Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் விஜய்க்காக நாங்கள் எதையும் செய்வோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விஜய்க்காக நாங்கள் எதையும் செய்வோம். யாழ்ப்பாண இளைஞர்களின் புரட்சி

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா  முடிவு  பண்ணிட்டா?????😂

நல்ல தேவையான பதிவு சாந்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சாந்தியக்கா  முடிவு  பண்ணிட்டா?????😂

என்னத்தை? 🤭

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, shanthy said:

என்னத்தை? 🤭

தாயகத்தமிழர்களின் சர்ச்சையான  பிரச்சினைகளில் மூக்கை நுளைத்து  அடிவாங்க??

ஆனால் இதனால் பெரும் விளம்பரமும் கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக நாங்களும் கூத்தாடிக்குப் பல்லக்குத் தூக்கும் சமூகமாகிவிட்டோம் என்பதைத்தான் இதனால் நாம் புரிந்துகொள்ள முடிவது.

ஒட்டு மொத்த யாழ்ப்பாண இளைஞர்களில் இப்படி விஜய்க்காகவும் அஜித்துக்காகவும் முண்டியடிக்கும் இளைஞர்கள் எத்தனை சதவீதம்?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரஞ்சித் said:

கடைசியாக நாங்களும் கூத்தாடிக்குப் பல்லக்குத் தூக்கும் சமூகமாகிவிட்டோம் என்பதைத்தான் இதனால் நாம் புரிந்துகொள்ள முடிவது.

நடிகருக்கு பல்லக்குத் தூக்கும் பண்பு போராட்ட காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தாயகத்தமிழர்களின் சர்ச்சையான  பிரச்சினைகளில் மூக்கை நுளைத்து  அடிவாங்க??

ஆனால் இதனால் பெரும் விளம்பரமும் கிடைக்கும்?

பொறுத்திருங்கோ. என்ன கிடைக்கும் என பார்ப்போம். 🤣

கிடைப்பதில் பாதி உங்களுக்கு பங்கு தரலாம். 🤗

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தக்காலத்திலை எம்ஜிஆர்,சிவாஜி கோஷ்டி சண்டையளுக்கு பஞ்சமில்லை. முதல் ஷோ பாக்கிறதுக்கு விடியப்பறம் நாலுமணிக்கே கியூவிலை நிண்ட சனம் எக்கச்சக்கம்.சனம் கட்டுக்கடங்காததாலை உலகம் சுற்றும் வாலிபன் படம் யாழ்ப்பாண ரவுணுக்கை மட்டும் இரண்டு தியேட்டரிலை ஓடினது. அதே போல கமல் ரஜனி படங்களுக்கும் எங்கடை பொடியள் ஒரே அட்டகாசம் கண்டியளோ. ஆர் முதல்ல முதல் ஷோ பார்த்தது எண்ட போட்டியள் வேறை......😎

என்ன ஒண்டு.....
அப்பவெல்லாம் இப்பிடி பேட்டி எடுத்து நீயூசாய் போடுறதுக்கு ஒரு வசதியுமில்லை 😀

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருந்து 2010 இதற்குப் பின்னரான காலத்தில் தாயகத்துக்கு மீள்வருகையாகி வாழும் பலரும் இப்படித்தான் அதேநேரம் யாழ்ப்பாணத்தில் வளர்கிற சமூகம் இதைவிட மோசமாக போதைக்கு அடிமையாகி திறன் மழுங்கி தேய்மானமான எதிர்காலத்தோடு வாழ ஆரம்பித்து நீண்டகாலமாகிவிட்டது.

நமது தாயகத்தில் இளையோர் தொடர்பாக வெறுமை மட்டுமே மிஞ்சப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அந்தக்காலத்திலை எம்ஜிஆர்,சிவாஜி கோஷ்டி சண்டையளுக்கு பஞ்சமில்லை. முதல் ஷோ பாக்கிறதுக்கு விடியப்பறம் நாலுமணிக்கே கியூவிலை நிண்ட சனம் எக்கச்சக்கம்.சனம் கட்டுக்கடங்காததாலை உலகம் சுற்றும் வாலிபன் படம் யாழ்ப்பாண ரவுணுக்கை மட்டும் இரண்டு தியேட்டரிலை ஓடினது. அதே போல கமல் ரஜனி படங்களுக்கும் எங்கடை பொடியள் ஒரே அட்டகாசம் கண்டியளோ. ஆர் முதல்ல முதல் ஷோ பார்த்தது எண்ட போட்டியள் வேறை......😎

