Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு... மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது!

கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு... மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது!

யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால் 260 போத்தல் பெட்டடீன் மருந்தும், குழந்தைகளுக்கான பரசிற்றமோல் சிறப் 360 போத்தல்களும் நன் கொடையாக இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது.

இந் நன்கொடையினைத் தக்க தருணத்தில் மனமுவந்து தந்தமைக்கு வைத்தியசாலைச் சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் சிறுவர்களுக்குத் தேவையான பரசிற்றமோல் சிறப் வெளிநோயாளர் பிரிவில் தேவையான நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் யாழ் போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1285364

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே. வாழ்க வளத்துடன்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இரு அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விடயம் போற்றத்தக்கது. 🙏

கொடுத்தவர்கள் யார் ? 

இது எப்படிச் சாத்தியமானது ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

விடயம் போற்றத்தக்கது. 🙏

கொடுத்தவர்கள் யார் ? 

இது எப்படிச் சாத்தியமானது ? 

நமது கேள்வியும் அதுவே 

அந்த இரு அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சாமி வரம்கொடுத்து பூசாரியும்  விட்டு கொடுத்து யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள நந்திகள் விட்டுக்கொடுக்கணுமே ?

நந்திகள் என்பவர்கள் புலம்பெயர்  சில எருமைகள் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் கிளினிக்  தொடங்கி காசு பார்க்கும் கூட்டம்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

நமது கேள்வியும் அதுவே 

அந்த இரு அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சாமி வரம்கொடுத்து பூசாரியும்  விட்டு கொடுத்து யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள நந்திகள் விட்டுக்கொடுக்கணுமே ?

நந்திகள் என்பவர்கள் புலம்பெயர்  சில எருமைகள் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் கிளினிக்  தொடங்கி காசு பார்க்கும் கூட்டம்கள் .

(படத்திற்கு போஸ்) கொடுப்பவர்களைப் பார்த்தால் கனடாக்காறர் மாதிரித் தெரியவில்லை. 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

(படத்திற்கு போஸ்) கொடுப்பவர்களைப் பார்த்தால் கனடாக்காறர் மாதிரித் தெரியவில்லை. 😀

படத்தை மறுபடி பார்க்க வைத்து விட்டிர்கள் இப்ப எனக்கும் சந்தேகம் வந்து விட்டது 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

(படத்திற்கு போஸ்) கொடுப்பவர்களைப் பார்த்தால் கனடாக்காறர் மாதிரித் தெரியவில்லை. 😀

7 hours ago, பெருமாள் said:

படத்தை மறுபடி பார்க்க வைத்து விட்டிர்கள் இப்ப எனக்கும் சந்தேகம் வந்து விட்டது 😄

கனடாவில் இருந்து உதவி செய்தவர்கள் சார்பாக,
அவர்களின்.. உறவினர்களோ, நண்பர்களோ... அந்த மருந்துப் பொதியை,
வைத்தியசாலையில்... கையளித்து இருக்கலாம். 
 
  • கருத்துக்கள உறவுகள்

பொதியை பெற்றுக்கொள்ளும் மருத்துவர்களாககூட  இருக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே  இந்த பதிவுக்கு 

view 0

replies 8

இது சாத்தியமா?
இருக்கு அதற்காக தளம் பிழை என எழுத முடியாதல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நண்பர்களே  இந்த பதிவுக்கு 

view 0

replies 8

இது சாத்தியமா?
இருக்கு அதற்காக தளம் பிழை என எழுத முடியாதல்லவா?

புத்தன்.... வியாழக் கிழமை மாலையிருந்து போட்ட பதிவுகள் எல்லாமே, 
பார்வையாளர்கள் - 0,  என்று தான் காட்டுகின்றது.

மோகன் அண்ணாவும்... வியாழக் கிழமையிலிருந்து, நேற்று மாலை வரை....
தொடர்ச்சியாக,  திருத்த வேலைகள் செய்து...
ஓரளவு... இயங்கு நிலைக்கு கொண்டு வந்து விட்டார். 👍

இன்னும்... சிறிது வேலை உள்ளது. 
இன்று சனிக்கிழமை என்றபடியால், லீவு. 😁
மிச்சம்... வாறகிழமை தொடரும், என நினைக்கின்றேன். 🙂 😜

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி........!  🌹

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கனடாவில் இருந்து உதவி செய்தவர்கள் சார்பாக,
அவர்களின்.. உறவினர்களோ, நண்பர்களோ... அந்த மருந்துப் பொதியை,
வைத்தியசாலையில்... கையளித்து இருக்கலாம். 
 
அட விடுங்கப்பு, சும்மா  விடுப்புக்குச் சொன்னேன். 

😀

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லுள்ளங்களுக்கு நன்றி........!  🌹

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rabies: Scientific Basis of the Disease and Its Management (English  Edition) eBook : Jackson, Alan C.: Amazon.de: Kindle-Shop  No photo description available.

நாட்டின் சுகாதார நிலை எப்படி தீவிரமான கட்டத்தை
எட்டியிருக்கிறது என்பதை இன்று உணர முடிந்தது.
 
எனது அலுவலகத்துக்கு நாயொன்றை ஒருவர் தடுப்பூசி போடக் கொண்டு வந்திருந்தார்.
அந்த நாய்... அவரைத் தவறுதலாக கடித்திருக்கிறது.
அவரின் கை கால் என சில இடங்களில்... ஆழமான காயங்கள்.
எனினும்... வைத்திய சாலைகளில், ரேபீஸ் எனப்படும்
விலங்கு... விசர்/ வெறி நாய்குரிய post exposure Anti rabeis serum மருந்து
இல்லாத காரணத்தால்... அவருக்கு, அந்த மருந்து செலுத்தப்படவில்லை.
நாடு முழுதும் தட்டுப்பாடாம்.
 
