Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and outdoors

இன்றைய தினம் நானும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்களும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின்பேரில் ஒர் கலந்துரையாடலுக்காக கனேடிய பாராளுமன்றம் சென்று இருந்தோம் அதன்போது அங்கு 15 இக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது இதன்போது எம் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும். வட கிழக்கில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள் அதனுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தோம். மற்றும் எமது மக்களுக்கு பயன் தரக்கூடிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் சில பல திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தோம் அத்துடன் கனடிய அரசாங்கமானது எமது மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை இலங்கை அரசு மேல் பிரயோகிக்க வேண்டும் எனவும் எமது ஆணித்தரமான கோரிக்கைகளை முன்வைத்தோம்.
-சாணக்கியனின் முகநூலில் இருந்து 

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நல்ல விடயம். கனடா பாராளுமன்றம் நேற்றுதான் மீண்டும் கூடியது என நினைக்கின்றேன். நல்ல சகுனம், நல்ல நேரத்தில் கனடா வந்துள்ளார்கள். வேறு யார்... கரி ஆனந்தசங்கரி கூட்டிசென்று இருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நல்ல விடயம். கனடா பாராளுமன்றம் நேற்றுதான் மீண்டும் கூடியது என நினைக்கின்றேன். நல்ல சகுனம், நல்ல நேரத்தில் கனடா வந்துள்ளார்கள். வேறு யார்... கரி ஆனந்தசங்கரி கூட்டிசென்று இருப்பார். 

இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட விடயம். ஹரிக்கு இதில் தனிப்பட்ட பங்களிப்புஎதுவும் இல்லை.

ஏற்கனவே  வகுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவர்களது அரசியலில் ஒரு துளி கூட நம்பிக்கையில்லை ...ஆனால் அவர்களை கதைக்க வி ட்டு தகுந்த கேள்விகள் கேட்டு அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர்களை  அவமானபட வைத்திருக்க வேண்டும் ...அதற்கு பொது மக்கள் கேட்கும்  கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்வோம் என அவர்கள் உத்தரவாதம் கொடுத்திருக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்து சுதந்திர வளையத்தில் இவருடைய கருத்துக்களையும் சற்று செவிமடுப்போம். நீங்கள் இதற்கு அனுமதி தருவீர்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

May be an image of 6 people and outdoors

இன்றைய தினம் நானும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்களும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின்பேரில் ஒர் கலந்துரையாடலுக்காக கனேடிய பாராளுமன்றம் சென்று இருந்தோம் அதன்போது அங்கு 15 இக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது இதன்போது எம் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும். வட கிழக்கில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள் அதனுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தோம். மற்றும் எமது மக்களுக்கு பயன் தரக்கூடிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் சில பல திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தோம் அத்துடன் கனடிய அரசாங்கமானது எமது மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை இலங்கை அரசு மேல் பிரயோகிக்க வேண்டும் எனவும் எமது ஆணித்தரமான கோரிக்கைகளை முன்வைத்தோம்.
-சாணக்கியனின் முகநூலில் இருந்து 

உவருக்கு யார் தமிழ் எழுதி கொடுத்தது 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

உவருக்கு யார் தமிழ் எழுதி கொடுத்தது 

இதுகுள்ள நீங்கள் உங்கட அண்ணர்ர அரசியலையும் சத்தமில்லாமல் ஓட்டப்பாக்கிறியள் போல.

சாணாக்கியன் டிரினிட்டியில் தமிழ் மீடியத்தில்தானே படித்தவர்?

அவர் தமிழில் பேசி பார்த்திருக்கிறோம்தானே, அப்படி பேசுறவருக்கு இப்படி எழுத வாறது பெரிசா?

  • கருத்துக்கள உறவுகள்+

இந்த கூட்டமும் எதிர்ப்பும் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

யாருக்காக சுமந்திரன் சாணக்கியன் வால் பிடிக்கின்றனர்?

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நீங்க அப்படி சொல்லவில்லையே பெருமாள்? "ஏலுமென்றால் லண்டன் பக்கம் வரச்சொல்லுங்க, கனடா பக்கம் வரச்சொல்லுங்க" என்று றௌடிகளை றெடி பண்ணி வைத்திருப்பது போல அல்லவா சொன்னீர்கள்?

