Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவே முடிவு மாத்திரமல்ல, ஆனால் ஆரம்பமும் கூட" - இராமர் பாலத்தை பார்வையிட்ட பின் சீன தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
AVvXsEjb5dGSNKNN18a1DKx8Q-VUF2sXxXR-oiflLrDiXIVpW_xUigvxCuuHi32YX6g3Q2e2tPV7Ma0bhqUohIQ-ZL8mpn0gJC_n-FNqeRZ7Qms-lL-TVUOKGq5pyc187Wd46T6fegP9liEbUQqrYp_1GWSpoz_J-lxk-EPI13atperqFuAofUdq5XD8lFd-wA=s320


இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17) கண்காணித்தார்.

 

மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்தார்.
 
அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார்.
 
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.
 
கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றில் ஏறினர்.
 
17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.
 
சுமார் 20 நிமிடங்களாக இராமர் பாலத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட் இராஜதந்திரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.
 
மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவரிடம் இந்த பயணம் தொடர்பில்  ஊடகவியலாளர் வினவியபோது, "இதுவே முடிவு மாத்திரமல்ல, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார்.
 
தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் பாரத மக்களால் போற்றப்படுகின்றது.
 
AVvXsEhJGXjPgQEWouBjHBji87gikysJvRrXzjG1MCnSIuV2h0TNVeOTVmAGGqaealzzuINvBnMVxrNiLhtrWKmD-fUafVLwFKnR8qEeiT0v3QC_1i4rOoJGDI-JzoinGrBQWIlaZK3o6GCn9AmKzCrSgAGZ5Cy-4VA71m7OK_VcBDjNrV630VRP1w-PmQmKfQ


இந்த 16 மணல் திட்டுக்களில் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் எஞ்சிய 8 இந்தியாவிற்கும் உரியவையாகும்.

https://www.tamilnews1.com/2021/12/909.html?fbclid=IwAR1hvqC_MY2PaH2ZekpZxx9Ss9YJxOmypeDFwlPOHkDfWAp6nd5r6zTn010

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, பெருமாள் said:
கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றில் ஏறினர்.
 
17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.
 
சுமார் 20 நிமிடங்களாக இராமர் பாலத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட் இராஜதந்திரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.
 
மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவரிடம் இந்த பயணம் தொடர்பில்  ஊடகவியலாளர் வினவியபோது, "இதுவே முடிவு மாத்திரமல்ல, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார்.
 
தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் பாரத மக்களால் போற்றப்படுகின்றது

பெருமாள் என்ன சொல்லுறியள்....இப்பிடியொரு பாலம் வரும் எண்டுறியள்? 😁

Hongkong: 55 Kilometer lange Brücke verbindet Hongkong und Chinas Festland

 அரை மணித்தியாலத்திலை திராவிட பூமிக்கு போய் தேத்தண்ணி குடிச்சுட்டு வரலாம் எல்லே..🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான். நோர்வே,அமெரிக்கா ,எல்லா நாடும் உதவி செய்யும்போது சைனா  உதவி மட்டும் வேண்டாம் என்றால் 🤣 

கொஞ்சகாலத்துக்கு முன் சேது சமுத்திர திட்டம் என்று தொடங்கினவையல் வழக்கமான திராவிட இந்திய அரசியல் எந்த திட்டமும் தொடங்கும்போது ஆரவாரப்படுவதும் பின்பு முழுமையாக முடிக்கப்படாமல் மறக்கடிக்கப்படுவது வழமையான ஒன்று.

அம்பந்தோட்டை துறைமுகம் அதிக  கொள்கலன் நிர்வகிப்பு விரைவான சேவை குறைந்த சிலவு  எனும்போது காலப்போக்கில் கொழும்பு தேவையற்ற ஒன்றாகி விடும் கொழும்பு செல்வதை விட அம்பாந்தோட்டை துறைமுகம் சென்று கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் கப்பல் பயணம் ஒரு சில நாட்களை மீதப்படுத்தும் காலப்போக்கில் கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய துறைமுகமாகி விடும் வழக்கம்போல் கிந்தியர்கள்  தலைக்கு மேல் வெள்ளம் போனபின் நித்திரையால் எழுவார்கள் கிடப்பில் போட்ட சேது சமுத்திரம் மீண்டும் துளிர்விடும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார்.

