Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

அன்பான தமிழீழ மக்களே,

நாம் இங்கு பக்கச்சார்பில்லாமல் வேடிக்கை மட்டும் பார்ப்போம். ஏலுமென்டால் இரண்டு பக்கமும் பாடுவோம். அவ்வளவுதான். தயவு கூர்ந்து எமக்குள் கன்னை பிரிந்து அடிபட வேண்டாம். 

இதுதான் என்ர கொள்கை!

நான்வந்து ஓடுற மீனில நழுவுற மீன் பாருங்கோ🤣🤣

 

 

 

17 hours ago, கிருபன் said:

தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்டதற்கு முதலில் தமிழர்கள்தான் காரணம். போராட்டத்தில் பங்குபற்றாமல் புலம்பெயர்நாடுகளில் இருந்து நிதி கொடுத்தால் போதும் என்ற நிலைதான் காரணம். அந்த குற்றவுணர்வை மறைக்க மற்றைய எல்லோரையும் குற்றம்சாட்டி மனச்சாட்சியின் கேள்விகளில் இருந்து இலகுவாகத் தப்பிக்கும் உளவியலையும் புரிந்து கொள்ளமுடிகின்றது.

போராளிகளை நிர்வாணப்படுத்தி கொன்ற காணொளிகளைப் பார்த்துவிட்டு கோபம் கொண்டு சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினாமோ? இல்லைத்தானே! 

 

 

மணியான முத்தான கருத்துக்கள். 👌👌👏👏

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 477
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் ரஞ்சித், கிருபன்... 👌
உங்கள் அளவுக்கு விபரங்கள் சேர்த்து பக்குவமாக இங்கே இருக்கும் நம்மவர்களுக்கு தெளிவூட்டும்  வேலையை என்னால் செய்ய முடியாது. 
என்னதான் ஆழமான நல்ல கருத்துக்களை விக்கிரமாதித்தர்கள் விதைத்தாலும் வேதாளங்கள் மீண்டும் மீண்டும் மரத்தில் ஏறி குத்துவதை தவிர்க்க முடியாது!!

என்ன செய்ய; அப்படி இருந்தால் தானே  யாழ்களம் எனும்  அம்புலிமாமா பக்கம் புரளும்
   
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு நியாயமான சர்வஜன  வாக்கெடுப்பின் அடிப்படையில் தான் உக்ரைன் தனி நாடாக பிரிந்து போனது. 
கேணைத்தனமான உப்புக்கு சப்பு இல்லாத,  காரணங்களை சொல்லி சொல்லியே புட்டின் பிரிந்து போன ஒவ்வொரு நாட்டையும் மிகக் கொடூரமான யுத்த அழிவுகளை ஏற்படுத்தி திரும்பவும் தனது கைப்பிடிக்குள் கொண்டுவந்திருக்கிறார். 
அந்த வரிசையில் இப்போது உக்ரைன் நாட்டு மக்களும், அவர்களது சுய ஆட்சி  கனவும் களையப்பட இருக்கிறது. ஆனால் அவர்கள் அவ்வளவு இலகுவில் அடிபணிந்து போகும் மக்கள் கூட்டம் அல்ல.
எம்மைவிட அவர்களுக்கு அவர்களின் நாட்டின் மேல் பற்று இருக்கிறது. இப்போதும் கூட தன்னிச்சையாக ஆண்களும் பெண்களுமாக ஆயுதங்களை தூக்கி அவர்களது நகரங்கள், கிராமங்களை காக்கும் கடமைக்கு விரைகிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் பலர் இணைந்து கொண்டு இருக்கிறார்கள்.
புலம்பெயர் உக்ரேனியர்களின் செயல்பாடுகள் கடந்த 3 நாட்களாக தீயாக இயங்குகிறது. வியக்கும் அளவுக்கு அவர்களது செயல்பாடுகள் இருக்கிறது. 

தனிநாடு கேட்டு பிரிந்து செல்ல போராடும் நாம்... பொதுஜன வாக்கின் மூலம் பிரிந்து செல்லும் வாய்ப்பை கேட்கும் நாம், சுயநிர்ணய ஆட்சி உரிமை உள்ளவர்களாக உலகுக்கு காட்ட முனையும் நாம் ... யுத்தத்தின் கொடூரத்தால் கொத்து  கொத்தாக உயிர்களை பலிகொடுத்த நாம்...  இன்று என்ன செய்கிறோம் 
எய்தவனை விட்டு விட்டு அம்பை நோகிறோம். 

புட்டினின் கேடுகெட்ட மிலேச்சத்தனத்தை "ஆதரிக்காத" மாதிரி ஆதரிக்கிறோம்.
புட்டினின் பற்றிய ஒரு CBC வீடியோ ... முடிந்தால் பாருங்கள்.  

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

லிபியா.ஈராக்,ஆப்கானிஸ்தான்,சிரியா போன்ற நாடுகளுக்கு விரைந்த நேட்டோ ஏன் இலங்கைக்கு செல்லவில்லை?

