Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

AVvXsEilOoZvHn6W6vXhymbfUAsD3cXlz8_3om7W4MSPfDpim_7BXvBB05iMraJy4-qslJeYOj4O14hfN-5STZ-qEKR7C0mfo0kz7L9AIEF7i8ZqKikF71bSF5H0LgSzmfZ0lL7b3eoHdy9OqonCJU9VejgYeP5mA_e8Kmnz_0-sAoER-y35Eei3kXsGXmH2=s16000

ஆர் உந்த நசீர்? அப்பிடி என்ன பெரிய ஆளோ உவர்? சமுதாயத்துக்கு என்ன நல்லது செய்தவர்?

3 hours ago, colomban said:

முன்ன‌ர் எல் ரி ரி ரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் 

இப்போது த‌மிழ் பாடசாலை ப‌ய‌ங்க‌ர‌வாத‌மா?

 

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி.

மழை எண்டால் பாட்டம் எண்டுறாங்கள்😋

  • Replies 69
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியை  பஃமிதா றணீஸ் ,  அடிப்படை  உரிமைக்காக 
விட்டுக் கொடுக்காது போராடுங்கள்!
உங்கள் நிலைப்பாடு உங்களை மட்டும் காப்பது அல்ல,இப்படியாக பாதிக்கப்படும் அனைத்து, இன , சமூகங்களுக்கும் , மக்களுக்கும் உரியன!
சண்முகா வித்தியாலய மாணவிகள், பஃமிதா றணீஸ் 
அணிந்துவரும் ஆடைக்கு எதிராக போராடீனார்கள் 
என்று சொல்வது உண்மையானால் ,இலங்கையின் எதிர்கால சந்ததிகள் வளர்க்கப்படும் சூழல் குறித்து , நாம் மிக ஆழமாக கரிசனை செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம் !
------------------------------------------------
எமது இந்த நிலைப்பாடு பஃமிதா றணீஸ் அவர்களுக்கு மட்டும் உரியதல்ல,அவர் ஒரு முஸ்லிம் ஆசிரியை என்பதற்குமானதல்ல.  இந்த வகையான அத்துமீறல்கள்,   அடிப்படை உரிமைகளுக்கு எதிரான, மற்றவர்களின் அடையாளங்களை மதிக்கத் தெரியாத , இனவாத , மேலாதிக்க நடைமுறைகள் எங்கு நிகழ்ந்தாலும் , எத்தரப்பில் நடந்தாலும் எமது நிலைப்பாடு  இதுவேதான் !

*இலங்கை அரசியலமைப்பில் உள்ள  ஒரு உரிமை

*மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள உரிமை

*நீதிமன்றத்தில் இணக்கம் காணப்பட்ட ஒரு விடயம் 

*இலங்கை ஆசிரியர் ஒழுக்கக் கோவை ஹபாயா அணிவதற்கு எந்த தடையும் இடாத விடயம் .

*கல்வி அமைச்சே , அபாயா அணிந்து, கடமைக்கு செல்லலாம் என பணிக்கு மீள அழைத்த  அழைப்பு 

இவ்வளவு அம்சங்களும் இந்த விடயத்தில் தெளிவாக உள்ள போது  , திருமலை சண்முகா பாடசாலை நிர்வாகமும், அங்குள்ள சிலரும் காட்டும்  எதிர்ப்புக்காக , ஆசிரியை  பஃமிதா றணீஸ் தனது உரிமைய விட்டுக் கொடுக்க முடியாது! 

சகோதரி/ தோழி பஃமிதா றணீஸ் நீங்கள் , உங்கள் மீது எந்த அராஜாகம் இழைக்கப்பட்டாலும் , அதனை உறுதியுடன் எதிர் கொண்டு மிகத் துணிச்சலாக முன் செல்லுங்கள்!   நாம் ஏலவே சொன்னது போல் இது உங்களது தனிப்பட்ட விடயம் மாத்திரமல்ல. மேலாதிக்கங்களுக்கு எதிராக , ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தபட்ட விட்டுக் கொடுக்க முடியாத ஒரு முக்கியமான விடயம் இது! 

சொந்த மக்களை பாதுகாத்து, அவர்களது  அரசியல் உரிமைகளுக்காக குரல் தருவோம் என மக்களிடம் வாக்குப்பிச்சை எடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களானதன் பின், ஒடுக்குமுறை அரசின் காலில் விழுந்து மண்டியிட்டு , சொந்த மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு துணையாகவும், அணுசரனையாகவும்  இருக்கும் அரசியல் பிரதிநிதிகள்  மலிந்த ஒரு சமூகத்திற்குள்  இருந்து, மிகத் துணிச்சலாக , கடந்த 2018ம் ஆண்டிலிருந்து சகல வழிகளிலும், உறுதியாக போராடி வரும் உங்களுக்கு எமது ஒருமைப்பாடு என்றும் உண்டு!