இவனுகளே கூட்டிக்கொண்டு போய் எல்லாவற்றையும் காட்டிகொடுக்கிறானுகள் போல் இருக்கிறதே!   புலிகளுக்கு எதிராக இலங்கைக்கு கற்றுக்கொடுத்த பயிற்சிகள்  இன்று அதற்கெதிராக திரும்பியிருக்கிறது. இது ஒரு  திட்டமிட்ட செயல் போல் தெரிகிறது. பாவம் இந்தியா! பிழையான கணிப்பினால், தவறானவர்களுக்கு உதவி செய்யப்போய் தூண்டிலில் மாட்டி முழிக்குது. இப்ப இந்தியா யாரிடம் உதவி கோரும் என்று நினைக்கிறியள்? சீனாவின் காலில் விழுவதே இப்போதுள்ள ஒரே வழி!

3 hours ago, பெருமாள் said:

, "இதுவே முடிவு மாத்திரமல்ல, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார்.

எச்சரிக்கை வேற விடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

"இதுவே முடிவு மாத்திரமல்ல, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார்

"ராமர் பாலம் - மோடி ஆட்சி " தாராளமாக அரசியல் செய்யலாம் ,ஆனால் அதற்குரிய கப்பசிற்றி , யூனிவர்சிற்றி ஈழ அரசியல்வாதிகளுக்கு வேண்டுமல்லொ..😢

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பந்தை தட்டிவிட வேண்டும், எதை அடித்து சிதற விடவேண்டும் என்று அவர்களுக்கு  தெரிந்திருந்தால் ஆட்டம் எப்பவோ முடிந்திருக்கும். எல்லாப் பந்தையும் வாழ்நாள் முழுவதும் தவற விட்டுக்கொண்டிருப்பது  என்றே அவர்கள் முடிவெடுத்து விட்டார்கள். இப்போ சீனன் பந்து வீச ஆரம்பித்திருக்கிறான், இனி ஆட்டம் சூடு பிடிக்கும். ஆட்டம் ஆரம்பிக்க முதல்  ஆட்டத்தை  தொடர்வதா, காலில் விழுவதா  என்று இந்தியா முடிவெடுக்கும் காலம் வந்துவிட்டது. காலம் எப்போதும் ஒரே மாதிரியாய் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஜயம்.. சீனாவின் வெற்றியின் முடிவல்ல.. ஹிந்தியாவின் அழிவின் ஆரம்பம். நல்ல பூடகமான பேச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி ஒரு நாடு இருக்கப் படாது என்பதற்கு… இந்தியா நல்ல உதாரணம்.

உலகத்திலேயே…. தன்னுடைய செயலாலும், வாயாலும்… கெட்டுப் போன நாடுதான் இந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

இதுவே முடிவு மாத்திரமல்ல, ஆனால் ஆரம்பமும் கூட

அட குருவி கௌவ்வி கொண்டாந்து குடுத்த கார்ட்டை குருவி சாத்திரகாரர் வாசித்து சொன்னகணக்கில் அசால்ட்டா சொல்லிபோட்டாரு,  அவரு இத இந்தியாவுக்கு சொன்னதா எடுத்துக்கலாமா.

இருந்தாலும் செவ்வாய் கிரகத்தில் கால்தடம் பதித்த கணக்கில் இந்த மனிசன்ட்டை பஞ்சு டயலாக்கு கொஞ்சம் ஓவராதான் தெரியுது.

சீனாக்காரன் டெல்லிக்கு போறதுக்கு இதுதான் பாதை.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அரை மணித்தியாலத்திலை திராவிட பூமிக்கு போய் தேத்தண்ணி குடிச்சுட்டு வரலாம் எல்லே..🤣

என்ன பொசுக்குன்னு "திராவிட பூமி"ன்னு சொல்லிப் போட்டியள்..? 😡

நாங்களே மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய அசல் பாடல் வரிகள் தமிழ்த்தாய் வாழ்த்தில் இல்லையென்ற(?) நினைப்பில் இருக்கிறோம்..! 😉

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

பெருமாள் என்ன சொல்லுறியள்....இப்பிடியொரு பாலம் வரும் எண்டுறியள்? 😁

Hongkong: 55 Kilometer lange Brücke verbindet Hongkong und Chinas Festland

 அரை மணித்தியாலத்திலை திராவிட பூமிக்கு போய் தேத்தண்ணி குடிச்சுட்டு வரலாம் எல்லே..🤣

சென்னை விமானநிலையம் கட்டிய மாதிரியோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

சென்னை விமானநிலையம் கட்டிய மாதிரியோ?