அண்ணா....

ஆப்கானிஸ்தான் - நேட்டோ போனதற்கான காரணம் 9/11 பயங்கரவாத தாக்குதல். (அமேரிக்கா அங்கத்துவ நாடு) கோரிக்கை.
ஈராக் - காரணம் துருக்கி, மற்றும் போலந்து (அங்கத்துவ நாடுகள்) கோரிக்கை 
இது அடிப்படை ... அது தவிர வேறு நோக்கங்களும் இருக்கலாம். 

ஆனால் தேவையில்லாத இடங்களில் (இலங்கையில்) நேட்டோ எதுக்கு மூக்கை நுழைப்பான்?   

4 hours ago, ரஞ்சித் said:

ஓ, இப்படியொரு வியாக்கியானம் இருக்கிறதா? ஒரு மக்கள் கூட்டம் வாழும் நாடு ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்தால், அந்த மக்களை எவரும் கொல்லலாம். அப்படிக் கொல்லப்படும்போது அம்மக்கள் தம்மைக் காப்பாற்றும்படி யாரையும் கேட்கக் கூடாது, ஏனென்றால் அதற்கான தார்மீக உரிமை அவர்களுக்கில்லை.  இந்த நியதி ஆயுதம் உற்பத்திசெய்யும் நாட்டு மக்களுக்கு மட்டும்தான் செல்லுபடியாகுமா? ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் மக்களுக்கும் இந்த நியதி பொருந்தும்போலத் தெரிகிறது, அதனால்த்தான். ஆயுதம் விற்றவன், ஆயுதத்தினால் சாவான். ஆயுதம் தூக்கினவன் அதே                ஆயுதத்தால் சாவான் என்று கருதுகிறீர்கள் போலும். அதுதான் 2009 இல் எம்மை எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனென்றால், அப்படி கேட்கும் தார்மீக உரிமையும் எமக்கு இருக்கவில்லை  என்று நீங்கள் கூறவருகிறீர்கள் போலத் தெரிகிறது.

 

இந்த நேட்டோ கொலை இயந்திரம் பற்றி நீங்கள் சொல்லுங்களேன், கேட்கலாம். இதுவரை நேட்டோ கொலை இயந்திரம் அழித்த நாடுகளை, இனக்கொலை புரிந்த மக்கள் கூட்டத்தைப் பட்டியலிடுங்களேன். அதுசரி, சனநாயகத்தை மதிக்கின்ற, மக்களின் சனநாயக உரிமைகளை தனது இரு கண்களாகவும் கட்டிக் காக்கிற ரஸ்ஸியா எனும் உலகின் மனித விழுமியங்கள் செழித்து வளரும் நாட்டை விட்டுவிட்டு கனடா எனும் நேட்டோ கொலைகாரக் கும்பல்களின் பகுதியில் ஏன் வாழ்ந்து கஷ்ட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்? எப்போது அந்த ஒப்பற்ற நாடான ரஸ்ஸியாவுக்குச் செல்வதாக உத்தேசம்?

அப்போ ரஸ்ஸியா செய்வது உக்ரேன் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதா? 1990 இல் சோவியத் ஒன்றியம் உடைந்து தனியான சுதந்திர நாடுகள் உருவாகிவிட்டன. அந்த நாடுகள் தாம் விரும்பும் அமைப்பில் இணையவும் விரும்பாதுவிட்டால் விலகவும் அவற்றிற்கு சகல உரிமையும் இருக்கிறது. ஏனென்றால் அவை சுதந்திரமான, இறைமையுள்ள தனியான நாடுகள். அந்த நாட்டு மக்களின் விருப்பத்தின்படிதான் அந்த நாடு பயணிக்கும், பக்கத்துநாட்டின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல. 

நேட்டோ கொலை இயந்திரம் செய்வது தனது பிரதேசத்தை அத்கிகரிப்பதென்று நீங்கள் கருதினால், புட்டின் செய்வதும் அகண்ட சோவியத் ஒன்றியத்தை தனது ஆக்கிரமிப்பின்மூலம் உருவாக்குவதே. 

இவ்வளவு நியாயத்தையும் நீங்கள் அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளின் புதைகுழிகளுக்கும் மேல் நின்று கொண்டு வலதுசாரி தலைவர் ஸ்கொட் மொரிசனின் ஆட்சியில் வாழ்ந்து கொண்டு எழுதுகின்றீர்கள்.

உங்களுக்கு வேண்டும் என்றால் அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் இரட்சிப்பர்களாக இருக்கட்டும். 

அமெரிக்கா மற்றும் அதன் நேச அணிகளால் ஈராக்கில் கொல்லப்பட்ட, லிபியாவில் கொல்லப்பட்ட, ஆப்கனில் கொல்லப்பட்ட குழந்தைகளின் ஆத்மாக்கள் உங்களை மன்னிக்கட்டும்

நன்றி

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் எதிர்க்கும் போராளிகளுக்கு படைகளுக்கு என் தார்மீக ஆதரவு எப்போதும் இருக்கும். 2009 இல் உக்ரேனில் இருந்த ரஷ்ய ஆதரவு அரசு துரத்தப்பட்டு இன்றைய அரசை ஒப்பிடுவது தவறு. இன்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் முட்டுகொடுக்கும் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்கும் மனநிலை எங்கிருந்து வந்தது.

