Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி செயலகத்திற்கு, முன்பாக... பதற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு, முன்பாக... பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு, எரிவாயுவிற்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் பலவந்தமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1272382

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம் (Video)

 

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

காலி வீதியில்,  லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
 

 

https://www.tamilmirror.lk/video/ஜனாதிபதி-செயலகம்-முன்-பதற்றம்-Video/52-293254

 

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன ராஜபக்ஸ குடும்பத்துக்கு வந்த சோதனை? இந்த நேரம் பாத்து பயங்கரவாதச் சட்டத்தையும் பயன்படுத்த முடியாமல் கையை கட்டிபோட்டாச்சே. வெள்ளை வானுக்கும் எரிபொருள் இல்லை. இந்த முறை போர் வெற்றி விழாவுக்கு மூடுவிழா, அரோகரா! இன்னும் கொஞ்ச காலந்தாழ்த்தியிருந்தா தமிழரை முழுவதுமாக விழுங்கிய பயங்கரவாத சட்டம் இவர்களை பதம் பாத்திருக்கும். பயங்கரவாத தடைச் சட்டம் என்றால் என்ன? அதன் வலி என்ன? என்பதை இவர்களும் சுவைத்து பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நல்லவேளை தப்பிவிட்டார்கள். ராஜபக்ஸ குடும்பம் இப்போ பல்லுக்கலட்டிய பாம்பு,  தப்பி ஓடுமா? தெரிந்தவர்கள்  யாராவது இருந்தா சொல்லுங்களேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு வருடங்களின் முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு மஹிந்த சகோதரர்களை அனுப்பி வைக்க தெருவில் இறங்கி அணிவகுத்த சிங்களவர்கள், இப்போது ஜனாதிபதியை அவர் மாளிகையிலிருந்து வெளியே அனுப்ப போராட்டம் நடத்துகிறார்கள்.

2009இல் சிங்கள அட்டூழியங்களிற்கெதிரான தமிழர்களின் ஆயுதபோர் மஹிந்த சகோதரர்களால் மிகபெரும் படுகொலை உக்கிர தாண்டவத்துடன் முடித்து வைக்கப்பட்டபோது,  இனிமேல் இலங்கையின் நிரந்தர ஆட்சிபீடத்தில் மஹிந்த குடும்பமே இருக்கும் என பெரும்தொகை சிங்களவர்களும்  ராஜபக்ச குடும்பத்தினரும் எதிர்பார்த்ததைவிட தமிழர்களே அதிகம் யூகித்திருந்தனர்.

அடுத்த தேர்தலிலேயே அவர்கள் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றபட்டபோது தமிழர் உட்பட்ட இலங்கையின் அனைத்து இனங்களிற்கும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகவே அது அமைந்திருந்தது.

இன்று ஒட்டுமொத்த இலங்கையின் வங்குரோத்து பொருளாதார நிலமைக்கு எதிரான போராட்டத்தில்கூட  வடக்குகிழக்கு உட்பட்ட அனைத்து இனங்களையும் ஒன்றுசேருமாறு அறைகூவல் விடுத்ததாக எங்கும் பெரிதாக தகவல்கள் இல்லை, ஒட்டு மொத்த மக்களின் வாழ்வில் புயல்வீசபோகும் இந்த நெருக்கடியில்கூட வேற்று இனங்களையும் சக மனிதர்களாக மதிக்கும் இயல்புகளில் எந்த மாற்றமும் இல்லை.

உற்றுநோக்கி கவனித்தால் இலங்கை தீவில் சிங்களவர்கள் தமக்கு சார்பாயில்லாத தலைமைகளை பதவியில் இருத்துவார்கள் அல்லது தூக்கி எறிவார்கள்

இப்போது ஆட்சியாளர்களுக்கெதிராக இடம்பெறும் பிரளயங்கள்கூட  தமக்கு உள்ள பட்டினிபற்றிய கவலையே ஒழிய பிற இனங்கள் பற்றியதானதல்ல, 

வெறும் வயிற்றில் இருக்கும்போதும் அவர்கள் இன விசுவாசம் தொடர்கிறது.

