Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசுப் பணியாளர் தேர்வுகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம்!

Featured Replies

34 minutes ago, பெருமாள் said:

அட விடுங்கண்ண  தமிழ்நாடு பற்றி எழுத அந்தாள் என்னை இழுத்து சீமான் புராணம் பாடுகிறார் அதனால் வேலைக்கு ஆவாது என்று பதில் கருத்து  போடாமல் கடந்து செல்லவேண்டியதாக போயிற்று . மேலும் சில தமிழின தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தூஷண பேச்சுக்களை இங்கு இணைக்க  முடியாத நாகரீகம் கொண்டவை .

உங்களை நான் இழுத்தேனா? என்னை முதலில் குவாட் பண்ணியது நீங்கள் தானே பெருமாள். அதன் பின்னர் தான் உங்களுக்கு நான் பதிலளித்தேன். வாய் திறந்தால் உடனே பொய். 

  • Replies 54
  • Views 2.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

..பெருமாள் செய்தி கொண்டு வந்தால் அனேகமாக இப்படித் தான் ஏதாவது திரித்தல் இருக்கும். இதை நீங்கள் சீரியசாக எடுத்துத் தேடியிருக்கிறீங்கள் -  கரும சிரத்தை👍!

இல்லை சார்.. மதுரை மக்கள் அவ்வளவு எளிதாக பழமையை, கலாச்சாரத்தை விட்டுவிட மாட்டார்களே, 'என்ன இப்படியாகிப் போச்சே, நம்ம மதுரை..?' என்று உறுத்தலும், வருத்தமும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

உங்களை நான் இழுத்தேனா? என்னை முதலில் குவாட் பண்ணியது நீங்கள் தானே பெருமாள். அதன் பின்னர் தான் உங்களுக்கு நான் பதிலளித்தேன். வாய் திறந்தால் உடனே பொய். 

குவாட் பண்ணியது நான்தான் இல்லையெனவில்லை  சீமான் பற்றி ஒன்றுமே எழுதாத போது இந்தியாவின் மாநிலங்களின் தாய் மொழியை கட்டாய பாடமாக வைத்திருக்க தமிழ்நாடு இப்பதான் அமுல் படுத்துகிறது என்று எழுத நீங்கள்  தான் அதற்கு பதில் கருத்து என்று சீமானை போட்டு எழுதியது அதனால்தான் மருகருத்து  இடவில்லை .

4 minutes ago, பெருமாள் said:

குவாட் பண்ணியது நான்தான் இல்லையெனவில்லை  சீமான் பற்றி ஒன்றுமே எழுதாத போது இந்தியாவின் மாநிலங்களின் தாய் மொழியை கட்டாய பாடமாக வைத்திருக்க தமிழ்நாடு இப்பதான் அமுல் படுத்துகிறது என்று எழுத நீங்கள்  தான் அதற்கு பதில் கருத்து என்று சீமானை போட்டு எழுதியது அதனால்தான் மருகருத்து  இடவில்லை .

மீண்டும் பொய். சீமானை பற்றி யார் முதல் எழுதியது? 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

என்னது தமிழக அரசின் சிறப்பா?

இன்னும் கனிமள கடத்தல் அதிகமாகி விட்டதாம் கேள்விப்பட்டியளோ? 😂

எல்லாத்தையும் விட இது இன்னும் சிறப்பு...🤣

Bild

எரிஞ்சு பொரியுதடி பாத்திமா 😁

🤣 அண்ணை கனிமவள கொள்ளையை நான் எங்க சிறப்பு என்று எழுதினேன்?

நான் மேலே சிறப்பு என கூறியது இந்த செயலுக்கு மட்டும். 

முன்னர் ஒரு திரியில் நானும், வன்னியன் சாரும், துல்பெனுன் ராமதாசின் தமிழருக்கு மட்டுமே வேலை என்ற கோரிக்கை பற்றி கதைத்தபோது, இப்படி ஒன்றை தமிழக அரசு செய்யவேண்டும், அது நியாயமாக இருக்கும் என எழுதினேன். அதே போல் செய்யும் போது வரவேற்கத்தானே முடியும்?

சிறப்பை சிறப்பு என்றும், கடுப்பை கடுப்பு என்றும்தானே கூற முடியும்?

சீமான் சொல்லி என்ன, கோமான் சொல்லி என்ன, நல்லது நடக்கிறது அல்லவா? அதை வரவேற்க்காமல் இருப்பது “எரியுதடி மாலா” மனநிலைதானே?