நான் சொன்னன் என்று எழுதுகிறீர்கள் எழுதியதை கவனித்தா  இப்படி எழுதுகிறீர்கள் ? முடிந்தால் நிரூபிக்கவும் .

அதுசரி சுமத்திரன்  லண்டன் வந்தால் சேதாரமுமின்றி திரும்பமாட்டார் என்று நேற்று பிறந்த பிள்ளைக்கும் தெரிந்த விடயம் உங்களுக்கு தெரியவில்லையே ?

திருப்பி திருப்பி சொல்வது உங்கள் காதுகளுக்கு ஏறவில்லை என்றால் ஒதுங்குவதை தவிர வேறு வழியில்லை சிறு  உதாரணம் ஸ்கட்லாண்டு க்கு கோத்தா வருகிறார் போராட்டக்காரர்களும் துல்லியமான தகவல் கிடைத்து கோத்தா தங்கியிருந்த கொட்டல் சுற்றி வளைக்கப்படுது ஒரு பாரிய பஸ்  கொட்டலை நோக்கி விரைகிறது அதைப்பார்த்து ஸ்கட்லான்ட் போலீஸ் பின்னால் திறத்திக்கொண்டு  வருகிறது வந்த பஸ் திருப்பத்தில் நடந்த குளறுபடியால் போராட்டக்காரர்கள் கோத்தாவை அண்மித்து கோஷமெழுப்புவது தவறுகிறது பின்னால் ஓடிவந்த போலீசுக்கு தலை கிறுகிறுகின்றது எப்படி இவர்களுக்கு தகவல் போனது ? நேரடியாகவே போராட்டக்காரர்களிடம் கேட்க சிரித்தபடியே போனில் கோத்தாவின் டிவிட்டர் அப்டேட்களை வெள்ளந்தித்தனமா  காட்டுகின்றனர் . இங்கு கோத்தா விரும்பியது எது என்று நான் உங்களுக்கு சொல்லதேவையில்லை புரிந்து இருக்கும் .

மேல் சொன்னது போல் சும்முக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமலா இவ்வளவும் நடக்குது என்று நீங்கள்  நம்பினால் இனி சும் பற்றிய திரிகளில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடையாது . நான் சொல்லவருவது என்ன என்று ஒன்றுக்கு இரண்டுதடவை படித்து விளங்கிவிட்டு எதிர்கருத்தை வைக்கவும் .

இங்கு நாங்கள் படித்தவர்கள் என்பவர்களால் உணர்ச்சி அரசியல் செய்பவர்களை சமாளிக்க தெரியாமல் அவர்களை திட்டுவது கேவலப்படுத்துவது மட்டுமே நடக்கின்றது முடிந்தால் உங்கள் அறிவை (உண்மையில் எமது படிப்பாளிகளுக்கு பொது அறிவு  அப்படி ஒன்று இருந்தால் 60 வருடத்துக்கு முன்பே  எப்பவோ இந்த பிரச்சனை முடிந்து இருக்கும் ) பிரச்சனையை  தீர்ப்பதில் கருத்துக்கள் வையுங்கள் அது ஆரோக்கியமானது  அதை விட்டு திட்டிகொன்டே இருந்தால் கட்டையிலை  போகுமட்டும் மற்றவரை பார்த்து திட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

அவர்களும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின்பேரில்

யார் அந்த ஒருத்தர் என்று சொல்லமுடியாத அளவுக்கு பெரியாள்  ஆக்கும் 🤣

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and people standing

அவுஸி.. கனடா வில் சம் சும் மாவை கும்பலுக்கு எது நடந்ததோ.. அது நல்லதுக்கே. பிரித்தானியாவிலும் எது நடக்க இருக்கோ...?!

