Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நம்ம மக்கள் முன்னணி கஜன் & கஜன் இந்தியாவின் புரொக்ஸியாக இல்லையே! அவர்கள் 13+ க்கு மேலால் தீர்வு வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளார்களே!

அப்போ எமக்காதரவான சக்திகள் என்று கஜா கூறியது யாரை  என்று கண்டுபிடித்துவிட்டீர்கள் போல ...மெதுவாக எண்ட காதில மட்டும் சொல்லுங்கோ சத்தியமாக வேற  யாரிட்டையும் செல்லமாட்டேன்...

Edited by அக்னியஷ்த்ரா

  • Replies 119
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அப்போ எமக்காதரவான சக்திகள் என்று கஜா கூறியது யாரை  என்று கண்டுபிடித்துவிட்டீர்கள் போல ...மெதுவாக எண்ட காதில மட்டும் சொல்லுங்கோ சத்தியமாக வேற  யாரிட்டையும் செல்லமாட்டேன்...

காதை கிட்டவா கொண்டு போங்கோ.....😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

காதை கிட்டவா கொண்டு போங்கோ.....😁

கொரோனா நேரம்… ஒன்றரை மீற்றர், இடைவெளி அவசியம். 🤣

3 hours ago, Nathamuni said:

இதன் மறுபக்கமும் அதே நிலையில் உள்ளதை கவனித்தீர்களா?

சிங்களவரும், மேற்கு, இந்தியா விரும்பிய ரணிலை வீட்டுக்கு அனுப்பி, சீனா விரும்பிய கோத்தாவை தேர்ந்தெடுத்து, சிக்கிப் போய் உள்ளது.

பெரும் அருக்கானம் விட்டுக் கொண்டிருந்த, இஸ்லாமியர் அரசியல் வாதிகள் தமது கையறு நிலை உணர்கிறார்கள்.

தம்மை இலங்கை சிங்கள, தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவும், சர்வதேசமும் கண்டுகொள்ளாமல் விட, மனோவுடன்.... கக்கீம் சம்பந்தரை சந்திக்கும் அரசியல் நிலைமை.

ஆக... சகலமும், ஸ்னேக் அன்ட் லடர் விளையாட்டில், சகலருமே, ஸ்னேக்கால் விழுங்கப் பட்டு, மீண்டும் ஆரம்பிக்கும் நிலையில்.

நடந்ததை விடுவோம்.... நடக்கப்போவது குறித்து சிந்திப்போம். 👌

நாதமுனி நீங்கள் முன்பு ஒருமுறை இதே கணிப்பை கூறியிருந்தீர்கள். முன்பு புலிகள் தமிழருக்கு சுமையாக இருந்ததை போல இனி கோத்தா மகிந்த ஶ்ரீலங்கா தரப்புக்கு சுமையாக இருக்க போகிறார்கள் என்று,  நீங்கள் முன்பு வேறு திரியில் கூறிய கணிப்பு சாத்தியமானால் உங்களைப் போலவே நானும் மகிழ்சசியடைவேன். அத்த நிலை ஏற்பட்டால் தமிழருக்கு அரசியல் தீர்வு வரும் சாத்தியப்பாடு நிச்சயம் அதிகரிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்போ எமக்காதரவான சக்திகள் என்று கஜா கூறியது யாரை  என்று கண்டுபிடித்துவிட்டீர்கள் போல ...மெதுவாக எண்ட காதில மட்டும் சொல்லுங்கோ சத்தியமாக வேற  யாரிட்டையும் செல்லமாட்டேன்...

🤣 எமக்காதரவான சக்தி Area 51 இல் தரை இறங்கியுள்ளது. அதை அமெரிக்கா மறைக்கிறது.

பிரெமிட்டை கட்டியதும் இதே சக்திதான்.

இந்த சக்தியின் தலைவன் பெயர் சிவன்.

இவர்களோடு டீல் போட்டு கஜா & கஜா தமிழருக்கு ஒரு நாடு, இரு தேச அடிப்படையில் தீர்வு தருவார்கள்.

1 hour ago, தமிழ் சிறி said:

கொரோனா நேரம்… ஒன்றரை மீற்றர், இடைவெளி அவசியம். 🤣

ஜி போட்டிருக்கிற குடை-தொப்பியே 3 மீட்டர் பாதுகாப்பு வலயம்தானே🤣.