மகளீர் டாஸ்மார்க் - இது வீண்வேலை, எதிர்கபட வேண்டியது என்பதுதான் என் நிலைபாடும். இதில் லாபம் அடைவது சாராய ஆலை வைத்திருக்கும், திமுக, அதிமுக முதகைகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

பெருமாள் செய்தி கொண்டு வந்தால் அனேகமாக இப்படித் தான் ஏதாவது திரித்தல் இருக்கும். இதை நீங்கள் சீரியசாக எடுத்துத் தேடியிருக்கிறீங்கள் -  கரும சிரத்தை👍!

ஒரு பேப்பரில் வந்ததை இன்னொரு பேப்பர் மறுத்து உள்ளது ஏன் அவசரப்படுகிறீய்ங்க வெயிட் பண்ணுங்க அப்படி இல்லை என்றால் மதுரை மாநகரம் தப்பிக்கொண்டது என்று நிம்தியாய் இருக்கலாம்  அந்த செய்தி பொய்யாகனும் என்றுதான் என் விருப்பமும் .

1 minute ago, tulpen said:

மீண்டும் பொய். சீமானை பற்றி யார் முதல் எழுதியது? 

குழந்தைப்பிள்ளைகள் போல் நடந்துகொள்ளமால் இருங்க வாசிப்பவர்கள் முடிவு செய்வார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

திரியை விட்டு விலகுகிறோம், தமிழக அரசு வேலை பற்றி பேசலாமே Please ?

8d1495f1688474bf2c51a8c33b6b7eb7.gif

  • கருத்துக்கள உறவுகள்

29 minutes ago, பெருமாள் said:

நான் எங்கு குமராசாமியை வைது  கொண்டு இருக்கிறன் ? உங்களுக்கு தெரிந்துகொண்டே வார்த்தை ஜாலம் பண்ணி ஆட்களை குழப்புவது உங்கள் வாடிக்கை குட்டையை குழப்பி மீன்  பிடிக்கும் விளையாட்டு .

திரியின் ஆரம்பத்தை கணணி எலி மூலம் உருட்டி மேலே சென்று வாசிக்க இயலாத குழந்தைகளுக்காக: முதன் முதலில் சீமானை உச்சரித்த  கருத்து கீழே (மூன்றாவது தடவையாக மேற்கோள்!👇

17 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

6 hours ago, பெருமாள் said:

உங்களின் சிந்தனைகளை  மாற்றுவது நல்லது ஐந்தாம் வகுப்பென்ன அந்த அந்த மாநிலங்களில் அவர்களின் மொழி கட்டாயமாக படிப்பிப்பது அவர்களின் அடிப்படை உரிமை இந்த உண்மை கூட விளங்காமல் அல்லது உங்கள் பார்வையில் மற்ற மொழிக்காரர்கள் மேன்மையானவர்கள் எண்ணம் சிறுவயதிலே பதிந்து இருக்கனும் ஆனபடியால்தான் ஒன்றில் இருந்து ஐந்து மட்டும் தமிழ் கட்டாய பாடமாகினது பெரிதாக தெரிகின்றது .

கீழே தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மலையாளம் 

Malayalam made compulsory in Kerala schools from classes 1 to 10......

https://english.mathrubhumi.com/news/kerala/malayalam-made-compulsory-in-kerala-schools-from-classes-1-to-10-malayalam-language-learning-1.2797814
 
அடுத்து தெலுங்கு 

AP Makes Telugu Compulsory in Schools: Details Inside

https://english.sakshi.com/news/andhrapradesh/ap-makes-telugu-compulsory-schools-details-inside-140546

பெருமாள்,

கருணாநியின் ஆட்சிக்காலம் ஒன்றில் (1990 இற்கு பின்) பாடசாலைகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டசபையில் சட்டமாக்கினார்கள். ஆனால் அந்த சட்டம் அடிப்படை மனித உரிமையை மீறுகின்றது என்று உச்ச நீதிமன்றம் சென்று அச் சட்டத்துக்கு எதிராக தடை வாங்கினார்கள் பொதுமக்களில் ஒருவர்.

ராசவன்னியன்  அண்ணாவுக்கு இது தொடர்பாக தெரிந்து இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்லவேளை சீமான் இல்லை.. இதை சீமான் சொல்லி இருந்தா தீவிரவாதி எண்டு தொடங்கி இருப்பானுக

ஒருத்தரும் டென்சன் ஆக வேண்டாம். இதில முதல் முதல் சீமானை கோத்து விட்டது எங்கட புலவர்🤣.