சம் சும் மாவை சாணக்கிய கும்பல்.. லேசுப்பட்ட கும்பல் அல்ல. முழுத் தமிழினத்தையும் சோரம் போக வைத்த கும்பல். அத்தனை தியாகங்களையும் காலில் போட்டு மிதித்த கும்பல். சிங்களவர்களோடு வாழ்வதை பாக்கியமாகக் கொண்ட.. ஒன்றுபட்ட சொறீலங்காவுக்காக உழைக்கும்.. இனப்படுகொலையை.. போர் குற்றமாக்கி.. பின் இன நல்லிணக்கமாக்கி.. அப்புறம்.. வெறும் வெங்காயமாக்கி.. சிங்கள மற்றும் ஹிந்திய எஜமானர்களை காத்த கூட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கு இவர்களது அரசியலில் ஒரு துளி கூட நம்பிக்கையில்லை ...ஆனால் அவர்களை கதைக்க வி ட்டு தகுந்த கேள்விகள் கேட்டு அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர்களை  அவமானபட வைத்திருக்க வேண்டும் ...அதற்கு பொது மக்கள் கேட்கும்  கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்வோம் என அவர்கள் உத்தரவாதம் கொடுத்திருக்க வேண்டும் 

அவுஸ் ஒலிநாடாவை பாருங்கள் சும்  குடும்பமா தங்களின் பதில்கள்  கண்டு பயந்து விட்டனர் என்கின்றனர் பொறுப்பான செய்தியாளர் கேள்வி கேட்டதும் முதலில் அவங்களை கலைத்து  விட்டு வா பதில் சொல்கிறேன் என்கின்றனர் கேள்விக்கு பதில் இல்லாதபடியால்தான் அந்த கூட்டமே குழம்பியது . ஜனநாயகம் என்பது என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

May be an image of 6 people and outdoors

இன்றைய தினம் நானும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்களும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின்பேரில் ஒர் கலந்துரையாடலுக்காக கனேடிய பாராளுமன்றம் சென்று இருந்தோம் அதன்போது அங்கு 15 இக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது இதன்போது எம் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும். வட கிழக்கில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள் அதனுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தோம். மற்றும் எமது மக்களுக்கு பயன் தரக்கூடிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் சில பல திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தோம் அத்துடன் கனடிய அரசாங்கமானது எமது மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை இலங்கை அரசு மேல் பிரயோகிக்க வேண்டும் எனவும் எமது ஆணித்தரமான கோரிக்கைகளை முன்வைத்தோம்.
-சாணக்கியனின் முகநூலில் இருந்து 

20 minutes ago, பெருமாள் said:

யார் அந்த ஒருத்தர் என்று சொல்லமுடியாத அளவுக்கு பெரியால் ஆக்கும் 🤣

பாராளுமன்ற கட்டடத்தின்… முன் நின்று, யாரும்… படம் எடுக்கலாம். 🙂

அதனைத்தான்… சுத்து மாத்துகள் இரண்டும் செய்து விட்டு… மற்றவர்களுக்கு கதை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். 🤣

அதை நம்ப… யாழ். களத்திலும் ஒரு கூட்டம் இருக்குது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, tulpen said:

எல்லாத்தையும் கவுட்டு கொட்டி சீரழிச்சுப் போட்டு தனிமனிதன் என்னட்ட வந்து ஒரு பிரயோசனமும் இல்லை. ஏற்கனவே ஒரு தனி மனிதனிடம் எல்லாம் இருக்கிறது என்று மனக்கோட்டை கட்டி ஏமாந்தது சீரழிந்தது போதாதா? 

மூடத்தனமான உணர்சசி காட்டுமிராண்டி  அரசியலை ஆதரிப்பதை நிறுத்தி எதிர்கால தலைமுறையையவது நடைமுறை சாத்தியமாகவும்  சிந்திக்க அனுமதியுங்கள் அது போதும். “வீ வோன்ட் தமிழீழம்” என்று காட்டுதனமாக கத்திவிட்டு ஒரு பியர் அடிச்சுட்டு படுக்கும் அரசியல், எமக்கு அழிவையே தந்தது இனியும் தரும். மூடத்தனமான அரசியல் செய்தவர்களால் தமது இளைய இனிய உயிர்களை அர்பணித்த மாவீரரகளை  நினைத்தாவது இந்த புலம் பெயர் புலிவாலுகள் திருந்த வேண்டும்.  

