Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபத்தில் பேசிவிடுகிறேன்... ஆனாலும் அது தவறுதான்! - சீமான் ஓப்பன் டாக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் மதுவையும் சினிமாவையும் லஞ்சத்தையும் கட்டுப்படுத்திவிட்டு திராவிட கட்சிகள் வெற்றி பெறட்டும் பார்ப்போம்? 

நீங்கள் தமிழகத்திலிருந்து வரும் சினிமா எதையும் பார்ப்பதில்லை தானே ?😯

  • Replies 78
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இந்த பத்திரிகையை  இங்கு அடிக்கடி இணைக்கிறீர்கள். யுத்தத்துக்கும் கருணாநிதிக்கும் என்ன தொடர்பு? 

கருணாநிதியா உங்களை யுத்தம் செய்ய சொன்னது? 

நியாயமான கேள்விகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, shanthy said:

நீங்கள் தமிழகத்திலிருந்து வரும் சினிமா எதையும் பார்ப்பதில்லை தானே ?😯

இலங்கையை விட்டு வெளியேறிய பின் இந்திய திரைப்படம் பார்ப்பது குறைவு. அதிலும்2000 ஆண்டுக்கு பின்னர் இந்திய திரைப்படங்கள் பார்ப்பதை முற்றாக தவிர்த்து விட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, goshan_che said:

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்,

என்ன….எப்பெல்லாம் பொது கூட்டத்தில உணர்சிய கட்டுபடுத்த முடியலயோ அப்பெல்லாம் ரேப் பண்ணிடுவேன் எண்டு பேசுவார்……

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்,

எப்பெல்லாம் ரேப் பண்ணிடுவேன் பேசுவாரோ, அப்பெல்லாம் அரசியல் தலைவர்களை ஒருமையில் பேசுவார்….

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்

எப்பெல்லாம் ஒருமையில் பேசுறாரோ அப்பெல்லாம் ரஜனி காந்த் மகளை பற்றி முச்சந்தியில் ஆபாசமாக பேசிய சாட்டை மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுடுவார்..

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்🤣.

இதற்கெல்லாம் பதில் தந்ததற்கு அப்புறமும் இந்த திரியில் நீட்டி முழங்கினீர்களே அதற்கு ஒரு சபாஷ் 👍🏽 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இதற்கெல்லாம் பதில் தந்ததற்கு அப்புறமும் இந்த திரியில் நீட்டி முழங்கினீர்களே அதற்கு ஒரு சபாஷ் 👍🏽 🤣
 
அண்ணை நீங்கள் தந்த பதிலுக்கு வரிக்கு வரி கோட் பண்ணி பதில் போட்டாச்சு அப்பவே. 

நான் சொன்னதுக்கு பதிலா எதுவும் எழுதாமல் நீங்கள் கீழ் காணும் கருத்தை என்னை பற்றியோ இல்லை பொதுவாகவோ எழுதினீர்கள் அதுதான் அதை தனி மனித தாக்குதல் என கடந்து போய், தொடர்ந்தும் கருத்தை கருத்தால் வெட்டி ஆடியவர்களுடன் நீட்டி முழக்கினேன்.

11 hours ago, குமாரசாமி said:

இங்கு ஒரு சிலர் சீமானை தூற்றுவதன் மூலம் திராவிடத்திற்கு வெள்ளை அடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர்.

முன்னர் போல் இப்பெல்லாம் சிலருடன் சரிக்கு, சரி தனிமனிததாக்குதல் செய்ய மனம் விரும்புவதில்லை. 

சிலருடன் மட்டும்தான் 🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, tulpen said:

இந்த பத்திரிகையை  இங்கு அடிக்கடி இணைக்கிறீர்கள். யுத்தத்துக்கும் கருணாநிதிக்கும் என்ன தொடர்பு? 

தொடர்பில்லை  சரிதான். யுத்தம் நடக்கும் போது அவர் ஏன் மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்தார்? போர்  முடிந்து விட்டது என ஏன் அறிக்கை விட்டார்?

2 hours ago, குமாரசாமி said:

தொடர்பில்லை  சரிதான். யுத்தம் நடக்கும் போது அவர் ஏன் மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்தார்? போர்  முடிந்து விட்டது என ஏன் அறிக்கை விட்டார்?