புலிகள் மீது வான் தாக்குதல் நடாத்திய உக்கிரேனிய கூலிப்ப்டை வானோடிகளை சுட்டிக்காட்டும் பலருக்கு புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பல உக்கிரேனிய அரச படைகளால் வழங்கப்பட்டவை என்பது தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

இன்று தங்கள் நாட்டை காப்பதற்காக பாம்புத்தீவில் உயிரையும் கொடுத்து போராடிய நாட்டுப்பற்றாளர்கள் எம் மனதில் உயர்ந்து நிற்கிறார்கள். 

ஆக்கிரமிப்புக்கு ஆதரவு வழங்கும் எவருமே ஆக்கிரமைப்பை எதிர்க்க தகுதியற்றவர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரஷ்யனுடன் நிற்கிறேன், டான்பாஸ் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தினார், அவர்கள் மே 2014 இல் அதை வென்றனர், ஆனால் மேற்கத்திய மற்றும் நேட்டோவால் ஆதரிக்கப்படும் உக்ரேனிய ஜனாதிபதி, அவை எதையும் கேட்க விரும்பவில்லை, எனவே ரஷ்ய மொழிபேசும் உக்ரேனிய மக்களின் விருப்பத்தை செயல்படுத்த ரஷ்யர்கள் அங்கு சென்று உள்ளனர்... 

இப்போது நேட்டோ அவர்களைக் காட்டிக் கொடுத்து கையும் விட்டதும் உக்ரைன் ஜனாதிபதி இறுதியாக விழித்துக்கொண்டு புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்...

இப்படித்தான் நாங்கள் சுதந்திரத்துக்காக போராடியபோது xஎன்ற ஒரு நாடு எங்களுக்காக இலங்கையில் புகுந்து யுத்தத்தில் ஈடுபடும்போது(அந்த நாட்டுக்கு சொந்த தேவைகள் சில இருந்தாலும் எங்களுக்கு உதவுதால்) இப்படித்தான் ஜயகோ இலங்கை அப்பாவி மக்கள் x நாட்டினால் கொல்லப்படுகிறார்கள் நாங்கள் x நாட்டின் ஆக்கிரமிப்பை வெறுக்கிறோம் என்று இங்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்போர் வெள்ளையும் சொல்லையுமாக காட்டிக்கொள்ள நடுநிலை நக்கிகளாக தம்மை மாற்றிக்கொள்வார்கள் போல..

இந்தியாவில் காஷ்மீர் நாகலாந்து மியான்மரில் ரோகிங்யா சைனாவில் திபெத்மற்றும் முஸ்லீம்கள் துருக்கியில் குர்தீஸ்மக்கள் என்று எங்கெல்லாம் சிறுபான்மை சமூகங்கள் வசிக்கின்றனரோ அங்கெல்லாம் அவர்களுக்கு தனிநாடு உருவாகவேண்டும்.. இந்தியா தனித்தனி மாநிலங்களும் நாடுகள் ஆகவேண்டும்.. இவை எங்கு நடந்தாலும் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுக்கவேண்டும்.. ஏனென்றால் எமக்குத்தான் தெரியும் பெரும்பான்மையினரால் ஆளப்படும் சிறுபான்மை மக்களின் வலி.. நாடு என்ற பெயரில் உலகம் பெரும்பான்மையினாரால் அமைக்கப்பட்ட அரசு சொல்வதை மட்டும்செவிசாய்க்கும் அங்கிருக்கும் சிறுபான்மையினருன் குரல் விழலுக்கு இறைத்த நீரே… உலகில் எங்கெல்லாம் சிறுபான்மை இனமக்கள் தம்மை தாமே ஆள விரும்புகின்றனரோ அங்கெல்லாம் உலகம் தலையிட்டு ரஷ்யா செய்வதுபோல் அவர்களே அவர்களை ஆள உதவி செய்யவேண்டும்.. 

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

@நிழலி

ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் உக்கிரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும், அழிவுகளையும் எதிர்ப்பது மேற்கு நாடுகளுக்கு வெள்ளையடிப்பது என்று அர்த்தமல்ல. ஒடுக்குமுறையாளர்களை எதிர்ப்பதும், அடக்குமுறைக்கு ஆளாகுபவர்களுக்கு ஆதரிப்பதும், அடக்குமுறைகளுக்குள் இருக்கும் தமிழராகிய எங்களிடம் இருக்கவேண்டும். நேட்டோ, ரஷ்யாவின் மீளெழுச்சி என்று குழப்பிக்கொள்ளவேண்டியதில்லை.