இது, எவ்வளவு பாரதூரமான நிலை தெரியுமா?
Rabeis நோய் ஒரு உயிர்க்கொல்லி. நோய் ஏற்பட்டால்... மரணம் நிச்சயம்.
அதற்குரிய ARS மருந்து அவசியம் செலுத்தப்பட வேண்டும்.
 
இப்போதய நிலையில்... நாய் கடிக்காமல், எங்களை பார்த்துக் கொள்ள வேண்டும்
அல்லது நாய்களுக்கு.. Anti rabeis செலுத்த வேண்டும்.
நாய்களுக்குரிய Anti rabeis கூட, எவ்வளவு காலத்துக்கு இருக்குமோ தெரியாது..........

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

(படத்திற்கு போஸ்) கொடுப்பவர்களைப் பார்த்தால் கனடாக்காறர் மாதிரித் தெரியவில்லை. 😀

18 hours ago, பெருமாள் said:

படத்தை மறுபடி பார்க்க வைத்து விட்டிர்கள் இப்ப எனக்கும் சந்தேகம் வந்து விட்டது 😄

11 hours ago, தமிழ் சிறி said:

கனடாவில் இருந்து உதவி செய்தவர்கள் சார்பாக,
அவர்களின்.. உறவினர்களோ, நண்பர்களோ... அந்த மருந்துப் பொதியை,
வைத்தியசாலையில்... கையளித்து இருக்கலாம். 
 
ஏது…வெளிநாட்டுகார்ர எண்டா ஒரு ஷோவா இருப்பீனம் எண்டுறியளே….🤣

99% இது உண்மைதான் எண்டாலும்…அடையாளம் தெரியாமல் பாட்டாவோட, ஊர் சேர், டிரவுசர் போட்டு திரியிற ஆக்களும் இருக்கினம்தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

ஏது…வெளிநாட்டுகார்ர எண்டா ஒரு ஷோவா இருப்பீனம் எண்டுறியளே….🤣

99% இது உண்மைதான் எண்டாலும்…அடையாளம் தெரியாமல் பாட்டாவோட, ஊர் சேர், டிரவுசர் போட்டு திரியிற ஆக்களும் இருக்கினம்தானே.

சுருக்கமாக எழுதிறதெண்டு… தலையை சுத்த வைக்கிறீங்கப்பா.
//அடையாளம் தெரியாமல் பாட்டாவோட, ஊர் சேர்,// என்றதை வாசித்து….
யாருடைய பாட்டாவாக… இருக்கும் என்று, யோசித்து தலை விறைத்து…
“Bata“ பாட்டா செருப்பை சொல்கிறீர்கள் என்று தாமதமாகத்தான் புரிந்தது. 😂

ஆனால் இன்னும்… //ஊர் சேர்// என்றதற்கு அர்த்தம் விளங்கவே இல்லை. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

சுருக்கமாக எழுதிறதெண்டு… தலையை சுத்த வைக்கிறீங்கப்பா.
//அடையாளம் தெரியாமல் பாட்டாவோட, ஊர் சேர்,// என்றதை வாசித்து….
யாருடைய பாட்டாவாக… இருக்கும் என்று, யோசித்து தலை விறைத்து…
“Bata“ பாட்டா செருப்பை சொல்கிறீர்கள் என்று தாமதமாகத்தான் புரிந்தது. 😂

ஆனால் இன்னும்… //ஊர் சேர்// என்றதற்கு அர்த்தம் விளங்கவே இல்லை. 🤣

🤣 அண்ணை அது ஊர் ஷேர்ட் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

🤣 அண்ணை அது ஊர் ஷேர்ட் 

இங்கயிருந்து ஒண்டை கொண்டு போய் அங்கு இரண்டு தரம் தோய்க்க ஊர் ஷேர்ட் ஆகி விடும்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இங்கயிருந்து ஒண்டை கொண்டு போய் அங்கு இரண்டு தரம் தோய்க்க ஊர் ஷேர்ட் ஆகி விடும்

🤣 சரியா சொன்னியள். முகமும் அப்பிடிதானே, எல்லா oil of Olay மினுமினுப்பும் ஒரு நால் வெய்யிலோட சரி. 3ம் கிழமை தோல் உரியிம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

🤣 சரியா சொன்னியள். முகமும் அப்பிடிதானே, எல்லா oil of Olay மினுமினுப்பும் ஒரு நால் வெய்யிலோட சரி. 3ம் கிழமை தோல் உரியிம் 🤣

👌👌👌

அம்புட்டுத் தான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:
இப்போதய நிலையில்... நாய் கடிக்காமல், எங்களை பார்த்துக் கொள்ள வேண்டும்
அல்லது

நாயை  முந்திக்கொண்டு நாங்க பாய்ந்து கடிக்கணுமாக்கும் ......................😄 நோ ரென்சன் சிரியஸ் ஆக  எடுக்காதேங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

நாயை  முந்திக்கொண்டு நாங்க பாய்ந்து கடிக்கணுமாக்கும் ......................😄 நோ ரென்சன் சிரியஸ் ஆக  எடுக்காதேங்கோ .

நாய்க்கு போடுற ஊசியும் தட்டுபாடாம் பாஸ் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நாய்க்கு போடுற ஊசியும் தட்டுபாடாம் பாஸ் 🤣.

பன்மையில் கூறவில்லைதானே கோசான்..அதுவரைக்கும் ஓகேதான் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.