Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தீர்வு விடிவு என்டு சொல்லிக் கொன்டு வாற எல்லா கட்ச்சிகளையும் முற்றாக ஒதுக்க வேணும்.இந்தக் கோசங்கள் எல்லாம் அவர்களுக்கானன கதிரைகளுக்கானது.எமக்கானது எதுவும் இல்லை.

  • Replies 59
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, சுவைப்பிரியன் said:

முதலில் தீர்வு விடிவு என்டு சொல்லிக் கொன்டு வாற எல்லா கட்ச்சிகளையும் முற்றாக ஒதுக்க வேணும்.இந்தக் கோசங்கள் எல்லாம் அவர்களுக்கானன கதிரைகளுக்கானது.எமக்கானது எதுவும் இல்லை.

இதுதான் இவ்வளவுகால எம் அரசியல் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது கண்டுகொள்ளக்கூடிய மிகப்பெரிய உண்மை.. 

வேட்டி சட்டை கனவுக்காக இந்த குரங்காட்டிகள் தீர்வு விடிவு என்பவற்றை காட்டி கூட்டங்களுக்கு அழைத்து எம்மக்களை வைத்து செய்யும் வித்தைகள் இருக்கே.. அரசியல் கோமாளிகள்..

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வேட்டி சட்டை கனவுக்காக இந்த குரங்காட்டிகள் தீர்வு விடிவு என்பவற்றை காட்டி கூட்டங்களுக்கு அழைத்து எம்மக்களை வைத்து செய்யும் வித்தைகள் இருக்கே.. அரசியல் கோமாளிகள்..

பாம்பாட்டி சுமந்திரன்… வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு,
வயலில் உழுதால்… அதுதான் ஒறிஜினல் அரசியல் எண்டு…
ஆவெண்டு, பார்த்துக் கொண்டு இருப்போம். 😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

பாம்பாட்டி சுமந்திரன்… வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு,
வயலில் உழுதால்… அதுதான் ஒறிஜினல் அரசியல் எண்டு…
ஆவெண்டு, பார்த்துக் கொண்டு இருப்போம். 😁

சுமத்திரன்  சம்பந்தன் செய்யும் நரி சேட்டைகளால் மனம் வெறுத்து  சனம் அந்தப்பக்கம் சொல்வதை நம்புதுகள் டெல்லிக்கும் செய்தி சொல்லப்படுது எனக்கென்னவோ தெரிந்தே டபுள்கேம் சதுரங்கம் ஆடுகினம் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/aSD8pgu57z/

நல்லூரில் இன்றைய போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய #முழுமையான_உரை #காணொளி

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

பாம்பாட்டி சுமந்திரன்… வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு,
வயலில் உழுதால்…

உண்மை… ஒரு குரூப் பாம்பாட்டி… இன்னொரு குரூப் குரங்காட்டி… இவனுங்க கையில வச்சிருக்கிற கம்புதான் தீர்வு,விடிவு,விடியல்.. இவர்களிடம் சிக்கிய மக்கள்தான் பாவம்..

5 hours ago, விசுகு said:

அதாவது இந்த போராட்டம் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலை மாற்றும் அல்லது நிறுத்தும் வல்லமை கொண்டது என்கிறீர்கள்??

13 மை வேண்டாம் என்பவர்கள் அதற்கு மாறாக இன்னொரு குரலையும் சேர்க்கிறார்கள் 

13னை வேண்டாம் என்பதனைக்கேட்கும் அதே காதுகள்???

4 hours ago, ஈழப்பிரியன் said:

நிழலி இதுவரை 34 வருடமாக இந்த 13 இருக்கிறது தானே? என்னத்தைக் கண்டோம்.

13 வேண்டாம் என்பவர்கள் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கின்றனர். ஆனால் ஒற்றையாட்சிக்குள் குறைந்த பட்ச அதிகாரபரவலாக்கத்துக்கு கூட சம்மதிக்காமல் 13 கொண்டு வந்த மாகாணசபையையே இல்லாமல் ஆக்குகின்ற அரசியலமைப்பைக் கொண்டு வர இருக்கும் சிங்கள அரசு, எப்படி ஒற்றையாட்சியை இல்லாமல் ஆக்கி சமஷ்டிக்கு இணங்கும்?

