Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞர்களின்... இரத்தத்தை உறிஞ்சும், புலம்பெயர் தமிழ் முதலைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 2 people and street
 
May be an image of 7 people and street
 
May be an image of 10 people, outdoors and text that says 'Cash Carry N JARI CENTRE INDIAN MUSIC NDIAN MUSIC CENTRE DVD'
 
May be an image of 12 people, people standing and outdoors
 
May be an image of 17 people and street
 
May be an image of 4 people and outdoors
 
May be an image of outdoors
 
லண்டனில்... விசா இல்லயென்ற ஒரே காரணத்திற்காக, புதருக்கு அருகிலுள்ள கராஜ் ஒன்றினுள்
எந்தவித அடிப்படை வசதிகளுமற்று மறைவாகப் படுத்துறங்கி,
ஒரு மணி நேரத்திற்கு... ஒரு பவுண்ட் மட்டுமே, சம்பளமாக வாங்கும்
தமிழ் இளைஞர்களைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
2018 ம் ஆண்டு Sky TV, அதை ஆவணமாக்கி ஒளிபரப்பியிருந்தது.
மனம் பதறி, ஒரு தடவை நிலை குலைந்திருக்கும்.
 
அவர்களையே ஒத்த இளைஞர்கள்... இங்கு ஃபிரான்ஸிலும். சில தமிழ் முதலாளிகளிடம்
சிக்கிச் சொல்லெண்ணாத் துன்பத்திற்கும். மன அழுத்தத்திற்குமுள்ளாகி வருகிறார்கள்.
 
சொந்த நிலங்களை விட்டு அகதிகளாய்ச் சிதறினாலும்... இன்னொரு வாழ்க்கையை
எப்படியாவது அமைத்துக் கொள்ளலாமென்ற கனவுகளோடு வந்தவர்கள்,
மாதாந்தம் நானூறு யூரோக்கும் குறைவான சம்பளத்தோடும்
மோசமான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் இடையில்....
அடிமைகளாய் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள்.
 
மனக் குமுறல்களை வெளிப்படுத்தி,
"எங்காச்சும் ஒரு வேலை எடுத்துத் தர முடியுமா?" எனக்
கண் முன்னே எப்போதும் வந்து நிற்கும் உயிர்களின்
பரிதவிப்புகளுக்கிடையே விடைகளற்று நிற்கிறேன், நிற்கிறோம்.
 
நீண்ட காலமாய்த் தொடரும் இது போன்ற சுரண்டல்களும் அடிமைத்தனங்களும்
இனியாவது வெளியுலகத்திற்கு வந்து இளைஞர்களின் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
 
பிரான்ஸ் நாட்டில், லாச்சப்பலில்... வாணிபங்கள் நாடத்தும் தமிழ் முதலைகள்.
அரச விடுமுறை நாட்களில் ஐரோப்பாவில் கல்வி கூடங்கள், அரச அலுவலகங்கள்,
வாணிப நிலையங்கள் யாவும் இயங்காது.
 
ஆனால் பிரான்ஸ் நாட்டில் லாச்சப்பல் எனும் இடத்தில் தமிழர்கள் நடத்தும்... சில்லறை கடைகள்,
உடுப்பு கடை, உணவகங்கள் மட்டும் தம் கீழ் வேலை செய்யும் தம் தமிழ் ஊழியர்களுக்கு
விடுமுறையை வழங்காது... இரத்ததை உறிஞ்சி, எடுத்து தம் கல்லாப் பெட்டிக்குள்
காசை சேர்த்து... கையிலாயம், கொண்டு தாம் இறந்த பின் சவப்பெட்டியில் அடுக்கி கொண்டு போகலாம் என்று
தமிழ் முதலாளிமார்கள் காசு ஆவேசம் பிடித்து இவ் நாளிலும் கடையை
திறந்து வைத்து இருத்தல் என்பது இடங்கள் மாறினாலும் தமிழன் குணங்கள் மாறாது
என்பதற்கு சாலசிறந்த உதாரணம்.
 
அங்காடித்தெரு படத்தின் நடக்கும் காட்சிகளை நீங்கள் நேரில் காண வேண்டும் என்றால்
லாச்சப்பலுக்கு சென்று பார்வையிடுங்கள், விசா இல்லாது மாடாய் உழைக்கும் தமிழ் இளைஞர்களை
நேரில் நினைவு கூற வைத்திடும். லாச்சப்பல் வாணிபங்களில் அடிமாட்டு
சம்பளத்துக்கு வேலை செய்யும் தமிழ் இளைஞர், யுவதிகள்.
 
இவ்வாறு... பண ஆசையில் திறந்து வியாபாரம் நடத்தும் கடைகளில்
விடுமுறை நாட்களில், தமிழர்கள் நீங்கள்... பொருட்களை கொள்வனவு செய்யாதீர்கள்.
இப்படி நீங்கள் செய்தால்.. விடுமுறை நாளில் வியாபாரம் மந்த கதியில் நடக்க
எதிர்வரும் விடுமுறை நாட்களில், முதலாளிமார்கள் (அதுதான் தமிழ் முதலைகள்)
கடையை திறக்க பின் வாங்குவாங்கள்,
 