 
000
இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஆழமாக கவனக்குவிப்பினை செலுத்த வேண்டிய மற்றுமொரு விடயம், திருமலை சண்முகா வித்தியாலய மாணவிகள் , ஆசிரியை பஃமிதா றணீஸ் அணிந்துவரும் ஆடைக்கு எதிராக போராடீனார்கள்  என  ஒரு சில ஊடகங்கள்  வாயிலாக சொல்லப்படும் பிரச்சாரமாகும். இத்தகைய ஊடகங்கள் பல பத்தாண்டுகளாக தாங்கள் விதைத்த நச்சுவிதையை இதன் வழியாக தமது விளைச்சலாக காட்டுவதையிட்டு  அந்த ஊடகங்களுக்கு உள்ள பெருமையாக இதனை கொண்டாட முடியும். 

 ஆனால் உண்மையில் சமூகப் பொறுப்புள்ள, எதிர்கால சந்ததிகள் குறித்த அக்கறையும் கரிசனையும் உள்ள யாரும், இது குறித்து ஆழ்ந்த துயரையும், இத்தகைய நச்சு விதைகளை மாணவிகள் மனதில் இருந்து அகற்றுவதற்கான உடனடிப் பொறுப்புகளையும் இட்டே சிந்திக்க தலைப்படுவர். 

மேலும் இந்த  இனவாத ஊடகங்கள் செய்தியை  பிரசுரிக்கும் போது , ஆசிரியை முகத்தை மூடி பாடசாலைக்கு வந்தார் என எழுதுவது மிக மோசமான சித்தரிப்பும் ,செய்தியைப் படிக்கும் மக்களை திசை திருப்ப கையாளும் குயுக்தியுமாகும். அபாயா என்பது முகத்தினை மூடி அணியும் ஆடை அல்ல,  மிக நெருக்கமாக மதிப்புக்குரிய கிறிஸ்தவ கன்னியாஸ்த்திரிகள் அணியும் ஆடைக்கு ஒப்பானதே! 
இந்த இனவாத ஊடகங்கள் உண்மை நிலையை மக்கள் அறிய விடாது திசை திருப்புவதில் சளைக்காது பணி செய்து வருபவைதான்.

இத்தகைய இனவாத ஊடகங்களையும், இந்த விடயத்திற்கு பின் நின்று செயற்படும் இனவாத தரப்பினரையும் தோல்வியடையச் செய்வதன் வழியாகத்தான் சமூகங்களுக்கு இடையில் நியாமான உரையாடல்களுக்கான வாசல்களைத் திறக்க முடியும்! ஒருமைப்பாட்டிற்கும் , உண்மையான சமூக சமத்துவத்திற்குமான அடித்தளத்திற்கும் பலம் சேர்க்க முடியும்! 

0000

இந்த விவகாரம் , திருமலை சண்முகா வித்தியாலயம் தொடர்பான விடயம் மட்டுமல்ல, மிக ஆழமானது. இன, மத சமத்துவத்திற்கும் , சமூக கலாசார அடையாளங்கள் தொடர்பான அரசியல் , சமூக அறிவுடனும் , பரந்துபட்ட கற்றலுடனும் தெளிவான புரிதலுடனும் சம்பந்தப்பட்ட விடயமாகும்! 

இலங்கையில் மட்டுமல்ல, உலகெங்கும் இப்படியான விடயங்கள் நிகழும் போது முற்போக்காளர்கள், கல்வியலாளர்கள், மனித உரிமையாளர்கள், சமூக பங்களிப்பாளர்களின் உறுதியான நிலைப்பாடும் , இந்த மாதிரியான பாசிசத் தன்மை நிறைந்த , ஒற்றை அடையாளத்தை வலியுறுத்துகின்ற , பல்கலாசார அடையாளங்களை மறுக்கின்ற இதன் பின்னுள்ள அரசியல் , இன, மத மேலாதிக்கம் குறித்தும் புரிதலும்  இந்த நூற்றாண்டில் மிக முக்கியமான சிந்தனைகளுக்கும், நிலைபாடுகளுக்குமான  ஆழமான அடிப்படைகளாவும் இருந்துள்ளன.  ஆகவே, இந்த விடயத்தில் இக்காலகட்டத்தில் சமூகத் தளங்களில்  இயக்கத்தில் உள்ள அமைப்புகளினதும், தனிமனிதர்களதும் கருத்து  நிலைப்பாடும் ,  தலையீடும் பங்களிப்பும் இன்றியமையாததாகும். 

ஆசிரியை  பஃமிதா றணீஸ் , நீங்கள்  தவறான முன்னுதாரமான பெண் இல்லை,தமக்கு  உரித்தான உரிமைகளை விட்டுக் கொடுக்காது , சமூக உரிமைகளுக்காக இறுதி வரை போராடும், போராடிய பெண் என வரலாற்றில் பதியப்படுவீர்கள் ! இந்த விடயத்தில் சகோதரி பஃமிதா றணீஸ் அவர்கள்  மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு இன, மதம் கடந்து அனைத்து சமூக ஜனநாயக சக்திகளும், மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற அனைவரும் ஆதரவினையும், தமது ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பது மிக முக்கிய கடமையாகும்! 