கருணாநியின் உண்ணாவிரதம் என்பது அவரது இயலாமையை மறைக்க அவர் மேற்கொண்ட நாடகம். அவரது வழமையான அரசியல் ஸ்ரண்ட். ஆனால் இதற்கும் முள்ளிவாய்க்கால் தோல்விக்கும்  என்ன தொடர்பு ?  கருணாநிதி  உண்ணாவிரதம் இருக்கும் போது நிலைமை தலைக்கு மேல் போய்விட்டது.   மேல் எவராலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது. தோறு ஓடிக்கொண்டிருக்கும் புலிகளுக்கு ஓய்வு கொடுக்க ஶ்ரீலங்கா அரசு முட்டாள் அல்ல. இதை அவர்கள் வெளிப்படையாகவே கூறியிருந்தனர் 

மக்களை யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கும்படி ஜனவரி மாதத்தில் இருந்து பல முறை இணைத்தலைமை நாடுகளால் கோரிக்கை வைத்தும் அதற்கு அனுமதி வழங்காது யார் செய்த தவறு?

மீண்டும் கூறுகிறேன் மக்களின் அழிவுக்கும் போராட்ட தோல்விக்கும் முழுப்பொறுப்பும் யுத்தம் சமாதானம் தொடர்பான சகல  அரசியல் தீர்மானங்களையும் எடுத்தவர்கள் மட்டுமே. புலம் பெயர் புலிவால்களும் பணத்தை ஏப்பம் விட்ட திருடர்களும் இதன் முக்கிய குற்றவாளிகள். அதனால் தான் அவர்கள் வெளியார் மீது எப்போதும் பழி போடுவதில் தீவிரமாக உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2021 at 15:25, goshan_che said:

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்,

என்ன….எப்பெல்லாம் பொது கூட்டத்தில உணர்சிய கட்டுபடுத்த முடியலயோ அப்பெல்லாம் ரேப் பண்ணிடுவேன் எண்டு பேசுவார்……

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்,

எப்பெல்லாம் ரேப் பண்ணிடுவேன் பேசுவாரோ, அப்பெல்லாம் அரசியல் தலைவர்களை ஒருமையில் பேசுவார்….

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்

எப்பெல்லாம் ஒருமையில் பேசுறாரோ அப்பெல்லாம் ரஜனி காந்த் மகளை பற்றி முச்சந்தியில் ஆபாசமாக பேசிய சாட்டை மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுடுவார்..

மாப்பிள்ளை சரியான ஜெண்டில்மேன்🤣.

அண்ணன் ஏதோ நல்ல காரியமாக தான் எல்லாம் சொல்லுவார். உங்களுக்கு அவரை சீண்டாமல் நித்திரை வராது. நீங்கள் இருந்து (நின்று) பாருங்கோ அடுத்த தேர்தலில் ஆட்சியைப்பிடிக்காமல் விடுறேல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

அவரது வழமையான அரசியல் ஸ்ரண்ட். 

அவரது மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வழமையான அரசியல் ஸ்ரண்ட்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, tulpen said:

இணைத்தலைமை நாடுகள் உட்பட அனைவருடனும் முரண்பட்டு பேச்சுவார்ததையை முறித்து யுத்தத்திற்கு திரும்பும் போது இப்படி அழிவு வரும் என்பது தெரிந்திருக்கவில்லையா? 

அன்ரன் பாலசிங்கத்ததின் அறிவுரையை கூட புறக்கணித்து புலம்பெயர் புலி வால்கள் யுத்ததிற்கை திரும்புவதற்கு தூபம் போட்ட போது  யோசிக்கவில்லையா? 

ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர் நேரடியாக வன்னிக்கு வந்து எச்சரிக்கை விடுத்தபோது சுதாகரித்திருக்க வேண்டாமா? 

பின்னர் ஐரோப்பிய யூனியன் தடை  செய்தபோதாவது அறிவுக்கண்ணை திறந்திருக்க வேண்டாமா?

பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும்  யசிர் அரபாத்துக்கும் போடாத தடைகளையும் எச்சரிக்கைகளையுமா புலிகளுக்கு போட்டார்கள். பலஸ்தீன விடுதலை இயக்கம் உலக பயங்கரவாத முன்னோடிகள் அவர்களைக்கூட மேசைக்கு அழைத்து சரிசமமாக வைத்து சமாதானம் பேசியது சர்வதேசம்.

