Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழரால் தாயகத்தில் சோம்பேறியாகும் ஒரு தலைமுறை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 30 வயது ஆள் வெளிநாட்டில் இருக்கும் நண்பனுக்கு அழைப்பெடுத்து , சவூதி நாட்டுக்கு செல்ல முயற்சி செய்கிறேன் காசு தந்து உதவுங்கள் என்றிருக்கார்.

நண்பர், கொழும்பிலே ஒரு சர்வதேச உணவகத்தில் வேலை எடுத்துத் தாறன், கிழமைக்கு 80 மணிநேரம் வேலை செய்தால் 80 ஆயிரம் உழைக்கலாம் என்றிருக்கார்.

அங்கெல்லாம் வேலைக்கு போனால் நின்றுகொண்டு வேலை செய்யனும் கால் நோகும் என்று பதில் வந்திருக்கிறது.

ஆள் படிச்சிருக்கிறது ஓஎல் வரைக்கும்தான். 

இப்போது என்ன வேலை செய்கிறார் என்றதுக்கு , வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றிருக்கார்.

முப்பது வயதுக்கு பிறகும் ஒரு வருமானம் இல்லாமல் இன்னொருத்தரிட்ட கை நீட்ட வெட்கமாயிருக்காதா?

ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு , அதில் பிரச்சினை வந்து உதவி கேட்பது வேற. இப்படி எந்த முயற்சியும் இல்லாமல் தண்டமாக இருப்பது வேறு.

 பதினெட்டு வயதுக்குப் பிறகு படிக்காமல்  வீட்டில் இருக்கிற ஒருத்தருக்கும் ஒரு வேளை சோறு கூட போடாமல் துரத்திவிட வேண்டும்.

18 வயதுக்குப் பிறகு பிள்ளை படித்தால் படிக்கும் காலம் வரை சோறு போடுறது உங்க இஷ்டம். ஆனால் அதே பிள்ளைக்கு, படிச்சு முடிச்ச அடுத்த நாளே சோறு போடுறது நிப்பாட்டனும்.

அப்போதுதான் 30 வயதிலையும் அப்பா அம்மாட காசில் சாப்பிட்டுக்கொண்டு , வேலை தேடுறன் என்டுற இளைஞர்கள் உருவாகுவதை தடுக்கலாம். நம்மட ஆட்களுக்கு சொகுசு கூடிப் போச்சு. என்ட பிள்ளை அந்த இந்த வேலை செய்யுறதா என்று சொல்லிச் சொல்லியே நாம் கெடுத்து வச்சிருக்கம். 

அதேபோல் படிச்ச பிள்ளை அந்த வேலை எல்லாம் செய்யுறதா என்று வேற கெடுத்து வைப்போம். அந்த பிள்ளையும் ரோட்டில் வருடக்கணக்கா வேலையில்லா பட்டதாரி  என கொடி பிடிச்சுக்கொண்டு நிற்கும்.

போங்கடா போய் வயலில் இறங்குங்க, ஏதாவது ஒரு கடையில் நில்லுங்க, மூட்டை தூக்குங்க, இறால் வடை சுட்டு வியாபாரம் செய்யுங்க ...அப்படியே அதில் வாற சம்பளத்தில் சாப்பிட்டுக்கொண்டே நீங்க ஆசைப்படுற மாதிரி வேலை தேடுங்க.
மற்றவன்ட காசில் ஓசிச்சோறு தின்றுகொண்டு , அந்தமாதிரி வேலை செய்யுறதா  என வெத்து கெளரவம் பேசாதீங்க.

மேலே சொன்ன இளைஞன் கேட்ட தொகை ஒன்றரை லட்சம்.  நான் அவனிட நிலையில் இருந்திருந்தால், அந்த உணவக வேலைக்கு போய் கிழமைக்கு 100 மணித்தியாலம் என்றால்கூட வேலை செய்து பணத்தைச் சேர்த்து அந்தப் பணத்தில் கெளரவமாக வெளிநாடு போயிருப்பேன். 

மற்றது, ஒரு உணவகத்தில் வேலை செய்ய முடியாத ஆள் ஒரு மத்திய கிழக்கு நாடு போய் அந்த வெயிலில் வேலை செய்து முன்னேறுவாரா? அடுத்த கிழமையே ஆள் ஓடி.வந்துவிடும்.