000
எம். பௌசர் 
ஒருங்கிணப்பாளர்- இலண்டன்
இனவாதத்திற்கு எதிரானதும்,
 ஜனநாயகத்திற்குமான  மக்கள் அமைப்பு 
People’s Movement Against Racism and for Democracy
03- பெப்ரவரி 2022

000
ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!

பின்னூட்டங்களில் தயவு செய்து , சமூக சக்திகளுக்கு, சமூகங்களுக்கு உள்ள பொறுப்பினை சுட்டிக் காட்டுங்கள்! மொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டாதீர்கள்! அந்த வழிமுறை முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்தும்….
 

https://www.facebook.com/100000000176167/posts/5177649755578312/?d=n

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வாலி said:

குறிப்பிட்ட ஆசிரியை மினி ஸ்கார்ட் அணிந்து வந்திருந்தால் இந்தப் போராட்டம் நியாயமானது.

அபயா அணிந்து வந்தால் என்ன அபாயம் என்று புரியவில்லை!

spacer.png

2 hours ago, குமாரசாமி said:

ஆர் உந்த நசீர்? அப்பிடி என்ன பெரிய ஆளோ உவர்? சமுதாயத்துக்கு என்ன நல்லது செய்தவர்?

சும்மா கேள்வி கேட்பதோடு டியூட்டி முடிந்தது என்று இருக்காமல் பலதும் சமுதாயத்திற்கு செய்ததால்தான் ஒரு எம்பியாக இருக்கின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்

Published by T Yuwaraj on 2022-02-03 13:17:46

 
 

 

 

திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG-20220203-WA0069.jpg

நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பாடசாலையில் நேற்று (02)   கடமையேற்கச் சென்ற ஆசிரியைக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அதிபரும், ஆசிரியையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹபாயா அணிந்துகொண்டு சென்றமையால் இந்த சர்ச்சை வெடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (03) காலை 8.00 மணியலவில் பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய பெற்றோர் சிலர், திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று அங்கு  ஒன்றுகூடி பதாதைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பினர்.

IMG-20220203-WA0070.jpg

குறித்த இடத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை செய்வதற்கு சிலரை வருமாறு அழைத்தார். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

 மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வினயமாக வேண்டிக் கொண்டார்.

நீதிமன்ற நடவடிக்கை இருப்பதால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை சமுகத்தோடு பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

திருமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் உந்த நசீர்? அப்பிடி என்ன பெரிய ஆளோ உவர்? சமுதாயத்துக்கு என்ன நல்லது செய்தவர்?

இப்ப விளங்குதோ...20 க்கு கை உயர்த்திய பாவ விமோசனத்தை...மீட்டுவிட்டார்....சம்பந்தம் அய்யாவின் வண்டியில் உரிமையுடன் கைவைத்துக் கதைக்கும் உரிமையுடையவர்...கொழுத்தியாச்சு ..இனி கற்பூரம்...திரிகோணமலையில் இனி கொழுந்துவிட்டு எரியும்... லண்டனிலை பக்கென்று பத்தியிட்டுது...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

முசுலிம் பாடப்புத்தகத்தையே பறிச்சுக் கிழிச்சு அட்டகாசம் நடக்கிறது..அதுக்கு ஒரு ஆர்ப்பாட்டம் இல்லை..

தமிழர் என்றல்ல் கிள்ளுக்கீரை ..அவ்வளவுதான்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அபயா அணிந்து வந்தால் என்ன அபாயம் என்று புரியவில்லை!

spacer.png

இப்பிடி ஒரு டீச்சர் கிடைச்சிருந்தா வாழ்நாள் முழுவதும் ஸ்டூடண்ட்டாகவே இருந்திருப்பன். மதமாவது மொழியாவது😍😍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

 

சும்மா கேள்வி கேட்பதோடு டியூட்டி முடிந்தது என்று இருக்காமல் பலதும் சமுதாயத்திற்கு செய்ததால்தான் ஒரு எம்பியாக இருக்கின்றார்!

சமுதாயத்துக்கு ஒண்டுமே செய்யாமல் இனவாதம்,பிரதேசவாதம்,மதவாதம் பேசிக்கொண்டும் அரசியல் செய்யலாம்.......
அடாத்து குடியேற்றங்களையும் மசூதிகளை வானுயர கட்டுவததெல்லாம் உங்க பாசையிலை சமூக தொண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

AVvXsEilOoZvHn6W6vXhymbfUAsD3cXlz8_3om7W4MSPfDpim_7BXvBB05iMraJy4-qslJeYOj4O14hfN-5STZ-qEKR7C0mfo0kz7L9AIEF7i8ZqKikF71bSF5H0LgSzmfZ0lL7b3eoHdy9OqonCJU9VejgYeP5mA_e8Kmnz_0-sAoER-y35Eei3kXsGXmH2=s16000

ஆர் உந்த நசீர்? அப்பிடி என்ன பெரிய ஆளோ உவர்? சமுதாயத்துக்கு என்ன நல்லது செய்தவர்?