 ஒரு காலத்தில் பயங்கரவாதியாக கருதப்பட்ட யசீர் அரபாத்துக்கு கடைசியில் நோபல் பரிசு கூட கொடுத்தார்களே...

****
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

தலைவர் எல்லாவற்றையும் நிறுத்தி சமாதானம் பேசப்போயிருந்தால் பலஸ்தீன மக்களுக்கும் யாசிர் அரபாத்திற்கும் ஏற்பட்ட நிலைமைதான் எமக்கும் வந்திருக்கும் என்பது சில ஜென்மங்களுக்கு புரிவதில்லை குசா அண்ணை!

பலஸ்தீனம், இன்று ஐ. நா வால அங்கீகரிக்கப்பட்ட தேசமாக  மிளிருவதற்கு, அரபாத் பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தி அரசியல் பேச்சுக்களை முன்னெடுத்ததே காரணம். பலஸ்தீனத்தின் இன்றைய பிரச்சனைகளுக்கு ஹமாஸ் இயக்கத்தின் பயங்கரவாத செயல்களும் ஒரு முக்கிய காரணம். ஹமாஸ் இயக்கதை சாட்டாக வைத்தே இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துகிறது.  

இதே சந்தர்பபம் எமக்கும் வழங்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்தாதது எமது தவறு. 

1 hour ago, Eppothum Thamizhan said:

தலைவர் எல்லாவற்றையும் நிறுத்தி சமாதானம் பேசப்போயிருந்தால் பலஸ்தீன மக்களுக்கும் யாசிர் அரபாத்திற்கும் ஏற்பட்ட நிலைமைதான் எமக்கும் வந்திருக்கும் என்பது சில ஜென்மங்களுக்கு புரிவதில்லை குசா அண்ணை!

 இப்போது மட்டும் சமாதானத்தை நிறுத்தி சண்டை செய்யப் போய்  சாதித்தது என்ன? அழிவு, அழிவு, அழிவு.  ஏதோ சண்டை செய்து சாதித்துவிட்டதை போல பெருமை வேறு.   

ஏற்கனவே இருந்ததை விட மோசமான நிலை. இணக்க அரசியலும் செய்ய இயலாத எதிப்பரசியலும் செய்யமுடியாத அவல நிலை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

பலஸ்தீனம், இன்று ஐ. நா வால அங்கீகரிக்கப்பட்ட தேசமாக  மிளிருவதற்கு, அரபாத் பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தி அரசியல் பேச்சுக்களை முன்னெடுத்ததே காரணம்.

புலிகளும் போர் நிறுத்தம் செய்துவிட்டுத்தான் பல  அரசியல் பேச்சுவார்தைகளை நடத்தினார்கள். அந்த நேரத்தில்தான் சிங்களம் தன்னை சுதாகரித்து ஆயுதபலத்தை சம்பாதித்தது.

4 hours ago, tulpen said:

 இப்போது மட்டும் சமாதானத்தை நிறுத்தி சண்டை செய்யப் போய்  சாதித்தது என்ன? அழிவு, அழிவு, அழிவு.  ஏதோ சண்டை செய்து சாதித்துவிட்டதை போல பெருமை வேறு.   

ஏற்கனவே இருந்ததை விட மோசமான நிலை. இணக்க அரசியலும் செய்ய இயலாத எதிப்பரசியலும் செய்யமுடியாத அவல நிலை. 

உந்த கோதாரிவிழுந்த இணக்க அரசியலையும் எதிர்ப்பு அரசியலையும் இயக்கங்கள் களத்திலை இறங்க முதல் செய்திருக்கலாமே?
ஏன் செய்யேல்லை?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

தலைவர் எல்லாவற்றையும் நிறுத்தி சமாதானம் பேசப்போயிருந்தால் பலஸ்தீன மக்களுக்கும் யாசிர் அரபாத்திற்கும் ஏற்பட்ட நிலைமைதான் எமக்கும் வந்திருக்கும் என்பது சில ஜென்மங்களுக்கு புரிவதில்லை குசா அண்ணை!

15 hours ago, குமாரசாமி said:

பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும்  யசிர் அரபாத்துக்கும் போடாத தடைகளையும் எச்சரிக்கைகளையுமா புலிகளுக்கு போட்டார்கள். பலஸ்தீன விடுதலை இயக்கம் உலக பயங்கரவாத முன்னோடிகள் அவர்களைக்கூட மேசைக்கு அழைத்து சரிசமமாக வைத்து சமாதானம் பேசியது சர்வதேசம்.