அந்த இனவாதம் இந்த நெருக்கடி தீர்ந்த பின்பும் இலங்கை தீவில்  தொடர்கதையாகவே தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தமிழர் மேல் கட்டவிழ்த்து விட்ட இராணுவத்தை இங்கே கட்டவிழ்த்து விடட்டும் பாப்போம்?

1 hour ago, valavan said:

ஒட்டுமொத்த இலங்கையின் வங்குரோத்து பொருளாதார நிலமைக்கு எதிரான போராட்டத்தில்கூட  வடக்குகிழக்கு உட்பட்ட அனைத்து இனங்களையும் ஒன்றுசேருமாறு அறைகூவல் விடுத்ததாக எங்கும் பெரிதாக தகவல்கள் இல்லை

எங்களை அழிக்கும்போது மகிழ்ந்து கொண்டாடியவர்கள், எந்த முகத்தோடு எம்மை அழைக்க முடியும்? எங்களை அழித்ததனாலேயே இவர்களை அமோகமாக ஆதரித்து கதிரை ஏற்றி மகிழ்ந்தவர்கள். இப்போதைய போராட்டம் தங்கள் பொருளாதார பற்றாக்குறைக்கானது.  இதே நிலையில் நாம் இருக்கும்போது இவர்கள் யாரும் கவலைப்படவில்லையே. தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம். 

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிளியவன் said:

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

உங்களை பல நாட்களின் பின் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, இணைந்திருங்கள் எங்களுடன்👍

3 hours ago, valavan said:

 

அடுத்த தேர்தலிலேயே அவர்கள் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றபட்டபோது தமிழர் உட்பட்ட இலங்கையின் அனைத்து இனங்களிற்கும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகவே அது அமைந்திருந்தது.

 

ஒரு சிறு திருத்தம், அடுத்த தேர்தலில் அல்ல. அதற்கும் அடுத்த தேர்தலில். 2010 வந்த தேர்தலில் தான் சரத் பொன்சேக்கா சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். போர் குற்றவாளிகளில் ஒருவரான அவருக்கு தமிழ் தேசிய கூத்தமைப்பு ஆதரவு கொடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு : ஜனாதிபதி செயலகத்திற்கு முன் அமைதியின்மை

(எம்.மனோசித்ரா)

 

'நாடு 74 ஆண்டுகளாக அனுபவித்து வரும் சாபத்தை நீக்குவோம்' என்ற தொனிப்பொருளிலில் சோசலிச இளைஞர் அணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 

May be an image of 7 people, people standing, outdoors and text that says 'SYU 5YU දේගප්‍රම තරුණයිනි, 6ට රැකීමට එක්වච! #You SYU SYU SYU පාලිම් තවත් එපා! තෙල් ටැංකි, ඇමරිකාවට බලිදුන් යුගදනව් හා පවරා ගනු! ණ සංගමය #SYUSRILANKA வேண்டாம் எண்ணெய் வரிசைகள்! இந்தியாவுக்கு தாரைவார்த்த எண்ணெய் தொட்டிகளையும், அமெரிக் காவுக்கு தாரைவார்த்த யுகதனவியையும் உடனடியாக மீளப் பெறவும்! #JVP Youth சோஷலிச இளைஞர் சங்கம் #SYU SRILANKA #JVP Yout'

மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு துரித தீர்வினை வழங்கி வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு , பௌத்த மதகுரு ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஆக்கிரோஷமாக தாக்க முற்பட்டார். இதனால் அங்கு அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது. 