 

இவருக்கு தான் சம்மந்தர் ஒரு எம்பி சீட்டை விட்டு கொடுத்தவரென்று நினைக்கிறேன் 

5 hours ago, கிருபன் said:

அபயா அணிந்து வந்தால் என்ன அபாயம் என்று புரியவில்லை!

spacer.png

 

இவ போட்டு இருக்கிறது அபாயாவா🤔 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இவருக்கு தான் சம்மந்தர் ஒரு எம்பி சீட்டை விட்டு கொடுத்தவரென்று நினைக்கிறேன் 

சம்பந்தர் அரசியலுக்கு வந்தது தமிழனை விக்கத்தானே இவ்வளவு வயதாகியும் பதவியை இளையவருக்கு கொடுக்க மனமில்லாமல் சேடம் இழுத்துக்கொண்டு கிடக்கு இவர் மேலே போவதற்கு முன் இலங்கையின் கிழக்கு தமிழரை இல்லாமல் பண்ணிவிட்டுதான் போவார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, பெருமாள் said:

சம்பந்தர் அரசியலுக்கு வந்தது தமிழனை விக்கத்தானே இவ்வளவு வயதாகியும் பதவியை இளையவருக்கு கொடுக்க மனமில்லாமல் சேடம் இழுத்துக்கொண்டு கிடக்கு இவர் மேலே போவதற்கு முன் இலங்கையின் கிழக்கு தமிழரை இல்லாமல் பண்ணிவிட்டுதான் போவார் .

சம் வித்து முடியாட்டில் சும் மிச்ச சொச்சத்தையும் வித்து முடிப்பார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:

திரும‌லை ச‌ம்ப‌வ‌த்தை க‌ண்டித்து ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியால் ம‌ன்னாரில் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ம்.

 

AVvXsEi8ZCPRm_ZEqOwRj2xmEFxNT-XjERSNDBv7HgNj7D-bw9cVKNvMDTfaivI0ZjL6USbsSc4gfNLaa8AQniiNcVCV1_6tEwEnyeMEuPzCgVUj0OJ1DHLpyxZ6hHhmKhOYVepi8_uSEQCECEdMs8_LsKVOiDAUZtwUoexg23I6r7jbexiaTT7fFKHevmjv=s320

திருகோண‌ம‌லை ச‌ண்முகா வித்தியால‌ய‌த்தில் அபாயா அணிந்து வ‌ந்த‌மைக்காக‌ முஸ்லிம் ஆசிரியை இன‌வாத‌,  ப‌ய‌ங்க‌ர‌வாத‌ சிந்த‌னை கொண்டோரால் தாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னிதாபிமான‌மற்ற‌  செய‌லை க‌ண்டித்து   ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியினால் ம‌ன்னாரில் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ம் இன்று ந‌டை பெற்ற‌து.

 

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தேசிய‌ அமைப்பாள‌ர் சித்தீக் முஹ‌ம்ம‌த் ச‌தீக் த‌லைமையில் ந‌ட‌ந்த‌ இக்க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌த்தில் பின்வ‌ரும் கோஷ‌ங்க‌ள் எழுப்ப‌ப்ப‌ட்ட‌ன‌.  

 

திருகோண‌ம‌லை ச‌ன்முகா வித்தியால‌ய‌த்தில் அபாயா அணிந்த‌ ஆசிரியை தாக்க‌ப்ப‌ட்ட‌தை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம்.

 

திருகோண‌மலை சண்முக‌ வித்தியால‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கு அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.

 

 

முன்ன‌ர் எல் ரி ரி ரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் 

இப்போது த‌மிழ் பாடசாலை ப‌ய‌ங்க‌ர‌வாத‌மா?

 

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி.

 

இதேவேளை இத்தாக்குத‌லை க‌ண்டித்து த‌ம‌து க‌ட்சியினால் தேசிய‌ ம‌ட்ட‌த்தில் மேலும் ப‌ல‌ பிர‌தேச‌ங்க‌ளில் அமைதியான‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டும் என‌ க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

https://www.aljazeeralanka.com/2022/02/blog-post_3.html?fbclid=IwAR1ACWwKJZwoxWyIPUHdf4psIrQmb5KKW-3X0T78qdJymY3T5bai4QzR0oY

இவுங்க சிரியாவில் அமெரிக்கா நேத்திக்கு அரங்கேற்றிய பயங்கரவாத சம்பவத்திற்கும் எதிராகக் கொடி புடிக்கலாமே🤫

 

  • கருத்துக்கள உறவுகள்

@ரதி எம்பி சீட் கொடுக்க சம்பந்தர் என்ன கடையா வைத்திருக்கிறார்?

சம் கொடுத்தது கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

முசுலிம் பாடப்புத்தகத்தையே பறிச்சுக் கிழிச்சு அட்டகாசம் நடக்கிறது..அதுக்கு ஒரு ஆர்ப்பாட்டம் இல்லை..