 ஒரு காலத்தில் பயங்கரவாதியாக கருதப்பட்ட யசீர் அரபாத்துக்கு கடைசியில் நோபல் பரிசு கூட கொடுத்தார்களே...

****

உலக வரலாற்றை cherry-pick செய்து எமக்கு வேண்டியதை மட்டும் விவாதத்திற்குப் பயன்படுத்தும் நிலை தெரிகிறது: அமெரிக்காவில் தடை செய்யப் பட்ட பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அமெரிக்காவிற்கு வந்து சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட அனுமதிக்கப் பட்டது 1993 இல். இதன் பிறகு 2001 இல் என்ன நடந்தது, ஹிஸ்புல்லாக்களும், புலிகளும் எல்லாரும் ஒரே கூடையில் போட்டு தடை செய்யப் பட என்ன காரணமெனப் புரிந்தால் , 2002/3 இல் புலிகளை அமெரிக்க வரவேற்றிருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பின் அபத்தம் புரிந்து விடும்!

அரபாத் மட்டுமன்றி, அவரோடு இணைந்து பணியாற்றிய ஷிமோன் பெரசும், யிற்சாக் ராபினும் கூட நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள் தான்! ஆனால், சமாதானம் பேசிய அரபாத்தை வெறுத்தவர்கள் யாரென்று கீழே இருக்கும் (அன்றைய NYT இல் வெளிவந்த) பரிமாற்றம் தெளிவாகக் காட்டுகிறது:

After Mr. Arafat said, "This is the first time the Palestinian state has a geographic map," someone in the crowd yelled: "What about Jerusalem?"

"You will have to be patient," Mr. Arafat responded.

At another point, a person in the crowd shouted: "Arafat sold out!"

Mr. Arafat responded: "I never stopped anybody from freeing Palestine. If they thought they could do better, why didn't they?"

https://www.nytimes.com/1993/09/13/world/mideast-accord-the-overview-arafat-arrives-in-us-to-make-peace.html

3 hours ago, குமாரசாமி said:

புலிகளும் போர் நிறுத்தம் செய்துவிட்டுத்தான் பல  அரசியல் பேச்சுவார்தைகளை நடத்தினார்கள். அந்த நேரத்தில்தான் சிங்களம் தன்னை சுதாகரித்து ஆயுதபலத்தை சம்பாதித்தது.

போர் நிறுத்தம், பேச்சுவார்ததை  காலத்தில் அரசும் புலிகளும் தம்மை பலப்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். 

3 hours ago, குமாரசாமி said:

உந்த கோதாரிவிழுந்த இணக்க அரசியலையும் எதிர்ப்பு அரசியலையும் இயக்கங்கள் களத்திலை இறங்க முதல் செய்திருக்கலாமே?
ஏன் செய்யேல்லை?

என்ன குமாரசாமி,  உங்களை நீங்களே பார்த்து  கேட்க வேண்டிய கேள்வியை இங்கு வந்து எழுதும் அளவுக்கு குழம்பி இருக்கின்றீர்கள் போலிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவை ஆதரிக்கும் சீமான்? - ரவீந்திரன் துரைசாமி.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2021 at 22:19, goshan_che said:

1. எப்போதும் இந்த விதி உண்மையில்லை. மதுக்கடையில் வாசிகசாலையை விட கூட்டம் அதிகம் இருப்பதும் உண்டு.

2. ஒவ்வொரு நாட்டின் அரசியலும் ஒவ்வொரு மாதிரி, 60 களுக்கு பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் எல்லா கட்சியிம் ஏதோ ஒரு வகையில் கூட்டணி அமைத்தே ஆட்சியை பிடிக்கிறன. இலங்கையில் கூட சந்திரிக்காவின் 95, மகிந்தவின் 2010 வெற்றிகள் கூட கூட்டணியாகத்தான். 

ஜேர்மனியில், இரு பிரதான கட்சிகள் சேர்ந்து தேர்தலுக்கு பின்னான கூட்டணி ஆட்சி செய்தது, போன தடவை.

Politics is the art of the possible அடைய வாய்புள்ளதை அடையும் கலையே அரசியல் என்கிறார் பிஸ்மார்க்.