சரியான அரசியல் தலைமைகளை அமையுங்கள். அதன் பின் முடிந்தால் தமிழின உணர்வாளர்களை திட்ட முயற்சியுங்கள். உங்களைப் போன்றே மற்றவர்களும் கருத்தாளர்கள்.
நீங்கள் மற்றவர்களை புலிவால்கள் என வசைபாடும் போது நீங்கள் யார் என்பதை தைரியமிருந்தால் கூறுங்கள். அது உங்களால் முடியாது. டொட்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பாராளுமன்ற கட்டடத்தின்… முன் நின்று, யாரும்… படம் எடுக்கலாம். 🙂

அதனைத்தான்… சுத்து மாத்துகள் இரண்டும் செய்து விட்டு… மற்றவர்களுக்கு கதை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். 🤣

அதை நம்ப… யாழ். களத்திலும் ஒரு கூட்டம் இருக்குது. 😂

இது நியாயமான கேள்வி. பாராளுமன்றில் பல எம்பிகளுடன் உரையாடினால் ஏன் கொலிடே போனவர்கள் போல் வெளியில் நிண்டு போட்டோ?

சும்மின் ஏர் ஓட்டல் சம்பவங்களின் பின் இந்த சந்தேகம் நியாயமானதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இது நியாயமான கேள்வி. பாராளுமன்றில் பல எம்பிகளுடன் உரையாடினால் ஏன் கொலிடே போனவர்கள் போல் வெளியில் நிண்டு போட்டோ?

சும்மின் ஏர் ஓட்டல் சம்பவங்களின் பின் இந்த சந்தேகம் நியாயமானதே.

இவர்களது பயண ஏற்பாடும், travel agenda வும் அமெரிக்க அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டது. சாணக்கியன் கூட இறுதியில் உள்ளே கொண்டுவரப்பட்டவர்தான். 

தற்போதைய ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை. அந்த அட்டவணைப்படியே சகல நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதில் எம்மவர்களால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என நான் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லோரும் அமெரிக்காவுக்கு வகுப்பெடுத்து முடிஞ்சு கடைசியா இவர் வகுப்பெடுக்க வெளிக்கிட்டுவிட்டார்.

ஏன் குணா, நீங்கள் கூறியபடியேதான் நடக்க வேண்டும் என எங்காவது எழுதப்பட்டுள்ளதா..?

உங்களுக்கு இந்த நிகழ்வுகளின் உண்மை விபரங்கள் தெரியவில்லை என்பது உங்கள் படபடப்பில் தெரிகிறது.

🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இது நியாயமான கேள்வி. பாராளுமன்றில் பல எம்பிகளுடன் உரையாடினால் ஏன் கொலிடே போனவர்கள் போல் வெளியில் நிண்டு போட்டோ?

சும்மின் ஏர் ஓட்டல் சம்பவங்களின் பின் இந்த சந்தேகம் நியாயமானதே.

படம் எடுத்தால்... ஆயுசு குறைஞ்சு போயிடும் என்று, 
நம்ம ஆட்கள்... அந்த கனடா பாராளுமன்ற உறுப்பினருக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்களோ. :grin:

கோசான்... எனக்கு, சில காலத்துக்கு முன்பு வரை... 
சாணக்கியன் மீது,  சிறந்த அரசியல்வாதி என்று... கொஞ்ச நம்பிக்கை இருந்தது.
அந்தாள்.. சுமந்திரனுடன் சேர்ந்து கனடா போனபின்,
நடந்த கூத்துகளை பார்க்க...
"பன்றியுடன் சேர்ந்த, பசுக் கன்றின் நிலைமைக்கு"  வந்திட்டார்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

நடந்த சம்பவங்கள் வைத்துக் கொண்டு ஊகிக்க முடியாமல் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். எனவே மத்திய குழு கூட்டங்களில் எடுத்த வீடியோக்கள் வரும் வரை பொறுத்திருங்கள்! 😉

