Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்திற்கு பின்னால் கோத்தா இருப்பதாய் மு.பு செய்தி பார்த்தேன் ...அவர் தான் ஒரு அதிகாரியை கொண்டு அந்த ஆசிரிரியை தூண்டி விடுவதாக முஸ்லீம் உறவுகள் எழுதியிருந்தார்கள் .

  • Replies 69
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்+
On 4/2/2022 at 02:23, colomban said:

யாழ்ப்பாண library...

இன்று "பஹ்மிதா"வின் இதயத்துக்குள் எரிக்கப்படுகிறது...

கனரக விமானம் ஒன்று,

இதோ பன்மைத்துவதில் குண்டெறிந்து செல்கிறது...

ஒரு பெண்ணுரிமை... 

கண்முன்னே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது....

இரண்டு நாளாய் 

என் இதயம் தேடுகிறது...

எங்கே நீதி..?

எங்கே விடுதலைப் புலிகள்....!!?

---

புத்தளம் மரிக்கார்

http://www.jaffnamuslim.com/2022/02/blog-post_34.html

 

https://www.facebook.com/photo/?fbid=10160497402855832&set=a.70845465831 - புத்தளம் மரிக்கார்

 

சோனி புலியைத் தேடுது.

விந்தைதானடா!

இருந்தவரை போட்டிபோட்டு அழித்துவிட்டு 

இப்போது வேணுமாம். 

புலியிறைச்சிதான் இருக்கிறது, சிறைகளுக்குள்!

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அவள் ஒரு தொடர் கதை

++++++++++

Mohamed Nizous

 

மறைக்காதே என்று சொல்லி

மறை கழன்ற கூட்டம் ஒன்று

குரைக்கின்ற போதும் அவள்

குறைக்காள் தன் ஆடை.

 

மறை வழியில் நின்று அவள்

மறைப்பாள் தன் உடலை

உறைக்கின்ற வகையில் அவள்

உரைப்பாள் கடும் பதிலை

 

காட்டு உடலை என்று

காட்டு நாய்கள் போல்

கூட்டமாகும் காடையர் முன்

கூட்டுவாள் தன் வீரம்

 

அணியாதே என்று சொல்ல

ஆரடா நீ என்று

பணியாது முகங்கொடுப்பாள்

பனியாகக் கரையும் எதிர்ப்பு

 

உன் வீட்டுப் பெண்கள்

உடை பற்றி நீ பேசு

என்னுடைய உடை பற்றி

ஏன் உனக்கு குடையுதென்பாள்

 

சினிமாவில் நாயகியை

சீனிமாவாய் ருசிப்பது போல்

எனை ரசிக்க வேண்டுமென்று

எண்ணுகிறாயா எனக் கேட்பாள்

 

அடுத்த இன ஆடை பற்றி

எடுத்தெறிந்து ஏச மாட்டாள்

உடுத்திருக்கும் தன் உடையை

தடுத்தவரை தான் எதிர்ப்பாள்

 

கொடி பிடிக்கும் கூட்டம் முன்

கோடி பலம் கொண்டு அவள்

அடியெடுத்து நடப்பாள் -இது

முடியாது தொடரும்

https://www.madawalaenews.com/2022/02/blog-post_628.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது பாரம்பரிய உடை இதுவா? இந்த ஆடை பண்பாடு  எப்போது? எங்கிருந்து  இலங்கைக்குள் புகுத்தப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, colomban said:

அவள் ஒரு தொடர் கதை

++++++++++

Mohamed Nizous

 

மறைக்காதே என்று சொல்லி

மறை கழன்ற கூட்டம் ஒன்று

குரைக்கின்ற போதும் அவள்

குறைக்காள் தன் ஆடை.

 

மறை வழியில் நின்று அவள்

மறைப்பாள் தன் உடலை

உறைக்கின்ற வகையில் அவள்

உரைப்பாள் கடும் பதிலை

 

காட்டு உடலை என்று

காட்டு நாய்கள் போல்

கூட்டமாகும் காடையர் முன்

கூட்டுவாள் தன் வீரம்

 

அணியாதே என்று சொல்ல

ஆரடா நீ என்று

பணியாது முகங்கொடுப்பாள்

பனியாகக் கரையும் எதிர்ப்பு

 

உன் வீட்டுப் பெண்கள்

உடை பற்றி நீ பேசு

என்னுடைய உடை பற்றி

ஏன் உனக்கு குடையுதென்பாள்

 