Image

'எரிபொருள் வரிசை வேண்டாம்' , 'இந்தியாவிற்கு வழங்கிய எண்ணெய் தாங்கிகளையும் , அமெரிக்காவிற்கு வழங்கிய யுகதனவி மின்நிலையத்தையும் மீளப்பெறு' உள்ளிட்டவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரின் பிரதான கோரிக்கைகயாகக் காணப்பட்டது.

May be an image of one or more people, people standing and outdoors

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மருதானை - டெக்னிகல் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. 

குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணியாக செல்லவுள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. 

எவ்வாறிருப்பினும் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

 

ஜனாதிபதி செயலக வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர்

May be an image of one or more people, people standing, military uniform and outdoors

May be an image of 8 people, people standing, military uniform and outdoors

இதன் காரணமாக ஜனாதிபதி செயலக வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புபடையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்டு ஒரு மணித்தியாலயத்திற்கும் அதிக நேரம் அங்கு அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

 

இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து நாலா பக்கமும் முற்றுகையிடுவோம்

May be an image of 2 people, people standing, outdoors, crowd and text

May be an image of one or more people, people standing, crowd and outdoors

'இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து நாலா பக்கமும் முற்றுகையிடுவோம்' , 'நாம் இளம் பலசாலிகள்' , 'தாய் நாட்டை பாதுகாப்பது எமது பொறுப்பு - எமது பொறுப்பை நிறைவேற்ற எமக்கு வாய்ப்பளி' , 'பொறுப்பை நிறைவேற்ற எம்முடன் ஒன்றிணையுங்கள்' , 'பொறுப்பற்ற தலைவர்கள் எமது நாட்டை விற்கின்றனர்' , 'இலஞ்சத்தை பெற்று வெளிநாட்டு சுற்றுலா செல்கின்றனர்' , 'யுகதனவி, எண்ணெய் தாங்கிகளை மீளப்பெறு', 'உண்பதற்கு வழியில்லை - எரிபொருள் வரிசைக்கு முடிவில்லை'  என்றவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.

 

போக்குவரத்து ஸ்தம்பிதம்

May be an image of 1 person, standing, crowd and outdoors

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று முற்பகல் மருதானை டெல்னிகல் சந்தி வீதி, புறக்கோட்டை புகையிரத நிலைய வீதி மற்றும் ஜனாதிபதி செயலக வளாக வீதி என்பவற்றின் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.

 அத்தோடு லோட்டஸ் சுற்று வட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதியும் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இதனால் பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்கள் ஊடாக பயணித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

ஜனாதிபதி, பிரமரைப் போன்று வேடமிட்டுச் சென்றனர்

May be an image of 12 people, people standing, outdoors and text that says 'C லங்கா வகா LANKA SYU SY'

May be an image of 7 people, people standing, outdoors and monument

May be an image of 9 people, people standing, balloon, outdoors and text that says 'ලංකා LANKA லங்கா esa'

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரைப் போன்று வேடமிட்டு சென்றதோடு , இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இலட்சினையையும் எடுத்துச் சென்றனர்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைதியற்ற நிலைமை

May be an image of 3 people, people standing and outdoors

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்பட்டமையினால் அங்கு பதற்றமற்ற நிலைமை ஏற்பட்டது. 

