhD, in nutrition education from Columbia University. “Auto” means self and “phagy” means eat. So the literal meaning of autophagy is “self-eating. இது சம்பந்தமாகவும் உங்கள் கருத்தை சொல்லுங்கோ.

https://www.healthline.com/health/autophagy#benefits

இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களில் உள்ள விரத முறைகளுக்கும் autophagy ற்கும் ஏதும் தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கா?

ஏராளன், insulin resistance மட்டும் இருக்கும் போது வெளியேயிருந்து உடலுக்கு இன்சுலின் கொடுத்தால் அது பிரச்சினைக்குரியது, resistance அதிகரிக்கும்.  இதனால் வட அமெரிக்காவில் மருத்துவர்கள் இதைச் செய்வதில்லை - ஐரோப்பாவிலும் நான் மருத்துவ அமைப்புகளின் பிரசுரங்களைப் பார்க்கும் போது இப்படி இன்சுலின் கொடுப்பதில்லை என அறிகிறேன்.

ஆனால், insulin resistance உடன் இன்சுலின் சுரப்புக் குறைபாடும் (insulin deficiency) இருந்தால், இன்சுலின் கொடுக்கப் பட வேண்டும். 

விரதம்: இதைப் பற்றி பல ஆய்வுகள் நடந்து சில நல்ல முடிவுகள் வந்திருக்கின்றன - பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

சுருக்கமாக: விரதம் இருப்பது நல்லது, வருடத்தில் ஒரு தடவை இருப்பது (முஸ்லிம், கிறிஸ்தவ மத அனுட்டானங்கள்) பெரிதாக  நோய்த்தடுப்பில் பயன் தராது . சைவர்கள், இந்துக்கள் போல அடிக்கடி விரதங்கள் இருப்பது பலன் தரும். ஆனால், விரதம் இருக்கும் போது எம் உடல் உறுப்புகள்  கழிவுகளை உணவாகக் கொள்ளும் என்பது தவறான தகவல். Autophagy என்பதை தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். Autophagy இல் இருந்து சக்தி வராது - சேதமடைந்த திசுக்கள் அகற்றப் படுதல் நடக்கும். இதற்கும் உடலில் சக்தித் தேவைக்கும் தொடர்புகள் பெரிதாக இல்லை!     

On 31/10/2021 at 14:10, ஏராளன் said:

இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களில் உள்ள விரத முறைகளுக்கும் autophagy ற்கும் ஏதும் தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கா?

விரதம் நோன்பு போன்றவை தோல்வியடைந்த ஒன்றாகவே கருதுகிறேன்.

உலக வரைபடத்தில் அதி தீவிர இஸ்லாமியர்களின் பிரதேசங்களில்தால் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோய் உள்ளவர்களைக் காட்டுகிறது. இது மட்டுமல்லாமல் நோன்பு நாட்களில்தான் அதிக உணவு விற்பனை நடக்கிறதாம். எமது உடல் மிகப் புத்திசாலித்தனமாகச் செயற்படும். அதிக நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உணவு கிடைக்கும் வேளையில் அவற்றைச் (கொழுப்பாக மாற்றி) சேமிக்கப் பழகிக் கொள்ளும். இதனால்தான் 30 நாள் நோன்பு இருந்தாலும் பாரிய அளவில் உடலில் மெலிவு ஏற்படுவதில்லை.

சைவர்களின் விரதமும் இன்று இப்படித்தான். விரதம் என்றால் 7-8 மரக்கறிகளுடன் பாயாசம் என்று வயிறு முட்டச் சாப்பிடுதல் என்றாகி விட்டது. விரத நாள் வந்தால் மரக்கறி வாங்குவதிலும் சமையல் ஏற்பாட்டிலும்தான் முக்கிய கவனம் இருக்கும். கந்தசஸ்டி கௌரி விரதங்கள் வருடக்கணக்காகப் பிடிப்பவர்களுக்கு நீரிழிவு வராததாக நான் கேள்விப்படவில்லை.

பிரான்சில் எனது நண்பன் ஒருவன் சிலருடன் குழுவாக மலைப் பகுதிக்குச் சென்று ஒரு வாரம் சாப்பிடாமல் தினமும் 4 மணிநேரம் நடைப் பயிற்சி செய்வான். காலையில் ஒரு கரண்டி ஒலிவ் எண்ணையும் 2 நேரம் எலுமிச்சைச் சாறு கலந்த நீரும் மட்டுமே ஆகாரம். நீர் போதிய அளவு குடிக்கலாம். இதன் மூலம் உடலில் தேயையற்ற கலங்களை அழித்து புற்றுநோய் போன்ற வியாதிகளையும் தடுக்கலாம் என்பான். இந்த உணவுக் கட்டுப்பாட்டு முறை ஐரோப்பாவில் பரவி வருகிறது, குறிப்பாக ஜேர்மனியில் அதிகமாக உள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

நீங்கள் சொல்லும் அனேக தகவல்களோடு உடன் படுகிறேன் : குறிப்பாக இஸ்லாமியரின் நோன்பு - அதிகாலையில் 3000 கலோரியை உள்ளெடுத்த பின்னர் நாள்முழுவதும் பட்டினி - பின்னர் மாலையில் 4 பேரீச்சம் பழம் (60 கிராம் சீனி அதில் மட்டும்!😄) - ஆரோக்கியத்தைத் தரவே மாட்டாது. கிறிஸ்தவ 40 நாள் நோன்பும் அப்படியே. 