சினிமாவில் நாயகியை

சீனிமாவாய் ருசிப்பது போல்

எனை ரசிக்க வேண்டுமென்று

எண்ணுகிறாயா எனக் கேட்பாள்

 

அடுத்த இன ஆடை பற்றி

எடுத்தெறிந்து ஏச மாட்டாள்

உடுத்திருக்கும் தன் உடையை

தடுத்தவரை தான் எதிர்ப்பாள்

 

கொடி பிடிக்கும் கூட்டம் முன்

கோடி பலம் கொண்டு அவள்

அடியெடுத்து நடப்பாள் -இது

முடியாது தொடரும்

https://www.madawalaenews.com/2022/02/blog-post_628.html

சினிமாவில் நாயகியை

சீனிமாவாய் ருசிப்பது போல்

எனை ரசிக்க வேண்டுமென்று

எண்ணுகிறாயா எனக் கேட்பாள்

 

அடுத்த இன ஆடை பற்றி

எடுத்தெறிந்து ஏச மாட்டாள்

உடுத்திருக்கும் தன் உடையை

தடுத்தவரை தான் எதிர்ப்பாள்

அடுத்த இன ஆடை பற்றி

எடுத்தெறிந்து ஏச மாட்டாள்😜

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and text

அல்லாஹு அக்பர்....  அல்லாஹு அக்பர்....  அல்லாஹு அக்பர்....

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இவர்களது பாரம்பரிய உடை இதுவா? இந்த ஆடை பண்பாடு  எப்போது? எங்கிருந்து  இலங்கைக்குள் புகுத்தப்பட்டது?

இந்த ஆடை 2002 காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது. இதுபற்றி 2019 இல் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சர்மிளா செய்யத் கொடுத்த செவ்வியல் இருக்கிறது.

இணைப்பு - https://minnambalam.com/public/2019/04/24/21 

ஒருவரின் ஆடை என்பது அவரது தெரிவு உரிமை. அதில் எவரும் அதிகாரம் செய்யத் தேவையில்லை. 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, shanthy said:

இவர்களது பாரம்பரிய உடை இதுவா? இந்த ஆடை பண்பாடு  எப்போது? எங்கிருந்து  இலங்கைக்குள் புகுத்தப்பட்டது?

இந்தக்கேள்விக்கும்

40 minutes ago, shanthy said:

ஒருவரின் ஆடை என்பது அவரது தெரிவு உரிமை. அதில் எவரும் அதிகாரம் செய்யத் தேவையில்லை. 

இந்தப் பதிலுக்கும் ஏதாவது தொடர்புண்டா? தெரிந்தவர்கள் யாரும் விளக்குங்களேன் ....

சர்மிளாவே இது தமது பாரம்பரிய உடை என்று சொல்லவில்லை, மூளை சலவை செய்து புகுத்தப்பட்டது என்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய நாட்டு முஸ்லீம்கள்  பெண்கள் சர்வசாதாரணமாகவே வாழ்கின்றார்கள்.
அல்பேனியா,ருமேனியா,பொஸ்னியா என பல நாடுகளை சொல்லலாம்.நோன்பு தொடக்கம் சகல முஸ்லீம் வழிமுறைகளையும் பண்டிகைகளையும் செவ்வனே கடைப்பிடிக்கின்றார்கள்.
அரைவாசி துருக்கி கொஞ்சம் வித்தியாசம் முக்காடு போட்டுக்கொண்டுதான் திரிவினம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2022 at 02:45, colomban said:

அவள் ஒரு தொடர் கதை

++++++++++

Mohamed Nizous

சினிமாவில் நாயகியை

சீனிமாவாய் ருசிப்பது போல்

எனை ரசிக்க வேண்டுமென்று

எண்ணுகிறாயா எனக் கேட்பாள்

முகமட் அணுவணுவாக நாயகியரை சினமாவில் சீனிமாவாக ரசித்து ருசித்திருக்கிறார்.🤪

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா ..இங்கு பிரச்சுனை ஹபாயா அல்ல...அதை தமிழன் சொல்லக்கூடாது..இததுதான்...பாடசாலை..ஒழுக்கம் பேணுமிடம் ...நடை ,உடை ,பாவனையில் ஒரு ஒழுங்கு முறையிருக்கும்...இதற்கு சண்முகாவும் விதி விலக்கல்ல...இது ஒரு பாடசாலையில் நடந்த விடையம்...அது தமிழன் செய்தது..ஆனால் நாடு முழுவதிலும் முசுலிம் சமூகத்திற்கே கெடுதி நடக்கிறது...அதாவது பாடப்புத்தகத்தையே மீளெடுத்து..கிழித்து  பாடத்தைய்யே மாற்றும் விடையம் நடக்கிறது...இது பற்றி ஒரு முசுலிம் கதைக்கிறானா..இல்லை ஒரு ஆர்ப்பாட்டம் இல்லை...ஒரு எம்பி மூச்சு விட்டானா..இல்லை ஒரு யூ ரியூப்புசனலில் கதைத்தார்களா ..இல்லை..நடக்காது அது சிங்களம்....அபாயா தமிழ் ..இதற்கு முண்டு குடுக்கும் தமிழனோ ..தமிழியோ...சிந்திக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாலி said:

முகமட் அணுவணுவாக நாயகியரை சினமாவில் சீனிமாவாக ரசித்து ருசித்திருக்கிறார்.🤪

சினிமாவில் மட்டுமல்ல...நேரடியாகவும் செய்வார்...அவரு மதச் சட்டம் 7 கட்டு...முத்தத்திலை வைச்சு முத்தலாக் சொன்னால்...3/4 மணி நேரத்திலை அடுத்த காட்டு...5 நாளிலை அடுப்படியிலை முத்தலாக்கு சொன்னால் ..அடுத்த ஒருகட்டு...இப்படியே தொடர்கதை....விட்டவ போய் பள்ளியிலை முறையிட்டல் அவை ரூம்போட்டு ..ஒரு ஆளை அரேஞ்பண்ணி கிளீன் பண்ணிவிட்டு பழையபடி பழம் கணவரிடம் அனுப்புவினம்...

இதுகளை மறைக்கத்தான்...ஆள் மூடி உடை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்ப்பனர் போட்டிருகிற பூநூலை களட்டி எறிய எல்லாம் சரிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஆடைக்கு வந்த சோதனை.. கர்நாடகமும் கலவரமா கிடக்கு..😢

  • கருத்துக்கள உறவுகள்

காலையும் மாலையும் கடவுளை வணங்கு  என்று சிறுவயத்தில் அறிந்ததை இன்றளவும் கைக்கொள்கிறேன்.
 காலை வணக்கம் செலுத்தி அணியும் திருநீறு அலுவலகத்திலும் தொடர்ந்திருக்கும்  தானாக மறையும் வரை- ஒருவரும் ஒன்றும் செல்வதில்லை..


 இதே இது,   இப்ப நான் ஒரு கருப்பு Over all  ஐ தலை இலிருந்து கால் வரை போட்டு கண்கள் இருக்கும் இடத்தில் இரண்டு ஓட்டை மாத்திரம் விட்டு அலுவலகம் போனேன் என்றால்,  உடுப்பு தெரிவு எனது உரிமை என்றும் பினாத்தினேன் என்றால்,  அடுத்தநாள் சீட்டு அநேகம் கிழியும்.


 உனது கைத்தடியை சுழற்ற உனக்கு உரிமை இருக்கு ஆனால்  நன்றாக கவனித்துக் கொள் - அது மற்றவரின் மூக்குக்கு அருகே போகக் கூடாது ..


தடியை வூட்டில வெச்சி என்ன பலாய்க்கும் சொழட்டிக்கோ ஆனா ஏன்யா,  ஏம்மா,   சண்முகாவிலே வந்து தான் சுழட்டுவேன் அப்பிடீன்னு அடம்ஸ் பொடிச்சுக்கிறே …


எங்க மக்காள்  சேர்த்து வச்ச அறிவெல்லாம் பொய்த்து -  சொம்மா பெனாத்திட்டிருக்கீங்க….

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் தமிழக மீன் கொள்ளையர்களின் செயற்பாடுபோலத்தான். அடுத்தவன் வீட்டுக்க போய் களவெடுத்திட்டு வீட்டுக்கரனையே பேயன் விசரன் ஆக்கிறது.  

இந்த ஆசிரியை ஏன் ஓர் இந்து கல்லூரிக்கு போய் படிப்பிக்க ஒற்றைக் காலில் நிற்கின்றா? ஏதாவது ஒரு முஸ்லிம் பாடசாலைக்கு நல்லெண்ண நோக்கில் மாறி இருக்கலாம். இங்க வந்துதான் மீன் கொள்ளையடிப்பம் என்று நிக்கிறா தொப்பூழ்க் கொடி உறவுகள் போல!

