Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்!

spacer.png

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது.

இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்களை கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
spacer.png

spacer.png

https://athavannews.com/2022/1261027

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வன்முறைக் கும்பலொன்றினால்

Sri Lanka - Sinhala Police 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் பொலிசாரின் அடாவடித் தாக்குதலால் என்பது வன்முறைக் கும்பலொன்றினால் என்று எழுத வேண்டிய தேவை ஆதவனுக்கு ஏன் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தபோது வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியே உள்ள தெருவில் அதாவது மண்டபத்துக்கும் இப்போது நினைவுத்தூபி இருக்கும் கோட்டை அகழிக்கு இடையிலிருக்கும் வெளிக்கும் இடையேயான தெருவில் நானும் எனது தம்பியும் தார் ரோட்டில் சுமார் எட்டு மணியளவில் அரைக்கால்சட்டையுடன்  சப்பணக்கலிட்டு இருந்தோம் எங்களுடன் எங்களது அயல் வளவில் வீடுகட்ட வல்வெட்டித்துறையிலிருந்து வந்த மேசன் இருவரும் அவர்களது உதவியாளரும் வந்திருந்தனர் அவர்கள் எங்குபோனாலும் ஒரு ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோவை எடுத்துசெல்வார்கள் அதும் அவர்கள்கூடவே இருந்தது.

நைனா மரைக்காயர் எனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சிறப்புரையாற்றிக்கொண்டிருந்தார் உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சி ஆனால் மிகப்பெரிய மக்கள் கூட்டம் வெளியே காவல்  நின்றதால் வெளியே வந்து பேசும்படி விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தனர் வீரசிங்கம் மண்டபத்தின் மாடியில் அப்போது வருமானவரித்துறையினரது அலுவலகமும் இருந்தது அங்கிருந்த பெரிய மேசைகளை வெளியில் எடுத்து வந்து அதை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அதில் பேராசிரியரை ஏற்றி சற்று உயரமாகத்தென்படும்படி ஒழுங்குசெய்யப்பட்டு அவர் பேசிக்கொண்டிருந்தார். இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் வாரத்தில் வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைப்பற்றி அவர் மிகவும் சுவைபடப்பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மேற்குத்திசயிலிருந்து ஒரு போட்டார் சைக்கிள் சத்தம் அண்மித்ததாகக் கேட்டது யார் அதில் வந்தது என என்னால் அவதானிக்க முடியவில்லை ஆனால் ஒரு சிறு சலசலப்பு அந்த இடத்தில் நடந்ததை உணர முடிந்தது பின்னர் அடங்கிவிட்டது சிறிது நேரத்தில் பெரிய வாகனச்சத்தம் ஒன்று அதே திசையிலிருந்து கேட்டது சலசல்ப்பு பெரிதாகிபோது எல்லோரும் எழும்பி ஓடத்தொடங்கியிருந்தார்கள் மக்கள் ஓடத்தொடங்கும்போதே கண்ணீர்ப்புகைக் குண்டு வானத்தை நோக்கி வீசப்பட்டதை அவதானித்தேன் தெய்வாதீனமாக நானும் தம்பியும் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கி ஓடிணோம் உருவத்தில் சிறியவர்களாக இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை மண்டபத்தின் முகப்பின் ஒரு சுவரோடு நாம் இருவரும் தள்ளப்பட்டு அங்கேயே நின்றுவிட்டோம் நல்லவேளை இருவரும் நிலத்தில் விழவில்லை விழுந்திருந்தால் நான் இப்போது இச்சம்பவத்தையிட்டு எழுதியிருக்க முடியுமோ தெரியாது மீண்டும் கண்ணீர்ப்புகைக்குண்டு அப்போது அது கண்ணீர்ப்புகைகுண்டு என்பதே எமக்குத்தெரியாது ஆனால் மீண்டும் மீண்டும் வீசப்பட்டதால் கண் எல்லாம் ஒரே எர்ச்சம் கண்திறக்க முடியவில்லை ஒரு அம்மாதான் தம்பி இங் நிக்காதையும்கோ ஓடுங்கடா எனச் சென்னது நினைவிருக்கு அப்படியே மண்டபத்தின் உள்ளே சென்று பக்கதிலுள்ள வாசலால ரீகல் தியேட்டருக்கும் மண்டபத்துக்கும் இடையிலுள்ள நிலப்பகுதியால  பின்பக்கம் சென்று மண்டபக்காணிக்குப் பின்புறமுள்ள கள்ளுக்கோப்பிரேசன் வளவுக்குள்ள ஒரு சேறு அடங்கிய மதவைத்தாண்டி வந்து கரன் தியேட்டருகுள்ளால மிதந்து ஆஸ்பத்திரி வீதிவது ஆனைப்பந்தியை நோக்கி ஓட்டமும் நடையுமாக வீடு வந்தடைந்தேன் இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் சிங்கப்பூர் டிஸ்பென்சரி உரிமையாளரது மகம் நவரத்திரம் ராஜன் எனும் எங்களது வீட்டுக்கு அண்மையிலிருக்கும் ஒரு இளஞர் சிங்களப் போலீசாரின் ரக் வண்டியால் அடித்துக்கொல்லப்பட்டார் ஒரு லைட் போஸ்டுக்குப் பின்னால் தப்பிக்க ஒளித்தவரை வாகனத்தால் அடித்துக்கொன்றார்கள்