புலிகளின் தலைமை தாங்கள் கேட்க விரும்பியதைச் சொல்பவர்களையே அருகே வைத்திருந்தது. இது பாலசிங்கம் ஒதுக்கப் பட்டு தமிழ்செல்வன் முன்னிலைப் படுத்தப் பட்ட இடத்திலேயே வெளியே தெரிந்தது. இதை விட பல சம்பவங்கள், பலராலும் பல இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

நீங்கள்தானே ஊகத்தில் எழுதும் எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்பீர்கள். பலராலும் பதிவுசெய்யப்பட்ட கருத்துக்கள் அவர்களின் ஊகமே. அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

16 hours ago, Justin said:

நீங்களோ, ஏதோ புலிகள் அமைப்பினுள் ஜனநாயகமும் கருத்துகளின் பன்முகத் தன்மையும் ஆட்சி செய்ததது போல ஒரு பாவனை செய்கிறீர்கள்! இது தமிழர் போராட்டத்தை இணையத்தில் மட்டும் வாசிக்கும், எழுதும் இளவல்களிடம் எடுபடும்! 

ஏதோ நீங்கள் அமைப்புக்குள் ஊடுருவி ரெக்கி எடுத்த ரேஞ்சுக்கு அடிச்சுவிடுறியள்! தொடருங்கோ, கைதட்டிற கூட்டம் இருக்கும்வரை!!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

புலம் பெயர்ந்த சிலர் புனைவுலகில்( La la land) சஞ்சரிக்கின்றார்கள், அவர்களின் fantasy ஐ குழப்ப வேண்டாம்.மற்றவர்கள் இயலுமானவரை அனைவருடனும் இணைத்து  தாயாக தமிழ் மக்களுக்கு  சுபிட்சமான தீர்வை நோக்கி போக வேண்டும்.

நாம் எந்த அரசியல்வாதியையும் முழுமையாக நம்பக் கூடாது, அவர்களுடைய செயற்ப்பாடுகள், கொள்கைகள் பற்றி தர்க்க ரீதியாகவும்,  சனநாயக ரீதியாகவும்   கேள்விகள்  எழுப்பப்படல் வேண்டும். 

36 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்கள்தானே ஊகத்தில் எழுதும் எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்பீர்கள். பலராலும் பதிவுசெய்யப்பட்ட கருத்துக்கள் அவர்களின் ஊகமே. அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

இரு வேறு காலகட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமற்ற இருவர் கூறிய கூற்றுகள் இவை. இவை இரண்டும் எவ்வாறு பொருந்தி போனது என்பதை தமிழர் அரசியலை முன்னெடுப்போர் அறிந்து வைத்திருக்க வேண்டும் 

1988 ல் ராஜனி  கூறியது. 

புலிகளின் வரலாறு, அவர்களது த‍த்துவ வறுமை, காத்திரமான அரிசியற் பார்வை இன்மை, சகிப்பு தன்மையின்மை, வெறித்தனமான அர்ப்பணிப்பு போன்றனவே அவர்களின் இறுதி சீரழிவுக்கும் இறுதிக் காரணமாக அமையப்போகிறது. புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப்போனவர்களின் கண்ணீரோடும் அவர்களின் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட இதிகாசங்களுடன் அழிவையே நோக்கிச் செல்வர். இந்த சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப்போவதில்லை. இந்த முழுச்சரித்திரத்திலிருந்தும் அதன் மேலாதிக்க கருத்தியலிருந்தும் பூரணமாக தங்களை விடுவித்துக் கொள்ளும்போது தான் விடுதலைக்கான புதிய பார்வை பிறக்கும். 

இந்த தீர்கக தரிசனத்தமை போராட்டதின் பேரழிவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கூறியவருக்கு இயக்கம் கொடுத்த பரிசு துப்பாக்கி குண்டு. மனிதாபிமானமற்ற படு கொலை. 

2013 ல் புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி கூறிய கூற்று. 