அப்படித்தான் கூட்டணி அரசியலும். இவ்பாலவு ஏன் 1977 வட்டுகோட்டை தீர்மான அரசியல் வெற்றி கூட ஒரு “கூட்டணி” வெற்றிதான். தலைவர் கூட கூட்டமைப்பு மூலம் ஒரு கூட்டணியைத்தான் முன் தள்ளினார்.

ஆகவே கூட்டணி அரசியல் என்பது ஒன்றும் இழுக்கானது அல்ல. 

உண்மையில் ஒரு நாட்டில் வேறு எந்த கட்சியோடும் சேராத அல்லது சேர்த்து கொள்ள படாத அரசியலே ஆபத்தானது.

அண்மைய ஜேர்மன் தேர்தலில் 6 கட்சிகள் வென்றன. ஆனால் 5 கட்சிகள் தமக்குள் மட்டுமே பேச்சு வார்த்தை, 6ம் கட்சியோடு பேச்சே இல்லை என்ற நிலை எடுத்தன.

அந்த 6ம் கட்சி? AfD எனப்படும் இனத்தூய்மைவாத கட்சி.

1. எப்போதும் இந்த விதி உண்மையில்லை. மதுக்கடையில் வாசிகசாலையை விட கூட்டம் அதிகம் இருப்பதும் உண்டு.

வாசிகசாலைக்கு போபவர்கள் எல்லாம் தரமான நல்ல பத்திரிகைகளைஇசஞ்சிகைகளை வாசிப்பவர்கள் என்று சொல்ல முடியாது.நாட்டுக்குத்தெவையான வாழ்க்கைக்குத் தெவையான விடயங்களை விட கொசிப்புக்களை வாசிப்பவர்களே அதிகம். இங்கிலாந்தில் அதிகம் விற்பனையாகும் பேப்பர் சண். அதில் விளையாட்டுச்செய்திகளைத்தவிர வெறு எந்த ஆக்க புர்வமான விடயங்களும் இருப்பதில்லை. அதிகம் விற்பனையாகிறது என்பதற்காக அத நல்ல தரமான பத்திரிகையாகி விடுமா? அதுபோல நாட்டுக்கே சோறுபோடும் விசாயிகள்.மீனவர்கள் மற்றும்  அன்றாடம் கடின வேலை செய்யும் கூலித்தொழிலாளிகள் உடம்பு அலுப்புத்தீர ஒருபோத்தில் கள்ளு க்காக அல்லது ஒரு கட்டிங்காக மதுபானச்சாலையில் வரிசையில் நின்றால் அவர்கள் எல்லாம் உதவாக்கரை குடிகாரர்கள் என்று முடிவெடுத்த விட முடியுமா? அப்படிப் பார்த்தால் மேற்கு நாடுகளில் எல்லோரும் குடிகாரர்கள் என்று சோல்ல வேண்டி இருக்கம் ஆகவே இந்த விதி எப்போதும் பொருந்ததாது என்று சொல்லி விட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2021 at 11:38, tulpen said:

கருணாநியின் உண்ணாவிரதம் என்பது அவரது இயலாமையை மறைக்க அவர் மேற்கொண்ட நாடகம். அவரது வழமையான அரசியல் ஸ்ரண்ட். ஆனால் இதற்கும் முள்ளிவாய்க்கால் தோல்விக்கும்  என்ன தொடர்பு ?  கருணாநிதி  உண்ணாவிரதம் இருக்கும் போது நிலைமை தலைக்கு மேல் போய்விட்டது.   மேல் எவராலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது. தோறு ஓடிக்கொண்டிருக்கும் புலிகளுக்கு ஓய்வு கொடுக்க ஶ்ரீலங்கா அரசு முட்டாள் அல்ல. இதை அவர்கள் வெளிப்படையாகவே கூறியிருந்தனர் 

மக்களை யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கும்படி ஜனவரி மாதத்தில் இருந்து பல முறை இணைத்தலைமை நாடுகளால் கோரிக்கை வைத்தும் அதற்கு அனுமதி வழங்காது யார் செய்த தவறு?

மீண்டும் கூறுகிறேன் மக்களின் அழிவுக்கும் போராட்ட தோல்விக்கும் முழுப்பொறுப்பும் யுத்தம் சமாதானம் தொடர்பான சகல  அரசியல் தீர்மானங்களையும் எடுத்தவர்கள் மட்டுமே. புலம் பெயர் புலிவால்களும் பணத்தை ஏப்பம் விட்ட திருடர்களும் இதன் முக்கிய குற்றவாளிகள். அதனால் தான் அவர்கள் வெளியார் மீது எப்போதும் பழி போடுவதில் தீவிரமாக உள்ளனர்.