 

இதற்கு முழு உடந்தையாக இருந்தது அப்போதைய நாழ்ப்பாணம் நகரசபை மேயர் அல்பிரட் துரையப்பா

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தக் கூட்டத்துக்கு போய் சைகிளையும் விட்டுடுட்டு வந்தேன்.

பின்னர் போய் சிறிது சேதாரத்துடன் மீட்டு வந்தேன்.

நினைவஞ்சலிகள்.

Edited by ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை 48 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று !

spacer.png

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் 48 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.

1974 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் பல தடைகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்திய நிலையில் இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 48 ஆண்டுகள் கடந்துள்ள போதும், இதுவரை எவ்வித நியாயமும் கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 

https://athavannews.com/2022/1261072

 

செய்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது.  போலிஸாரை அனுப்பிக் கலவரத்தை ஏற்படுத்தியபோது கொல்லப்பட்டனர் என்று வந்துள்ளது. எடிற்றர் யாழ் களத்தை வாசிக்கின்றாராக்கும்!

 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாஞ்சலிகள்.........!

யாழ்நங்கை மற்றும் அவர் தோழிகள் என்று அலங்கரிக்கப்பட்ட பாரஊர்தியில் வந்து கொண்டிருந்தேன்.....ஆஸ்பத்திரி பின் வீதியில் வர பிரச்சினை தொடங்கி விட்டது.....சனங்களின் கலவரத்துக்கிடையில் நங்கைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதற்கே மிகவும் சிரமப் பட்டோம் .......!  

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

நினைவாஞ்சலிகள்.........!

யாழ்நங்கை மற்றும் அவர் தோழிகள் என்று அலங்கரிக்கப்பட்ட பாரஊர்தியில் வந்து கொண்டிருந்தேன்.....ஆஸ்பத்திரி பின் வீதியில் வர பிரச்சினை தொடங்கி விட்டது.....சனங்களின் கலவரத்துக்கிடையில் நங்கைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதற்கே மிகவும் சிரமப் பட்டோம் .......!  

ஊரில் வளர்ந்த பிள்ளைகள் ஏன் பெற்றோரிடம் ஒழுங்காக அடி வாங்கிறவே என்று இப்போது தான் விளங்குகிறது,..✍️👋

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நினைவுத்தூபிகளை அமைத்து நினைவஞ்சலி செய்து கொண்டிருக்கிறோம். அவர்களோ வெற்றித்தூபிகளை அமைத்து வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். இரு வேறு உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்..🙏

"பெண் என்றால் பேயும் இரங்கும்" என்று சொல்வார்கள். ஆனால் இரக்கமற்ற பெண் பேய்களும் அரசாட்சி செய்தது இலங்கை வரலாற்றில் பதிவாகிவிட்டது.😲

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அரசாட்சி செய்வது எல்லாம் பிணம் தின்னி பேய்தான். அதில் ஆண் பேய், பெண் பேய், நல்ல பேய், கெட்ட பேய் என்று ஒன்றும் இல்லை. நாங்கள் தான் பேய்கள் மேல் இரக்கம் காட்டினோம், வேண்டியும் கட்டினோம். இப்போ இப்பிடி இருந்து புலம்புறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.