நான் தினமும் World Socialist Web Site தளத்தைப் பார்ப்பதுண்டு. அதனால் மேற்கு நாடுகளின் மீதான இடதுசாரிப் பார்வையையும் தெரிந்துகொண்டுதான் இருக்கின்றேன். போரை எதிர்க்காமல் கள்ளமெளனம் காக்கும் இடதுசாரிகளின் கருத்துக்களையும் பார்க்கவும் முடிகின்றது.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கண்டிக்காமல், ஒரு ஜனநாயக நாட்டை வலிந்து ஆக்கிரமிப்பதை எதிர்க்காமல் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் தமிழர்கள் ஒடுக்குமுறையாளர்கள் பக்கம் இருக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம். உலக அரசியல் காரணங்களை எல்லாம் சுற்றிவளைத்துச் சொன்னாலும், சர்வாதிகாரி பூட்டினை நியாயப்படுத்தமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

Good Bye GIFs | Tenor

உலக வரைபடத்தில் இருந்து.... உக்ரைன் காணாமல் போகும் என்று.... 
சில உள்ளூர் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். உக்ரைனுக்கு ... நல்லாய் வேணும்.  👍 😛
எங்களுக்கு குண்டு போட்ட உக்ரைனுக்கு...  Good bye. 🤣 

உக்ரைனுக்கு சமாதி கட்டினால்  பிறகுதான், ரஷ்யாவுக்கு இருக்கு ஆப்பு. 😂
2022´ம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு... இனிப்பான, செய்தியை கொண்டு வந்துள்ளது. 💖

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சியா.. உக்ரைன் எல்லாமே ஈழத்தமிழர்களின் அழிவுக்கு துணை போயின. அதே போல் சீனாவும்.. அமெரிக்காவும்.. ஹிந்தியாவும்.. பிரிட்டனும்.. ஏன் ஜேர்மனியும் தான்.. மொத்தமாக 25 மேல் நாடுகள் ஈழத்தமிழர்களின் இன அழிப்பில் சிங்களத்தோடு நின்று பங்கெடுத்தன.

இன்றும் ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அடிப்படை மனித உரிமை மீறல்களை.. போர்க்குற்றங்களை கூட மூடி மறைப்பதில் இந்த நாடுகள் எல்லாமே கூட்டுப் பங்காளிகாளகவே உள்ளன.

ஆனால்.. உக்ரைனில் கட்சி பிரிஞ்சு அடிபடுகிறார்கள்.

எமது அழிவை உக்ரைன் மக்கள்.. ரஷ்சிய மக்கள்.. எப்படி ரசிச்சு ருசிச்சார்களோ.. நாமும் அதை தான் செய்ய முடியும். '

இன்றைய உக்ரைன் யுத்தமாகட்டும்.. ஜோர்ஜிய யுத்தமாகட்டும்.. சேர்பிய யுத்தமாகட்டும்.. எல்லாவற்றிற்கும் மூலக் கால்.. கேர்பச் சேவ். புட்டின் அல்ல.

இன்று ரஷ்சியாவை நேட்டோ நெருங்கி ஏவுகணைகளை நிறுத்தி வைத்துவிட்டு சவால் விடக் காரணமான.. கேர்பச் சேவின் நடவடிக்கைகள் தான்.. இந்த நிலைக்கு தள்ளி உள்ளது. 

மேற்கு நாடுகளின் வசதி வாய்ப்பு மாய வலைக்குள் சிக்கி சீரழியும்.. உக்ரைனின் இன்றைய காமடிப் பீசு சனாதிபதி உள்ளடங்க.. மேற்கு நாடுகள்.. ரஷ்சியா மீது திணித்த போர் தான் இது. புட்டின் போர் அல்ல இது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

யுக்ரேன் நேட்டோ எனும் கொலை இயந்திரத்தில் இணைய முற்பட்டமையே இந்த யுத்தத்தின் அடிப்படை காரணம். 

உண்மை ஆகவே யுத்தத்தின்  அடிப்படை காரணங்கள் மேற்குலகும்.  அமெரிக்காவும் ஆகும் யுக்ரேன் படையணி சோவியத்யூனியன் படையணியிலும் இடம்பெற்றுள்ளார்கள் அந்தவகையில் சோவியத்யூனியன் படை கட்டமைப்பு பற்றி நன்கு அறிந்து இருப்பதால் நேட்டோ வில் யுகரேனை இணையதே என்று புடினின கோரிக்கை சரியானது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இவ்வளவு நியாயத்தையும் நீங்கள் அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளின் புதைகுழிகளுக்கும் மேல் நின்று கொண்டு வலதுசாரி தலைவர் ஸ்கொட் மொரிசனின் ஆட்சியில் வாழ்ந்து கொண்டு எழுதுகின்றீர்கள்.

உங்களுக்கு வேண்டும் என்றால் அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் இரட்சிப்பர்களாக இருக்கட்டும். 