புலிகளிடம் அதிகாரம் போகக்கூடாது என்பதில் புல்ம்பெயர் தமிழர்களில் சிலர் மிகக் கவனமாக இருந்தார்கள். 

அவர்கள் எந்த விதத்திலாவது புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். மக்களும் போராட்டமும் அழிவதில் அவர்களுக்கு சிறிதும் கவலையில்லை. 

அவர்கள் யாரிடமும் அண்டிப்பிழைக்க, அடிமையாக செவகம் புரிய ஆயத்தமாக இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள். 

புலிகள் அழிந்த பின்பும் அவர்களுக்கிருக்கும் ஒரே கோபம் மக்கள் இப்போதும் புலிகளை தங்கள் அடையாளமாகக் கருதுவதுதான்.

முன்பு அவர்களுக்கு புலிகளின் மீது கோபமும் வெறுப்பும், இப்போது அந்தக் கோபம் மக்களின் மீது . 

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, புலவர் said:

வாசிகசாலைக்கு போபவர்கள் எல்லாம் தரமான நல்ல பத்திரிகைகளைஇசஞ்சிகைகளை வாசிப்பவர்கள் என்று சொல்ல முடியாது.நாட்டுக்குத்தெவையான வாழ்க்கைக்குத் தெவையான விடயங்களை விட கொசிப்புக்களை வாசிப்பவர்களே அதிகம். இங்கிலாந்தில் அதிகம் விற்பனையாகும் பேப்பர் சண். அதில் விளையாட்டுச்செய்திகளைத்தவிர வெறு எந்த ஆக்க புர்வமான விடயங்களும் இருப்பதில்லை. அதிகம் விற்பனையாகிறது என்பதற்காக அத நல்ல தரமான பத்திரிகையாகி விடுமா?

Bild

ஒருவர் எவ்வளவு புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிறார் என்பதில் அர்த்தமில்லை. அவர் அவற்றிலிருந்து என்ன பெற்றார் என்பதே முக்கியம். 

கீச்சகத்தில்  சொன்னார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

1. எப்போதும் இந்த விதி உண்மையில்லை. மதுக்கடையில் வாசிகசாலையை விட கூட்டம் அதிகம் இருப்பதும் உண்டு.

வாசிகசாலைக்கு போபவர்கள் எல்லாம் தரமான நல்ல பத்திரிகைகளைஇசஞ்சிகைகளை வாசிப்பவர்கள் என்று சொல்ல முடியாது.நாட்டுக்குத்தெவையான வாழ்க்கைக்குத் தெவையான விடயங்களை விட கொசிப்புக்களை வாசிப்பவர்களே அதிகம். இங்கிலாந்தில் அதிகம் விற்பனையாகும் பேப்பர் சண். அதில் விளையாட்டுச்செய்திகளைத்தவிர வெறு எந்த ஆக்க புர்வமான விடயங்களும் இருப்பதில்லை. அதிகம் விற்பனையாகிறது என்பதற்காக அத நல்ல தரமான பத்திரிகையாகி விடுமா? அதுபோல நாட்டுக்கே சோறுபோடும் விசாயிகள்.மீனவர்கள் மற்றும்  அன்றாடம் கடின வேலை செய்யும் கூலித்தொழிலாளிகள் உடம்பு அலுப்புத்தீர ஒருபோத்தில் கள்ளு க்காக அல்லது ஒரு கட்டிங்காக மதுபானச்சாலையில் வரிசையில் நின்றால் அவர்கள் எல்லாம் உதவாக்கரை குடிகாரர்கள் என்று முடிவெடுத்த விட முடியுமா? அப்படிப் பார்த்தால் மேற்கு நாடுகளில் எல்லோரும் குடிகாரர்கள் என்று சோல்ல வேண்டி இருக்கம் ஆகவே இந்த விதி எப்போதும் பொருந்ததாது என்று சொல்லி விட முடியாது.

உங்கள் point of view நன்றாக உள்ளது. 

ஆனால் உதாரணத்துக்குள் சிக்குண்டாமல் நான் சொல்ல வந்த பொருளை சொல்வதாயின் -  ஒரு விடயம் அதிகம் விவாதிக்க படுகிறது என்பதால் அது நல்லது என்றாகாது என்பதையே.