May be an image of one or more people, people standing, outdoors and crowd

எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்படவில்லை என்றும் , அங்கு பதற்றமான சூழல் மாத்திரமே உருவாக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு : ஜனாதிபதி செயலகத்திற்கு முன் அமைதியின்மை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் புதல்வர்களின் நடந்துமுடிந்த  திருமண நிகழ்வை பாருங்கள், எத்தனைகோடி செலவழித்திருப்பார்கள்? கோத்தா தன் புதல்வனின்திருமணத்திற்காக வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் மலர்களை வருவித்திருந்தார். இதெல்லாம் இவர்கள் கஷ்ரப்பட்டு உழைத்த பணமாக இருந்தால் இப்படி அள்ளி இறைத்திருப்பார்களா? தமிழரை கடத்தி கப்பமாக பெற்ற பணம், ஏழை மக்களை; கொஞ்சம்அனுசரித்து போங்கள், புலிகளை அழித்த பின் உங்களுக்கு வளமான வாழ்வை ஏற்படுத்தி தருகிறோம் என ஆசை காட்டி, தாம் ஏகபோக வாழ்க்கை நடத்தினார்கள். துண்டைக் காணோம், துணியைக்காணோம் என்று ஓட ஓட விரட்டியடிக்க போகிறார்கள். இராணுவம் மக்களோடு சேரலாம் அல்லது சண்டித்தனம் காட்டப்போய் மனித உரிமை காவலரை  சிங்களமே சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுக்கலாம். முள்ளிவாய்க்காலில் போட்ட ஆட்டத்தை இப்போது யாராவது போட்டு காண்பிக்கலாம் போராட்டக்குழுவுக்கு.

23 hours ago, உடையார் said:

உங்களை பல நாட்களின் பின் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, இணைந்திருங்கள் எங்களுடன்👍

நன்றி உடையார். நிச்சயமாக!

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களின் கோபத்தைப் பார்க்கும்போது அநியாயமாக சதாமும், கடாபியும் நினைவு வருகின்றார்கள்......!

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க எவ்வளவு பாவமாக  இருக்கு..

நாமும்  இவ்வாறான சூழலில்  அவதிப்பட்டோம்

பசி  என்றால்  என்ன?

பட்டினி  என்றால்  என்ன??

விலை  ஏற்றங்கள்  என்றால்  என்ன??

பெற்றோல் டீசல்  தட்டப்பாடு என்றால்  என்ன??

என்பதை  நாமும் சுமந்ததால் அதை  எந்த  மக்கள் சுமந்தாலும் நாமும் அவர்களுக்காக  பரிதாபப்படுவோம்

Edited by விசுகு
சில வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

பார்க்க எவ்வளவு பாவமாக  இருக்கு..

நாமும்  இவ்வாறான சூழலில்  அவதிப்பட்டோம்

பசி  என்றால்  என்ன?

பட்டினி  என்றால்  என்ன??

விலை  ஏற்றங்கள்  என்றால்  என்ன??

பெற்றோல் டீசல்  தட்டப்பாடு என்றால்  என்ன??

என்பதை  நாமும் சுமந்ததால் அதை  எந்த  மக்கள் சுமந்தாலும் நாமும் அவர்களுக்காக  பரிதாபப்படுவோம்🤣

இப்ப கூட ஒன்றும் கெட்டு போகவில்லை தமிழனுக்கு உரிய தீர்வை கொடுத்தால் பிரச்சனை முடிந்தது .

சண்டை தொடங்கையில் 1980களில் 15 ஆயிரம் பேர்தான் ஆயுதப்படை  2009 ல் தமிழ் இனவளிப்புடன் முடித்து வைக்கப்பட்ட போது ரிசர்வ் படையுடன் சேர்த்து நேரடியாக 4லட்ஷத்து 30ஆயிரம் பேர் அண்ணளவாக  புலிகளை அழிப்பதுக்கு என்று உருவாக்கியவர்கள் எல்லா வளமும் யுத்தத்துக்கு இறைத்தார்கள் இன்றும் அவ்வாறே ஒரு 8000ஆயிரம் பேர் மட்டும் ஐநா படைப்பிரிவில் இருக்கிறார்கள் அதுவும் இனிவரும் வருடங்களில் குறைப்பு செய்யப்படுகிறார்கள் காரணம் அங்கும் தங்கடை ஊத்தை வேலைகளால் .

தென்னிலங்கை அரசியல்வாதிகள் கோத்தா போனால் தாங்கள்  பதவி ஏறி இலங்கையின் முதுகெலும்பை நிமித்தலாம் என்று கனவு காண்கிறார்கள் காலம் கடந்த கனவு .