இதனால் அங்கு அடிமாட்டு சம்பளத்துக்கு வேலை செய்யும்
விசா இல்லாத... தமிழ் ஊழியர்களுக்கு, விடுமுறை நாளில் ஆவது... ஓய்வு கிடைக்கட்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இது  தமிழன் அகதியாக புலம்பெயர வெளிக்கிடட காலத்தில் இருந்தே நடக்கிறது. காலங்கள் மாறினாலும் காடசிகள் (ஒரு சில மாற்றங்களுடன் ) மாறாது.  தாயக தேவைகள் கூடக்கூட  உறவுகளை எடுப்பது,சகோதரிக்கு கலியாணம்,வட்டிக்கு எடுப்பது,என்று காசின் தேவை அதிகரிக்க  "தும்படி "..என மேலதிக நேரங்களை  கேட்டு  முறிந்து வேலை செய்வது . இப்படியாக நிர்பந்தத்தின் பேரில் வேலை செய்வது. ஒருவன் மூன்று யூரோ க்கு சமபளம் பேசினால் மற்றவன் இரண்டு யுரோக்கு  அந்த வேலைக்கு ரெடியாக நிற்பான்.  முதலைகளுக்கு அடிச்சது அதிஷடம் தங்க இடமற்று அந்த கடையிலே தங்குவது ( கடைக்காரனுக்கு  கடைக்கு காவல்காரன் தேவையில்லை.).தற்போது சற்று உலகம் அறிந்ததால், இது  குறைந்தாலும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இது  பற்றி  அதிகம் பேசியாச்சு  இங்கே??

இது இருவர் சார்ந்த சிக்கல்

அவர்களுக்கு  இவர்களைத்தேவை

இவர்களுக்கு  அவர்களைத்தேவை??

நாம் இதற்குள்  தலையிட்டால்  மேலும் சிரமப்படப்போவதும் பட்டினி கிடக்கப்போவதும் 

விசா  இல்லாதோரும்  அவரை  நம்பி  வாழும்  குடும்பங்களுமே....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

நாம் இதற்குள்  தலையிட்டால்  மேலும் சிரமப்படப்போவதும் பட்டினி கிடக்கப்போவதும் 

விசா  இல்லாதோரும்  அவரை  நம்பி  வாழும்  குடும்பங்களுமே....

முதலாளிமார் கருணைகாட்டினால் எப்படிக் கல்லா நிரம்பும்? நம்மாட்கள் நம்மவர்களை வைத்து உழைக்க ஆயிரம் வழிகள் வைத்திருக்கின்றார்கள். 

இந்த அடிமை வியாபாரத்தில் இந்தியர்களை விட நம்மாட்கள் புழிஞ்சு எடுத்துவிடுவார்கள். 

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு திருமண விருந்துபசாரத்திற்கு பாரிஸ் போயிருந்தேன். நேரத்திற்கு முன்னரே போயிருந்ததால், அங்கு அலங்கரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறு உதவி செய்யலாம் என்று போனபோது, பொடியன் வேண்டாம் அண்ணா, பொஸ் கண்டால் தனக்குப் பிரச்சினை என்றான். எனக்கு விளங்கியதால் பேசாமல் இருந்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

கிருபன் அவர்கள் இந்தளவுக்காவது  கருணை  காட்டாது  விட்டால்  பலபேர்  இங்கே  தற்கொலை  செய்யும் நிலை?

இது  சாதாரண  பிரச்சினை  அல்ல  வம்பளக்க??

இது  இன்று  நேற்று  அல்லது  தமிழருக்கு மட்டுமான  பிரச்சனையே  அன்று??

ஏதோ பரிசில  தான்  இப்படி  என்பது  போல் பால் குடிக்கத்தேவையில்லையே???

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

கிருபன் அவர்கள் இந்தளவுக்காவது  கருணை  காட்டாது  விட்டால்  பலபேர்  இங்கே  தற்கொலை  செய்யும் நிலை?

இது  சாதாரண  பிரச்சினை  அல்ல  வம்பளக்க??

இது  இன்று  நேற்று  அல்லது  தமிழருக்கு மட்டுமான  பிரச்சனையே  அன்று??

ஏதோ பரிசில  தான்  இப்படி  என்பது  போல் பால் குடிக்கத்தேவையில்லையே???

நீங்கள் முதலாளிகள் பக்கம்தானே நிற்கவேண்டும் விசுகு ஐயா😏

அதற்காக அடிமைச் சம்பளம் கொடுக்காவிட்டால் தற்கொலை செய்வார்கள் என்று முதலாளிகளை ஏதோ சமூகசேவை செய்பவர்களாகக் காட்டவேண்டாம். விசா இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். அப்படி இருந்தும் ரிஸ்க் எடுத்து வேலை கொடுக்கின்றோம் என்பது அவர்களை வைத்து உழைக்கத்தான்.

இது எல்லாம் பாரிஸில் மட்டும் நடக்கவில்லை. எல்லா இடமும்தான் நடக்கின்றது. இங்கிலாந்தில் அடிப்படைச் சம்பளம் கூட இல்லாமல் அடிமைகள் போன்று “காங்மாஸ்டர்” மாருக்கு வேலை செய்பவர்களின் கதைகள் தெரியும். இதில் சீனர், கிழக்கைரோப்பியர் அதிகம். அந்த வழிகளை இப்ப தமிழ் முதலாளிகளும் கண்டுவிட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவே ஒரு தெளிவான புரிதல் இல்லாத ஒன்றாக உள்ளது.

கிருபன் அய்யா பதிவும், பிரச்சணையின் அடுத்த பக்கத்தின் தெளிவில்லாமல் இருப்பதாக தெரிகிறது.

முதலாவது, வேர்க் பேர்மிற் இல்லாமல் வேலை கொடுக்கக் கூடாது என்பது சட்டம். அப்படி கொடுத்தால், பிடிபட்டால், பிரித்தானியாவில் £5,000 பவுண்ஸ் தண்டம். கடைக்காரர் கடையை பூட்டி விட்டு போக வேண்டியதாக இருக்கும்.