அமெரிக்கா மற்றும் அதன் நேச அணிகளால் ஈராக்கில் கொல்லப்பட்ட, லிபியாவில் கொல்லப்பட்ட, ஆப்கனில் கொல்லப்பட்ட குழந்தைகளின் ஆத்மாக்கள் உங்களை மன்னிக்கட்டும்

நன்றி

 

 

 

உணர்ச்சிவசப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது நிழலி,

அமெரிக்காவோ அவுஸ்த்திரேலியாவோ அந்நாடுகளின் பழங்குடிகளை கொன்றுதான் தமது ராச்சியங்களை நிறுவினார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கான பிராயச்சித்தங்களை இப்போது செய்துவருகிறார்கள்.

அதேபோல ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் அமெரிக்கர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல படுகொலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அதையும் மறுக்கவில்லை.

ஆனால் நான் பேசுவது ஈழத்தமிழினம் சிங்களப் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதுபோல இன்று உக்ரேனியர்கள் ரஷ்ஷியப் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கிறார்கள். ஆகவே நாம் எம்மைப்போன்று ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கும் உக்ரேனியர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதை விடுத்து ஆக்கிரமிப்பாளர்களான ரஷ்ஷியர்களுக்கு ஆதரவாளர்களாக நிற்கிறோம். இதைத்தான் தவறென்கிறேன்.

சில உக்ரேனியர்கள் விமானம் ஓட்டினார்கள், இலங்கைக்கு ஆயுதம் வழங்கினார்கள் என்பதற்காக அந்த ஒட்டுமொத்த மக்களும் அழிக்கப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்தினீர்கள்? ரஷ்ஷியாவை எந்தவகையில் ஆதரித்தீர்கள்? மேற்குலகையும், நேட்டொ கொலைஞர்களையும் விட ரஷ்ஷியர்கள் சிறந்தவர்கள் என்கிற நிலைக்கு உங்களால் எப்படி வரமுடிந்தது? ஒரே சோவியத் ஒன்றியத்திற்குள் வாழ்ந்தாலும்கூட உக்ரேனியர்களை ரஷ்ஷியர்கள் அடிமைச் சிறுபான்மையினராக நடத்தி வந்ததுடன் பல லட்சம் உக்ரேனியர்களை சரித்திர காலத்திலிருந்து படுகொலை செய்துவந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்த்தானுக்குள் செல்லும் முன்னர் 1979 இலிருந்து 1988 வரையான காலப்பகுதியில் சோவியத் ராணுவம் குறைந்தது ஒரு மில்லியன் ஆப்கான் அப்பாவிகளைக் கொன்றது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கூறும் அதே சிரியாவில்  இன்றுவரை போர்க்குற்றவாளி ஆசாத்துக்கு உறுதுணையாகவிருந்து பல லட்சம் அப்பாவி சிரியர்கள் கொல்லப்பட இரசாயண ஆயுதங்களைக் கொடுத்து, ஐ நா வில் அவனைக் காப்பாற்றிவருவது நீங்கள் ஆதரிக்கும் புட்டின் தான் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

சரி, இவை எதுவுமே வேண்டாம். இலங்கைக்கு உக்ரேனினாலும், ரஷ்ஷியாவினாலும் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை விட்டுவிடலாம். இன்றுவரை ஐ நா வில் இலங்கைக்கெதிராக நீங்கள் வெறுக்கும் மேற்குலகினாலும், நேட்டோ கொலைஞர்களாலும் கொண்டுவரப்படும் அனைத்துத் தீர்மானங்களையும் தொடர்ந்து எதிர்த்து, இலங்கைக்கு உதவிவருவது நீங்கள் ஆதரிக்கும் ரஷ்ஷியாவின் புட்டின் தான் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

 ஆம், நான் வாழும் மேற்குலக நாடுகளின் நன்பனான அவுஸ்த்திரேலியாவை நான் ஆதரிக்கிறேன். நான் பிறந்த நாட்டை சிங்களப் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து, எனதினத்தை இனக்கொலை செய்து, எம்மை அடிமைகளாக நடத்தும்போது, எனக்குச் சற்றும் சம்பந்தனேயில்லாத அவுஸ்த்தீரேலியா எனும் முதலாளித்துவ நாடு, எனது மொழிக்காக, இனத்துக்காக, மதத்திற்காக என்னை அடிமைப்படுத்தாது, ஏனைய மனிதர்கள் போல முழு மனிதச் சுதந்திரத்தை அனுபவிக்க எனக்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது. அதனால் அந்நாட்டிற்கு விசுவாசமாகவும், எனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமலும் என்னால் வாழமுடிகிறது.

நீங்கள் எப்படி?

புட்டின் எனும் வரலாற்று நாயகனின், சோவியத் பேரரசின் சக்கரவர்த்தியின் மீதான உங்களின் அபிமானம் அவரின் ஆக்கிரமிப்பை சரியென்று நீங்கள் வாதிடும் அளவிற்கு கொண்டுவந்திருக்கிறது. 

ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தானிலும் கொல்லப்பட்ட சிறுவர்களின் ஆத்மாக்கள் என்னை மன்னிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களின் படுகொலையினை நான் ஆதரிக்கவில்லை. அவர்களின் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடனான போர் அப்பாவிகளைக் கொன்றது அநியாயமே.