என்ன ஒண்டு.....
அப்பவெல்லாம் இப்பிடி பேட்டி எடுத்து நீயூசாய் போடுறதுக்கு ஒரு வசதியுமில்லை 😀

ஓம் அண்ணா.. நீங்கள் சொல்லும் காலம் தமிழீழ தேச விடுதலை நோக்கி இளைஞர் யுவதிகள் சாரி சாரியாய் போராட்ட களத்தில் சேராத காலம்.
செலுலைட் திரைக்கு பின்னால் அட்டக்கத்தி, அட்டை துப்பாக்கியோடு மிளிர்ந்த கதாநாயகரை சட்டை செய்யாது  கந்தகம், சயனைட், கைக்குண்டு, முப்படைக்கட்டுமானம், மண்மீட்பு, முறியடிப்பு, முகாம் தகர்ப்பு,  வீரமரணம் இவற்றை எமது சொந்த அண்ணாக்கள், அக்காக்கள் ரத்தமும் தசையுமாய் எம்கண்முன்னே நடாத்தி காட்டியதன் பின்னர் இந்த கற்பனை கதாநாயகர்கள்காணாமல் போனார்கள்.... ஆனால் ... இப்போ மீண்டும் இந்த திரை கூத்தாடிகளை தூக்கி திரியும் கற்காலம் தொடங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@Sasi_varnam

சினிமாவுக்கு பின்னால் சுத்துபவன் நானல்ல. அதே போல் கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது,வடைமாலை அணிவிப்பது,மிருக பலி கொடுப்பது என இதெல்லா எனக்கு பிடிப்பதில்லை. சினிமாவை பொழுபோக்குக்காக மட்டுமே பார்க்கலாம் என எண்ணுபவன்.சினிமா பார்ப்பதையே தொழிலாக கொண்டவர்களை எனக்கு நன்றாகவே தெரியும்.அவர்களை ஒரு சதத்திற்கும் உதவாதவர்கள் என மனதுக்குள் நினைப்பதுண்டு.
அதேபோல் இன்றைய காலங்களில் நம்மவர் வீட்டுக்குள்ளேயே தொடர் நாடகங்கள் செய்யும் இராச்சியம் கொஞ்ச நஞ்சமல்ல.இந்த தொடர்நாடக போதையால்  அடுப்பில் இருக்கும் எண்ணைச்சட்டியே எரிந்து முழு அடுக்களையும் எரிந்த சம்பவங்கள் பல பற்பல.சமைக்க கூட நேரமில்லாமல் உணவுகளை கடையில் இருந்து  வரவழைத்து உண்ணும் அளவிற்கு தொடர்நாடக விசர்த்தனம் அதிகமாகியுள்ளது.

நிற்க....

நான் இந்த திரியில் முதலில் எழுதிய கருத்தின் சாரம்சம் என்னவெனில் இந்த சினிமா பைத்தியம் இன்று நேற்றல்ல அன்று தொடக்கமே இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டவேயன்றி வேறு நோக்கம் எதுவுமில்லை.

@shanthy

மன்னிக்கவும் சாந்தியக்கா. நீங்கள் ஆரம்பித்த இந்த நல்லெண்ண திரியை சேதப்படுத்தும் நோக்கில் நான் கருத்தெழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, shanthy said:

நடிகர் விஜய்க்காக நாங்கள் எதையும் செய்வோம். யாழ்ப்பாண இளைஞர்களின் புரட்சி

நல்ல விஷயம் சாந்தி அக்கா! தொடர்ந்து கதையுங்கள், அப்போதாவது எங்கள் யாழ்ப்பாண சமூகம் கொஞ்சம் திருந்துகிறதா பார்ப்போம்.

நான் ஒவ்வொரு முறையும் அங்கே போய் திரும்பும் பொழுது நினைப்பது, இவர்களுக்காகவா அந்தளவு உயிர்களின் தியாகம் செய்யப்பட்டது? இவர்களுக்காகவா தனது வாழ்நாளையும் குடும்பத்தையும் தலைவர் வீணாக்கினார் என்று..