முதல் பந்தியில் சொல்லப்பட்ட, டிவி நிகழ்ச்சியில், கோழிக்கடைக்காரர், கடையில் வேலைக்கு எடுக்காமல், பத்தைக்குள் இருந்த காராஜில் இருப்பவர்களிடம், கோழிகளை பையில் போட்டு கொடுத்து விடுகிறார்.

அவர்கள் அதை கொண்டு வந்து, வெட்டி துண்டாக்கி, கழுவி, மசாலா போட்டு ஊற வைத்து, மாலை அதே கடைக்கு கொண்டு போய் கொடுக்க, கடைக்காரர் பொரித்து வியாபாரம் செய்கிறார் .

இரவு மிஞ்சுவதை, அவர்களிடம் கொடுக்கிறார். அதுவே அவர்கள் கூலியும், சாப்பாடும்.

சட்டம், பிழை கண்டு பிடிக்க முடியாத மனிதாபிமான ஏற்பாடு.

அடுத்தது இன்னும் ஒரு வகை கூட்டம். பெனிபிற்றில் இருப்பவர்கள். இவர்கள், தமது பெனிபிற்றை இழக்க விரும்பாத நிலையில், குறைந்த ஊதியமாயினும் பெற்றுக் கொண்டு மேலதிக வருமானம் பெற வேலை செய்ய தயார். ஆக இரண்டு பகுதிக்கும் அனுகூலம்.

இன்னும் ஒரு வகை.... தாம் வாழும் நாட்டு மொழி கற்று, தம்மை முன்னேற்றி, நல்ல வேலை தேட முயலாமல், தமது மொழி மட்டுமே பேசி, அதை பேசக் கூடிய முதலாளியிடம், முற்று முழுதாக சார்ந்து, சட்டமும், தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத, ஆண்டுக்கணக்கில் அடிமாட்டு வேலை செய்து, வேலை முடிந்ததும், கையில் பியர் கானுடன் குந்திவிடும் சிலர். அவ்வகையான பலர், லாசப்பல், லண்டண், ஸ்காபரோ என தமிழர் கடைகளில் இருக்கிறார்கள்.

ஆனாலும் அண்மையில் வெள்ளையர் கூட, அரச நிர்ணய மிகக் குறைந்த மணித்தியால சம்பளத்திலும் பார்க குறைவாக கொடுத்து சிக்கியுள்ளார்கள்.

ஆக இது தமிழ் முதலாளிகள் மட்டுமே செய்கிறார்கள் என்பதும் தவறு.

அதிகாலை, இலண்டணில் கட்டிட பொருட்களை விற்கும் கடைகள் வெளியே கூட்டமாக வேலைக்கு நிற்பார்கள்,  வெளிநாட்டவர்கள், அகதிகளாக வந்தவர்கள். 

அவ்வளவு பேரும் ஏதோ வேலையுடன் ஒன்பது மணிக்கு காணாமல் போய்விடுவர். மிக குறைவான சம்பளம்..... சட்டபூர்வமான இல்லாத வேலை.

அதிகாரிகள் பிடித்தால், ரெயினிங் கொடுக்கிறோம்..... சாப்பாடு மட்டும், பிற்சா..... வேர்க் பர்மிட் வந்ததும், வேலை என்று சொல்லி தப்பிய வெள்ளை வேலை வாங்குபவர்களும் உண்டு.

ஆக, இங்கே இந்த விடயம் பல வகையில் பார்க்கப்படவேண்டும்.

Edited by Nathamuni
Further additions

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

நீங்கள் முதலாளிகள் பக்கம்தானே நிற்கவேண்டும் விசுகு ஐயா😏

அதற்காக அடிமைச் சம்பளம் கொடுக்காவிட்டால் தற்கொலை செய்வார்கள் என்று முதலாளிகளை ஏதோ சமூகசேவை செய்பவர்களாகக் காட்டவேண்டாம். விசா இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். அப்படி இருந்தும் ரிஸ்க் எடுத்து வேலை கொடுக்கின்றோம் என்பது அவர்களை வைத்து உழைக்கத்தான்.

இது எல்லாம் பாரிஸில் மட்டும் நடக்கவில்லை. எல்லா இடமும்தான் நடக்கின்றது. இங்கிலாந்தில் அடிப்படைச் சம்பளம் கூட இல்லாமல் அடிமைகள் போன்று “காங்மாஸ்டர்” மாருக்கு வேலை செய்பவர்களின் கதைகள் தெரியும். இதில் சீனர், கிழக்கைரோப்பியர் அதிகம். அந்த வழிகளை இப்ப தமிழ் முதலாளிகளும் கண்டுவிட்டார்கள். 

முதலில் நான்  யார்  என்று  பார்ப்பதை  நிறுத்துங்கள்

அடுத்து நான் இருபகுதியும்  என்று  தான்  எழுதியுள்ளேன்

  நானே வந்த  புதிதில் 4 வருடங்கள்  இவ்வாறு  தான்  இருந்தேன்  வேலை  செய்தேன்

மேலும் நீங்கள்  வழமை  போல் கேள்வி ஞானம்  மட்டுமே  

எனக்கு  இதில் தலையிட்டு இரு  பகுதியிடமும் வாங்கிக்கட்டிய   அனுபவங்கள்  நிறைய  உண்டு

15 minutes ago, Nathamuni said:

இந்த பதிவே ஒரு தெளிவான புரிதல் இல்லாத ஒன்றாக உள்ளது.

கிருபன் அய்யா பதிவும், பிரச்சணையின் அடுத்த பக்கத்தின் தெளிவில்லாமல் இருப்பதாக தெரிகிறது.