இப்போது நீங்கள் ஆதரிக்கும் புட்டின் படைகளால் உக்ரேனில் கொல்லப்படும் குழந்தைகளின் ஆத்மாக்களுக்கு உங்களின் பதில் என்ன?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படித்தான் நாங்கள் சுதந்திரத்துக்காக போராடியபோது xஎன்ற ஒரு நாடு எங்களுக்காக இலங்கையில் புகுந்து யுத்தத்தில் ஈடுபடும்போது(அந்த நாட்டுக்கு சொந்த தேவைகள் சில இருந்தாலும் எங்களுக்கு உதவுதால்) இப்படித்தான் ஜயகோ இலங்கை அப்பாவி மக்கள் x நாட்டினால் கொல்லப்படுகிறார்கள் நாங்கள் x நாட்டின் ஆக்கிரமிப்பை வெறுக்கிறோம்

இந்தக் கருத்தை இங்கே உங்களுடன் சேர்ந்து புட்டினுக்குக் கொம்பு சீவும் நண்பர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள். அதாவது இந்தியா இலங்கைக்குள் புகுந்ததே ஈழத்தமிழனுக்கு ஆதரவாகப் போராடத்தான் எனும் உங்களின் கருத்தை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தியாவில் காஷ்மீர் நாகலாந்து மியான்மரில் ரோகிங்யா சைனாவில் திபெத்மற்றும் முஸ்லீம்கள் துருக்கியில் குர்தீஸ்மக்கள் என்று எங்கெல்லாம் சிறுபான்மை சமூகங்கள் வசிக்கின்றனரோ அங்கெல்லாம் அவர்களுக்கு தனிநாடு உருவாகவேண்டும்.. இந்தியா தனித்தனி மாநிலங்களும் நாடுகள் ஆகவேண்டும்.. இவை எங்கு நடந்தாலும் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுக்கவேண்டும்.. ஏனென்றால் எமக்குத்தான் தெரியும் பெரும்பான்மையினரால் ஆளப்படும் சிறுபான்மை மக்களின் வலி.. நாடு என்ற பெயரில் உலகம் பெரும்பான்மையினாரால் அமைக்கப்பட்ட அரசு சொல்வதை மட்டும்செவிசாய்க்கும் அங்கிருக்கும் சிறுபான்மையினருன் குரல் விழலுக்கு இறைத்த நீரே… உலகில் எங்கெல்லாம் சிறுபான்மை இனமக்கள் தம்மை தாமே ஆள விரும்புகின்றனரோ அங்கெல்லாம் உலகம் தலையிட்டு ரஷ்யா செய்வதுபோல் அவர்களே அவர்களை ஆள உதவி செய்யவேண்டும்.

ஓ, அப்படியா? நல்ல கருத்து. அது எப்பிடி, உக்ரேனை ஆக்கிரமிக்கும் ரஸ்ஸியா செய்வது சரியாகப் படும்போது, உக்ரேனில் இருக்கும் ரஷ்ஷிய சிறுபான்மையின மக்களை உக்ரேன் தனிநாடாக அங்கீகரிக்க மறுப்பது தவறாகத் தெரிகிறது உங்களுக்கு? உக்ரேன் ரஷ்ஷிய சிறுபான்மையினரை தனியாகச் செல்ல விடாதது தவறென்றால், உக்ரேனை ரஷ்ஷியா அடாத்தாக ஆக்கிரமித்துக்கொள்வதும் தவறுதானே?

உலகில் உள்ள எல்லா சிறுபான்மையினங்களும் சுதந்திரம் அடையவேண்டும். இந்தியா துண்டு துண்டாய்      சிதறவேண்டும். ஆனால் ரஷ்ஷியா மட்டும் அகண்ட சோவியத் ராஜ்ஜியத்தை உக்ரேன் உட்பட ஏனைய முன்னாள் குடியரசுகளை வல்வளைத்து உருவாக்கிட வேண்டும். 

என்னையா பிதற்றுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரஞ்சித் said:

ஓ, அப்படியா? நல்ல கருத்து. அது எப்பிடி, உக்ரேனை ஆக்கிரமிக்கும் ரஸ்ஸியா செய்வது சரியாகப் படும்போது, உக்ரேனில் இருக்கும் ரஷ்ஷிய சிறுபான்மையின மக்களை உக்ரேன் தனிநாடாக அங்கீகரிக்க மறுப்பது தவறாகத் தெரிகிறது உங்களுக்கு? உக்ரேன் ரஷ்ஷிய சிறுபான்மையினரை தனியாகச் செல்ல விடாதது தவறென்றால், உக்ரேனை ரஷ்ஷியா அடாத்தாக ஆக்கிரமித்துக்கொள்வதும் தவறுதானே?