அதில் விபத்து நடக்கும்போது பயணிகளுக்கு பாதுகாப்பில்லை.....ஆனால் இது அப்படியல்ல விபத்து நடந்தால் இப்ப பாலத்துக்கு கீழால போற தண்ணீர் பாலத்துக்கு மேலால போகும்....பாலம் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு சாதகமாக இருக்கும்......! 😎

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. காலம் கடந்த முடிவானாலும் வேறு வழியில்லை. இனி சிறிலங்காவின் இறையாண்மையைப் பாதுகாப்பதால் இந்தியாவுக்கு எந்தப்பலனும இல்லை.சிறிலங்காவின் இறையாண்மையை உடைத்து தமிழர்களை அரவணைப்பதைத்தவிர வேறு வழியில்லை.ஆனால் தமிழர்விரோத இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முழு இந்தியாவையும் ஆழிவுக்குள்ளாக்கவார்களா? விழு;த்தக்கொள்வார்களா? ஈழத்த்தமிழத்தலைவர்கள் சீனாவோடும் பேச வேண்டும் இப்பொழுது இந்தியா தானாக வழிக்கு வரும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ராசவன்னியன் said:

என்ன பொசுக்குன்னு "திராவிட பூமி"ன்னு சொல்லிப் போட்டியள்..? 😡

நாங்களே மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய அசல் பாடல் வரிகள் தமிழ்த்தாய் வாழ்த்தில் இல்லையென்ற(?) நினைப்பில் இருக்கிறோம்..! 😉

 

அது சும்மா பகிடிக்கு எழுதினது வன்னியரே! இதுக்கெல்லாம் கோபிக்கப்படாது.😁

நான் தமிழன்💪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

சென்னை விமானநிலையம் கட்டிய மாதிரியோ?

பாலம் கட்டப்போறது இந்தியா இல்லை சீனா...😎

  • கருத்துக்கள உறவுகள்

நம்மைப் பாதுகாக்க இல்லாவிடினும் இந்தியாவை காப்பதற்காக நம்ம வீரர் களத்தில் நின்று தடுப்பினம் சீனன் எறியும் பந்தை. நீங்கள் கவலைப்படாதீங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

பாலம் கட்டப்போறது இந்தியா இல்லை சீனா...😎

இந்திய எல்லைக்குள் யாராம் கட்டுறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்திய எல்லைக்குள் யாராம் கட்டுறது?

தமிழ்நாட்டுக்குள்ளேயும் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கெல்லோ? 🤪

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

தமிழ்நாட்டுக்குள்ளேயும் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கெல்லோ? 🤪

நோ நோ

திராவிட நாட்டுக்குள் தான் அவை இருக்கின்றன.
அடிக்கடி மறந்து போறியள்.

திராவிட புத்திகள் தானே அவைக்கும் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்திய எல்லைக்குள் யாராம் கட்டுறது?

பாலம் டெல்லி வரைக்கும் போகுமட்டும் இந்திய கொளகைவகுப்பாளர்கள்(வேணுமென்றே ள ) குறட்டை விட்டு தூக்கத்தில் இருப்பார்கள் சீனாக்காரனுக்கு தெரியும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளை இத்தனை ஆண்டுகளாய் சிறையில் வைத்து வேடிக்கை பார்ப்பதிலிருந்து விளங்குது அவர்களின் வீரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

நோ நோ

திராவிட நாட்டுக்குள் தான் அவை இருக்கின்றன.
அடிக்கடி மறந்து போறியள்.

திராவிட புத்திகள் தானே அவைக்கும் இருக்கும்.

கம்யூனிஸ்ட்  அக்காவை இறக்கிவிடட்டா....

Bild

இனியாவது தமிழர் இந்தியாவை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும் . சீனாவை நாம் ஆதரிக்க வேண்டும் 
தப்பாக எங்கள் போராட்டத்தை அழித்த இந்தியாவை நாறடிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.