முதலாவது, வேர்க் பேர்மிற் இல்லாமல் வேலை கொடுக்கக் கூடாது என்பது சட்டம். அப்படி கொடுத்தால், பிடிபட்டால், பிரித்தானியாவில் £5,000 பவுண்ஸ் தண்டம். கடைக்காரர் கடையை பூட்டி விட்டு போக வேண்டியதாக இருக்கும்.

முதல் பந்தியில் சொல்லப்பட்ட, டிவி நிகழ்ச்சியில், கோழிக்கடைக்காரர், கடையில் வேலைக்கு எடுக்காமல், பத்தைக்குள் இருந்த காராஜில் இருப்பவர்களிடம், கோழிகளை பையில் போட்டு கொடுத்து விடுகிறார்.

அவர்கள் அதை கொண்டு வந்து, வெட்டி துண்டாக்கி, கழுவி, மசாலா போட்டு ஊற வைத்து, மாலை அதே கடைக்கு கொண்டு போய் கொடுக்க, கடைக்காரர் பொரித்து வியாபாரம் செய்கிறார் .

இரவு மிஞ்சுவதை, அவர்களிடம் கொடுக்கிறார். அதுவே அவர்கள் கூலியும், சாப்பாடும்.

சட்டம், பிழை கண்டு பிடிக்க முடியாத மனிதாபிமான ஏற்பாடு.

அடுத்தது இன்னும் ஒரு வகை கூட்டம். பெனிபிற்றில் இருப்பவர்கள். இவர்கள், தமது பெனிபிற்றை இழக்க விரும்பாத நிலையில், குறைந்த ஊதியமாயினும் பெற்றுக் கொண்டு மேலதிக வருமானம் பெற வேலை செய்ய தயார். ஆக இரண்டு பகுதிக்கும் அனுகூலம்.

இன்னும் ஒரு வகை.... தாம் வாழும் நாட்டு மொழி கற்று, தம்மை முன்னேற்றி, நல்ல வேலை தேட முயலாமல், தமது மொழி மட்டுமே பேசி, அதை பேசக் கூடிய முதலாளியிடம், முற்று முழுதாக சார்ந்து, சட்டமும், தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத, ஆண்டுக்கணக்கில் அடிமாட்டு வேலை செய்து, வேலை முடிந்ததும், கையில் பியர் கானுடன் குந்திவிடும் சிலர். அவ்வகையான பலர், லாசப்பல், லண்டண், ஸ்காபரோ என தமிழர் கடைகளில் இருக்கிறார்கள்.

ஆக, இங்கே இந்த விடயம் பல வகையில் பார்க்கப்படவேண்டும்.

அதே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இது எல்லாம் பாரிஸில் மட்டும் நடக்கவில்லை. எல்லா இடமும்தான் நடக்கின்றது. இங்கிலாந்தில் அடிப்படைச் சம்பளம் கூட இல்லாமல் அடிமைகள் போன்று “காங்மாஸ்டர்” மாருக்கு வேலை செய்பவர்களின் கதைகள் தெரியும். இதில் சீனர், கிழக்கைரோப்பியர் அதிகம். அந்த வழிகளை இப்ப தமிழ் முதலாளிகளும் கண்டுவிட்டார்கள். 

ஒரு இனத்தை சார்ந்து தனி முத்திரை குத்தப்படுவது  ஏற்புடையதல்ல. அதுவும் தமிழர்கள் சம்பந்தப்பட்டது என்றால் வரிந்து கட்டிக்கொண்டு பலர் களத்தில் இறங்கி விடுவார்கள். புலம்பெயர் தேசங்களில் எம்மவர்களுக்குள் பல மனிதத்தன்மை இல்லாத மனிதசக்தி திருடல்கள் இருப்பது உண்மைதான்.
அதே நேரம் மேற்குலக முதலாளி முதலைகளால் ஆபிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் நடத்தப்படும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என யாராவது அறிவார்களா? பங்களாதேஷ் பாகிஸ்தான் கானா போன்ற நாடுகளில் பல தீ விபத்துகள் நடந்தும் காணாதமாதிரி மூடி மறைத்து விட்டார்கள்.

மனிதத்தன்மை மீறிய சீனத்தயாரிப்புகளை வீட்டில் வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டு மற்றவனுக்கு மனிதநேயம் பற்றி பாடம் எடுப்பதே மேற்குலகின் வழக்கம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏற்கனவே ஒரு திரியில் விவாதிக்கப்பட்ட விஷயம்தான், இதுக்கு முதலாளிகளின் மனம் இறங்கி வருதலும்,புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் உதவியுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரமாக அமையும் ஆனால் இது இரண்டுமே சாத்தியமில்லை.

இணையதளங்கள் என்னமோ எவருக்குமே தெரியாததை அறியாததை  புலனாய்வு செய்து கண்டு பிடித்தமாதிரி கடைகளின் படத்தை போட்டு செய்தி பிரசுரிப்பது , ஒளிச்சு இருப்பவர்கள் இந்த கடைகளில்தான் வேலை செய்கிறார்கள் என்று பொலிசுக்கு போட்டு கொடுக்கும் செயல் மட்டுமே. வேறு எந்த வகையிலும் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது.