இந்த உலகத்தில், உழைக்க ஆயிரம் வழி இருக்கு.

எந்த ஒரு வேலையும் செய்யாமல் யாருக்கும் பணம் கிடைக்காது.

சொகுசாக இருந்து யாரும் பணம் பெறுவதில்லை. 

முக்கியமாக ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல வீட்ட இருந்து அப்பா அம்மாட காசில் ஓசிச்சோறு. சாப்பிடுறது கேவலமான விடயம் என புரிந்துகொள்ளுங்க.

வெளிநாட்டில் இருக்கிற ஆட்கள் எந்த வேலையும் செய்யாத ஆட்களுக்கு ஒரு ரூபாய்கூட அனுப்பாதீங்க.

https://www.facebook.com/1286697015/posts/10227694075439193/

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் உறவு ஒன்று £ 13 ஆயிரம்  கேட்டார் ஐரோப்பா வருவதற்கு, மிகுதி      £ 26 ஆயிரம் தான் உழைத்து கொடுப்பேன் என. மொத்தம் £ 39,000. 

@பாலபத்ர ஓணாண்டி

படித்து முடித்த அடுத்த நாளே சோறு போடுவதை நிறுத்துவது என்பது சாத்தியமற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு 30 வயது ஆள் வெளிநாட்டில் இருக்கும் நண்பனுக்கு அழைப்பெடுத்து , சவூதி நாட்டுக்கு செல்ல முயற்சி செய்கிறேன் காசு தந்து உதவுங்கள் என்றிருக்கார்.

நண்பர், கொழும்பிலே ஒரு சர்வதேச உணவகத்தில் வேலை எடுத்துத் தாறன், கிழமைக்கு 80 மணிநேரம் வேலை செய்தால் 80 ஆயிரம் உழைக்கலாம் என்றிருக்கார்.

அங்கெல்லாம் வேலைக்கு போனால் நின்றுகொண்டு வேலை செய்யனும் கால் நோகும் என்று பதில் வந்திருக்கிறது.

ஆள் படிச்சிருக்கிறது ஓஎல் வரைக்கும்தான். 

இப்போது என்ன வேலை செய்கிறார் என்றதுக்கு , வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றிருக்கார்.

முப்பது வயதுக்கு பிறகும் ஒரு வருமானம் இல்லாமல் இன்னொருத்தரிட்ட கை நீட்ட வெட்கமாயிருக்காதா?

ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு , அதில் பிரச்சினை வந்து உதவி கேட்பது வேற. இப்படி எந்த முயற்சியும் இல்லாமல் தண்டமாக இருப்பது வேறு.

 பதினெட்டு வயதுக்குப் பிறகு படிக்காமல்  வீட்டில் இருக்கிற ஒருத்தருக்கும் ஒரு வேளை சோறு கூட போடாமல் துரத்திவிட வேண்டும்.

18 வயதுக்குப் பிறகு பிள்ளை படித்தால் படிக்கும் காலம் வரை சோறு போடுறது உங்க இஷ்டம். ஆனால் அதே பிள்ளைக்கு, படிச்சு முடிச்ச அடுத்த நாளே சோறு போடுறது நிப்பாட்டனும்.

அப்போதுதான் 30 வயதிலையும் அப்பா அம்மாட காசில் சாப்பிட்டுக்கொண்டு , வேலை தேடுறன் என்டுற இளைஞர்கள் உருவாகுவதை தடுக்கலாம். நம்மட ஆட்களுக்கு சொகுசு கூடிப் போச்சு. என்ட பிள்ளை அந்த இந்த வேலை செய்யுறதா என்று சொல்லிச் சொல்லியே நாம் கெடுத்து வச்சிருக்கம். 

அதேபோல் படிச்ச பிள்ளை அந்த வேலை எல்லாம் செய்யுறதா என்று வேற கெடுத்து வைப்போம். அந்த பிள்ளையும் ரோட்டில் வருடக்கணக்கா வேலையில்லா பட்டதாரி  என கொடி பிடிச்சுக்கொண்டு நிற்கும்.