அவ்வாறு இணங்க வைக்கும் அளவுக்கு எம்மிடம் இருக்கும் பலம் என்ன? பேரம்பேசும் ஆற்றல் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் இருக்கும் தமிழ் சமூகம், இருப்பதையும் வேண்டாம் என்று நிராகரித்து விட்டு, இன்னொன்றை கேட்பது நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியமற்ற ஒன்று. வெறும் கோஷம் இது. தமிழ் தேசிய முன்னனி இந்த வெற்றுக் கோஷத்தையே முன்வைக்கின்றது. 

போரின் பின்னான 12 வருடங்களில் தமிழ் தேசியத்தை கூர்மையாக வைத்திருக்ககூடிய எந்தவிதமான செயற்பாடுகளிலும் ஈடுபடாத தமிழ் தரப்பு (கூத்தமைப்பு உட்பட), தமிழ் தேசியத்தையும் நீர்த்துப் போக விட்டுவிட்டு இருப்பதையும் நிராகரிப்பது முற்றிலும் அதிகாரமற்ற இனமாக தமிழர் தரப்பை தன்னை ஆக்குவதில் தான் கொண்டு போய் முடியும்.

Edited by நிழலி
வசனம் ஒன்றை திருத்தி அமைக்க

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் ஆற்றல் திறமைகளை ஒன்று சேர்த்து எதிரியின் சதித்திட்டங்களை முறியடித்து ஒரு முழுமையான தீர்வை பெறுவதற்கு பதிலாக, தமது நீயா நானா போட்டியில் ஏதிலிகளான மக்களை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என இழுத்து விளையாடுகிறார்கள். த .தே . கூட்டமைப்பு காலத்தை கைநழுவ விட்டிட்டு இப்போ போன காலத்தை கையால் கட்டி இழுக்க பார்க்கிறார்கள். மக்கள் தங்கள் இயலாமையில் எங்கு போவதென்று தெரியாமல் எல்லா பக்கமும்  இழுபடுகிறார்கள் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம் உண்மையாகவே தமிழ் மக்களின் விடியலுக்காக உழைப்பவர்கள் என்றால் எதற்கு இத்தனை கட்சிகள்? ஒருகட்சியில் இணைய முடியாதவர்கள், ஒன்று  சேர்த்து இணைந்து முன்செல்ல முடியாதவர்கள் எவ்வாறு எதிரியை முறியடிப்பார்கள்? ஆரம்பகால தமிழர் அரசியலை பார்த்தாலே புரியும்; இதுகள் ஒன்று வடக்கிற்கு இழுத்தால், மற்றது தெற்கிற்கு இழுக்கும். இதுகள் எப்போ ஒன்று சேர்ந்து மக்களுக்கு விடிவை பெற்று  கொடுப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிழலி said:

கடந்த ஆட்சிக்காலம் ததே கூட்டமைப்பின் தயவிலேயே நடந்தது. அத்துடன் வரலாற்றில் முதற்தடவையாக இருபெரும் தேசியக் கட்சிகளும் இணைைந்து தேசிய அரசாங்கத்தை அமைந்திருந்தன. சம்பந்தர் எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார் அப்பொழுது ஏன்13 ஐ  அமுல்படுத்துவது பற்றிப் பேசவில்லை. இப்பொழுது சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியாவே ததேகூட்டமைப்பை பாவித்து 13 பற்றிய பேச்சை எடுத்திருக்கிறது என்றே சந்தேகம் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தியா 13 ஐ அமுல்படுத்துமாறு  அழுத்தம் கொடுத்தால் சிறலங்காவும் அதற்கு இணங்கும். ஒரு அதிகாரமும் இல்லாத 13  அமுல்படத்துவதாகக் கூறி இகப்பிரச்சினைத்தீர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஆக இலங்கை இந்திய அரசுகளின் விருப்பததை நிறைவேற்றுவதற்கு இந்தத் தமிழ்கட்சிகள் உதவி புரிகின்றன என்பதே உண்மை.

16 minutes ago, புலவர் said:

கடந்த ஆட்சிக்காலம் ததே கூட்டமைப்பின் தயவிலேயே நடந்தது. அத்துடன் வரலாற்றில் முதற்தடவையாக இருபெரும் தேசியக் கட்சிகளும் இணைைந்து தேசிய அரசாங்கத்தை அமைந்திருந்தன. சம்பந்தர் எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார் அப்பொழுது ஏன்13 ஐ  அமுல்படுத்துவது பற்றிப் பேசவில்லை. 