4 hours ago, Nathamuni said:

நடக்கப்போவது குறித்து சிந்திப்போம். 👌

அரசியல் தலைவர்களாக இவர்களை வைத்து கொண்டு நடக்க என்ன தவழவே முடியாது🤣

Edited by goshan_che
மாற்று திறனாளிகள் பற்றிய மோசமான சொல் நீக்கம். சுய தணிக்கை. மன்னிக்கவும் 🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

நாதமுனி நீங்கள் முன்பு ஒருமுறை இதே கணிப்பை கூறியிருந்தீர்கள். முன்பு புலிகள் தமிழருக்கு சுமையாக இருந்ததை போல இனி கோத்தா மகிந்த ஶ்ரீலங்கா தரப்புக்கு சுமையாக இருக்க போகிறார்கள் என்று,  நீங்கள் முன்பு வேறு திரியில் கூறிய கணிப்பு சாத்தியமானால் உங்களைப் போலவே நானும் மகிழ்சசியடைவேன். அத்த நிலை ஏற்பட்டால் தமிழருக்கு அரசியல் தீர்வு வரும் சாத்தியப்பாடு நிச்சயம் அதிகரிக்கும் 

சிறீ லங்கா அல்ல... சிங்கள தரப்பு.

வரலாறு பல செய்திகளை சொல்லும்.

உலகில் மாபெரும் வல்லரசாகத் திகழ்ந்த பிரிட்டிஸ் பேரரசு, ஜேர்மன் ஆககிரமிப்பில் இருந்து தப்ப, அதன் காலனித்துவ நாடாக இருந்த, அமெரிக்க உதவியை கோரியது.

போர்த்துக்கேயர் தம்மை, ஆசியாவின் அசைகக முடியாத சக்தி என நிணைத்தார்கள் - ஒல்லாந்தர் வரும் வரை.

ஒல்லாந்தர் - இங்கிலாந்துக்காரர் உள்நாட்டு போரில் சிக்கியிருப்பதால்....  தம்நாட்டில் ஆங்கில இளவரசர் அடைக்கலம் கோரி வாழ்வதால், அவர்கள் வருவார்கள் என்றே நிணைத்திருக்கவில்லை.

ஆனால், உள்நாட்டு போரின் பின்னர், நாடு திரும்பிய இரண்டாவது சார்ஸ் மன்னருக்கு, மணமகளாக வந்த போர்த்துக்கேயர் இளவரசியுடன் சீதனமாக கிடைத்ததே, கோவாவில் இருந்து பிச்சு கொடுக்கப்பட்ட பம்பாய் பகுதி.....

அங்கிருந்து ஆரம்பித்ததே, பிரிட்டிஸ் இந்தியா, பிரிட்டிஸ் சிலோன்.... ஒல்லாந்தர் வெளியேற வேண்டி இருந்தது.

இலங்கை தீவில்..... பண்டாரவன்னியன், ராசசிங்கன்.... கடைசி வரை பிரிட்டிஸ் காரருடன் போரிட்டவர்கள் சிங்களவர்அல்ல.

அதே போல், இந்திய இராணுவத்துடன் மோதி, சுதந்திரததை காத்ததும் சிங்களவர் அல்ல.

ஆக..... மாவை குழைத்து, பணியாரம் சுட்டபின்... விரல் சூப்புவது தமிழர், பணியாரம் தின்பது சிங்களவர் என்ற நிலை..... மாற, புற சூழலில் நடக்கும் மாறுதல் பல தகவல்களை சொல்கிறது.

சில விடயங்கள் ஏன் நடக்கின்றது என்பது நடக்கும் போது புரியாது.....

அதன் விளைவுகளையும் ஊகிக்க முடியாது..... ஆனால்.... ஒரு விடயம் நடந்த பின்பே.... அட....அதனால் இது நடந்தது என வரலாறு எழுதுவர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

ஜி போட்டிருக்கிற குடை-தொப்பியே 3 மீட்டர் பாதுகாப்பு வலயம்தானே🤣.