ஒரு பக்கம் கல்வியறிவு வீதம் குறைக்கிறது.. இன்னொரு பக்கம் பழையபடி எட்டிப்பார்க்கும் சாதியம், இன்னொரு பக்கம் கலாச்சார சீரழிவுகள், இதனால் உருவாகும் கடத்தல், வாள் வெட்டு. இந்த கும்பல்களுக்கு பயந்தே சில விடயங்களை கண்டும் காணாது போல இருக்க வேண்டிய நிலை( எனது தந்தை பல இடங்களில் என்னை இப்படி சொல்லித்தான் கட்டுப்படுத்தினார் “ பிள்ளை நீ இங்கே கதைத்துவிட்டு போய்விடுவாய், பிறகு இந்த கும்பலுக்கு ஏதாவது சொல்லிவிட்டால் நாங்கள் இருக்கேலுமோ”), சுயநலம், போட்டி பொறாமையால் எங்கள் சமூகம் சீரழிகிறது. இது வேண்டும் என்றே எங்கள் சமூகத்தில் விதைக்கப்பட்ட ஒன்றே என்றாலும் முழுவதையும் அப்படியே கூறிவிட முடியாது. ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமோ தெரியாது..

சினிமா, தொடர்நாடகங்கள் பொழுதுபோக்கு, ஆனால் அவை முன்பை விட மோசமான கலாச்சாரத்தையே பெரும்பலானவை தருகின்றன. இந்த தொடர்நாடகங்கள், சினிமாக்களை பார்த்து உருவாகும் சடங்குகள் முதற்கொண்டு செயல்கள் வரை ஒரு அருவருப்பையே தருகிறது. 

அதே போல எத்தனை வீதம் இந்த மாதிரி ஆட்கள் என்பதல்ல முக்கியம் எந்த நேரத்தில் இந்த மாதிரி பல்லாக்கு தூக்கும் செயல்கள் நடைபெறுகின்றன, அவை எந்த நோக்கத்தில் விளம்பரப்படுத்தப்படுகின்றன என்பதையே கவனிக்க வேண்டும் என நினைக்கிறேன். 

ஏற்கனவே வடக்கு கிழக்கு ஏன் அமைதியாக உள்ளது etc etc என செய்திகள் இருக்கும் பொழுது, சிங்கள அரசியல் கட்சிகளோ, சிங்கள மக்களோ இதை கவனியாமல் இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? 

அத்துடன் சமீப காலமாக இந்த இந்திய சினிமாவையே boycott செய்ய வேண்டும் என்ற அளவிற்கு என் நிலை, ஆனால் இதை என் நண்பர்களிடம் கூறினால் நீ ஒரு முட்டாள் என்பதை நாகரீகமாக இப்படி கூறுகிறார்கள் “ you are very sensitive and it’s not good for your health “ 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கு முன்னர் இந்த பல்லக்குத் தூக்கும் நிலை இருந்ததற்காக, அது சரியென்று ஆகிவிடாது. ஒரு விடயம் சமூகத்திற்கு உகந்ததல்ல் என்றால், அது எக்காலத்தில் நடைபெற்றால் என்ன, உகந்ததில்லையென்பது உகந்தது இல்லை, அவ்வளவுதான்.

பிரபா சிதம்பரநாதன் அடிக்கடி ஊர் போய் வருபவர் என்பதால் இதுகுறித்த நிகழ்காலப் பார்வையினைக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. பேச்சுவார்த்தைக் காலத்தில் நான் ஊர் போயிருந்தபோது (2002 இன் இடைக்காலத்தில்) இதேவகையான கலாசார சீரழிவுகளைக் கண்ணுற்றேன். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் அட்டகாசமும், பெண்கள் மீதான வன்முறையும் பொதுமக்கள் போக்குவரத்து பஸ்களிலிருந்து, வீதிகள் வரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை செல்லும் அரச பேரூந்தில் பயணித்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லியடிக்குச் சென்றுகொண்டிருந்த இரு மாணவிகளை தனியார் பேரூந்து நடத்தும் (வாய்பேச முடியாத) ஒருவரும் அவரது நண்பனுமாக நின்றபடி அங்கச் சேட்டைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்பெண்கள் எவ்வளவோ முயன்றும், அவர்கள் விடுவதாயில்லை. பின்னர் அப்பெண்களை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு அவர்களைத் தள்ளிவிட்டேன். நாவலர் மடத்திற்குச் சென்று நான் இறங்கும்வரை என்னுடன் தர்க்கித்துக்கொண்டு, என்மீது ஏறிவிழுந்துகொன்டும் இருந்தார்கள். அவர்கள் முற்றான மதுபோதையில் இருந்தார்கள். இருவருக்கும் ஒரு 18 - 20 வயதுதான் இருக்கும்.