31 minutes ago, குமாரசாமி said:

Bild

ஒருவர் எவ்வளவு புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிறார் என்பதில் அர்த்தமில்லை. அவர் அவற்றிலிருந்து என்ன பெற்றார் என்பதே முக்கியம். 

கீச்சகத்தில்  சொன்னார்கள். 🤣

பெற்றதை எப்படி நடைமுறை படுத்தினார் என்பதே அதி முக்கியம்.

#நிற்க அதற்கு தக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

என்ன குமாரசாமி,  உங்களை நீங்களே பார்த்து  கேட்க வேண்டிய கேள்வியை இங்கு வந்து எழுதும் அளவுக்கு குழம்பி இருக்கின்றீர்கள் போலிருக்கிறது. 

நானும் உப்பிடித்தான் பதில் சொல்லேலாட்டில் நைஸ்சாய் எதையாவது சொல்லிப்போட்டு இடத்தை விட்டுட்டு ஓடுறது....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

என்ன குமாரசாமி,  உங்களை நீங்களே பார்த்து  கேட்க வேண்டிய கேள்வியை இங்கு வந்து எழுதும் அளவுக்கு குழம்பி இருக்கின்றீர்கள் போலிருக்கிறது. 

5 hours ago, குமாரசாமி said:

நானும் உப்பிடித்தான் பதில் சொல்லேலாட்டில் நைஸ்சாய் எதையாவது சொல்லிப்போட்டு இடத்தை விட்டுட்டு ஓடுறது....

குமாரசாமி அண்ணை... ருல்ப்பன்  மட்டும் இல்லை.
நம்ம, கற்பகத்தாரும்... உப்பிடித்தான் செய்யிறவர். 😂

பாவங்கள்... "பானையில் இருந்தால் தானே... அகப்பையில் வரும்." 🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

 இப்போது மட்டும் சமாதானத்தை நிறுத்தி சண்டை செய்யப் போய்  சாதித்தது என்ன? அழிவு, அழிவு, அழிவு.  ஏதோ சண்டை செய்து சாதித்துவிட்டதை போல பெருமை வேறு.   

ஏற்கனவே இருந்ததை விட மோசமான நிலை. இணக்க அரசியலும் செய்ய இயலாத எதிப்பரசியலும் செய்யமுடியாத அவல நிலை. 

ஏன் இயக்கங்கள் தோன்றுமுன் இணக்க அரசியல்தானே செய்துகொண்டிருந்தார்கள் அப்போதெல்லாம் எம்மினம் அழிவை சந்திக்கவில்லையா? ஒரே கிழிந்த tape recorder போல !!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

Mr. Arafat responded: "I never stopped anybody from freeing Palestine. If they thought they could do better, why didn't they?"

அது இங்கும் பொருந்தும். வேறு யாராவது புலிகளை விட வேறுவழியில் போராடி ஈழத்தை வெல்லமுடிந்தால் உங்கள் வழியில் போராடுங்கள் என்றுதானே சொல்கிறோம்! 12 வருடமாக என்னத்தை புடுங்கினீர்கள்!! சிறிலங்காவிற்கு விளங்கக்கூடிய ஒரேமொழி அடிதான். அது விழுந்தால்தான் பேச்சுவார்த்தை மேடைக்கே வருவார்கள். இணக்க அரசியல் செய்து ஒன்றையும் சாதிக்கமுடியாது!! அடிமையாய் இருப்பதை தவிர!

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயத்தை கண்டு கோபம் கொள்ளாதவனும்..  அவமானங்களை கண்டு உணர்ச்சி கொள்ளாதவனும்.. மக்களுக்கான அரசியல்வாதியாக இருக்க முடியாது.

சீமான் அண்ணா.. நீங்கள் அநியாயத்துக்கு எதிராக உங்கள் கோபத்தை காட்டுங்கள்.. இனத்தின் அவமானங்களை தவிர்க்க.. உணர்ச்சி பொங்குங்கள்.. அதில் தவறே இல்லை. 

விமர்சகர்கள்.. நடுநிலைவாதிகள்..  என்ற போர்வைக்குள் இருக்கும் பச்சோந்திகளை விட நீங்கள் நீங்களாக தெளிவோடு இருப்பது எவ்வளவோ மேல். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.