போங்கடா போய் வயலில் இறங்குங்க, ஏதாவது ஒரு கடையில் நில்லுங்க, மூட்டை தூக்குங்க, இறால் வடை சுட்டு வியாபாரம் செய்யுங்க ...அப்படியே அதில் வாற சம்பளத்தில் சாப்பிட்டுக்கொண்டே நீங்க ஆசைப்படுற மாதிரி வேலை தேடுங்க.
மற்றவன்ட காசில் ஓசிச்சோறு தின்றுகொண்டு , அந்தமாதிரி வேலை செய்யுறதா  என வெத்து கெளரவம் பேசாதீங்க.

மேலே சொன்ன இளைஞன் கேட்ட தொகை ஒன்றரை லட்சம்.  நான் அவனிட நிலையில் இருந்திருந்தால், அந்த உணவக வேலைக்கு போய் கிழமைக்கு 100 மணித்தியாலம் என்றால்கூட வேலை செய்து பணத்தைச் சேர்த்து அந்தப் பணத்தில் கெளரவமாக வெளிநாடு போயிருப்பேன். 

மற்றது, ஒரு உணவகத்தில் வேலை செய்ய முடியாத ஆள் ஒரு மத்திய கிழக்கு நாடு போய் அந்த வெயிலில் வேலை செய்து முன்னேறுவாரா? அடுத்த கிழமையே ஆள் ஓடி.வந்துவிடும்.

இந்த உலகத்தில், உழைக்க ஆயிரம் வழி இருக்கு.

எந்த ஒரு வேலையும் செய்யாமல் யாருக்கும் பணம் கிடைக்காது.

சொகுசாக இருந்து யாரும் பணம் பெறுவதில்லை. 

முக்கியமாக ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல வீட்ட இருந்து அப்பா அம்மாட காசில் ஓசிச்சோறு. சாப்பிடுறது கேவலமான விடயம் என புரிந்துகொள்ளுங்க.

வெளிநாட்டில் இருக்கிற ஆட்கள் எந்த வேலையும் செய்யாத ஆட்களுக்கு ஒரு ரூபாய்கூட அனுப்பாதீங்க.

https://www.facebook.com/1286697015/posts/10227694075439193/

18 சரி தான்.
நான் நினைக்கிறேன் O/L முடிய 16 வயதோடையே தொடர்ந்து படிக்க புள்ளிகள் போதாதவர்களை பகுதி நேர வேலைகளுக்கோ விவசாய வேலைகளுக்கோ பெற்றோரே பழக்கவேண்டும். உடலுழைப்பின் அருமையும் ஆரோக்கியத்தின் அருமையும் அப்போது தான் விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்பது போன தலைமுறையுடன் போய்விட்டது. ஒரு தொழிலில் நிபுணத்துவம் அடைய நீண்டகால பயிற்சியும், விடாமுயற்சியும் தேவை என்பதை உணராமல் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கலாம் என்ற சிந்தனையும் பலருக்கு வந்துவிட்டது.

“தும்படித்தல்” என்றால் என்னவென்று சொல்லி விளங்கவைக்கவேண்டும்.

எனினும் கிழமைக்கு 80 மணித்தியால வேலை என்பது இலகுவானதல்ல. ஒரு காலத்தில் மூன்று மாதங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் தினமும் 12 மணி நேர வேலையும், போக வர 4 மணித்தியாலம் என 16 மணிநேரம் செலவழித்த அனுபவம் இருக்கு.  ஒரு நாளாவது ஓய்வு தேவை என்பதுதான் அதிலிருந்து கற்ற அனுபவம்!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

18 சரி தான்.
நான் நினைக்கிறேன் O/L முடிய 16 வயதோடையே தொடர்ந்து படிக்க புள்ளிகள் போதாதவர்களை பகுதி நேர வேலைகளுக்கோ விவசாய வேலைகளுக்கோ பெற்றோரே பழக்கவேண்டும். உடலுழைப்பின் அருமையும் ஆரோக்கியத்தின் அருமையும் அப்போது தான் விளங்கும்.