உரே அதகள படுகுது ஆள் எஸ்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

பெருமாள்,

கருணாநியின் ஆட்சிக்காலம் ஒன்றில் (1990 இற்கு பின்) பாடசாலைகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டசபையில் சட்டமாக்கினார்கள். ஆனால் அந்த சட்டம் அடிப்படை மனித உரிமையை மீறுகின்றது என்று உச்ச நீதிமன்றம் சென்று அச் சட்டத்துக்கு எதிராக தடை வாங்கினார்கள் பொதுமக்களில் ஒருவர்.

ராசவன்னியன்  அண்ணாவுக்கு இது தொடர்பாக தெரிந்து இருக்கும்.

2006 ல் என்று முன்பே இந்த திரியில் ராசவன்னியன்னாவுக்கு எழுதியுள்ளேன் .கீழே இணைப்பு .............................

2006-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு தமிழ் கற்றல் (தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்குதல்) சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. அச்சட்டப்படி, 2006-07 கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.

அதன்பின் ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம் நீட்டிக்கப்பட்டு வந்த அச்சட்டம் 2015-16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில பள்ளிகளுக்கு விலக்கு அளித்ததால் இன்று வரை 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதன்பின் இன்று வரை உயர்நீதிமன்ற தீர்ப்பை மாற்றி தமிழை கட்டாயப்பாடமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது துரதிருஷ்டவசமானது.

https://www.hindutamil.in/news/tamilnadu/544290-ramdoss-pmk-education-tamil-language-1.html

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஒருத்தரும் டென்சன் ஆக வேண்டாம். இதில முதல் முதல் சீமானை கோத்து விட்டது எங்கட புலவர்🤣.

உரே அதகள படுகுது ஆள் எஸ்🤣.

ஓ..நானும் இப்ப தான் கவனித்தேன்! ஆள் இன்னும் spending mode இல் இருப்பதால் இங்கால காணவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஓ..நானும் இப்ப தான் கவனித்தேன்! ஆள் இன்னும் spending mode இல் இருப்பதால் இங்கால காணவில்லை!

இப்ப பெருமாள் தான் இழுத்துவிட்டது என்று வந்ததும் வராததுமாய் என்னிலை  பாய்ந்ததுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

2006 ல் என்று முன்பே இந்த திரியில் ராசவன்னியன்னாவுக்கு எழுதியுள்ளேன் .கீழே இணைப்பு .............................

2006-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு தமிழ் கற்றல் (தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்குதல்) சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. அச்சட்டப்படி, 2006-07 கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.

அதன்பின் ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம் நீட்டிக்கப்பட்டு வந்த அச்சட்டம் 2015-16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில பள்ளிகளுக்கு விலக்கு அளித்ததால் இன்று வரை 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதன்பின் இன்று வரை உயர்நீதிமன்ற தீர்ப்பை மாற்றி தமிழை கட்டாயப்பாடமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது துரதிருஷ்டவசமானது.

https://www.hindutamil.in/news/tamilnadu/544290-ramdoss-pmk-education-tamil-language-1.html

இதற்கு அரசு செய்யக் கூடியது சட்டத்திற்குட்பட்டுத் தான் இருக்க முடியும். தற்போதைய நடவடிக்கை தனியார் பள்ளியில் ஆங்கிலத்தில் படித்தாலும் அரசு வேலையில் சேர முடியாத நிலையை சிலருக்கு ஏற்படுத்தும். இப்படி இயலுமான வழியில் ஓட்டைகளை அடைத்தால் நீதிமன்றம் விலக்களித்த தனியார் பள்ளிகளே தமிழைக் கட்டயப் பாடமாக்க வைக்க முடியும்!

மேலும், செய்திகளில் வராத பல வழிகளிலும் தி.மு.க அரசு தமிழ் மொழியை விருத்தி செய்கிறது. 

3 minutes ago, பெருமாள் said:

இப்ப பெருமாள் தான் இழுத்துவிட்டது என்று வந்ததும் வராததுமாய் என்னிலை  பாய்ந்ததுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள் ?

பெருமாள் , எழுதியதை வாசிக்கவே மாட்டீர்களா? 4 ஆம் தரம் மேற்கோள் போடவேண்டிய அளவுக்கு விளங்காமுனியா ஐயா நீங்கள்?🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

மேலும், செய்திகளில் வராத பல வழிகளிலும் தி.மு.க அரசு தமிழ் மொழியை விருத்தி செய்கிறது. 