இந்தக் கேள்வியை நீங்கள் சம்பந்தரிடமும் கூத்தமைப்பிடமும் தான் கேட்க வேண்டும்.

இங்குள்ள பிரச்சனை கட்சிகளிற்கிடையிலான போட்டி அல்ல. சம்பந்தர் Vs கஜேந்திரகுமார் அல்லது தமிழ் தேசிய முன்னனி Vs கூத்தமைப்போ அல்ல.  இங்குள்ள இன்றைய நிலை, தமிழர்கள் ஈற்றில் கட்டியிருந்த கோவணமும் பறி போகும் நிலைமை. ஆனால் இவைபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தமிழ் தரப்பு இருப்பது மட்டுமல்ல, அந்த கோவணம் பறிபோகும் செயலுக்கு தமிழ் தேசிய முன்னனியும் உடந்தையாக இருப்பதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

பாம்பாட்டி சுமந்திரன்… வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு,
வயலில் உழுதால்… அதுதான் ஒறிஜினல் அரசியல் எண்டு…
ஆவெண்டு, பார்த்துக் கொண்டு இருப்போம். 😁🤣

 சுமந்திரன் வடலிக்கை லொக்கேசன் பாக்கேக்கையும் வயல் உழப்போறன் எண்டு சேக்கஸ் காட்டேக்கையும்  வாயை மூடிக்கொண்டு தரிசனம் செய்த சனம்......

இந்த 13 போராட்டத்தை காத்துப்போன சைக்கிள் போராட்டமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி செயல்படும் தரப்புக்கள் அந்த முயற்சியை கைவிட வேண்டும் :  கிட்டுப் பூங்கா பிரகடனத்தில் வலியுறுத்தல்

Published by T Yuwaraj on 2022-01-30 22:28:28

தமிழ் மக்கள் - காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி செயல்படும் தரப்புக்கள் அந்த முயற்சியை கைவிட வேண்டும் என  13 ஆம் திருத்தச்  சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான தமிழர் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய  கிட்டுபூங்கா பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG-3203.JPG

தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், நல்லூரடியில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபியடியில் ஆரம்பமாகிய பேரணி ஆயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பூர்வமாக கிட்டு பூங்காவில் நிறைவடைந்தது.

DSC_8068.jpg

இதன்போது வெளியிட்டப்பட்ட  13  ஆம் திருத்தச்  சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான தமிழர் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய  கிட்டுபூங்கா பிரகடனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

DSC_8234.JPG

'தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்' என்ற நோக்கத்துடன் தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம். 

IMG-3204.JPG

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது - தனது  அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத் தொடர் போராட்டம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.

DSC_8085.jpg

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங்கத்தால் இலங்கைக்கான நான்காவது அரசியலமைப்பு  கொண்டுவரப்படவுள்ளது. அதை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாக இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ளது.

அது இறுக்கமான ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே அமையும் என்பதையும், அரசாங்கம் உறுதிப்படக் கூறியுள்ளது. இந்த அரசியலமைப்பை ஒரு தலைப்பட்டசமாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது.

DSC_8099.jpg

இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதே போன்றதொரு சிங்கள பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தது.

அச்சந்தர்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்ததன் விளைவாகவே, தமிழர்களுக்கு இனப்பிரச்சினையொன்று உண்டு என்னும் விடயத்தைத் தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. 

DSC_8117.jpg

குறிப்பாக, சிங்கள அரசு தமிழருடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, இங்கு பயங்கரவாத பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வந்து 13 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்கின்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையேயாகும்.

IMG-3205.JPG

இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க - இந்திய  பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது.

1987 இல் இலங்கையானது, இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி, சிங்கள தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக் கெதிராக தமிழ்த் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்க்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலையில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது.

DSC_8133.jpg

இந்நிலையில்  அப்போதிருந்த தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது.  இதன் பின்னர்  தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது.

2005 இன் பின்னர், இந்திய சீனா பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் உருவாகியிருந்த பின்னணியிலேயே ஒரு இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தி தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசோடு பேரம்பேசி வருகின்றது.

DSC_8168.jpg

இலங்கை, சீனாவின் விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால்,  இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது. 

இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர். 