சில சந்தர்ப்பங்களில் மனதிற்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருந்தபோதிலும்கூட, பல பொறுப்பாளர்கள், போராளிகள் சொல்லும் வசனம், "அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்", "எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்" என்பவையாகவே இருந்தன. இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான். இது எமது பண்பாட்டோடும் பழக்கவழக்கத்தோடும் கூடி வந்த விஷயமாகவே நான் கருதுகிறேன். எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து, ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாகப் பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தலைவரைப் பார்த்தோம். தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்திற்குள்ளாகும்போதும் அவர் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுத்திருக்கிறார் எனவும், தலைவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம். தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வ குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது. இந்தப் போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது.

இரண்டு  பேரும் ஒரு காலத்தில் புலிகளுகள் இயக்கத்தின் உறுப்பினர்கள். 

உயிரை காக்க ஐரோப்பா வந்து வெற்று வேட்டு அரசியல் செய்த பித்தர்கள் அல்ல. 

இணைய வாசகர்கள் உண்மையை சீர்தூக்கி பார்ககவேண்டும் என்பதற்காகவே இரண்டையும் இணைத்தேன். உங்களுக்காக அல்ல. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மனித உரிமைகள் மையமாக உள்ளது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ( Donald Lu) , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) மற்றும் உலகத் தமிழர் பேரவை (GTF) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இலங்கையில் தனது நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கியமானவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் tweet ஒன்றின் படி, இலங்கைத் தமிழ் மக்களுடன் நிரந்தர சமாதானத்தை தேடுவதில் தானும் இணைவதாக லூ கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சானக்கிய இராசமாணிக்கம் மற்றும் உலகளாவிய தமிழ் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அவர்கள் வெள்ளை மாளிகை உட்பட உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார்கள்.

https://www.dailymirror.lk/breaking_news/Human-Rights-are-central-to-U-S-foreign-policy-in-Sri-Lanka/108-225388?fbclid=IwAR0Oyyvb-NkL5FUiWw117P95_WMcg-wF3Tz0aTTNHp3hznT42KJbJRxFjQo

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

படம் எடுத்தால்... ஆயுசு குறைஞ்சு போயிடும் என்று, 
நம்ம ஆட்கள்... அந்த கனடா பாராளுமன்ற உறுப்பினருக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்களோ. :grin:

கோசான்... எனக்கு, சில காலத்துக்கு முன்பு வரை... 
சாணக்கியன் மீது,  சிறந்த அரசியல்வாதி என்று... கொஞ்ச நம்பிக்கை இருந்தது.
அந்தாள்.. சுமந்திரனுடன் சேர்ந்து கனடா போனபின்,
நடந்த கூத்துகளை பார்க்க...
"பன்றியுடன் சேர்ந்த, பசுக் கன்றின் நிலைமைக்கு"  வந்திட்டார்.  🤣

அடக் கடவுளே, 

பார்ரா சாணக்கியன்ர நிலைமைய, சுமந்திரனோட போனதெல்லாம் ஒரு குற்றமாடா..?

🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, tulpen said:

இரு வேறு காலகட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமற்ற இருவர் கூறிய கூற்றுகள் இவை. இவை இரண்டும் எவ்வாறு பொருந்தி போனது என்பதை தமிழர் அரசியலை முன்னெடுப்போர் அறிந்து வைத்திருக்க வேண்டும் 

1988 ல் ராஜனி  கூறியது. 

புலிகளின் வரலாறு, அவர்களது த‍த்துவ வறுமை, காத்திரமான அரிசியற் பார்வை இன்மை, சகிப்பு தன்மையின்மை, வெறித்தனமான அர்ப்பணிப்பு போன்றனவே அவர்களின் இறுதி சீரழிவுக்கும் இறுதிக் காரணமாக அமையப்போகிறது. புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப்போனவர்களின் கண்ணீரோடும் அவர்களின் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட இதிகாசங்களுடன் அழிவையே நோக்கிச் செல்வர். இந்த சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப்போவதில்லை. இந்த முழுச்சரித்திரத்திலிருந்தும் அதன் மேலாதிக்க கருத்தியலிருந்தும் பூரணமாக தங்களை விடுவித்துக் கொள்ளும்போது தான் விடுதலைக்கான புதிய பார்வை பிறக்கும். 

இந்த தீர்கக தரிசனத்தமை போராட்டதின் பேரழிவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கூறியவருக்கு இயக்கம் கொடுத்த பரிசு துப்பாக்கி குண்டு. மனிதாபிமானமற்ற படு கொலை. 