E56F7D59-0987-4E48-B9D1-87246514919F.thumb.jpeg.f52781b2186158dea262578193d016b5.jpeg

கோசான் சார்...
ஜீ.... இப்போ, தொப்பி போடுவதில்லையாம்.
அதுதான்... அக்கறையில் சொன்னேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2021 at 18:42, Justin said:

குறைந்த பட்சம் அடி புலிகளுக்கு மட்டும் விழ, வன்னியில் மக்கள் மாட்டுப் படாமல் தப்பியிருக்க வாய்ப்பிருந்திருக்கும். இது ரணிலோடு பிரபாகரன் "டூ" போட்டதால் ஒரு இழக்கப் பட்ட நன்மை தானே ?

குறைந்த பட்சம், கூடிய பட்சம் எல்லாம் யார் கேட்டார்கள்?

 மேற்கு அடிப்பது என முடிவெடுத்து விட்டால் ரனில் என்ன மகிந்தவென்ன?? 

கேள்வியை கேட்டால் சும்மா அடிச்சு விடுவது?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, kalyani said:

குறைந்த பட்சம், கூடிய பட்சம் எல்லாம் யார் கேட்டார்கள்?

 மேற்கு அடிப்பது என முடிவெடுத்து விட்டால் ரனில் என்ன மகிந்தவென்ன?? 

கேள்வியை கேட்டால் சும்மா அடிச்சு விடுவது?

இதில் அடிச்சு விட என்ன இருக்கு? 2009 இன் பின்னர், மாவீரர் தினத்தையே கொண்டாட விட்டு விட்டு இருந்த ரணில் காலத்தையும், இப்ப திலீபன் நினைவு கூட கொண்டாட முடியாத மகிந்த கோத்தா காலத்தையும் பார்த்தாலே "யதார்த்தமான மனிதர்"😎 யாரென்று புரிந்து விடுமல்லவா?

இதற்கு றொக்கட் விஞ்ஞானமா தேவை?  😂

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2021 at 02:14, tulpen said:

கஜன் & கஜன் கொம்பனி புலம் பெயர்ஸ் பரொக்ஸியாக இருந்தது தெரியும். ஆனால் இப்போதும் அப்படியோ தெரியாது. 

கனடாவில் நேரத்துக்கு நேரம் காசு சேர்க்க வருவது கூட்டமைப்பு தானே. அவர்களும் புறக்கிசியா அல்லது ….?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தரப்பு  ஒரு கட்டத்தில்  தங்கள் நாட்டு நலன் கருதி(ஒரு கற்ப்பனைக்கு)தமிழருக்கு ஒரு தீர்வை கொடுத்தாலும் இந்தியாவும்
எங்கடைதமிழ்  அரசியல் வாதிகளும் தமிழர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு வருவதை விரும்பப் போவதில்லை.இந்த இலச்சனத்தில அவன் நல்லவன் இவன் நல்லவன் என்டு அடிபட்டுக் கொன்டு இருக்க வேண்டியது தான்.

41 minutes ago, nunavilan said:

கனடாவில் நேரத்துக்கு நேரம் காசு சேர்க்க வருவது கூட்டமைப்பு தானே. அவர்களும் புறக்கிசியா அல்லது ….?

இருக்கலாம் நுணா. எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளை தானே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கனடாவில் நேரத்துக்கு நேரம் காசு சேர்க்க வருவது கூட்டமைப்பு தானே. அவர்களும் புறக்கிசியா அல்லது ….?

இதன் அர்த்தம் ஏனைய இரு கட்சிகளும் புலத்தில் காசு சேர்ப்பதேயில்லை என்பதா? தேர்தல் நேரம் கஜேந்திரகுமார் குழுவும், விக்கி குழுவும் அங்கே இருந்த படியே புலத்தில் நன்கொடை சேர்ப்பது வழமை . கடந்த தேர்தலில் தமது அமெரிக்க ஆதரவாளர்கள் மூலம் சுமந்திரன் bashing செய்து ஒரு சூம் கூட்டம் போட வைத்து அமெரிக்காவில் காசு சேர்த்தனர்! 

எனவே, எம்.பி யாக வந்த எல்லாருக்கும் கடமை இருக்கிறது - ஏனெனில் எல்லாரும் பிச்சாபாத்திரம் ஏந்தியோர் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஏனைய இருவரும் காசு சேர்ப்பதால் புறக்சி எனில் கூட்டமைப்பும் காசு சேர்ப்பதால் புறக்சிதானே. 13, 12, 11 எல்லாம் இவர்களுக்கு ஒரு இலக்கம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஏனைய இருவரும் காசு சேர்ப்பதால் புறக்சி எனில் கூட்டமைப்பும் காசு சேர்ப்பதால் புறக்சிதானே. 13, 12, 11 எல்லாம் இவர்களுக்கு ஒரு இலக்கம் தான்.