DSC_8155.jpg

இதன்மூலம், 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ள சரத்துக்கள் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற நிலைமையையே உருவாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்சினை இதனூடாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் உலகுக்கு பறைசாற்றுவதற்கு தயாராகிறார்கள்.  

IMG-3207.JPG

இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள்வதன் ஊடாகவே  தடுத்து நிறுத்த முடியும் என்னும் யாதார்த்தத்தை விளங்கிக் கொண்டு இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றை பிரகடனப்படுத்துகிறது :

DSC_8169.jpg

• தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல்  இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.  

• வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் - அதன் இறைமையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகிக்கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக - ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக (13 ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இருக்குமானால் அவ்வகையான செயல், தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக்கும் வகையிலேயே அமையும் என்ற விடயத்தை இப்போராட்டம் பிரகடனப்படுத்துகிறது.  

• தமிழ் மக்கள் - காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி,  ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியை கைவிட வேண்டுமென இப்போராட்டமூடாக வலியுறுத்துகிறோம்.   

• இந்திய அரசானது இலங்கையோடு நல்லுறவை பலப்படுத்திக்கொள்வதையோ அல்லது தனது பூகோள -அரசியல் நலன்களைப் பேணுவதையோ அல்லது தென் ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதையோ ஈழத்தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது நட்புசக்தியாகவே கருதுகின்றோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பேணுவதில் எமக்கு மிகுந்த விருப்பமும் அக்கறையும் ஈடுபாடும் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாக கருதும் இந்தியா, தனது பூகோள நலன்களைப் பூர்த்திசெய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோருகின்றோம்.  

• தமிழ்மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் - அதனுடைய தனித்துவமான இறைமையையும் - சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய 'சமஸ்டி' அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்போராட்டம் கோருகின்றது. 

DSC_8208.jpg

DSC_8169.jpg

DSC_8177.jpg

DSC_8197.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

? வணக்கம் நிழலி,  
இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட மக்களின் தொகை குறைந்தது 3000 இல் இருந்து 5000 இருக்கும்.
யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, satan said:

தங்கள் ஆற்றல் திறமைகளை ஒன்று சேர்த்து எதிரியின் சதித்திட்டங்களை முறியடித்து ஒரு முழுமையான தீர்வை பெறுவதற்கு பதிலாக, தமது நீயா நானா போட்டியில் ஏதிலிகளான மக்களை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என இழுத்து விளையாடுகிறார்கள். த .தே . கூட்டமைப்பு காலத்தை கைநழுவ விட்டிட்டு இப்போ போன காலத்தை கையால் கட்டி இழுக்க பார்க்கிறார்கள். மக்கள் தங்கள் இயலாமையில் எங்கு போவதென்று தெரியாமல் எல்லா பக்கமும்  இழுபடுகிறார்கள் என்பதே உண்மை.

49 minutes ago, satan said:

இவர்கள் எல்லாம் உண்மையாகவே தமிழ் மக்களின் விடியலுக்காக உழைப்பவர்கள் என்றால் எதற்கு இத்தனை கட்சிகள்? ஒருகட்சியில் இணைய முடியாதவர்கள், ஒன்று  சேர்த்து இணைந்து முன்செல்ல முடியாதவர்கள் எவ்வாறு எதிரியை முறியடிப்பார்கள்? ஆரம்பகால தமிழர் அரசியலை பார்த்தாலே புரியும்; இதுகள் ஒன்று வடக்கிற்கு இழுத்தால், மற்றது தெற்கிற்கு இழுக்கும். இதுகள் எப்போ ஒன்று சேர்ந்து மக்களுக்கு விடிவை பெற்று  கொடுப்பது?

ஒற்றுமை !?!?!?!?!?!?

தமிழினத்திற்க்காக  எல்லோரையும் ஒருங்கிணைத்து விட்டுக்கொடுப்புகளை செய்து அரசியல் ஆலோசனைகளை வழங்கி முதுமை,அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் கப்பல் மாலுமி போல் செய்ய வேண்டிய செயல் இது.தமிழர் சார்பில் பல கட்சிகள் இருக்க வாய்ப்பளிக்காமல் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டிய கடப்பாடு சம்பந்தனுக்கும் மாவை சேனாதிராசாவுக்கும் இருந்திருக்க வேண்டும்.2009க்கு பின் இதை அவர்கள் உடனடியாக செய்திருக்க வேண்டும்.