இனியாவது மனிதாபிமானமற்ற இந்த செயலை அவர்கள் நிறுத்த வேண்டும். சமூக அக்கறை உள்ள நீங்கள் நேரடியாகவே தொழில் வழங்குவோரிடம் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடலாம், ஆனால் அப்படி நீங்கள் வாதாடினாலும் முதலாளி கோவத்தையும் மிரட்டலையும் யாரிடம் காண்பிப்பார் என்பது ஊரறிஞ்ச விஷயமே.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மனிதத்தன்மை மீறிய சீனத்தயாரிப்புகளை வீட்டில் வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டு மற்றவனுக்கு மனிதநேயம் பற்றி பாடம் எடுப்பதே மேற்குலகின் வழக்கம். 😂

எமது பிரச்சினைகள் எல்லாமே சர்வதேச லெவலில் உள்ள பிரச்சினைகள்தான். ஆனால் நவீன அடிமைத்தனத்தை ஒழிக்க/குறைக்க என்னதான் சட்டங்கள் வந்தாலும்  “இரக்கமுள்ள” முதலாளிகள்  ஒன்றுமில்லாதவர்களுக்கு “உதவ” தேவையான ரிஸ்க் எடுப்பார்கள். நமது குட்டி முதலாளிகள் இன்னும் பெருகவேண்டும்!

பலர் முன்னரே பார்த்த வீடியோ என்றாலும் திரும்பவும் பார்க்கலாம்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எமது பிரச்சினைகள் எல்லாமே சர்வதேச லெவலில் உள்ள பிரச்சினைகள்தான். ஆனால் நவீன அடிமைத்தனத்தை ஒழிக்க/குறைக்க என்னதான் சட்டங்கள் வந்தாலும்  “இரக்கமுள்ள” முதலாளிகள்  ஒன்றுமில்லாதவர்களுக்கு “உதவ” தேவையான ரிஸ்க் எடுப்பார்கள். நமது குட்டி முதலாளிகள் இன்னும் பெருகவேண்டும்!

பலர் முன்னரே பார்த்த வீடியோ என்றாலும் திரும்பவும் பார்க்கலாம்.

வீடியோவுக்காக எடுத்த மிகைப்படுத்தப்பட்ட கதை, அதனை, உங்கள் வாதத்துக்கு பயன்படுத்த முடியுமா, என்ன?

யாருமே, இங்கு உறவினர் இல்லாமல், அங்கிருந்து வந்து இறங்குவதில்லை. 

உதவி இல்லாமல், யாருமே தாமாக இப்போது வருவதில்லையே.

விசயம் வெரி சிம்பிள்.

நம்மவர்கள் செம்மறியாட்டு கூட்டம் போல, ஒருவர் பின்னால் ஒருவர் போய் கொண்டு இருப்பார்கள். நின்று நிதானிப்பதில்லை.

அங்கிருந்து, 30, 35 லட்சம் கொடுத்து வருவதிலும், யுத்தம் இல்லாத நிலையில் அங்கேயே அந்த பணத்துடன் ஒரு தொழில் செய்யலாம் என்று நினைப்பதில்லை.

இங்குள்ள, சிறு முதலாளிகள், வீட்டினை அடமானம் வைத்து, பணத்தினை பிரட்டி, கடை எடுத்து, தமக்குள் போட்டி போட்டு, கடைசியில் மிஞ்சுவது எதுவுமே இல்லையே என்ற நிலையில்.... எத்தனை மளிகை, எத்தனை சாப்பாட்டு கடைகள்.

ஒன்லைன் வியாபாரம் என்றால் என்ன என்று தெரியுமே என்று கேட்டு பார்த்தால், இவனுக்கென்ன விசரே என்பது போல பார்ப்பார்கள்.

பெரு நிறுவனங்கள், வங்கிகள் பூட்டி, ஒன்லைன் பக்கம் போக, இவர்கள் அந்த இடங்களை ஓடிப் போய் போட்டி போட்டு எடுத்து, கையை சுட்டு கொள்கிறார்கள். 

அதனால், சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், சட்ட விரோதமாக குறைந்த சம்பளத்துக்கு ஆட்களையும் எடுக்கின்றனர்.

ஆகவே, அங்கிருந்து வர முயல்பவருக்கும், இங்கு தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், சொல்ல நிறைய உள்ளன. 

கேட்க யாரும் இருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

கிருபன் அவர்கள் இந்தளவுக்காவது  கருணை  காட்டாது  விட்டால்  பலபேர்  இங்கே  தற்கொலை  செய்யும் நிலை?

என்ன விசுகர், ஒரு மணித்தியாலத்திற்கு 1 யூரோ கொடுப்பது கருணை உள்ளமா? கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Eppothum Thamizhan said:

என்ன விசுகர், ஒரு மணித்தியாலத்திற்கு 1 யூரோ கொடுப்பது கருணை உள்ளமா? கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!!

சகோ

ஒரு  யூரோ  என்பது  மிகைப்படுத்தல்

இது  போன்ற  மிகைப்படுத்தல்கள்  அல்லது கேள்வி  ஞானங்களுக்கு விடை  சொல்வது  கடினம்?

தவறு இல்லை  என்று  எங்கும் நான் குறிப்பிடவில்லை

ஆனால் இது  ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட சொந்த  வாழ்வாதார மற்றும் குடும்ப  சுமை  சம்பந்தப்பட்ட  பிரச்சினை

கோடிக்கணக்கில் வட்டிக்கெடுத்து

குடும்ப  பாரங்களை சுமந்தபடி

குடும்பங்களை  தனியே விட்டுவிட்டு

இங்கே  வந்து விசாவுக்காக சில  வருடங்கள்  வேலையற்று காத்திருப்பதென்பது நடக்காத  விடயம்

அதன்படி கிடைத்த  வேலை கிடைத்த  சம்பளம் என்பது  அவரவர்  தத்தமது சுமைகளுக்கேற்ப  தீர்மானிப்பது  தான். ஒருவர்  குறைந்த  சம்பளத்தில்  வேலை  செய்ய  அதிலும் குறைந்த  சம்பளத்துக்கு சுமை  கூடியவர் அவரது வேலையை  தட்டிப்பறிப்பதும்  நடந்திருக்கிறது