ஆனால், அதிகம் சோறு, கறி இல்லாமல் செய்யும் இடைக்கிடையேயான விரதங்களில் சில நன்மைகள் இருக்கலாம் என நேரடியான அவதானங்களின்றி ஊகிக்கிறார்கள். இது பற்றி மேலும் தனியாக பின்னர் எழுதுகிறேன். அது வரைக்கும் கீழிருக்கிற கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5783752/

இதில் குறிப்பிடப் படும் time-restricted feeding (TRF) என்பது நான் பெரும்பாலும் கடைப்பிடிப்பது. இரவு 8 மணி தாண்டினால் பாரிய இரவுணவை எடுத்துக் கொள்வதில்லை (மனைவியின் மனநிலையைப் பொறுத்து சில சமயம் தளர்த்திக் கொள்வேன்!😂)   

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

மிளகும் தண்ணியும் உள்ள கந்த சஷ்டி விரதம் உங்கள் பார்வையில் சொல்லுங்கள் .

எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுவது உண்டு 

சிலவேளை அப்படியொரு விரதமே கேள்விப்பட்டு இருக்கவில்லை என்று கடந்து போவீர்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

மிளகும் தண்ணியும் உள்ள கந்த சஷ்டி விரதம் உங்கள் பார்வையில் சொல்லுங்கள் .

எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுவது உண்டு 

சிலவேளை அப்படியொரு விரதமே கேள்விப்பட்டு இருக்கவில்லை என்று கடந்து போவீர்கள் 🤣

குழந்தைப்பேறில்லாதவர்களுக்கு கந்த சஷ்டி விரதம் இருந்த பின் குழந்தை பிறப்பு நடப்பதாக செவி வழி செய்திகள் உண்டு.

கந்த சஷ்டி விரதம் 5 நாட்கள் ஒரு வேளை உணவுடன் 6ஆவது நாள் பால் பழம் அல்லது 5 நாட்கள் பாலும் பழமும் 6 ஆவது நாள் மிளகும் தண்ணியும். 7ஆவது நாள் காலையில் பாறணை சோறு கறி.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

மிளகும் தண்ணியும் உள்ள கந்த சஷ்டி விரதம் உங்கள் பார்வையில் சொல்லுங்கள் .

எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுவது உண்டு 

சிலவேளை அப்படியொரு விரதமே கேள்விப்பட்டு இருக்கவில்லை என்று கடந்து போவீர்கள் 🤣

மிளகும் தண்ணியும் கொண்ட கந்த சஷ்டி விரதம் கேள்விப்பட்டிருக்கிறேன் - அதனால் நீரிழிவோ வேறெந்த அனுசேபம் தொடர்பான நோயோ குணமானதாக கேள்விப் படவில்லை - அப்படிக் குணமாகியிருந்தால் நீங்களே இங்கே பிரசுரமானதை இணைத்து விடுங்கள் - அறிந்து கொள்கிறேன்.

7 hours ago, ஏராளன் said:

குழந்தைப்பேறில்லாதவர்களுக்கு கந்த சஷ்டி விரதம் இருந்த பின் குழந்தை பிறப்பு நடப்பதாக செவி வழி செய்திகள் உண்டு.

கந்த சஷ்டி விரதம் 5 நாட்கள் ஒரு வேளை உணவுடன் 6ஆவது நாள் பால் பழம் அல்லது 5 நாட்கள் பாலும் பழமும் 6 ஆவது நாள் மிளகும் தண்ணியும். 7ஆவது நாள் காலையில் பாறணை சோறு கறி.

செவி வழிக்கதைகளின் முக்கியத்துவம் என்னைப் பொறுத்த வரையில் மிகவும் குறைவு. யாரும் நம்பலாம், ஆனால் பொதுவான மருத்துவமாக மக்கள் நம்ப வேண்டுமென்றால் யாராவது கவனமாக ஆய்வு செய்து அதை பொது வெளியில் விட்டால் மட்டுமே முடியும்!

இயற்கை மருத்துவ முறைகளின் பாரிய குறைபாடே இது தான்: பரியாரியும், நோயாளியும் மட்டும் "இது குணமாக்கி விட்டது" என்று நம்புவர். ஆனால், இதை எப்படி ஆவணப் படுத்தி உலகத்திற்கு பயனுள்ளதாக்கலாம் என்று யாரும் முயல்வதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இயற்கை மருத்துவ முறைகளின் பாரிய குறைபாடே இது தான்: பரியாரியும், நோயாளியும் மட்டும் "இது குணமாக்கி விட்டது" என்று நம்புவர். ஆனால், இதை எப்படி ஆவணப் படுத்தி உலகத்திற்கு பயனுள்ளதாக்கலாம் என்று யாரும் முயல்வதில்லை!

ஏன் யாரும் முயல்வதில்லை? 

முயன்றவர் ஒருவர் பற்றி குறுந்தகவல். அவர் பெயர் செந்தி்ல்மோகன். ஊரிலே எங்கள் “குமருகள்” கருக்கலைக்க பப்பா காய் சாற்றை பருகுவதை நன்கு அறிந்தவர். இங்கிலாந்தின் சசக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி ஆய்வுக்கு எப்படி பப்பா காய் கருக்கலைக்கிறது என்பதை தேர்ந்தெடுத்தார் பிற்போக்கான கிறீஸ்தவர்களால் நிறைந்துள்ள கிறீஸ்தவ நாடுகளில் கருக்கலைக்க தடை. செந்தில்மோகனின் ஆய்வு வெளிவந்ததும் கிறீஸ்தவ உலக “குமருகளும்” கைலாசம் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள். அண்ணர் உலகப்புகழ் பெற்றார். இந்த களத்தில் நிச்சயம் ஒரு அங்கத்தவர் என்றே நினைக்கிறேன். நான் எழுதியது தவறானால் திருத்துவார். மற்றவர்களும் அவர் போல் முன்வந்து இயற்கை மருத்துவ முறைகளின் பயன் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்- நீங்களும் தான். 😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.