மாறாக தங்கள் சுகத்திற்காக சிங்கள கொடியை தூக்கி ஆட்டினதுதான் மிச்சம்.

Sampanthan who raised the national flag is with Sajith; Varadaraja who  raised the flag of Eelam is with Gota” - Mangala

இதுக்குள்ளை சித்தார்த்தன்ரை கையையும் பாருங்கோ....நசுங்கல் கள்ளர்:(

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாரும் ( இந்தியாவோ, இலங்கையோ) இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சொல்லவில்லை... 13 ஆவது திருத்த சட்டம் தருவதாக கூட சொல்லவில்லை. ஒரு கிராமிய சபை அதிகாரம் தருவதாக கூட சொல்லவில்லை… எதற்கு இவர்கள் மக்கள் நாளாந்த வாழ்வை குழப்புகிறார்கள்...? உடனடியாக மந்திகை வையித்திய சாலையின் மன நோயியல் பிரிவில் அனுமதிக்க வேண்டும் இவர்களை…

பின்ன என்ன "தலை முடி" க்கு சும் மற்றும் இதர கோஷ்டி கூட்டம் போட்டு கையெழுத்து போட்டு, குனிந்து நிண்டு கும்பிடு போட்டு மோடி ஐயாவுக்கு குடுக்க போனவை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

பின்ன என்ன "தலை முடி" க்கு சும் மற்றும் இதர கோஷ்டி கூட்டம் போட்டு கையெழுத்து போட்டு, குனிந்து நிண்டு கும்பிடு போட்டு மோடி ஐயாவுக்கு குடுக்க போனவை.

அது ஒரு நாடக குரூப் எண்டு உங்களுக்கு தெரியாதோ..😂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

இந்தக் கேள்வியை நீங்கள் சம்பந்தரிடமும் கூத்தமைப்பிடமும் தான் கேட்க வேண்டும்.

இங்குள்ள பிரச்சனை கட்சிகளிற்கிடையிலான போட்டி அல்ல. சம்பந்தர் Vs கஜேந்திரகுமார் அல்லது தமிழ் தேசிய முன்னனி Vs கூத்தமைப்போ அல்ல.  இங்குள்ள இன்றைய நிலை, தமிழர்கள் ஈற்றில் கட்டியிருந்த கோவணமும் பறி போகும் நிலைமை. ஆனால் இவைபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தமிழ் தரப்பு இருப்பது மட்டுமல்ல, அந்த கோவணம் பறிபோகும் செயலுக்கு தமிழ் தேசிய முன்னனியும் உடந்தையாக இருப்பதே.

13 ஐக் கோவணம் என்கிறீர்கள். இனித்தான் 13 ஐ அமுல்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். 2009 இல் இருந்து கோவணம் இஇல்லாமல் இருந்தவர்கள் இனி எதற்கு கோவணத்திற்காக இந்திய அரசிடம் கையேந்த வேண்டும். இந்தியாவிடம் எமாந்த வரலாறே தமிழர்களுக்கு உண்டு. கோவணம் இல்லாமலே வாழ்ந்தவர்கள். ஓன்றுமே இல்லாத கந்தல் கோவணத்திற்கு ஏன் அலைய வேண்டும். அதை விட கோவணம் இல்லாமலேயே இப்போது இருப்பதைப்போல இருக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் குறூப்பை பொறுத்தவரை இவர்களது கொள்கை என்னவெனில் பதவி விஜபி அந்தஸ்து வாகனம் போன்றவற்றை இவர்களுக்கு பெற்றுத்தரும் இலங்கையில் இடம்பெறும் தேர்தல்களை தவிர்த்த மற்ற எதுவும் தமிழ் மக்களுக்கு நன்மை தராது என்பதேயாகும்…

நீங்கள் போட்டியிடும் இலங்கை அரசு நடத்தும் தேர்தல்கள் மட்டும் எப்படி தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கேட்டால் இவர்களிடம் பதில் இருக்காது..

13 ஜ எதிர்க்க முன்னம் உங்களால் முடிந்தால் 13 இல் இருக்கிற மாகாண சபை தேர்தலை முதலில் புறக்கணியுங்க பார்ப்போம்.. வெக்கம் இல்லாமல் 13 மூலம் கிடைத்த ஆசனிங்களில் உட்காந்து சுகத்தை அனுபவித்துக்கொண்டு மக்களை ஏமாத்துகிறீர்களே… உங்கள் பதவிகளுக்கு அந்த ஆசணம் தேவை ஆனால் மக்களுக்கு பயன் வேண்டாம்.. மானங்கெட்ட பிளைப்பு கொள்கை இல்லாதவர்களுக்கு..