எனவே  வெளியில்  இருந்து நாம்  கருத்தெழுதுவது  போன்றதன்று அவர்கள்  வாழ்வு

நானும்  இதைக்கடந்து  வந்தவன்  தான்

மற்றும் இந்த கட்டுரையில் மே  தினத்தில்  லீவு  கொடுக்காதது  சுட்டிக்காட்டப்படுகிறது

தமிழ்க்கடை   முதலாளிகளே  இன்னும்  அறியாத  லீவு  அது???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் ஓடும் பெரிய கப்பல் கம்பெனி P&O,  800 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி, பதிலாக, மலிவான சம்பளத்தில் ஆட்களை வேலைக்கு அமர்த்த முனைந்து, பெரும் சட்ட சிக்கலில் மாட்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கோடிக்கணக்கில் வட்டிக்கெடுத்து

குடும்ப  பாரங்களை சுமந்தபடி

குடும்பங்களை  தனியே விட்டுவிட்டு

இங்கே  வந்து விசாவுக்காக சில  வருடங்கள்  வேலையற்று காத்திருப்பதென்பது நடக்காத  விடயம்

அதன்படி கிடைத்த  வேலை கிடைத்த  சம்பளம் என்பது  அவரவர்  தத்தமது சுமைகளுக்கேற்ப  தீர்மானிப்பது  தான். ஒருவர்  குறைந்த  சம்பளத்தில்  வேலை  செய்ய  அதிலும் குறைந்த  சம்பளத்துக்கு சுமை  கூடியவர் அவரது வேலையை  தட்டிப்பறிப்பதும்  நடந்திருக்கிறது

எனவே  வெளியில்  இருந்து நாம்  கருத்தெழுதுவது  போன்றதன்று அவர்கள்  வாழ்வு

நானும்  இதைக்கடந்து  வந்தவன்  தான்

மற்றும் இந்த கட்டுரையில் மே  தினத்தில்  லீவு  கொடுக்காதது  சுட்டிக்காட்டப்படுகிறது

தமிழ்க்கடை   முதலாளிகளே  இன்னும்  அறியாத  லீவு  அது???

விசுகர், நான் வேலை செய்யும் கஷ்டப்பட்ட தொழிலாளர்களை சொல்லவில்லை, அடிமாட்டு விலைக்கு வேலைவாங்கும் முதலாளிகளை மட்டுமே குறைகூறினேன்! மனச்சாட்சி என்ற ஒன்று வேண்டாமா???

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

விசுகர், நான் வேலை செய்யும் கஷ்டப்பட்ட தொழிலாளர்களை சொல்லவில்லை, அடிமாட்டு விலைக்கு வேலைவாங்கும் முதலாளிகளை மட்டுமே குறைகூறினேன்! மனச்சாட்சி என்ற ஒன்று வேண்டாமா???

சரி

அவர்களும் வேலை கொடுக்கவில்லை  என்றால் .....???

(அடி மாட்டு விலைக்கு  வேலை வாங்குவதை  நியாயப்படுத்தவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கடை அநியாயங்கள் பல..

பாழாப் போன சாமான்களுக்கு.. பழைய லேபிளை பிச்சிட்டு புது லேபிள் போட்டு விற்கிறது..

பழைய லேபிளுக்கு மேல புது லேபிள் ஒட்டிறது..

அழுகினதுகளை பக்கட் பண்ணி அழுகளை மறைச்சு விற்கிறது..

அழுகினதை கழட்டி எறிஞ்சிட்டு அழுகாததை காட்டி அதே விலைக்கு விற்கிறது..

சந்தையில இல்லை என்றவுடன் அளவுக்கு அதிகமான விலையில் விற்கிறது..

நாள் கடந்த பொருட்களை செல்பில் இருந்து அகற்றாமல் வைச்சிருப்பது..

மீன்களுக்கு போமலின் கலந்து அடிப்பது..

நாறல் மீன் நண்டு இறாலை.. நாறிய பின் அகற்றாமல் அதனை பிறீசருக்குள் போட்டு பக்கட் பண்ணி விற்கிறது...

முளை வந்ததையும் முளை வெட்டிட்டு விற்கிறது..

....

வேலை செய்ய வாற ஆக்களிடம் மலிவு விலைக்கு வேலை வாங்குவது..

சரியான விடுமுறையோ.. ஓய்வோ கொடுப்பதில்லை.. சட்டத்துக்கு அடங்க.

வேலையை விட்டு தூக்கிடுவன் என்று மிரட்டுறது..

சட்டத்துக்குப் பிறம்பான வகைக்கு ஆட்களை எடுப்பது குறைஞ்ச கூலிக்கு வேலை வாங்குவது..

வாற தமிழாக்களை பழக்கம் பிடிச்சு சீட்டுப் போடுவது.. அதில் கழிவு கிழிவென்று வெட்டி தாங்கள் சுருட்டிக்கிறது.. கொடுக்க வேண்டிய காசையும் உரிய காலத்தில் கொடுக்காமல்.. கடைக்குள் போட்டுப் புரட்டுவது...

கள்ளக் கணக்கீடு காட்டுவது.. கொள்ளை இலாபத்தை.. கொள்ளை நட்டமென்று கணக்குக்காட்டி வரி ஏய்ப்பு செய்வது..