தமிழர் என்றல்ல் கிள்ளுக்கீரை ..அவ்வளவுதான்..

நம்மவர் இதை பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால், இதுவும் தானாக மாற்றப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் முந்திக்கொண்டு பழியை தங்கள்மேல் போட்டுகொண்டுள்ளார்கள். இனி ஒவ்வொரு ஈசலும் அறிக்கையோட கிளம்பும். சிங்களவரோடு தமிழர் சேர்ந்து தாம் தமிழருக்கு செய்த அழிவு வேலையை செய்துவிட்டாலும் என்கிற பயம் முஸ்லீம்களுக்கு,  சிங்களவனோ தமிழரும் முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்தால் தான் பிரித்தாள முடியாதென்கிற ஏக்கம். இரண்டுக்கும் நடுவில் தமிழன் அகப்பட்டு தவிக்கிறான், இழக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

சம் கொடுத்தது கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி.

ஐயா! முதலமைச்சர் பதவியிலிருந்திருந்தாலும் என்ன சாதிச்சிருப்பார்? எதிர்க்கட்சி தலைவர் கதிரையிலிருந்து எதை செய்தாரோ அதையே அங்கும் செய்திருப்பார். நமக்கு எதுவும் கிடைத்திருக்காது. மக்கள் இவர்களுக்கு அளிக்கும் பதவி, கதிரைகளை இவர்கள் கொடை வள்ளல்கள் மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்க்க, வாக்களித்த மக்கள் வாய் பார்க்க வேண்டியதுதான் போங்கள். தமிழ் மக்கள், தாம் தேர்ந்தெடுத்த தலைவர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட  பரிதாபத்துக்குரியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

@ரதி எம்பி சீட் கொடுக்க சம்பந்தர் என்ன கடையா வைத்திருக்கிறார்?

சம் கொடுத்தது கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி.

அதுவும் சம்பந்தர் அய்யாவோடை வயிற்றில் கைபோட்டு கதைத்த படத்திற்குகிடைத்த பரிசு(யாழ் களத்தில் 

இப்போதும் இருக்கின்ற  படம்)

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

 

இவ போட்டு இருக்கிறது அபாயாவா🤔 
 

spacer.png

 

Hijab

This is the most common type of headscarf worn by Muslim women here in the UK. It is a headscarf that covers the head and neck, but leaves the face clear. The scarves come in many different shades and shapes and are often colour co-ordinated with women’s outfits.

Niqab

The niqab is a combination of a head covering and scarf that covers all of a woman’s face except for her eyes. It usually flows down to the mid-back to cover a woman’s hair, and may flow down to the mid-chest in the front. It is most often worn in Arab countries, but an increasing number of Muslim women in the west are choosing to wear it.

Although the majority of scholars agree that hijab is obligatory, only a minority of them say that the niqab is.

Burqa

The terms niqab and burqa are often incorrectly used interchangeably; a niqab covers the face while a burqa covers the whole body from the top of the head to the ground. It is the most concealing of all Islamic veils. It covers the entire face, including the eyes (with a mesh cloth to see through) and the body.

Chador

The chador is a body-length outer garment, usually black in colour, worn mainly by women in Iran. It is not secured at the front by buttons or clasps, so the woman holds it closed

Jilbab/Abaya

These are long, loosely fitted garments worn by Muslim women to cover the shape of their bodies. They are often worn in combination with the hijab or niqab.

https://www.channel4.com/news/from-hijab-to-burqa-a-guide-to-muslim-headwear

  • கருத்துக்கள உறவுகள்

சண்முகா...! சண்முகா...!

சண்முகா...!

பொட்டு வைத்துக்கொண்டு  போகமுடியாது...

சாரி அணிந்தால்  சரிவராது...

"அபாயாவா..?" அனுமதிக்க முடியாது...!

இலங்கை school களில்... இனி நிர்வாணமே சீருடை...!!

###

இத்தனைகாலம்  இணைந்துதானே இருந்தாய்...?

இதே உடையுடன் தானே... Staff Meeting நடாத்தினாய்...

வளாகம் முழுவதும் நான்  வகுப்பெடுப்பதை பார்த்தாய்...

எப்போதிருந்து கண்ணில்... 

ஆடை மட்டும் தெரியும் அசிங்கம் ஆரம்பித்தது...?

எந்த நஞ்சினால்... இந்த 

சத்திவரும் side effect ஏற்பட்டது...?

பாடசாலை...

ஒழுக்கக் கோவையில் ஒன்றுக்கிருக்கும் 

புது நோய் புகுந்தது..?

###

எங்களுக்கு எழுத்தறிவித்த கோணேஸ்வரி மிஸ் 

இப்படிப் பேசவில்லை...

நான் பார்த்த நடராஜா Sir 

இப்படி நடந்துகொள்ளவில்லை...

ஸ்ரீரஞ்சனி Teacher என்றுமே 

என் தொப்பியை கழட்டியதில்லை...

"சண்முகா" நிச்சயம்...

சண்முகனிடமிருந்து வந்ததில்லை...!!

