Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமல்லபுரத்தில் குவிந்த திரையுலகினர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாமல்லபுரத்தில் குவிந்த திரையுலகினர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்!

spacer.png

கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, தமிழில் 2005-ல் ‘ஐயா’ படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறக்கிறார். தமிழ்நாட்டின் லால்குடியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் விக்‌னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது அவருடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் தொடர்ந்து 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. எப்போது இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்பது திரைப்பட ரசிகர்களின் பேசுபொருளாக அமைந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கேரளாவில் நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. கோலாகல திருமணம் இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோலாகல திருமணம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

இதற்காக ஓட்டலில் பிரத்யேகமாக கண்ணாடி மாளிகை போன்ற அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அதிகாலை முதல் விருந்தினர்கள் வரத்தொடங்கினர். வாயிலில் நின்ற பாதுகாவலர்கள் அழைப்பிதழுடன் வந்தவர்களை மட்டும் பார்த்து உள்ளே அனுமதித்தனர். விக்னேஷ் சிவன், அதிகாலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ” நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்” என்று பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். காலை 8.45 மணிக்கு திருமண சடங்குகள் தொடங்கின. விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். நயன்தாரா சிவப்பு நிறத்தில் உயர்ரக சேலை அணிந்து இருந்தார். 20 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதவும், மேளதாள மங்கள வாத்தியங்கள முழங்கவும் காலை 10.25 மணிக்கு நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். அப்போது திருமணத்துக்கு வந்து இருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி, விக்ரம் பிரபு, பொன்வண்ணன், கவின், இந்தி நடிகர் ஷாருக்கான், மலையாள நடிகர் திலீப், நடிகைகள் ஜோதிகா, ராதிகா, குஷ்பு, அஜித்குமார் மனைவி ஷாலினி, கிருத்திகா உதயநிதி, நடிகை ஷாமிலி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் டைரக்டர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், கவுதம் மேனன், மோகன் ராஜா, விஷ்ணுவர்த்தன், ஹரி, அட்லி, சிறுத்தை சிவா, எடிட்டர் மோகன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், ஞானவேல் ராஜா, ராஜசேகரபாண்டியன், தமிழ்க்குமரன், கல்பாத்தி அகோரம், லலித்குமார், மதன், போனிகபூர், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், நடன இயக்குனர் கலா, பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வாழ்த்தினார்கள்

https://akkinikkunchu.com/?p=211772

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு.... சினிமாக்காரர் என்ன செய்தாலும், 
அதனை ஆவெண்டு..  பார்ப்பதில், ஒரு அலாதி இன்பம்.
எந்த இனத்திலும்... இல்லாத ஒரு கெட்ட பழக்கம் இது. 😡

தமிழக  ஊடகங்களும்... முக்கிய பிரச்சினை பற்றி கதைக்காமல், 
இதுகளுக்கு, முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்க எரிச்சலாக  உள்ளது. 🤮

இந்த வியாதி... இப்போ, ஈழத்திலும் மெல்லமாக  தொற்றுவது வேதனை. 😢

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அங்கால போய் இரண்டு நாள் ஆகேல்லை , இங்கால பொடியன் மாருகள் எல்லாம் திரைப்பட நடிகையைப் பற்றி பதிவு போடத் தொடங்கீட்டாங்கள் ...😡

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வண்ணத்திரை பகுதியில் இந்த வண்ணமயமான செய்தியை தந்திருக்கிறீர்கள் கிருபன்......பாராட்டுக்கள்......இந்த திருமணம் சம்பந்தமாக மேலும்பல சுவாரஸ்யமான செய்திகளை தேடி இணைப்பீர்கள் என்று நம்புகின்றேன்......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாராவை கனவுக்கன்னியாகக் காண்பவர்களின் அழல் என்று மேலேயுள்ள கருத்துக்களை  (சுவி ஐயா சேர்ப்பில்லை) பார்க்கின்றேன்😁 இவர்களின் நயனுடான கனவில் கரடி மாதிரி விக்னேஷ் சிவன் வந்தால் இப்படித்தான்🤣