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கஸ்டத்தின் மத்தியிலும்...காணி பிடிக்கிறது...புத்த சிலை வைக்கிறது....புனிதபூமி ..ஆக்கிறது நிப்பாட்டவில்லையே..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

பார்க்க எவ்வளவு பாவமாக  இருக்கு..

நாமும்  இவ்வாறான சூழலில்  அவதிப்பட்டோம்

பசி  என்றால்  என்ன?

பட்டினி  என்றால்  என்ன??

விலை  ஏற்றங்கள்  என்றால்  என்ன??

பெற்றோல் டீசல்  தட்டப்பாடு என்றால்  என்ன??

என்பதை  நாமும் சுமந்ததால் அதை  எந்த  மக்கள் சுமந்தாலும் நாமும் அவர்களுக்காக  பரிதாபப்படுவோம்

அறுபத்தொன்பது லட்ஷம் மக்களால்   தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று அதே மக்களால் துரத்தப்பட்ட உள்ளார்கள். ஏன் அவர்கள் இவர்களை தெரிந்தெடுத்தார்கள்? இந்த மக்களுக்கு இவர்கள் செய்த நன்மையென்ன? வாக்குக்காக கொடுத்த பணம், வெளிநாடுகளில் இருந்த சிங்களவருக்கு பயணச்செலவு, எல்லாவற்றிற்கும் மேலாக தமிழரை அடக்கி ஒடுக்கியவர்கள் என்கிற ஒரே காரணம், இன்னும் ஒடுக்கப்படுவார்கள் என்கிற உத்தரவாதம்  இவர்களை மலைமேல் ஏற்றி வைத்தது. இவர்கள் செய்த ஊழல்கள் மக்களுக்கு தெரியாததல்ல, இப்போ தங்கள் பொருளாதார நெருக்கடிக்காக இவர்களை துரத்துகிறார்களேயொழிய நீதிகாக்கவல்ல. நாங்கள் இவர்கள் படும் கஸ்ரத்திற்கு மேலாக பட்டவர்கள். நம் நிலங்களை, உறவுகளை, இருப்பிடங்களை விட்டு ஏதிலிகளாக துரத்தப்படும் செய்திகள் வானொலி, தொலைக்காட்சி மூலம் ஒலி, ஒளி பரப்பப்பட்டது. பார்த்து, கேட்டு மகிழ்ந்தார்கள், பகிர்ந்தார்கள். எங்களின் அவலநிலை கண்டு யாரும் வருந்தவில்லை, கேள்வி கேட்கவில்லை, எதிர்க்கவில்லை. மாறாக ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் நாம் இப்போ இவர்களின் அவலத்தில் மகிழவில்லை, நாம் தொடர்ந்து வருத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களின் இந்த அவல நிலையிலும் எம்மைப்பற்றி நினைக்கவில்லை, விரும்பவுமில்லை. அதை இவர்கள் உணர்ந்தால் ஆட்சியாளர்கள் அதற்காக வெட்கப்படுவார்கள், இனிமேல் பயங்கரவாதிகளை அடக்கினோம் என்று வீரக்கதை பேசமாட்டார்கள். நாளைக்கே இவர்களின் பொருளாதாரநிலை நிலை மாறிவிட்டால் பழையபடி வேதாளம் முருங்கை மரத்திற்தான் என்பதையே இது காட்டுகிறது!

7 hours ago, alvayan said:

இவ்வளவு கஸ்டத்தின் மத்தியிலும்...காணி பிடிக்கிறது...புத்த சிலை வைக்கிறது....புனிதபூமி ..ஆக்கிறது நிப்பாட்டவில்லையே..

இதை வைத்துத்தானே இதுவரை ஆட்சி செய்தவர்கள். அதையே வைத்து இந்த இக்கட்டான  சூழ்நிலையை கடக்க முயற்சிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.