###

"காக்கை குருவிகள் எங்கள் ஜாதி" என்ற புத்தகத்தில் 

ஒரு ஆடைக்கு இடமில்லாமல் போய்விட்டது...

"கடலும் மலையும் எங்கள் தோழன்" எனக் கற்பித்த வளாகத்தில்...

உயிருக்கே உடைச்சுதந்திரம் மறுக்கப்படுகிறது...

கருத்து இருக்கிறது...

கற்பைக் காணவில்லை...!!

###

இனவாதம்... 

அதிபருக்கே அறத்தை மீறக் கற்றுதரும்...

அடித்தவனே அழுதுகொண்டு....

ஆஸ்பத்திரி போகும் அசிங்கத்தை சரிகாணும்..

பிஞ்சுப் பிள்ளைகளின் 

நெஞ்சில் விஷமேற்றி 

வீதியில் விடும் கேவலத்தை ரசிக்கும்...

செத்த மீனை விண்மீனாய்...

மீடியாவில் காட்டி பொய்களை விற்கும்...!!

###

சண்முகாவின் சாக்கடையை 

யாரேனும் சுத்தம் செய்யுங்கள்...

பாடசாலையில் பரவும்...

பாசிசக் கொரோனாவை 

கொளுத்தி நிறுத்துங்கள்...

குழந்தைகளின் நிழலில் நிற்கும்...

அந்த குண்டர்களை அப்புறப்படுத்துங்கள்...!!

புற்றுநோய்...!!

சண்முகாவுக்குள் சமாதியாக 

சத்திரசிகிச்சை செய்யுங்கள்...

முடிந்தால்... 

பிள்ளைகள் கொண்டு... - அங்கே 

ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுங்கள்... 

###

யாழ்ப்பாண library...

இன்று "பஹ்மிதா"வின் இதயத்துக்குள் எரிக்கப்படுகிறது...

கனரக விமானம் ஒன்று,

இதோ பன்மைத்துவதில் குண்டெறிந்து செல்கிறது...

ஒரு பெண்ணுரிமை... 

கண்முன்னே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது....

இரண்டு நாளாய் 

என் இதயம் தேடுகிறது...

எங்கே நீதி..?

எங்கே விடுதலைப் புலிகள்....!!?

---

புத்தளம் மரிக்கார்

http://www.jaffnamuslim.com/2022/02/blog-post_34.html

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, colomban said:

சண்முகா...! சண்முகா...!

சண்முகா...!

பொட்டு வைத்துக்கொண்டு  போகமுடியாது...

சாரி அணிந்தால்  சரிவராது...

"அபாயாவா..?" அனுமதிக்க முடியாது...!

இலங்கை school களில்... இனி நிர்வாணமே சீருடை...!!

###

இத்தனைகாலம்  இணைந்துதானே இருந்தாய்...?

இதே உடையுடன் தானே... Staff Meeting நடாத்தினாய்...

வளாகம் முழுவதும் நான்  வகுப்பெடுப்பதை பார்த்தாய்...

எப்போதிருந்து கண்ணில்... 

ஆடை மட்டும் தெரியும் அசிங்கம் ஆரம்பித்தது...?

எந்த நஞ்சினால்... இந்த 

சத்திவரும் side effect ஏற்பட்டது...?

பாடசாலை...

ஒழுக்கக் கோவையில் ஒன்றுக்கிருக்கும் 

புது நோய் புகுந்தது..?

###

எங்களுக்கு எழுத்தறிவித்த கோணேஸ்வரி மிஸ் 

இப்படிப் பேசவில்லை...

நான் பார்த்த நடராஜா Sir 

இப்படி நடந்துகொள்ளவில்லை...

ஸ்ரீரஞ்சனி Teacher என்றுமே 

என் தொப்பியை கழட்டியதில்லை...

"சண்முகா" நிச்சயம்...

சண்முகனிடமிருந்து வந்ததில்லை...!!

###

"காக்கை குருவிகள் எங்கள் ஜாதி" என்ற புத்தகத்தில் 

ஒரு ஆடைக்கு இடமில்லாமல் போய்விட்டது...

"கடலும் மலையும் எங்கள் தோழன்" எனக் கற்பித்த வளாகத்தில்...

உயிருக்கே உடைச்சுதந்திரம் மறுக்கப்படுகிறது...

கருத்து இருக்கிறது...

கற்பைக் காணவில்லை...!!

###

இனவாதம்... 

அதிபருக்கே அறத்தை மீறக் கற்றுதரும்...

அடித்தவனே அழுதுகொண்டு....

ஆஸ்பத்திரி போகும் அசிங்கத்தை சரிகாணும்..

பிஞ்சுப் பிள்ளைகளின் 

நெஞ்சில் விஷமேற்றி 

வீதியில் விடும் கேவலத்தை ரசிக்கும்...

செத்த மீனை விண்மீனாய்...

மீடியாவில் காட்டி பொய்களை விற்கும்...!!

###

சண்முகாவின் சாக்கடையை 

யாரேனும் சுத்தம் செய்யுங்கள்...