பிரான்சைப்பொறுத்தவரை...
தற்பொழுது வங்களாதேசத்தவர்கள் விரும்பப்படும் தொழிலாளிகளாக  ஏன்  தொழில் வளங்குநர்களாக கூட வந்து கொண்டிருக்கின்றனர்
காரணம்  வரும்போதே ஏதாவது ஒரு தொழிலை அல்லது தொழில்நுட்பத்தை படித்துவிட்டு வருகின்றனர்

ஆனால்  எம்மவர் வெறும்  புத்தகப்படிப்புடன்  மட்டும் வந்து....
மீண்டும் மீண்டும்
உணவகங்கள்  மற்றும் துப்பரவுத்தொழில்களில்  லயித்து வருகிறார்கள்

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

10 வயது முதல் சனி ஞாயிறில் மாட்டுக்குப் புல் வெட்டிக் கொண்டு வந்து போட்டு சாணகம் அள்ளி, முற்றம் கூட்டுவதிலிருந்து சிறிய வேலைகள் செய்து வீட்டுக்கு உதவியாக இருந்துள்ளேன். 12 வயதுமுதல் எனது உடைகளை நானே துவைத்து அயன் செய்து வீட்டு வேலைகள் பல செய்யப் பழகியுள்ளேன். இள வயதில் கற்றவையே இப்போதும் எனது சிறிய சம்பளத்தைக் கொண்டு முன்னேறி பிரான்சில் நடுத்தர வர்க்கமாக வாழ உதவுகிறது. அதுமட்டுமில்லாது இங்கு முன்னேற்றத்திற்கான பல்வேறுபட்ட பாதைகள் பரந்து கிடக்கின்றன.

இப்போது அங்கு நகரங்களில் வாழ்பவர்கள் இப்படி வாழ வேண்டிய தேவை இல்லையாதலால் இளைஞர்கள் சொகுசான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்று நான் அங்கு பிறந்திருந்தாலும் எனது நிலை இப்படித்தான் இருந்திருக்கும்,  நானும் வெளிநாட்டிலிருப்பவர்களின் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கலாம்.

இன்னொருபுறம் மெளிநாட்டில் வசிப்பவர்களில் பலரும் இந்தப் பகட்டு வாழ்க்கையையே வாழ்கின்றனர். குடியிருக்க வசதியான வீடு இருக்காது, சரியான உணவு உண்பதில்லை, ஆனால் சாமத்தியவீடு திருமணம் பிறந்தநாள் என்று வந்துவிட்டால் கோடீள்வரர்களைப்போல் பந்தா காட்டி தமது அதி உச்ச சேமிப்பையும் அதில் செலவிடுவது. இலங்கைக்கு விடுமுறைக்குப் போகும்போது தாங்களை வேற்றுலக ஜீவிகள் போல் காட்டிக் கொள்வது. அத்தியாவசியமில்லாவிட்டாலும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி தாமும் உயர்ந்த நிலையுல் இருப்பதாகக் காட்டிக் கொள்வது. இது போன்று பலதைக் கூறலாம். நாங்கள் வாழும் நாடுகளில் வசிக்கும் பூர்வீக வாசிகளுக்கு இந்த எண்ணம் இல்லை.

பாலபத்திரர், நீங்கள் சொல்வதுபோல் இங்கு உழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் குறுக்கு வழியையே தேடும் எம்மவர்கள் இன்னும் ஏராளமாக உள்ளனர். வரி ஏய்ப்பு, சமூக உதவி மோசடி, வட்டி சீட்டு, கோயில், மதமாற்றம் என்று பட்டியல் நீளும்.

அங்குள்ளவர்கள் மீது குற்றம் சுமத்துமுன் ஏன் இந்த நிலைக்குள் எம்மவர்கள் எல்லோரும் உள்ளாகியுள்ளனர் என்று ஆராய்வதும் நல்லது. இதற்கான காரணங்கள் எவை ?

- கலாச்சாரம்

- கல்வி

- சமயம்

- சாதி

- பொது அறிவு

- குடும்ப வழிகாட்டல்

எது ?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, இணையவன் said:

அங்குள்ளவர்கள் மீது குற்றம் சுமத்துமுன் ஏன் இந்த நிலைக்குள் எம்மவர்கள் எல்லோரும் உள்ளாகியுள்ளனர் என்று ஆராய்வதும் நல்லது. இதற்கான காரணங்கள் எவை ?

- கலாச்சாரம்

- கல்வி

- சமயம்

- சாதி

- பொது அறிவு

- குடும்ப வழிகாட்டல்

எது ?