இந்த முஸ்லிம் ஆசிரியையின் பின் நின்று இயக்குபவர்கள் அரசியல்வாதிகள் அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று தான் நினைக்கின்றேன். இந்த ஆசிரியையை அப்படியே வர விட்டிருக்கலாம். கொஞ்சக் காலம் ஒரே பக்கமாக இருந்த சிங்களவர்களும் இஸ்லாமியரும் (அரசியல்வாதிகள் மற்றும் பிக்குகள்) அடிபட்டு கடிபட சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனாங்கள் இப்ப தேவையில்லாமல் களத்தில் குதித்து இருக்கின்றோம்.  இது சாதாரண முஸ்லிம் மக்களின் மனங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் நஞ்சை விதைப்பதற்கு வழிசமைத்து விட்டது.  தமிழருடன் சேர்ந்து வாழமுடியாது சிங்களவரின் காலை நக்கியாவது பிழைத்துக்கொள்ளலாம் என்ற அரசியலை எடுத்துச் செல்வது அவர்களுக்கு இலகுவாகின்றது.

இப்பவும் பெரும்பான்மையான சாதாரண முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்வதையே விரும்புகின்றார்கள் என நான் நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

அய்யா ..இங்கு பிரச்சுனை ஹபாயா அல்ல...அதை தமிழன் சொல்லக்கூடாது..இததுதான்...பாடசாலை..ஒழுக்கம் பேணுமிடம் ...நடை ,உடை ,பாவனையில் ஒரு ஒழுங்கு முறையிருக்கும்...இதற்கு சண்முகாவும் விதி விலக்கல்ல...இது ஒரு பாடசாலையில் நடந்த விடையம்...அது தமிழன் செய்தது..ஆனால் நாடு முழுவதிலும் முசுலிம் சமூகத்திற்கே கெடுதி நடக்கிறது...அதாவது பாடப்புத்தகத்தையே மீளெடுத்து..கிழித்து  பாடத்தைய்யே மாற்றும் விடையம் நடக்கிறது...இது பற்றி ஒரு முசுலிம் கதைக்கிறானா..இல்லை ஒரு ஆர்ப்பாட்டம் இல்லை...ஒரு எம்பி மூச்சு விட்டானா..இல்லை ஒரு யூ ரியூப்புசனலில் கதைத்தார்களா ..இல்லை..நடக்காது அது சிங்களம்....அபாயா தமிழ் ..இதற்கு முண்டு குடுக்கும் தமிழனோ ..தமிழியோ...சிந்திக்க வேண்டும்

பிரச்சனை என்னவென்றால்; இவர்களோ பலுகிப்பெருகி தாம் நாட்டையாளலாம் என்கிற கனவு, அதற்கு சிங்கள பேரினவாதம் அனுமதிக்காது ஆகவே தாங்கள் பெருகுமளவும் சிங்களத்தின் கவனத்தை திசை திருப்புவதற்கு தமிழன்பக்கம் கவனத்தை திருப்பி வைத்திருப்பதற்கு இப்படி எதையாவது தூக்கிக்கொண்டு திரிவது. அவர்களோ தமிழனை அழிக்க வெளிக்கிட்டு மாட்டுப்பட்டு முழிக்கிறார்கள். ஆகவே இவர்களை வைத்து இருக்கிற மிச்ச தமிழரையும் ஒழித்துக்கட்டிவிட்டு இவர்களை எப்படி சமாளிக்கவேண்டும் என்பது அவனுக்கு நல்லாவே தெரியும். காலங்காலமாய் இவர்களை வைத்து காரியங்களை கனகச்சிதமாய் முடிக்கிறவனுக்கு தெரியாதா இவர்களை மடக்கிற வழி?

  • கருத்துக்கள உறவுகள்

மூளை இறந்தால் அதனையே மருத்துவ ரீதியாக மரணம் எனப்படுகிறது, அந்த மூளையின் இயக்கம் இதயத்துடிப்பில் அடங்கியுள்ளது, மூளை மட்டுமல்ல உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் இதயத்தின் செயற்பாட்டிலே உயிர் வாழ்கிறது.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் புள்ளியாகவுள்ள மணலாற்றில் சிங்களம் சிங்கள குடியேற்றம் மூலம் தமிழீழ கோட்பாட்டை தகர்க்க பூகோள ரீதியாக வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள், இதன் முக்கியத்துவம் தெரிந்துதான் தமிழர் தரப்பு மணலாறை இதய பூமி என அழைக்கிறார்கள்.