8 minutes ago, புலவர் said:

13 ஐக் கோவணம் என்கிறீர்கள். இனித்தான் 13 ஐ அமுல்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். 2009 இல் இருந்து கோவணம் இஇல்லாமல் இருந்தவர்கள் இனி எதற்கு கோவணத்திற்காக இந்திய அரசிடம் கையேந்த வேண்டும். இந்தியாவிடம் எமாந்த வரலாறே தமிழர்களுக்கு உண்டு. கோவணம் இல்லாமலே வாழ்ந்தவர்கள். ஓன்றுமே இல்லாத கந்தல் கோவணத்திற்கு ஏன் அலைய வேண்டும். அதை விட கோவணம் இல்லாமலேயே இப்போது இருப்பதைப்போல இருக்கலாமே.

ஒன்றுமே இல்லாமல் உறிஞாங்குட்டியாக நிற்பதை விட கோவணத்துடன் நிற்பது மேல்.

பேரம்பேசும் பலம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில், வேறு எந்த தேசங்களினதும் ஆதரவும் அற்ற நிலையில் 13 இன் மூலம் கிடைத்த கொஞ்ச நஞ்ச அதிகாரமும் கைவிட்டு போனால் கிடைப்பது பூச்சியத்துக்கும் கீழான மறை நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

அப்பன் : சமஷ்டி வேண்டாம் என்டவர்.
மகன் : 13 வேண்டாம் எண்டுறார். 

ஆக மொத்தம் இவர்களுக்கு சனத்துக்கு ஏதும் கிடைக்க கூடாது.. அவ்வளவுதான்.. 

ஆனால்… 13ஆல் கிடைத்த.. இதுவரை நடந்த ஒரு மாகாணசபை தேர்தலைக்கூட இவர்கள் இதுவரை புறக்கணித்தது இல்லை.... தோல்வியடைந்த 13ஆல் கிடைத்த மாகாண சபைக்கு ஏன் போகத் துடிக்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள்… பதில் இருக்காது… சம்பளம், வண்டிவாகனம், பதவிகள் இல்லாது இவர்களால் உயிர் வாழ முடியாது… தங்களுக்கு இலங்கை அரசு மூலம் கிடைக்கும் எதையுமே இவர்களால் புறக்கணிக்க முடியாது.. ஆனால் மக்கள் மட்டும் எல்லாத்தையும் புறக்கணித்து அம்மணமாக தெருவில் நிக்கனும்.. அப்படித்தானே?

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டது எதற்கு? 

அங்கிருக்கும் மக்களுக்கு தமக்கு தேவையான அரசியலை முன்னெடுக்க உரிமை இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, MEERA said:

ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டது எதற்கு? 

அங்கிருக்கும் மக்களுக்கு தமக்கு தேவையான அரசியலை முன்னெடுக்க உரிமை இல்லையா?

அங்கை இருக்கிற சனத்துக்குத்தான் எது என்ன செய்யோணும் எண்டு தெரியும் எண்டவையள் தான் இப்ப......🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக ஒரு நூறு பேர்.....

Bild

சுமந்திரனுடன்  கூடியிருந்து சோத்துப்பார்சல் சாப்பிட்டவர்கள் வரவும்....😊

Bild

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சுமார் 14,000 இராணுவத்தினரே நிலைகொண்டிருப்பதாக யாழ். பாதுகாப்பு படைத்தளபதி மேயர் யெனரல் தர்சன கெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருப்பதாக அரசியல்வாதிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

சரி போகட்டும்! இத்தனை ஆயிரம் மக்கள் கூட்டத்தில் 14,000 இராணுவத்தினரில் ஒரு இராணுவத்தினனைக் கூடக் காணவில்லையே....??? ஒரு பொலீசு படையினனைக்கூடக் காணவில்லையே....

தமிழர் பகுதியில் அதுவும் யாழில் இத்தனை ஆயிரம் மக்கள் சுதந்திரமாக ஒன்றுகூட முடியுமென்றால்...???🤔🤔🤔

10 hours ago, குமாரசாமி said:

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.