சிரிப்பு வருது அந்த வராத செய்திகளை வெளியில் சொல்ல  விளம்பரக்கட்சிக்கு என்ன பிரச்சனை கொஞ்சம் விளக்கமுடியுமா ?

எந்த அரசியல்கட்சியும் தாங்கள்  செய்வதை விளம்பரப்படுத்தாமல் விடமாட்டர்கள் ஆதாரமில்லாமல் பொய்களை சந்தடி சாக்கில் விதைப்பதை  நிறுத்துவது யாழுக்கு நல்லது .

1 hour ago, tulpen said:

மீண்டும் பொய். சீமானை பற்றி யார் முதல் எழுதியது? 

நான் பொய்யன் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ?

நீங்களே பொய் சொல்வது நிரூபிக்கப்பட்டுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

சிரிப்பு வருது அந்த வராத செய்திகளை வெளியில் சொல்ல  விளம்பரக்கட்சிக்கு என்ன பிரச்சனை கொஞ்சம் விளக்கமுடியுமா ?

எந்த அரசியல்கட்சியும் தாங்கள்  செய்வதை விளம்பரப்படுத்தாமல் விடமாட்டர்கள் ஆதாரமில்லாமல் பொய்களை சந்தடி சாக்கில் விதைப்பதை  நிறுத்துவது யாழுக்கு நல்லது .

சிரிப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது - நன்றாக சிரியுங்கோ.

ஆனால் செய்வது தமிழ்நாடு அரசு - கட்சியல்ல என்பதால் தான் விளம்பரத்தை விட செயல்பாட்டில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால் , நீங்கள் சொல்வது சரி! ஒரு கட்சியாக செய்வதானால்  சில கட்சிகள் செய்வது போல ஒரு பனங்கொட்டையை நட்டு விட்டு ஒன்பது வீடியோ எடுத்து நூறு வெவ்வேறு பெயர் கொண்ட யூ ரியூப் சனல்களில் போட வேண்டியிருக்கும்!😉 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

இதற்கு அரசு செய்யக் கூடியது சட்டத்திற்குட்பட்டுத் தான் இருக்க முடியும். தற்போதைய நடவடிக்கை தனியார் பள்ளியில் ஆங்கிலத்தில் படித்தாலும் அரசு வேலையில் சேர முடியாத நிலையை சிலருக்கு ஏற்படுத்தும். இப்படி இயலுமான வழியில் ஓட்டைகளை அடைத்தால் நீதிமன்றம் விலக்களித்த தனியார் பள்ளிகளே தமிழைக் கட்டயப் பாடமாக்க வைக்க முடியும்!

தெளிவான பார்வை இது.

தவிரவும் வழக்கு போட்டவுடன் முடங்கி விடவும் கூடாது. ஏனைய மாநிலங்கள் இதை எப்படி நடைமுறை படுத்துகிறன என்பதை அவதானித்து அதை தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும்.

எப்போதும் மாநில சுயாட்சிக்கு நந்தி போல நடுவே உச்ச நீதிமன்றம் வருவது வழமைதான்.

கருணாநிதி போல தனியே தம் அரசியல் நலனை மட்டும் கருத்தில் எடுக்காமல், அண்ணா, பட்நாயக் போல மாநில நலனையும், மொழி நலனையும் முன்வைத்து நகரும் போது, எறும்பூர கல்தேயும்.

ஆனால் இந்த வகையில் ஸ்டாலின் அண்ணா போலவா? அல்லது கருணாநிதி போலவா? இன்னும் தெரியவில்லை. The jury is still out on that question.

  • கருத்துக்கள உறவுகள்

மக்காள் மனதை தளர விடக்கூடாது.தொருங்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆனால் , நீங்கள் சொல்வது சரி! ஒரு கட்சியாக செய்வதானால்  சில கட்சிகள் செய்வது போல ஒரு பனங்கொட்டையை நட்டு விட்டு ஒன்பது வீடியோ எடுத்து நூறு வெவ்வேறு பெயர் கொண்ட யூ ரியூப் சனல்களில் போட வேண்டியிருக்கும்!😉 

ஒரு இரவிலை இப்படி அந்தர்பல்டி அடிக்க கூடாது சுமத்திரன் பணம்கொட்டை நட்டதை  இப்படி சொல்லி மானத்தை  வாங்கக்கூடாது .🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் இந்த வகையில் ஸ்டாலின் அண்ணா போலவா? அல்லது கருணாநிதி போலவா? இன்னும் தெரியவில்லை. The jury is still out on that question.