பாடசாலையில் பரவும்...

பாசிசக் கொரோனாவை 

கொளுத்தி நிறுத்துங்கள்...

குழந்தைகளின் நிழலில் நிற்கும்...

அந்த குண்டர்களை அப்புறப்படுத்துங்கள்...!!

புற்றுநோய்...!!

சண்முகாவுக்குள் சமாதியாக 

சத்திரசிகிச்சை செய்யுங்கள்...

முடிந்தால்... 

பிள்ளைகள் கொண்டு... - அங்கே 

ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுங்கள்... 

###

யாழ்ப்பாண library...

இன்று "பஹ்மிதா"வின் இதயத்துக்குள் எரிக்கப்படுகிறது...

கனரக விமானம் ஒன்று,

இதோ பன்மைத்துவதில் குண்டெறிந்து செல்கிறது...

ஒரு பெண்ணுரிமை... 

கண்முன்னே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது....

இரண்டு நாளாய் 

என் இதயம் தேடுகிறது...

எங்கே நீதி..?

எங்கே விடுதலைப் புலிகள்....!!?

---

புத்தளம் மரிக்கார்

http://www.jaffnamuslim.com/2022/02/blog-post_34.html

யாருன்னாலும் இதை செல்லு வாப்பா நீன் செல்லாதே..

என்னே என்னே பலாயீல்லாம் செய்ஞ்சு போயிட்டு இப்ப அபயாவா..

எங்கே நானா இதை ௭ழுபது எண்பது தொண்ணூறில் தொலைச்சிட்டிருந்தீங்க ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, colomban said:

இரண்டு நாளாய் 

என் இதயம் தேடுகிறது...

எங்கே நீதி..?

எங்கே விடுதலைப் புலிகள்....!!?

---

புத்தளம் மரிக்கார்

இப்ப இவையளும் விடுதலைப்புலிகளை தேட வெளிக்கிட்டினம். இனி சிங்களச்சனமும் தேடுற காலம் வரும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஜப்னா முசுலிமில் ஒரு செய் தி பார்த்தேன்...யாழ் சாட்டி கடற்கரையில் 1895ல் சவடக்கம் செய்த இடத்துக்கு பக்கத்தில் ஒரு மசூதி இருக்காம் அது 1965ல் கட்டையதாம் .இப்ப இடிஞ்சு விழப்போகுதாம்...அதை திருத்திவிட்டு முசுலிமையும் குடியேற்றி விட்டால் தொழில் வசதியும் குடுக்கலாமாம்.இப்படி அழகான முசுலிமிடம் இலங்கையில் எங்கும் இல்லையாம்...ஒரு எந்திரி 70 மீல்லியன் ரூபா இருந்தால் அந்தஇடம் எமது பூமி என்கிறார்...அப்ப இனி அந்த பீச்சுக்கு நம்ம சனம் போக முடியாது...அபாயா காரர் மட்டும் போகலாம்...வேலணை காரர் யாழில் இருந்த்தால் கவனமெடுங்கோ... பள்ளியும் எழும்பும்...பள்ளிக்குடமும் வரும்...அரௌ வேலணை என்றும் பெயர் வரும்....சண்முகா முடிய இனி சாட்டிதான் ....அல்லாதான் காப்பற்றணும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஹபாயா’ சர்ச்சை: இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது – சம்பந்தன் வலியுறுத்து

February 4, 2022
 
spacer.png
 

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ‘ஹபாயா’ சர்ச்சையால் அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், இது இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, ஒவ்வொரு இனத்தினுடைய உரிமைகளையும் மற்றைய இனம் மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

‘ஹபாயா’ அணிந்து வந்திருந்த குறித்த முஸ்லிம் பெண் ஆசிரியர் உண்மையில் அதிபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அது தவறான விடயம் எனவும், இந்தக் கருமத்தை நாம் சமாதானமாகத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒருவரையொருவர் மதித்து மற்றவர்களுடைய கருமத்துக்கு – சுயமரியாதைக்கு – இறைமைகளுக்குப் பாதகம் இல்லாமல் நாம் செயற்பட வேண்டும்.

அனைவரும் இந்தக் கடமையை ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் என நான் மிகத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். பிரச்சினையை நாம் வளர்க்கக்கூடாது. தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு – கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறு பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி சமூகத்தை பிரிக்கும் செயற்பாடுகளை சிலர் திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றனர்.