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

மோகன் அங்கால போய் இரண்டு நாள் ஆகேல்லை , இங்கால பொடியன் மாருகள் எல்லாம் திரைப்பட நடிகையைப் பற்றி பதிவு போடத் தொடங்கீட்டாங்கள் ...😡

மோகன் அவர்கள் திரைப்படங்கள் மற்றும் அதன் நடிக நடிகைகளின் பதிவுகளுக்கு எதிரானவர் அல்ல. அவர் இருக்கும்போதே வெளிவந்த  யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு.. என்ற பதிவுகளைப் பார்த்தாலே உங்கள் ஆதங்கம் தீர்ந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நயன்தாராவை கனவுக்கன்னியாகக் காண்பவர்களின் அழல் என்று மேலேயுள்ள கருத்துக்களை  (சுவி ஐயா சேர்ப்பில்லை) பார்க்கின்றேன்😁 இவர்களின் நயனுடான கனவில் கரடி மாதிரி விக்னேஷ் சிவன் வந்தால் இப்படித்தான்🤣

கிருபன் ஜீ,   நீங்கள்... என்னையும், சாமானியனையும் தான்...  
சொல்லி இருக்கின்றீர்கள் என்று அப்பட்டமாக  தெரிகின்றது. 😁

நயந்தாரா 30 பேரை காதலிச்சு, ஏமாத்தி...
இப்ப தான் ஒருத்தரை, கலியாணம் கட்டி இருக்கிறா.

ஏமாந்தவர்களில்... பாவம் சிம்புவும், பிரபுதேவாவும், உதயநிதியும் அடக்கம்.
அதிலை ஒருத்தர், பொலிடோல் குடிச்சு... காப்பாற்றப் பட்டவர். 😎

பொட்டுக் கேடு... இவ்வளவிலை, இருக்க... நமக்கு ஏன் அழல் வருகிறது.   🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் பல்வேறு பிரச்சனைகள் தோல்விகள் மனக்கசப்புகள் அனைத்தையும் தாண்டி அவரவர் வாழ்கையில் நடக்கக்கூடிய சுப நிகழ்சிகளைச் சந்தித்து வாழ்வது இயற்கையே. இதில் விமர்சிக்க எதுவுமில்லை.

ஆனால் என்ன ஒரு விடையம் நெருடலாக இருக்கின்றது , தமது திருமண வைபவத்தை "நெட்பிளிக்ஸ்சில்" விலைபேசி வித்துக் காசு பார்த்ததும், திருமணத்துக்கு வந்திருந்தவர்களது தொலைபேசிகளை புடுங்கி வைத்திருந்ததும். ஆனால் இதில் கடந்த காலத்தில் ஒரு திருமண வைபவத்தில் இயக்குணர் பாலாவினது மனைவியை சுத்திச் சுத்திப் படமெடுத்து என்னைப்போன்ற நடுத்தர வயது தாண்டிய இளசுகளும் இல்லாது கிழடுமில்லாதவர்களை  வாயில் வீணி வடிக்கப்பண்ணியதை நினைத்தால் இது பரவாயில்லை.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பதியர்கட்கு  திருமண வாழ்த்துக்கள்.💐

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ் சிவன் புளியங்கொப்பா தான் பிடித்திருக்கிறார்.

கடைசிவரை நட்பாகவே இருந்து திருமணம் செய்தது பெருமையாக இருக்கிறது.

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களை வாழ்த்தினமா இல்லையா என்று போய்க்கொண்டே இருக்கலாம். இடம் கொடுத்தால் விக்னேஷ் சிவனுக்கு முதலிரவு செய்வது எப்படி என்று சமூக ஊடகத்தில் அறிவுரை கொடுப்பதற்கும் ஆட்கள் உள்ளார்கள். 