உலகில் உள்ள எல்லா சிறுபான்மையினங்களும் சுதந்திரம் அடையவேண்டும். இந்தியா துண்டு துண்டாய்      சிதறவேண்டும். ஆனால் ரஷ்ஷியா மட்டும் அகண்ட சோவியத் ராஜ்ஜியத்தை உக்ரேன் உட்பட ஏனைய முன்னாள் குடியரசுகளை வல்வளைத்து உருவாக்கிட வேண்டும். 

என்னையா பிதற்றுகிறீர்கள்?

 

1 hour ago, ரஞ்சித் said:

இந்தக் கருத்தை இங்கே உங்களுடன் சேர்ந்து புட்டினுக்குக் கொம்பு சீவும் நண்பர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள். அதாவது இந்தியா இலங்கைக்குள் புகுந்ததே ஈழத்தமிழனுக்கு ஆதரவாகப் போராடத்தான் எனும் உங்களின் கருத்தை!

கூல்கூல்..😂உணர்ச்சி வசப்பட்டு இல்லாத பொல்லாத எல்லாம் கற்பனை பண்ணாதையுங்கோ..😂

மற்றது ரஷ்யா உக்ரைனை கைப்பற்றவோ அல்லது கைப்பற்றி அகண்ட சோவியத் ராஜித்தை அமைக்கவோ அங்கு போகவில்லை.. அதை ரஷ்யாவே தெளிவாக சொல்லி இருக்கிறது.. உண்மையில் உக்ரைனை கைப்பற்றுவது கூட ரஷ்யாவின் நோக்கம் இல்லை.. அங்குள்ள இரண்டு பிரதேச சிறுபான்மை ரஷ்யமக்களுக்கு சுதந்திர நாடு அமைத்து கொடுப்பது(பொது நலம்)… நேட்டோ தன்னை சுற்றிவளைப்பதில் இருந்து தற்காத்துகொள்வது(சுயநலம்).. அவ்ளதான்.. நீங்க ஏதேதோ பெரிசா எல்லாம் கற்பனை பண்ணி மண்டைய குழப்பிக்காதையுங்க..😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கூல்கூல்..😂உணர்ச்சி வசப்பட்டு இல்லாத பொல்லாத எல்லாம் கற்பனை பண்ணாதையுங்கோ..😂 ரஷ்யா உக்ரைனை கைப்பற்றவோ அல்லது கைப்பற்றி அகண்ட சோவியத் ராஜித்தை அமைக்கவோ அங்கு போகவில்லை.. அதை ரஷ்யாவே தெளிவாக சொல்லி இருக்கிறது.. உண்மையில் உக்ரைனை கைப்பற்றுவது கூட ரஷ்யாவின் நோக்கம் இல்லை.. அங்குள்ள இரண்டு பிரதேச சிறுபான்மை ரஷ்யமக்களுக்கு சுதந்திர நாடு அமைத்து கொடுப்பது… நேட்டோ தன்னை சுற்றிவளைப்பதில் இருந்து தற்காத்துகொள்வது..

நீங்கள் எப்பிடித்தான் விளங்கப்படுத்தினாலும் அவையள் விளங்கிக்கொள்ள தயாரில்லை 😄

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நீங்கள் எப்பிடித்தான் விளங்கப்படுத்தினாலும் அவையள் விளங்கிக்கொள்ள தயாரில்லை 😄

வான்கோழி சுடுமணலுக்க தலைய புதைச்ச கதைதான்..😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

கூல்கூல்..😂உணர்ச்சி வசப்பட்டு இல்லாத பொல்லாத எல்லாம் கற்பனை பண்ணாதையுங்கோ..😂

மற்றது ரஷ்யா உக்ரைனை கைப்பற்றவோ அல்லது கைப்பற்றி அகண்ட சோவியத் ராஜித்தை அமைக்கவோ அங்கு போகவில்லை.. அதை ரஷ்யாவே தெளிவாக சொல்லி இருக்கிறது.. உண்மையில் உக்ரைனை கைப்பற்றுவது கூட ரஷ்யாவின் நோக்கம் இல்லை.. அங்குள்ள இரண்டு பிரதேச சிறுபான்மை ரஷ்யமக்களுக்கு சுதந்திர நாடு அமைத்து கொடுப்பது(பொது நலம்)… நேட்டோ தன்னை சுற்றிவளைப்பதில் இருந்து தற்காத்துகொள்வது(சுயநலம்).. அவ்ளதான்.. நீங்க ஏதேதோ பெரிசா எல்லாம் கற்பனை பண்ணி மண்டைய குழப்பிக்காதையுங்க..😂😂

ஓமோம், தான் செய்யப்போவதை என்னவென்று உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் புட்டின் உக்ரேனுக்குள் நுழைந்திருக்கிறார் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

4 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் எப்பிடித்தான் விளங்கப்படுத்தினாலும் அவையள் விளங்கிக்கொள்ள தயாரில்லை 😄

எனக்கு விளக்கம் குறைவுதான் அண்ணை. உங்கள் அளவிற்கு நான் உலக அறிவில் படித்துத் தெளிந்தவன் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, ரஞ்சித் said:

ஓமோம், தான் செய்யப்போவதை என்னவென்று உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் புட்டின் உக்ரேனுக்குள் நுழைந்திருக்கிறார் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் சொல்வதை போல் மற்றவர்களும் தங்களுக்கு தெரிந்ததை சொல்கிறார்கள் அவ்வளவுதான்...:cool:

இதுக்கு போய் புட்டின் உங்களுக்கு சொன்னாரா? வீட்டை வந்தாரா? கோப்பி குடிச்சாரா?புட்டும் சம்பலும் சாப்பிட்டாரா? எண்ட கதையேல்லாம் ஏன் இப்ப? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் சொல்வதை போல் மற்றவர்களும் தங்களுக்கு தெரிந்ததை சொல்கிறார்கள் அவ்வளவுதான்...:cool:

இதுக்கு போய் புட்டின் உங்களுக்கு சொன்னாரா? வீட்டை வந்தாரா? கோப்பி குடிச்சாரா?புட்டும் சம்பலும் சாப்பிட்டாரா? எண்ட கதையேல்லாம் ஏன் இப்ப? 🤣

ஓமோம், பிழைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பு யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி. சில பேர் சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து  ,  அதனை சுகித்து கொண்டு புட்டினின் ரஷ்யயாவை ஆதரிக்கிறார்கள், அவர்களை பொதி செய்து ரஷ்யயாவுக்கு அனுப்பி புட்டினின் வைத்தியம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சுகமடைவார்கள்.🤪

Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, zuma said:

ஆக்கிரமிப்பு யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி. சில பேர் சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து  ,  அதனை சுகித்து கொண்டு புட்டினின் ரஷ்யயாவை ஆதரிக்கிறார்கள், அவர்களை பொதி செய்து ரஷ்யயாவுக்கு அனுப்பி புட்டினின் வைத்தியம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சுகமடைவார்கள்.

🕺.ஓ...மை... டியர்..டாக்டர்
💃.வாட் இஸ் தெ மேட்டர்?
🕺.சுகமில்லை டாக்டர்
💃.நல்லா புரியுது மேட்டர்
🕺.ஹா,, நாடியில் துடிப்பு

😜😜😜😜😜😜😜😜

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா - உக்ரைன்,  சுமுகமான பேச்சுவார்தை மூலம் தீர்வை காண்பதே நல்லது.
-தலிபான் அமைப்பு.- 

அல்லாஹு  அக்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, zuma said:

ஆக்கிரமிப்பு யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி. சில பேர் சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து  ,  அதனை சுகித்து கொண்டு புட்டினின் ரஷ்யயாவை ஆதரிக்கிறார்கள், அவர்களை பொதி செய்து ரஷ்யயாவுக்கு அனுப்பி புட்டினின் வைத்தியம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சுகமடைவார்கள்.

சோ மேலைத்தேய நாடுகளில் இருந்தால் நாம் மேலைத்தேய நாடுகள் செய்யும் தப்புகளுக்கு எல்லாம் பொத்திக்கொண்டு சலாம் போடவேண்டும்..? சரிபிழை கதைக்ககுடாது.. ரஷ்யா பக்கம் இருக்கும் சரிகளை நாம் பேசக்குடாது.. மேலைத்தேய நாடுகள் பக்கம் இருக்கும் பிழைகளையும் நாம் பேசக்குடாது… வாயையும் சூவையும் மூடிட்டு சாப்பிட்டு தூங்கனும்..? வசிக்கும் இந்த நாட்டு சனநாயகத்தேர்தலில் நாம் வாக்குப்போட்டிருக்கிறோம்.. ஏதோ ஒரு வகையில் இந்த நாட்டு அரசு அமைய நாமும் பங்காளியாகி இருக்கிறோம்.. இந்த நாட்டில் நாம் வரிகட்டுகிறோம்.. இந்தமண்ணில் வசிப்பதால் மட்டும் எதுக்கு நாம் ரஷ்யா பக்கம் நாம் காணும் சரிகளை எம் பார்வையில் நாம் பேசக்குடாது என்று நினைக்கிறீர்கள்..? இதை இந்தமண்ணின் மைந்தன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான்… கருத்து சுதந்திரம் பேசும் நாடுகளில் இருந்து கொண்டு அடுத்தவன் தன் கருத்தை சொல்லக்குடாது என நினைக்கும் உங்கள் போன்றவர்களைத்தான் பார்சல் பண்ணி தண்ணி இல்லா காட்டுக்கு அனுப்ப சொல்குவார்கள் இந்த நாடுகளில் கருத்து சுதந்திரத்தை நம்பும் மக்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெய்யே இந்தப்படம் உண்மையே????

Bild

Bild

 

நான் நம்ப மாட்டன் 😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

மெய்யே இந்தப்படம் உண்மையே????

Bild

Bild

 

நான் நம்ப மாட்டன் 😎

ராதிகா குமாரசாமி, கெகலிய ரம்புக்வல, பீரீஸ், ஐ.நா.....   எல்லாம் எங்கே.... 😎

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.