இந்த Proxy க்களின் கொசுத்தொல்லை தாங்கமுடியல, செய்வது பூராக proxy புரோக்கர் வேலை ஆனால் விடும் சௌண்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2021 at 08:59, Justin said:

இதில் அடிச்சு விட என்ன இருக்கு? 2009 இன் பின்னர், மாவீரர் தினத்தையே கொண்டாட விட்டு விட்டு இருந்த ரணில் காலத்தையும், இப்ப திலீபன் நினைவு கூட கொண்டாட முடியாத மகிந்த கோத்தா காலத்தையும் பார்த்தாலே "யதார்த்தமான மனிதர்"😎 யாரென்று புரிந்து விடுமல்லவா?

இதற்கு றொக்கட் விஞ்ஞானமா தேவை?  😂

யாரை தெரிவு செய்தாலும் புலிகளுக்கு மேற்கு அடிப்பதற்கு தயாராகி இருந்தது என்பதற்கான உங்கள் பதில் என்ன? இதற்கு  றொக்கட் விஞ்ஞானம் தேவைப்படாது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, kalyani said:

யாரை தெரிவு செய்தாலும் புலிகளுக்கு மேற்கு அடிப்பதற்கு தயாராகி இருந்தது என்பதற்கான உங்கள் பதில் என்ன? இதற்கு  றொக்கட் விஞ்ஞானம் தேவைப்படாது என நினைக்கிறேன்.

என் பதில் முதல் கருத்திலேயே இருக்கிறது: "புலிகளுக்கு அடித்திருப்பர் (ஆப்பு) - ஆனால் முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்க மாட்டார்கள்" என்று முதலே சொல்லி விட்டேன். 

இந்த எளிமையான வசனம் விளங்க றொக்கட் விஞ்ஞானம் தேவையில்லை - ஆனால் பொதுப்புத்தி கொஞ்சம் தேவை!😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

அது முள்ளிவாய்க்காலில் நடந்திருக்காது ஆனால் பரவலாகவே நடந்திருக்கும். அழிவு ஒன்றுதான்! ரணில் ஒன்றும் உதாரண புருஷரல்ல!! குள்ளநரி!!

புலிகளுக்கு ஆப்படிப்பதில் அவ்வளவு சந்தோசம் போல! இருக்காத பின்னே, உங்களுக்கு ஞான உபதேசம் செய்தவர்களின் பிள்ளைகளையோ அல்லது சகோதரர்களையோ யுத்த களத்திற்கு அடாவடியாக கூட்டிச்சென்ற கொடியவர்கள் அல்லவா அவர்கள்!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

என் பதில் முதல் கருத்திலேயே இருக்கிறது: "புலிகளுக்கு அடித்திருப்பர் (ஆப்பு) - ஆனால் முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்க மாட்டார்கள்" என்று முதலே சொல்லி விட்டேன். 

இந்த எளிமையான வசனம் விளங்க றொக்கட் விஞ்ஞானம் தேவையில்லை - ஆனால் பொதுப்புத்தி கொஞ்சம் தேவை!😎

இதை எப்படி நிச்சயமாக சொல்கிறீர்கள். இதை தான்  சும்மா அடித்து விடுவது என்பது? பொதுப்புத்தியும் இதற்கு தேவை.😁

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2021 at 08:59, Justin said:

இதில் அடிச்சு விட என்ன இருக்கு? 2009 இன் பின்னர், மாவீரர் தினத்தையே கொண்டாட விட்டு விட்டு இருந்த ரணில் காலத்தையும், இப்ப திலீபன் நினைவு கூட கொண்டாட முடியாத மகிந்த கோத்தா காலத்தையும் பார்த்தாலே "யதார்த்தமான மனிதர்"😎 யாரென்று புரிந்து விடுமல்லவா?

இதற்கு றொக்கட் விஞ்ஞானமா தேவை?  😂

கோத்தபாய அரசில் தான் பி 2 பி செய்யப்பட்டது ? உங்கள் யதார்த்தம் புஸ்வாணம் ஆகி விட்டதே. 🤪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.