தமிழ் சினிமா உலகில் நயன்தாராவின் பங்களிப்பு அளப்பரியது. 

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி கோயிலில் காலணி அணிந்து போட்டோஷூட் : மன்னிப்பு கோரினார் விக்னேஷ் சிவன்

காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

spacer.png

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயந்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தனர். அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இருவரும் கலந்து கொண்டனர். பின்னர் கோவிலுக்கு வெளியே ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால், அங்கிருந்து சென்றுவிட்ட இருவரும் சிறிதுநேரத்தில் அதே பகுதிக்கு வந்து போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது இருவரும் காலணிகள் அணிந்துகொண்டனர்.

இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. திருமலையில் போட்டோ ஷூட் செய்வதோ, நான்குமாட வீதியில் காலணிகள் அணிவதோ கூடாது என்பது ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதியாகும்.

இந்த நிலையில் திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் எழுதியுள்ள கடிதத்தில் ;

காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் .போட்டோஷூட் எடுத்தபோது காலணி அணிந்திருந்ததை உணரவில்லை .என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
 
https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/shoes-controversy-vignesh-sivan-apologizes-719942

  • கருத்துக்கள உறவுகள்

தம்பதியினர்க்கு வாழ்துக்கள்.

தாத்தாவினர்க்கு அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Elugnajiru said:

ஆனால் என்ன ஒரு விடையம் நெருடலாக இருக்கின்றது , தமது திருமண வைபவத்தை "நெட்பிளிக்ஸ்சில்" விலைபேசி வித்துக் காசு பார்த்ததும்,

கல்யாணச் செலவுக்கு காசு வேணுமில்லிங்களா?!

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில் ரசிகர்கள்

நயன்தாரா திருமணத்தில்... தாலி, எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில்... ரசிகர்கள்.

தாலி எடுத்து கொடுத்தது யார்?

நயன்தாராவின் திருமணம் ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இதனால் ஆசையாக காத்திருந்த ரசிகர்களுக்கு நயன்தாரா மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.

ஆம் திருமண நிகழ்வை காட்சிப்படுத்தும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதால் யாரும் புகைப்படம், காணொளி எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்துள்ளது.

ஆனாலும் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் திருமண புகைப்படங்கள் சிலவற்றை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

தற்போது நயன்தாராவின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில் ரசிகர்கள்

நயன்தாரா திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில் ரசிகர்கள்

கோபத்தில் ரசிகர்கள்

நயன்தாராவின் திருமணத்தை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் அங்கு வந்த ஒரு பிரபலத்தினால் நயன்தாரா மீது கோபத்தில் இருந்து வருகின்றனர்.

ஆம் பிரபல மலையாள நடிகரான திலீப்பை திருமணத்தில் பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள். நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய அவரை போய் ஏன் நயன்தாரா... திருமணத்துக்கு அழைத்திருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

நயன்தாரா திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில் ரசிகர்கள்

https://manithan.com/article/nayanthara-marriage-guess-mangalsutra-thali-tamil-1654783518

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 1st கிளாஸ் பொருத்தம்..நயன் - விக்கி ஜோடி..திருமணத்தை நடத்திய ஐயர் பேட்டி.

👍 சூப்பர் பொருத்தம் என்று,  ஐயர் தெரிவித்தார். 👍
இதுபோன்ற  முக்கியமான  செய்திகளை அறிய... எம்முடன் இணைந்து இருங்கள். 😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Reports-says-Superstar-Rajinikanth-hands-over-mangalsutra-to-Nayanthara-and-Vignesh-Shivan-at-wedding

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் : தாலி எடுத்து கொடுத்த ரஜினிகாந்த்? - வெளியானது முக்கிய தகவல்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தென்னிந்திய நடிகையான நயன்தாராவின் திருமணம் இன்று நடைபெற்று நடந்துமுடிந்துள்ளது. இந்நிலையில், திருமணத்தில் மணமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துகொடுத்து ஆசீர்வதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவரான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்ந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கோலிவுட் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்தபோது, அந்தப் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாற, சுமார் 6 வருடங்கள் இவர்கள் காதலித்து வந்தனர்.