செய்தியாளருக்கு இலவச போன் அதுக்குள் ஸ்பை மென்பொருள் நிறுவி கொடுத்து குட்டி 32 அடிபாயும் என்பதை நிரூபித்து உள்ளது  . 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

ஒரு இரவிலை இப்படி அந்தர்பல்டி அடிக்க கூடாது சுமத்திரன் பணம்கொட்டை நட்டதை  இப்படி சொல்லி மானத்தை  வாங்கக்கூடாது .🤣

ஓமோம், அவருக்கு முன்மாதிரியாக இருந்ததும் you know who வின் தம்பிகள் தானே😂?

ஆனால், தமிழுக்கு சேவை செய்யாமல் கட்சிக்கு விளம்பரம் தேடும் அரசியலாளர் யாராக இருந்தாலும் மக்கள் கண்டு கொள்வர், ஆப்பும் வைப்பர்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ராசவன்னியன் said:

கருமம், கருமம்..! 🥵

கண்மணிகள், கண்றாவியாகி விடக்கூடாது.

'ஆண்கள் மட்டும் குடிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண்கள் ஏன் அவற்றை செய்யக்கூடாது..?' என தோன்றும், பலரும் கேட்கலாம்..நாடு தாங்குமா..? 

ஆனால் 'பெண்களை நம்பித்தான் குடும்ப வாழ்வியலே சுழல்கிறது' என்பதை அவசியம் ஒத்துக்கொள்ள வேண்டும்..!

புகைரதம், பேரூந்துகளில் பெண்களுக்கு தனியிடம் போய் இப்போது பெண்களுக்கு மட்டும் மதுபானசாலை.....
ஒலக அதியயம் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நிழலி said:

கருணாநியின் ஆட்சிக்காலம் ஒன்றில் (1990 இற்கு பின்) பாடசாலைகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டசபையில் சட்டமாக்கினார்கள். ஆனால் அந்த சட்டம் அடிப்படை மனித உரிமையை மீறுகின்றது என்று உச்ச நீதிமன்றம் சென்று அச் சட்டத்துக்கு எதிராக தடை வாங்கினார்கள் பொதுமக்களில் ஒருவர்.

 எதிராக வழக்கு போட்ட அந்த பொதுமக்களில் யார் அவர் என விசாரித்தால் மிகுதி விளங்கும்.
பொய்யும் பிரட்டும்  குள்ள நரி வேலைகளும் நிறந்த உலகு அது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

🤣 அண்ணை கனிமவள கொள்ளையை நான் எங்க சிறப்பு என்று எழுதினேன்?

நான் மேலே சிறப்பு என கூறியது இந்த செயலுக்கு மட்டும். 

முன்னர் ஒரு திரியில் நானும், வன்னியன் சாரும், துல்பெனுன் ராமதாசின் தமிழருக்கு மட்டுமே வேலை என்ற கோரிக்கை பற்றி கதைத்தபோது, இப்படி ஒன்றை தமிழக அரசு செய்யவேண்டும், அது நியாயமாக இருக்கும் என எழுதினேன். அதே போல் செய்யும் போது வரவேற்கத்தானே முடியும்?

சிறப்பை சிறப்பு என்றும், கடுப்பை கடுப்பு என்றும்தானே கூற முடியும்?

சீமான் சொல்லி என்ன, கோமான் சொல்லி என்ன, நல்லது நடக்கிறது அல்லவா? அதை வரவேற்க்காமல் இருப்பது “எரியுதடி மாலா” மனநிலைதானே?

மகளீர் டாஸ்மார்க் - இது வீண்வேலை, எதிர்கபட வேண்டியது என்பதுதான் என் நிலைபாடும். இதில் லாபம் அடைவது சாராய ஆலை வைத்திருக்கும், திமுக, அதிமுக முதகைகள்தான்.

சீமான் தனது அரசியல்/சமூக பிரச்சாரங்களை கடுமையாக முன்னெடுப்பதால் தான் இதர கட்சிகள் என்றுமில்லாதவாறு விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன.

சீமான் ஆட்சிக்கு வருகின்றாரோ இல்லையோ ஆளும் கட்சிகளுக்கு சீமான் சிம்ம சொப்பனம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

செய்தியாளருக்கு இலவச போன் அதுக்குள் ஸ்பை மென்பொருள் நிறுவி கொடுத்து குட்டி 32 அடிபாயும் என்பதை நிரூபித்து உள்ளது  . 

அட் ரா சக்கை🤣. இதெப்ப நடந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.