2013 ல் புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி கூறிய கூற்று. 

சில சந்தர்ப்பங்களில் மனதிற்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருந்தபோதிலும்கூட, பல பொறுப்பாளர்கள், போராளிகள் சொல்லும் வசனம், "அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்", "எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்" என்பவையாகவே இருந்தன. இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான். இது எமது பண்பாட்டோடும் பழக்கவழக்கத்தோடும் கூடி வந்த விஷயமாகவே நான் கருதுகிறேன். எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து, ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாகப் பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தலைவரைப் பார்த்தோம். தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்திற்குள்ளாகும்போதும் அவர் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுத்திருக்கிறார் எனவும், தலைவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம். தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வ குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது. இந்தப் போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது.

இரண்டு  பேரும் ஒரு காலத்தில் புலிகளுகள் இயக்கத்தின் உறுப்பினர்கள். 

உயிரை காக்க ஐரோப்பா வந்து வெற்று வேட்டு அரசியல் செய்த பித்தர்கள் அல்ல. 

இணைய வாசகர்கள் உண்மையை சீர்தூக்கி பார்ககவேண்டும் என்பதற்காகவே இரண்டையும் இணைத்தேன். உங்களுக்காக அல்ல. 

விடுதலைப்புலிகளின் போராட்டத்திலிருந்து                                      1....இலங்கையில் பேச்சுவார்த்தை மூலமே அல்லது ஆயுதப்போராட்டத்தின் மூலமே ஒரு தீர்வுவைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லையா.  ?

2...பேச்சுவார்த்தை இந்தியா  தலைமையில் அல்லது இந்தியாவின் ஆதரவுடன் நடத்தால் இந்தியா மாநிலங்களின் அதிகாரத்துக்கு கீழே தான் தீர்வைக்கோர முடியும் அதற்கு மேல் கோர முடியாது என்பதை கற்றுக்கொண்டதில்லையா. ?

3....போராட்டம் தொடங்க முதல் இவை தெரியாது  இப்போது தெரியும்  எனவே இலங்கையில் இலங்கை தமிழருக்கு ஒரு தீர்வைப்பெற   1...2....பயன்படுத்த முடியாது என்பதை கற்றுக்கொள்ளவில்லையா.?

4...எந்தவொரு நாட்டின்அரசாங்கமும்  இன்னெரு நாட்டின் அரசாங்கத்துடன் தான் தொடரபைப் போணும். இலங்கையில் தமிழன் ஆண்டால் தமிழனுடன் தான் உலக நாடுகள் பேசும். மாறாக சிங்களவனுடனில்லை. 

5...இந்தியா  பாகிஸ்தானை பிரிந்து பங்களாதேஷ்சை  உருவாக்கியது.  பங்களாதேஷ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கு இல்லை  மாறாக பாகிஸ்தான் பெரிய நாடாக இருத்தல் இந்தியாவுக்கு ஆபத்து என்ற பயம் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா.?

6....இலங்கையால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை எனவே இலங்கையை பிரிக்கத் தேவையில்லை  என்ற இந்தியாவின் கொள்கையை கற்றுக்கொள்ளவில்லையா  ?

7....விடுதலைப்புலிகளின் போராட்டம் போராடிய பிழையால் தோற்கவில்லை  மேலே  6. இல் கூறிய காரணத்தால் தோற்கடிக்கப்பட்டது  என்பதை கற்றுக்கொள்ளவில்லையா  ?

8...நாங்கள் இலங்கை தமிழராக இல்லாமல் பாகிஸ்தான் தமிழர் அல்லது சீனா தமிழர் என்று இருத்திருப்போமாயின்  இன்று சொந்த நாட்டில் வாழ்வோம் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா  ?

எனவே தயவுசெய்து போராடியது பிழை என்று சொல்லாதீங்கள் இப்படிப்பட்ட இலங்கை  தமிழன்  இருக்கும் வரை இலங்கை தமிழனுக்கு விடுதலை கிடையாது  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.