வங்கிக் கணக்கில் கடையை காட்டி கடன் வாங்கிட்டு அதை கடைக்குள் முதலிடாமல்.. வீடு.. சொத்து.. நகை வாங்க முதலிடுவது... பின் வங்கிக்கு.. கணக்குக் காட்டிறது எல்லாம் நட்டமாப் போச்சுன்னு. வாங்கின கடனை கொஞ்சம் கொஞ்சமாத்தான் கட்டுவன் என்றிடுறது. 

கடையை லீசுக்கு எடுத்திட்டு.. அதனை தெரிஞ்சாக்களுக்கு கூடின விலைக்கு வாடகைக்கு விடுவது..

இப்படி எதுவுமே சட்டத்துக்குள் நின்று செய்யாத புலம்பெயர் தமிழ் வியாபாரிகள்..

அகதிகளாக வந்து விசாக்கிடைக்காமல் அந்தரிப்பவர்களிடம் தவிச்ச முயல் அடிப்பதை.. உதவி.. மனிதாபிமானம்.. என்றது ரெம்ப ஓவர். அதுவும் இமிகிரேசன் சுற்றி வளைச்சிட்டால்.. தாங்கள் தப்பிக்க இல்லாத பொல்லாத பொய்யைச் சொல்லி அந்த விசா இல்லாததுகளை மாட்டுவிடுறது..

இவ்வளவுக்கும் இவை கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறதே இல்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, கிருபன் said:

எமது பிரச்சினைகள் எல்லாமே சர்வதேச லெவலில் உள்ள பிரச்சினைகள்தான். ஆனால் நவீன அடிமைத்தனத்தை ஒழிக்க/குறைக்க என்னதான் சட்டங்கள் வந்தாலும்  “இரக்கமுள்ள” முதலாளிகள்  ஒன்றுமில்லாதவர்களுக்கு “உதவ” தேவையான ரிஸ்க் எடுப்பார்கள். நமது குட்டி முதலாளிகள் இன்னும் பெருகவேண்டும்!

மேற்கத்திய முதலாளித்துவ கொள்கைகள் என்றால் இப்படியான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.

சமதர்ம கொள்கைகள் என்றால் இப்படியான பிரச்சனைகள் வர சந்தர்ப்பமேயில்லை.சமதர்ம கொள்கை என்றால் பலருக்கு கசக்கும். ஆனால் சகல மக்களும் சீரும் சிறப்புடனும் வாழ்வார்கள்.

2009க்கு முன் ஒரு சிறிய நாட்டை திரும்பி பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

தமிழ் கடை அநியாயங்கள் பல..

பாழாப் போன சாமான்களுக்கு.. பழைய லேபிளை பிச்சிட்டு புது லேபிள் போட்டு விற்கிறது..

பழைய லேபிளுக்கு மேல புது லேபிள் ஒட்டிறது..

அழுகினதுகளை பக்கட் பண்ணி அழுகளை மறைச்சு விற்கிறது..

அழுகினதை கழட்டி எறிஞ்சிட்டு அழுகாததை காட்டி அதே விலைக்கு விற்கிறது..

சந்தையில இல்லை என்றவுடன் அளவுக்கு அதிகமான விலையில் விற்கிறது..

நாள் கடந்த பொருட்களை செல்பில் இருந்து அகற்றாமல் வைச்சிருப்பது..

மீன்களுக்கு போமலின் கலந்து அடிப்பது..

நாறல் மீன் நண்டு இறாலை.. நாறிய பின் அகற்றாமல் அதனை பிறீசருக்குள் போட்டு பக்கட் பண்ணி விற்கிறது...

முளை வந்ததையும் முளை வெட்டிட்டு விற்கிறது..

....

வேலை செய்ய வாற ஆக்களிடம் மலிவு விலைக்கு வேலை வாங்குவது..

சரியான விடுமுறையோ.. ஓய்வோ கொடுப்பதில்லை.. சட்டத்துக்கு அடங்க.

வேலையை விட்டு தூக்கிடுவன் என்று மிரட்டுறது..

சட்டத்துக்குப் பிறம்பான வகைக்கு ஆட்களை எடுப்பது குறைஞ்ச கூலிக்கு வேலை வாங்குவது..

வாற தமிழாக்களை பழக்கம் பிடிச்சு சீட்டுப் போடுவது.. அதில் கழிவு கிழிவென்று வெட்டி தாங்கள் சுருட்டிக்கிறது.. கொடுக்க வேண்டிய காசையும் உரிய காலத்தில் கொடுக்காமல்.. கடைக்குள் போட்டுப் புரட்டுவது...

கள்ளக் கணக்கீடு காட்டுவது.. கொள்ளை இலாபத்தை.. கொள்ளை நட்டமென்று கணக்குக்காட்டி வரி ஏய்ப்பு செய்வது..

வங்கிக் கணக்கில் கடையை காட்டி கடன் வாங்கிட்டு அதை கடைக்குள் முதலிடாமல்.. வீடு.. சொத்து.. நகை வாங்க முதலிடுவது... பின் வங்கிக்கு.. கணக்குக் காட்டிறது எல்லாம் நட்டமாப் போச்சுன்னு. வாங்கின கடனை கொஞ்சம் கொஞ்சமாத்தான் கட்டுவன் என்றிடுறது. 

கடையை லீசுக்கு எடுத்திட்டு.. அதனை தெரிஞ்சாக்களுக்கு கூடின விலைக்கு வாடகைக்கு விடுவது..

இப்படி எதுவுமே சட்டத்துக்குள் நின்று செய்யாத புலம்பெயர் தமிழ் வியாபாரிகள்..