இணையவன் குறிப்பிட்டதில்…. எம்மவர்களுக்கு, “பொது அறிவு” குறைவு என்றே சொல்வேன்.
நான் பல வருடமாக…. 4000 பேர் வேலை செய்யும் ஒரு இடத்தில்,
வேலை பார்க்கும் போது… அங்கு 350 தமிழர்களும் வேலை செய்தார்கள்.
அப்போது… எம்மவரின்   சிந்தனைகளை, நடவடிக்கைகளைப் பார்த்து….
இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களா என வியக்க வைத்த நாட்கள் அவை.

அண்மையில் ஒரு சில நிமிடங்கள் ஓடும் காணொளி பார்த்தேன். அதில் இந்திய உளவுத்துறையைச் சார்ந்த ஒருவர் புலிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவர்களால்  மாற்றத்துக்குள்ளான ஒரு போர் விமானம் பற்றி சொல்லியிருந்தார். அந்த வடிவமைப்பு உலகத்தரத்துக்கு நிகரானது என்றும் துல்லியமான aerodynamic அறிவுள்ளவர்களால் எப்படி அந்த சிறு நிலத்தில் இது உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் வியந்து கொண்டிருந்தார்.

இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால், இலங்கை தமிழர்கள் எந்தவிதத்திலும் அறிவிலும் கடும் உழைப்பிலும் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், பல இனக்குழுமங்களை விட இவற்றில் சிறந்தவர்கள். 

ஆனால் இன்று இந்த நிலைக்கு அவர்கள் வந்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் நல்ல ஒழுக்கம் நிறைந்த செயற்திறன் கொண்ட தலைமை ஒன்று இல்லாதமை. தலைமை அற்ற எந்த இனமும் தறி கெட்டு போய்விடும். 

இனவாத அரசால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, எந்த உருப்படியான ஒரு தொழில்துறையும் உருவாக்கப்படாத, அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் பெரியளவில் ஏற்படுத்தப்படாத, திட்டமிட்டவாறு போதைப் பொருள் பாவனையை ஊக்குவிக்கின்ற, ஏற்கனவே தன்னளவிலும் சாதிவாரி பிளவுபட்டிருக்கின்ற ஒரு இனத்தில், நல்ல தலைமையும் இல்லாவிடின், அந்த இனத்தின் எதிர்கால சந்ததி இப்படித்தான் சோம்பேறிகளாக, போதைக்கு அடிமையானவர்களாக, பிறரிடம் கையேந்தி நிற்பதற்கு கூட வெட்கப்படாததாக மாறிவிடும்.

இதற்கான தீர்வு ஒரு நாளிலோ ஒரு சில செயற்திட்டங்காளோ மாறிவிடப் போவதில்லை. அங்குள்ள எம்மவர்களின் எதிர்காலம் கடும் இருள்மயமான எதிர்காலமாகவே போய்விடுமோ என்று பயப்பட வேண்டி இருக்கு,

அலைபேசி, தொலைக்காட்சி , இன்டர்நெட் இதுவும் ஒரு பெரிய காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
விடுமுறைக்கு இலங்கை செல்லும் தமிழா?? உமக்கு அவசர வேண்டுகோள்…Yaaro .
 
பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.
 
எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.
மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு
 
இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.
 
இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது
 
இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
 
அதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.
 
பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.
 
துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வட-கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.
 
தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது. இதனாலேயே பல குடும்ப உறவுகளே சிதைவடைகின்றது.
 
தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை. இவற்றைப் புரிந்துகொண்டால் ஒடுக்குமுறைக்கு எதிராகப் வாழ்ந்து போராடி வெற்றிபெறும் சமூகம் தோன்றும்.சிந்திப்பீர்களா உறவுகளே ….
 
முகநூல் பதிவு ஒன்று...
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

அண்மையில் ஒரு சில நிமிடங்கள் ஓடும் காணொளி பார்த்தேன். அதில் இந்திய உளவுத்துறையைச் சார்ந்த ஒருவர் புலிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவர்களால்  மாற்றத்துக்குள்ளான ஒரு போர் விமானம் பற்றி சொல்லியிருந்தார். அந்த வடிவமைப்பு உலகத்தரத்துக்கு நிகரானது என்றும் துல்லியமான aerodynamic அறிவுள்ளவர்களால் எப்படி அந்த சிறு நிலத்தில் இது உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் வியந்து கொண்டிருந்தார்.

இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால், இலங்கை தமிழர்கள் எந்தவிதத்திலும் அறிவிலும் கடும் உழைப்பிலும் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், பல இனக்குழுமங்களை விட இவற்றில் சிறந்தவர்கள். 

ஆனால் இன்று இந்த நிலைக்கு அவர்கள் வந்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் நல்ல ஒழுக்கம் நிறைந்த செயற்திறன் கொண்ட தலைமை ஒன்று இல்லாதமை. தலைமை அற்ற எந்த இனமும் தறி கெட்டு போய்விடும். 

இனவாத அரசால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, எந்த உருப்படியான ஒரு தொழில்துறையும் உருவாக்கப்படாத, அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் பெரியளவில் ஏற்படுத்தப்படாத, திட்டமிட்டவாறு போதைப் பொருள் பாவனையை ஊக்குவிக்கின்ற, ஏற்கனவே தன்னளவிலும் சாதிவாரி பிளவுபட்டிருக்கின்ற ஒரு இனத்தில், நல்ல தலைமையும் இல்லாவிடின், அந்த இனத்தின் எதிர்கால சந்ததி இப்படித்தான் சோம்பேறிகளாக, போதைக்கு அடிமையானவர்களாக, பிறரிடம் கையேந்தி நிற்பதற்கு கூட வெட்கப்படாததாக மாறிவிடும்.

இதற்கான தீர்வு ஒரு நாளிலோ ஒரு சில செயற்திட்டங்காளோ மாறிவிடப் போவதில்லை. அங்குள்ள எம்மவர்களின் எதிர்காலம் கடும் இருள்மயமான எதிர்காலமாகவே போய்விடுமோ என்று பயப்பட வேண்டி இருக்கு,

மிகவும் சரியான புரிதல்.  கப்பலோட்டியில்லாத கப்பலொன்று நடுக்கடலில் அகப்பட்டதுபோல் எமதினத்தின் துயரமான நிலை. இதனைக் கடந்து நிமிர பல ஆண்டுகள் எடுக்கலாம். அரசியல்வாதிகளுக்கு இந்தநிலைபற்றி  அக்கறையிராது. ஆனால் கல்விச் சமூகமும்  ஊர்ச் சமூகங்களும் ஒன்றிணைந்து விழிப்புணர்வுகளை ஊட்டுவதன் ஊடாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். 

2 hours ago, விசுகு said:

விடுமுறைக்கு இலங்கை செல்லும் தமிழா?? உமக்கு அவசர வேண்டுகோள்…Yaaro .

இணைப்புக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு 30 வயது ஆள் வெளிநாட்டில் இருக்கும் நண்பனுக்கு அழைப்பெடுத்து , சவூதி நாட்டுக்கு செல்ல முயற்சி செய்கிறேன் காசு தந்து உதவுங்கள் என்றிருக்கார்.

நண்பர், கொழும்பிலே ஒரு சர்வதேச உணவகத்தில் வேலை எடுத்துத் தாறன், கிழமைக்கு 80 மணிநேரம் வேலை செய்தால் 80 ஆயிரம் உழைக்கலாம் என்றிருக்கார்.

அங்கெல்லாம் வேலைக்கு போனால் நின்றுகொண்டு வேலை செய்யனும் கால் நோகும் என்று பதில் வந்திருக்கிறது.

ஆள் படிச்சிருக்கிறது ஓஎல் வரைக்கும்தான். 

இப்போது என்ன வேலை செய்கிறார் என்றதுக்கு , வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றிருக்கார்.

முப்பது வயதுக்கு பிறகும் ஒரு வருமானம் இல்லாமல் இன்னொருத்தரிட்ட கை நீட்ட வெட்கமாயிருக்காதா?

ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு , அதில் பிரச்சினை வந்து உதவி கேட்பது வேற. இப்படி எந்த முயற்சியும் இல்லாமல் தண்டமாக இருப்பது வேறு.

 பதினெட்டு வயதுக்குப் பிறகு படிக்காமல்  வீட்டில் இருக்கிற ஒருத்தருக்கும் ஒரு வேளை சோறு கூட போடாமல் துரத்திவிட வேண்டும்.

18 வயதுக்குப் பிறகு பிள்ளை படித்தால் படிக்கும் காலம் வரை சோறு போடுறது உங்க இஷ்டம். ஆனால் அதே பிள்ளைக்கு, படிச்சு முடிச்ச அடுத்த நாளே சோறு போடுறது நிப்பாட்டனும்.