நான் நாவலர் மடத்தில் இறங்கும்போது, "டேய், நாளைக்குக் கொழும்புக்குப் போகும்போது நெல்லியடியில இருந்து கொடிகாமத்துக்கு பஸ்ஸிலதானே போவாய், எப்படிப் போகிறாய் என்று பார்க்கிறோம்" என்று கறுவிவிட்டே சென்றார்கள். 

வெறும் 50 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் வன்னியில் மக்களின் வாழ்வுக்கும், கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் இடையிலும் யாழ்ப்பாணத்தில் பூரண அரச கட்டுப்பாட்டினுள் இருக்கும் இன்னொரு பகுதி தமிழர்களின் சமூக சீர்கேட்டிற்கும் இடையிலும் இருக்கும் வேறுபாடு என்னை வெகுவாகப் பாதித்திருந்தது.

தென்னிந்திய திரைக் கூத்தாடிகளின் பெயர்களையும், படத்தின் பெயரையும் தமக்கு வைத்துக்கொண்டு, தீனா குறூப், விஜய் குறூப், ஆவா கூறூப் என்று அட்டகாசம் புரியும் சீர்கெட்ட இளைய சமுதாயம் இந்த தென்னிந்திய கூத்தாடிகளின் பாதிப்பாலேயே உருவானதென்று நான் நம்புகிறேன்.  இது போராட்டத்திற்கு முன்பிருந்தாலென்ன, பின்னர் வந்தாலென்ன, சீர்கேடு, சீர்கேடுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

போராட்டத்திற்கு முன்னர் இந்த பல்லக்குத் தூக்கும் நிலை இருந்ததற்காக, அது சரியென்று ஆகிவிடாது. ஒரு விடயம் சமூகத்திற்கு உகந்ததல்ல் என்றால், அது எக்காலத்தில் நடைபெற்றால் என்ன, உகந்ததில்லையென்பது உகந்தது இல்லை, அவ்வளவுதான்.

90 களுக்கு பின் பிறந்தவர்களுக்கும் போராட்டத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் வளர்க்கப்பட்டனர், வளர்ந்துவிட்டனர்.

இப்போது அந்த சந்ததி தான் இவர்கள்.

என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

@Sasi_varnam

சினிமாவுக்கு பின்னால் சுத்துபவன் நானல்ல. அதே போல் கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது,வடைமாலை அணிவிப்பது,மிருக பலி கொடுப்பது என இதெல்லா எனக்கு பிடிப்பதில்லை. சினிமாவை பொழுபோக்குக்காக மட்டுமே பார்க்கலாம் என எண்ணுபவன்.சினிமா பார்ப்பதையே தொழிலாக கொண்டவர்களை எனக்கு நன்றாகவே தெரியும்.அவர்களை ஒரு சதத்திற்கும் உதவாதவர்கள் என மனதுக்குள் நினைப்பதுண்டு.
அதேபோல் இன்றைய காலங்களில் நம்மவர் வீட்டுக்குள்ளேயே தொடர் நாடகங்கள் செய்யும் இராச்சியம் கொஞ்ச நஞ்சமல்ல.இந்த தொடர்நாடக போதையால்  அடுப்பில் இருக்கும் எண்ணைச்சட்டியே எரிந்து முழு அடுக்களையும் எரிந்த சம்பவங்கள் பல பற்பல.சமைக்க கூட நேரமில்லாமல் உணவுகளை கடையில் இருந்து  வரவழைத்து உண்ணும் அளவிற்கு தொடர்நாடக விசர்த்தனம் அதிகமாகியுள்ளது.

நிற்க....

நான் இந்த திரியில் முதலில் எழுதிய கருத்தின் சாரம்சம் என்னவெனில் இந்த சினிமா பைத்தியம் இன்று நேற்றல்ல அன்று தொடக்கமே இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டவேயன்றி வேறு நோக்கம் எதுவுமில்லை.