மணலாற்றுக்குடியேற்றத்தின் பின்னர்தான் தமிழரையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது சிங்களம், இந்த நடவடிக்கை ஒரு கோட்பாட்டு  ரீதியான நடவடிக்கை.

இதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

கருணா வட கிழக்கு பிரிப்பதற்கும் தமிழ் முஸ்லீம் மக்களின் உறவுகளை கெடுப்பதற்கும் சிங்களத்திற்கு உதவி செய்வதன் மூலம் தமிழீழ கருத்தியலை கோட்பாட்டு ரீதியாக அழித்தொழிப்பதற்கு மூயற்சி செய்தார் ( செய்து கொண்டிருக்கிறார்).

இப்போது புதிதாக முளைத்துள்ள தமிழ்தேசிய கருத்தியலை சிதைக்கும் கோட்பாட்டு ஆயுதம் இந்திய தமிழ் மீனவர் பிரச்சனை இதனை இலகுவாக அரச மட்டத்தில் தீர்க்கலாம் ஆனால் சம்பந்த பட்ட தரப்புகள் விரும்பவில்லை.

முஸ்லீம் மக்களின் ஆடை அவர்களின் வாழ்வின் ஒரு பகுதி, அதனை உணர்ந்து கொள்ளவேண்டும், அதே போல் வட கிழக்கு, முஸ்லீம் மக்களின் தாயகம். வட கிழக்கில் ஒரு அங்கமாக உள்ள முஸ்லீம்களையும் அவர்களது கலாசாரத்தினையும் வரவேற்கும் மனப்பான்மை பெரும்பாலான மக்களுக்கு உள்ளதாக நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அபாயாவை வைத்து நடக்கும் அழிவு அரசியல்!!

 

AVvXsEi35rhoH4Uv5lLNZ_njxMVXatknszUVL1Tv0pa93qKwMgCn3FsXBk_6x51qm8fZDhkBEyF0nZaqtlRCk_w__GPVneeIDY7WyWKDK1bVyAl23ptMeBHQpv97ZPPm9cPxQIrqMsOIv6xT5vbigp9JIdjBoJfGIjLCL2W9h2yZg9wzLlIEgowqbXL_Ko1LFQ=w446-h206

 

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றும் சகோதரி பஹ்மிதா ரணிஸ் அவர்கள் தமது இஸ்லாமிய மத அடையாள ஆடையான அபாயா அணிந்து பாடசாலைக்கு வருவதை எதிர்த்து பாடசாலை நிருவாகத்தினரும், மாணவிகளும் போராட்டங்களை நடத்துகின்றனர். அபாயா இலங்கையில் தடை செய்யப்பட ஆடை அல்ல. முஸ்லீம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பணிக்கு செல்வது  இலங்கையின் கல்வி அமைச்சின் விதிமுறைகளுக்கு எதிரானதும் அல்ல.

மனிதர்கள் செய்யும் வேலைகள் அவர்களின் உடைகளை தீர்மானிக்கின்றன. அவர்கள் தாம் வாழும் பகுதிகளின்  கால நிலைகளுக்கும், பருவங்களுக்கும் ஏற்ப ஆடைகளை அணிகின்றார்கள். சாதி, மதம், பண்பாடுகள், அரசியல் மாற்றங்கள், பாலின வேறுபாடுகள் என்பன மனிதர்களின் உடைகளில் பிரதிபலிக்கின்றன. மேலும் ஆடைகள் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டே வந்துள்ளன. மாறும் என்ற சொல்லை தவிர மற்றவை எல்லாமே மாறும் என்பதற்கு ஏற்ப ஆடைகளின் வடிவங்களும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன,

 

உடை என்பது தனி மனித சுதந்திரம். இலங்கையில் தடை செய்யப்படாத அபாயா ஆடையை சகோதரி பஹ்மிதா ரணிஸ் அவர்கள் அணிந்து பணிக்கு செல்வதை எதிர்த்து போராட்டம் நடத்துவது  என்பது அவரின் அடிப்படை உரிமைகளை மதிக்காத சர்வாதிகாரப்போக்கு.  தமிழ் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பாசிச இலங்கை அரசினால் ஒடுக்கப்படுகிறார்கள். அரசியல் உரிமைகள், பண்பாட்டு உரிமைகள், வேலை வாய்ப்புக்கள் என்று வாழ்வினது சகல கூறுகளிலும் தமிழ் மக்கள் இலங்கை அரசினால் திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறார்கள். இவ்வாறான சூழலில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் இன்னொரு மதத்தை, பண்பாட்டை சேர்ந்த மக்களின் பண்பாடுகளை எதிர்த்து நிற்பது மிகவும் வேதனைக்குரியது.