SayanolipavanFebruary 5, 2022
 
AVvXsEjQn95Ny7jOep5-o0G_63FKxrAw_PFmB72t-2u3r_98P6-3muET9QA8uEBk7d7PlQK5NDg6jZtkKGVJWNuK7A-VpiXRYcozrN1lwLLAysc7Ij97V7hiR1jASuLq7y_HcirrdFROQuRjcgORPeJv27KDJG_VfipQU3kRGTQi8Y-AoYSK0P247DGG4HsmiA=s16000


( றம்ஸீன் முஹம்மட்)   

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் நீண்ட தூரம் கைகோர்த்துப் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் திருகோணமலை சண்முகா பாடசாலை விடயம் இந்த இரு சமூகத்தையும் பிரித்து விடக் கூடாது. இந்த விடயத்தை தமிழ் புத்தி ஜீவிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு சமூகத்தின் கலாசார ஆடையைக் கூட அனுமதிக்காத தமிழ் சமூகத்திடம் இருந்து எவ்வாறு நாங்கள் வேறு உரிமை சார்ந்த விடயங்களை எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியை முஸ்லிம் சமூகத்தினர் எங்களிடம் கேட்கத் தொடங்கியுள்ளனர். இவ்வாறான கேள்விகளுக்கு எங்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரு சமூகமும் இணைந்து முகங்கொடுத்து தீர்வு காண வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்காக இரு சமூகமும் ஒன்று பட்டு செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் இவ்வாறான சிறு சிறு பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி சமூகத்தை பிரிக்கும் செயற்பாடுகளை சிலர் திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றனர்.

இது நாம் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டத்தை இன்னும் நீண்ட காலத்திற்கு தாமதப்படுத்தி விடும். இதனால் பாதிக்கப்படப் போவது இரு சமூகத்தினரும் தான் என்பதை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

குறித்த பாடசாலை அபாயா விவகாரத்தில் நீதிமன்றத்தில் சுமுகத்தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய கல்வி அமைச்சின் பணிப்பின்படி கடமைக்கு சமூகமளித்த ஆசிரியையை ஒப்பமிட அனுமதிக்காது தாமதிக்க வைத்ததன் காரணம் என்ன? இந்த விவகாரத்தில் உடனடியாக வெளியார் எப்படி வந்து தலையீடு செய்தார்கள்? மாணவிகள் உடனடியாக பாடசாலையை விட்டு வெளியேறியமைக்கான பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்கான விடையைத் தேடினால் இந்தப் பிரச்சினைக்கான தோற்றம் எது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம்கள் தமது கலாசார ஆடையுடன் கற்பிப்பதால் ஏதாவது பிரச்சினை உண்டா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஏதாவது பிரச்சினையை இனங்கண்டால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும். இதனை விடுத்து முஸ்லிம்கள் அவர்களது உடையுடன் பாடசாலைக்கு வரக் கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எனவே, தமிழ் புத்தி ஜீவிகள் இந்த விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உணர்வுகளுக்கு அடிமைப் படுவதனால் ஏற்படும் இழப்புகள், பாரதூரங்கள் பற்றிய தெளிவை சமூகத்திற்கு வழங்க வேண்டும். நாம் செல்ல வேண்டிய நீண்ட பாதையில் இவை போன்ற விடயங்கள் தடைக்கற்கள் என்பதை உணர்த்த வேண்டும்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகமும் - முஸ்லிம் சமூகமும் பிரிந்து நின்று வடக்கு கிழக்கை இணைக்கவோ அல்லது நிலையான தீர்வுத்திட்டங்களை அமுல் படுத்தவோ முடியாது என்பதை கடந்த கால அனுபவங்களின் ஊடாக நாம் கற்றுள்ளோம். இந்த நிலை இன்னும் நீடிக்க வேண்டுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்த இரு சமூகத்தினரும் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு நிற்பது பிரித்தாள நினைப்போருக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்வது காலத்தின் தேவையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
 

 

http://www.battinews.com/2022/02/blog-post_83.html

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு – கிழக்கு என்பது எமது சரித்திர ரீதியான வதிவிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் இறைமையை நாம் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

இந்த ஒரு காரணிக்காக தமிழன் குனிந்து போகவேண்டுமென்று எதிர்பார்த்து, துரும்பை தூணாக்கி அடிமைப்படுத்தலே நடக்கிறது. ஐயா முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்ததும் இதற்காகவே. எவ்வளவு பணிந்துபோனாலும் இதை வைத்து தம்காரியத்தை சாதிப்பார்களே ஒழிய வேறொன்றும் ஆகாது. ஆனால் காலம் வரும்போது இவர்களது எந்த தாளமும் எடுபடாது, ஓரணியில் வந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரம் - சாணக்கியன் கருத்து!

ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரம் - சாணக்கியன் கருத்து!

 

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இரா.சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று (05) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ´ஹபாயா´ சர்ச்சை பற்றிய உண்மைத்தன்மை குறித்து சரிவர தெரியாமையினாலேயே நான் அதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்தேன்.

எனினும் எனது பெயரினை பயன்படுத்தி சில விசமிகள் இனங்களுக்கிடையில் பிரிவினையினை வெளியிடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன்காரணமாகவே நான் தற்போது இதுகுறித்து சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன்.

இது குறித்து சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், பெரும் சர்ச்சையாகியுள்ள ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரத்தினை சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துவதனை கைவிட வேண்டும்.

இவ்வாறான பிரச்சனைகள் இரு சமூக இணைப்பாட்டுடன் தீர விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.’ எனத்தெரித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.