@shanthy

மன்னிக்கவும் சாந்தியக்கா. நீங்கள் ஆரம்பித்த இந்த நல்லெண்ண திரியை சேதப்படுத்தும் நோக்கில் நான் கருத்தெழுதவில்லை.

குசா அண்ணா, நீங்கள் இந்த அதிமோக தென்னிந்திய சினிமா கலாச்சாரத்தை ஆதரிக்காதவர் என்பதும் எங்களுக்கு தெரியும். நான் உங்கள்  கருத்தை  அந்த அர்த்தத்தில் எடுக்கவும் இல்லை. ❤️  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்த விசுகு , Hana, ரஞ்சித், நிழலி,kapithan, குமாரசாமி, வல்வை சகாரா, Sasi varnam, பிரபா சிதம்பரநாதன், ஈழப்பிரியன் அனைவருக்கும் நன்றி.

On 16/4/2022 at 23:10, குமாரசாமி said:

@Sasi_varnam

சினிமாவுக்கு பின்னால் சுத்துபவன் நானல்ல. அதே போல் கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது,வடைமாலை அணிவிப்பது,மிருக பலி கொடுப்பது என இதெல்லா எனக்கு பிடிப்பதில்லை. சினிமாவை பொழுபோக்குக்காக மட்டுமே பார்க்கலாம் என எண்ணுபவன்.சினிமா பார்ப்பதையே தொழிலாக கொண்டவர்களை எனக்கு நன்றாகவே தெரியும்.அவர்களை ஒரு சதத்திற்கும் உதவாதவர்கள் என மனதுக்குள் நினைப்பதுண்டு.
அதேபோல் இன்றைய காலங்களில் நம்மவர் வீட்டுக்குள்ளேயே தொடர் நாடகங்கள் செய்யும் இராச்சியம் கொஞ்ச நஞ்சமல்ல.இந்த தொடர்நாடக போதையால்  அடுப்பில் இருக்கும் எண்ணைச்சட்டியே எரிந்து முழு அடுக்களையும் எரிந்த சம்பவங்கள் பல .

@shanthy

மன்னிக்கவும் சாந்தியக்கா. நீங்கள் ஆரம்பித்த இந்த நல்லெண்ண திரியை சேதப்படுத்தும் நோக்கில் நான் கருத்தெழுதவில்லை.

இது கருத்துக்களம் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். நான் கோபிக்கமாட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்+

இதே நிலைமைதான் மட்டு & வன்னியிலுமா?

அங்கு நிலைமைகள் எவ்வாறு உள்ளன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, shanthy said:

இது கருத்துக்களம் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். நான் கோபிக்கமாட்டேன். 

வணக்கம் சாந்தியக்கா!

இப்ப பாருங்கோ தமிழர்களை பொறுத்தவரை இந்தியாவிலையும் இலங்கையிலையும் சினிமாவை சாதாரண வாழ்வியலோடை ஒண்டாக்கி போட்டாங்கள்.தின்னுற சோத்திலை கூட சினிமா கலாச்சாரம்.கலியாணத்திலை சினிமா கலாச்சாரம்.வீட்டிலை கதைக்கிற கதையள் சினிமா கலாச்சாரம்.கதைக்கிற தமிழ் சினிமா கலாச்சாரம். சாறியை கொஞ்சம் இறக்கி கட்டினால் அது சினிமா கலாச்சாரம்.😀

எங்கடையளின்ரை கலியாண வீட்டு வீடியோ இல்லாட்டி சாமத்திய வீட்டு வீடியோவிலை சினிமா பாட்டு இல்லாத ஒரு வீடியோவை காட்டுங்கோ பாப்பம்?
இப்பிடி சினிமாவுக்குள்ளையே மூழ்கிக்கொண்டு  வாலிப வயது பொடியளை பாத்து அப்பிடி செய்யாதை இப்பிடி செய்யாதை எண்டு சொன்னால் கேப்பாங்களோ?😎

எல்லாத்தையும் விட கொடுமை தமிழே தெரியாத ஒரு நடிகன் விக்கி விக்கி கொன்னை தட்டி கதைக்கிறதை எங்கடையள் அதை சுத்த தமிழ் எண்டு சொல்லுதுகள். பிள்ளையள் அந்த நடிகன் கதைக்கிற  மாதிரித்தான் வீட்டிலையும் தாய் தேப்பனோடை கதைக்குதுகள்? :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.