அப்போதுதான் 30 வயதிலையும் அப்பா அம்மாட காசில் சாப்பிட்டுக்கொண்டு , வேலை தேடுறன் என்டுற இளைஞர்கள் உருவாகுவதை தடுக்கலாம். நம்மட ஆட்களுக்கு சொகுசு கூடிப் போச்சு. என்ட பிள்ளை அந்த இந்த வேலை செய்யுறதா என்று சொல்லிச் சொல்லியே நாம் கெடுத்து வச்சிருக்கம். 

அதேபோல் படிச்ச பிள்ளை அந்த வேலை எல்லாம் செய்யுறதா என்று வேற கெடுத்து வைப்போம். அந்த பிள்ளையும் ரோட்டில் வருடக்கணக்கா வேலையில்லா பட்டதாரி  என கொடி பிடிச்சுக்கொண்டு நிற்கும்.

போங்கடா போய் வயலில் இறங்குங்க, ஏதாவது ஒரு கடையில் நில்லுங்க, மூட்டை தூக்குங்க, இறால் வடை சுட்டு வியாபாரம் செய்யுங்க ...அப்படியே அதில் வாற சம்பளத்தில் சாப்பிட்டுக்கொண்டே நீங்க ஆசைப்படுற மாதிரி வேலை தேடுங்க.
மற்றவன்ட காசில் ஓசிச்சோறு தின்றுகொண்டு , அந்தமாதிரி வேலை செய்யுறதா  என வெத்து கெளரவம் பேசாதீங்க.

மேலே சொன்ன இளைஞன் கேட்ட தொகை ஒன்றரை லட்சம்.  நான் அவனிட நிலையில் இருந்திருந்தால், அந்த உணவக வேலைக்கு போய் கிழமைக்கு 100 மணித்தியாலம் என்றால்கூட வேலை செய்து பணத்தைச் சேர்த்து அந்தப் பணத்தில் கெளரவமாக வெளிநாடு போயிருப்பேன். 

மற்றது, ஒரு உணவகத்தில் வேலை செய்ய முடியாத ஆள் ஒரு மத்திய கிழக்கு நாடு போய் அந்த வெயிலில் வேலை செய்து முன்னேறுவாரா? அடுத்த கிழமையே ஆள் ஓடி.வந்துவிடும்.

இந்த உலகத்தில், உழைக்க ஆயிரம் வழி இருக்கு.

எந்த ஒரு வேலையும் செய்யாமல் யாருக்கும் பணம் கிடைக்காது.

சொகுசாக இருந்து யாரும் பணம் பெறுவதில்லை. 

முக்கியமாக ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல வீட்ட இருந்து அப்பா அம்மாட காசில் ஓசிச்சோறு. சாப்பிடுறது கேவலமான விடயம் என புரிந்துகொள்ளுங்க.

வெளிநாட்டில் இருக்கிற ஆட்கள் எந்த வேலையும் செய்யாத ஆட்களுக்கு ஒரு ரூபாய்கூட அனுப்பாதீங்க.

https://www.facebook.com/1286697015/posts/10227694075439193/

எல்லோரையும் இந்த வகைக்குள் அடக்க முடியாது. சிலவேளை சில சந்தர்ப்பங்கள் அமைந்து விடுகின்றன. தெரிந்த ஒருவர் நன்றாகப் படிக்கக் கூடியவர். ஓஎல் சோதனையின் பின்னர் வெளிநாடு போக என்று கொழும்பு வந்து பல தடவை (7) முயற்சித்தும் கைகூடவில்லை. ஒருமுறை அல்பேனியா வரை வந்து திரும்பியவர். க்டைசியில் 33 வயதில் டுபாய்க்குப் போய் 2 வருடம் ஏதோ வேலைசெய்தார். பிறகு 2009 இக்கு பின்னரான நிலையில் கடைசி முயற்சியாக முயன்று அய்ரோப்பிய நாடு ஒன்றுக்கு போய்விட்டார்.  இப்ப நாற்பதுகளின் கடைசியில் இருக்கின்றார். கடினமாக வேலைசெய்து கடன் எல்லாவற்றையும் கொடுத்து  சகோதரர்களுக்கும் உதவி செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த வருடம் யூன் மாதமளவில் அவருடன் பேசக்கிடைத்தது. கடைசிச் சந்தர்ப்பம் சரிவராவிட்டால் தற்கொலைசெய்யும் முயற்சில் இருந்தாராம். 16 இல் இருந்து 33 வயது வரையான வருடங்கள் பெரும் அவஸ்த்தை என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2022 at 02:55, நிழலி said:

இனவாத அரசால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, எந்த உருப்படியான ஒரு தொழில்துறையும் உருவாக்கப்படாத, அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் பெரியளவில் ஏற்படுத்தப்படாத, திட்டமிட்டவாறு போதைப் பொருள் பாவனையை ஊக்குவிக்கின்ற, ஏற்கனவே தன்னளவிலும் சாதிவாரி பிளவுபட்டிருக்கின்ற ஒரு இனத்தில், நல்ல தலைமையும் இல்லாவிடின், அந்த இனத்தின் எதிர்கால சந்ததி இப்படித்தான் சோம்பேறிகளாக, போதைக்கு அடிமையானவர்களாக, பிறரிடம் கையேந்தி நிற்பதற்கு கூட வெட்கப்படாததாக மாறிவிடும்.

இதற்கான தீர்வு ஒரு நாளிலோ ஒரு சில செயற்திட்டங்காளோ மாறிவிடப் போவதில்லை. அங்குள்ள எம்மவர்களின் எதிர்காலம் கடும் இருள்மயமான எதிர்காலமாகவே போய்விடுமோ என்று பயப்பட வேண்டி இருக்கு,

பெயரளவில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் அனேகமானவை அரசியல்வாதிகளின் பணப்பெட்டியை நிரப்பத்தான் உதவின என்பதைதான் இம்முறை அதிகம் உணர்ந்தேன்.. 

இன்னொன்றையும் உணர முடிந்தது, பரம்பரை பரம்பரையாக ஒரு தொழிலை செய்து வந்தவர்கள் படித்து வேறு வேலைகளை தேடும் பொழுது அந்த வேலைகளை சரிவர தெரிந்தவர்கள் குறைந்து போகிறது.. அந்த அறிவு/தொழிலை மற்றவர்கள் படிக்கமாட்டார்கள் அதற்கு குறுக்கே பல தடைகள்! இதனால் சிங்களவர்களை வேலைக்கு அமர்த்தவேண்டியுள்ளது.. 

அறுவடை காலம் இப்பொழுது ஆனால் அறுவடை செய்த நெல்லை அவித்து காய வைக்கும் வசதிகள் எம்மிடையே இல்லை.. 

அறுவடை செய்து கொண்டிருக்கும் பொழுதே சிங்கள பகுதிகளில் இருந்து வந்து வயல்களில் காத்து இருக்கிறார்கள், கையோடு மூட்டைகளை கொண்டு போய் அரிசி ஆக்கி விற்கிறார்கள்.. இவற்றை இம்முறை பார்த்த பொழுது மிகவும் வேதனையாக இருந்தது!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்தில் ஈழத்தமிழன் என்றால் எதிலும் கெட்டிக்காரன் என்ற பெருமை இருந்தது. அது படிப்பில் தொடங்கி வேலை வாய்ப்பு/வணிகம் வரைக்கும் இருந்தது.அடிச்ச அடியும் பலமாகத்தான் இருந்தது.

 வட பகுதியை இலங்கையின் மூளை என்று கூட ஒரு ஒரு காலத்தில் பேசப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் மக்கள் அனுப்பும் பணத்தில் ஜாலி வாழ்கை வாழ்பவர்களை போல் மற்றவர்களும் வாழ்கின்றார்கள்.

அவர்களின் பேரங்களும் வியாபாரங்களும் சீதனங்களும் லட்சம் கோடிகளில் புரளுகின்றது.

இருந்தும் யார் யாரெல்லாம் அங்கு சோம்பேறிகள் என்று பார்த்தால்  போலி வாழ்க்கை வாழ்பவர் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாரார் குடி போதைப்பொருள் சோம்பேறித்தனம் என்று இருந்தாலும் இப்ப பொருள் விலையேற்றத்தால் எல்லாரும் தோட்டம் செய்ய வெளிக்கிட்டிட்டினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.