அகதிகளாக வந்து விசாக்கிடைக்காமல் அந்தரிப்பவர்களிடம் தவிச்ச முயல் அடிப்பதை.. உதவி.. மனிதாபிமானம்.. என்றது ரெம்ப ஓவர். அதுவும் இமிகிரேசன் சுற்றி வளைச்சிட்டால்.. தாங்கள் தப்பிக்க இல்லாத பொல்லாத பொய்யைச் சொல்லி அந்த விசா இல்லாததுகளை மாட்டுவிடுறது..

இவ்வளவுக்கும் இவை கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறதே இல்லை. 

அது மட்டும் என்றாலும் பரவாயில்லை இங்கு மேர்ட்டன் கவுன்சிலில் உள்ள சில தமிழ் கடைகள் லஞ்சம் வாங்குவது எப்படி என்று கவுன்சில் காரருக்கு பழக்கியும்  விடுகினம் சில தமிழ்க்கடைகள் வாசலில் கார் பார்க் பண்ணினால்  ரிக்கெட் வைப்பவர் அந்த பக்கம் வந்தாலும் காணாத து போல் போய் விடுவார்கள் கவனிப்பு அப்படி . முன்பு இந்தியர்களின் கடைகளுக்கு முன் ரிக்கெட் வைத்தாலும் கடை முதலாளி சொன்னால் கான்சல் பண்ணுவார்கள் அதே போல் இலஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்க்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

இவ்வளவுக்கும் இவை கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறதே இல்லை. 

 வந்த பாதையில் ஒவ்வொரு சதமாகப் பொறுக்கியதால்தானே மேலே போகமுடிந்தது. அதனால்தான் இயலுமானவரை வறுகித் தள்ளுகின்றார்கள்.

தமிழ் முதலாளிகள் செய்யும் நல்ல விடயங்களையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

வீடியோவுக்காக எடுத்த மிகைப்படுத்தப்பட்ட கதை, அதனை, உங்கள் வாதத்துக்கு பயன்படுத்த முடியுமா, என்ன?

யாருமே, இங்கு உறவினர் இல்லாமல், அங்கிருந்து வந்து இறங்குவதில்லை. 

உதவி இல்லாமல், யாருமே தாமாக இப்போது வருவதில்லையே.

விசயம் வெரி சிம்பிள்.

நம்மவர்கள் செம்மறியாட்டு கூட்டம் போல, ஒருவர் பின்னால் ஒருவர் போய் கொண்டு இருப்பார்கள். நின்று நிதானிப்பதில்லை.

அங்கிருந்து, 30, 35 லட்சம் கொடுத்து வருவதிலும், யுத்தம் இல்லாத நிலையில் அங்கேயே அந்த பணத்துடன் ஒரு தொழில் செய்யலாம் என்று நினைப்பதில்லை.

இங்குள்ள, சிறு முதலாளிகள், வீட்டினை அடமானம் வைத்து, பணத்தினை பிரட்டி, கடை எடுத்து, தமக்குள் போட்டி போட்டு, கடைசியில் மிஞ்சுவது எதுவுமே இல்லையே என்ற நிலையில்.... எத்தனை மளிகை, எத்தனை சாப்பாட்டு கடைகள்.

ஒன்லைன் வியாபாரம் என்றால் என்ன என்று தெரியுமே என்று கேட்டு பார்த்தால், இவனுக்கென்ன விசரே என்பது போல பார்ப்பார்கள்.

பெரு நிறுவனங்கள், வங்கிகள் பூட்டி, ஒன்லைன் பக்கம் போக, இவர்கள் அந்த இடங்களை ஓடிப் போய் போட்டி போட்டு எடுத்து, கையை சுட்டு கொள்கிறார்கள். 

அதனால், சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், சட்ட விரோதமாக குறைந்த சம்பளத்துக்கு ஆட்களையும் எடுக்கின்றனர்.

ஆகவே, அங்கிருந்து வர முயல்பவருக்கும், இங்கு தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், சொல்ல நிறைய உள்ளன. 

கேட்க யாரும் இருக்கிறார்களா?

நன்றாய் சொன்னீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இனி எந்த தமிழ் இளைஞனும் ஐரோப்பாவுக்கு களவாக வருவதை நிறுத்த வேண்டும். அதற்கு புலத்தில் வாழும் நாம் ஆவன செய்ய வேண்டும்.

40 லட்ஷம் கொடுத்து இங்கு வந்து இப்படி வாழ்வதற்கு பேசமால் அங்கே ஒரு வயல் செய்தால் வாழ்வு சிறக்கும்.

திருமணம் செய்தோ அல்லது படிப்பு இருந்து வேலையுடனோ இங்கே இனி வரவும்..களவு ஏமாத்து வேலை இனியும் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பல லட்சம் பணம் கொடுத்து அகதியாக இல்லாமல் வேறு பல சட்டரிதியான முறையில் வரலாம். பலவழிகள் உண்டு.
மேலும் இப்பொழுது பிரித்தானியவிற்கு வரும் அகதிகள் ருவாண்டவிற்கு அனுப்பபடுவார்கள் என சமீபத்தில் ஒரு செய்தி வந்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

பல லட்சம் பணம் கொடுத்து அகதியாக இல்லாமல் வேறு பல சட்டரிதியான முறையில் வரலாம். பலவழிகள் உண்டு.
மேலும் இப்பொழுது பிரித்தானியவிற்கு வரும் அகதிகள் ருவாண்டவிற்கு அனுப்பபடுவார்கள் என சமீபத்தில் ஒரு செய்தி வந்தது.  

சட்டரீதியிலான முறைகளைப் பாவிப்பது கொஞ்சம் சிரமமான விடயம்.

ஏனெனென்றால் நாம் பொய் கூறுவதற்கும் சட்டரீதியற்ற முறைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டோம்.

☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.