இதற்கிடையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல்வேறு கோயில்களுக்கு ஒன்றாக ஊர் ஊராக சென்ற நிலையில், இவர்களின் திருமணம் எப்போதும் நடைபெறும் என்று பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கடந்த சில ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார்போல், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருப்பதி கோவிலுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று வந்தனர். ஆனால், அங்கு பாதுகாப்பு மற்றும் அளவுக்கு அதிகமான விருந்தினர்கள் காரணமாக திருமணத்தை நடத்த முடியாமல் போனநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை முதல்முறையாக விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

image

அதன்படி இன்று பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே, சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமண நிகழ்வின்போது மணமகன் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்ததாகவும், அதன்பின்னர் மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலிகட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துடன், நடிகை நயன்தாரா ‘சந்திரமுகி’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ ஆகியப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். ‘குசேலன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், ‘சிவாஜி’ படத்தில் ஒரு பாடலுக்கும் ரஜினியுடன் நயன்தாரா சேர்ந்து நடித்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்ததன் காரணமாக, தங்களது வாழ்வின் மிக முக்கிய தருணத்தில், ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

https://www.puthiyathalaimurai.com/newsview/140961/Reports-says-Superstar-Rajinikanth-hands-over-mangalsutra-to-Nayanthara-and-Vignesh-Shivan-at-wedding

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இனி திரிஷாவின் திருமணத்தையும் பார்த்துவிட்டால் நிம்மதியா கண் மூடலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இனி திரிஷாவின் திருமணத்தையும் பார்த்துவிட்டால் நிம்மதியா கண் மூடலாம் 

நீங்க  ஏன் கண்  மூடுவான்??
எல்லாமே தானாக  மூடிச்கொள்ளும்??🤣

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா - விக்னேஷ் விவாகரத்து அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி.! 

எதிர்காலத்தில் இப்படி அறிவிப்பு எதுவும் வாராத வரைக்கும் சந்தோசம் .👍

மணமக்களை வாழ்த்துவோம்.💐

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சுப்ரமணியின் ஆசை ரஜனிக்கும் வந்திருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சுப்ரமணியின் ஆசை ரஜனிக்கும் வந்திருக்குமோ?

யார் தாலி கட்டுறது... என்பதுகூட, சுப்பிரமணிய சாமிக்கு தெரியாமல் இருக்குமா?
அவ்வளவு கிறுக்கனாக இருப்பார் போல இருக்குதே...

கலியாணத்தை... உறவுகளை, சொந்தங்களை...கூப்பிட்டு செய்யாமல்,
இப்படி பிரபலங்களை கூப்பிட்டு செய்பவர்கள், இதனையும் தாங்கித்தான் ஆகவேண்டும். 
மாப்பிள்ளைக்கு... மாரடைப்பு வராத குறை, சுப்புறுவுடன் வந்த சந்திரலேகா 
தடுத்திருக்கா விட்டால் நிலைமை விபரீதமாகி இருக்கும். 🙃

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நயன்தாரா - விக்னேஷ் விவாகரத்து அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி.! 

எதிர்காலத்தில் இப்படி அறிவிப்பு எதுவும் வாராத வரைக்கும் சந்தோசம் .👍

மணமக்களை வாழ்த்துவோம்.💐

இதில் அதிர்ச்சி  இருக்கா

ஆர்வம் இருக்கா  சகோ??😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இனி திரிஷாவின் திருமணத்தையும் பார்த்துவிட்டால் நிம்மதியா கண் மூடலாம் 

அப்ப உங்களுக்கு சாகா வரம்தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மருதருக்கும் ஒரு ஆசை ......பார்க்கலாம் என்ன நடக்குதென்று........!   😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.