 

2019 உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் பின்பு முகம் முழுவதையும் மூடும் உடைகளை அணிந்து பொது இடங்களுக்கு செல்வதை ஒரு அவசர சட்டத்தின் மூலம் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தடை செய்தார். முகத்தை முடி அடையாளங்களை மறைக்கும் ஆடைகளை தடை செய்வதாக அந்த சட்டம் சொல்கிறது. இசுலாமிய மக்களை குறி வைத்து இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் புர்கா மற்றும் ஹிஜாப்  ஆடைகள் தடை செய்யப்படுகின்றன என்று இந்த சட்டம் குறிப்பாக சொல்லவில்லை. மேலும் அபாயா என்பது முகத்தை மூடி மறைத்து உடுத்தும் உடையும் அல்ல. ஆடைகளை குறிப்பிட்டு விளக்கமாக அந்தச் சட்டம் சொல்லாத காரணத்தினாலேயே அபாயாவுக்கு எதிராக திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் போராட்டங்கள் எழுந்திருக்கின்றன.

 

AVvXsEgMWxJrigoZTl7kx8dUBXvWUcr7o7e9DCfKyyyVriPBPOHez1G_ntJ-IOFwZ-b3Ik9w6RdUnPNOtCGYYSZSdFDeka2hcO59wVZ_MzXShSJ8Kra06IB9wHFIGJ2ilr03IapA3iPRJ3a0M689icspo7ZNIS7lSJhjpUw5sMSdVa8aa-jFZYrVt6h794Gn5A=s320

இசுலாமிய பாடசாலைகளில் மற்ற மதத்தினர்களின் அடையாளங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்னும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அந்த விமர்சனங்கள் உண்மை தான். பௌத்தம், சைவம், கிறிஸ்தவம், இஸ்லாமியம் என்று இருக்கும் எல்லா பாடசாலைகளிலும் அவை பொதுவான அரச பாடசாலைகளாக இருந்தாலும் கூட மற்றைய மதத்தினரையும், இனத்தவரையும் வேறுபடுத்தி ஒதுக்குவது என்பது நீண்ட காலமாகவே நடந்து வருகிற வேதனைக்குரிய போக்காக இருக்கிறது.  சிறு வயதிலேயே மாணவர்களின் மனங்களில் பிரிவுகளையும், வெறுப்புகளையும் உண்டாக்கும் மதங்களை கல்வி சூழலில் இருந்து அகற்றுவதே இதற்கான தீர்வாக அமையும்.

 

பஹ்மிதா ரணிஸ் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அது போன்றே முஸ்லீம் பெண்களுக்கான ஆடைகள் என்று சொல்லப்படும் உடைகளை அணியாத இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அல்லது அந்த மதத்தில் இருந்து விலகிய மதமற்ற பெண்கள் மீது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் பொதுவெளியில் பரப்பப்படும் அவதூறுகளும் கண்டிக்கப்பட வேண்டும். பெண்களை இத்தகைய மதவாத, ஆணாதிக்க கூச்சல்கள் பொதுவெளியில் அவமானப்படுத்திய போது முஸ்லீம் சமூகத்தில் இருந்து மிக சில குரல்களே மதவாதிகளுக்கு எதிராக எழுந்தன. இன்று பஹ்மிதா ரணிஸ் அவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து பேசும் பலர் கூட அன்று மதவாத சேற்றுக்குள் நின்று கொண்டு பெண்களை நோக்கி கல்லெறிந்தவர்கள் தான். 

 

இலங்கை அரசு இனங்களையும், மதங்களையும் வைத்து மக்களை பிரித்து தமது மக்கள் விரோத சர்வாதிகார அரசியலை நடத்துகிறது. இலங்கை அரசுக்கு எதிராக ஒடுக்கப்படும் இலங்கை மக்கள் ஒன்றுபடுவது ஒன்றே எமக்கான விடுதலையை பெற்றுத் தரும். அபாயாவை வைத்து நடக்கும் அழிவு அரசியல் போன்ற பிரிவினைப் போக்குகளை நிறுத்தி ஒற்றுமைக்கான பாதையை நோக்கி முன்னேறுவோம்.

 

http://poovaraasu.blogspot.com/2022/02/blog-post_9.html

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.